தேமதுரத் தமிழோசைவிடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 1
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
What a coincidence. Just now I posted my thoughts on evolving a common
Indian administrative, scientific language! Only when the Tamil truly
understand the strength of Indian Union and work hard to influence it
positively there is no growth for Tamil (in my humble opinion).
’இ’னாவின் எண்ணங்கள் இனிமையாய் வலம் வரட்டும் இங்கு!
N.Kannan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அது சரி.. நீங்கள் எவ்வளவு அழகாகத் தமிழில் எழுதுகின்றீர்கள். 4 வருடங்களுக்கு முன்னர் தமிழ் எழுத சரியாக வராது என்று என்னிடம் நீங்கள் கூறியது இன்றும் ஞாபகம் இருக்கின்றது. :-) இந்த அளவிற்கு எழுத நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சி நன்கு தெரிகின்றது.
பின்னூட்டங்களுக்கு நன்றி.
கண்ணன்:
‘... Only when the Tamil truly understand the strength of Indian Union and work hard to influence it positively there is no growth for Tamil.’
~ They did, Kannan, during the Independence Movement. Divisive forces gained ascendancy and ruled the roost for decades. Mitigation is our task. For the past few years I had been working in humble ways for Tamil Nadu contributing towards influencing the central administration and even at global level. அணில்கள் எல்லாம் ஒத்துழைத்தால் எத்தனை பாலங்கள் கட்டலாம்!
மற்றொரு இழையில் உங்கள் கருத்தைப்படித்தேன். ஆங்கிலம் இந்தியாவில் இணைப்பு மொழி மட்டுமல்ல. சில இடங்களில் தாய்மொழி. இங்கிலாந்தில் மொழிப்பற்று உளது. மொழி வெறி கிஞ்சித்தும் இல்லை. தாராளமாக தமிழில் வரவேற்கிறது, நூலகம். ஆஸ்பத்திரியில் பல மொழிகளில் உதவுகிறார்கள். காரியம் நடக்கவேண்டும். ஹிந்தியை பற்றி சில வார்த்தைகள். 32 மாதங்களில் நடக்கும் பாடதிட்டத்தை நான் 6/8 மாத திட்டத்துக்குள் அடக்கி நடத்தினேன். தடபுடலான ரிசல்ட். டில்லி கூப்பிட்டு அதை மாடலாக எடுத்துக்கொண்டது. அந்த வகையில் தான் ராம்தாரி சிங் ‘தினகர்’ என்ற கவிஞர் என்னை தத்து எடுத்துக்கொண்டார். எனக்கு மாடல்: ஜெர்மன் மொழி கற்றுக்கொண்ட விதம். இது பற்றிய விவரங்களையும், பத்திரிகை செய்திகளையும், கடிதங்களையும் கண்டு நண்பர் ழான் அசந்து போனார். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், ஹிந்திக்கு ஜெர்மன் மாதிரி, தமிழ் வளர சம்ஸ்கிருதம் இன்றியமையாதது. என் கட்டுரையில் ‘வாயுபசாரம்’ என்ற சொல்லை பயன்படுத்தினேன். அது கடன் வாங்கப்பட்டது, கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பியிடமிருந்து. போதுமா? ‘பாண்டியம்’ படித்த பின், அதை பற்றி எழுதுகிறேன்.‘மெய்நிகராக’வும், நிஜ வாழ்விலும் தமிழின் மேன்மையை சாதிக்க முடியும். அதற்கு, பேசுவதை நிறுத்தி விட்டு காரியத்தில் இறங்க வேண்டும். What are you waiting for? உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
ஷைலஜா:
சீரியசா எழுதப்போனால் பதிவு நீள்கிறது ஆகவே தொடரலாமா?: ஆஹா! ‘தேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்’ ஒரு மொழிப்பெயர்ப்புத் தொடர். தற்கால வரலாற்றுப் பகுதி. அந்த தொடர் தொய்ந்துபோகாமல் இருக்க, அதை தொடராக எழுதி வருகிறேன். மற்றபடி சீரியசா எழுதப்படும் பதிவுகளுக்கு தனியாக பதில் போடுகிறேன். இந்த தொடரின் நோக்கம், வரலாற்றுப்பாடம் படிப்பது;படிப்பிப்பது. இளைய தலைமுறை என்ன? என் வயது ஒத்தவர்கள் தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். என் மக்களுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரியாது. நாமெல்லாம் ஸ்ருதி சமூகம் தானே. அதற்குத்தான் உலகளவில் தமிழ் படிக்க/எழுத தெரியாவிடினும், பேச/புரிந்து கொள்ள முடிந்தவர்களை ஈர்க்கவேண்டி சில காரியங்களை தொடங்க நினைத்தேன். கை கூடவில்லை. இன்னொரு விஷயம் என் 15 வயது பேத்தி ஜெர்மன், ப்ரென்ச், ஸ்பானிஷ், லத்தீன் கணிசமான அளவு, அவள் வயதுக்குப் படித்தாய்விட்டது. காந்திஜி சொன்னார் என்று நாங்கள் சின்ன வயதில் ஹிந்தி படித்தோம். ஐ.சீ.எஸ். அதிகாரிகள் எம்.பீ.ஏ. படிக்கவில்லை; கிரேக்க/லத்தீன் இலக்கியங்கள் படித்தார்கள். ஒரு சிறிய நாடு, மொழிக்காக, ரஷ்யாவுடன் நடத்த்திய நிழல் யுத்தத்தில் வாகை சூடியதை நான் ‘அன்றொரு நாள்’ தொடரில் எழுதியிருந்தேன். மொழிப்பற்று தாய்ப்பால். மற்ற மொழிகள் டானிக். அரசியல்வாதிகளை விடுங்கள். நாம் செய்ய எத்தனை இருக்கிறது. What are you waiting for?
ஸுபாஷிணி:
ஒரு விளக்கம். நான் உங்களை இப்படித்தான் விளிப்பது வழக்கம். சம்ஸ்கிருதத்தில் ஸுபாஷிதானி என்று நன்மொழிஅறிவுரைகள் உண்டு. அந்தப்பெயரை வாய் நிறைய கூப்பிடாமல் சுருக்குவானேன். அது என் கருத்து. நம் இருவருக்கும் கருத்தொற்றுமை அபாரம். பட்டியலிட்ட நற்பண்புகளை உணர்த்த தான் ‘தமிழார்வம்: திரிகடுகம்’ இழையை தொடங்கினேன். மின் தழிழர்கள் அவரவருக்கு பிடித்த நற்பண்புகளை எழுத What are we waiting for?
என் உரைநடை உங்களுக்குப் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. நன்றி. ஆம். தமிழறியாமல் தான் இருந்தேன் நான்கு வருடம் முன். சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். இந்த நான்கு வருடங்களில் லக்ஷத்துக்கு மேல் சொற்கள் எழுதியாகிவிட்டது. மேலும், மற்ற மொழிகளில் சிந்தித்து எழுதிய பழக்கமும் உதவியது. அலஹாபாத் ஹிந்தி பெல்ட். அங்கே என் ஹிந்திக்கு நல்ல மதிப்பு. (இப்போது மிகவும் மறந்துவிட்டேன்.) எல்லாம் கொடுப்பினை தான். நீங்கள் எல்லாரும் கொடுக்கும் ஊக்கம்.
காளைராஜன்:
பாயிண்ட் மேட். 15 வயது வரை தமிழும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. சம்ஸ்க்ருதமும் தெரியாது. 17/18 வயதில் ஆங்கிலத்தில் சிந்திக்கும் வழக்கம் ஆரம்பம், திரு.நரசய்யா மாதிரி. இன்றும் அதே.
திரு.நரசய்யா:
நீங்கள் சொல்வதுடன் உடன்படுகிறேன்.
இன்னம்பூரான்
16 11 2012
absolutely right!எனது முதல் கதை 1964 ல் எழுதியபோது தமிழ் சுமாராகத்தான் எனக்குத் தெரியும் ஆங்கிலத்தில் நினைத்துத் தமிழில் எழுதினேன்! ஆனலும் வெளி வந்தபோது விகடன் முத்திரையுடன் உலகுக்கு அதை அளித்தனர்.
மொழி அபிமானம் மற்றொரு மொழியின் மீது காட்டப்படும் வெறுப்பினால் அளக்கப்படவேண்டாம் என்பது என் கட்சி.விஜய் டி வி யில் நானா நீயா நிகழ்ச்சியில் என்னைக் கண்டவர்களுக்கு நினைவிருக்கலாம்.
தேமதுரத் தமிழோசை
விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 1
*
தேமதுரத் தமிழோசை
விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 2
நூற்றுக்கணக்கான நாடுகளை சார்ந்த அரசியல் வல்லுனர்கள் செய்த ஆய்வின் முடிபு ஒன்றை காண்போம்: ‘ஜனநாயக மரபுகளுக்குகந்த கலாச்சார ஒருமைப்பாடும் பொருள்வளமும் உலகின் குடியரசுகளில் பிரசன்னம், இந்தியாவை தவிர.’ சொல்லப்போனால், இந்திய குடியரசு புரட்சியின் கருத்தாழத்தையும், வரலாற்றையும் இது வரை யாரும் முறையாக ஆய்வு செய்யவில்லை. அதனுடைய விசித்திர/விநோத போக்கு தான் அதற்குத் தடையாக நின்றதா? சுருங்கச்சொல்லின், உலக ஜனநாயக பிரவாகத்தில், இந்தியா கலந்து விடாமல், தனித்துத் தேங்கிவிட்டது. அது ஒரு புதிர் தான். சமூகவியல் ஆய்வாளர்களுக்குத்தான் அது பிடிபடவில்லை. முந்தைய ஆட்சி இந்தியாவுக்கு, தெரிந்தோ, தெரியாமலோ, தத்தம் கொடுத்த பிதுரார்ஜிதம் என்று வரலாற்றாசிரியர்கள் ( பிரிட்டீஷ்க்காரர்கள் மட்டுமல்ல) கூறுகிறார்கள். ஃப்ரென்ச்/டச்சு/ போர்ச்சுகீஸ்/பெல்ஜியர் போல் அல்லாமல், பிரிட்டீஷ் கலோனிய ஆட்சி திறந்த மனது கொண்ட நவீனர்களாம்!
