அழகர்
ஆற்றில் இறங்கினார்
Wednesday , 28th April 2010 07:16:55 AM

லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா சரண கோஷத்தினிடையே கள்ளழகர் இன்று வைகையாற்றில் இறங்கினார். இன்று அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில், கள்ளழகர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி ஒருமுறை வலம் வந்தார். பின், தமுக்கம் கருப்பண சுவாமி கோவில் முன்பு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.இதைத் தொடர்ந்து, தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்ட அழகர், காலை 7.05 மணியளவில் வைகையில் இறங்கினார். காலை 11 மணியளவில் ராமராயர் மண்டபத் தில் அழகருக்கு தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 5 மணிக்கு அண்ணாநகர் வழியாக அழகர் புறப்பட்டு, இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.
கள்ளழகர் எதிர்சேவை :
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 24ம் தேதி முதல் சித்திரை திருவிழா துவங்கி நடக்கிறது. மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக, அழகர் மலையில் இருந்து 26ம் தேதி புறப்பட்டார் கள்ளழகர்.பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி ஆகிய பகுதிகளில், பக்தர்கள் அமைத்திருந்த மண்டகபடிகளில் எழுந் தருளினார். நேற்று காலை 5.40 மணிக்கு மூன்று மாவடி வந்த கள்ளழகரை, பக்தர்கள் எதிர் கொண்டு அழைத்தனர்.அங்குள்ள புளியடி திம்மா திருக்கண் மண்டபத்தில், மேள, தாளம் முழங்க, வரவேற்பு அளித் தனர். பின், பன்னாங்கு (துணி) அவிழ்க்கப்பட்ட பல்லக்கில் அழகர் அருள்பாலித்தார்.
தல்லாகுளத்தில் எதிர் சேவை:
தொடர்ந்து காலை 8 மணிக்கு புதூரில் நடந்த எதிர்சேவையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொரி கடலை, சர்க்கரை நிறைந்த செம்பில், மஞ்சள் துணி, பூ சுற்றி, சூடம் ஏற்றி, 'கோவிந்தா...' கோஷமிட்டு வழிபட்டனர்.மாலை 5 மணிக்கு தல்லா குளம் மாரியம்மன் கோவிலில் எதிர்சேவை நடந்தது. இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் எழுந் தருளினார். அங்கு திருமஞ்சனம் நடந்தது.இன்று அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில், நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, தடுப்புகள் முதன் முறையாக மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ளன.நேரடி ஒளிபரப்பு: ஆற்றுக் குள் இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்தாண்டு முதன்முறையாக 'சேட்டிலைட்' மூலம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி, 'டிவி'க்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
க.>
2010/4/28 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
> அழகர் ஆற்றில் இறங்கினார்
> Wednesday , 28th April 2010 07:16:55 AM
ஒன்றுமே பார்க்காதது போல் உள்ளது. உங்களோடு தண்ணீர் பந்தல்
கைங்கர்யத்தில் கலந்திருக்கவில்லையே என்று ஏக்கம் வருகிறது ;-(
மதுரை, மதுரைதான் !
க.>
2010/4/28 kra narasiah <nara...@yahoo.com>:
> இன்று நான் இங்கு தான் உள்ளேன். நேற்றிரவே சென்னையிலிருந்து வந்து விட்டேன்.
> எங்கள் வீட்டு வாசலில் ஒரு தண்ணீர் பந்தல் வைத்துள்ளோம் தெலுகு பிராம்மண
> சமாஜத்தின் பங்காக.; வரும் கூட்டத்திற்கு நீர்மோர்!
சார்,
கேரளத்தில் எங்கள் இல்லத்தில், மாதமொருமுறை சத்யவட்டம்[அன்னலக்ஷ்மியின் ஆராதனை]
உண்டு .அங்கு அந்தணர்களோ, சாதுக்களோ , என்ற பாகுபாடே இன்றி, அனைவருக்கும் , திவ்ய
சம்பாவனை நடக்கும்.அந்த சந்தோஷம் வார்த்தைகளில் எழுத இயலாது.
