எருக்கு/எரிக்கு ‘Calotropis Gigantea' - a common milk weed whose leaves are used as compost manure - Dravidian name of the plaint all over India

43 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 12, 2015, 5:32:57 AM3/12/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
எருக்கு/எரிக்கு ‘Calotropis Gigantea'

கவிஞர் ருத்ரா எழுதினார் - எருக்கு என்னும் தாவரச் சொல் எப்படி
உருவாகியி இருக்கலாம் என:
<<<<
எருவுதல் நீக்கள் சொல்லும் உட்குதலின் விளைவாய் வெருவுற்று 
வயிறு கலக்கி (வெளியே போகும் உணர்வுடன்) தவிப்பு அடைவதை குறிக்கிறது.எரு என்பது எச்சம் கழித்த கழிவு "உரம்" எனும் பொருளில் வழங்கப்படுதலும் உண்டு.வீட்டின் பின் புறக்குழியை "எருக்கிடங்கு" என்பார்கள்.மேலும் இந்த எருவிடத்தில் பூக்கும் செடிகள் தான் "எருக்கஞ்செடிகள்" ஆயினவோ என எண்ணத்தோன்றுகிறது."சாணி"ப்பிள்ளையாருக்கு எருக்க மாலை சூடுவதன் சூட்சுமமும் இதுவாக இருக்கலாம்.
"வெருவருதல்" (எருவருதல்) அதாவது 
பயத்தில் வயிறு கலங்குதல் என்றெ இங்கு பொருள் கொள்ளப்படுகிறது."வ"கர ஒற்றை முதல் ஒலிப்பாகவோ அல்லது
(வ்+ எ=வெ) அல்லது இடையில் சந்தி ஒலிப்பாகவோ (அவ்வெருவில் =அ+எருவில்)வழங்கப்படும் சொல் வெரு எரு என்றோ அல்லது எரு வெருவென்றோ நிலைத்திருக்கலாம்.
வெருக்கை என்பது செல்வம் என்ற பொருளில் வருவது பழந்தமிழர்கள்(வேளாண்குடியினர்) இந்த "எருக்கை" யையும் பெருசெல்வமாக கருதியிருக்கலாம்.மற்ற செல்வங்கள் எல்லாம் செல்வங்கள் அல்ல "மாடல்ல மற்றயவை" (மாடுகள் தான் தமிழனின் சொத்துக்கள்.)பகை மூள்வதும் இந்த "ஆனிரை கவர்தலில்" தான் தொடங்குகிறது.

அன்புடன் ருத்ரா.
>>>>

On Monday, March 9, 2015 at 5:25:22 PM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
>எருவிடத்தில் பூக்கும் செடிகள் தான் "எருக்கஞ்செடிகள்" ஆயினவோ என >எண்ணத்தோன்றுகிறது."சாணி"ப்பிள்ளையாருக்கு எருக்க மாலை சூடுவதன் >சூட்சுமமும் இதுவாக இருக்கலாம்.

எருக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் இலைகளை வெட்டி எருவாகப் பயன்படுத்துவது வழக்கம். இதனால்
எருக்கு என்ற பெயரில் இருந்து எரு (=உரம்) என்றானதோ எனத் தோன்றுகிறது. எருக்கு = gigantic swallow-wort or manure-leaf .
மலையாளத்தில் “எரிக்கு”  என்கின்றனர். அதனால் சூரியன் எரிக்கும் பாலைத்திணையில் அதிகம் விளையும் எரிக்கு/எருக்கு போலும். இதன் தழைகள் உரமாக மிகுதியும் (manure-leaf) பயன்படுவதால் எரு போலும். எருக்கஞ்ச் செடிக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு வடமொழியில் எருக்கு அர்க்க என்கின்றார்கள். அர்க்க (அருக்கன்) என்றால் சூரியன்.


எரி (சூரியன்) எனவே, பாலைத்திணைச் செடி எரிக்கு/எருக்கு. இதன் தழைகள் உரம். எனவே உரத்துக்கு எரு என ஒரு பெயர் வந்தது போலும். எரிக்கஞ்செடி வடசொல்லில் அர்க்க- .அர்க்க என்றாலே சூரியன் வடக்கே என்பதும் பார்க்கலாம்.

நா. கணேசன்

On Tuesday, March 10, 2015 at 4:30:36 AM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:
2015-03-10 9:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

எருக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் இலைகளை வெட்டி எருவாகப் பயன்படுத்துவது வரி (சூரியன்) எனவே, பாலைத்திணைச் செடி எரிக்கு/எருக்கு. இதன் தழைகள் உரம். எனவே உரத்துக்கு எரு என ஒரு பெயர் வந்தது போலும். எரிக்கஞ்செடி வடசொல்லில் அர்க்க- .அர்க்க என்றாலே சூரியன் வடக்கே என்பதும் பார்க்கலாம். - . கணேசன்

எரு வெப்பக்கருத்துடையது எனலாம். எங்கள் வீட்டில் சில மரஞ்செடி இலைகளை ஒரு குண்டில் இட்டு மூடி ஒவ்வொரு நாளும் அதன் மேல் தண்ணீர் தெளித்தோம். 8 மாதங்கள் கழித்து அதைத் தோண்டிய போது இலைகள் மட்கி அந்த குண்டே வெப்பமாக இருந்தது. எருவும் வ ஏப்பமாக இருந்தது. 