இந்த வாதம் சிக்கலானது; நிஜம். ஆனால் நிஜம் அல்ல. பிரிட்டீஷ்க்காரர்கள் ஜனநாயக மரபுகளையும், நெறிகளையும், முறைகளையும் பரப்பினார்கள் என்றால், ஜனநாயகம் ஆஃப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் இருந்த அவர்களின் காலனிகளில், (குறிப்பாக, இந்திய வரலாற்றில் முளைத்தெழுந்த பாகிஸ்தானில்) ஏன் காலூன்ற முடியவில்லை. வாழையடி வாழையாக, இந்திய சமூக சீர்த்தித்தவாதிகளாலும், சமுதாய ஆர்வலர்களாலும் தான் இந்தியா, பொறுமையுடனும், கடும் உழைப்பினாலும், ஜனநாயகத்துக்கு ஏற்புடையதாக தயார் செய்யப்பட்டது என்பது தான் உண்மை. இந்திய தேசீய காங்கிரஸ், பிரிட்டீஷ் தொழிலாளர் கட்சி துவக்கம் செய்வதற்கு முன்னரே 1885ல் நிறுவப்பட்டது. அந்த கட்சி இந்திய மகாஜனங்கள் யாவரையும், ஜாதி மத இன பேதமின்றி, ஒரு குடையின் கீழ் கொணர பகீரதப் பிரயத்தனம் செய்தது யாவரும் அறிந்ததே. ‘ காங்கிரஸ் இந்திய தேசீயம் என்ற தோணியின் மாலுமி’ என்கிறார், பிரபல வரலாற்று ஆசிரியரான முகுல் கேசவன். எவ்வகையாயினும் இந்தியர் எனப்படுவோரை இந்தத் தோணியில் ஏற்றிக்கொள்ள படாத பாடு பட்டது, இந்த கட்சி. அந்த முயற்சியில் கணிசமான அளவு வெற்றி பெற்றிருந்தாலும், முழு வெற்றி அடைய முடியவில்லை. 1947ல் விடுதலை அடையும் வரை , இந்தியாவில் அதற்கு மவுசு இருந்திருந்தாலும், அதற்கு பின் முஸ்லிம் கட்சிகள், பத்தாம்பசலி ஹிந்து அமைப்புகள், லிபரல்/கம்யூனிசம் (போல்ஷ்விக் புரட்சி நடந்த நான்கே வருடங்களில் நிறுவப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.) போன்ற கொள்கைளால் உந்தப்பட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட ஆரம்பித்தன.
*
மூலம்:
*
Owing to its counter-intuitive, even miraculous nature, the historical and ideological origins of the Indian Revolution have not been systematically studied by scholars. A study by political scientists of more than one hundred countries found that India alone, of the world’s functioning democracies, did not fit the conventional democratic parameters of cultural homogeneity and economic prosperity—it was, in this respect, an outlier. Where social science cannot account for this puzzle, historians (chiefly but not exclusively British) seek to explain it in terms of a bequest, willed or accidental, from the previous rulers of the country. India is now democratic, it is said, because the British were modern, open-minded colonialists, unlike the French and the Dutch and the Portuguese and (especially) the Belgians.
The problem with this argument is factual as well as counter-factual. To take the latter objection first: if the British promoted democratic values and institutions, why has democracy failed to take root in other of its colonies in Africa and Asia (not least in Pakistan, which has a similar legal and institutional history to India’s)? The truth is that Indians were prepared for democracy by the patient hard work of several generations of homegrown reformers and activists. The Indian National Congress—founded in 1885, some years before the British Labour Party—worked hard, even heroically, to bring Indians of all castes, religions, and ethnicities into its ambit. The Congress, as the historian Mukul Kesavan has remarked, was a “Noah’s Ark of nationalism,” which sought to bring every species of Indian on board. Its successes were significant but not total—while it remained the most influential party until independence in 1947, its hegemony was challenged by parties representing the Muslim interest, the orthodox Hindu interest, and the lower-caste interest, as well as by parties run on more strictly ideological lines, such as the Indian Liberal Party and the Communist Party of India (which was founded four years after the Bolshevik Revolution).
*
சேமமுற வேண்டும் என்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம், மின் தமிழர்கள் கூட்டுறவில்.
(தொடரும்)
இன்னம்பூரான்
15 11 2012
*
வாழையடி வாழையாக, இந்திய சமூக சீர்த்தித்தவாதிகளாலும், சமுதாய ஆர்வலர்களாலும் தான் இந்தியா, பொறுமையுடனும், கடும் உழைப்பினாலும், ஜனநாயகத்துக்கு ஏற்புடையதாக தயார் செய்யப்பட்டது என்பது தான் உண்மை.
தேமதுரத் தமிழோசை
விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 4
முன்குறிப்பு:
தொடரின் நான்காவது பகுதி, இது. முன் பகுதிகளை பார்க்க வசதியாக, அவை சிறிய எழுத்துருவில், இந்த பகுதியின் அடியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது டாக்டர் ராமசந்திர குஹாவின் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு, அவருடைய அனுமதியுடன்.
இன்னம்பூரான்
26 11 2012
***
வரலாற்று நோக்கில் பார்த்தால், இவர்கள் இருவரும் (காந்திஜியும், பாபா சாஹேபும்) எதிர் துருவங்கள் எனினும், சகபாடிகள். மேல் மட்டத்திலிருந்து இடைவிடாமல் தீண்டாமையுடன் போரிட்டவர் காந்தி. அடிமட்டத்திலிருந்து எழுந்த சீர்திருத்தவாதிகளிலெல்லாம் முதன்மையானர், அம்பேத்கார். ஒன்றுக்குத் துணையாக மற்றொன்று என்று தான் இருந்தன, இருவரின் பணிகள். காந்தி அடிக்கடி அம்பேத்காரின் தொண்டை சிலாகித்து எழுதியிருக்கிறார் என்பது அவருடைய தொகுப்புகளில் காணக்கிடைக்கின்றன. அம்பேத்கார் வாழ்நாள் முழுதும் காங்கிரஸ் கட்சியை குறை கூறியவர். 1940 களில் காங்கிரஸ்க்காரர்கள் சிறையில் வாடியபோது, அவர் வைஸ்ராயின் நிர்வாஹக்குழுவில் கலந்து கொண்டு பணியாற்றினார். இப்படியெல்லாம் இருந்தாலும், அவரை சட்டத்துறைக்கு அமைச்சராக்க வேண்டும் என்று நேருவை 1947ல் காந்தி வற்புறுத்தினார். அது அதிவிவேகமான அணுகுமுறை. ஒரு இளைய சமுதாயம், கட்சி சார்புகளை கடந்து தான் சேவை செய்ய வல்லுனர்களை அழைக்க வேண்டும்.
