தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வு கருத்தரங்கம்

86 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 22, 2026, 1:06:28 AM (10 days ago) Aug 22
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி
30.jpg
நேரலை :
https://www.facebook.com/TamilHeritageFoundation/videos/1415241104085180

`````````````````````````

தேமொழி

unread,
Aug 23, 2026, 1:20:07 AM (9 days ago) Aug 23
to மின்தமிழ்

Screenshot.jpg
'தனிநாயகன்'  படமுன்னோட்டம்  — பிருந்தா சாரதி இயக்கத்தில் 
தனிநாயக அடிகளார் ஆவணப்படம்
https://youtu.be/WurEetecVy0



thaninayagam video.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக . . .
'தனிநாயகன்' — பிருந்தா சாரதி இயக்கத்தில் தனிநாயக அடிகளார் ஆவணப்படம்
https://youtu.be/vettZuaj000
``````````````````````````````````

தேமொழி

unread,
Aug 24, 2026, 12:22:02 AM (8 days ago) Aug 24
to மின்தமிழ்

journey THFi.jpg
இருபத்தைந்து ஆண்டுகள் தமிழ்ப் பணியில்... 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பயணம் (2001-2026)
https://youtu.be/WeGpYEHcSLg
`````

தேமொழி

unread,
Aug 24, 2026, 7:55:29 PM (7 days ago) Aug 24
to மின்தமிழ்
https://www.facebook.com/photo/?fbid=4632683296965223&set=a.1577733469126903
#தனிநாயகன் ஆவணப்படம் வெளியீடு
Naser.jpg
*
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தயாரிப்பில் நான் எழுதி இயக்கிய 'தனிநாயகன்' ஆவண படத்தை 22. 8.26 சனிக்கிழமை மாலை சென்னை, கோட்டூர்புரம் தமிழ் இணைய கல்விக் கழகத்தில் நடிகர் நாசர் வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார்.

முன்னதாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளிவிழா நிறைவு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக சட்டப் பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள், மாண்புமிகு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் குமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு அரங்கில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தனிநாயகம் திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

அறக்கட்டளையின் தலைவர் சுபாஷிணி, துணைத் தலைவர் முனைவர் நா. கண்ணன் ஆகியோர் விழாவின் தலைமை உரையும் வரவேற்புரையும் வழங்கினர்.

"ஒரு வாழ்நாள் கடமையைச் செய்து முடித்திருக்கிறீர்கள் அன்பு சகோதரர் பிருந்தா சாரதி," என்று அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் பாராட்டியதும்,

#அவதாரம் திரைப்படத்தில்
என்னுடைய கடைசி உதவி இயக்குனராக சேர்ந்த பிருந்தா சாரதி தொடர்ந்து திரைப்படத் துறையிலும், இலக்கியத்திலும் இடையறாமல் பணியாற்றி வருவது எனக்குப் பெருமை சேர்க்கிறது. இந்த தனிநாயகன் ஆவணப்படம் மிகச் சிறப்பாக வெளிவந்துள்ளது,' என்று இயக்குனர் நாசர் அவர்கள் வாழ்த்தியதும்,