கைத்தொழுவான். 

எரிக்கு (அ) எருக்கு வெப்பக் கருத்துடையது. பயன்படாத பாலை, குறை நிலங்களில் மிகுதியும் வளர்வது.
அதன் தழைகளை உரமாகப் பயன்படுத்தியதால் உரத்திற்கு எரு என்றே ஒருபெயர் ஏற்பட்டது.
வெருவுதல் என்பதற்கும் எரி-/எரு(க்கு) ஒரு தொடர்புமில்லை.

சாணி வறட்டி செய்கிறோம். எரி பொருள் தான் வறட்டி (< வறள்- ). எருவறட்டி, எருமுட்டை
இதெல்லாம் எரிக்கப்படுதலால் வரும் பெயர்கள்.

எரிக்கஞ்செடி (எருக்கு)

இதன் காய் வெடித்து கிழவிதலைப் பஞ்சு போல் இருப்பதால், ஒரு உவமையாகுபெயர் வடக்கே உண்டு


எருக்கு/எரிக்கு > எக்கெ (கன்னடம்). இது ஹிந்துஸ்தானியில் அக், சம்ஸ்க்ரிதத்தில் அர்க்க, ஹிந்தியில் ஆக், ....
என்றெல்லாம் த்ராவிடச் சொல் எரிக்கஞ் செடிக்கு இன்றளவும் வழங்குகிறது. அமெரிக்க கண்டத்தில்
செவ்விந்தியர்கள் தம் மொழியை இழந்து ஸ்பானிச் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுதல்போல
வடக்கே திராவிட மொழி மாறி இந்தியாகி இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு சான்றாம்.

நா. கணேசன்


On Monday, March 9, 2015 at 5:25:22 PM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
>எருவிடத்தில் பூக்கும் செடிகள் தான் "எருக்கஞ்செடிகள்" ஆயினவோ என எண்ணத்தோன்றுகிறது."சாணி"ப்பிள்ளையாருக்கு எருக்க >மாலை சூடுவதன் சூட்சுமமும் இதுவாக இருக்கலாம்.

எருக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் இலைகளை வெட்டி எருவாகப் பயன்படுத்துவது வழக்கம். இதனால்
எருக்கு என்ற பெயரில் இருந்து எரு (=உரம்) என்றானதோ எனத் தோன்றுகிறது. எருக்கு = gigantic swallow-wort or manure-leaf .
மலையாளத்தில் “எரிக்கு”  என்கின்றனர். அதனால் சூரியன் எரிக்கும் பாலைத்திணையில் அதிகம் விளையும் எரிக்கு/எருக்கு போலும். இதன் தழைகள் உரமாக மிகுதியும் (manure-leaf) பயன்படுவதால் எரு போலும். எருக்கஞ்ச் செடிக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு வடமொழியில் எருக்கு அர்க்க என்கின்றார்கள். அர்க்க (அருக்கன்) என்றால் சூரியன்.


எரி (சூரியன்) எனவே, பாலைத்திணைச் செடி எரிக்கு/எருக்கு. இதன் தழைகள் உரம். எனவே உரத்துக்கு எரு என ஒரு பெயர் வந்தது போலும். எரிக்கஞ்செடி வடசொல்லில் அர்க்க- .அர்க்க என்றாலே சூரியன் வடக்கே என்பதும் பார்க்கலாம்.

நா. கணேசன்

 
  

annamalai sugumaran

unread,
Mar 12, 2015, 7:50:01 AM3/12/15
to mint...@googlegroups.com
தமிழ் நாட்டில் உள்ள சூரியனுக்கான கோவிலான 'சூரியனார் கோவில்'(  குடந்தைக்கு 
அருகில் )இருக்கும் கோவிலின் தல விருஷம் எருக்குதான் .

எருக்குக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்புக்காக இதைப பதிவிட்டேன் .
அன்புடன்
 சுகுமாரன் 

12 மார்ச், 2015 ’அன்று’ 3:02 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

N. Ganesan

unread,
Mar 12, 2015, 10:20:07 AM3/12/15
to mint...@googlegroups.com


On Thursday, March 12, 2015 at 4:50:01 AM UTC-7, ஏ .சுகுமாரன் wrote:
தமிழ் நாட்டில் உள்ள சூரியனுக்கான கோவிலான 'சூரியனார் கோவில்'(  குடந்தைக்கு 
அருகில் )இருக்கும் கோவிலின் தல விருஷம் எருக்குதான் .

எருக்குக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்புக்காக இதைப பதிவிட்டேன் .
அன்புடன்
 சுகுமாரன் 

நன்றி, திரு. சுகுமாரன். எங்கே நிரம்ப நாளாய்க் காணோம்?

அன்புடன்
நா. கணேசன் 
Reply all
Reply to author
Forward
0 new messages