பெண்ணியத்துக்கும், பெண்களின் விடுதலைக்கும் காந்தி பெருமளவில் உழைத்து இருக்கிறார். அதற்கு உந்துதல், கமலாதேவி சட்டோபாத்யாயா போன்ற இளைய புதுமைபெண் சமுதாயம். தற்கால இந்திய மாதர்களிலிலெல்லாம் உயர்ந்த பெண்மனி யாரென்றால் அது கமலாதேவி சட்டோபாத்யாயா. குடும்ப மரபுக்குட்பட்டு மணம் புரிந்து கொண்ட இவரின் கணவர் இவரது இளமையிலேயே மரித்து விட்டார். இந்தியாவின் வேறு பகுதியை சார்ந்த இடதுசாரி நடிகர் ஒருவரை இவர் பிற்காலம் மணந்தார். விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு, தண்டி யாத்திரையில் பெண்களையும் சிறை நாட, காந்தியை அனுமதிக்க வைத்தார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு தொழிலாளர் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர், அமெரிக்கா சென்று கறுப்பினத்தை சார்ந்தவர்களுக்கு காந்தீய ஒத்துழையாமையை சொல்லிக்கொடுத்தார். இந்திய பிரிவினையினால் அவதிப்பட்ட அகதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதில், இவரது மேற்பார்வை குறிப்பிடத்தக்கது. அதற்கு பிரகு அகில இந்திய அளவில் கைவினைப்பொருட்கள் செய்யும் கோவாப்பரேட்டிவ் சமாஜங்களில் த்ன் கவனத்தை செலுத்தினார். தேசீய கைவினைப்பொருட்கள் காட்சிசாலை அமைப்பதிலும், இசை, இயல், நாட்டியத்திற்க்காக தேசீய மையம் ஒன்றை நிறுவினார்.
காந்தீயம் அரசியல் விடுதலைக்கும், சமுதாய சீர்திருத்தத்துக்கும்,ஒரேசமயத்தில், அடி கோலியது. இந்திய அரசியல் சாஸனத்தில் இடம் பெற்ற - கட்சி அரசியல், வாக்குரிமை, மதபேதமற்ற நாடு, பன்மொழி சமுதாயம், பெண்ணுரிமை,பழங்குடிகளுக்கும், தாழ்த்தப்பட்டோர்களுக்கும் முன்னுரிமை -போன்ற முற்போக்கு சிந்தனைகளை 1915லிருந்து 1947 வரை, காந்தீயம் பரப்பியது. இந்த இயக்கத்தின் பிரதான புருஷன் மஹாத்மா தான். அவருடைய பணி எல்லாருடைய கவனத்தை ஈர்த்தது. ஆனாலும், அவருக்கு ஆதரவாகவும், எதிர்மறையாகவும் செயல் பட்ட ஜனநாயக சீர்திருத்தக்காரர்கள் இல்லை எனின், அவருடைய. தொண்டு இத்தனை பயனுடையதாக அமைந்திருக்காது.
*
மூலம்
*
From the viewpoint of Indian history, however, the two men were as much allies as rivals. Gandhi was the uppercaste leader who worked most tirelessly against untouchability; Ambedkar was the greatest of all lower-caste reformers. Their work complemented one another’s. Gandhi certainly recognized this, as the positive and even admiring references to Ambedkar in his Collected Works show. When India became free in 1947, Gandhi urged the first prime minister, Jawaharlal Nehru, to make Ambedkar his law minister, even though Ambedkar had been a lifelong rival of their Congress Party, choosing to serve on the Viceroy’s Executive Council when the Congressmen were in jail in the early 1940s. It was an act of extraordinary sagacity. A young nation needed its best talents to work together regardless of party affiliation.
Gandhi also made major contributions to the emancipation of women. Here, too, he was pressed to do so by those younger and more radical than he was—notably Kamaladevi Chattopadhyay, who has strong claims to being regarded as the greatest Indian woman of modern times. Married off to a man chosen by her family, she was widowed early, and then married a left-wing actor from another part of India. She joined the freedom movement, persuading Gandhi to allow women to court arrest during the Salt March and after. After coming out of jail, Chattopadhyay became active in trade union work, and traveled to the United States, where she explained the relevance of civil disobedience to black activists. After independence and partition, Chattopadhyay supervised the resettlement of refugees; and later she set up an all-India network of artisanal cooperatives, and established a national crafts museum as well as a national academy for music and dance.
THE GANDHIAN movement worked simultaneously for political freedom and social reform. Between 1915 and 1947, it nurtured the ideas that were later to be embodied in the Indian constitution—a multi-party political system based on adult franchise, a secular state, a multi-lingual polity, equal rights for women, and special privileges for disadvantaged sections such as Dalits (the erstwhile untouchables) and tribals. In this movement the Mahatma was himself the most influential—and interesting—figure, but his work could scarcely have had the impact it did were it not for the very many other democratically minded reformers who worked with him, for him, and against him.
(தொடரும்)
இன்னம்பூரான்
26 11 2012
************************************************************************
முன் வந்த பகுதிகள்:
*********************
இன்னம்பூரான்
16 11 2012
*****************************
தேமதுரத் தமிழோசை
விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 2
நூற்றுக்கணக்கான நாடுகளை சார்ந்த அரசியல் வல்லுனர்கள் செய்த ஆய்வின் முடிபு ஒன்றை காண்போம்: ‘ஜனநாயக மரபுகளுக்குகந்த கலாச்சார ஒருமைப்பாடும் பொருள்வளமும் உலகின் குடியரசுகளில் பிரசன்னம், இந்தியாவை தவிர.’ சொல்லப்போனால், இந்திய குடியரசு புரட்சியின் கருத்தாழத்தையும், வரலாற்றையும் இது வரை யாரும் முறையாக ஆய்வு செய்யவில்லை. அதனுடைய விசித்திர/விநோத போக்கு தான் அதற்குத் தடையாக நின்றதா? சுருங்கச்சொல்லின், உலக ஜனநாயக பிரவாகத்தில், இந்தியா கலந்து விடாமல், தனித்துத் தேங்கிவிட்டது. அது ஒரு புதிர் தான். சமூகவியல் ஆய்வாளர்களுக்குத்தான் அது பிடிபடவில்லை. முந்தைய ஆட்சி இந்தியாவுக்கு, தெரிந்தோ, தெரியாமலோ, தத்தம் கொடுத்த பிதுரார்ஜிதம் என்று வரலாற்றாசிரியர்கள் ( பிரிட்டீஷ்க்காரர்கள் மட்டுமல்ல) கூறுகிறார்கள். ஃப்ரென்ச்/டச்சு/ போர்ச்சுகீஸ்/பெல்ஜியர் போல் அல்லாமல், பிரிட்டீஷ் கலோனிய ஆட்சி திறந்த மனது கொண்ட நவீனர்களாம்!
இந்த வாதம் சிக்கலானது; நிஜம். ஆனால் நிஜம் அல்ல. பிரிட்டீஷ்க்காரர்கள் ஜனநாயக மரபுகளையும், நெறிகளையும், முறைகளையும் பரப்பினார்கள் என்றால், ஜனநாயகம் ஆஃப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் இருந்த அவர்களின் காலனிகளில், (குறிப்பாக, இந்திய வரலாற்றில் முளைத்தெழுந்த பாகிஸ்தானில்) ஏன் காலூன்ற முடியவில்லை. வாழையடி வாழையாக, இந்திய சமூக சீர்த்தித்தவாதிகளாலும், சமுதாய ஆர்வலர்களாலும் தான் இந்தியா, பொறுமையுடனும், கடும் உழைப்பினாலும், ஜனநாயகத்துக்கு ஏற்புடையதாக தயார் செய்யப்பட்டது என்பது தான் உண்மை. இந்திய தேசீய காங்கிரஸ், பிரிட்டீஷ் தொழிலாளர் கட்சி துவக்கம் செய்வதற்கு முன்னரே 1885ல் நிறுவப்பட்டது. அந்த கட்சி இந்திய மகாஜனங்கள் யாவரையும், ஜாதி மத இன பேதமின்றி, ஒரு குடையின் கீழ் கொணர பகீரதப் பிரயத்தனம் செய்தது யாவரும் அறிந்ததே. ‘ காங்கிரஸ் இந்திய தேசீயம் என்ற தோணியின் மாலுமி’ என்கிறார், பிரபல வரலாற்று ஆசிரியரான முகுல் கேசவன். எவ்வகையாயினும் இந்தியர் எனப்படுவோரை இந்தத் தோணியில் ஏற்றிக்கொள்ள படாத பாடு பட்டது, இந்த கட்சி. அந்த முயற்சியில் கணிசமான அளவு வெற்றி பெற்றிருந்தாலும், முழு வெற்றி அடைய முடியவில்லை. 1947ல் விடுதலை அடையும் வரை , இந்தியாவில் அதற்கு மவுசு இருந்திருந்தாலும், அதற்கு பின் முஸ்லிம் கட்சிகள், பத்தாம்பசலி ஹிந்து அமைப்புகள், லிபரல்/கம்யூனிசம் (போல்ஷ்விக் புரட்சி நடந்த நான்கே வருடங்களில் நிறுவப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.) போன்ற கொள்கைளால் உந்தப்பட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட ஆரம்பித்தன.
*
மூலம்:
*
Owing to its counter-intuitive, even miraculous nature, the historical and ideological origins of the Indian Revolution have not been systematically studied by scholars. A study by political scientists of more than one hundred countries found that India alone, of the world’s functioning democracies, did not fit the conventional democratic parameters of cultural homogeneity and economic prosperity—it was, in this respect, an outlier. Where social science cannot account for this puzzle, historians (chiefly but not exclusively British) seek to explain it in terms of a bequest, willed or accidental, from the previous rulers of the country. India is now democratic, it is said, because the British were modern, open-minded colonialists, unlike the French and the Dutch and the Portuguese and (especially) the Belgians.