"ஊதியம் எதுவும் ஏற்றுக் கொள்ளாமல் ஆவணப்படத்தை இயக்கிய பிருந்தா சாரதி தனிநாயகம் அடிகளார் குறித்த செய்திகளை நாங்கள் விவாதிக்க விவாதிக்க, நூல்களைப் படிக்கப் படிக்க தனிநாயகம் அடிகளார் ஆவி புகுந்த சந்திரமுகியாகவே மாறிவிட்டார்," என்று ஆவணப் படத்தின் கருத்தாக்கம் வழங்கி தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் தயாரித்த முனைவர் க. சுபாஷிணி அவர்கள்
குறிப்பிட்டதும்,

கடந்த ஓர் ஆண்டாகத் தனிநாயகம் அடிகளாரை பற்றிச் சிந்தித்து, எழுதி ,படபிடிப்பு நடத்தி, படத்தொகுப்பு, இசையமைப்பு மற்றும் ஒலிச்சேர்க்கைப் பணிகளில் அந்தந்தக் கலைஞர்களோடு
பலவிதமான பணிகளில் ஈடுபட்டு வந்த உழைப்புக்கு ஊதியமாக அமைந்தது.

ஆவணப்படத்தின் உருவாக்கத்தில் உதவிய ஒருவருக்கும் என் நன்றியை தெரிவித்து ஆவணப்படம் உருவாக்கம் குறித்த சில செய்திகளை அரங்கில் பகிர்ந்து கொண்டேன்.

பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
*

பிருந்தா சாரதி
On Saturday, August 22, 2026 at 10:20:07 PM UTC-7 தேமொழி wrote:

தேமொழி

unread,
Aug 24, 2026, 11:53:02 PM (7 days ago) Aug 24
to மின்தமிழ்
https://www.facebook.com/20531316728/posts/10154009990506729/


kannan.jpg
kannan2.jpg

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் இறுதியில் டாக்டர் சுபாவிற்கும் எனக்கும் ஓர் இன்ப அதிர்ச்சி தந்தனர். அதுதான் எங்களை "தலைப்பாக்கட்டு நாயகர்களாக" ஆக்கியது. எங்கிருந்தோ இரண்டு மகுடங்கள் கொண்டு வந்து பொன்னாடை போர்த்தி, கையில் ஓர் இலட்சினை கொடுத்து கால்நுற்றாண்டைத் தாண்டியதை ஓர் உற்சவமாக ஆகிவிட்டனர். அவசரமாக கிளம்பத்தயாரான அமைச்சர்களை இருக்கச்சொல்லி இதை செய்வித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.
பொதுவாக 60 அகவை ஆனவர்களை குழந்தைகள் கௌரவிப்பர். த. ம. அ ஓர் குடும்பம் என்பதை இது காட்டியது. அமைச்சர்களும் அலுத்துக் கொள்ளாமல் இந்த கௌரவத்தை அவர்களுக்காக நிறைவேற்றியது மீண்டும் ஏதோ கனவுலகில் இருப்பது போன்ற ஓர் உணர்வைத் தந்தது.
உண்மையிலேயே இது ஓர் கல்யாணம் போலவே இருந்தது. நான் எங்கள் வீட்டில் இரண்டு கல்யாணம் பண்ணியிருக்கிறேன் (எனக்கில்லை, அக்காமார்களுக்கு!). அதிலுள்ள சிரமங்களும், குதூகலமும் எனக்குத்தெரியும். இந்தத் தொப்பி வாங்க தம்பி மணிவண்ணன் அலைந்ததை பின்னால் சொன்ன போது அதுதான் நினைவிற்கு வந்தது!
இது "தானா சேர்ந்த கூட்டம்". தன்னார்வலர் கூட்டம். அப்படித்தான் இருக்கும். செயற்குழுவிற்கு எம் நன்றிகள்!

தேமொழி

unread,
Aug 24, 2026, 11:57:03 PM (7 days ago) Aug 24
to மின்தமிழ்
https://www.facebook.com/20531316728/posts/10154009990506729/
kannan3.jpg
தனி மரம் தோப்பாகுது! தமிழ் மரபு அறக்கட்டளை இன்று வெள்ளிவிழா கொண்டாடுகிறது எனில் அதுவொரு கூட்டு முயற்சியின் வெற்றி. ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற எங்களின் அறைகூவல் நிதர்சனமாகி இன்று கால் நூற்றாண்டு பயணத்தை சாத்தியப்படுத்தி இருக்கிறது. டாக்டர் சுபாவின் தலைமைத்துவம் செயல்படுகிறது என்றாலும் நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுமே?
