அம்மா; என்ன செய்வேன் நான்; எளிய இயற்கை வைத்தியம்; திருப்பதி; காதல்.. தாய்மை; கமல் எனும் மகா நடிகன்; குஷ்பு வீடு மீது தாக்குதல்;

46 views
Skip to first unread message

Prasannam Narayanaswamy

unread,
Feb 10, 2013, 7:03:59 PM2/10/13
to tamilamutham, mint...@googlegroups.com

 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எளிய இயற்கை வைத்தியம் !!!!!

அன்பார்ந்தவர்களே !!!!!

                      பக்க விளைவுகள் இல்லாத, கீழ்க்கண்டவற்றை, முயற்சி செய்து தான் பாருங்களேன் !!!!

                      இயற்கையோடு இசைந்த வாழ்வே மிகப் பேரு வாழ்வைத் தரும்.

                      30 Tips for you to try for natural remedy.--SIVA


1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.


சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.


குறிஞ்சாக் ( சிறு குறிஞ்சான் ) கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.


2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.


3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.


4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.


5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.


6. சிரங்கு தொல்லையா?


சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.


தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.


7. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.


8. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.


9. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்


10. முக சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.


11. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.


12. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.


13. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.


14. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.


15. மெலிந்த உடல் பருக்க

.கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

16.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.


17. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.


18. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.


19. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.


20. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.


21. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.


22. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.


23. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.


24. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.


25. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.


26. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.


27. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.


28. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.


29. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.


30. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


திருப்பதி – வெங்கடேஸ்வரர் வீற்றிருக்கும் திருவேங்கடம்

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் இந்த திருப்பதி நகரம் ஒரு அதிமுக்கியமான, ஆன்மீக பாரம்பரிய நகரமாக இந்தியாவில் புகழ் பெற்று விளங்குகிறது. உலகப்பிரசித்தி பெற்றுள்ள வெங்கடாசலபதி கோயில் இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருமலை எனப்படும் மலையுச்சியில் அமைந்துள்ளது. வேறெங்கும் காண முடியாத வகையில் ஏராளமான பக்தர்களும் பயணிகளும் விஜயம் செய்யும் பரபரப்பான கோயிலாக இது சர்வதேச அளவில் அறியப்படுகிறது.

திருப்பதி புகைப்படங்கள் - திருமலா வெங்கடேஸ்வரர் கோயில்
Image source: www.wikipedia.org

பெயர்க்காரணமும் வரலாற்றுப்பின்னணியும்

திருப்பதி எனும் பெயர் எப்படி உருவானது என்பது பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்காவிட்டாலும், இதன் பெயர்ப்பொருத்தம் குறித்த சந்தேகத்திற்கு இடமேயில்லை. ‘திரு’ எனும் தமிழ்ச்சொல் பண்டைய தமிழ் மரபுப்படி யாவற்றுக்கும் அப்பாற்பட்ட ‘இறைச்சக்தியை’ குறிப்பதாகும். ‘பதி’ என்பதற்கு ‘ஸ்தலம்’ என்பது பொருள்.

பொதுவாக அந்நாளில் இறைவன் குடிகொண்டிருந்த தலத்தை ‘திருப்பதி’ என்று குறிப்பிடும் மரபு வழக்கில் இருந்துள்ளது. எனவே இந்த ‘திருப்பதி’ எனும் பெயருக்கு ‘ஒப்பிலா இறைவன் குடிகொண்டுள்ள தலம்’ எனும் பொருத்தமான பெயர் ஆதியிலிருந்தே விளங்கி வந்திருப்பது தெளிவு.

கோயில் அமைந்திருக்கும் மலைப்பகுதி மேல் திருப்பதி என்றும், அடிவார நகர அமைப்பு கீழ்திருப்பதி என்றும் தற்போது விளங்கி வருகின்றன. மேலும், இந்த திருப்பதி எனப்படும் வெங்கடேஸ்வரர் கோயில் அமைந்திருக்கும் திருமலையானது உலகிலேயே இரண்டாவது பழமையான பாறை மலையமைப்பை கொண்டதாக புவிஅறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பதி கோயில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால் பல சங்கத்தமிழ் இலக்கியங்களில் இந்த திருமலைப்பகுதியானது ‘திருவேங்கடம்’ என்ற பெயரில் இடம்பெற்றிருக்கிறது.

பல தமிழ்ப்புலவர்களின் பாடல்களிலிருந்து கோர்த்து திரட்டப்பட்ட வரலாற்று ஆதாரங்களின்படி திருப்பதிக்கோயிலானது திருவேங்கடமலையில் தொண்டை மண்டல மன்னனான ‘தொண்டைமான் இளந்திரையன்’ என்பவரால் எழுப்பப்பட்டிருக்கவேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.

