ஐம்பூதங்கள் என்ற கருத்து எப்படி உருவாயிற்று?

301 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jan 1, 2008, 5:13:36 AM1/1/08
to minT...@googlegroups.com
"மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும்
என்றாங்கு ஐம்பூதத்தியற்கை'

என்ற முரஞ்சியூர் முடிநாகராயரின் புறநானூற்றுப் பாடல் நினைகத்தக்கது.
 
பூதங்கள் ஐந்தும் என்பது திருக்குறள். பெளதர்களுக்கு விண்ணைச் சேர்க்காமல் நான்கு என்பர்! சீனர்கள் நிலம்,நீர்,நெருப்பு,தாவரம் மற்றும் கனிமம்,ஆகிய ஐம்பூதங்கள் என்று சொல்கிறார்கள். காண்க - < http://www.soton.ac.uk/~maa1/chi/philos/five.htm>
 
பூதங்கள் என்றால் பூத்தலைச் செய்பவை,தோற்றத்தின் ஆதாரங்கள். முழுமுதற்பொருள் என்றும் குறிப்பிடுகிறார்கள். அறிவின் தொடர்ச்சியாக, அக்டோபர் திங்கள் 2006 ஆம் ஆண்டோடு கணக்கிட்டு 117 வேதிய மூலகப்பொருள்களை வரையறை செய்துள்ளனர் என்றும் அறிகிறோம். அறிவியல் புலமையோடு,தமிழார்வம் நிரம்பிய அன்பர்கள், இந்தப் பொருன்மையை புத்தாண்டில் விளக்கவேண்டுகிறேன். மேலும், உலகத்தின் சில நாடுகள்,தங்களுக்கு உரிய பண்பாட்டுச் சூழலில் மூலகப்பொருள்களின் எண்ணிக்கையைக் கூட்டியும்,கழித்தும் கணக்கிடுகின்றனரோ! < http://en.wikipedia.org/wiki/Classical_element>
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

வேந்தன் அரசு

unread,
Jan 1, 2008, 11:11:00 AM1/1/08
to minT...@googlegroups.com
On Jan 1, 2008 5:13 AM, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:
"மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும்
என்றாங்கு ஐம்பூதத்தியற்கை'

என்ற முரஞ்சியூர் முடிநாகராயரின் புறநானூற்றுப் பாடல் நினைகத்தக்கது.
 
நிலம் நீர், வளி மூன்றுக்கும் அடிப்படையான  பொருண்மை (matter) ஒரு பூதமாக கொண்டால் உலகம் மூன்று பூதங்களால் ஆனது
 
அணுக்குள் விசும்பு இருக்கு. ( உண்மையில் அணு ஒரு பொள்ளையான் பொருளே)
 
 -273 பாகை வெம்மைக்கு மேல் உள்ள பொருட்கள் யாவற்றிலும் தீ இருக்கு
 
 -273 பாகை வெம்மையில் மேல் உள்ள பொருட்களில் தீ இல்லாததால் பூதம் இரண்டே.
 
வெம்மை = temperature
வெப்பம் = heat
(என் அகராதியில்)
 
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Narayanan Kannan

unread,
Jan 1, 2008, 5:41:56 PM1/1/08
to minT...@googlegroups.com
On Jan 1, 2008 7:13 PM, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:
> "மண்டிணிந்த நிலனும்
> நிலனேந்திய விசும்பும்
> விசும்புதைவரு வளியும்
> வளித்தலைஇய தீயும்
> தீமுரணிய நீரும்
> என்றாங்கு ஐம்பூதத்தியற்கை'
>

அவற்றின் தோற்றத்தை வைத்துப் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. நமது
வேதாந்தக் கருத்து என்னவெனில், ஊழிக் காலத்தில் பூமியின் மண் நீரில்
கரைந்து போகும், நீர் நெருப்பில் அடங்கிடும், நெருப்பு காற்றில்
ஒடுங்கும், காற்று ஆகாசத்தில் ஒடுங்கும். பின் இவை அவற்றின்
தன்மாத்திரைகளிலும். இறுதியாக இறைச் சிந்தனையிலும் ஒடுங்கும் என்பது
கருத்து. வள்ளலார் இது பற்றிப் பேசும் போது நாம் இறந்த பின் 25
தத்துவங்கள் நம்மை விட்டுப் பிரியும். அதலால், அதுவரை உடலை
எரிக்கக்கூடாது என்பார். இவற்றின் தோற்றம் இதற்கு முன்னுக்குப் பின்
வரிசையில் வரும்.

கண்ணன்

Kannan Natarajan

unread,
Jan 2, 2008, 7:06:55 PM1/2/08
to minT...@googlegroups.com
> "மண்டிணிந்த நிலனும்
> நிலனேந்திய விசும்பும்
> விசும்புதைவரு வளியும்
> வளித்தலைஇய தீயும்
> தீமுரணிய நீரும்
> என்றாங்கு ஐம்பூதத்தியற்கை'
 
மக்களும் மழைநீரும்!

கி. சிவசுப்பிரமணியன், அறிவியல் ஆய்வாளர்

சூரியனால் வெளிப்படுத்தப்படும் வெப்பம் சுமார் 6,000 டிகிரி சென்டிகிரேட். இதில் ஒரு சிறு பகுதியே பூமிக்கு கிடைக்கிறது.

இந்த வெப்பநிலையே கடல்நீரை ஓரளவு ஆவியாக்கி மேகங்கள் மூலம் நமக்கு மழையாகக் கிடைக்க உதவுகிறது. இந்த வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்பொழுது பருவகால மாற்றம் ஏற்படுகிறது. எனினும் எந்த ஆண்டிலும் மழையே இல்லாமல் அறவே பொய்த்துப் போவது இல்லை. இதுவே இயற்கை.

தமிழகம் தவிர இந்தியா முழுமையும் தென்மேற்குப் பருவகாலத்தில் ஏறத்தாழ 80 சதவிகித மழை கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வடகிழக்குப் பருவகாலத்தில் அதிக அளவு மழை கிடைக்கிறது. இது இயற்கையின் நியதி.

தமிழகத்தின் சராசரி மழையளவு ஏறத்தாழ 960 மி.மீ. இதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மழை இரு முக்கிய பருவ காலங்களான தென்மேற்கு (332 மி.மீ) மற்றும் வடகிழக்கு (465 மி.மீ) பருவகாற்றினால் கிடைக்கிறது.

வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் - டிசம்பர்) இந்த ஆண்டு தமிழகத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கியது. ஆண்டின் மொத்த மழையில் பாதியளவு இம்மூன்று மாத காலத்திலேயே பெய்துவிடுகிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் இப்பருவ மழையின்போதுதான் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு அதிகரிக்கிறது.

எனவே, இக்குறுகிய காலத்தில் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு மழைத்துளியையும் மிகச்சிறந்த முறையில் நிலத்திலும் (குளம், குட்டை, ஏரி போன்றவை) மற்றும் நிலத்திற்கு கீழும் (கசிவுநீர்க் குட்டைகள், மழைநீர் அறுவடை, கிணறுகள் போன்றவை) சேமிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

"மகேசனை நம்பலாம் ஆனால் மழையை நம்ப முடியாது". இது கிராமப்புற மக்களின் கூற்று. நகர்ப்புறங்களில் மழை குறைந்தாலும் பாதிப்புகள் அதிகம் இல்லை. ஆனால் விவசாயத்தையே நம்பியுள்ள கிராமங்களுக்கு மழையே உயிர் மூச்சு. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சென்னைக்கு மிக அதிக அளவு மழையை அளித்துள்ளது. ஆனால், வடகிழக்குப் பருவமழை அந்த அளவுக்கு சிறப்பாகப் பெய்யவில்லை.

எனினும், அடைமழைபோல் அவ்வப்போது தூறலுடன் பெய்த தொடர் சிறுமழை நிலத்தடிநீர் மேம்பாட்டிற்கு மிகவும் உகந்ததாகும்.

பெய்கின்ற சிறுதூறல் மழையில் பெரும்பகுதியை பூமி நிதானமாக உள்வாங்கி மண்ணுக்கு அடியில் எங்கெல்லாம் துவாரங்கள் உள்ளதோ அங்கெல்லாம் நீரைப்புகுத்தி நிலத்தடி நீர்மட்டம் மேம்பட அடிப்படையாக அமைய வழிவகுத்தது இந்த சிறுதூறல் மழையே. இக்கருத்தின் வெளிப்பாடே "சிறுதுளி பெருவெள்ளம்",என்பதாகும்.

உதாரணமாக, சென்னையில் அக்டோபர் மாதத்தின் சராசரி மழையளவு 270 மி.மீ. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 15 நாள்களில் 257 மி.மீ. மழை பெய்தது. ஆனால் ஒரே நாளில் மட்டும் (அக்டோபர் 28) 140 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே மீதமுள்ள இந்த ஒருமாதத்தில் பெய்கின்ற மழைநீரைச் சிறப்பாகச் சேமிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் அமைந்துள்ள மழைநீர் சேமிப்பு அமைப்புகளான ஏரிகள் மூலம் ஓரளவுக்கு மேல் பெய்கின்ற பெருமழைநீரைத் தேக்கினால் அது மழையற்ற கோடைகாலத்திற்கு பெரிதும் உதவும்.

எக்காரணத்தைக் கொண்டும் ஏரிகளை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. அவை எதிர்காலத்தின் நீர் ஆதாரங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

நகரங்களில் வீடுகளுக்கு மழைநீர் சேகரிப்பு எவ்வளவு கட்டாயமோ அவ்வளவு கட்டாயம் கிராமங்களில் மழைநீர் சேகரிப்பதும் ஆகும். எனவே கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளையும், குளங்களையும் மராமத்து செய்து அவற்றின் முழு கொள்ளளவுக்கு தயார் செய்வது அரசு மற்றும் அனைத்து மக்களின் இன்றியமையாத கடமையாகும். ஆனால் இவைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டாலும், செயல்பாடுகள் மிகவும் குறைவே. இதுவே ஒட்டுமொத்த நீர்ப்பற்றாக்குறைக்கு அடிப்படைக் காரணமாகும்.

ஆண்டுதோறும் கிடைக்கின்ற மழை நம் தேவைக்கும் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் அதை உரியமுறையில் சேமித்துவைக்க நாம் தவறிவிடுகிறோம் என்பதே உண்மையாகும்.

"காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்", என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கின்ற மழைநீரை உரிய முறையில் சேகரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

பருவகாலங்களில், மிகக் குறுகிய நாள்களில் அளவுக்கு அதிகமாக பெருமழை பெய்து, பேரளவு வெள்ளம் வீணாகக் கடலில் கலக்கிறது. இப்படி அதிகமாகப் பெய்யும் மழைநீரை முடிந்தவரையில் சேமித்து, அதை வறட்சி மற்றும் பற்றாக்குறைக் காலங்களில் பயன்படுத்திக்கொள்ளும் முறையே நீர் மேலாண்மையின் அடிப்படையாகும்.

இக்கருத்து விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீர் சேமிப்பிற்கும் பொருந்துவதாகும். இம்மழைநீரைப் பயன்படுத்திக்கொள்ள மழைநீர் தேங்கும் இடங்களில் சிறிய குளம், குட்டைகளை அமைக்க அரசும், மக்களும் முயற்சிக்க வேண்டும். இவற்றையே கசிவுநீர்க் குட்டைகள் என்கிறோம்.

இக்குட்டைகளுக்கு மழைநீர் வரத்தொடங்கியதும் நிலத்தால் அது உறிஞ்சப்படுகிறது. எங்கெல்லாம் நீர் பூமியில் வேகமாக உறிஞ்சப்படுகிறதோ அங்கெல்லாம் நிலத்தடி நீர் வளம் அதிகமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு அதன் உவர்நீர்த் தன்மையும் மாறி நன்னீர் பெறத் துணைபுரிகிறது. இக்கருத்துகளின் அடிப்படையில் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களும், அரசும் முழுமையாக உணர்ந்து ஆக்கபூர்வ வழியில் செயல்பட வேண்டும்.

