வைகைக்கரையில் மதுரைக்குக் கிழக்கே 12 மைல் தொலைவில் உள்ள ஊர்.
மிகத்தொன்மையான சிவஸ்தலம். பாண்டியர்கள் ஆண்டாண்டு காலம் ஆண்ட நிலம்.
குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை
முடியாகச் சூடிக்கொண்டான். எனவே இத்தலத்திற்கு நெல்முடிக்கரை என்ற
பெயருண்டாயிற்று. கோனேரின்மை கொண்டான் குலசேகரதேவன் காலத்திய
கல்வெட்டுக்கள் இத்தலத்திற்கு வேதபாராயணத்திற்கும், விழாக்களுக்கும்
நிவந்தங்கள் அளித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.
கோவிலைப் பார்த்த மாதிரி வீடு. 'பத்ம நிலையம்'. வீட்டில் ஒரே குதூகலம்.
சிறுவர்கள், சிறுமியர் நிரம்பிய வீடாக உள்ளது. குதூகலத்திற்குக் காரணம்?
வைகை கரை புரண்டு ஓடுகிறதாம். ஊரெல்லாம் பேச்சு. கண்ணனுக்கு கால்
கொள்ளவில்லை. அம்மாவின் அதட்டல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. 'ஒண்ணே
ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு' ஏழு பொட்டைகளுக்குப் பின்னால பொறந்திருக்கான்,
இவனை ஆத்திலே விடவா பெத்தேன்?' என்று அம்மா சுவரைப்பார்த்து
பேசிக்கொண்டிருக்கிறாள். இவனுக்கு அதெல்லாம் ஒன்றும் புரியவில்லை.
வாசலில் வைகையை நோக்கி ஓடும் சிறுவர்களின் கூச்சல் நிற்க விடமாட்டேன்
என்கிறது. கடைசியில் அம்மா, கொல்லைப்புரம் போனவுடன் இவன் ஆற்றை நோக்கி
ஓடிவிட்டான்.
நொப்பும் நுரையுமாக வெள்ளம். கரையைக் காணவில்லை. அரசமரத்துப் பிள்ளையார்
கோயில் சுவரளவிற்கு நீர் முட்டிக்கொண்டு நிற்கிறது. பலர் திறந்த வாய்
மூடாமல் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். நிறைய சிறுவர், சிறுமியர்.
அதில் தைர்யமான சிறுவர்கள் கோயிலுக்குள் போய் சுவர் வழியாக, தொம்,
தொம்மென்று ஆற்றில் குதித்துக்கரையேறுகின்றனர். கண்ணனுக்கும் ஆசை.
கொஞ்சம் பயம் கொஞ்சம் ஆசை. மீண்டும் பயம். ஏதோ ஒரு தைர்யத்தில்
குதித்துவிட்டான். அந்த ஆற்றிற்கு இவ்வளவு பலமுண்டு என்று இவன்
அறிந்ததில்லை. இவன் நீந்தாமலே ஆறு இவனை அள்ளிக்கொண்டு சென்றது. கரையில்
தள்ளியது. மீண்டும் குதித்தால் அள்ளிக்கொண்டு போய் ஆசை காட்டிவிட்டு
கரையில் தள்ளியது. இப்படியே அடிவிட்டு கண்கள் சிவக்க, உடல் நடு, நடுங்க
கரைக்கு ஒருவழியாக வந்தான். வீட்டுக்கு இப்படியே போனால் உதை விழும், எனவே
கோயில் கிணறில் குளித்து உலர்த்திவிட்டுப் போகலாமென 'பெரிய' கோயிலுக்கு
வந்தான்.
கோதில் கிணறை ஒட்டி நந்தவனம். ஒரு பண்டாரம் பூ பறித்துக்கொண்டிருந்தார்.
என்ன தம்பி! குளிக்கணுமா? நல்லா குளி! தண்ணி அப்படியே இந்த ரோஜா
செடிக்குப்பாயும். இப்பதான் வகுத்துவிட்டேன்! என்றார். சரி, குளித்தால்
ரோஜா செடி வளரும் என்று பண்டாரம் சொல்கிறாரென்று இவன் இன்னும் ரெண்டு
வாளித் தண்ணீரை தலையில் ஊற்றினான்.
குளித்து முடித்து, ஆடைகளைப் பிழிந்து உணர்த்தி (கோவணம் உதவி -
பண்டாரம்), காலாற ஒரு சின்ன ஆண்டி போல் கோயில் பிரகாரத்தில் உலாவரத்
தொடங்கினான். அப்போதுதான் பார்த்தான் ஒரு கிழவர் உளவாரப்பணி செய்து
கொண்டு மூலையில் வானத்தைப்பார்ப்பதும், கண்ணீர் உகப்பதுமாக இருந்தார்.
மெல்ல இவன் அவரிடம் போனான். இவனைப் பார்த்தமும் அவர், 'குமரா!
பழனியாண்டவா!' என்று வணங்கினார். இவனைக் கோகுலத்thil திரியும் இடையன்
என்றுதான் எல்லோரும் கொஞ்சுவார்கள். இந்தக்கிழவர் முருகன் என்கிறாரே!
என்றெண்ணி, "தாத்தா! என்ன பண்ணறீங்க? என்றான். "உன்னை மாதிரி சின்னக்
குழந்தைகள்,பிரகாரம் சுற்றும் போது நெருஞ்சி முள் குத்தாம நான்
களையெடுக்கிறேனப்பா!' என்றார். "தாத்தா, வடக்கு வீதியிலே நடக்கவே
முடியலே! ஒரே முள்ளு!' என்றான் கண்ணன். 'ஓ! அப்படியா! காட்டு, எனக்கு'
என்று இவன் கையைப் பிடித்துக்கொண்டு கிழவர் வந்தார்.
அங்கு வந்து, உளவாரப்பணி செய்து கொண்டு இருக்கும் போதே, குமரா! பாத்தியா?
இதைப்பாத்தியா? என்றார். எதைத் தாத்தா? என்றான் சிறுவன். என்னப்பன்,
பூவணநாதன் வந்து நிற்கும் அழகை? என்றார். தெரியலையே தாத்தா! நீங்க எப்படி
இருப்பார்ன்னு சொல்லுங்க! என்றான் கண்ணன். பெரியவர்
பாடத்தொடங்கிவிட்டார்.
வடிவேறு திரிசூலந்தோன்றும் தோன்றும்
வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திரு முடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
(அப்பர்)
அவர் கண்ணீரும், உவப்பும் சேரக்கொண்டு அனுபவிப்பது இவனுக்கு புது
அனுபவமாக இருந்தது. இவன் பார்த்த சனிக்கிழமை பஜனை போல் இல்லை அது!
ஆனாலும், இவர் பாட்டிலும் தன்னிசைவாக இசை வந்தது. இவனும் தாத்தாவோடு
குதித்துக்கொண்டு ஆடினான்.
இதுவெல்லாம் முடிந்த போது இவன் தலை உலர்ந்திருந்திருந்தது. அப்போதுதான்
இவனுக்கு, வீட்டு ஞாபகம் வந்தது. "தாத்தா! வீட்டுக்குப் போகணும்,
இல்லாட்டி திட்டுவாங்க!' என்று நழுவினான். "போய்ட்டு வா! நல்லாயிரு!"
என்று தாத்தா ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
இவன் வீட்டிற்கு வந்து, அடிவாங்காமல் உண்டு, உறங்கும் போது, தாத்தா சொன்ன
காட்சி நினைவில் வந்தது. மீனாட்சி கோயிலில் சிற்பி வடித்த சிற்பம்
போன்றதொரு காட்சியைப் பெரியவர் சொல்லியிருக்கிறார்.
அழகிய வடிவான திரிசூலம் கையில் கொண்டு, பிறைச் சந்திரன் சடைமுடியில்
தோன்ற நிற்கிறான் ஈசன். காதில் ஒருபுறம் தோடு, ஒரு புறம் குழை. ஓ!