பின்னர் இக்கோயில் 4ம் நூற்றாண்டிலிருந்து பல தமிழ் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வந்துள்ளதற்கு குறிப்புகள் கிடைக்கின்றன. பல்லவ வம்சம், அவர்களுக்குப்பின் சோழ வம்சம், இறுதியாக விஜயநகர வம்சம் என்று பல்வேறு மன்னர்களின் பராமரிப்பில் திருப்பதி கோயில் இருந்து வந்துள்ளது.

திருவேங்கடமலை என்பது நாளடைவில் திருமலை என்றாகியுள்ளது. திருப்பதி என்பது மஹாவிஷ்ணு வீற்றிருக்கும் கோயில்தலத்தின் பெயராக காலத்தில் நீடித்து நின்றுவிட்டது.

இப்படி வளர்ந்து வந்த இந்த வைணவக்கோயில் 14ம் மற்றும் 15ம் ஆண்டுகளில் நிகழ்ந்த முஸ்லிம் ஊடுறுவல் மற்றும் கோயில் கொள்ளைகளிலிருந்தும் தப்பித்துள்ளது. ஆங்கிலேயர் காலத்திலும் காலனிய ஆட்சியாளர்கள் இந்த கோயிலின் நடைமுறைகளில் எந்தவகையிலும் தலையிடாமல் விட்டு வைத்திருந்தனர்.

1933ம் ஆண்டில் ‘மெட்ராஸ் பிரசிடென்சி’ அரசாங்கம் ஒரு சிறப்பு மசோதாவை இயற்றி ‘திருமலா தேவஸ்தான கமிட்டி’ எனும் தன்னாட்சி குழுவிடம் இந்த கோயிலின் நிர்வாகப்பொறுப்பை ஒப்படைத்தது. அதன்படி அரசால் நியமிக்கப்படும் கமிஷனர் மூலம் இந்த கோயில் நிர்வகிக்கப்படும் நடைமுறை தொடங்கியது.

ஏனைய ஆகம நெறிகளில் இந்த கமிட்டிக்கு அறிவுறை கூற ‘ஆகம ஆலோசனைக்குழு’ வும் ஏற்படுத்தப்பட்டது. கோட்டுரு எனும் இடத்தில் உருவான கீழ்த்திருப்பதி நகரமைப்பு இன்று பரந்து அளவில் வளர்ந்து பெருநகரமாக காட்சியளிக்கிறது.

பல திருவிழாக்கள் மற்றும் சந்தைகளின் கோலாகலம்

இன்று திருப்பதி நகரம் ஒரு ஆன்மீக மையமாக மட்டுமல்லாமல் ஒரு செழுமையான கலாச்சார கேந்திரமாகவும் பரிணமித்துள்ளது. இந்நகரத்தில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சந்தைகள் மிகப்பிரசித்தமாக அறியப்படுகின்றன.

இவற்றில் மே மாதத்தில் நடைபெறும் கங்கம்மா ஜாத்ரா எனும் உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த உற்சவத்தின்போது வித்தியாசமான சடங்கு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

அச்சமயம் பக்தர்கள் முதலில் மாறுவேடம் பூண்டு கோயிலுக்கு முன்பாக தெருவில் ஊர்வலமாக செல்கின்றனர். பின்னர் முகத்தில் சந்தனம்பூசி தலையில் மல்லிகை மலர் மாலைகள் அணிந்து கோயிலுக்குள் நுழைகின்றனர்.

இறுதியாக மண்ணால் செய்யப்பட்ட தெய்வச்சிலையை உடைக்கும் சடங்குடன் இந்த உற்சவம் நிறைவுறுகிறது. பல திசைகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள வருகை தருகின்றனர். இது தவிர திருப்பதி ஸ்தலத்தின் முக்கியமான திருவிழாவாக பிரம்மோத்சவம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

விஜயநகர திருவிழா, சந்திரகிரி கோட்டை திருவிழா மற்றும் ராயலசீமா நடனம் மற்றும் உணவுத்திருவிழா போன்றவையும் திருப்பதி நகரத்தில் நடத்தப்படும் இதர கொண்டாட்ட நிகழ்ச்சிகளாகும்.

பார்த்து ரசிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்

பிரதானக்கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வரஸ்வாமி கோயில், பத்மாவதி கோயில், கோவிந்தராஜா கோயில், சீனிவாசமங்காபுரம் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும் இந்நகரில் அமைந்துள்ளன.