The problem with this argument is factual as well as counter-factual. To take the latter objection first: if the British promoted democratic values and institutions, why has democracy failed to take root in other of its colonies in Africa and Asia (not least in Pakistan, which has a similar legal and institutional history to India’s)? The truth is that Indians were prepared for democracy by the patient hard work of several generations of homegrown reformers and activists. The Indian National Congress—founded in 1885, some years before the British Labour Party—worked hard, even heroically, to bring Indians of all castes, religions, and ethnicities into its ambit. The Congress, as the historian Mukul Kesavan has remarked, was a “Noah’s Ark of nationalism,” which sought to bring every species of Indian on board. Its successes were significant but not total—while it remained the most influential party until independence in 1947, its hegemony was challenged by parties representing the Muslim interest, the orthodox Hindu interest, and the lower-caste interest, as well as by parties run on more strictly ideological lines, such as the Indian Liberal Party and the Communist Party of India (which was founded four years after the Bolshevik Revolution).
*
சேமமுற வேண்டும் என்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம், மின் தமிழர்கள் கூட்டுறவில்.
(தொடரும்)
இன்னம்பூரான்
15/ 17 - 11 - 2012
*****************************************************************************************
தேமதுரத் தமிழோசை
விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 3
ஆரம்பகாலத்திலிருந்தே, இந்திய அரசியல் கட்சிகள், பிரிட்டீஷாரிடமிருந்து உரிமைகள் நாடி வந்தன. சலித்துக்கொண்டே, கலோனிய அரசும் இந்தியர்களுடன் முனிசிபாலிட்டி, லெஜிஸ்லேட்டிவ் கெளன்சில் என்று படிப்படியாக அரசியல் ஆளுமையை பகிர்ந்து கொள்ள தொடங்கியது. அதுவே 1937ல் பல மாகாணங்களில் அமைச்சரவை அமைக்கும் அளவுக்கு (பிரிட்டீஷ் கவர்னரின் தலைமையில்/கட்டுப்பாட்டுக்குள்) முன்னேறியது. அறுபது வருடங்களாக்கு மேலாக, இந்தியர்களால் நடத்தப்படும் இந்த கட்சிகள் பொதுநலம் பற்றி விவாதிக்கும் திறனை அனுபவம் மூலமாக பெற்றன. அரசியல் சுதந்திரத்துக்கும், முழு வீச்சில் ஜனநாயகத்துக்கும், அது தானே அஸ்திவாரம்.
இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றின் முன்பகுதியில் பல நபர்களும், ஸ்தாபனங்களும் அழியாத இடம் பெற்றுள்ளன. குறிப்பாக மேற்கிந்தியாவின் பங்கு அதிகம் எனலாம். தற்காலம் புனே என்றழைக்கப்படும் பூனா நகரம், 1875-1910 காலகட்டத்தில் சமூக முன்னேற்றத்தில் தலைமை வகித்தது. ஜோதிபாய் பூலே, தாராபாய் ஷிண்டே, கோபால் கிருஷ்ண கோகலே, பால் கங்காதர திலக் போன்ற தலைவர்கள் ஜாதி வேற்றுமை ஒழிக்கவும், பெண்பாலார் சமத்துவத்துக்கும், ஹிந்து-முஸ்லீம் நல்லிணக்கத்துக்கும், ஏழை பாழைக்குக் கல்வி அளிப்பதற்கும் போராடினார்கள். அவர்களின் பட்டியலில் கலோனிய அரசிடமிருந்து முழுமையான விடுதலை முதலிடம் வகித்தது.
மோஹன் தாஸ் கே.காந்தி தென்னாஃப்பிரிக்காவிலிருந்து 1915ம் ஆண்டு தாயகம் திரும்பினார். ஐந்தே வருடங்களில் தேச விடுதலை இயக்கத்தின் பெரிய தலைவராக விளங்கினார். சாத்வீகமான ஒத்துழையாமை, சத்யாக்ரஹம் போன்ற வழிமுறைகளுக்கு பெயர் போனவர், அவர். அமெரிக்காவில் மனித உரிமை போராட்டம், கிழக்கு ஐரோப்பாவில் யதேச்சதிகார கம்யூனிஸ்ட்டுக்கு எதிர்ப்பு, சமீப காலத்தில் மத்திய கிழக்கு பகுதிகளில் ஜனநாயக வேட்கை - அவற்றில் எல்லாம் காந்தியின் பெயர் எடுபடுகிறது. அவருடைய சத்யாக்ரஹ கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ஒன்றை மறக்கலாகாது. அடக்குமுறையை எதிர்த்த காந்தி பாரபக்ஷத்தையும் எதிர்த்தார். அமெரிக்காவின் அக்கால இனவாதம் போன்ற தீண்டாமையை ஒழிப்பதாக கங்கணம் கட்டிக்கொண்ட காந்தி, தீண்டாமை ஒழிப்பை அரசியல் விடுதலைக்கு முதல் படியாக அமைத்துக்கொண்டார்.
மேல்மட்டத்தில் பிறந்து வாழ்ந்த காந்தி தீண்டாமையை மேல்மட்டத்திலிருந்து தாக்கினார். அவருடைய பணிக்கு உதவியது தீர்க்கதரிசியாகவும், பொருளியல் வல்லுனராகவும், வழக்கறிஞராகவும் இருந்து, சாதிபேதத்தின் அடிப்பாரத்தைத் தாக்கிய பீ.ஆர்.அம்பேத்கார். வறுமையில் உழன்ற ஒரு சிப்பாயின் 13வது குழந்தையும், தீண்டாமையில் விலக்கி வைக்கப்பட்டவருமான அம்பேத்கார், இடர்பாடுகளை கடந்து கொலம்பியாவிலும், லண்டன் பொருளியல் பள்ளியிலும் டாக்டரேட் விருதுகளை பெற்றார். வழக்கறிஞர் சன்னதையும் லண்டனில் பெற்றார். அதன் பிறகு, மக்களுக்காக, அவர்களுடன் சேர்ந்து உழைக்க இந்தியா வந்து சேர்ந்தார்.
அம்பேத்காரும் காந்தியும் அடிக்கடி மோதினர். ஹிந்து குடையிலிருந்து தீண்டாதவர்களை (ஹரிஜன்/தலித்) அகற்றி செல்ல விழைந்தார், அம்பேத்கார். ஹிந்து சமுதாயத்திலிருந்து தீண்டாமையை உதறி, அந்த சமுதாயத்தைக் காப்பாற்ற விரும்பினார், காந்தி. காந்தியின் நடை தளர் நடை; அது போதாது என்று அம்பேத்கார் கருதினார். ஹிந்து சமயத்தின் பத்தாம்பசலிகளோ காந்தியை பரம விரோதியாக கருதினர். சாதிமத பாகுபாடுகளை களைந்து சாத்திரங்களை குலைக்கிறார் என்று குற்றம் சாட்டினர். அந்த காலத்து மோதல்களும் உரசல்களும் இன்றளவும் மறையவில்லை. அம்பேத்காரின் பெயரில் காந்தியை நிந்திப்பது நடந்து தான் வருகிறது.
***************
இந்தியா என்ற complex நாட்டைப் புரிந்து கொள்ள சரித்திர வாசிப்பு
அவசியம். அதை இவ்விழை செவ்வனே செய்கிறது.
காந்தி தன்னை என்றும் ‘மகாத்மா’ என்று சொன்னதே இல்லை. அவர் கடைசிவரை
கற்கும் மாணவனாகவே தன்னைக் காட்டிக்கொண்டார். ஆனால் செயற்கரியன எனச்
சாமான்யன் நினைக்கும் செயலை ஒருவர் செய்யும் போது மகாத்மா ஆகிவிடுகிறார்.
இப்படி மகாத்மா என ஆகிவிட்டு பின் ஏது செய்தாலும் அது
விமர்சனத்திற்குள்ளாகிறது. ஏனெனில் மகாத்மாக்கள் பிழையற்றவர்கள்.
பூரணர்கள். இதுவொரு சிக்கலான சமூக உளவியல். காந்தி மீது நாம் வைக்கும்
விமர்சனமெல்லாம் அவர் ‘மகாத்மா’ என்பதால்தான். சாதாரண கிராமத்து விவசாயி
இதையே செய்தால் நாம் விமர்சிக்க மாட்டோம் :-)
நா.கண்ணன்
எனக்கு இன்னும் புரியவே இல்லை, தாங்கள் எதற்காக, யார் சொல்லுக்காக
எழுதுவதை நிறுத்த வேண்டும்? கண்ணில் படும் கனியின் மீதுதான் கல்லடி படும்
என்று நான் சொல்லியா உங்களுக்குத் தெரிய வேண்டும்?. இதற்கு போய்
அலட்டிக்கொள்ளலாமா? தாங்கள் உங்கள் எழுத்தின் மூலம் அடுத்த தலைமுறைக்குச்
செய்ய வேண்டியது நிரம்பவே உள்ளது. வக்கிரப்பட்டுப்போன தமிழ் மனதை
மீண்டும் விசாலப்படுத்த எழுந்தது இந்த இழை. சங்கத்தமிழன் போல் வட இமயம்,
தென்குமரி என்று அகண்ட இந்தியா நம் சொந்தம் என்று பேச வந்த இழை. இது ஏன்
நிற்க வேண்டும்? இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
சொல்லுங்கள் நண்பர்களே, நம்ம, ‘இ’ சாருக்கு!
நா.கண்ணன்
2012/12/11 Innamburan Innamburan <innam...@gmail.com>:
> நன்றி, கண்ணன். இனி நான் தமிழ் குழுமங்களுக்கு/இதழ்களுக்கு எழுதப்போவது
> துர்லபம். இதை இத்துடன் நிறுத்தவேண்டிய
ஐயோ! கமலம்!
அவர் இனிமேல் அதிகம் எழுத மாட்டேன் என்றுதான் சொல்கிறார். அந்த இழை ஒரு
மிகப்பெரிய நல்ல நோக்கோடு எழுந்த இழை. அதை நிறுத்தக்கூடாது என்று
முன்மொழிகிறேன். நீங்களும் அதையே சொல்லுங்கள். (என்னடா! இப்பதான்
ஒருவருக்கு மலர்ச்செண்டு கொடுத்தோம் அதற்குள் இன்னொருவர் கிளம்புகிறாரா?
என்று பயப்பட வேண்டாம் :-))
நா.கண்ணன்
அண்ணா:
நாங்கள் உங்களை முதன்முறையாக அறிந்த போதும் இதே நிலைதான். ஆனால்,
அதைக்கணக்கிட்டு வாளாவிருந்திருந்தால் இத்தனை எழுத்து கிடைத்திருக்குமா?
இல்லை உங்களுக்கும் தான் இத்தனை இலக்கிய சுகம் கிடைத்திருக்குமா?
துர்லபம் என்றே இருக்கட்டும். எழுதும் சிந்தை இருக்கட்டும்! :-)
நா.கண்ணன்
கண்ணன்
வாஸ்தவம். இலக்கிய சுகம் ஸெளலப்யமாகவே அமைந்தது. பொழுதும் அழகாகவே புலர்ந்தது. பாருங்களேன். அ.மாதவையா அவர்களில் வம்சாவளிலிருந்து ஒரு மாது, நான் அவரை பற்றி எழுதியதை சிலாகித்து, ஒரு லிகிதம் அனுப்பிருக்கிறார். நற்செய்தி. பகிர்ந்து கொண்டேன்.
இன்று மற்றொரு இழையில், ‘என்ன புரியவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் கேட்டால் நலம்.’ என்று கூறும் ஹரிகி, எனக்கு அந்த வாய்ப்பு அளிக்காமல், ‘வெள்ளிடை மலை’யை ‘முலையாய்’ திருகினார். பிறகு ‘பொத்’ என்று குதித்து, அவருடைய காப்புரிமை ‘‘பிஸ்கோத்து’ பாஷையை விட மட்டமான ஆகுபெயரை கூறி, நீங்கள் கூறும் இளைய சமுதாயத்துக்காக பரீக்ஷார்த்தமாக என்னால் எழுதப்பட்ட தொடரை கருச்சிதைவு செய்தார். இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. பொதுமன்றத்தின் அலட்சியம் என்னை வருத்தியது. சமுதாயத்தில் அநீதியை தட்டிக்கேட்கவேண்டும் என்று சொல்லி வரும் எனக்கு, ‘‘பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா.” என்ற மஹாகவியின் சொல் கூட எடுபடவில்லையே என்ற வ்யாகூலம். நல்ல காலம் பிறக்கப்போவது போல் இருக்கிறது. மற்றொரு இழையில் நாம் யாவரும் மதிக்கும் நிறைகுடம் தேவ் ‘தகவல் பகிர்வு எனும் அளவில்அறிஞர்கள் இழையை நகர்த்திக்கொண்டு போனால் இதை வாசித்துவரும் நாங்கள் அனைவரும் பயன்பெறுவோம்.’ என்று என் கருத்தையே எதிரொலி செய்திருக்கிறார். அது போதும் எனக்கு. எழுதும் சிந்தையை தூண்டி விட்டிருக்கிறீர்கள், கண்ணன். நன்றி.
ஸுபாஷிணி
அக்ஷர லக்ஷம் பொறும் உங்கள் வார்த்தைகள். மகள் என்ற உமது உரிமை எனக்கு பெருமிதம். தமிழ் அறியாத என்னை தமிழுலகத்தில்,மழலை பேசி, கொட்டி மொழுகி, தளர்நடை பயில செய்தது நீ தானே, அம்மா. என் மனம் சொல்வதை நீங்கள் அழகாக பிரதிபலித்து விட்டீர்கள். திரு.வி.க. அவர்கள் மகிழ்ச்சியடைவார்.
நான் அம்மா சொல்படி ராஜு.
கமலம்
அந்த நிகழ்வு என் மனதிலும் பசுமையாக இருக்கிறது. கல்லடி கொடுக்க வந்தவர் கைலாகு கொடுத்ததைப் பற்றி நாம் சிரித்து பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா. என் மனம் லேசாகி விட்டது, இன்று. நன்றி உனக்கு. உடல் நலம் தேவலை. ரத்த அழுத்தம் 120/80 இருந்தால் நலம் என்பார்கள். எனக்கு அதை விட கணிசமாக குறைந்து இருக்கவேண்டும் என்று மருத்துவ எச்சரிக்கை. வாழ்நெறி, தேகாப்பியாசம், மருந்து அவற்றின் உதவியால் 110/65 என்பதை சராசரியாக வைத்து வாழ்கிறேன். [எளிய காரியம் அல்ல.] பொது மன்றத்தின் அலட்சிய போக்கு என்னை வருத்தியதால், அது கந்து வட்டி போல ஏறி விட்டது. மகன் கோபித்துக்கொண்டான். இன்று பெரிய ஆஸ்பத்திரியின் சுவாசப்பிரிவின் குழு என்னை பரிசோதிக்கும். நல்லதே நடக்கட்டும். எதற்கும் கிருஸ்துமஸ் விடுமுறையை களிப்புடன் கழிக்கப்போகிறேன். எல்லா குழுமங்களில் இருக்கும் தமிழன்பர்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகள்.
அன்புடன்,
இன்னம்பூரான்
12 12 12
அக்ஷர லக்ஷம் பொறும் உங்கள் வார்த்தைகள். மகள் என்ற உமது உரிமை எனக்கு பெருமிதம். தமிழ் அறியாத என்னை தமிழுலகத்தில்,மழலை பேசி, கொட்டி மொழுகி, தளர்நடை பயில செய்தது நீ தானே, அம்மா. என் மனம் சொல்வதை நீங்கள் அழகாக பிரதிபலித்து விட்டீர்கள். திரு.வி.க. அவர்கள் மகிழ்ச்சியடைவார்.
நான் அம்மா சொல்படி ராஜு.
நான் விவரமாக சொல்லியிருக்கவேண்டும், கண்ணன். மன்னிக்கவும். என் குடும்பம் கவலைப்படுகிறது. பொது மன்றத்தின் இயலாமையை புரிந்து கொள்ளாமல் ஏன் இப்படி உழைத்து நன்கு பராமரிக்கப்பட்ட உடல் நிலையை குலைத்துக்கொள்கிறாய் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.