தமிழ்நாட்டின் (சு)தந்திர வரலாறு ஒரு திகில் திருப்பம்

303 views
Skip to first unread message

மிஞ்ஞானி

unread,
Oct 7, 2013, 10:04:12 AM10/7/13
to mint...@googlegroups.com, vallamai

முறையாக விருந்தோம்பல் செய்யவில்லை என்ற முறைப்போது எட்டயபுர மன்னருக்கு எதிராகத் தன் பேனாவை எடுத்த ம.பொ.சி

ஏதாவது ஒரு வரலாற்ருப்படம் எடுக்கவேண்ட்டும் என்ற எண்ணத்தில் இருந்த பி.ஆர். பந்துலு

கனல் கக்கும் வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி இவர்களுடன்

நடிகர் திலகம் கூட்டுச் சேர

தமிழ்நாட்டின் வரலாற்றையே திருப்பிப் போட்டு

எட்டப்பன் என்றாலே காட்டிக் கொடுப்பவன்

கட்டபொம்மன் என்றாலே இந்திய சுதந்திரப் போராட்ட வீரன் 

என்ற மாயையை உருவாக்கியவர்கள் 

உண்மை வரலாறு என்ன என்பதைத் தமிழர்கள் அறிந்துகொள்ளவே முடியாதவாறு செய்துவிட்டார்களோ என்று எண்ண வைக்கும் 

வரலாற்றுச் செய்தி கீழே

===============================================================================================================


FOOTNOTE 2: THE ETTAYAPURAM RAJA & THE KATTABHOMMAN EPISODE

It needs to be mentioned here that popular historical/folklore accounts also reference the Rajas of Ettayapuram in poor light in the context of the episode relating to Veerapandiya Kattabhomman the chieftain/poligar/palayakkarars of Pancalamkurici. So much so that in Tamil vernacular, the word ‘Ettappan’ is used to signify a person who performs an act of betrayal or treachery. The popular version of the story/events is that Veerapandiya Kattabomman, the recalcitrant poligar of Pancalamkurici, who had defied the British Raj was caught by the British with significant assistance from Raja Muthu Jagadveera Ramkumara Ettappa (1784-1816) and executed. This popular version is recorded for posterity by Ma.Po.Sivagnanam (1980) in his work ‘The First Patriot Veerapandiya Kattabomman’ which for all purposes is relied upon as authentic account by the general public. We do have older versions of this incident by Caldwell and others as documented in the ‘Political and General History of Tinnelvelly’.

The facts as it appears documented is that, right from day one the Rulers of Ettayapuram were not at all on friendly terms with the polygar of the neighboring Pancalamkurici namely Kattabomman. Kattabomman and his kinsmen seem to have raided the villages under Ettayapuram as well as other neighboring polygars and were plundering them regularly. And on top Kattabomman was refusing to submit himself to the British sovereignty. In the face of such belligerence, the British launched an offensive to capture Kattabomman and sought the assistance of all the friendly poligars of the area. The chief support thus came from the Ettayapuram Raja. Accounts have it that Kattabomman even came down to Madras and had an audience with the British Governor. He offered gifts to the Governor and in turn was showered with gifts and pardoned by the British. The truce apparently was short lived with the Pancalamkurici polygar reverting to his ‘old ways’ in the eyes of the British. With the British Collector Mr.Lushington at the helm of affairs, the operation to quell Kattabomman took place between 17th August and 21st Oct 1799 and it set Kattabomman on the run. And in the end he sought refuge with Raja Tondaiman of Puducottai who took him into custody and handed him over to the British.

Thus it is indeed open to question whether such an unfortunate consequence of being branded a traitor or performer of an act of betrayal can be fastened on to the Ettayapuram Ruler who had provided overt logistical support to the British and had not acted covertly/treacherously. And neither does history record the Ettayapuram Rajas as having played any role whatsoever in the final capture of Kattabomman at Puducottai. And yet reality is that it has come to stay as part and parcel of Tamil history that it was the act of betrayal by the Raja of Ettayapuram that cost Kattabomman his life with their royal name being besmirched with the taint of treachery and betrayal. Readers may refer to Kanakalatha Mukund’s ‘The View from Below: Indigenous society, Temples and the early Colonial State in Tamilnadu, 1700-1835’, published by Orient Longman, pp 176-185 and “A Manual of the Tinnevelly District in the Presidency of Madras” by A J Stuart pages 54-58 which sums up the entire sequence of events as documented by Caldwell and in traditional tamil ballads. The account of the British Collector Mr.Lushington and his appreciation of the role played by the Rajas of Ettayapuram as a loyal tribute paying principality are recorded in the pp 543-546  of  “The Fifth Report from the Proceedings of the Select Committee on the Affairs of the East India Company ( Madras Presidency)” Volume 2 (1812).

Interestingly this question came up for judicial resolution before the Madras High Court in 2008 when a Tamil movie was named ‘Ettappan’ and the descendants of the Ettayapuram royal family sought to restrain the producers from naming the film so with a negative connotation.

===================================================================================================

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 7, 2013, 10:17:11 AM10/7/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
இது தெரிஞ்ச விசயந் தான. அதுனால தா இதுக்குப் போட்டியா 'சிவகங்கைச் சீமை' படம் வந்துச்சு. அதுல ஹீரோவா நடிச்சவரு இதுலயும் ஒரு காரெக்டருக்குப் புக்கு ஆயிருந்தாரு. ஆனா, கடைசி நிமிச பாலிடிக்ஸ் அங்கயும்.. மாசமா இருந்த நடிகையர் திலகத்துக்கிட்ட நடிகர் திலகம் போன் போட்டு, 'மாப்பிள்ளய அனுப்பும்மா' என்று வேண்டுகோள் வைக்க அவர் நடித்தார்.

ஆனால், 'சிவகங்கைச் சீமை' சிறந்த தமிழ்ப்படமாக மத்திய அரசு விருது பெற்றது. ஆனால் கட்டபொம்மன் ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளி வந்தான். வழக்கம் போல அதுந் தொட்டு அதுவே மெய்யினு ஆயிருச்சு. 



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Singanenjam Sambandam

unread,
Oct 11, 2013, 3:21:03 AM10/11/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
'கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன்' என்று ஒரு நூல் (தமிழ்வாணன் ?) படித்ததாக நினைவு....


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Gopalan Venkataraman

unread,
Oct 11, 2013, 6:34:16 AM10/11/13
to mint...@googlegroups.com
வீரபாண்டிய கட்டபொம்மனை பி.ஆர்.பந்துலுவின் திரைப்படத்தில் காட்டியதைப் போல ஒரு பெரிய மன்னனோ அல்லது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டவனோ அல்ல என்றாலும், ஆங்கில கட்டுரையில் காணப்படுவதைப் போல எட்டயபுரம் மன்னர் ம.பொ.சியை மதிக்கத் தவறியதற்காக எட்டப்பனைக் காட்டிக் கொடுத்தவனாகக் காட்டியதாகச் சொல்வதும் தவறு. தென்னாட்டில் ஆற்காட்டு நவாபுக்கு வரிவசூல் செய்யும் உரிமையை நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஆங்கில கம்பெனியாரிடம் கடன் வாங்கிக் கொண்டு அதை தங்கள் ஆளுமைக்குட்பட்ட ஜமீந்தார், ஜாகீர்தார், பாளையக்காரர்கள் ஆகியோரிடமிருந்து வரிவசூல் செய்து கொள்ளும் உரிமையை கம்பெனியாருக்குக் கொடுத்தார்கள். உடனே கம்பெனி வெள்ளைக்கார அதிகாரிகள் தெற்குப் பிரதேச பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்ய முயன்றபோது கட்டபொம்மு நாயக்கர் மறுக்கவே ஆங்கிலேயர்களின் பகை எழுந்தது. ஏனைய பாளையக்காரர்கள் ஆங்கில கம்பெனியாரிடம் நல்ல பிள்ளையாக கப்பம் கட்டிக் கொண்டு வாழ்ந்த போது பாஞ்சாலங்குறிஞ்சி கட்டபொம்மு நாயக்கர் மட்டும் தர மறுத்ததனால் கம்பெனியார் அவரைத் தாக்கி கோட்டையை அழித்து அவர்களையும் தூக்கில் போட்டுக் கொன்றனர். இதற்கு எட்டயபுரம் ஜமீந்தார் துணையாக இருந்தார். இந்த வரலாற்றை விவரமாக ம.பொ.சி. எழுதியதால் அவருக்குக் கெட்ட பெயர் உண்டாக்கும் நோக்கில் எட்டயபுரம் ஜமீந்தாரின் சார்பாளர்கள் கட்டிவிட்ட கதை இது. போகட்டும் போரில் தோற்று அடைக்கலம் தேடி வந்த ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக சிவகங்கை மருது சகோதரர்களை படுகொலை செய்தது கம்பெனி. ஊமைத்துரையைக் காட்டிக் கொடுத்ததற்காக புதுக்கோட்டை அரசர்கள் பாராட்டப்பட்டார்கள். புதுக்கோட்டை மன்னர் காட்டிக் கொடுத்தார் என்று எழுதியமைக்காக ம.பொ.சி.யை புதுக்கோட்டைக்கு அழைக்காமலே இருந்தனர். 1967இல் ம.பொ.சி.யை புதுக்கோட்டைக்கு பிருந்தாவனம் ஓட்டலில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு ஊழியர் வரவழைத்து அங்கு நகரசபை சார்பிலும், பார் அசோசியேஷன் சார்பில் வரவெற்பு கொடுத்து, பின்னர் திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடத்திய போது, அந்த ஊழியர்  அப்போது புதுக்கோட்டையில் பணியாற்றிய என்னையும் என் நண்பர்களையும்  உதவிக்கு அழைத்த பொது, நாங்கள் ம.பொ.சியை புதுக்கோட்டை ரயில் நிலையம் சென்று வரவேற்று பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள சத்தியமூர்த்தி தங்கும் விடுதியில் தங்க வைத்து மேற்படி கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று இரவு ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் ஏற்றி வழிஅனுப்பும் வரை நாங்களும் அவர் கூட இருந்ததையும் இப்போது நினைவு கூர்கிறேன். வரலாற்றை உள்ளது உள்ளபடி சொன்னால்தான் வரலாறு. அவரவர்க்கு ஏற்றபடி வளைக்க முடியுமானால் அது வரலாறாக இருக்காது. கட்டபொம்மன், ஊமைத்துரை, பெரிய மருது, சின்ன மருது ஆகியோருடைய தியாகங்களை நாமே குறைத்து மதிப்பிடுவது தவறு. தமிழ்வாணன் "கட்டபொம்மு ஒரு கொள்ளைக்காரன்" என்று எழுதியதற்கும், அவர் நெல்கட்டஞ்சேவல் பூலித் தேவனை விடுதலைப் போர் வீரனாகக் காட்டி எழுதியதற்கும் பின்னணிகள் உண்டு. தியாகிகளை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, உயிர்த்தியாகம் செய்த நம் முன்னோர்களை இழிவு படுத்தால் இருப்பது சிறப்பு.

Thanjai V.Gopalan.
--
VGopalan

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 11, 2013, 10:06:26 AM10/11/13
to மின்தமிழ்
/////தியாகிகளை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, உயிர்த்தியாகம் செய்த நம் முன்னோர்களை இழிவு படுத்தால் இருப்பது சிறப்பு./////

மனமார மன்னிப்புக் கோருகிறேன் ஐயா!. உண்மையிலேயே இந்தச் செய்தியை நம்பியதற்காக வெட்கப்படுகின்றேன். தங்கள் வழிநடத்துதலுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!!.

வணக்கத்துடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/11 Gopalan Venkataraman <priv...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Oct 11, 2013, 10:27:08 AM10/11/13
to மின்தமிழ்

2013/10/11 Gopalan Venkataraman <priv...@gmail.com>

தியாகிகளை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, உயிர்த்தியாகம் செய்த நம் முன்னோர்களை இழிவு படுத்தால் இருப்பது சிறப்பு.

​நான் மேற்கொள் காட்டியது 1904-ஆம் ஆண்டு வெளியான நூலில் இருந்து அப்படியே தகவலை எடுத்துக் காட்டியுள்ளேன்.  எட்டயபுரம் அரசவையில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசவப் புலவராக இருந்தவர் ஆதாரத்துடன் எழுதிய ஆவ்ணத்தை சுட்டிக்காட்டினால் அது எப்படி முன்னோரை இழிவுபடுத்துவதாகும் என்று எனக்குத் தெரியவில்லை

அவரின் சந்ததியினர் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கூடி வழா எடுப்பார்கள் அவர்களும் சரி ம.பொ.சி இந்த வரலாறைத் திசைதிருப்புவதற்கு முன்னால் அவர் வெள்ளையனை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராடத் தியாகி என்று குறிப்பிடவில்லை

அவர் சென்னையில் கிழக்கிந்தியக் கும்பெனியில் கவர்னரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டதாக ஆதாரத்துடன் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது​

ம.பொ.சி எஅந்த ஆவாணத்தின் அடிப்படையில் இந்த புதினத்தை எழுதினார் என்ற குறிப்பில்லை.  அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். எளிதில்  உணர்ச்சிவசப்படுபவர்.  கொஞ்சம் அதிகமாகவே கைச்சரக்கை எழுத்தில் கலப்பவர்

பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளில் வா.ராவும் (பாண்டிச்சேரிக்கு முதன் முதலில் சென்றபோது அவர் யார் என்றே தெரிய்யத நிலை) இந்துய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எட்டயபுரம் மன்னரைப் பற்றி எழுதிய ம.பொ.சியும் வரலாற்றைத் திசை திருப்பிய பெருமைக்குரியவர்கள்

வம்பாண்டி

டிஸ்கி.  தமிழில் தயாரான எட்டப்பன் படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற வழக்கில் இன்னும் நிறையத் தகவல் உள்ளது



Gopalan Venkataraman

unread,
Oct 11, 2013, 11:08:22 AM10/11/13
to mint...@googlegroups.com
அன்பார்ந்த ஐயா! நன்றி. 1904 இல் வெளியான புத்தகத்திலிருந்து தாங்கள் எடுத்துக் காட்டிய பகுதி பற்றித்தான் நான் கருத்து சொல்ல விரும்புகிறேன். அந்த நாட்களில் குறுநில மன்னர்களாகக் கருதப்பட்ட பாளையக்காரர்கள் ஆங்கில கும்பெனியாரிடம் நல்ல பெயர் வாங்க நினைத்து, அவர்களைத் தங்கள் எஜமானர்களாகக் கருதி வந்த நேரத்தில் நடந்த நிகழ்ச்சிகள் இவை. வடக்கே முகலாயர்களும், தெற்கே நிஜாமும், இன்னம் தெற்கே ஆற்காட்டு நவாபும் ஆதிக்கம் செலுத்திய நாட்கள் அவை. டெல்லி முகலாயர்கள் வலுவிழந்து போனார்கள். நிஜாமும் ஆற்காடும் தங்கள் நிலைகளை வலுப்படுத்திக் கொண்டார்கள். அன்று இவர்கள் ஆடம்பரத்துக்காக கிழக்கிந்திய கம்பெனியாரிடம் கடன்களை வாங்கிக் கொண்டு, அவர்களை நேரடியாக பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்ய அனுமதித்தன் விளைவுதான் தென்பாண்டி நாட்டின் கலவரம். அவ்வளவு ஏன் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்த காலத்தில்கூட பெருநிலக்கிழார்கள் ஆங்கில விசுவாசிகளாக இருந்து கொண்டு, ராவ் பகதூர், திவான் பகதூர், ராவ் சாஹேப், சர் பட்டங்களுக்கு ஆலாய்ப் பற்ந்து கொண்டிருந்தார்கள். அடிபட்டு சிறைசென்ற தேசபக்தர்கள் பெரும்பாலும் நடுத்தர மக்கள். கீழ்மட்டத்து நிலமற்ற விவசாயக் கூலிகள் கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு இங்கு ஒரு யுகப்புரட்சி ஏற்படுமென்று எண்ணி யிருந்தார்கள். ஆகவே அவர்களும் சுதந்திரப் போரில் அக்கறை கொள்ளாமல் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்திருந்தார்கள். இடைப்பட்ட மனிதர்கள் தான் ஊருக்குச் சிலபேர் காந்தி குல்லாய் அணிந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்கள். ஆசிரியர்கள், சிறுதொழில் புரிவோர், சிறு வியாபாரிகள் போன்றோர் இவர்கள்.   ப்படிப்பட்ட சூழ்நிலையில் எட்டயபுரம் மட்டுமல்ல, மற்ற எல்லா ஜமீன்களும், ஜாகீர்களும் ஆங்கில அடிவருடிகளாக இருந்து கொண்டு மக்கள் வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் அவையில் பல புலவர்கள் அரசர் புகழ்பாட, மனமகிழ்ந்து அவர்களுக்கு இனாம் கொடுத்து மகிழ்ந்தவர்கள் ஜமீன்கள். மகாகவி பாரதியாரின் "சின்னச்சங்கரன் கதை" பாரதியின் சுயசரிதை. அவருடைய எட்டயபுர வாழ்க்கையை படம்பிடித்துக் காண்பிப்பது. அதில் ஜமீந்தார் வாழ்க்கையை, குறிப்பாக அவர் அவை நடக்கும் முறை, அவர் நகர்வலம் வருவது, அவருடைய தினசரி வாழ்க்கை முறை இவற்றைப் பார்த்தால் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. அப்படிப்பட்டவர்கள் ஆளும் வர்க்கத்தை விரோதித்துக் கொள்ள முடியாது. அப்படி எதிர்ப்பவர்களை ஆதரிக்கவும் முடியாது என்பதுதான் நிதர்சனம். அதைத்தான் நான் சுட்டிக் காட்டினேன். ம.பொ.சி. பற்றிய கருத்து அவரவர்க்கு ஏற்றபடி வைத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது, மறுக்கவில்லை. அவருடைய பேச்சும், எழுத்துக்களும் ஓரளவுக்குத் தமிழகத்தில் தேசபக்தியை வளர்க்கப் பயன் பட்டது என்பதுதான் உண்மை. 

புதுச்சேரியில் பாரதி இருந்த போது வ.ரா. அவரைச் சந்தித்ததைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்போதும் பாரதி ஊரறிந்த தேசபக்தர். ஆனால் அப்போதுதான் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த வ.ராமசாமியை கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் புதுச்சேரிக்கு அனுப்பி அங்கு வந்து குடியேறியிருந்த அரவிந்த கோஷ் அவர்களைச் சந்தித்து அவருக்குத் தேவைகள் என்ன என்பதை விசாரித்து வரச் சொல்லி வந்திருந்தார். அரவிந்தர் இருக்குமிடம் வ.ராவுக்குத் தெரியாததால் அவர் பாரதியின் விலாசத்தை ரயில் நிலையத்தில் இருந்த "புஷ் வண்டிக்காரனிடம்" கேட்க, அவர் பட்டணத்து பாட்டுக்கார ஐயாவா, தெரியும் வாருங்கள் என்று அழைத்து அவர் வீட்டில் கொண்டு சேர்த்தான். பின்னர் அவ்விருவரும் கலவல சங்கரன் செட்டியார் வீட்டின் இரண்டாவது கட்டில் மாடியில் இருந்த அரவிந்தரைச் சென்று பார்த்தார்கள் என்பது வரலாறு. இது பற்றிய தங்கள் கருத்து எனக்கு விளங்கவில்லை. 

ம.பொ.சி. தன்னலமற்ற ஒரு தேசபக்தர் என்பதை நாடே ஒப்புக்கொண்ட ஒன்று. தனிப்பட்ட விரோதம் அல்லது ஏமாற்றத்துக்காக வரலாற்றை மாற்றி எழுதக்கூடியவர் அல்ல. அன்றைய ஜமீந்தார்களின் போக்கையொட்டியே எட்டயபுரத்தாரும் ஆங்கில ஆதரவாளராக இருந்திருக்கிறார் என்பதும், கட்டபொம்மு நாயக்கர் வரி கொடுக்க மறுத்தார் என்பதும் சரித்திரப் பதிவுகள். விளக்கங்கள் அளிக்க வாய்ப்பளித்தத் தங்களுக்கு நன்றி ஐயா.


2013/10/11 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
VGopalan
Reply all
Reply to author
Forward
0 new messages