ஆன்மீக அம்சங்களை தரிசித்தபின் பயணிகள் இங்குள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவிற்கும் விஜயம் செய்யலாம். இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. ஷிலாத்தோரணம் என்றழைக்கப்படும் பாறைத்தோட்டமும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.

திருப்பதியில் சர்க்கரை பொங்கல் மற்றும் திருப்பதி லட்டு போன்றவற்றை சுவைக்காமல் திரும்பக்கூடாது என்பது பயணிகளும் பக்தர்களும் நன்கு அறிந்ததே. ஆந்திரம் மற்றும் தமிழக உணவுமுறைகளின் கதம்பமான அம்சங்கள் திருப்பதி உணவுவகைகளில் மணப்பதை பயணிகள் சுவைத்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும், இங்கு உள்ளூர் தயாரிப்புகளாக பலவகை கைவினைப்பொருட்கள், மரக்குடைவு பொருட்கள், மரப்பொம்மைகள், கலம்காரி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் சந்தன பொம்மைகள் போன்றவை ஏராளமாக கிடைக்கின்றன. ரசனை மிக்கவர்கள் இவற்றில் ஏதாவதொன்றை வாங்காமல் ஊர் திரும்புவதில்லை.

பயண வசதிகளும் பருவநிலையும்

திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிதாகவே உள்ளது. நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ரேணிகுண்டாவில் திருப்பதிக்கான உள்நாட்டு விமான நிலையம் உள்ளது.

டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து இந்த விமானநிலையத்துக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. தற்போது இதனை வெளிநாட்டு சேவைகளை இயக்குவதற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மேலும், முக்கிய போக்குவரத்து வசதியாக திருப்பதியில் பிரத்யேக ரயில் நிலையமும் உள்ளது. எல்லா முக்கிய இந்திய நகரங்களிலிருந்தும் இந்த ரயில்நிலையத்துக்கு இணைப்புகள் உள்ளன.

அது மட்டுமல்லாமல் பெங்களூர்ஹைதராபாத், வைசாக் மற்றும் அருகிலுள்ள சென்னை நகரத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் அடிக்கடி திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன.

ஏறக்குறைய தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பதி நகரின் முக்கிய ஆன்மீக ஸ்தலங்கள் மற்றும் இதர அம்சங்களை சுற்றிப்பார்க்க வாடகைக்கார்கள் மற்றும் உள்ளூர் தேவஸ்தான பேருந்துகள் அதிக அளவில் கிடைக்கின்றன. குறைந்த கட்டணத்தில் நாள் வாடகைக்கும் டாக்சிகளை பயணிகள் அமர்த்திக்கொள்ளலாம்.

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள பருவம் திருப்பதி ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. பெரும்பாலும் கோடையில் கடும் வெப்பத்துடன் காணப்படுவதால் கோடைக்காலத்தில் இங்கு விஜயம் அவ்வளவு உகந்ததல்ல. மழைக்காலம் வெப்பநிலையை குறைப்பதுடன் திருப்பதியின் அழகையும் கூட்டுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, திருப்பதி நகரம் அடிப்படையில் ஒரு ஆன்மீக நகரமாக திகழ்வதால் ஒரு சில முக்கியமான நெறிகளையும் பயணிகள் மனதில் கொள்ளவேண்டும்.

ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான ஆடைகளை அணிவது, தலைக்குல்லா தொப்பி போன்ற டாம்பீக அலங்காரங்களை தவிர்ப்பது மிக அவசியமாகும். முக்கியமாக மலர்கள் கடவுளுக்குரியவையாக இங்கு கருதப்படுவதால் இங்கு பெண்கள் தலையில் பூச்சூடுவதை தவிர்ப்பது அவசியம்.

இங்கு அசைவ உணவுகள், லாகிரி வஸ்துகள் மற்றும் மதுபானங்கள் போன்றவை அதிகமாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவற்றை உபயோகப்படுத்துவது பொதுவாக மக்களால் வெறுக்கப்படுகிறது. மேலும், கோயில் வளாகங்களின் நவீன சாதனங்கள், கேமராக்கள், மொபைல் போன்கள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.

தென்னிந்திய கோயில் மரபு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் உள்ள பகதர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அவசியம் விஜயம் செய்து தரிசிக்க வேண்டிய ஆன்மீக திருத்தலம் - இந்த திருப்பதி - எனும் உண்மை யாவரும் அறிந்த ஒன்றுதான் எனினும் திரும்ப சொல்வதில் தவறுமில்லை.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


 


--
K.Lakshminarayanan
 


girl_fr.gif
Reply all
Reply to author
Forward
0 new messages