உடல் ஒரு பஞ்ச பூதம்

705 views
Skip to first unread message

Krishnan S

unread,
May 31, 2014, 9:49:31 AM5/31/14
to tamil_ulagam, thami...@googlegroups.com, mint...@googlegroups.com
உடல் ஒரு பஞ்ச பூதம்
  
, உலகத்தில் உள்ள  ஆறு விதமான வைத்திய முறைகள் பயன்பட்டு வருகின்றன. அவை: சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யூனானி வைத்தியம், அலோபதி வைத்தியம்,, ஹோமிபதி வைத்தியம்,எனப்படும் இவற்றுள் மிக தொன்மை வாய்ந்தது. சித்த வைத்தியம்,. மற்ற வைத்தியங்கள்  எப்புறுது தோன்றின என்று வரையத்து கூற முடியும். ஆனால், சித்த வைதியம் தமிழ் நாட்டில் சித்தர்களால் உருவானது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது

    நாட்டு  வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பன, எளிமையாக்கப்பட்ட சித்த வைத்தியமாகும்.மொகலாயர் ஆட்சிக் காலத்துக்குப் பின்தான், யூனானி வைத்தியம் பரவியது. ஆங்கில ஆட்சி்யின் போது அலோபதி என்னு ஆங்கில வைத்தியம் பரவியது. ஹோமியோபதி வைத்தியம் ஜெர்மானியரால் உருவாக்கப்பட்ட வைத்தியம்.

சித்த வைத்தியம், தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்ட`வைத்தியம். அந்த வைத்தியத்திற்கு அனைத்தும் தமிழ் மொழியில் இருந்தன, தமிழில் முதற்சங்கம் தோன்றிய காலத்துக்கு முன்பிருந்தே சித்த வைத்தியம் தோன்றிப் பரவியிருந்ததாக மொழி நூல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  பதின்னென் சித்தர்களும் சிறந்த அறிவியல் மேதைகளாய்த் திகழ்ந்தவர்கள். இவர்கள் அனைவருமே அண்டத்த்தில் உள்ளதே பிண்டம் என்னும் கொள்கையினர்.

     அண்டத்திலுள்ளதே பிண்டம்

    பிண்டத்திலுள்ள தே அண்டம்

    அண்டமும் பிண்டமும் ஒன்றே

    அறிந்துதான் பார்க்கும் போதே     --- திருமூலர் --

  காயம் உள்பட நாம் வாழும் உலக முழுமையும்அண்டம்எனப்படும்.

  அண்டம் என்பது பாதளம், பூமி, ஆகாயம். பிண்டம் என்பது ஐம்பூதக் கலப்பினால், ஆண்- பெண் உறவினால் அமைந்த உடல்,                              சராசரம் என்பது அசையும் பொருள்களும்  அசையாப் பொருள்களும் ஆகும்.மானிட உடல் ஐம்பூதங்களும் ஆனது என்பதினை                          சித்தர்கள் தம் ஆய்வினால் கண்டறிந்தார்கள்.

  நிலம் :- எலும்பு, நரம்பு, இறைச்சி, தோல், உரோமம்

  நீர் :-  இரத்தம், கொழுப்பு, விந்து, சிறு நீர், கால், மூளைஎலும்பின் மூளை.

  நெருப்பு :- திமிர், சோமபல்,ஆணவம், பயம், தூக்கம்.

 காற்று :-  ஓடல், நடத்தல், இருத்தல், படுத்தல்.
 
காயம்:-   காமம், கோபம், செருக்கு, பொறாமை.

     இவ்வாறு ஐம்பூதங்களுக்கும் மனிதனின் உடல் இயக்கம் உணர்வு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது    என்பதனை சித்தர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதே போல் இயற்கை  பருவ  காலங்களும் ஆறு நிகழ்கின்றன.  கார்காலம், கூதிர்காலம்முன்பனிக்காலம் பின்பனிக் காலம் இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் பருவ மாற்றங்களால் ஏற்படும் நோய்களும்,அவற்றை நீக்குவதற்குரிய இயற்கையிலுள்ள மருந்து மூலிகைகள் உணவுகள் யாவும் சித்தர்கள் கண்டறிந்துள்ளனர். இயற்கை பருவ காலங்கள்  போல்., மனித பருவ காலத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை சித்தர்கள் கண்டறிந்துள்ளனர்.

      10  வயது வரை இளமைப் பருவம்

      10 முதல் 25 வரை வாலிபப் பருவம்

      25 முதல் 40 வயது வரை யெளவனப் பருவம்.

      40 முதல் 50 வரை கெளமாரப் பருவம்,

   இந்த மனித மாற்றங்களால் உடலியக்கத்திலும் உயிரியக்கத்திலும் மாற்றங்கள் செயல் படுகின்றன.  இந்த பருவ மாற்றங்களுக்கு ஏற்ப, 60 ஆண்டுகளுக்கு உள்ள சுழற்சிக்கு, மனித உடல் உட்படும் சமயத்தில் ஒளி தேயும்,  அதாவது பிருத்வி என்னும் மண் அப்புவை  நீரை நெருக்கும்,           60 - ம் வயதில்  அப்பு தேயுவை நெருப்பைத் தாக்கும். 70-ம்  வயதில் தேயுவை வாயு காற்று தாக்கும். அச்சமயத்தில் உண்வு தங்காது குன்றும்,              80-ம் வயதில் வாயு ஆகாயத்தைத்  தாக்கும். 90 - ம் வயதில் ஆகாயம்  ஆதமாவை தாக்கும், அச்சமயத்தில் மலமும், நீரும் அடக்கமின்றிப் பிரியும், 100-வது  வயதில் ஆத்மாவில் ஒடுக்கப்பட்ட உயிர், வந்த வழியே  பிரியும்.  

      இவ்வாறு சித்தர்கள் மனிதர்களின் உயிர் இயக்கத்திற்கும் இயற்கையின் ஐம்பூதங்களுக்கும் உள்ள தொடர்பை அறிவித்துள்ளனர். எனவே, உலகிலுள்ள மக்களுக்கு ஏற்படும் வாத, பித்த, கபம், காற்று, நெருப்பு, நீர் ஆகிய நோய்களுக்கு இயற்கை வழியே ஐம்பூதத தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட மருந்து வகை கண்டறிந்தார்கள். அம்மருந்துகளை அக மருந்துகள் என்றும் புற மருந்துகள் என்றும் வகைப்படுத்தினர்.

-- நீர் இன்றி வாழாது உடல்; அவ்வுடலுக்கு உணவு கொடுத்தவரும் ஆவர். உணவால் உளதாவது உணவு கொடுத்த வரும் ஆவர், உணவால் உளதாவதுதான் மனித உடல், உணவே நிலத்தில் விளையும் நீரும் ஆகுத என்பதை,

     “ நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்

        உண்டிக்கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே,

      உண்டி முதற்றே உணவின் பிண்டம்

      உணவென்ப் படுவது நிலத்தொடு நீரே

      நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

      உடம்பும் உயிரும் படைத் திசினோரே ... “   -- புறநானூறு - 18

     அழியாது என்றும் உடலோடு நினைத்திருக்கும் உயிரென ஒன்றும் கிடையாது. இது தெளிந்த உண்மை. மாயம் எதுவும்
இதில் இல்லை. சடமும் சக்தியும் ஒன்றறக் கலந்துள்ளதை “ உடபொடு ஒன்றைக் கலந்துள்ளதை.... “ ....
       -- என்கிறது புறநானூறு.

அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை

தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/


 



--

அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை

தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

Rathinam Chandramohan

unread,
May 31, 2014, 10:50:31 AM5/31/14
to mint...@googlegroups.com
precious sharing


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India
Reply all
Reply to author
Forward
0 new messages