அம்மாவும் கூட இருக்காங்க போல. அதான் தோடு! இவன் சுந்தரன் என்பது போல்
இருந்தாலும் கோபமென வந்துவிட்டால் யானைக்கிழித்து மாலையாகப்
போட்டுக்கொள்பவன். இல்லை, குளிருக்கு போர்வையாக்குபவன். இவன் சடைமுடி
இத்தருணத்திலும் எழிலாகத் தோன்றும். நெற்றியில் அழகிய திருநீறு. இப்படி
அழகிய தோற்றத்தை திருப்பூவணநாதன் தருகிறான்.
கண்ணன் முணு, முணுத்துக்கொண்டே உறங்கிவிட்டான்.
காலையில் பள்ளிக்குப்போனால் ஆசிரியர் இந்தப்பாட்டை இவனை வாசிக்கச்
சொல்லி, பொருள் விளக்கச் சொல்கிறார். இவன் பாவத்துடனும், இசையுடனும் அதை
வாசித்துப் பொருள் சொன்னபோது ஆசிரியரே மயங்கிவிட்டார். "எங்கேடா!
கத்துக்கிட்டே! இப்படி? ஓதுவார் சொல்லித்தந்தாரா? என்றார் ஆசிரியர்.
"இல்லே சார், ஒரு தாத்தா சொல்லித்தந்தார் என்றான்.
வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டான். "ஏண்டி,
பங்கஜம், இவன் சொல்லற கிழவரை நம்ம கோயில்லே முன்னப்பின்னே
பாத்திருக்கியோ?" என்றாள். 'இல்லேம்மா! நான் பாத்ததே இல்லே! இவன் ஏதோ
கனாக்கண்டிருக்கான்!' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
கனவா? இப்படி, அச்சுப்பதித்தாற்போல் சொல்லறானேடி! என்ன அதிசயம்?
என்று அவர்கள் வியந்து கொண்டு இருக்கும் போது இவன் கோயிலை நோக்கி.....
உங்களுக்கு மட்டுமல்ல! பலருக்கு ஆச்சர்யம்தான் :-)
சிவநாமாவளியில் 'முகுந்தப்பிரிய' என்று வரும். விஷ்ணு சகஸ்ரரநாமத்தில்,
'ஈஸ்வர உவாச..' என்று 'இராம, இராம ராமேதி..' என்று வரும்.
நீங்கள், நான் சிவன் அருள் குறித்து எழுத வேண்டுமென்று சொன்னீர்கள்.
உங்களுக்காக எழுதியது. என் பிள்ளைப்பிராயத்தில் என் குடிலாக இருந்தது
திருப்புவனம் அரங்கநாதர் ஆலயமும், புஷ்பவனேஸ்வரர் ஆலயமும்தான். பல
நேரங்களில் மதுரை மீனாட்சி கோயில் என் விளையாட்டுத்திடலாக இருந்த
காலமுண்டு.
இது உங்களுக்கான ஸ்பெஷல். பிடித்திருந்தால் எழுதுகிறேன். நன்றி.
கண்ணன்
நீங்கள், நான் சிவன் அருள் குறித்து எழுத வேண்டுமென்று சொன்னீர்கள்.
உங்களுக்காக எழுதியது. என் பிள்ளைப்பிராயத்தில் என் குடிலாக இருந்தது
திருப்புவனம் அரங்கநாதர் ஆலயமும், புஷ்பவனேஸ்வரர் ஆலயமும்தான். பல
நேரங்களில் மதுரை மீனாட்சி கோயில் என் விளையாட்டுத்திடலாக இருந்த
காலமுண்டு.
இது உங்களுக்கான ஸ்பெஷல். பிடித்திருந்தால் எழுதுகிறேன். நன்றி.
கண்ணன் என்பதே காதுக்கு இனிமை.
நாளை மீண்டும் எங்களூருக்கு அழைத்துச் செல்கிறேன்.
உங்கள் ஆர்வம் கண்கள் பனிக்க வைக்கின்றன. இறைவன் இன்னருள் நினைந்து
பொழுதைப் போக்காமல் என் சிந்தனை ஏன் மற்றவற்றில் ஈடுபட்டு உழன்று
தவிக்கிறது என்று என்னையே நொந்து கொள்கிறேன். எனக்கு புலனடக்கும்
போதவில்லை. இது, இது மட்டுமே வாழ்வு என்று இருக்கக்கூடாதா? நன்றி.
க.>
2009/3/19 Ponnaiah Thirunavukkarasu <ponn...@gmail.com>:
கண்ணன் காட்சிக்கு எளியன். என்னைத் தாங்கள் ஐயா! என்றழைக்க வேண்டாம்.
கண்ணன் என்பதே காதுக்கு இனிமை.
நாளை மீண்டும் எங்களூருக்கு அழைத்துச் செல்கிறேன்.
உங்கள் ஆர்வம் கண்கள் பனிக்க வைக்கின்றன. இறைவன் இன்னருள் நினைந்து
பொழுதைப் போக்காமல் என் சிந்தனை ஏன் மற்றவற்றில் ஈடுபட்டு உழன்று
தவிக்கிறது என்று என்னையே நொந்து கொள்கிறேன். எனக்கு புலனடக்கும்
போதவில்லை. இது, இது மட்டுமே வாழ்வு என்று இருக்கக்கூடாதா? நன்றி.
அன்பிற்கு நானடிமை. எப்படி அழைத்தாலும் ஏற்பேன். வயது ஒரு காரணியல்ல.
எனது சில நண்பர்கள் என்னைவிட வயதில் மூத்தோர். நான் பேர் சொல்லி
அழைப்பதுண்டு. நட்பைப் புரிந்து கொண்டால் எதிலும் பிரச்சனை இல்லை ;-)
க.>
நான் அடிக்கடி சொல்வதுதான். செவ்விலக்கியப்பரப்பு பரந்து விரிந்து
கிடக்கிறது. நாலாயிரத்தின் ரகசியங்களே இன்னும் புடிபடவில்லை. எனவேதான்
நாயன்மார்களுக்குள் நுழையவில்லை. இது ஒரு முன்னோட்டம். எங்களூர் என்பதால்
ஒரு உரிமையுடன் உள்ளே நுழைந்தேன்.
க.>
திருப்பூவணத்தில் வைகை ஆற்றின் நடுவே அழிந்து கிடக்கும் ஆலயம்,(படம் இணைக்கப்பட்டுள்ளது)
Moj;jgR kz;lgj;jpw;Fk;. jpUf;nfhapYf;Fk; ,ilna Mw;wpd; eLnt mHpe;J fplf;Fk; fw;nfhapy;/ (Moj;jgR kz;lgj;jpy; cs;s Mykuk; gpd;dhy; bjhpfpwJ)
rpijghLfSf;F ,ilna nfhKfk; xd;W fplf;fpwJ/ ,jdhy; ,';F nfhapy; xd;W ,Ue;Js;sJ vd;gJ bjspthfg; g[yg;gLfpwJ/
glk;
Mw;wpd; eLnt Myak; xd;W mHpe;J fpilg;gijf; fhl;Lk; glk;
அன்பன்கி. காளைராசன்
On 7/31/10, kalairajan krishnan <kalair...@gmail.com> wrote:ஐயா கண்ணன் அவர்களுக்குவணக்கம்அனைவரும் நலம்தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமுடன் வாழ ஸ்ரீமன் நாராணயன்(சீர்ஆர்வாரி) அருள் செய்வான்,தங்களது இந்தக் கடிதத்தைக் காண்பதற்காகத்தான் இன்று ஆவலாய் அலுவலகம் ஓடி வந்தேன், எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை, நான் எதிர் பார்த்தது போல் தங்கள் கடிதம் கண்டேன்,நான் எதிர் வரும் ஞாயிறு திருப்பூவணம் செல்கிறேன்,ஐயா சந்திரா அவர்களுக்குக் மின்கடிதம் எழுதியுள்ளேன்அவர் குறிப்பிடும் நாளில் அவரை அவசியம் திருப்பூவணம் அலைத்துச் சென்று வழிபட்டு வருகிறோம், (அங்கு ஆற்றின் நடுவே ஆலயம் ஒன்று அழிந்து கிடக்கிறது, அதனைச் சீர் செய்து நால்வர் திருவிழாவை நடத்த வேண்டியுள்ளது, திருமலை நாயக்கர் மண்டபம் சிதிலமடைந்து வருகிறது. அதைக் காக்க வேண்டியுள்ளது, படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)(விடுதி) சீர்மிகு நாராயணன் ஐயங்கார் தான் எனக்கு வழிகாட்டி. எனது தந்தையும் அவரும் நண்பர்கள்,எனது தந்தை தெய்வத்திரு இரா,கிருஷ்ணன் அம்பலம் அவர்கள் திருப்பூவணத்தில் காவல்துறையில் பணியாற்றினார், 1969-74ல் எனக்கு திருப்பூவணத்தில் கல்வி, 1974-78ல் தியாகராசர் கல்லூரியில் கல்வி, எங்களது குடும்பம் சிவகங்கை தமறாக்கி நாட்டைச் சேர்ந்தது, 1985ல் இருந்து காரைக்குடி வாழ்க்கை,எனது தம்பியின் மாமனார் திரு, இராமையா அம்பலம் எங்களது உறவினர், எனது தம்பியின் மாமனார் விடுதிச் செட்டியார்களுக்கு மிகவும் அணுக்கமானவர், அதனால் ஐயங்காருக்கு எங்கள் குடும்பத்தினர் அனைவரும் நன்கு பரிட்சியம்.நான்கு வருடங்களுக்கு முன்புபெருமாள் கோயிலுக்கு என்று பத்திரிக்கையில் எழுத வேண்டி திருக்கோயிலுக்குச் சென்றேன்,அப்போது சீர்மன்னு ராஜப்பா அவர்கள் பத்திரிக்கைகளில் போடுவதற்கு மூலவரைப் படம் எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான்தான் அதில் அபச்சாரம் வந்து விடக்கூடாது எனத் தவிர்த்து விட்டு உற்சவரை மட்டும் படம் எடுத்துக் கொண்டேன்,பெருமாள் கோயில் வழிபாடுகள் இன்று நன்றாக நடைபெறுகின்றன,இருப்பினும் பெருமாளின் வரசித்தியை அறிந்தவர்களுக்கு மட்டுமே அது தெரிகிறது, அனைரும் வழிபாட்டுப் பலனை அறியும் வகையில், பெருமாளின் அருளாற்றலை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் கல்வியாளன் என்ற முறையில் நான் உள்ளேன், முதலில் பெருமாள் கோயிலுக்கு நித்தியமாக(regular) வருபவர்களைக் கொண்டு சீர்மன்னு நாராயணன் ஐயங்கார் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி அதில் ஏற்றுக் கொள்ளப்படும் பொருள் அடிப்படையில் செயல்படலாம் என உத்தேசிக்கிறேன், தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிய ஆவலாய் உள்ளேன்,மற்றபடி திருப்பூவணம் செல்லும்போது தங்களது நண்பர்கள் உறவினரானோர் அனைவரையும் சந்தித்து தங்களது அன்பைத் தெரிவிக்கிறேன்திருப்பூவணநாதர் திருவருளைச் சிந்தித்துமின்னம்மையின் திருவடிகளை வணங்கிஅன்பன்கி. காளைராசன்
On 7/31/10, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:அன்பின் காளைராஜன்:
எங்கள் குடும்பம் திரு.நாராயண ஐயங்கார் (என் தந்தை), சிறிய தந்தை
பாலகிருஷ்ண அய்யங்கார் இருவராலும் திருப்பூவணத்தில் அறியப்பட்டது. என்
தந்தைக்கு பூர்வீகம் செட்டிநாடு. தாயாருக்கு மதுரை. என் பெரியப்பா
இரணியூரில் நீண்ட நாள் இருந்து காலமானார், இன்னொரு பெரியப்பா கல்லல் என்ற
ஊரில் இருந்து வாழ்ந்து காலமானார். என் தந்தை திருப்புவனத்தில் இருந்து
வாழ்ந்து காலமானார். நாராயண ஐயங்கார் குடும்பம் என்றால் பலருக்கு சட்டென
நினைவிற்கு வரும்.
என் சித்தியின் கணவர் (சித்தியா) அங்கு பிரபல ஜோசியர். கிச்சய்யர்
என்றால் எல்லோருக்கும் தெரியும். தன் வருமானம் அனைத்தையும் கோயில்
திருப்பணிக்கு செலவிட்டு மடிந்தவர். உங்களைப் போன்ற தொடர்புகள்
அக்காலத்தில் இல்லை. இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார். அவரது
தயாதிக்காரர்கள் (பிச்சை அய்யங்கார்) இப்போது கோயிலைப் பார்த்து
வருகிறார்கள்.
விடுதி ஐயங்கார் குடும்பம் இப்போது கோயில் பூஜை முறையைக் கவனித்து வருவது
மகிழ்வளிக்கிறது. ராஜப்பாவை சிறு குழந்தையாக நான் கண்டது. நாராயணன்
(ராஜப்பாவின் மாமா) எங்களை மிக நன்றாக அறிவார்.
பெருமாள் கோயில் நல்லபடியாக நடந்து வருகிறதா? அக்கோயில் திருப்பணி
காலத்தில் அம்மண்ணுடன் மண்ணாக விளையாடி மகிழ்ந்தவன். அப்போது முருகன்
கோயில் பாலாபிஷேகம் மிகபிரசித்தி.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மின்னம்பலம் ஒன்றில் அவன் நடத்தும்
திருவிளையாடலை நம்ப முடியவில்லை. சௌந்தர்ய நாயகி என்னை என்றும்
மறந்ததில்லை என்று சூசகமாக காண்பித்து கொடுத்துள்ளாள். நம் மின்தமிழ்
ரங்கமீனா முத்து (கோலாலம்பூர்) நான் சொல்லி திருப்பூவணம் சென்று மிக
அற்புதமான அனுபவங்கள் பெற்று வந்தார்கள்.
மோகன் என் கிளாஸ்மேட். கேட்டதாகச் சொல்லவும். சென்றமுறை சென்றபோது அவனைக்
காணமுடியவில்லை. குட்டிபட்டர் குடும்பம், கண்ணானி பட்டர், ஷண்முக பட்டர்,
நடராஜபட்டர் (சின்னக்கண்ணு பட்டர்) இவர்கள் எல்லாம் மிக நெருக்கமான உறவு
கொண்டவர்கள். திருப்பூவணம் கோயில் என் விளையாட்டுத்திடல். அந்த வைகை என்
பால்ய தோழி.
உங்கள் மூலம் கடந்த காலம் அருகில் வருவது மகிழ்வளிக்கிறது.
என் தாய்வழி முப்பாட்டனார் வழியில் நாட்டரசன் கோட்டை ஸ்ரீநிவாசப்பெருமாள்
கோயில் எங்கள் குலச்சொத்தே (அதாவது கைங்கர்யப்ப்ராப்தி)
படங்களை zip செய்து அனுப்புங்கள். இல்லையெனில் ஜிமெயில் பிகாசாவில்
போட்டு தொடுப்பு கொடுங்கள்.
கண்ணன்
2010/7/31 kalairajan krishnan <kalair...@gmail.com>:
> பெருமாள் கோயில் பற்றிய மேலதிக விவரங்கள் இருந்தால் அவற்றைக் கூறுமாறும்
> அன்புடன் வேண்டுகிறேன்,--
முனைவர் கி, காளைராசன்
உதவிப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி - 630 003
தமிழ்நாடு, India.
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003
--
முனைவர் கி, காளைராசன்
உதவிப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி - 630 003
தமிழ்நாடு, India.
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003