ஆண்டுதோறும் நமது தேவைக்கு அதிகமாகவே மழைநீர் கிடைக்கிறது. ஆனால் அதை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்வது இல்லை. உதாரணமாக, ஒரு கிரவுண்டு (2400 சதுர அடி) நிலத்தில் 1 மி.மீ. மழை பெய்தால் அது 223 லிட்டர் நீருக்குச் சமம்.

சென்னையில் ஆண்டுதோறும் சராசரியாக 1300 மி.மீ. மழை பெய்கிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை 677 மி.மீ. மழையும் அக்டோபர் முதல் நவம்பர் வரை 354 மி.மீ. மழையும் பெய்தது. டிசம்பர் மாதம் 150 மி.மீ. மழை பெய்தது.

எனவே எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதரும் தத்தம் வீடுகள் மற்றும் நிலங்களில் இயன்ற அளவு மழைநீரைச் சேமித்து பூமிக்குள் செலுத்த வேண்டியது முக்கிய கடமையாகும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் பேரளவு மழைநீரைச் சேமிக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆண்டுதோறும் தவறாமல் இத்தகைய செயல்பாடுகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டால் நமது நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்துக்கே இடமிருக்காது.

நன்றி: தினமணி தலையங்கம் - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080102113723&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist=0

Narayanan Kannan

unread,
Jan 2, 2008, 7:53:30 PM1/2/08
to minT...@googlegroups.com
On Jan 3, 2008 9:06 AM, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:
>
> எக்காரணத்தைக் கொண்டும் ஏரிகளை எவரும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. அவை
> எதிர்காலத்தின் நீர் ஆதாரங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
>

ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து real estate-காரகளை வீடுகட்ட அனுமதிக்கக்
கூடாது. மதுரையில் கோசாகுளம், தல்லாகுளம் எனும் இடங்களில் குளம் இருந்த
இடம் தெரியவில்லை. மதுரை மாநகர முனிசிபாலிடி பெரிய ஏரியைத் தூர்த்து
அமைக்கப்பட்டிருக்கிறது. நம்மவர்க்குத்தான் எவ்வளவு தொலை நோக்குப்
பார்வை!

ஆற்று மணலை லாரி, லாரியாக அள்ளக் கூடாது. அது இயற்கைப் படுக்கை.
அள்ளிவிட்டு வெள்ளம் வரும் போது அல்லோகலப்படக்கூடாது.

கணக்கற்ற முறையில் பம்பு செட் அமைக்கக்கூடாது. நகர்ப்புரங்களில்
மாடுகளைக் சுண்டக் கரந்து விட்டு, பால் இல்லாமல் செத்துப் போகும்
கன்றுகளை வைக்கோல் வைத்து பதப்படுத்தி பால் கறக்கும் நிலைக்குத்தான் இதை
உதாரணம் சொல்லமுடியும்.

சோழர்கள் காலத்தில் நீரை முறையாகச் சேமித்து வைக்கும் பலமுறைகள்
நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழகம் நீர் வள மேம்பாட்டில் உலகிற்கு ஒரு
உதாரணமாக இருந்திருக்கிறது. அந்நிலை மீண்டும் வர மக்கள் செயல்பட


வேண்டும்.

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Jan 3, 2008, 3:05:06 AM1/3/08
to minT...@googlegroups.com
. " மழை"

மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?
மன்னன் கேட்டான்?
மந்திரி சொன்னார்......மன்னா!!
பழைய ஞாபகத்தில் நீர் கேட்கிறீர்!
மன்னர்கள் ராஜ்ஜியம் போய் விட்டது
இப்போது நீர் மந்திரி !!!!!!!!!!!