இதுவொரு பன்னாட்டு கூட்டு உழைப்பு. கலிபோர்னியாவிலிருந்து தேமொழி, ஜெர்மனியிலிருந்து ரம்யா மற்றும் குழுவினர், சென்னையில் நானா, டாக்டர் இனிய நேரு. திருப்பூரிலிருந்து மணி வண்ணன். வேலூரிலிருந்து பானுரேகா, மதுரையிலிருந்து டாக்டர் பாப்பா, டாக்டர் இறைவாணி, சுலேகா, கும்பகோணத்திலிருந்து சிவகுமார், பாண்டிச்சேரியிலிருந்து ப்ரீதி , சிவ இளங்கோ, இப்படி எங்கிருந்தெல்லாம் சளைக்காமல் பயணப்பட்டு வந்து வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த விழா இது. தட்சிணா மூர்த்தி, ஜெஸ்டின் என இன்னும் விட்டுப் போன பல பேர்!
நிகழ்ச்சியின் மறுகுரலாக ஒலித்த பல்குரல் வித்தகர் குமரகுருபரன். நினைத்தால் வியப்பாக இருக்கிறது. தமிழால் இணைவோம் எனும் எங்கள் கூவல் இன்று நிஜப்பட்டிருக்கிறது.
இது தன்னார்வலர்களுக்கு மட்டுமல்ல, அமைச்சர்களுக்கும் பொருந்தும் என்பது, தமிழின் மந்திரசக்திக்குச் சான்று. ஆம், நாம் அழைத்தது சபாநாயகர், கல்வி அமைச்சரை மட்டும். ஆனால், தகவல்துறை அமைச்சரும் ஆசையோடு வந்து கலந்து கொண்டது ஒரு கனவு போல் படுகிறது.
சினிமா ஒரு கனவுதான், ஆயினும் நடிகர் நாசர் வந்ததும் கனவுதான். பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி இறந்துபோக, நடிகர் சங்கத்தலைவரான நாசர் அங்கிருக்க வேண்டிய சூழலில், அதை முடித்துவிட்டு எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கனவு போல் உள்ளது. நம்பமுடியாமல் உள்ளது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் சனி 22, 2026) சென்னையில் தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தது.
இந்த நிகழ்ச்சியைத் தொடக்க உரையாற்றி சிறப்பித்தார் தமிழ்நாடு சட்டமன்றத் தலைவர் மாண்புமிகு ஜே. சி. டி. பிரபாகர் அவர்கள்.
நிகழ்ச்சிக்குத் திடீரென்று வருகை தந்து ஆச்சரியப்படுத்தியதோடு ஒரு பொருள் பொதிந்த வாழ்த்துரை வழங்கினார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஆர். குமார் அவர்கள்.
நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட "தனிநாயகன்" ஆவணப்படத்தின் பட முன்னோட்டத்தை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை, செய்தி ஊடகத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல் துறை ஆகியவற்றின் அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்புரையாற்றிய ஆய்வாளர்கள் டாக்டர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திரு.பொ. வேல்சாமி, டாக்டர் டேனியல் ஜெயராஜ் ஆகிய மூவரும் மிகச் சிறந்த ஆய்வுச் செய்திகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பாக்கினர்.
இந்த விழாவின் மற்றொரு சிறப்பு அம்சம் ஐந்து நூல்கள் வெளியீடு. அதைப்பெற்றுக்கொள்ள வந்த பெருந்தகைகள்! டாக்டர் மேகநாதன், டாக்டர் பத்மாவதி போன்றோர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஒரு நூலாசிரியர் திரு.அருள் மெர்வின். இவர் சுவிசிலிருந்து பறந்து வந்தார். அதே போல் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆதி நண்பர் Jean-Luc Chevillard ஜெர்மனியிலிருந்து வந்து சிறப்பித்தார். இது போல் இன்னும் பல.

தேமொழி

unread,
Aug 25, 2026, 11:26:20 PM (6 days ago) Aug 25