அந்த மகிழ்வை நிங்ஙளின் தண்ணீர்ப்பந்தலில் காண்கிறேன்
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> அப்பாவின் நண்பர் *பரமசாமி* என்பவரின் வீட்டு மண்டகப்படிக்
கட்டிடத்துக்குப் போயிடுவோம்<<
’பரம ஸ்வாமி’ என்பது கள்ளழகர் ஆலயத்தின் மூலவரின் திருநாமம். வலத்
திருக்கரத்தில் ப்ரயோக நிலையில் சக்கரம் தரித்தவர்; நாச்சியாரின் உள்ளம்
கவர்ந்தவர்; உடையவர் ஸமர்ப்பித்த நூறு தடா அக்கார அடிசிலையும் ஏற்ற ஏறு
திரு உடையவர் இவரே
தேவ்
On Apr 28, 6:18 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> கமலம், கீழே என்னோட மதுரை மீனாக்ஷி கல்யாண நினைவுகளில் ஒரு சிறு பகுதி!
>
> //சப்தாவரணம் பார்க்கப் போனதெல்லாம் நினைவில் வருது. மீனாக்ஷி கல்யாணத்தன்று
> எல்லார் வீட்டிலும் பாயாசம், வடை உண்டு. காலையில் ஆரம்பிச்சுச் சீர் வரிசைகள்
> ஒவ்வொன்றாக நாலு ஆவணி வீதியையும் சுற்றிக்கொண்டு வரும். எல்லாரும் ஓடிப் போய்
> ஆரத்தி எடுப்போம். அவரவர்களால் முடிஞ்சதை அந்தச் சீர் வரிசைகளோடு சேர்த்துக்
> கொடுப்பதும் உண்டு. வீடுகளில் கூட்டம், ஏதோ அவங்க வீட்டிலேதான் கல்யாணமோ
> என்னும்படி இருக்கும். திருக்கல்யாணம் முடிஞ்சதும், பதினொரு மணிக்கு ஆரம்பிச்சா
> மூணு மணி வரைக்கும் கல்யாண மண்டபத்தில் இருக்கும் ஸ்வாமியைக் கணக்கே இல்லாமல்
> யாரெல்லாம் போறாங்களோ அவங்களோட போறது உண்டு.
>
> சில சமயம் தேரன்றே மாலை எதிர்சேவையும் இருக்கும். தல்லாகுளம் பெருமாள் கோயில்
> எதிரே இருக்கும் அப்பாவின் நண்பர் பரமசாமி என்பவரின் வீட்டு மண்டகப்படிக்
> கட்டிடத்துக்குப் போயிடுவோம். டிவிஎஸ் பஸ் ஓடிக்கொண்டிருந்த காலகட்டம் அது.
> பஸ்ஸே வரலைனால் அந்த ஸ்டாப்பில் இருக்கும் ஒரு ஊழியரிடம் சொன்னால் போதும், உடனே
> பஸ் வரவழைக்கப் பட்டு, இங்கே காத்துக்கொண்டிருக்கும் மக்கள் போகலாம். ஆஹா
> எவ்வளவு சுகமான நாட்கள் அவை?? சில சமயம் நடந்தே போயிருக்கோம். எதிர்சேவை
> பார்த்துட்டு ராத்திரிப் பத்துமணிக்கு அப்புறம் கொடுக்கும் புளியோதரை,
> சர்க்கரைப் பொங்கல் , தயிர்சாத மூட்டையைத் தூக்கிண்டு நடந்தே வருவோம்
> கல்பாலத்தோடு. அப்போ திடீர்னு ஒரு மழை பெய்யும் பாருங்க! என்ன சுகமா இருக்கும்
> தெரியுமா?
>
> வீடுகளில் எல்லாம் லக்ஷம் மல்லி, கோடி மல்லி என்று தானங்கள் நடக்கும், மஞ்சளும்
> கொடுப்பாங்க./ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
> ம்
>
> 2010/4/28 Kamala Devi <saahith...@yahoo.com.sg>
>
>
>
> > சார்,
> > கேரளத்தில் எங்கள் இல்லத்தில், மாதமொருமுறை சத்யவட்டம்[அன்னலக்ஷ்மியின்
> > ஆராதனை]
> > உண்டு .அங்கு அந்தணர்களோ, சாதுக்களோ , என்ற பாகுபாடே இன்றி, அனைவருக்கும் ,
> > திவ்ய
> > சம்பாவனை நடக்கும்.அந்த சந்தோஷம் வார்த்தைகளில் எழுத இயலாது.
> > அந்த மகிழ்வை நிங்ஙளின் தண்ணீர்ப்பந்தலில் காண்கிறேன்
> > கமலம்
>
> >http://www.kamalagaanam.blogspot.com
>
> > ------------------------------
> > **
>
> > --
>
> > --
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
அதுவொரு கனாக்காலம்!
அப்போது கொடுத்தது போல் புளியோதரையும், தத்தியானமும் இன்னும்
தருகிறார்களா என்று தெரியாது. தல்லாகுளத்தில் எங்கள் உறவுக்காரர்
மண்டகப்படியில் பெருமாள் இறங்குவார்.
அதுவொரு கனாக்காலம்!
ஆனால் நீங்கள் சொல்லும் மீனாட்சி கல்யாண வருணனை புதிது. அனுபவித்ததில்லை.
இன்னும் சொல்லுங்கள்.
க.>
2010/4/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
> கமலம், கீழே என்னோட மதுரை மீனாக்ஷி கல்யாண நினைவுகளில் ஒரு சிறு பகுதி!
>
> //சப்தாவரணம் பார்க்கப் போனதெல்லாம் நினைவில் வருது. மீனாக்ஷி கல்யாணத்தன்று
> எல்லார் வீட்டிலும் பாயாசம், வடை உண்டு. காலையில் ஆரம்பிச்சுச் சீர் வரிசைகள்
> ஒவ்வொன்றாக நாலு ஆவணி வீதியையும் சுற்றிக்கொண்டு வரும். எல்லாரும் ஓடிப் போய்
> ஆரத்தி எடுப்போம். அவரவர்களால் முடிஞ்சதை அந்தச் சீர் வரிசைகளோடு சேர்த்துக்
> கொடுப்பதும் உண்டு. வீடுகளில் கூட்டம், ஏதோ அவங்க வீட்டிலேதான் கல்யாணமோ
> என்னும்படி இருக்கும்.





மதுரை : லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா சரண கோஷத்திற்கிடையே கள்ளழகர் இன்று வைகையாற்றில் இறங்கினார். இந்த நிகழ்ச்சியை நமது இணைய தளம் நேரடியாக ஒளிபரப்பியது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடந்தது. மக்கள் வெள்ளத்தில், சூரியகதிர்களால் ஜொலித்த தங்க குதிரையில், காலை 7.05 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் அழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய போது, மக்கள் பக்தி மேலிட கோவிந்தா கோவிந்தா என சரணகோஷம் எழுப்பினர். மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.,16 கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த ஏப்.,25ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. மறுநாள் ஏப். 26 தேரோட்டம் நடந்ததை தொடர்ந்து, அன்று மாலை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு கள்ளழகர் அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் புறப்பட்டார்.
நேற்று காலை 6 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடந்தது. இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடந்தது. பின், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சாத்தப்பட்டு, கோயிலைச் சுற்றி வெட்டிவேர் சப்பரத்தில் உலா வந்தார். அதிகாலை 4 மணியளவில், தமுக்கம் கருப்பண சுவாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின் ஒவ்வொரு மண்டகப்படியாக வந்தார். இதற்கிடையே அழகரை வரவேற்பதற்காக, அதிகாலை 5.50 மணிக்கு எழுத்தாணிகாரத் தெருவில் உள்ள வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் ஆற்றில் எழுந்தருளி காத்திருந்தார்.
காலை 7.05 மணிக்கு, 'கோவிந்தா... நமோ நாராயணா...' என்று பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே, பச்சை பட்டு உடுத்தி, தங்கு குதிரையில் ஆற்றில் இறங்கி, திருக்கண் மண்டபத்தை சுற்றி வந்தார். அவருக்கு அழகர்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அழகரை வரவேற்ற வீரராகவப் பெருமாள், அவரை மூன்று முறை சுற்றி வந்தார். இதைதொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாத்தப்பட்டது. காலை 7.33 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட அழகர், அருகில் இருந்த இந்து சமய அறநிலையத் துறை மண்டகப்படியில் எழுந்தருளினார். அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் துறை அதிகாரிகளுக்கு பரிவட்டம் கட்டி, மரியாதை செலுத்தப்பட்டது. காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட அழகர், மக்கள் வெள்ளத்தில் நீந்தி, காலை 11.30 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அழகரை குளிர்விக்க தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7 மணியளவில் அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
நாளை சாபவிமோசனம் : நாளை காலை 6 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்த பின், சேஷ வாகனத்தில் எழுந்தருளி, காலை 9 மணியளவில் ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வருகிறார். மதியம் 12 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சித் தருகிறார். நாளை மாலை மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு செல்கிறார். இரவு 11 மணி முதல் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை 6 மணிக்கு மோகனாவதாரத்துடன் மண்டபத்தில் உலா வரும் அழகர், மதியம் 12 மணிக்கு ராஜாங்க சேவை அலங்காரமாகி, தமுக்கம் அருகேயுள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அபிஷேகத்திற்கு பின், இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.
தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு : மதுரைக்கு பெருமை சேர்க்கும், சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை உலகெங்குமுள்ள தமிழர்கள் கண்டுகளிக்கும் வகையில், தினமலர் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஒளிபரப்பு இந்திய நேரப்படி இன்று காலை 6.20 மணி முதல் 07:30 மணி வரை நடைபெற்றது. இதை உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தினமலர் வாசகர்கள் பார்த்ததாக நாங்கள் எடுத்த சர்வே தெரிவிக்கிறது.
சித்திரை திருவிழா சிறப்பு ஏற்பாடுகள் :
* சிறுவர் முதல் பெரியவர் வயது வித்தியாசமின்றி, மேள, தாளத்துடன், ஆட்டம் போட்டுக் கொண்டு, அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
* இதற்காக கீழமாசிவீதி தேர்முட்டி பகுதியிலிருந்து காலை 6 மணி முதல் சாரை சாரையாக ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
* ஆற்றில் அழகர் இறங்கிய இடத்தைச் சுற்றி இந்தாண்டு, செடி, கொடிகள் அகற்றப்பட்டதால், பக்தர்கள் பரவலாக நின்று தரிசித்தனர்.
*ஆற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை மொட்டை அடித்து, சர்க்கரை, சூடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
* ஏ.வி. மேம்பாலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
* இந்தாண்டு ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததால், ஆழ்குழாய் அமைத்து, தொட்டியில் நீர் நிரப்பபட்டது. அதில் அழகர் இறங்குவதற்காக மலர்கள் தூவப்பட்டிருந்தன. கடந்த 2004ம் ஆண்டின்போதும் தண்ணீர் திறக்கப்படாததால், லாரிகள் மூலம் தண்ணீர் விடப்பட்டது.
* இந்தாண்டு முதன்முறையாக பெரியார் பஸ் ஸ்டாண்ட், விளக்குத்தூண், தல்லாகுளம் பெருமாள் கோயில், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், அழகர்கோவில் முன்பு பெரிய திரைகளில் 'சேட்டிலைட்' மூலம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோயில் நிர்வாகம் சார்பில் நேரடியாக ஒளிபரப்பபட்டது.
* ஆற்றோரத்தில் பல அடி உயரமான இரும்புச் சட்டங்களில், உயிருக்கு ஆபத்தான வகையில் சிலர் நின்று, அழகரை தரிசித்தனர்.
* போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
* அழகருடன் வந்த கோயில் ஊழியர்கள் சிலரை, போலீசார் ஆற்றுக்குள் விடாததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
* அழகருடன் ஆற்றுக்குள் நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.
* தங்களை அடித்த போலீஸ்காரர் ஒருவரை, திட்டமிட்டு சுற்றி வளைத்து அவரை தாக்கினர். புகார் ஏதும் பதிவாகவில்லை.
* ஆற்றுக்குள் பிக்பாக்கெட் அடித்த இருவரை போலீசார் பிடித்து தல்லாகுளம் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
* அழகர் ஆற்றைவிட்டு கிளம்பி ஒருமணி நேரமாகியும், பக்தர்கள் அவர் சென்ற இடங்களில் எல்லாம் பின்தொடர்ந்து தரிசித்தனர்.
* ஆற்றுக்குள் முதன்முறையாக 'ஜாமர்' கருவி பொருத்தப்பட்டிருந்ததால், மொபைல் போன்கள் செயல் இழந்தன.
* பஸ்களின் மேற்கூரையில் அமர்ந்துக்கொண்டு பக்தர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
* சித்திரைப் பொருட்காட்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய பலர், நள்ளிரவில் ஆற்றுக்குள்ளேயே படுத்து தூங்கினர்.
* நகர் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
<http://www.templecity.in>
மேலே கண்ட சுட்டியில் ஆற்றில் அழகர் இறங்கி அருள்பாலிக்கும் வைபவத்தை, கிராமிய இசையில் அழகர் விருத்தம் பாடி வரவேற்கும் அன்பு உள்ளங்களின் காணொளி கண்டு கேட்கலாம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்