வசந்தி
வந்தவங்களுக்குக் காபி கொடு
அரக்க பறக்க அம்மா
அடுத்தவீட்டுக்
கதவு தட்டுவாள்
வர்ற ஆறாம்தேதி
செயற்குழு
மறக்காம வந்திடுங்க
ஐந்தாம் தேதியே
அம்மாவின் நகைகள்
அடகுக்கடையில்
பத்தாம் தேதியும்
அப்பா உறுதியோடிருந்தார்
புரட்சி வரும்
இதே போன்றொரு
கனவோடு
ஐம்பது ஆண்டுகளாய்
பக்கத்து வீட்டு
கிறிஸ்தவ தாத்தாவும்
சொல்லிக்கொண்டே இருந்தார்
இயேசு வருகிறார்
இயேசு வருகிறார்
இதோ இதோ
வணக்கம் காம்ரேட்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தேவ்
On Dec 13, 11:52 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:












--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
அடடா...
நல்ல கவிதை ஒன்றின் சாராம்சத்தையும் அது சொல்லப்பட்ட அழகையும் விட்டு என்னென்னமோ பேசிக்கொண்டு இருக்கிறோமே.
நமக்கெல்லாம் கவிதைகளால் நம்மை வதைப்பவர்கள் சரிப்படுவார்கள் என்று தோன்றுகிறது.
பென்னேஸ்வரன்
வசந்தி வந்தவங்களுக்குக் காபி கொடு
அரக்க பறக்க அம்மா அடுத்தவீட்டுக் கதவு தட்டுவாள்
வர்ற ஆறாம்தேதி செயற்குழு மறக்காம வந்திடுங்க
ஐந்தாம் தேதியே அம்மாவின் நகைகள் அடகுக்கடையில்
பத்தாம் தேதியும் அப்பா உறுதியோடிருந்தார் புரட்சி வரும்
இதே போன்றொரு கனவோடு ஐம்பது ஆண்டுகளாய்
பக்கத்து வீட்டு கிறிஸ்தவ தாத்தாவும் சொல்லிக்கொண்டே இருந்தார்
இயேசு வருகிறார் இயேசு வருகிறார் இதோ இதோ
வணக்கம் காம்ரேட்
பென் அண்ணா,
இது உரைநடை, கூகிளார் துண்டாக மடக்கி விட்டார்
என்றல்லவா நினைத்தேன் !
கவிதையா ?
கவிதையைப் புரிந்துகொள்ளும் ரகசியம் இன்னும் புரியவில்லை;
Invade செய்து பார்க்கிறேன்.
தேவ்
On Dec 13, 3:13 pm, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> அடடா...
>
> நல்ல கவிதை ஒன்றின் சாராம்சத்தையும் அது சொல்லப்பட்ட அழகையும் விட்டு
> என்னென்னமோ பேசிக்கொண்டு இருக்கிறோமே.
>
> நமக்கெல்லாம் கவிதைகளால் நம்மை வதைப்பவர்கள் சரிப்படுவார்கள் என்று
> தோன்றுகிறது.
>
> பென்னேஸ்வரன்
>
> 2009/12/13 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
>
>
> > எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இதே தானே. அதுக்கு என்ன செய்யமுடியுது?? [?][?][?]
> > [?][?][?][?][?][?][?][?][?]
> >> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
> --http://www.vadakkuvaasal.com/
>
> 320.gif
> 1KViewDownload
On Dec 13, 4:13 am, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> அடடா...
>
> நல்ல கவிதை ஒன்றின் சாராம்சத்தையும் அது சொல்லப்பட்ட அழகையும் விட்டு
> என்னென்னமோ பேசிக்கொண்டு இருக்கிறோமே.
>
பென்னேஸ்வரன், நன்றி.
யுகபாரதி உரைவீச்சு/கவிதைகளை வாசிக்கிறேன்.
பழைய பெரிய வேளாண்குடும்பமாக இருக்கலாம்.
விவசாயத்தை எல்லோருமே கைவிட,
காவிரியில் தண்ணீர் பெறாமல் வெறும் வாய்ச்சவடால்
கழகங்கள் அடித்து அரசியல் பண்ண,
முடிந்துவிட்ட சோழமண்டல நாட்டாமைத்தனத்தை
அழகாக வடித்துள்ளார்.
-------------
மனப்பத்தாயம்
~ யுகபாரதி
1.
முப்போகமும்
முங்கித் திளைத்த
மகசூலால்
வைப்பதற்கு இடமற்ற
நிறை வாழ்வு
மினுக்கும், ஷோக்கும்
மேலோங்க
குதிரை வண்டிகளில்
சேக்காளி சகிதம்
கூத்தியாளை வாழவைக்க
கழுத்து நிரம்பிய
காசு பணத்தைக்
காமத்துக் கழித்த
கதைகள் கோடி
காவிரிப் பாசனம்
கரை புரண்டோட
வருஷம் முழுக்க
வற்றாத வாழ்க்கை
வருமானத்தை பத்தாயத்திற்குள்
பதுக்கின ஜமீன் குடில்கள்
இஷ்டத்துக்கு இறைத்த கேணி
ஊற்றுக்கண் அடைபட
பூசிய சாயம் பொய்யென்றாகக்
கதியானதோ கந்தல் துணி
கக்கடைசியில்
சோறுடைத்த சோழநாடு
சோத்துக்கில்லாமல்
பக்கத்தூர் பனியன் கம்பெனிகளில்
2.
இரண்டாள் ஒசரமிருக்கும்
பத்தாயத்தின் மீதேறிப்
படுத்துறங்கும் பூனை
வெற்றுப் பத்தாயத்தை
விட்டொழித்துத்
தற்போதவைகள்
அடுப்பில்
3.
முக்கமெங்கும் சிவ ஸ்தலம்
முத்தாய்ப்பாய் பிரகதீஸ்வரர்
ஒற்றைக் கல்லால்
உயர்ந்த கோபுரம்
நாளும் பெருகும் நந்தி
சமயத்துக்கேத்த பேச்சில் மயங்கி
பத்து ரூபாய் இனாம் தருவான்
வெளிநாட்டுக்காரன்
4.
கற்பூரம் விற்கும் கடையிலேயே
ஏகமாய் விற்பனையாகும்
பான்பராக் வஸ்துகள்
நாலணா நப்பாசைக்குத்
தும்பிக்கையேந்தும்
போரடித்த யானை
கோயில் வாசலில்
5.
உலகோச்சினான் முப்பாட்டன்
நாடு நகரென
நலிந்து தேய்ந்து
எட்டாந் தலைமுறையில்
எடுபிடியாக நான்
6.
சிதந்த ஸ்தலங்களைப்
புனரமைக்கப் புனரமைக்க
இயல்பைத் தொலைத்த
சோகத்தோடு
சிரிக்க மறுக்கிறான் சிவன்.
தேவ்
On Dec 13, 5:03 pm, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:
> முதல் கவிதையில் இயேசு வருகிறார் என்ற முடிவு, ஒரு கிண்டல். யுகபாரதியின்
> தகப்பனார் ஒரு க்ம்யூனிஸ்ட். அதற்காகவே உழைத்து தலைவர்க்ளிடம் ஏமாறும் தொண்டர்.
> கட்சியின் , சுரண்டலற்ற பாட்டாளின் ஆட்சி வரப்போகிறது என்ற கோஷத்தைக் கிண்டல்
> செய்வது தான் இயேசு வருகிறார் என்ற கடைசி வரியும்.
>
> ஒரு நல்ல கவிஞ்ர். இப்போது தமிழ் சினிமாவுக்கு பாட்டெழுதுகிறார். மிகப்
> பிரபலமான ‘மன்மத ராசா” பாடல் எழுதியவர்.
>
> இயேசு வருகிறார்-ல் கிறிஸ்துவ பிரசாரம் இருப்பதாகப் படித்தது தவறு.
>
> 2009/12/13 N. Ganesan <naa.gane...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
விஷயம் வேறு எங்கோ பயணிக்கிறது.
யுகபாரதியின் அந்தக் கவிதை வரிகள் (கவித்துவம் உள்ள வரிகள். அவை உரைநடையாகவே இருக்கட்டுமே) நனறாகத்தான் இருக்கிறது.
மன்மத ராசா எழுதிவிட்டுப் போகட்டுமே. அது அவருடைய தொழில் சார்ந்த விஷயம். அதனால் இந்த நல்ல வரிகளை பாராட்டக் கூடாதா என்று தோன்றியது. பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்.
யுகபாரதியின் பல கவிதைகள் நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பவை. அந்த நல்ல கவிஞனை மன்மதராசா பாட்டு எழுத வைத்த விஷயத்தில் தமிழ் வாசக மனங்களுக்கும் ஓரளவு பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன்.
பென்னேஸ்வரன்
மன்மத ராசா பாடலை ஐயா சுட்டியதும் ஓர்
அறிமுகத்துக்காகத்தானே ! அதில் குறைகாணும் நோக்கம்
இங்கு யாருக்கும் இருந்ததில்லை.
இந்த உரையாடலில் மெல்லிய நகைச்சுவையையே
நான் காண்கிறேன்; சீரியசாக எதுவும் இல்லை.
தேவ்
On Dec 13, 7:44 pm, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> விஷயம் வேறு எங்கோ பயணிக்கிறது.
>
> யுகபாரதியின் அந்தக் கவிதை வரிகள் (கவித்துவம் உள்ள வரிகள். அவை உரைநடையாகவே
> இருக்கட்டுமே) நனறாகத்தான் இருக்கிறது.
>
> மன்மத ராசா எழுதிவிட்டுப் போகட்டுமே. அது அவருடைய தொழில் சார்ந்த விஷயம்.
> அதனால் இந்த நல்ல வரிகளை பாராட்டக் கூடாதா என்று தோன்றியது. பகிர்ந்து
> கொண்டேன். அவ்வளவுதான்.
>
> யுகபாரதியின் பல கவிதைகள் நம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பவை. அந்த நல்ல
> கவிஞனை மன்மதராசா பாட்டு எழுத வைத்த விஷயத்தில் தமிழ் வாசக மனங்களுக்கும் ஓரளவு
> பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன்.
>
> பென்னேஸ்வரன்
>
> 2009/12/13 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
> >> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
> >> our
> >> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> >> > > post to this group, send email to minT...@googlegroups.com
> >> > > To unsubscribe from this group, send email to
> >> > > minTamil-u...@googlegroups.com
> >> > > For more options, visit this group at
> >> > >http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
>
> ...
>
> read more »
>முதல் கவிதையில் இயேசு வருகிறார் என்ற முடிவு, ஒரு கிண்டல். யுகபாரதியின்
>தகப்பனார் ஒரு க்ம்யூனிஸ்ட். அதற்காகவே உழைத்து தலைவர்க்ளிடம் ஏமாறும் தொண்டர்.
>கட்சியின் , சுரண்டலற்ற பாட்டாளின் ஆட்சி வரப்போகிறது என்ற கோஷத்தைக் கிண்டல்
>செய்வது தான் இயேசு வருகிறார் என்ற கடைசி வரியும்.
>ஒரு நல்ல கவிஞ்ர். இப்போது தமிழ் சினிமாவுக்கு பாட்டெழுதுகிறார். மிகப்
>பிரபலமான ‘மன்மத ராசா” பாடல் எழுதியவர்.
>இயேசு வருகிறார்-ல் கிறிஸ்துவ பிரசாரம் இருப்பதாகப் படித்தது தவறு.
2009/12/13 N. Ganesan <naa.gane...@gmail.com>
> -------------
> 1.
> 2.
> 3.
> 4.
> 5.
> 6.
>http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
- Show quoted text -