to மின்தமிழ்


தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சி நேற்று சென்னையில் தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தது.

இந்த நிகழ்ச்சியைத் தொடக்க உரையாற்றி சிறப்பித்தார் தமிழ்நாடு சட்டமன்றத் தலைவர் மாண்புமிகு ஜே. சி. டி. பிரபாகர் அவர்கள்.

நிகழ்ச்சிக்குத் திடீரென்று வருகை தந்து ஆச்சரியப்படுத்தியதோடு ஒரு பொருள் பொதிந்த வாழ்த்துரை வழங்கினார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஆர். குமார் அவர்கள்.
நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட "தனிநாயகன்" ஆவணப்படத்தின் பட முன்னோட்டத்தை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை, செய்தி ஊடகத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல் துறை ஆகியவற்றின் அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்புரையாற்றிய ஆய்வாளர்கள் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் திரு.பொ. வேல்சாமி, டாக்டர் டேனியல் ஜெயராஜ் ஆகிய மூவரும் மிகச் சிறந்த ஆய்வு முறைகளை வழங்கி பல புதிய செய்திகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள். இந்த வெள்ளி விழா நிகழ்வுக்கு இந்த ஆய்வுரைகள் மேலும் சிறப்பு சேர்த்தன.

தனிநாயகன் டாக்டர் சேவியர் எஸ். தனிநாயகம் அவர்களது தமிழ்ப் பணிகளை விளக்கும் ஆவணப் படத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தயாரித்து கடந்த சனிக்கிழமை திரைக்கலைஞர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவர் திரு. நாசர் அவர்கள் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ஆய்வு மாணவர்களும் வரலாற்று ஆர்வலர்களும் நேரில் வந்து கலந்து சிறப்பித்தனர்.

இந்த ஆவணப் படத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தயாரிப்பதற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிய இயக்குனர் தோழர் பிருந்தா சாரதி, திரைப்பட இசையமைப்பாளர் ஜோஹன் சிவனேஷ், ஒளிக் கலவை நிபுணர் திரு லட்சுமி நாராயணன் திரு ரமேஷ் திரு பன்னீர்செல்வம் திரு ஜோன் ஆகியோர் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த வெளியீட்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

திரு.நாசர் அவர்கள் உரையாற்றும் பொழுது திரைத்துறையில் புகழ்பெற்ற முன்னோடிகள் பற்றி இளம் தலைமுறைக்கு விவரித்தார்.  தொழில்நுட்ப ரீதியாக திரைப்படங்கள் தொடக்க காலத்தில் எடுக்கப்பட்ட தன்மை, இடைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பதை பற்றியும் உரையாற்றியதோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

இந்த ஆவணப் படத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா நிகழ்வில் வெளியிட்டு எம்மை சிறப்பித்த தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவர் திரு.நாசர் அவர்களுக்கு  அமைப்பின் சார்பிலும் தனிப்பட்ட வகையிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

-முனைவர் க சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி

suba 25th.jpg

suba 25th2.jpg

suba 25th3.jpg

suba 25th4.jpg

````````````````````````````````````````

தேமொழி

unread,
Aug 28, 2026, 4:35:55 PM (3 days ago) Aug 28
to மின்தமிழ்
தனிநாயகன் - ஆவணப்படம் பார்க்க வருக! தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகள் வளர்க!

கவிஞர் நா.முத்துநிலவன் 

மலேயாவில் பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து வரும் மென்பொருளாளர் முனைவர் க.சுபாஷிணி அவர்களைத் தலைவராகக் கொண்ட பன்னாட்டு அமைப்பு – தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation - THF).

சாதி, மத, இன அடிப்படையிலேயே பெரும்பாலானவற்றை நடத்தி அதன் காரணமாகவே இழிநிலை நோக்கிச் சென்று வரும் தற்காலத் தமிழர்க்கு உண்மையான நமது வேர்களையும் விழுதுகளையும் அறிமுகப்படுத்தி ஆய்வுப் பணிகளைத் தொடரும் சிறப்பான அமைப்பு இது.

உலகளவிலான தமிழர்க்குத் தனது இணையப் பணிகளால் அறிமுகமான செங்கல்பட்டு–ஜெர்மனி-இங்கிலாந்து எனப் பறந்து வரும் முனைவர் ந.கண்ணன் இதன் தோற்றுநர்களில் ஒருவரும் துணைத்தலைவரும் ஆவார்.

திருச்சியில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வாழ்ந்துவரும்  எழுத்தாளர் சமூகவியல் அறிஞர் முனைவர் தேமொழி அவர்கள் இதன் செயலாளர்.

இதன் பொருளாளராக முனைவர் இனியநேரு பணியாற்றி வருகிறார்

த.ம.அ. வெள்ளிவிழா, கடந்த 22-8-2026 அன்று சென்னையில் நடந்தது. வழக்கம் போல, நூல்கள் வெளியீடு நிகழ்வுடன் தனிநாயகம் ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

உலகத் தமிழ் மாநாடுகளைத் தொடங்கி வைத்த பெருமை தனிநாயகம் அடிகள் அவர்களையே சாரும். அவரைப் பற்றிய சரியான மற்றும் முழுமையான ஊக்கச் செய்திகளை  இன்றைய (ஜென்-ஸி) தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் அற்புதமாக ஆவணப் படம் இது. அனைவரும் பார்க்க வேண்டுகிறேன்.

த.ம.அறக்கட்டளை சுபாஷிணியின் கருத்தாக்கம், தயாரிப்பில்,  அருமை நண்பர்  கவிஞர் பிருந்தாசாரதி  எழுதி இயக்கியிருக்கிறார். இசை - ஜோஹன் சிவனேஷ்.
பாராட்டுகள் சுபா!
வாழ்த்துகள் பிருந்தாசாரதிஜோஹன்.

--------------------------------------------------------------- 
ஆவணப் படத்தின் இணைப்பு -

இதுபோலும் ஏராளமான தமிழ், தமிழ்ச் சமூகம் சார் பணிகளை இடையறாது,  உலக அளவில் முன்னெடுத்துவரும்  தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளை இதுவரையிலும் அறியாதவர்கள்  அவசியம் தெரிந்து கொள்வதோடு இதன் பணிகளில் உதவலாம் 
அதன் இணையம் :  Tamil Heritage Foundation – THF :https://tamilheritage.org/
-------------------------------------------------------------------------

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை at ஆகஸ்ட் 28, 2026
வளரும் கவிதை
நா.முத்துநிலவன் வலைப்பக்கம்... 

தேமொழி

unread,
Aug 29, 2026, 11:26:24 PM (2 days ago) Aug 29
to மின்தமிழ்

title Amarnath.jpg
கீழடி வெளிப்படுத்தும் தமிழரின் தொன்மை: திருமிகு அமர்நாத் ராமகிருஷ்ணா
https://youtu.be/Urj-_KcHWYM

22.8.2026 சனிக்கிழமை அன்று சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில்  நடைபெற்ற 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வுக் கருத்தரங்க நிகழ்ச்சி உரை

தேமொழி

unread,
Aug 30, 2026, 2:18:54 PM (2 days ago) Aug 30
to மின்தமிழ்
title velsami.jpg

தமிழக வரலாற்றை ஆவணப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்
— தமிழறிஞர் புலவர் பொ. வேல்சாமி
https://youtu.be/S04OribJZJw

22.8.2026 சனிக்கிழமை அன்று சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில்  நடைபெற்ற 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வுக் கருத்தரங்க நிகழ்ச்சி உரை


தேமொழி

unread,
Aug 31, 2026, 3:28:00 AM (24 hours ago) Aug 31
to மின்தமிழ்
title denial.jpg

ஐரோப்பியத் தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலங்கள்
—முனைவர் டேனியல் ஜெயராஜ்
https://youtu.be/QGtFirBN3sE

22.8.2026 சனிக்கிழமை அன்று சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில்  நடைபெற்ற
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வுக் கருத்தரங்க நிகழ்ச்சி உரை

தேமொழி

unread,
Aug 31, 2026, 12:36:26 PM (15 hours ago) Aug 31
to மின்தமிழ்
title suba.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளிவிழா: தலைவர் முனைவர் க. சுபாஷிணி அறிமுகவுரை
https://youtu.be/-fvxOeY6es0

22.8.2026 சனிக்கிழமை அன்று சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில்  நடைபெற்ற 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வுக் கருத்தரங்க நிகழ்ச்சி உரை




தேமொழி

unread,
Aug 31, 2026, 4:59:37 PM (10 hours ago) Aug 31
to மின்தமிழ்

title Mahendran.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளிவிழா
— தோழர் சி.மகேந்திரன்  அவர்களின் வாழ்த்துரை
https://youtu.be/VJz05hCDfRI

22.8.2026 சனிக்கிழமை அன்று சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில்  நடைபெற்ற
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வுக் கருத்தரங்க நிகழ்ச்சி உரை

தேமொழி

unread,
Aug 31, 2026, 9:15:44 PM (6 hours ago) Aug 31
to மின்தமிழ்
event title card.jpg

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளிவிழா நிகழ்ச்சி
https://youtu.be/BB3xk8uvzmc

22.8.2026 சனிக்கிழமை அன்று சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில்  நடைபெற்ற
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வுக் கருத்தரங்க நிகழ்ச்சி

தேமொழி

unread,
Aug 31, 2026, 10:18:29 PM (5 hours ago) Aug 31
to மின்தமிழ்
title Nasser.jpg

'தனிநாயகன்' — தனிநாயக அடிகளார் ஆவணப்படம் வெளியீடு 
—தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு. நாசர்
https://youtu.be/xQINdskmhZU

22.8.2026 சனிக்கிழமை அன்று சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில்  நடைபெற்ற
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வுக் கருத்தரங்க நிகழ்ச்சி உரை

தேமொழி

unread,
Aug 31, 2026, 11:07:34 PM (4 hours ago) Aug 31
to மின்தமிழ்
title bruntha sarathi.jpg

'தனிநாயகன்' — ஆவணப்படம்: இயக்குநர் திரு. பிருந்தா சாரதி உரை
https://youtu.be/BXtAYOdAO40

22.8.2026 சனிக்கிழமை அன்று சென்னை தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில்  நடைபெற்ற
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வுக் கருத்தரங்க நிகழ்ச்சி உரை

தேமொழி

unread,
Aug 31, 2026, 11:10:21 PM (4 hours ago) Aug 31
to மின்தமிழ்
thaninayagan.jpg

கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றிய டாக்டர் சேவியர் தனிநாயகம் அடிகள் அவர்களது நினைவு நாள் இன்று. 1.9.1980ல் அவர் காலமானார். தனது வாழ்நாளில் அவர் தமிழுக்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை தனது வெள்ளி விழா ஆண்டு முழுமையும் டாக்டர் சேவியர் எஸ். தனிநாயகம் அவர்களது தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் பல கருத்தரங்கங்கள், உரைகள், கல்லூரி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து நிகழ்த்தினோம்.

முத்தாய்ப்பாக டாக்டர் சேவியர் எஸ். தனிநாயகம் அவர்களது தமிழ்ப்பணியையும் வாழ்க்கை செய்திகளையும் பதிவு செய்யும் ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டிருந்தோம். தனிநாயகன் என்ற பெயர் கொண்ட இந்த ஆவணப்படம் கடந்த 22 ஆகஸ்ட் அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் வெளியீடு கண்டது.

அந்த ஆவணப்படத்தைப் பார்க்கத் தவறியவர்கள் இன்று அவரது நினைவாக இந்த ஆவணப் படத்தை பார்த்து அவரது தமிழ்ப் பணியைப் போற்றும் வகையில் அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள்.
https://youtu.be/vettZuaj000?si=t-_ETRBwsASiTWFQ

-சுபா
1.9.2026


Reply all
Reply to author
Forward
0 new messages