அநியாயதேவதையாய் நீர் மாரி
மாதமும் மாரி ,வருடமும் மாரி,
மழை இன்றி , நீரின்ரி வறண்டு
மக்கள் வாடுகின்ற-காலமாய் மாறியது

"வானம் பார்த்த நிலம் நீரின்றிப் போனதனால்
ஊனம் அடைந்து வெடித்துக் காய்ந்ததுவே"
"அனியாயம் வளர்ந்தது மனிதநேயம் வரண்டது
"மழை" நியாயம் கேட்கு திங்கே"

வேத விற்பன்னர்கள் மழை வேண்டி யாகம்,
இசை விற்பன்னர்கள் இடுப்பளவு நீரிலே,
நின்று அமிர்தவர்ஷணி ராக முழக்கம்,
அகாயத்திலே ரசாயனப் பொடி தூவல்,

ஆண்டவனிடம் யாசகம், வேண்டுதல் ,
அனைத்து ஆலயங்களிலும்,
பாரபட்ஷம் பாராமல், சர்வ மதப் ப்ரார்த்தனைகள்,
ஆடுகள், கோழிகள் பலிகள்,

யாக குண்டத்தின் வழியாக , தேவர்களுக்கு,
பட்டுப்புடவை,பழம் ,பணியாரம், சந்தனம் ,
அகில், நவரத்தினம் அனைத்தும் ,
அக்னி தேவனின் வழியாக கையூட்டு,


வருண பகவானுக்கு பறிமாற்றம்,
வேண்டுதல் நிறைவேற்றம்
அருகிலேயே பசியோடு கையேந்தும்
பராரிச் சிறுவர்கள்,பஞ்சம். பட்டினி


வாஸ்த்துப்படி எல்லாம் அமைத்தால்
வளமாகுமாம் எல்லாம்
ப்ரபஞ்சத்தின் பெயரை மாற்றி
வாஸ்த்துப்படி அமைப்பை மாற்றி
முயற்சி செய்வோம் மழை வேண்டி

பச்சிளம் பாலகனை மஹா சக்தி பெற
பலி கொடுத்த சாமியார்,
ஈரம் , அது மனதிலும் ,பூமியிலும்
வரண்டது,

வானிலை அறிவுப்பு :இன்றும் நாளையும்
ஈரப்பதம் இல்லாத வரண்ட வானிலயே
இருக்கும் வெப்பம் அதிகரிக்கும்

ஏரிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள்,
குளங்களில் விளையாட்டு மைதானம்,
அணைக்கட்டுகளில் எல்லைச் சண்டை
காவிரி , க்ருஷ்ணா விடம் கையேந்தல்,

லாரிகளில், புகை வண்டிகளில்
தண்ணீர் வினியோகம், சிறுநீரகம், ரத்தம்
இதயம் ,மனித உறுப்புகள் ,போதை மருந்துகள்,
இவற்றுடன் தண்ணீணரும் விற்பனைக்கு
பெருச்சாளிகள் பணம் பண்ண பட்டயம்,

இடுப்புகளிலும் தண்ணீர்க் குடங்கள்,
அடுப்புகளில் சாராயப் பானைகள்,
ரதயாத்திரை,மாநாடுகள்,மகாமகம்,
தெப்போற்சவம், படகுப் போட்டிகள்,
சிலைகள் அமைக்கப் போராட்டம் ,
நாட்டை சீரழிக்க உண்ணாவிரதம்
கடல் நீர் சுத்திகரிப்பு, நதிநீர் இணைப்பு
இலவச இனாம் ,இத்தனையும் ,
தூண்டில் புழுக்கள் !!!!!
நீரை வீட்டு வெளியே
வீசப்பட்ட மீன்களாய் மக்கள்

மழை நிச்சயம் வேண்டுமென்றால்
மனிதாபிமானம் வளருங்கள்,
மனதிலே ஈரம் பெருகட்டும்
மண்ணிலே தண்ணீர் சுரக்கும்
வானம் பொய்க்காது வளமும் குறையாது
பருவம் தவறாது .,
மாதம் மும்மாரி மழை பொழியும்
வாழ்க விவசாயி!!!! வாழ்க மந்திரி !!!!

அன்புடன்
தமிழ்த்தேனீ

Kannan Natarajan

unread,
Jan 6, 2008, 5:16:51 PM1/6/08
to minT...@googlegroups.com
தண்ணீருக்குத்தான் அடுத்த உலகப்போர்?

உதயை மு. வீரையன்

நதிகள் இணைப்பை தேசியத் திட்டமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்று தலைநகர் தில்லியில் நடைபெற்ற 54-வது தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.

நதிகள் இணைப்பை தேசியத் திட்டமாக அறிவிப்பதோடு அதை நிறைவேற்றுவதற்குக் காலக்கெடுவை நிர்ணயித்து அட்டவணை வெளியிட வேண்டும்; நதிகள் இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் காலதாமதம் செய்தால் அது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய காலத்தில் தீர்வு காணப்படாவிட்டால் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு நேர்வதைத் தவிர்க்க இயலாது என்பதும் உண்மையே!

இப்போது தமிழ்நாடு மும்முனைத் தாக்குதலைச் சமாளித்துக் கொண்டுள்ளது. காவிரி நீருக்காக கர்நாடகம், முல்லைப் பெரியாறு அணை நீருக்காக கேரளம், பாலாற்று நீருக்காக ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களுடன் மோதும் நிலை உருவாகியுள்ளது. தண்ணீருக்காகப் பக்கத்து மாநிலங்களின் தயவுவேண்டிக் கவலையுடன் காத்திருக்க வேண்டிய பரிதாபம். இதுவே முதல்வரின் பேச்சுக்கான காரணம்.

"நீர் இன்றி அமையாது உலகு", என்று பாடினார் திருவள்ளுவர். உலகத்தின் இயக்கம் தண்ணீரையே அடிப்படையாகக் கொண்டது. ஒரு தேசத்தின் பண்பாடும், நாகரிகமும் தண்ணீரையே ஆதாரமாகக் கொண்டது. உலக நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரை ஓரமே உருவானதற்குக் காரணம் இதுவே.

இதற்கும் இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வளங்கள் குறைகின்றன; வறட்சிகள் வளர்கின்றன. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடுகள் இல்லை; இதில் ஏழைகள், செல்வந்தர்கள் என்ற பேதங்களும் இல்லை; தண்ணீரைத் தேடி அலையாதவர்களும் இல்லை.

"பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கக் கூடாது" என்ற பழைய மொழி வழக்கொழிந்து போனது. தண்ணீரைப் பணத்தைப்போல சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும் என்ற புதிய மொழி நடைமுறைக்கு வந்துவிட்டது. காரணம் என்ன? மனிதன் இயற்கையைப் புறக்கணித்ததன் விளைவுகள்!

காடுகள் அழிக்கப்படுவது, மழைநீரைத் தேக்கி வைக்காமல் வீணாக்குவது, ஆற்றுநீரை ஆலைக் கழிவுகளால் அசுத்தப்படுத்துவது, ஊருக்குள் இறால் பண்ணைகளையும் உப்பளங்களையும் உருவாக்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துவது, சுற்றுச்சூழல் இயக்கங்களின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்வது போன்ற பல்வேறு காரணங்களால் நீர் ஆதாரங்கள் குறைந்துகொண்டே போகின்றன.

ஆனால் நீரைப் பயன்படுத்தும் மக்கள்தொகை பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைகீழ் விகிதமே தண்ணீர்ப் பஞ்சத்திற்கான காரணம்.

அக்காலத்தில் தமிழ்மன்னர்கள் நீர்வளம் பெருக்கி நிலவளம் காப்பதையே குடிமக்களுக்குச் செய்யும் கடமையாகக் கொண்டிருந்தனர். குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் என்னும் நீர்ப்பாசனத் திட்டங்கள் எல்லாம் அரசர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டவையே! கரிகாலன் புகழ்பெற்ற கல்லணையைக் கட்டியதற்கும் காரணம் இதுவே.

"காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கி..." என்று பட்டினப்பாலை பாடுகிறது. வரலாற்றுச் சின்னங்களாக இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பன அவர்களின் கோட்டை கொத்தளங்களும் கோட்டைகளைச் சுற்றி அவர்கள் உருவாக்கிய ஆழமான அகழிகளும்.

பகைவர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகவும், பகைவர்கள் முற்றுகை இடும் காலங்களில் தங்களுக்கு வேண்டிய தண்ணீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும்தான் அவற்றை அவர்கள் ஏற்படுத்தினர்.

இன்றும் பண்பாட்டுப் பாசறைகளாகத் திகழ்வன கோயில்களே! ஊருக்கு நடுவே கோயில்களும், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு குளம் மற்றும் தெப்பக்குளம். அந்தக் குளங்களுக்கு நடுவே கிணறுகள். இவையனைத்துமே நீர் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.

இவ்வாறு பராமரிக்கப்பட்டு வந்த நீர் ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன. காலப்போக்கில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன; பாசன வாய்க்கால்கள் பராமரிப்பின்றி தூர்ந்தன; வயல்வெளிகள் வீட்டுமனைகளாயின.

இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளப் பெருக்கானது; மக்களையும் வீடுகளையும் பயிர்களையும் அழித்துவிட்டு யாருக்கும் பயன் இன்றி கடலில் நீர் சென்று கலக்கிறது. இப்போதும் இந்த நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

அண்மையில் பெய்த பெருமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இவற்றையெல்லாம் கூறுவதற்குக் காரணம் என்ன? ஆண்டுதோறும் மழையும் வருகிறது. வெள்ளமும் வருகிறது. அதன்பிறகு வறட்சியும் வருகிறது. மழைக்காலத்தில் மக்களுக்கு வெள்ளத்தால் துயரம்; கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் துயரம். இதனைச் சரிசெய்ய திட்டம் வேண்டாமா?

தண்ணீருக்காக நதிநீர் இணைப்புத் திட்டங்களைத் தேடுகிற நாம் கிடைக்கிற நீரைத் தேக்கி வைத்துக்கொள்ள வேண்டாமா? மழைக்காலங்களில் வெள்ளநீர் வீணாகக் கடலில் கலந்துவிடாமல் தடுத்துத் தேக்கி வைத்தால் பயிர்களையும் பாதுகாக்கலாம்; உயிர்களையும் பாதுகாக்கலாம்; தண்ணீர்ப் பஞ்சத்தையும் தடுக்கலாம்.

வறட்சி நிவாரணங்களுக்கும், வெள்ள நிவாரணங்களுக்கும் வேலையில்லை. இதனால் கோடிக்கணக்கில் பணம் மிச்சமாகும். அதனைக் கொண்டு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றலாம். இழப்பீடு கேட்டு மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய அவசியமும் ஏற்படாது. இதுபற்றிய சிந்தனையே இப்போது அவசர அவசியத் தேவை.

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்று தண்ணீரின் புகழ் பாடியது சிலப்பதிகாரம். "வான் சிறப்பு" என்று மழையைப் போற்றியது திருக்குறள். மழைநீர் சேமிப்புத் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? அரசு தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டாமா?

உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவனுக்குத் தேவை உபதேசமல்ல; உடனடி மருத்துவம். எங்கும் எரியும் இந்தப் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கை உண்மையாகிவிடும்.
 

Narayanan Kannan

unread,
Jan 6, 2008, 7:51:26 PM1/6/08
to minT...@googlegroups.com
மிக நல்ல கட்டுரை! நீர்வளமுள்ள நாடுகள் கூட தண்ணீரைப் பொன்னீர் போலவே
பாவிக்கின்றன. ஏன்? கீழேயுள்ள சுட்டிகள் விளக்கும்.

Water: The Ultimate Commodity
by Jim McWhinney
http://www.investopedia.com/articles/06/Water.asp

Water: The 21st Century's Oil
http://seekingalpha.com/article/48780-water-the-21st-century-s-oil

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages