1. சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 1156-1160: இலக்குவனார் திருவள்ளுவன்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 19, 2026, 4:29:02 PM (10 hours ago) Feb 19
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      20 February 2026      கரமுதல



(சட்டச் சொற்கள் விளக்கம் 1031-1035 : தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040

1036. Avyavaharika        அறநெறியற்ற 
Avyavaharika debts – அறநெறியற்ற கடன்கள் – மது, சூதாட்டம், பிற ஒழுக்கக் கேடான செயல்களால் ஏற்படும் கடன்கள் – இந்துச் சட்டத்தில் குறிக்கப்பெறுகிறது.
1037. Award         தீர்வம்
தீர்வளிப்பு
தீர்ப்பு வழங்கு

 award  என்றால் பொதுவாக நாம் விருது என்றும் சில நேரங்களில் பரிசு என்றும் கருதுகிறோம். ஆனால், வழங்கல் என்னும் பொருள் உண்டு. எனவே, சட்டத்துறையில் வழங்கப் பெறும் தீர்ப்பினைக் குறிக்கிறது.

தீர்வு எனவும் பொருள்படும்.
 

இரு தரப்பை இசைவிக்கும் தீர்ப்பாளரின் முடிவையும் குறிக்கும்.
 

தொழிலாளர் நீதிமன்றம், தொழில்துறை தீர்ப்பாயம் அல்லது தேசிய தீர்ப்பாயம் அல்லது நடுவர் தீர்ப்புகள் உட்பட தொடர்புடைய மாநிலச் சட்டங்களால் எந்தவொரு தொழில்துறை தகராறு அல்லது தொடர்புடைய கருத்து வேறுபாட்டிற்கான அல்லது சட்ட ஐயப்பாடு தொடர்பான இடைக்கால அல்லது இறுதித் தீர்வத்தைக் குறிக்கிறது.
 

1965 ஆம் ஆண்டு மீதூதியச் சட்டம், பிரிவு பிரிவு 2(7) “தீர்வம்” என்ற சொல்லை வரையறுக்கிறது.
 பொது பொறுப்பு காப்பீட்டு சட்டம், 1

991 பிரிவு 7 தீர்வம் குறித்துத் தெரிவிக்கிறது.
 தொழில்துறை தகராறுகள் சட்டம், 1947 இலிலும் தீர்வம் குறிக்கப் பெற்றுள்ளது. 

தீர்வம்(Award) என்பதுடன் தீர்ப்பு(judgement) தீர்ப்பாணை(decree) ஆகியன பற்றியும் அறிந்து கொள்க.
1038. Award method      தீர்வு முறை

 தீர்வு முறை என்பது கொள்முதல் செய்பவர்

ஏலங்களை மதிப்பிடுவதற்கும், வெளிப்படைத் தன்மைக்கும் நயன்மையை(நியாயத்தை) உறுதி செய்வதற்கும் ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுப்பதற்கும் பயன்படுத்தும் முறையான நடைமுறையாகும்

. முதன்மை முறைகளில் குறைந்த விலை, அதிகத் தகுதி வாய்ந்தவர் அல்லது சிறந்த மதிப்பின் அடிப்படையில் வழங்குதல் ஆகியவை அடங்கும்.

இந்தச் செயல்முறை பொதுவாகத் தேவைகளை அடையாளம் காண்பது, ஒப்பந்தப்புள்ளி வழங்குதல், மதிப்பீடு செய்தல் , ஒப்பந்தக் கையொப்பம் ஆகியவற்றைப் பின்பற்றுகிறது.
1039. Award of compensation  இழப்பீடு வழங்குதல் 

நேர்ச்சி(விபத்து)களால் உயிரிழப்பு, உறுப்பிழப்பு, காயம், கை கால் முறிவு, ஊர்திகளுக்குச் சேதங்கள், முறையற்ற செயல்களால்  ஏற்படுத்தப்படும் பணி இழப்பு முதலிய பல்வேறு கரணங்களால் பாதிப்புற்றவருக்கு பாதிப்புகளுக்கு ஈடாக வழங்கப்படும் தொகையே இழப்பீட்டுத் தொகையாகும்.
 

பாதிப்பில் மருத்துவச் செலவுகள், எதிர்கால வருவாய் இழப்பு முதலியவை அடங்கும்.
1040. Awarding damagesசேதஈடு வழங்கல்

 உரிமை வழக்கில் உரிமை கோருநருக்கு முறையீடடாளர் அல்லது வழக்காடி சேதத்திற்கு ஈடாகத் தரும் தொகை

வழங்கல்.
 damage என்பது  அழிவு/ சிதைவு/ சேதம்/ஊறுபாடு எனப்பொருளாகும்.

 damages என்பது இழப்பீட்டைக் குறிக்கும். 
compensation-இழப்பீடு என்பதற்கும்  damages என்பதற்கும் வேறுபாடு காட்ட சேதஈடு எனலாம்.
ஏதம் என்பதிலிருந்து உருவான சேதம் என்னும் சொல்லும் தமிழே.
 

குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டம் 1958 பிரிவு 5(3) [S. 5(3) POA, 1958] இழப்பீடு வழங்குதலைக் குறிக்கிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

++

வெருளி நோய்கள் 1156-1160: இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன்      20 February 2026      அகரமதல



(வெருளி நோய்கள் 1151-1155: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1156-1160

  1. சோள வெருளி – Kalampokiphobia

சோளம்(corn)மீதான மிகையான பேரச்சம் சோள வெருளி.
நீரிழிவு, உடல் பருமன், செரிமானக் கோளாறு, வாந்தி, அரிப்பு, மயக்கநிலை, பறித் தொல்லை(Flatus) முதலியன சிலருக்கு ஏற்படலாம். இதனால் சோள வெருளி கொள்வோர் உள்ளனர்.
சோளம் என்பதற்கான கிரேக்கச் சொல்லே Kalampoki.
00

  1. சோளத் தோசை வெருளி – Tortillaphobia

சோளத் தோசை(tortilla)பற்றிய அளவற்ற பேரச்சம் சோளத் தோசை வெருளி.
சோள வெருளி உள்ளவர்களுக்குச் சோளத்தோசை வெருளி வர வாய்ப்பு உள்ளது.
Tortilla என்னும் இசுபானியக்கூட்டுச்சொல்(தோசை என்னும் பொருள் கொண்ட tort(a) + மென்மை என்னும் பொருள் கொண்ட ஒட்டுச்சொல் illa) மெல்லிய தோசையைக் குறிக்கிறது.
மென்தோசை வெருளி என்றால் பொதுவாக அரிசி மாவு தோசையைக் குறிக்கும் என்பதால் சோளத்தோசை எனக் குறிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சோள மாவில் சுட்டாலும் கோதுமை மாவிலும் சுடுவார்கள்.
00

  1. சோளப் பொரி வெருளி – Popcornphobia

சோளப் பொரி குறித்த அளவு கடந்த பேரச்சம் சோளப் பொரி வெருளி.
சோள வெருளி உள்ளவர்களுக்குச் சோளப் பொரி வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00

  1. சோளப் பொறிப்பி வெருளி – Y∞gomphobia

சோளப் பொறிப்பி(popcorn popper) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சோளப் பொறிப்பி வெருளி.
சோளப் பொரி உள்ளவர்களுக்குச் சோளப் பொறிப்பி வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00

  1. சோனி வெருளி – Sonyphobia

சோனி நிறுவனப் பொருள்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் சோனி வெருளி.
“sonus” என்னும் இலத்தீன் சொல் ஒலியைக் குறிக்கிறது. இதிலிருந்து உருவானதே Sony. இதன் பெயரில் உருவானதே சோனி நிறுவனம்.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5

++



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages