உதயனின் உதார்கள் : மதுரை சித்திரை திருவிழா 2012

93 views
Skip to first unread message

C.M உதயன்

unread,
May 15, 2012, 11:53:15 PM5/15/12
to உதயன்

மதுரை சித்திரை திருவிழா (2012) ல் எடுத்த படங்கள், விடியோக்கள் இந்த இழையில்.

01. யாசகம்
Inline image 2

02. கள்ளழகர் வேஷத்தில்
Inline image 1

03.
Inline image 3

04. சித்திரா பொளர்ணமி
Inline image 4

05. சித்திரா பொளர்ணமி
Inline image 5

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

C.M உதயன்

unread,
May 17, 2012, 12:05:00 AM5/17/12
to உதயன்

06. அந்திசாயும் நேரம்
Inline image 1

07. மதுரை மேம்பாலம்
 Inline image 3

08. எதிர்சேவை பார்க்க வந்த மக்கள் ஒரு பகுதி
Inline image 4

09. லுக்
Inline image 6

10. சிரிப்பு பாப்பா
Inline image 7

C.M உதயன்

unread,
May 17, 2012, 11:53:20 PM5/17/12
to உதயன்
11.
Inline image 1

12.
Inline image 2

13.
Inline image 5

14.
Inline image 3

15.
Inline image 4

Santhanam Swaminathan

unread,
May 18, 2012, 12:51:28 AM5/18/12
to mint...@googlegroups.com, உதயன்
Thanks for wonderful, crystal clear pictures.
Hope Marapu Wikki saves pictures as well.
 
Swami
020 8904 2879
07951 370 697

From: C.M உதயன் <udhay...@gmail.com>
To: உதயன் <udhay...@gmail.com>
Sent: Friday, May 18, 2012 4:53 AM
Subject: [MinTamil] Re: உதயனின் உதார்கள் : மதுரை சித்திரை திருவிழா 2012

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

C.M உதயன்

unread,
May 22, 2012, 11:51:21 PM5/22/12
to உதயன்
கள்ளழகர்
Inline image 1

Geetha Sambasivam

unread,
May 25, 2012, 10:02:47 PM5/25/12
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், மின்தமிழ்
இப்போதைக்கு அழகர் பத்தி மட்டும் சொல்கிறேன்.  சித்திரைத் திருவிழா முழுசையும் பத்தி எழுத நிறையவே இருக்கு. ஆனால் அழகர் திருவிழா ஒரு காலத்தில் தனியாகவே நடந்து வந்தது.  மதுரையில் மீனாக்ஷி கல்யாணம் மாசி, பங்குனி மாதங்களில் நடந்து வந்தது.  அந்தச் சமயம் அறுவடை மும்முரமாக இருக்கும் நேரம் ஆதலாலும், கோடையில் மக்கள் ஓய்வாக இருப்பார்கள் என்பதாலும் மாசி, பங்குனியில் நடந்த மீனாக்ஷி கல்யாணத் திருவிழாவைத் திருமலை நாயக்கர் மன்னராக இருந்த போது சித்திரை மாதத்தில் மாற்றினார்.

அழகர் திருவிழா தேனூரில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.  அங்கே தான் மண்டூக முனிவருக்கு மோக்ஷம் கொடுக்கும் நிகழ்வு சித்ரா பெளர்ணமிக்கு மறுநாள் நடைபெறும்.  இரண்டையும் ஒன்றாக இணைத்தது திருமலை நாயக்கர். அழகர் கோயில் திருமாலிருஞ்சோலையாகவே 19-ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்தது.   பெருமாள் கள்ளழகர் என்ற பெயருடனும் அழைக்கப்படவில்லை.  ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்தும் இவை அறிய முடிந்தாலும் இக்கோயிலின் கல்வெட்டுக்களில் இருந்தும் இது தெரிய வருவதாய் அறிகிறோம்.  இதற்குக் காரணம் என்னவெனில் அழகர்மலையைச் சுற்றியுள்ள ஊர்களில் கள்ளர்களே அதிகமாய் வாழ்ந்து வந்தனர்.  அவர்களின் வாழ்வாதாரம் வழிப்பறிக் கொள்ளை தான். அவ்வப்போது கிடைத்த நபர்களிடம் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தனர்.  சொத்துக்கள் நிறைய உள்ள கோயிலின் அழகர் ஒவ்வொரு வருடமும் மலையை விட்டுக் கீழே இறங்கும்போது கள்ளர்களால் வழிமறிக்கப் படும் அபாயம் இருந்தது.  ஆகவே கோயிலின் நிர்வாகிகள் கள்ளர்கள் தலைவனோடு சேர்ந்து ஆலோசித்துக் கள்ளர்களுக்குக் கோயிலில் முதல்மரியாதை கொடுக்க ஒப்புக் கொள்கின்றனர்.  அதோடு இறைவனுக்கும் கள்ளர்களின் தலைவன் என்ற கள்ள அழகர் கோலம் போட ஒப்புக் கொள்கின்றனர்.  இந்த ஒப்பந்தத்தின் படியே மலையில் இருந்து இறங்கி வரும் அழகர், (சுந்தரராஜப் பெருமாள் என்ற பெயரும் இவருக்கு உண்டு.) கள்ளர் வேடத்தில் வருகிறார்.

சங்கு, சக்கரத்தை விட முடியுமா? இல்லை கிரீடத்தைத் தான் விடமுடியுமா?  அவற்றோடு காட்சி தரும் கள்ளழகர், கள்ளர்களின் ஆயுதமான வளரித்தடி, கன்னம் இடும்  ஆயுதம், சாட்டைக் கம்பு, காதுகளில் கள்ளர்கள் அணியும் கடுக்கன், கறுப்பு ஆடை, தலையில் கள்ளக் கொண்டை போட்டுக் கொண்டு தல்லாகுளம் கள்ளர்களின் தலைவராக கள்ளராகவே மாறி வருகிறார்.  கோயில் வாசலில் இருந்து வெளியே வரும் அழகர் அங்குள்ள பதினெட்டாம்படிக் கருப்பு சந்நிதியில் தங்குவார்.  அங்கு வைத்துக் கருப்பண்ண சாமியிடம் அழகரின் நகைகளின் கணக்குக் கூறப்படும்.  இவை முடிந்த பிறகே மலையை விட்டுக் கீழே இறங்குவார்.  கூடவே கள்ள இனத்தவரும், மற்ற இனத்து இளைஞர்களும் அழகர் வேடமிட்டுக் கைகளில் தண்ணீர் பீய்ச்சும் துருத்தியை எடுத்துக் கொண்டு அனைவர் மேலும் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டே ஆடிப் பாடிக் கொண்டு வருவார்கள்.  தப்பும், தவிலும் முழங்க துருத்தியால் தண்ணீர் பீய்ச்சுபவர்கள் அழகரையும் விட மாட்டார்கள். அவர்களில் ஒருவரே.  அழகரைச் சுமக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒயிலாட்டம் ஆடிக்கொண்டு அழகரைச் சுமந்து வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவர்கள் ஆடுகிற ஆட்டத்தில் தங்கக் குதிரை உண்மையாகவே ஓடி வருகிறாப் போல் இருக்கும். இவ்வாறு தல்லாகுளம் நோக்கி வருவார்கள்.  அடுத்து எதிர்சேவை.

2012/5/24 C.M உதயன் <udhay...@gmail.com>
முடிந்தால் அதன் வரலாற்றை எழுதுங்கம்மா, எனக்கு நிறைய டவுட் இருக்கு.
துலுக்க நாச்சியார் யார்.
துலுக்கர் = இஸ்லாமியர்கள் தானே.

வண்டியூர் சென்றதால் அழகர்கோவில் கருப்பணசாமி உள்ளே விடாமல் ஆடி மாதம் வரை வெளியே இருக்க வைப்பார்கள் என சொவார்கள், உண்மையா ?

rajam

unread,
May 25, 2012, 10:12:11 PM5/25/12
to mint...@googlegroups.com, Geetha Sambasivam
அருமையான பதிவு! தொடருங்கள் கீதா! என் எண்ணமும் உங்கள் பின்னால்.
அன்புடன்,
ராஜம், மதுரைக்காரி

sk natarajan

unread,
May 25, 2012, 10:27:14 PM5/25/12
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, மின்தமிழ்
அருமையான பதிவிற்கு நன்றி

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/5/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Kannan

unread,
May 26, 2012, 8:18:47 AM5/26/12
to mint...@googlegroups.com
2012/5/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

> இந்த ஒப்பந்தத்தின் படியே மலையில் இருந்து இறங்கி
> வரும் அழகர், (சுந்தரராஜப் பெருமாள் என்ற பெயரும் இவருக்கு உண்டு.) கள்ளர்
> வேடத்தில் வருகிறார்.
>
> சங்கு, சக்கரத்தை விட முடியுமா? இல்லை கிரீடத்தைத் தான் விடமுடியுமா?  அவற்றோடு
> காட்சி தரும் கள்ளழகர், கள்ளர்களின் ஆயுதமான வளரித்தடி, கன்னம் இடும்  ஆயுதம்,
> சாட்டைக் கம்பு, காதுகளில் கள்ளர்கள் அணியும் கடுக்கன், கறுப்பு ஆடை, தலையில்
> கள்ளக் கொண்டை போட்டுக் கொண்டு தல்லாகுளம் கள்ளர்களின் தலைவராக கள்ளராகவே மாறி
> வருகிறார்.  கோயில் வாசலில் இருந்து வெளியே வரும் அழகர் அங்குள்ள
> பதினெட்டாம்படிக் கருப்பு சந்நிதியில் தங்குவார்.  அங்கு வைத்துக் கருப்பண்ண
> சாமியிடம் அழகரின் நகைகளின் கணக்குக் கூறப்படும்.

என் அப்பன் கள்ளன்தானே! :-) இதிலென்ன சந்தேகம்? உங்கள் அழகான பதில் ஒரு
திருவாய்மொழியை நினைவூட்டுகிறது:

வேண்டி சென்று ஓன்று பெருகிற் பாரில்
என்னுடைத் தோழியர் நும் கட்கு ஏலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ !
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைகின்றேனே 8-2-2

அவன் கள்ளனாயினும் அவன் கையிலுள்ள சங்கும், சக்கரமும்தான் அவர் பரந்தாமன்
என்று அடையாளம் காட்டுகின்றன :-)

வைணவம் அடிதட்டு மக்களோடு நிரம்ப ஊடாடியுள்ளது. துலுக்க நாச்சியார்
வைபவம் சொல்லுங்க!

க.>

Geetha Sambasivam

unread,
May 27, 2012, 11:45:14 AM5/27/12
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், மின்தமிழ்

இரண்டு செவிகளுக்கும் வயிரக் கடுக்கன்

                        இசையும்படி தானணிந்து

    கைதனிலே பாசிபந்து கரியாமால் வண்ணன்

                                 கணையாழி தானணிந்து

     இடுப்பிலே ஒட்டியாணம் என் அய்யனுக்கு

                                  இருபுறமும் பொன்சதங்கை

    காப்புக் கொலுசுமிட்டார் கரியமாலுக்கு

காலில் பாடகமிட்டார்

இவை தசாவதார வர்ணிப்பு என்னும் பாடல் தொகுப்பில் காணப்படுபவை.  பலராலும் பாடப்படும்.

கள்ளழகர் வேடமிட்டோரும் கருப்புசாமி வேடமிட்டோரும் ஆடும் ஆட்டம் மெய் சிலிர்க்க வைக்கும்.  முன்பெல்லாம் அழகருக்குத் தண்ணீர் பீய்ச்சுவது நிறையவே நடக்கும்.  தற்சமயம் அதைக் கட்டுப்படுத்தி இருப்பதாக அறிகிறோம்.  ஆனாலும் சில குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் பீய்ச்சுவது உண்டு. முதல் நாள்  மலையில் இருந்து இறங்கி வரும் அழகர் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக ஒவ்வொரு மண்டகப்படியாகத் தங்கிக் கொண்டு மறுநாள் அதிகாலையில் மூணு மாவடி என்னும் இடத்தில்  தன்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறார்.  மூணு மாவடியில் பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் சேவையையே எதிர்சேவை என்று சொல்லப் படுகிறது. அதன் பின்னர் அழகர் தல்லாகுளம் நோக்கிக் கிளம்புகிறார்.  அங்கும் ஒவ்வொரு மண்டகப் படியாகத் தங்கும் அழகர் அன்று மாலை அம்பலகார மண்டகப் படியில் தங்கிவிட்டுப் பின்னர் தல்லாகுளம் பெருமாள் கோயிலை அடைகிறார்.

தல்லாகுளம் வருதல்

145 குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற்
சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக்
கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்
ஏடலர் தாரான் எழுந்தருளி-ஆடலுடன்
கல்லா குளங்கள் கரையப் பணிவார்முன்

தல்லா குளம்வந்து சார்ந்தருளி-மெல்ல  

அங்கு அழகருக்குத் திருமஞ்சனம் நடக்கும்.  அதன் பின்னரே தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கத் தயாராய்க் கிளம்புகிறார். இப்போது தான் அழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் சூடிக் கொடுத்த மாலை சூட்டப்படும்.  அழகருக்கு அணிவிக்கப் படும் உடை தேர்ந்தெடுக்கப் படுவது அன்றைய தினம் வரை எவருக்குமே தெரியாது என்கின்றனர்.  இது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.  பட்டாசாரியார் கண்களை மூடிக் கொண்டு எடுப்பார் என ஒரு கருத்து உண்டு. பொதுவாகச் சிவப்பு, மஞ்சள் தவிரப் பச்சை நிறப் பட்டு என்றால் அந்த வருடம் சிறப்பாக இருக்கும் என்றும் வெள்ளை நிறம் எனில் பரவாயில்லை எனவும் சொல்லப் படும்.  சிவப்போ, மஞ்சளோ இருந்தால் அது நாட்டுக்கு ஆகாது என்கிறார்கள்.   அதே போல அழகர் ஆற்றில் இறங்கவும் நேரம் குறிக்கப் பட்டுச் சரியாக அந்த நேரத்திலேயே அழகர் ஆற்றில் இறங்குவார். 

    வையைக்கரைத் திருக்கண்களில் வைகுதல்

150

நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்று சிலர் பார்க்கச்-சுரலோகத்
திந்திரவி மானமிது என்றும் இதுசோமச்
சந்திரவி மானமே தானென்றும்-முந்தியவட்
டாங்க விமானம் அவையிரண்டும் என்னவே
தாங்கு விமானந் தனிற்புகுமுன்-தீங்கிலார்
உன்னி விமானம் உரத்தெடுக்கும் போதனந்தன்
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த - தென்னவே
உம்பரில் வெய்யோ னுதயஞ் செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி-அம்பரத்திற்
கோடி கதிரோனும் கோடி பனிமதியும்
ஓடி நிரையா உதித்தவென-நீடிய
160

பொற்கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்திலங்க
விற்கொடிகள் விண்ணோர் வெயர் துடைப்பச்-சொற்கத்
தியலுங் கரியுமதி லெற்று முரசும்
புயலும் உருமேறும் போலக் கயலினத்தை
அள்ளுந் திரைவையை யாறுட் பரந்துநர
வெள்ளங் கரைகடந்து மீதூர-வள்ளல்
திருத்தகு மேகம்போற் செல்லுதலால் நீர்தூம்
துருத்தி மழைபோற் சொரியக்-கருத்துடனே
வாட்டமற வந்து வரங்கேட்கும் அன்பருக்குக்
கேட்டவரம் ஊறுங் கிணறுபோல்-நாட்டமுடன்
காணிக்கை வாங்க அன்பர் கைகோடி யள்ளியிடும்
ஆணிப்பொற் கொப்பரைமுன் னாகவரக்-காணிற்
புரந்தரற்கு நேரிதென்று போற்றிசைப்ப வோரா
யிரந்திருக்கண் வையைநதி யெய்தி-உரந்தரித்த
    
அழகர் ஆற்றில் இறங்கும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்து அருளும் காட்சியே கண் கொள்ளா காட்சியாகும்.  மதுரையிலே மீனாக்ஷிக்குத் திருமணம் எனக் கேள்விப் பட்டு ஆயிரம் பொன் சப்பரம் தயார் செய்து கொண்டு தானும் சகல அலங்காரங்களோடும், ஆபரண அணிகளோடும், பரிவாரங்களோடும் கல்யாணத்தைக் காணப் புறப்படும் அழகர் ஆற்றின் அக்கரையில் இருக்கும் மதுரைக்குச் செல்வதற்காக ஆற்றில் இறங்குவதாயும், அங்கே வீரராகவப் பெருமாளால் மீனாக்ஷியின் திருமணம் நடைபெற்ற செய்தி கேட்டுக் கோபம் கொண்டு ஆற்றில் இறங்கியவர் எதிர்க்கரைக்குப் போகாமல் ஆற்றின் அந்தக் கரையோடேயே வண்டியூருக்குச் செல்வதாயும் ஐதீகம்.  இது செவிவழிக்கதை.  ஆதாரங்கள் ஏதும் இல்லை.  ஆனால் அழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளியிருக்கும் காட்சி அற்புதமான காட்சி.  ஆற்றில் எழுந்தருளியருளும் அழகரை மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர் கொண்டு அழைக்கிறார். இந்த வைபவம் அழகர் ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும் .இதனைக்காண இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவதும் கண் கொள்ளாக் காட்சியாகும். மதுரையில் இவ்விழாவே மிகப்பெரிய திருவிழா. வெயில், மழை என்று பாராமல் ஜனங்கள் பகலும் இரவும் ஒரு சிறிய இடத்தையும் விடாமல் நிறைத்துக் கொண்டு ஆற்றிலும் அதன் கரைகளிலும் மண்டபங்களிலும் கூடியிருப்பார்கள். பின்பு வைகையாற்றின் வழியாகவே நேராக வண்டியூர் போகிறார்.  மதுரையும் அதன் சுற்றுப் புறங்களிலும் திருவிழாக்கோலம் காணப்படுவதோடு ஒரு சொம்பில் நாட்டுச் சர்க்கரையை நிறைத்து, அல்லது தாம்பாளத்தில் நாட்டுச் சர்க்கரையை நிறைத்து அதன் மேலே சூடம் ஏற்றி அழகரை வழிபடுவார்கள்.

பிறந்து மூன்று மாதமே ஆன சின்னஞ்சிறு குழந்தையானாலும் அழகர் ஆற்றில் இறங்குகையில் அந்தக் குழந்தைக்கு மொட்டை போடுவார்கள்.  அவங்க குலதெய்வம் யாராக இருந்தாலும் அழகர் ஆற்றில் இறங்கும் சமயம் வீட்டில் பிறந்திருக்கும் புதிய குழந்தைக்கு மொட்டை போட்டே ஆகவேண்டும் என்பதை ஒரு ஐதீகமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.  வண்டியூருக்குச் செல்லும் அழகர் அங்கே துலுக்க நாச்சியார் இடத்தில் தங்குவதாய்ச் சொல்கின்றனர்.  இந்தத் துலுக்க நாச்சியாரையும் பெருமாளையும் பிரபலமான மூன்று கோயில்களில் இணைத்துப் பேசப் படுகிறது.  ஒன்று ஸ்ரீரங்கம் கோயில். அந்நியப் படையெடுப்பின் போது ரங்கநாதரைக் கோயிலில் இருந்து ஊர் ஊராக எடுத்துச் செல்கையில் அவர் டில்லி சுல்தான் மகளின் பாதுகாப்பில் சில காலம் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. ரங்கநாதரின் அழகில் சுல்தான் மகள் மயங்கிப் போய் ரங்கனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லியதாகவும், அவளைஅரங்கனார் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்கின்றனர். ஸ்ரீரங்கம் கோயிலில் துலுக்க நாச்சியார் சந்நிதி இன்றைக்கும் உள்ளது. லுங்கி கட்டிக் கொண்டு ரொட்டி நிவேதனத்தைப் பெருமாள் ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்கின்றனர்.

இன்னொரு விதத்தில் மேல்கோட்டைச் செல்லப்பிள்ளையிடம் சுல்தான் மகள் மயங்கி அங்கேயே ஐக்கியமாகி விட்டதாய்ச் சொல்கின்றனர்.  இங்கே அழகர் மலைக்கருகே வண்டியூரில் தயிர் விற்றுக் கொண்டிருந்த இஸ்லாமியப் பெண்ணுக்கு அழகர் மேல் காதல் எனவும் அழகர் அவளை மணந்து கொண்டதாகவும், ஆற்றில் இறங்காமல் கோவித்துக் கொண்டு போய் துலுக்கநாச்சியாரிடம் தங்குவதாயும் சொல்கின்றனர்.  ஆனால் அங்கே துலுக்க நாச்சியாரே இல்லை எனவும் சொல்கின்றனர்.

மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பி தேனூர் போய் மண்டூக மஹரிஷிக்கு மோக்ஷமளிக்கிறார் அழகர்.   நீரில் மூழ்கித் தவம் இருந்த மண்டூக மஹரிஷி துர்வாசர் வந்ததைக் கவனிக்காமல் இருந்த காரணத்தால் அவரால் தவளைப் பிறப்படையும்படி சபிக்கப் படுகிறார்.  பின்னர் பெருமாள் வந்து சித்ராபெளர்ணமிக்குப்பின்னர் சாப விமோசனம் கொடுப்பார் எனவும் துர்வாசர் கூறுகிறர்.  அதுதான் தேனூரில் வருடா வருடம் நடக்கும். பிறகு அன்றிரவு ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருளி தசாவதார சேவை சாதிக்கிறார். மறுநாள் காலை அழகர் மோகனாவதார சேவையருளி ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க சேவையுடன் புறப்பட்டு மைசூர் மண்டபத்தில் கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கு சேவை நடக்கும். மறுநாள் காலையில் ஸ்ரீ அழகர் அப்பன் திருப்பதிக்குச் சென்று திருமலையை அடைவார். மறுநாள் அவருக்கு அங்கு சாத்து முறை நடக்கும்       இந்த அழகர் திருவிழா மொத்தம் ஒன்பது நாட்கள் நடக்கும் அழகர் மதுரைக்குப் புறப்படும் முன்பே திருமலையில் அவருக்குத் திருவிழாக்கள் தொடங்கி விடும் அந்தத் திருவிழாவின் 4 - ஆம் நாள் மதுரைக்குப் புறப்படும் அழகர் ஒன்பதாம் நாள் மீண்டும் தம் மலைக்குத் திரும்பி விடுவார்.

ஆடி மாதம் வரை அழகர் மலைக்குள் போகாமல் வெளியே இருப்பார்.  அது குறித்துப் பின்னர் எழுதுகிறேன்.

பாடல்கள் உதவி: தமிழ் விர்ச்சுவல் பல்கலைக் கழகம். தசாவதார வர்ணிப்புப் பாடல் கூகிள் தேடலில் கிடைத்தது.  யார் எழுதியது எனத் தெரியவில்லை.  பல செய்திகளும் நினைவில் இருந்தே எழுதியவை என்பதால் தற்சமயம் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கலாம்.

Innamburan Innamburan

unread,
May 27, 2012, 3:35:29 PM5/27/12
to mint...@googlegroups.com

2012/5/26 N. Kannan <navan...@gmail.com>
2012/5/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
> இந்த ஒப்பந்தத்தின் படியே மலையில் இருந்து இறங்கி
> வரும் அழகர், (சுந்தரராஜப் பெருமாள் என்ற பெயரும் இவருக்கு உண்டு.) கள்ளர்
> வேடத்தில் வருகிறார்.
>பட்டாங்கில் இட்ட படி ஸெளந்தரராஜ பெருமாள்.

> சங்கு, சக்கரத்தை விட முடியுமா? இல்லை கிரீடத்தைத் தான் விடமுடியுமா?  அவற்றோடு
> காட்சி தரும் கள்ளழகர், கள்ளர்களின் ஆயுதமான வளரித்தடி, கன்னம் இடும்  ஆயுதம்,
> சாட்டைக் கம்பு, காதுகளில் கள்ளர்கள் அணியும் கடுக்கன், கறுப்பு ஆடை, தலையில்
> கள்ளக் கொண்டை போட்டுக் கொண்டு தல்லாகுளம் கள்ளர்களின் தலைவராக கள்ளராகவே மாறி
> வருகிறார்.  கோயில் வாசலில் இருந்து வெளியே வரும் அழகர் அங்குள்ள
> பதினெட்டாம்படிக் கருப்பு சந்நிதியில் தங்குவார்.  அங்கு வைத்துக் கருப்பண்ண
> சாமியிடம் அழகரின் நகைகளின் கணக்குக் கூறப்படும்.

என் அப்பன் கள்ளன்தானே! :-) இதிலென்ன சந்தேகம்? உங்கள் அழகான பதில் ஒரு
திருவாய்மொழியை நினைவூட்டுகிறது:

வேண்டி சென்று ஓன்று பெருகிற் பாரில்
என்னுடைத் தோழியர் நும் கட்கு ஏலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ !
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைகின்றேனே 8-2-2

அவன் கள்ளனாயினும் அவன் கையிலுள்ள சங்கும், சக்கரமும்தான் அவர் பரந்தாமன்
என்று அடையாளம் காட்டுகின்றன :-)

வைணவம் அடிதட்டு மக்களோடு நிரம்ப ஊடாடியுள்ளது. துலுக்க நாச்சியார்
வைபவம் சொல்லுங்க!

க.>

rajam

unread,
May 27, 2012, 12:58:38 PM5/27/12
to mint...@googlegroups.com, Geetha Sambasivam
அருமையான பதிவு, கீதா! பழைய மதுரைக்கால நினைவுகளைக் கிளறுகின்றன! நன்றி!

கி.காளைராசன்

unread,
May 27, 2012, 9:13:02 PM5/27/12
to mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல்
அம்மையார் கீதா அவர்களுக்கு வணக்கம்.

2012/5/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஆற்றிலும் அதன் கரைகளிலும் மண்டபங்களிலும் கூடியிருப்பார்கள். பின்பு வைகையாற்றின் வழியாகவே நேராக வண்டியூர் போகிறார்.  மதுரையும் அதன் சுற்றுப் புறங்களிலும் திருவிழாக்கோலம் காணப்படுவதோடு ஒரு சொம்பில் நாட்டுச் சர்க்கரையை நிறைத்து, அல்லது தாம்பாளத்தில் நாட்டுச் சர்க்கரையை நிறைத்து அதன் மேலே சூடம் ஏற்றி அழகரை வழிபடுவார்கள்.

 ஸ்ரீரங்கம் கோயிலில் துலுக்க நாச்சியார் சந்நிதி இன்றைக்கும் உள்ளது. லுங்கி கட்டிக் கொண்டு ரொட்டி நிவேதனத்தைப் பெருமாள் ஏற்றுக் கொள்வதாய்ச் சொல்கின்றனர்.

அரிய செய்திகள்.
நன்றி,
ஆடி மாதம் வரை அழகர் மலைக்குள் போகாமல் வெளியே இருப்பார்.  அது குறித்துப் பின்னர் எழுதுகிறேன்.

 அன்புடன் விரைவில் எழுத வேண்டுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

sk natarajan

unread,
May 27, 2012, 9:18:46 PM5/27/12
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், மின்தமிழ்
அருமையான  , விரிவான பதிவு
வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/5/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கி.காளைராசன்

unread,
May 27, 2012, 9:38:07 PM5/27/12
to mint...@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/5/28 Innamburan Innamburan <innam...@gmail.com>

2012/5/26 N. Kannan <navan...@gmail.com>
2012/5/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
> இந்த ஒப்பந்தத்தின் படியே மலையில் இருந்து இறங்கி
> வரும் அழகர், (சுந்தரராஜப் பெருமாள் என்ற பெயரும் இவருக்கு உண்டு.) கள்ளர்
> வேடத்தில் வருகிறார்.
>பட்டாங்கில் இட்ட படி ஸெளந்தரராஜ பெருமாள்.

1965இல் தேவஸ்தானத்தால் வெளியிடப்பெற்ற
ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு என்ற புத்தகத்தில் உள்ளபடி
‘சுந்தரராஜப் பெருமாள்‘.

Subashini Tremmel

unread,
May 28, 2012, 3:12:32 AM5/28/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அழகர் திருவிழா பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகின்றது. மதுரைக்காரர் நீங்களே இப்பதிவைத் தருவதால் கூடுதல் சுவை தெரிகின்றது.

சுபா

2012/5/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
C.M உதயன்

unread,
May 29, 2012, 2:50:06 AM5/29/12
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, மின்தமிழ்

நன்றி அம்மா
 2010 சித்திரை திருவிழாவில் அழகர்
நீங்கள் முடித்த பின்னர் எனக்கு கேட்டு தெரிந்ததை நான் எழுதுகிறேன்
Inline image 1

2012/5/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Geetha Sambasivam

unread,
May 29, 2012, 2:54:54 AM5/29/12
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, மின்தமிழ்
எழுதுங்க உதயன்.  இப்போ அடுத்து நான் வேறு சில பதிவுகளைக் கவனிக்கணும்.  அதனால் மதுரை மீனாக்ஷி சித்திரைத் திருவிழா பற்றி எழுதக் கொஞ்ச நாட்கள் ஆகும். ஆகவே அழகர் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

2012/5/29 C.M உதயன் <udhay...@gmail.com>

நன்றி அம்மா
 2010 சித்திரை திருவிழாவில் அழகர்
நீங்கள் முடித்த பின்னர் எனக்கு கேட்டு தெரிந்ததை நான் எழுதுகிறேன்
Inline image 1

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

-- 

தமிழ்ப் பயணி

unread,
May 29, 2012, 4:43:31 AM5/29/12
to tamizhs...@googlegroups.com, மின்தமிழ்
உதயன் ​வெகு அரு​மையான ஒளிபடம். மிக்க நன்றி.

அழகர் திரு​மேனியில் மலர்மா​லையின்றி குதி​ரையில் இருப்பது ​போன்ற காட்சி ஏதும் உண்டா?
இங்கு பகிரபட்டுள்ளதில் புஜங்கள் மற்றும் உ​டைக​ளை மலர் அலங்காரம் ம​​றைத்து ​கொண்டுள்ளது.

2012/5/29 C.M உதயன் <udhay...@gmail.com>

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

The Gods Must Be Crazy – 1,2

N. Kannan

unread,
May 29, 2012, 4:50:22 AM5/29/12
to mint...@googlegroups.com
எப்படி உதயன் இப்படியொரு ஷாட்!?
நம்பமுடியவில்லை!
நீங்களொரு தனிக்கலைஞன்!

க.

2012/5/29 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 29, 2012, 4:51:02 AM5/29/12
to tamizhs...@googlegroups.com, மின்தமிழ்
அது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாக்கும்;  அதை அணிந்து கொண்டு தான் ஆற்றிலே இறங்கவே போவார் அழகர். இந்தப் பட்டுக் கூட அங்கிருந்து தான் வருதுனு எங்கேயோ குறிப்பு எடுத்து  வைச்சேன்.  தேடறேன். கிடைக்கலை. :(((

2012/5/29 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
உதயன் ​வெகு அரு​மையான ஒளிபடம். மிக்க நன்றி.

அழகர் திரு​மேனியில் மலர்மா​லையின்றி குதி​ரையில் இருப்பது ​போன்ற காட்சி ஏதும் உண்டா?
இங்கு பகிரபட்டுள்ளதில் புஜங்கள் மற்றும் உ​டைக​ளை மலர் அலங்காரம் ம​​றைத்து ​கொண்டுள்ளது.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

C.M உதயன்

unread,
May 29, 2012, 6:01:37 AM5/29/12
to mint...@googlegroups.com
நன்றி அய்யா

அழகர் ஆற்றில் இறங்கியபின் வண்டியூர்க்கு செல்ல ஆழ்வார்புரம் வழியாக செல்லும் வழியில் ராமராயர் கல்யாணமண்டபம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த படம் எடுத்தேன். 

லென்ஸ் கொஞ்சம் ஒசத்தியானது நல்ல போக்கே கிடைக்கும் (போக்கே பேக்ரவுண்ட் எபக்ட்)
அழகரை தவிர்த்து கொஞ்சம் பேக்ரவுண்ட்டை மட்டும் போட்டோஷாப்பில் லைட்ட டச்சப் செய்தேன்.

2012/5/29 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

C.M உதயன்

unread,
May 29, 2012, 6:04:27 AM5/29/12
to mint...@googlegroups.com
மதுரை மண்ணின் மைந்தர்கள் எவ்வள்வுபேர் குழுமத்தில் உள்ளார்கள் அவர்களும் அழகர் திருவிழா பற்றி எழதலாமே.

rajam

unread,
May 29, 2012, 11:58:14 PM5/29/12
to mint...@googlegroups.com, "C.M உதயன்"
ஓ, இவர்தான் பரிமேல் அழகரா? ரொம்ப அழகாய் இருக்கார்! எனக்கு இந்தத் திருவிழாக் கூட்டத்துக்குப் போக அனுமதி இருந்ததேயில்லை. அதனால் இப்படிப் பார்த்ததே இல்லை. 
மிக மிக அருஅமையான படம், உதயன்! நல்ல கோணம், நல்ல வண்ணம் ( மைனஸ் ஃபோட்டோஷாப் வேலை!) 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages