நவ(ராத்திரி) ரதம்!

523 views
Skip to first unread message

shylaja

unread,
Sep 23, 2014, 8:03:04 AM9/23/14
to mintamil, vallamai
  நவ் என்றால் ஹிந்தியில்  ஒன்பது..
 
.நவராத்திரி! இதை சுத்ததமிழில்  தமிழர்கள், ஒன்பது இரவுகள் என்றுதான்  சொல்லிக் கொண்டாட வேண்டும். !  ஆனால் பலகாலமாய்  நவராத்திரி என்றே  வழக்கத்தில் வந்திருக்கிறது.

 நவராத்திரிபற்றி  திருப்பாவை நாயகி ஏதும்  கூறியதாக விவரம் இல்லை.அவள்தான் காத்யாயினி நோன்பு இருந்தவள். ஆழ்வார்கள்- ஓரளவு வாசித்தவரை. நவராத்திரிபண்டிகைபற்றி சொன்னதாக  தெரியவில்லை. 

பெரியாழ்வாராவது திருவோணத்திருவிழ(விழா இல்லை  விழதான் கால்கிடையாது):) என்றார்.  ஓணம் பேறு பெற்றுள்ளது. 

 நவராத்திரி ஒன்றல்ல இரண்டல்ல ஒன்பதுநாட்கள் கொண்டாடப்படும் பெரிய பண்டிகையாக இருக்கிறது. .

நவகிரஹங்கள் நவரத்தினம் (இன்னும் நவ  என ஆரம்பிப்பவை பட்டியல் இருக்குமே) என ஒன்பதாம் எண்ணுக்குத்தான் எத்தனை சிறப்புகள்!

நம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர். எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது  இந்த சொல்லின் பெயர். மற்ற எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின் பெருக்கலினால் கிடைக்கும் எண்களை மேலும் கீழுமாய் வைத்துக்கூட்டினால் ஒன்பது என்னும் மூலாதார எண் வந்துவிடும்.அதனால் நவ் எனும் ஒன்பதிற்கு சிறப்பு அதிகம் என்று தெரிகிறது.

திரு.கிவாஜ  அவர்கள் ஒருமேடையில் இப்படிப்பேசினார்
 
ஒருநாட்டிற்கு பெருமைவாய்ந்த விஷயம் அதன் கலைச்செல்வம்தான். ஆனால் ஒருநாட்டில் கலை மலர்ச்சி வரவேண்டுமானால் அங்கே முதலில் தொழில் வளர்ச்சி மலியவேண்டும் ஆயிரம் தொழிலாளர்கள் கொண்ட சமுதாயத்தில் அவர்களின் தொழில்முயற்சியால் பெற்ற நிலத்தில் ஒருகலைஞன் பிறப்பான்.

 ஒருமரத்திற்குப்பெருமை அதன் மலரினால்தான் என்றாலும் வேரும் கிளையும் ஆதாரமாக இருந்தாலும் புகழைப்பெறுவது மலரே ஆனால அந்தமலருக்குப்பொலிவும் மணமும் எப்படி  வந்தன? வேரின் செம்மையாலும் கிளையின் வளப்பத்தாலும்தான். அதுபோல தொழில் என்பது வேர்போல, கலை என்பது மலர்போல.  நாட்டில் தொழில் பெருகவேண்டும், தொழில் செல்வம்தரும், கலை இன்பத்தைதரும் .தொழில்  ஊக்கதைத்தரும் கலை அமைதியை ஊட்டும்  .தொழிலும்கலையும் வளரவேண்டும் 

. இதையே பாரதியார்,
 காவியம் செய்வோம் பல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்லருலை வளர்ப்போம்.
ஓவியம் செய்வோம், நல்ல ஊசிகள் செய்வோம்,
உலகத்தொழிலனைத்தும் உவந்தே செய்வோம்
 
தொழிலுக்கும் கலைக்கும் செல்வத்திற்கும்  தெய்வமாகிய   முப்பெருந்தேவிகளை இந்த ஒன்பதுநாட்களில் சிறப்பாக் போற்றிவணங்குகிறோம்
 
செய்யும் தொழிலே தெய்வம்.அதில் திறமைதான்
 நமது செல்வம் !
 
கைவருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம் என்கிறார் பாரதி
 
அரும்பும் வேர்வை உதித்துப்புவிமேல்
ஆயிரந்தொழில் செய்திடுவீரே என்கிறார்.

சரஸ்வதிபூஜையன்று கலைஞர்களை,கலைமகளை  வழிபடுகிறார்கள் அடுத்தநாளை ஆயுதபூஜை என்று தொழிலாளிகள் கொண்டாடுகிறார்கள்
 
தொழில் நிரம்பியும் கலை இல்லாவிடில் மலர் இல்லா மரமாகும் ஒருநாடு.
 
 ஆகவே தொழிலும்  தொழிலின்பயனும் கலையின் இன்பமும் ஒருங்கே கிடைக்க  இந்த நவராத்திரிநாட்களில் நாம் வழிபடுவதே நவராத்திரி வணக்கம் ஆகும்.

 இயந்திரமயமான வாழ்க்கையில்  இதுபோன்ற பண்டிகைகள் மனிதர்கள் பரஸ்பரம் சந்தித்துக்கொள்ளவும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளவும் காரணமாகிறது.  அடுத்தவீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் தொலைக்காட்சி  இணையம் என்று மூழ்கிக்கிடக்கும் மனிதமனங்களுக்கு  பண்டிகை நாட்களில் பல முகங்களை சந்திப்பதில் கண்டிப்பாக ஒரு புத்துணர்வு கிடைப்பதை மறுக்க இயலாது.  மேலும் நவராத்திரி  பெண்களுக்கான  பிரத்தியேகப்பண்டிகையாக ஆகிறது. தங்களின் சகலதிறமைகளையும் வெளிப்படுத்த உதவுகிறது ! கோவில்களும்  கொண்டாடுகின்றனநவராத்திரியை

.பாரததேசம்  பண்பாடுகளின் கலவையாக உள்ளது. இலக்கியம் கலை மொழி உணவு  என மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும் அனைவரையும் ஒன்றாக இணைப்பது  பண்டிகைகளில் நடக்கும் கலைவிழாக்கள்தான்.

ஆண்டுதோறும்  மைசூர் தசராவில் இந்திய பாரம்பரியம்,கலாசாரத்தை பிரதிபலிக்கும் விழாவைப்பார்வையிட உலகமெங்கிலிருந்தும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். இயல் இசை கூத்து என விழா பத்து நாட்களும் மைசூரைக்கலக்கும். இந்த ஆண்டு இந்தவிழாவை ஆரம்பித்து வைக்கும் பெருமை ஞானப்பீடப்பரிசுபெற்ற கிரிஷ் கர்னாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலாசார சிறப்பு பெற்ற விழாவிற்கெல்லாம் கர்னாடக அரசு எழுத்தாளர்களை அழைத்து தொடங்கி வைக்கச்சொல்லி கௌரவப்படுத்தும்..

மஹாளய அமாவாசையான இந்த நிறைந்த நாளில் ,ரதம் அலங்கரிக்கத்தயாராகிறது,,25ம்தேதிமுதல்  நவராத்திரி ஆரம்பமாகிறது..

நவ ராத்திரி  பற்றிய   சுவாரஸ்யமான விவரங்கள் கவிதைகள் நிகழ்வுகள் நம் அனைவராலும்  இனிவரும் நாட்களில் ரதம் ஏறி உலா வரப்போகிறது!  அனைவரும் வாருங்கள் வடம் பிடிக்க!

அன்புடன்
ஷைலஜா.

தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

அபிராமி அந்தாதி.

Tthamizth Tthenee

unread,
Sep 23, 2014, 8:43:20 AM9/23/14
to vall...@googlegroups.com, mintamil

                                                பல காலமாய்  நவராத்திரி  என்று அழைத்ததை   ஒன்பது ராத்திரிகள் என்று  அழைத்தால்  ஏதோ திகில் படத் தலைப்பு போலத்  தோன்றுகிறது

ஆகவே  சிலவற்றை தமிழ் படுத்துகிறேன்  என்று சொல்லி  தமிழையும் நம்மையும்  படுத்தவேண்டாம் :)

  நவராத்திரி கொலு 

வல்லமை மின் இதழில் நவராத்திரி கொலுவைப் பற்றி        http://www.vallamai.com/archives/8688/    

எங்கள் வீட்டில் வைத்த நவராத்திரி கொலு காணொளியைக் காண

சொடுக்குங்கள் :     https://www.youtube.com/watch?v=22s-1xG6PQc  

 2012 ஆம் ஆண்டு   நவராத்திரி கொலு வைக் காண   https://www.youtube.com/watch?v=LFy1Auzg2Xc

எங்கள் வீட்டிற்கு வந்திருந்த உறவுக்காரரின் பெண் நடனாமாடுவாள் அதனால்  அந்தப் பெண்ணை நடனமாடவிட்டு அதைக் காணொளியாக ஆக்கினேன், அந்தக் காணொளியைக் காண:           https://www.youtube.com/watch?v=5tDt8t8oxn0

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆன்மீகத்தை நம்புகிறவர்கள் இயற்கையாகவே சக்தியை நம்புகிறவர்கள். அவர்கள் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்திதான் நம்மைக் காப்பாற்றுகிறது என்று நம்புவார்கள்அந்த நம்பிக்கையை ஒட்டி  அவர்கள் சக்தி பூஜை செய்வது தொன்றுதொட்டு வழக்கமாக உள்ளது.

அவ்வகை வழிபாடுகளில் முக்கியமான வழிபாடு நவராத்திரி  என்னும் நவசக்தி வழிபாடு.இந்த கலைநயம் மிக்க வழிபாடு பெரியவர்கள் முதல் சின்னஞ்சிறார்கள் வரை மிகவும் பிடித்தமான வழிபாடு .

இந்த நாட்களில் ப்ரம்ஹிமகேஸ்வரிகௌமாரிமஹாலக்ஷ்மி வைஷ்ணவி,இந்திராணிநரசிம்ஹி,சாமுண்டிசரஸ்வதிஎன்னும் ஒன்பது விதமான கோலங்களில் முக்கிய சக்தியாகிய அம்பிகையை  வழிபடுவது வழக்கம்.

இந்த நவராத்திரி  விழாவில் மிக முக்கியமாக  சரஸ்வதிலக்ஷ்மிபார்வதி என்னும் முப்பெருந்தேவியர்களை வணங்கி வழிபட்டால்  அனைத்து நலமும் உண்டாகும்  என்பது ஐதீகம்.

நம்முடைய இதிகாச புராணங்களில் கூறப்படுவது போல ஶ்ரீராமரே  அம்பிகையை வழிபட்டு ராவணனை வென்றார். முப்பது முக்கோடி தேவர்களும்மானுடரும் அம்பிகையை வழிபட்டே  சக்தி பெற்று வாழ்வில் வெற்றி பெறுகின்றனர்.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்னும் சொல்வழக்குக்கு ஒப்ப மூலாதாரம் சக்திதானே. அவளை பலரூபங்களில் வழிபட மிகவும் தோதான நாட்களாக இந்த நவராத்திரி வைபவம் விளங்குகிறது.ஒவ்வொரு வடிவத்துக்கும் அல்லது ஒவ்வொரு சக்திக்கும் ஏற்ற வழிபாட்டு முறைகள். தியானஸ்லோகங்கள் உள்ளன.

இந்த நவராத்திரி விழாவை நாம் கொண்டாட என்னென்ன தேவைஆதி முதற்கொண்டு எப்படியெல்லாம் சிறப்பாக இந்த விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள் நம் முன்னோர் என்பதை  கவனித்தால். பல அபூர்வ செய்திகள் நமக்குக் கிடைக்கும்.

இவை போன்ற விழாக்களின் மூலமாக. நம் வீட்டின்நம் குடும்பத்தின்நம் உறவுகளின்,  முன்னேற்றத்தையும்அதன் மூலமாக நாட்டின் முன்னேற்றத்தையும் எப்படி இரண்டறக் கலந்தனர் நம் முன்னோர்கள் .

நம் முன்னோர்கள்  ஏற்படுத்திய அனைத்து  நல் வழக்கங்களும்பண்டிகைகளும்,விழாக்களும்,  நடைமுறைகளும்  நமக்கும் நம் நாட்டிற்கும் நன்மை பயப்பனவாகவே  உள்ளது.   இந்த நவராத்திரி விழாவின் போது புரட்டாசி மாதம் அமாவாசை தினத்தன்று வினாயகரையும் தமது முன்னோர்களையும் வழி[பட்டு நவராத்திரி கொலு வைக்க தொடங்குவார்கள். அதற்கு முன்னேற்பாடாக  பரணையில் பத்திரமாக வைத்திருக்கும் பலவிதமான பொம்மைகளை  எடுத்து நன்றாகத் துடைத்து பளபளக்கவைத்து ஒன்பது படிகள் வைத்து  அந்தப் படிகள் மேல் வெள்ளைத் துணியை விரித்து அழகுபடுத்தி அந்த ஒன்பது படிகளிலும்  மேலிருக்கும் ஒன்பதாவது படியில் மிக முக்கியமான இறைவன் சக்திகள் போன்றோரின் பொம்மைகளை  வைப்பார்கள்,மையமாக ஒவ்வொரு படியிலும் வினாயகரின் உருவ பொம்மைகளை வைத்து அவரைச் சுற்றி மற்ற பொம்மைகள் இருக்குமாறு அடுக்கி வைப்பர்.

மீதமிருக்கும் பொம்மைகளை   அவரவர் ரசனைக்கேற்ப மற்ற படிகளிமல் வைத்து அலங்காரம் செய்து வைப்பார்கள்.  இந்த கொலுப்படிகளின் பக்கத்திலேயே அவர்களுக்கு இருக்கும் இடத்துக்கேற்ப  சிறு கோயில் அந்தக் கோயிலின் அருகே குளம் போன்றவைகளை வைத்து மேலும் அழகு படுத்துவார்கள். இவைகளைத் தவிர நீர் நிலைகள் போன்று வடிவமைத்து  அவைகளில் வாத்துகொக்குமீன்கள்,போன்றவைகளை வைத்து அழகுபடுத்துவார்கள்.

ஜொலிக்கும் விளக்குகளை எரியவிட்டுஅடுக்கு விளக்குகளால் அலங்கரித்துமாலைகள் போட்டுஎன்னதான் அலங்காரம் செய்தாலும் நம் பாரம்பரியமான குத்துவிளக்கில் ஐந்து முகங்களிலும் திரிகள் போட்டுஅவற்றை ஏற்றிகொலுப்படிகளின் முன்னால் அழகிய கோலங்கள் வரைந்து அந்தக் கோலத்தின் நடுவே குத்துவிளக்கை வைத்து.

அந்தக் குத்து விளக்கின் முன்னால்  தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்குமஞ்சள்,குங்குமச் சிமிழ்வாழைப்பழம்தேங்காய் போன்றவைகளை வைத்து,  அந்தத் தட்டின் பக்கவாட்டில்  நிவேதனமாகப் படைக்கும் சுவைமிக்க இனிப்பு வகைகளையும்,உணவுப் பொருட்களையும் வைத்து

ஒன்து நாளும் விதம் விதமான உணவு வகைகளை ,பழங்களைவைத்து  எல்லா தெய்வங்களுக்கும் படைத்துவழிபடுவார்கள்.

அந்தக் கொலுப் படியின் முன்னால் கம்பளங்களை விரித்து வரும் மக்கள் உட்கார வசதிகள் செய்து கொடுப்பார்கள்.சின்னஞ்சிறார்கள்  கிருஷ்ணன் போலவும் ராதை போலவும்சிவன் போலவும்,சக்தி போலவும் பலவிதமான வேடங்களைத் தரித்து வந்து உட்கார்ந்து இறை தொடர்பான பாடல்களைஸ்லோகங்களை இனிமையான சாரீரத்துடன்  பாடி ஸ்தோத்திரங்கள் கூறி மகிழ்வார்கள்.

அப்படி வருபவர்களுக்கு பெரியவர்கள் சிறியவர்கள் உட்பட  அனைவருக்கும் ஒவ்வொரு பரிசுப் பொருட்களும்பெரியவர்களாயின் புடவைகள்ரவிக்கைத் துண்டுகள் எல்லாம் வைத்து வெற்றிலை பாக்கு ஞ்சள் உட்பட வைத்து தாம்பூலம் அளித்து மகிழ்வார்கள்.

ஆகவே  இந்த நவராத்திரி விழாவில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளும்,இந்த நவராத்திரி விழாவை நாம் கொண்டாடுவதால் எப்படிப்பட்ட பயன்கள் கிடைக்கின்றன என்பதையும் சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.   நாம் பக்தியுடன் இந்த சக்தி பூஜையை செய்வசதனால்  யார்யாரெல்லாம் பயன் பெறுகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

இவற்றில் மிக முக்கியமாக நம் நாட்டின் பண்பாடு,கலாச்சாரம் ஆகியவற்றை விளக்கும் விதமாகநம் வேதங்கள்இதிகாச புராணங்களில் நடைபெற்ற காட்சிகளை மனதில் கொண்டு அவற்றிர்க்கேற்ற பொம்மைகளை செய்து அந்தக் காட்சிகளை விளக்கும் வண்ணம் உதாரணமாக ராமர் சீதா லக்‌ஷ்மணர் அவர்களுக்கு சேவை செய்யும் முகமாக பக்தியுடன் ஆஞ்சனேயர் போன்ற பொம்மைகள்  கிருஷ்ணன் கோபிகாஸ்த்ரீகளுடன் ஜலக்ரீடை செய்வது போன்று  பரமாத்மா ஜீவாத்மா தத்துவத்தை போதிக்கும்   காட்சியை விளக்கும் வண்ணமாக பொம்மைகள் போன்றவற்றை வைத்து  நம் வருங்கால சந்ததிகளுக்கு நம் புராதன தத்துவங்களை,நற்குணங்களை விளக்கும் வண்ணமமைப்பது போன்ற பழக்கவழக்கங்களை ஏற்படுத்திய நம் முன்னோர்களின்   திட சிந்தனைதீர்க்கதரிசனம் நம்மை வியக்க வைக்கிறது.

நாம் இவ்வாறு பண்டிகைகளை கொண்டாடுவதன் மூலமாக பொம்மைத் தொழில் செய்வோர் பலனடைகின்றனர்பொம்மைகளுக்கு வர்ணம் அடிக்க அவர்கள் வாங்கும் வர்ணங்களை விற்போர் பலனடைகின்றனர். மற்றும் வாழைப்பழம்வெற்றிலைபாக்கு,புஷ்பங்கள்மஞ்சள் ,  புதியவகைத் துணிகள் விற்போர் பயனடைகின்றனர். ஆபரணங்கள்துணிமணிகள்மளிகைப் பொருட்கள்ஆகிய எல்லாமே  விற்பனை அதிகரிக்கிறது.  நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியே வியாபாரம் பெருகுவதால்தானே உயர்கிறது.  இப்படி நாட்டின் வளர்ச்சியையும்மக்களின்  ஒற்றுமை,சகோதரத்வம்,போன்ற  நற்குணங்களை வளர்க்கவும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும்  இவை போன்ற பண்டிகைகளை நாம் அவசியம் கொண்டாடவேண்டும்.

பக்தி வளர்கிறதுபண்பாடு வளர்கிறதுகலைகள் வளர்கின்றன,   இப்படி பக்தி செலுத்த நவராத்திரி நன்னாட்களில்  ஒவ்வொரு  சக்திக்கும் ஏற்ப ஸ்லோகங்கள் உண்டு  அவைகளை மனப்பூர்வமாக உச்சரித்து ,பாடிஆடி மகிழ்ந்து நம் அன்றாட கவலைகளுக்கு விடுதலை கொடுத்து நம்முடைய ஊக்கங்களையும் ,உற்சாகத்தையும்  பெருக்குவோம்.

  ஶ்ரீ முக்கூர் ஶ்ரீனிவாச வரதாச்சாரியார் ஸ்வாமிகள் அவர்களால் இயற்றப்பட்ட  ஶ்ரீ அஷ்டலக்‌ஷ்மி ஸ்தோத்திரத்தை இணைக்கிறேன்.

1.  ஆதிலக்‌ஷ்மி ஸ்தோத்திரம்

ஸுமநஸ வந்தித ஸுந்தரி மாதவி

சந்த்ர ஸஹோதரி ஹேமமயே

முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயிநி

மஞ்ஜுள பாஷிணி வேதநுதே

பங்கஜ வாஸிநி தேவஸு பூஜித

ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

ஆதி லக்ஷ்மி ஸதா பாலயமாம்.

---------------------------------------------------------

2.  தான்யலக்ஷ்மி

அயிகலி கல்மஷ நாசிநி காமிநி

வைதிக ரூபிணி வேதமயே

க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி

மந்த்ர நிவாஸிநி மந்த்ர நுதே

மங்கள தாயிநி அம்புஜ வாஸிநி

தேவ கணாச்ரித பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

--------------------------------------------------------------

3. தைர்யலக்ஷ்மி

ஜயவர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி

மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே

ஸுரகண பூஜித சீக்ரபலப்ரத

ஜ்ஞான விகாசிநி சாஸ்த்ரநுதே

பவபய ஹாரிணிபாப விமோசநி

ஸாது ஜநாச்ரித பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

தைர்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

---------------------------------------------------------

4. கஜலக்ஷ்மி

ஜய ஜய துர்ஸுதிநாஸினி காமிநி

ஸர்வபல ப்ரத சாஸ்த்ரமயே

ரதகஜ துரக பதாதி ஸ்மாவ்ருத

பரிஜன  மண்டித லோகநுதே

ஹரிஹர ப்ரும்மஸு பூஜித ஸேவித

தாப நிவாரணி பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

கஜலக்ஷ்மி  ரூபேண பாலயமாம்

-------------------------------------------------------

5. ஸந்தானலக்ஷ்மி

அயிகக வாஹிநி மோஹிநி சக்ரிணி

ராக விவர்த்திநி ஜ்ஞானமயே

குணகண வாரிதி லோக ஹிதைஷிணி

ஸ்வரசப்த பூஷித கானநுதே

ஸகல ஸுராஸுர தேவ முநீச்வர

மாநவ வந்தித பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

ஸந்தானலக்ஷ்மி து பாலயமாம்

-----------------------------------------------------------

6. விஜயலக்ஷ்மி

ஜய கமலாஸநி  ஸத்கதி தாயிநி

ஜ்ஞான விகாஸிநி கானமயே

அனுதின மர்ச்சித குங்கும தூஸர

பூஷித வாஸித வாத்யநுதே

கனகதாரா ஸ்துதிவைபவ வந்தித

சங்கர தேசிக மான்ய பதே

ஜய ஜய ஹே மதுஸூதந காமிநி

விஜயலக்ஷ்மி ஸதா பாலயமாம்

--------------------------------------------------------

7.  வித்யாலக்ஷ்மி

ப்ரணத சுரேச்வரி பாரதி பார்கவி

சோக விநாசிநி ரத்னமயே

மணிமய பூஷித கர்ண விபூஷண

சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே

நவநிதி தாயிநி கலிமலஹாரிணி

காமித பலப்ரத ஹஸ்தயுதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி

வித்யாலக்ஷ்மி  ஸதா பாலயமாம்

-------------------------------------------------------------

8.  தனலக்ஷ்மி

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி

துந்துபி நாத ஸுபூர்ணமயே

குமகும குங்கும குங்கும குங்கும

சங்க நிநாத ஸுவாத்யநுதே

வேத புராணே திஹாஸ ஸுபூஜித

வைதிக மார்க ப்ரதர்ஸயுதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமிநி

தனலக்‌ஷ்மி ரூபேண பாலயமாம்

----------------------------------------------------------------

மேற்கண்ட ஸ்லோகங்களை பக்தியுடன் கூறி இறைவன் , சக்தி  ஆகிய தெய்வங்களுக்கும்  நமக்கு கல்வி அறிவு அளிக்கும் புத்தகங்களுக்கு  விதமாக நன்றி காட்டும் விதமாக எட்டாம் நாள் ஸரஸ்வதி பூஜையையும், ஒன்பதாம் நாள்  ஆயுத பூஜையையும் செய்து

நவராத்திரி கடைசீ நாளன்று  லலிதா ஸஹஸ்ரநாமம் கூறி

நம் மனதை அமைதியாக வைத்துக்கொண்டு  மங்களமாய் நவராத்திரி பூஜையை முடித்து  அடுத்து  தீபாவளிப் பண்டிகையை எதிர் நோக்கி காத்திருப்போம்.

அன்புடன்

தமிழ்த்தேனீ

9840884088

                                                        சுபம்

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 23, 2014, 9:11:45 AM9/23/14
to வல்லமை, mintamil

அம்பிகையின் கருணையால் ரதம் வெற்றிகரமாக வலம் வர பிரார்த்திக்கிறேன்....அக்காவுக்கும், வடம் பிடித்து அழைத்துச் செல்ல விழையும் நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

 நவராத்திரிக்கு முதன்முதலில் கொலு வைக்க விரும்பும் அன்பர்களுக்காக..

கொலு வைக்கும் முறை:

 முதன் முதலாக, கொலுவைத்து வழிபட நினைப்பவர்கள், இல்லத்துப் பெரியோர்களின் ஒப்புதலைப் பெறுவது முக்கியம். பிறகு, ஒரு செட் மரப்பாச்சி பொம்மை, விநாயகர், முப்பெருந்தேவியர் பொம்மைகள் முதலியவை வாங்கி, அவற்றை ஏதேனும் ஒரு கோவிலில், ஸ்வாமி பாதத்தில் வைத்துத் தரச் சொல்லி,   பின், எடுத்து வந்து வீட்டில் கொலுவாக வைக்கலாம். குறைந்தது மூன்று படிகள் வைப்பது வழக்கம்.  ஒன்பது படிகள் வைப்பது சிறப்பு.

முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும்.  சுத்தமே தனி அழகு தான். ஹாலில், பத்திரிகைகள் இறையாமல், சாமன்களை அழகாக அடுக்கி வைத்தாலே பாதி அழகு வந்துவிடும். சுவர்கள், சுத்தமாக இல்லையென்றால், ஒரு பழைய பட்டுப் புடவையையோ, அல்லது அழகான போஸ்டரையோ பின்னணியில் வைத்து, படிகளை வைக்கலாம். பொம்மைகள் அதிகமில்லையென்றால் கூட, இருக்கும் பொம்மைகளை, அழகாக அடுக்கி, சீரியல் பல்புகள், தோரணங்கள் மூலம் அலங்கரித்தால் ஒரு 'கிராண்ட் லுக்' கிடைத்துவிடும். அழகான கோலங்கள், கொலுவை அற்புதமாக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் அன்பான வரவேற்பும், இன்முகத்தோடு கூடிய உபசரிப்பும் தரும் அழகுக்கு ஈடு இணையே இல்லை. 
கொலு கிழக்கு, மேற்காக அமைந்திருப்பின் சிறப்பு. வடக்குப் பார்த்தும் வைக்கலாம். ஹாலில் படிக்கட்டி வைக்க சௌகர்யப்படாவிட்டால், ஒரு அலமாரியைச் சுத்தப்படுத்தி, பொம்மைகளை வைக்கலாம். கொலுவின் முன் கோலமிடும் அளவுக்கு இடவசதி அவசியம்.

மஹாளய அமாவாசையன்றே, கொலு வைப்பது வழக்கம்.

கொலு வைக்கும் முன், படிகளில்  ஒரு சின்னக் கோலம் போட்டு பின், அதன் மேல் விரிப்புகளை விரித்து  கொலு வைக்க வேண்டும்.  இருபக்கமும் பார்டர்கள் இருக்கும் புடவைகளை  விரித்தால், பார்டர் கரை கட்டினாற் போல் வந்து பார்வைக்கு அழகாக இருக்கும்.

முதலில், மரப்பாச்சி பொம்மைகளைத் தான் வைக்க வேண்டும். கலசம் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள், முதலில், கலசத்தைத் தயார் செய்து, பூஜை அறையில் வைத்து, பின் கொலுப்படியில், தனியாக இடம் செய்து வைக்கலாம். தினம் பூ மாலை சாற்ற வேண்டும், பூஜிக்க வேண்டும் என்பதால், கொலுவின் கீழ் படியில்,  தனியாக பீடம் மாதிரி அமைத்து அதன் மீது கலசத்தை வைத்து, இரு புறமும் விளக்கேற்றி வைப்பது சிறப்பு. நீர்க் கலசம் என்றால் மிக ஆசாரமுடன் பூஜிக்க வேண்டியது அவசியம். அரிசி கலசம் வைப்பது இன்றைய சூழலில் சிறந்தது.கலசத்திற்கு அம்மன் முகம் மாட்டி, பாவாடை கட்டி அலங்கரிப்பது அழகாக இருக்கும்.

படிகளில் பொம்மைகளை வைக்கும் முறை: (கீழிருந்து மேலாக).

1.முதல் படியில், ஓரறிவு உயிரினங்களான, புல், தாவரங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும். இக்காலத்தில் பார்க் வைக்கிறோம். முந்நாளில், பாலிகைக் கிண்ணங்களில், முளைப்பாரிகள் போட்டு வைப்பார்கள். கொலு மங்கலமாக நிறைவேற, அம்பிகையின் அருளை வேண்டி இவ்வாறு செய்வது வழக்கம். விஜயதசமியன்று மாலை, குளக்கரைகளில் பாலிகைகளைக் கரைப்பார்கள்.

2. இரண்டாவது படியில், ஈரறிவு உயிரினங்களான, சங்கு, நத்தை பொம்மைகள் வைக்க வேண்டும். பல்லாங்குழியில் சோழிகளை நிரப்பி வைக்கலாம். பொதுவாக, கட்டாயம் வைக்க வேண்டிய பொம்மைகளில் பல்லாங்குழியும் ஒன்று.

3.மூன்றாம் படியில், மூன்றறிவு உயிரினங்களான, எறும்பு போன்ற பொம்மைகள்.

4. நான்காம் படியில், நான்கறிவு படைத்த வண்டு போன்ற பொம்மைகள்.

5. ஐந்தாம் படியில், ஐந்தறிவு படைத்த பறவைகள், விலங்குகள் போன்ற பொம்மைகள்,

6. ஆறாம் படியில், ஆறறிவு படைத்த மனிதர்களின் பொம்மைகள்(கல்யாண செட் போன்றவை).

7. ஏழாம் படியில்,மனிதனாகப் பிறந்து தெய்வீக நிலையை அடைந்த ரிஷிகள், மகான்கள் முதலியோரது பொம்மைகள்.

8.எட்டாம் படியில், நவக்கிரகங்கள், அஷ்டதிக்பாலகர்கள், இந்திராதி தேவர்கள் முதலியோரது பொம்மைகள்.

9. ஒன்பதாம் படியில் நடுநாயகமாக, ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியை வைத்து, சுற்றிலும், மும்மூர்த்திகள் அவரவர் தேவியருடன் இருப்பதாக வைப்பது சிறப்பு.

கட்டாயம் வைக்க வேண்டிய பொம்மைகள்:
  • மரப்பாச்சி பொம்மைகள், 
  • பல்லாங்குழி, சோழிகளுடன்.
  • கோலாட்டம், 
  • நலுங்குத் தேங்காய் (பித்தளையில் அல்லது பாசிமணி தைத்துக் கிடைக்கும்), 
  • வெற்றிலைப்பெட்டி (வெற்றிலை பாக்கை தினமும் மாற்ற வேண்டும்.தினம் இரண்டு வெற்றிலைகள், பாக்கை வைத்து, மாலையில் தாம்பூலமாகத் தந்து விடலாம். அல்லது தாம்பூலம் போடும் வழக்கமிருந்தால் உபயோகிக்கலாம்.).
  •  (குழந்தைகள் விளையாடும்)மரச்செப்புகள் அல்லது இக்காலத்திற்கேற்ற பிளாஸ்டிக் செப்புகள், 
  • மளிகைக்கடை செட்டியார் பொம்மைகள், அவற்றின் முன், அரிசி பருப்பு போன்றவை. சின்ன துணிப்பைகளைச் சாக்கு மாதிரி தைத்து வைத்துக் கொண்டு, அதில் அரிசி,து.பருப்பு, உப்பு,மிளகு, உ.பருப்பு அல்லது தனியா வைக்கலாம். உப்பும் மிளகும் திருஷ்டிக்காக வைக்கிறோம்.
  • அம்மானை. 'இது என்ன?' என்று கேட்பவர்களுக்காக..... அம்மானை என்பது உருண்டையாக, சின்னதாக இருக்கும். சிறு வயதுப் பெண்கள், அக்காலத்தில் விளையாட உதவும் பொருள் இது. கிராமப்புறங்களில் ஆடும் அஞ்சாங்கல் விளையாட்டைப் போல் விளையாடுவார்கள். அம்பிகை, நம் இல்லத்தில் கொலுவிருக்கும் போது,  பல்லாங்குழி, அம்மானை போன்ற‌ பொருள்களை வைத்து விளையாடுவதாகவும், தினம் தாம்பூலம் தரிப்பதாகவும் ஐதீகம். ஆகவே, இவற்றை வைக்கிறோம். அகில உலகமும் அம்பிகையின் திருவிளையாடல் என்பதை சூட்சுமமாக உணர்த்தும் பொருட்டும் இவற்றை வைக்கிறோம். 

தசாவதார பொம்மைகளை வைக்க வேண்டிய வரிசை:
மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம,ஸ்ரீராம, பலராம, ஸ்ரீகிருஷ்ண, கல்கி அவதாரங்கள் என்ற வரிசையில் தசாவதார பொம்மைகளை வைக்க வேண்டும்.

அஷ்டலக்ஷ்மி பொம்மைகளை வைக்க வேண்டிய வரிசை:
ஆதி லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, தனலக்ஷ்மி என்ற வரிசையில் வைக்க வேண்டும்.

ஒன்பது நாளும் கட்டாயம் செய்ய வேண்டியவை:
  • வாசலில், மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். இது வீட்டில் பண்டிகை நடை பெறுவதைக் குறிக்கும். 
  • தினமும் செம்மண் இட்டு கோலம் போட வேண்டும். செம்மண் சக்தியைக் குறிப்பதால் இவ்வாறு செய்ய வேண்டும். மணைக்கோலங்கள் அல்லது புள்ளி வைத்து அதைச் சுற்றிலும் கோடுகளால் இணைக்கப்படும் கோலங்கள் போடுவது சிறப்பு. புள்ளிக் கோலங்கள் சிவ சக்தி ஸ்வரூபம் ஆகவே இவ்வாறு செய்ய வேண்டும்.
  • தலைவாசற்படியில் மஞ்சள் குங்குமம் வைத்துப் பூ வைக்க வேண்டும்.
  • தினம் காலை, மாலை இரு வேளையும் குறித்த வேளைகளில் விளக்கேற்றி, நிவேதனங்கள் செய்ய வேண்டும். தினமும் ஒரு பாயசம், கலந்த சாதம், சுண்டல் இவை செய்ய வேண்டும். இயலாதவர்கள், காலையில் மஹா நைவேத்யம்(பச்சரிசி சாதம், பருப்பு நெய்), மாலையில் ஏதாவது சுண்டல் நிவேதனம் செய்யலாம். தினமும் ஒரு இனிப்பு நிவேதனம் அவசியம். நேரமில்லாதவர்கள், காய்ச்சிய பாலில், தேன், திராட்சை(உலர்ந்தது அல்லது பச்சைத் திராட்சைப் பழங்கள்) சேர்த்து நிவேதனம் செய்யலாம். அம்பிகைக்கு மிக உகந்த நிவேதனமாகும் இது.
  • தினமும் பானகம் நிவேதனம் செய்ய வேண்டும். 
  • ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய குறிப்பிட்ட கோலங்கள் போட்டு வைக்கலாம். நவக்கிரகக் கோலங்களை தினம் ஒன்றாகப் போடலாம்.
  • ஒவ்வொரு நாளும் மாலையில் ஆரத்தி எடுக்க வேண்டும். நீரில் மஞ்சள், குங்குமம் சேர்த்து நடுவில் தீபங்கள் ஏற்றி ஆரத்தி எடுக்கலாம். மஞ்சள் நீர் கரைத்த தட்டில், ஒவ்வொரு  நாளும் ஒவ்வொரு நிற  மலர்கள் வைத்து அதன் நடுவில் தீபங்கள் ஏற்றி ஆரத்தி எடுப்பது சிறப்பு. ஆரத்தி நீரை வாசலில் ஊற்றக் கூடாது. ஏதாவது செடியில் ஊற்றலாம்.
  • தினமும் கொலுவின் முன் ஒரு சின்னக் கோலமாவது போட வேண்டும். கலசத்திற்கும், மரப்பாச்சி பொம்மைகளுக்கும் மட்டுமாவது பூ சாற்ற வேண்டும். 
  • தினமும் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி, தெரிந்த ஸ்லோகங்கள் சொல்லி, நிவேதனம் செய்து கற்பூரம் காட்ட வேண்டும். இரு வேளையும் ஊதுபத்தி ஏற்றுதல் அவசியம்.  பூஜையின் முடிவிலோ, அல்லது பூஜை செய்ய நேரம் குறைவாக இருப்பவர்கள், நவமங்களி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து நமஸ்கரிக்க முப்பெருந்தேவியரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

ஒன்பது நாளும் தவிர்க்கப்பட வேண்டியவை:
  1. வீட்டில், குழம்புப் பொடி, மிளகாய்ப்பொடி போன்றவற்றை அரைக்கக் கூடாது. அம்பிகை ஊசி முனையில் தவமிருப்பதாக ஐதீகம். ஆகவே,ஊசியால் தைக்கக் கூடாது.
  2. உரத்துப் பேசி, கத்தி சண்டையிடக் கூடாது.
  3. 'இல்லை', 'காலியாகி விட்டது' போன்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. எப்போதும் இவ்வாறு செய்தல் மிக்க நலம்.
  4. பூஜைக்கு எவர்சில்வர் பாத்திரங்களை உபயோகிக்காமல் இருப்பது சிறப்பு. தாமிர, பித்தளை பாத்திரங்களை உபயோகிக்கலாம்.
  5. பால், தயிர், உப்பு முதலிய பொருட்களை கடனாகக் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
  6. வீட்டில் எப்போதும் யாராவது இருக்க வேண்டும். குறிப்பாக சாயங்கால வேளைகளில்.
  7. டி.விக்கு, பொன்னாடை போர்த்தி, பூட்டி வைத்தால், மனநிம்மதி காரன்டியாகக் கிடைக்கும்.
  8. நவராத்திரி தினங்களில் மட்டுமாவது, பெண்கள், சபதம் செய்த திரௌபதி கோலத்தைத் தவிர்த்து, தலைமுடிக்கு ஒரு ரப்பர் பேண்டாவது மாட்டலாம்.
  9. தாம்பூலம் வாங்க வருபவர்கள், தேவையற்ற வம்புப் பேச்சுக்களைத் தவிர்த்து  கொலுவில் இருக்கும் நல்ல விஷயங்களைப் பாராட்டலாம்..
  10. ஒப்பிடுதலை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தாம்பூலம் தரும் போது, குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் போன்ற பிரிவினைகளைத் தவிர, மற்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 
  11. கொடுக்கும் பரிசுப் பொருட்கள் உபயோகமாக இருப்பது நல்லது. தரமானவற்றைத் தவிர மற்றவற்றைத் தவிர்க்கவும். 
  12. மஞ்சள் குங்குமம் டப்பாக்கள், 'ரொடேஷனில்' வருவதால், திறந்து பார்த்து விட்டுத் தரவும். பெரும்பாலான டப்பாக்களில் வண்டுகளும் குடியிருக்கின்றன. தரமான குங்குமம், பூசு மஞ்சள் பாக்கெட்டுகள், சிறிய அளவில் கிடைக்கின்றன. அவற்றைத் தருவது உத்தமம்.
  13. கண்ணாடிகளும் ஒரு முறை சோதித்து விட்டுத் தருவது. நல்லது. ஓரத்தில் வெட்டுப்பட்டு, ரசம் போய் இருக்கும் கண்ணாடிகள் தவிர்க்கவும். திறந்து மூடும் டைப் கண்ணாடிகள், வேலைக்குப் போகிறவர்களுக்கு உபயோகமாக இருக்கும். 
  14. நகர்ப்புறங்களில் மட்டைத் தேங்காய் உரிக்கும் உபகரணம் பெரும்பாலான வீடுகளில் கிடையாது. ஆகவே உரித்த தேங்காய் தருவது சிறந்தது.
  15. முறையாக ஒன்பது நாட்களும் கொலுவைத்து வழிபடுதலே சிறந்தது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே, 'இரண்டு பொம்மைகளை எடுத்து ஸ்வாமி அலமாரியில் வைத்தால் போதும்', 'கடைசி மூன்று நாள் கூட கொலு வைக்கலாம்' போன்ற முடிவுகளை எடுக்க வேண்டும். வருடம் தோறும் அல்ல.
தினசரி வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் டென்ஷனை அகற்றவும், கோலம், கைவினைப் பொருட்கள் போன்றவற்றில் வல்லவர்கள், அவற்றைக் காட்சிப்படுத்தவும், உறவு, நட்பு வட்டங்களைப் புதுப்பிக்கவும், இந்தப் பண்டிகை பயன்படுவது கண்கூடு. இதை உணர்ந்து முறையாகச் செயல்படுவது நிறைந்த பலனை அளிக்கும்.

இது ஒரு சுருக்கப்பட்ட(?!) மீள் பதிவு.. முழுப் பதிவும் இங்கே....http://aalosanai.blogspot.com/2012/10/part-2navarathri-golu-16102012-to.html

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-09-23 18:12 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

​ 
​   
​   
​  
​   
​   
​                
​         
​  
​       
​       

shylaja

unread,
Sep 23, 2014, 9:13:07 AM9/23/14
to vallamai, mintamil
ப்ரியதர்ஷ்ணீ  அற்றைத்திங்கள் பாட்டுக்கு  காட்டும் அபினயம்  சிறப்பாக இருக்கிறது  அஷ்டலஷ்மி ஸ்லோகங்களுடன் உங்கள் இடுகை அமர்க்களம் தேனிசார்.
--
 
அன்புடன்
ஷைலஜா

 "When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

shylaja

unread,
Sep 23, 2014, 10:00:47 AM9/23/14
to vallamai, mintamil
நவராத்திரிக்கான பலவிஷயங்களை  அழகாக  சொல்லிவிட்டீர்கள் பார்வதி.  அம்மானை விவரம் எனக்குப்புதிது. அம்மானை ஆடியபடியே அந்த நாளில் ராஜகுமாரிகள் தோழிகள்  பாடுவார்கள் என படித்திருக்கிறேன். 

  1. //டி.விக்கு, பொன்னாடை போர்த்தி, பூட்டி வைத்தால், மனநிம்மதி காரன்டியாகக் கிடைக்கும்.
  2. நவராத்திரி தினங்களில் மட்டுமாவது, பெண்கள், சபதம் செய்த திரௌபதி கோலத்தைத் தவிர்த்து, தலைமுடிக்கு ஒரு ரப்பர் பேண்டாவது மாட்டலாம்.//
கரெக்ட்!:)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 23, 2014, 12:23:42 PM9/23/14
to வல்லமை, மின்தமிழ்
ஷைலு அக்காவுக்கும் ரஞ்சனிம்மாவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!....

கூகுளார் உபயத்தில், அம்மானை ஆடும் பெண்கள்!!...

சென்ற வருடம், பக்கத்து வீட்டில் கலசத்தை இப்படி அலங்கரித்து வைத்திருந்தார்கள்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-09-23 20:55 GMT+05:30 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>:
​  
​     
​              
​         
2012-09-28

coral shree

unread,
Sep 23, 2014, 8:54:26 PM9/23/14
to vallamai, மின்தமிழ்
பல அரிய தகவல்களுடன் அழகாகத் தேரை ஆரம்பித்துள்ள ஷைலுவிற்கும், தொடர்ந்து, மிகச்சுவையான, அறிந்துகொள்ள வேண்டிய பல தகவல்களுடன்,  வடம் பிடிக்கும் பார்வதிக்கும், காணொலியுடன், கருத்துகள் பலவும் எளிமையாக அள்ளி வழங்கியுள்ள திருமிகு தமிழ்த்தேனீ ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றியும்.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

coral shree

unread,
Sep 23, 2014, 9:00:47 PM9/23/14
to vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்

பவள சங்கரி

thirukaiyur

அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
ஈரேழுலகின் ஈடில்லா ஈசனின் இடப்பாகம்
உரையும் ஊழிமுதல்வனின் நாயகியே! அபிராமி அன்னையே!!

பழமைக்கோலம் பரிதியின் தவம்
புதுமையில் புகுந்தால் புவிநாசம்
பழமையும் புதுமையும் பரிதிக்கேது
சுட்டெரிக்கும் சூதையும் சூழ்வினையையும்!!

பரிதிக்கே ஒளியாய் ஓங்கிய உத்தமியே
பங்கயத் தேரில் பதவிசாய் பவனிவரும்
மங்கையர்கரசியே மாதவச் செல்வியே
அங்கையர்கண்ணி அம்மையே! ஆனந்தமே!!

தஞ்சமென்று சரண் புகுந்தோர் நெஞ்சமெலாம்
பஞ்சமில்லா பேரருள் புகுத்தி வஞ்சமெல்லாம்
நீக்கியருள் மழைமேகமாய் புவியனைத்தையும்
காத்தருள் அகிலாண்ட நாயகியே! அபிராமியே!

அம்பிகையின் மலர்பாதங்களை சரணடைந்தோர் என்றும் துன்பக்கடலில் துவண்டுவிடுவதில்லை. இன்பமும், துன்பமும் இல்லா இன்னமுதம் அவள் பாத கமலம். எத்தனை எத்தனை அவதாரங்கள்.. எழில்மிகு வண்ணக்கோலங்கள் அவள் தோற்றம். அபிராமி அந்தாதி அருளிய அபிராமிப்பட்டரின் வாழ்க்கைச் சரிதமே அதற்கு ஆதாரம். அன்னையைச் சரணடைந்து, பித்தராய்த் திரிந்த பட்டர், காணும் பெண்களனைவரையும், அபிராமி அன்னையின் அவதார உருவமாகவேக் கண்டின்புற்றார்.

about-temple-banner

அபிராமி அந்தாதி பாடலை உள்ளம் உருகப் பாடிப்பரவச் செய்தவர், அபிராமிப்பட்டர். இவர் பிறந்த ஊர் அன்னை பராசக்தி அபிராமவல்லியாக அடியவர்க்கு அருள்பாலிக்கும் திருக்கடையூர். சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களின் சிறப்பானதொன்றுதான் திருக்கடையூர். என்றும் பதினாறு என்ற வரம் பெற்ற மார்கண்டேயரை அன்னை பராசக்தி, எமதர்மனிடமிருந்து காப்பாற்றிய வரலாறு சுவையானது. எமதர்மன், மார்கண்டேயர் மீது பாசக்கயிற்றை வீசிய அத்தருணத்தில், அப்பாலகன் ஓடிச்சென்று சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டான். எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்திருமேனியின் மேல்வந்து வீழ்ந்தது. கடுங்கோபம் கொண்ட சிவபெருமானாரின் சகதர்மினி அன்னை பராசக்தி சிவலிங்கத்தில் தோன்றினாள். ஈசனின் இடப்பாகம் உறையும் சக்திதேவி சிவலிங்கமாக வீற்றிருக்கும் தம் கணவர் மீது விழுந்த பாசக் கயிறு, தம் மீது விழுந்ததாகவேக் கருதி கோபமுற்றார் அம்பிகை. அதனால் எமனைத்தம் இடது காலால் எட்டி உதைத்தார் பெருமானார். ஆம், தன் மனைவியின் மனதை வேதனை அடையச் செய்த எமனை, அன்னைக்கேயுரிய தனது இடது பகுதியின் காலால் எமனை எட்டி உதைத்தார் இறைவன். இப்படி மார்கண்டேயனை காப்பாற்றிய அன்னை அபிராமவல்லி, என்றென்றும் பக்தர்களை காக்கவும் காத்திருக்கிறாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே அன்னையை வழிபடுவோரை வழிநடத்திச்செல்கிறது என்பதே நிதர்சனம்!

images (5)

இதுபோன்று பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய அன்னை அபிராமவல்லிமீது பித்தரான ஒருவரை ‘பைத்தியக்காரன்’ என்று அவ்வூர் மக்கள் பேசினார்கள். அபிராமிபட்டர் என்ற அந்த மகான் சிறந்த தேவி உபாசகர். தாம் பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அபிராமியின் அம்சமாகவே கருதுவார். எப்போதும் அபிராமி அன்னையையே தியானித்துக் கொண்டும் இருப்பார். இவரின் பக்தியை சோதிக்கவும், இவரின் கீர்த்தியை உலகுக்கு உணர்த்தவும் விரும்பினார் இறைவன், ஒருநாள் சரபோஜி மன்னர், திருக்கடையூர் அமிர்த கடேசுவரரை தரிசிக்கும்பொருட்டு திருக்கடையூர் கோயிலுக்குத் தன் பரிவாரங்களுடன் வந்தார். அரசர் வந்தது கூட தெரியாமல், அம்பாள் சன்னதியில் அபிராமி பட்டர் தியானத்தில் அமர்ந்திருந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்ற நிலையைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை எனும் திருக்கோலத்தையும் தம் கண்ணாரக் கண்டு இன்புற்றதோடு, இடைப்பட்ட ஏனைய கிரந்திகளனைத்தையும் கடந்து, சகஸ்ராரத்தில் ஒளிமயமாகத் திகழும் லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருந்தார். ஆனால் இதன் மகத்துவம் அறியாத சாதாரணர்கள், இவர் ஏதோ துர்தேவதையை ஆராதனை செய்து வந்த காரணத்தினாலேயே இப்படி பித்தராகி, ஆசாரங்கள் அனைத்தையும் கைவிட்டு, தீய வழியில் சென்றுவிட்டார் என்று சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர்.

ஒரு நாள் தஞ்சை அரசர், ராஜா சரபோஜி தை அமாவாசை தினத்தன்று, பூம்புகார் சென்று முகத்துவாரத்தில் நீராடிவிட்டு, திருக்கடவூருக்குத் தரிசனம் பெற வேண்டி வந்தார். அவ்வேளையில், அபிராமி அம்மன் சந்நிதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும், தொழுவதும், கண்ணீர் பெருக்குவதும் என்று வித்தியாசமாக செய்துகொண்டிருந்தார். சுற்றி இருந்தவர்களோ தங்களுக்குள்ளாக, ‘மன்னர் வந்திருப்பதுகூட அறியாமல், மன்னரை வணங்கவும் செய்யாமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருக்கிறாரே’ என கூறிக்கொண்டிருந்தார்கள். மன்னர் இவர் யாரெனக் கேட்டதும், ‘இவர் ஒரு பித்தர். தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு பரிவார சக்தியான ஏதோ ஓர் தேவதையை வழிபடுபவர்’ என்றனர். மன்னரும் இதைச் சோதிக்க எண்ணியதால், சுப்ரமணிய ஐயரிடம், ‘இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது?’ என்று கேட்டார்.

அன்னையின் காட்சியின் பேரானந்தத்தை உள்ளூரக் கண்டு களித்துக்கொண்டிருந்த பட்டரின் செவியில், அமாவாசை என்ற சொல் மட்டும் விழ, அவரும், ‘இன்று பௌர்ணமி அல்லவோ?’ என்று சொல்லிவிட்டார். அனைவரும், ஏளனத்துடன் கைகொட்டி சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். மன்னரும் மக்கள் சொன்னதும் சரிதான் என்று நினைத்தவாறு சென்றுவிட்டார். ஆனாலும் அரண்மனை திரும்பிய மன்னருக்கு, அவருடைய தோற்றமே, திரும்பத் திரும்ப கண்ணெதிரே வந்தது. அன்று பெளர்ணமி என்று சுப்பிரமணிய ஐயர் கூறிய வார்த்தைகளும் காதிலே ஒலித்த வண்ணம் இருந்தன. முன் மாலைப் பொழுது. சற்றே களைப்புடன் அமர்ந்திருந்த மன்னர் தன்னையறியாமல் கண்ணயர, கருவறையின் அபிராமி அன்னை அவர் கண்ணெதிரே தோன்றியதோடு, தன் காதுத் தோட்டைக் கழற்றி வீச, அது விண்ணிலே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சென்று நிலவாக அமர்ந்ததைக் கண்டார் மன்னர். ‘ஆகா, இது பூரண நிலவன்றோ! முழுமதி சுடர் விட்டு பிரகாசிக்கின்றது பாருங்கள்’ என்று சுப்ரமணிய ஐயரின் குரலும் கேட்டது. மன்னன் கண்விழித்தபோது, அவர் உடல் அச்சத்தில் நடுங்கியது. பெருந்தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தார் மன்னர்.

இந்தப் புராணக் கதையை மற்றொரு விதமாகவும் கூறுவர். மன்னர் அன்றைய திதியைக் கேட்டதும், சரியாகக் கூறாதவர் அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும், இயலாவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பு சொன்னதாகச் சிலரும், வேறு சிலர் மன்னரிடம் சரியான திதியைக் கூறாமல் தடுமாறிய பட்டர் அவமானத்தால் மனம் வருந்தி அரிகண்டம் பாடத் தொடங்கியதாகவும், அப்போது அபிராமியின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் தீயை மூட்டி அதன் மேல் ஒரு விட்டத்தில் இருந்து நூறு கயிறுகளால் ஆன ஓர் உறியைத் தொங்க விட்டு அதன் மேல் ஏறி, ‘அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்’ என்று சூலுரைத்து அபிராமி அந்தாதியைப் பாடத் தொடங்கியதாகவும் கூறுவார்கள். ‘உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்’ என்று துவங்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு உறியின் கயிறாக பட்டர் அரிந்து கொண்டு வந்ததாகவும், பேராச்சரியமாக, ‘விழிக்கே அருளுண்டு’ என்ற 79-வது பாடலின் போது மங்கிய அம்மாலைப் பொழுதில் அபிராமி அன்னை பட்டருக்கு மட்டுமின்றி அவ்வூரில் உள்ள அனைவருக்கும் காட்சி கொடுத்து, தன் காதுத் தோட்டைக் கழற்றி வீசி எறிந்து பெளர்ணமியை வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது. அன்னையின் அருளால் பட்டரும் மனம் தெளிவுற்று, அன்னையின் அருளைப் போற்றி, துதிப்பாடல்கள் இயற்றலாயினார். அந்தாதி முறையில் இயற்றப் பட்ட இப்பாடல்கள் அன்னையின் சிறப்பைப் புகழ்ந்தும், பட்டரை உலகத்தோர் இகழ்ந்து கூறியும், அன்னையின் அருளால் அவர் பெற்று வரும் நல் அனுபவச் சிறப்பையும் வர்ணிக்கும் விதத்தில் பாடல்கள் அற்புதமாக பொழிய ஆரம்பித்தது. மன்னரும் பட்டரின் வீடு சென்று அவரை வணங்கித் தாம் கண்ட கனவைக் கூறி பட்டரின் மன்னிப்பையும் கோரினார். பட்டரும் இது அன்னையின் திருவருள் என எண்ணி மகிழ்ந்தார். மன்னரால் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அல்லாமல், அவருக்கு மானியமாகச் சில விளை நிலங்களையும் மன்னர் பரிசளித்தார்.

abhirami

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!

(அபிராமி அந்தாதி)

அபிராமி அந்தாதி 108  முத்தான பாடல்கள் கொண்டது. அன்னையை வழிபடுபவர் வாழ்வின் சகல செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்வர் என்பது ஐதிகம்.

2014-09-23 8:02 GMT-04:00 shylaja <shyl...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Sep 23, 2014, 9:06:13 PM9/23/14
to vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்
வல்லமை வெளியீட்டிற்கு நன்றி.  வல்லமையில் காண இதோ இங்கு
 
நன்றி.

அன்புடன்
பவளா

Megala Ramamourty

unread,
Sep 23, 2014, 10:39:36 PM9/23/14
to மின்தமிழ், vallamai

எங்கள் அன்புத் தலைவி ஷைலஜாவின் அணிந்துரையுடனும், அரிய தகவல்களுடனும் நவ(ராத்திரி) ரதம் அழகாய் அசைந்தபடித் தன் பத்து நாள் பயணத்தை முத்தாய்த் தொடங்கியுள்ளது.

எங்கள் ரதத்தில் ஆண்களே வடம் பிடிப்பதில்லை -  இடம் பிடிப்பதில்லை எனும் குறை தீர்க்க வந்த கோமகன் தமிழ்த்தேனீயார் அவர்கள். அவர் நவராத்திரியின் சிறப்பையும், கொலு வைக்கும் முறையினையும் தேன் போன்ற இனிய தமிழ்நடையில் வழங்கியும், கூடவே போனஸாக நாட்டிய விருந்தையும் அளித்துச் சென்றுள்ளார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

அடுத்து ரதத்தை அணிசெய்ததோ எங்கள் அன்புத் தோழியும் ஆன்மீகச் சுரங்கமுமான பார்வதி. மலைமகளின் பெயர்கொண்ட அவரன்றோ எங்கள் நவராத்திரி நாயகியரில் முதன்மையானவர். :-)

நவராத்தி நாட்களில் செய்யவேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை (Do’s and Don’ts), கொலுவைக்கும் முறை, எந்தெந்த பொம்மைகளை எந்தெந்தப் படிகளில் வைக்கவேண்டும்...இப்படிப் பல்வேறு தகவல்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியிருக்கிறார் எங்கள் பார்வதி டீச்சர். :-) அவருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்! 

அடுத்து ரதத்தின் எழிலைக்கூட்ட வந்தவர் அன்புத் தோழி பவளா. அவருக்கே உரிய மிடுக்கான நடையில் அழகரசி அபிராமியின் அணுக்கத் தொண்டரான அபிராமி பட்டரின் வரலாற்றை அபிராமி அந்தாதிப் பாடல்களுடன் பக்திச்சுவை சொட்டச் சொட்ட நமக்குப் பகிர்ந்தளித்துள்ளார்.

மனமுவந்த பாராட்டுக்கள் பவளா. 

நவ(ராத்திரி) ரதத்தின் பயணம் இனிதே தொடரட்டும்!

அன்புடன்,

மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

coral shree

unread,
Sep 23, 2014, 10:43:22 PM9/23/14
to vallamai, மின்தமிழ்
அன்பினிய மேகலா,

நன்றி. உங்கள் முத்தான பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்... வாருங்கள் விரைவாக..

அன்புடன்
பவளா

Megala Ramamourty

unread,
Sep 23, 2014, 10:53:46 PM9/23/14
to மின்தமிழ், vallamai

இதோ வந்துவிட்டேன் பவளா. :-)

நீங்கள் பதிவிட்டுள்ள அபிராமி பட்டர் சரிதத்தில் என் சிந்தை ஒன்றிவிட்டது. எனவே, அபிராமி அம்மனைப் போற்றி நான் எழுதி வல்லமையில் வெளிவந்த பதிகம் ஒன்றை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

அபிராமி அம்மன் பதிகம்!

கல்வி நலந்தரு கன்னிகை நீயே!
செல்வ வளந்தரு செல்வியும் நீயே!
வல்லியே நிதமுனை வணங்குகின் றேனே
நல்லவை
எண்ணிடும் மனமருள் வாயே!

அதிசயம் நிகழ்த்திடும் அன்னையே உன்னை
மதியினில்
வைத்தே மனமகிழ்ந் திடுவேன்
விதியினை
மாற்றிடும் விமலையே என்றும்
கதியென்று
நினைத்தேன் நின்பதம் தனையே!

துணையற்ற மனிதர்க்குத் துணையாகும் தாயே!
இணையற்ற உன்னருட் பார்வையி னாலே
தீராத
துயர்களைத் தீர்த்திடு வாயே
வாராது
வந்திட்ட மனோன்மணி நீயே!

விடமுண்ட கண்டனின் இடப்பாகத் திருந்தே
இடர்களை
கின்றாய் இப்புவி சிறக்க!
தொடரும் இருவினை எனுமிருள் நீக்கிச்
சுடரே
நிலவே ஒளிதரு வாயே!

காலனும் உனைக்கண்டு அஞ்சிடு வானே!
வேல்விழி கண்டால் விரைந்தோடு வானே!
தோல்விகண் டறியாத் தூயவள் உனையே
பால்போல்
சொற்கொண்டு போற்றிடு வேனே!

நிலையில்லாப் பொருட்செல்வப் பற்றினை யறுத்து
விலையில்லா
அருட்செல்வம் அளித்திடு  தாயே!
மலைமகள் உன்னடி பணிகின்ற பத்(க்)தர்
கலையாத
கல்வியைப் பெற்றிடு வாரே!

அழகரசி உந்தன் எழில்தனைப் பருக
விழியிரண்டு
போத வில்லையே அம்மா!
தொழுதிடு வேனுனைத் தவறாது நித்தம்
குழவியென்
பிழைகளைப் பொறுத்தருள் வாயே!

மணியின் ஒளியாய்ச் சுடர்விடும் அன்னாய்!
பிணிகள் நீக்கிடும் மாமருந் தனையாய்!
பணிந்தே போற்றிடும் பாமர னுக்கும்
துணிந்தே
அருளும் பரமனின் துணைவி!

பந்த பாசங்கள் எனும்தளை நீக்கி
வந்த
வினைகள் ஓடிடச் செய்வாய்!
கந்த வேளினை இப்புவி தனக்கே
சொந்த
மாக்கிய சுந்தர வல்லி!

அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்திட
அகமது
தூய்மையாய் என்றும் திகழ்ந்திட
மறவாது
பற்றினேன் நின்னடி தனையே
பிறவாமை
நல்கியே பேரின்பம் காட்டு!

நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=39324

Tthamizth Tthenee

unread,
Sep 23, 2014, 11:20:18 PM9/23/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
நவராத்திரி  ரதம்  சக்தி  ரதம்   ஆகவே  வடம் பிடித்து இழுக்க நானும்  வந்தேன்  திருமதி மேகலா அவர்களே

அதையும் தவிர  இங்கே ரதம் இழுப்போர்  பெண்களாயினும்  என் குழந்தைகள் போன்றவர்கள்

முட்டுக்கட்டை போட இங்கே  யாரும் ஆளில்லாததால்

நாமே  மிக நாகரீகமாக  நிதானமாக  தேரை  நகர்த்துவோம்

சக்தி ஆடாமல் அசையாமல் நிலைகொண்டு  நம்முடன் வருவாள்

நமக்கு சக்தி தருவாள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

shylaja

unread,
Sep 23, 2014, 11:28:14 PM9/23/14
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள், தென்றல்
அன்னை அபிராமியின் அழகிய  தரிசனம்  காலைப்பொழுதுக்கு கன்ணிற்கும் மனதிற்கும் இதம்! பவழாவின் கைவண்ணம் ரதத்திற்கு பொலிவைத்தருகிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
           ளாக விளங்கிடுவாய்!
     தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
            விண்ணப்பம் செய்துடுவேன் .
     எள்ளத் தனைபபோழு துமபய னின்றி
             யிராதென்றன் நாவினிலே
      வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
             வேல்சக்தி வேல்சக்தி வேல்

பாரதியார்

shylaja

unread,
Sep 23, 2014, 11:34:32 PM9/23/14
to vallamai, மின்தமிழ்

2014-09-23 19:38 GMT-07:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

எங்கள் அன்புத் தலைவி >>தலைவலி  கைதவறுதலா தலைவி ஆகிட்டதா?:)

ஷைலஜாவின் அணிந்துரையுடனும், அரிய தகவல்களுடனும் நவ(ராத்திரி) ரதம் அழகாய் அசைந்தபடித் தன் பத்து நாள் பயணத்தை முத்தாய்த் தொடங்கியுள்ளது.

எங்கள் ரதத்தில் ஆண்களே வடம் பிடிப்பதில்லை -  இடம் பிடிப்பதில்லை எனும் குறை தீர்க்க வந்த கோமகன் தமிழ்த்தேனீயார் அவர்கள். அவர் நவராத்திரியின் சிறப்பையும், கொலு வைக்கும் முறையினையும் தேன் போன்ற இனிய தமிழ்நடையில் வழங்கியும், கூடவே போனஸாக நாட்டிய விருந்தையும் அளித்துச் சென்றுள்ளார். அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! >>தேனிசாருக்கு நன்றி. நாம  இது பெண்கள் இழை ஆண்கள்  வந்தீங்கன்னா தெரியும் சேதின்னு எங்கே  என்றைக்கு சொல்றோம்? 

அடுத்து ரதத்தை அணிசெய்ததோ எங்கள் அன்புத் தோழியும் ஆன்மீகச் சுரங்கமுமான பார்வதி. மலைமகளின் பெயர்கொண்ட அவரன்றோ எங்கள் நவராத்திரி நாயகியரில் முதன்மையானவர். :-)>>>>ஆன்மீகத்தென்றல் ஆச்சே!

நவராத்தி நாட்களில் செய்யவேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை (Do’s and Don’ts), கொலுவைக்கும் முறை, எந்தெந்த பொம்மைகளை எந்தெந்தப் படிகளில் வைக்கவேண்டும்...இப்படிப் பல்வேறு தகவல்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியிருக்கிறார் எங்கள் பார்வதி டீச்சர். :-) >>>டீச்சர் கையில்  பிரம்பு இல்லை:)

அவருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்! 

அடுத்து ரதத்தின் எழிலைக்கூட்ட வந்தவர் அன்புத் தோழி பவளா. அவருக்கே உரிய மிடுக்கான நடையில் அழகரசி அபிராமியின் அணுக்கத் தொண்டரான அபிராமி பட்டரின் வரலாற்றை அபிராமி அந்தாதிப் பாடல்களுடன் பக்திச்சுவை சொட்டச் சொட்ட நமக்குப் பகிர்ந்தளித்துள்ளார்.

மனமுவந்த பாராட்டுக்கள் பவளா.  >>>>நவரத்தினங்களில் ஒன்று வந்தால் நவரதம் ஜொலிக்காதா என்ன!

நவ(ராத்திரி) ரதத்தின் பயணம் இனிதே தொடரட்டும்!<>>>மேகலை ஒளிக்கும் காத்திருக்கிறோம்  தங்காய்!

அன்புடன்,

மேகலா

2014-09-23 21:06 GMT-04:00 coral shree <cor...@gmail.com>:
வல்லமை வெளியீட்டிற்கு நன்றி.  வல்லமையில் காண இதோ இங்கு

--

shylaja

unread,
Sep 23, 2014, 11:38:56 PM9/23/14
to vallamai, மின்தமிழ்
அன்னைக்கு அளித்துள்ள பாமாலை அருமை மேகலா.

//துணையற்ற மனிதர்க்குத் துணையாகும் தாயே!
இணையற்ற உன்னருட் பார்வையி னாலே
தீராத
 துயர்களைத் தீர்த்திடு 
வாயே
வாராது
 வந்திட்ட மனோன்மணி நீயே!//

மனோன்மணி  அன்னையைப்பற்றிய பதிவை யாரும் இட்டால் தெரிந்துகொள்வேன்  முழுமையாக தெரியாது அதனால் கேட்கிறேன்.

--

தேமொழி

unread,
Sep 24, 2014, 12:29:14 AM9/24/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
///
இங்கே ரதம் இழுப்போர்  பெண்களாயினும்  என் குழந்தைகள் போன்றவர்கள்
///

நன்றி தமிழ்த்தேனீ ஐயா.

////
முட்டுக்கட்டை போட இங்கே  யாரும் ஆளில்லாததால்
////

ஹி...ஹி...ஹீ....

..... தேமொழி

2014-09-23 21:06 GMT-04:00 coral shree <span dir="l
...

தேமொழி

unread,
Sep 24, 2014, 12:38:26 AM9/24/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

1.
பாம்பே சாரதா பாடிய அபிராமி அந்தாதி ....
40     நிமிடங்கள் 

...............................................................

2.
பாம்பே சாரதா பாடிய அபிராமி அந்தாதி ....
25    நிமிடங்கள் -சுருக்கிய வடிவம் 

...............................................................

3.
சீர்காழிகோவிந்தராஜன் 
1:30 முழுவதும் 

...............................................................

4.
சொல்லடி அபிராமி ...மணியே மணியில் ஒளியே..
திரைப்படக் காட்சி : ஆதிபராசக்தி 

...............................................................

..... தேமொழி

coral shree

unread,
Sep 24, 2014, 2:07:06 AM9/24/14
to vallamai, மின்தமிழ்
தேமொழி நல்ல தேர்வு. பகிர்விற்கு மிக்க நன்றி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Sep 24, 2014, 2:06:24 AM9/24/14
to vallamai, மின்தமிழ்
அற்புதமான நடை! ஆழ்ந்த கருத்து! வாழ்த்துகள் மேகலா.

அன்புடன்
பவளா

coral shree

unread,
Sep 24, 2014, 3:09:09 AM9/24/14
to vallamai, மின்தமிழ்
அன்பினிய ரஞ்சனி மேடம்,

அருமை. //எல்லா இயற்கை வளங்களும் நமக்காகவே இறைவனால் படைக்கப்பட்டன என்பது உண்மை.  ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நதி நீர் மாசு படிந்துவிட்டது; காற்று அசுத்தமாகிவிட்டது; பல நதிகள் இருந்த இடமே தெரியாமல் வறண்டு போய்விட்டன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நீர் வேண்டாமா? நமது பேரக்குழந்தைகள், அவர்களது பேரக்குழந்தைகள் நல்ல நீர் குடிக்க வேண்டாமா? நல்ல காற்றை சுவாசிக்க வேண்டாமா? ‘இருக்கும் நல்லவற்றையெல்லாம் நீங்கள் அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு அழுக்கு நீரையும் அசுத்தக் காற்றையும் விட்டுவிட்டுச் செல்லுகிறீர்களே’ என்று நம் இளைய தலைமுறைகள் கேட்கும் முன் விழித்துக் கொள்வோம்.  //

மிக யதார்த்தமான கட்டுரை!  அவசியம் அனைவரும் படித்துணர வேண்டிய வாசகங்கள்! வாழ்த்துகள். சமூக அக்கறையுடனான, ஆக்கப்பூர்வமான படைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுகள்!

அன்புடன்
பவளா​

2014-09-24 3:02 GMT-04:00 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>:
நவராத்திரி ரதத்திற்கு அபிராமி அன்னையையும் அபிராமி பட்டரையும் அழைத்து வந்த பவளாவிற்கு முதலில் பாராட்டுக்கள். திருக்கடவூர் அபிராமி பட்டரின் சரித்திரமும், அன்னை அவருக்கு அருளை வழங்கிய நிகழ்ச்சியும் எத்தனைமுறை படித்தாலும் கண்கள் நிறைந்துவிடும்.

 அபிராமி அன்னையின் பதிகத்தின் மூலம் 

//அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்திட
அகமது தூய்மையாய் என்றும் திகழ்ந்திட
மறவாது
 பற்றினேன் நின்னடி 
தனையே
பிறவாமை
 நல்கியே பேரின்பம் காட்டு!//

என்ற பிரார்த்தனையை முன் வைத்த மேகலாவிற்குப் பாராட்டும், நன்றியும். உங்கள் பதிகத்தின் வழியே மனோன்மணி அன்னையையும் இன்று உணர்ந்து கொண்டேன். 

நல்ல நல்ல பாடல்களைத் தொகுத்துக் கொடுத்துள்ள தேமொழிக்கு நன்றி.

மைசூரு தசரா தயாராகிக்கொண்டிருக்கின்றது. விரைவில் அனுப்பி வைக்கிறேன், ஷைலூ.

இன்று வல்லமையில் வெளியாகியிருக்கும் எனது ஒரு கட்டுரை நம் குழுமத்தில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 

நன்றிக் கடன்!

புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனபடுகிறது. இந்த நிறைந்த நாளே நவராத்திரியின் ஆரம்ப நாள். அதுமட்டுமில்லாமல் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நமது நன்றிக்கடனை நாம் செலுத்தும் நாளும் இதுவே.

பல மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் மனித இனம் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த தலைமுறை மனிதர்கள் எல்லோருமே நமது இன்றைய வாழ்விற்கு ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இன்றைக்கு நாம் பேசும் மொழி, நாம் உடுத்தும் உடை, நாம் வசிக்கும் வீடுகள், நமது நடை என்று எல்லாமே அவர்களிடமிருந்து நாம் கற்றவைதான். நாம் பெற்றவைதான், இல்லையா?

இந்தப் பூமியில் விலங்குகள் மட்டுமே இருந்துவந்த காலத்தில் உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் இவற்றினூடே தங்களைக் கொல்லவரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பது இவையே முக்கியமானவைகளாக இருந்தன. பின் மெதுமெதுவே  விலங்குகள் பரிணாமம் பெறத் தொடங்கின. அகலமாக வளர்ந்தவைகள் எழுந்து நிற்கத் தொடங்கின.  மூளை, வளர்ச்சி பெறத் தொடங்கியவுடன், பல்வேறு திறன்களும் வளரத் தொடங்கின.. ஒரு செல் பிறவியாக இருந்த உயிரினம் பல செல் பிறவியாக, மனிதனாக பரிணாமம் பெற்றது. மனித இனத்தின் மிக முக்கியமான பரிணாமம் தன்னைச்  சுற்றியிருக்கும் பொருள்களை பல்வேறு வகைகளில் அவன்  பயன்படுத்தத் தொடங்கியது தான். இந்த எளிமையான திறன் தான் பிற்காலத்திய தொழில் நுட்பங்களுக்கு அடிகோலியது. தன் கைகளை மட்டுமே நம்பியிருந்தவன் மரக்கிளைகளை ஆயுதமாகக் கொண்டு தன்னை எதிர்த்து வந்த எதிரியுடன் போரிட்டபோது நுட்பவியலின் கதவுகள் திறந்தன. தன்னைச் சுற்றியுள்ள பல பொருட்களையும் கொண்டு தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான் மனிதன். இதுவே மனித இனத்தின் நீடித்த வாழ்வின் ஆரம்பம் எனலாம்.

விலங்குகளைப் போல இருந்த மனிதன் மெதுமெதுவே தன் வாழ்வை செப்பனிட்டுக் கொள்ள ஆரம்பித்தான். இதனால் விலங்குகளைவிட சிறந்த வாழ்வு அவனுக்குக் கிடைத்தது. தனக்கென தங்குமிடம் வேண்டுமென விரும்பியதால் கட்டிடங்கள் வர ஆரம்பித்தன. கட்டடக்கலை இப்போது வானுயர வளர்ந்திருப்பதற்கு என்றோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவரின் மனதில் தோன்றிய ‘தனக்கென ஒரு இடம் வேண்டும்’ என்ற எண்ணம். குளிர், வெயில், மழை இவற்றிலிருந்து உடலை காக்க விரும்பியதால் உடைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த உலகத்தில் மனிதனாலேயே பலவும் நிகழ்த்தப்பட்டன. இரண்டு கற்கள் உரசும்போது ஏற்பட்ட தீப்பொறியால்  அதுவரை பச்சையாகத் தின்னப்பட்ட உணவு சமைக்கப்பட்ட உணவானது. காலங்கள் செல்லச்செல்ல சமைக்காத உணவை பதப்படுத்தவும், சமைத்த உணவை பாதுகாக்கவும் மனிதன் கற்றான். அதுவே இப்போது நமக்குக் கிடைக்கும் தயார் நிலை உணவிற்கு முன்னோடி.

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்’

கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; அவைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் நவீனப்படுத்தப்பட்டன; மேம்படுத்தப்பட்டன.  இன்னும் மேம்படுத்தலுக்கு இடமும் அளித்தன. என்னைபோல தையல் கலையை அறியாத தையல்களும் இன்று தைத்த உடைகளை அணிவதற்கு எப்போதோ ஒரு தலைமுறையில் தைத்து உடுத்த வேண்டும் என்ற உந்துதலுடன் பிறந்த ஒரு மனிதனோ மனுஷியோ தானே காரணம். தான் தைத்து உடை உடுத்தியதுடன் தையற்காரர் என்ற ஒரு தலைமுறையையும் உருவாக்கிய தலைமுறைக்கு நாம் எல்லோருமே கடன்பட்டிருக்கிறோமே! தயார் நிலை ஆடைகளை தைக்கும் தொழிற்சாலை நடத்தும் வியாபாரிகளும், அங்கு தைக்கும் பெண்களும், அவற்றை விற்கும் கடைக்காரர்களும் யாரோ ஒரு புண்ணியவானுக்கு / புண்ணியவதிக்கு பட்ட கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள்!

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதால் அல்லவா இன்று போக்குவரத்து நெருக்கடியில் நாம் சிக்கித் தவிப்பது தினசரி நடவடிக்கை ஆகிவிட்டது! எண்களில் ஜீரோவைக் கண்டுபிடித்து எண்ணற்ற கணித மேதைகளை உருவாக்கியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். என்னைப் போன்ற கணித வெறுப்பாளர்களையும் உருவாக்கியதும் அவர்களே. மருத்துவ உலகில் எத்தனை எத்தனை அரிய கண்டுபிடிப்புகள்! நமது வாழ்நாளின் அளவு நீண்டிருப்பதற்கு எத்தனையெத்தனை முன்னோர்கள் காரணம்!

இன்றைக்கும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன; நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இவை நிச்சயம் பயன்படும். ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. நம்மிடையே யாருக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று ஒரு அலட்சியம். இருக்கும் வளத்தையெல்லாம் நாமே பயன்படுத்திக் கொண்டுவிடவேண்டும் என்ற ஒரு சுயநலம் பிறந்துள்ளது.

‘உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வது எனக்காக

அன்னை மடியை விரித்தாள் எனக்காக’

எல்லா இயற்கை வளங்களும் நமக்காகவே இறைவனால் படைக்கப்பட்டன என்பது உண்மை.  ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நதி நீர் மாசு படிந்துவிட்டது; காற்று அசுத்தமாகிவிட்டது; பல நதிகள் இருந்த இடமே தெரியாமல் வறண்டு போய்விட்டன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நீர் வேண்டாமா? நமது பேரக்குழந்தைகள், அவர்களது பேரக்குழந்தைகள் நல்ல நீர் குடிக்க வேண்டாமா? நல்ல காற்றை சுவாசிக்க வேண்டாமா? ‘இருக்கும் நல்லவற்றையெல்லாம் நீங்கள் அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு அழுக்கு நீரையும் அசுத்தக் காற்றையும் விட்டுவிட்டுச் செல்லுகிறீர்களே’ என்று நம் இளைய தலைமுறைகள் கேட்கும் முன் விழித்துக் கொள்வோம்.  

நாம் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நன்றி சொல்லும் இந்த மஹாளய பட்ச தினத்தில் நம் வருங்கால சந்ததியினரையும் மனதில் கொள்வோம். அவர்களது நலன்களையும் பாதுகாக்க உறுதி பூணுவோம். அவர்களும் நாளை இன்று நாம் செய்வதுபோல நமக்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள் முழு மனதுடன்.

அன்புடன்,
ரஞ்சனி 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Ranjani Narayanan

unread,
Sep 24, 2014, 3:29:20 AM9/24/14
to vall...@googlegroups.com, mintamil
வல்லமையில் வெளியிட்டதற்கும், பாராட்டிற்கும் நன்றி பவளா.

அன்புடன்,
ரஞ்சனி 

Tthamizth Tthenee

unread,
Sep 24, 2014, 4:37:59 AM9/24/14
to vall...@googlegroups.com, mintamil
மிகச் சரியான நேரத்தில் நல்ல  கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Geetha Sambasivam

unread,
Sep 24, 2014, 4:45:44 AM9/24/14
to மின்தமிழ்
ரதம் இழுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.  ஒவ்வொருத்தர் படைப்பும் ஒன்றை ஒன்று தூக்கிச்சாப்பிடும் வண்ணம் உள்ளது.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 24, 2014, 9:19:46 AM9/24/14
to வல்லமை, மின்தமிழ்
அபிராமி அன்னை வந்து ஆட்கொண்டாள்!.. எத்தனை முறை படித்தாலும் போதும் என்றே தோன்றவில்லை.. அன்னையின் அருட்கருணையும் பவளா அக்காவின் எழுத்து நடையும் அத்தனை வசீகரம்..வேறெவ்விதம் பாராட்ட...பகிர்வுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-09-24 6:30 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:
​                                                

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 24, 2014, 9:33:57 AM9/24/14
to வல்லமை, மின்தமிழ்
 மேகலா வந்தாலே ஒரு தனி களை  ! (இது நிஜமா தான் சொல்றேன்).. ஒவ்வொரு வரியும் அமுதம்!..ஒரு ரத ஊர்வலத்தில், வாடாத, மணம் வீசும் மலர்களை தூவி வரவேற்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது!..

//அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்திட
அகமது தூய்மையாய் என்றும் திகழ்ந்திட
மறவாது பற்றினேன் நின்னடி தனையே
பிறவாமை நல்கியே பேரின்பம் காட்டு!///

இனி, இது என் தினசரி பிரார்த்தனை பாடல்களுடன் சேரும்!.. 

தங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி!. ஆமா, இது என்னயப் போயி டீச்சர்னு சொல்லி.. அக்கா வேற பிரம்பு இல்லன்னுட்டு...ஒரு சின்னக் குச்சி கூட கிடையாதுன்னுல்ல சொல்லணும்!:))))!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 24, 2014, 9:39:16 AM9/24/14
to வல்லமை, மின்தமிழ்
///
2014-09-24 8:49 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​ 

​///​
அதையும் தவிர  இங்கே ரதம் இழுப்போர்  பெண்களாயினும்  என் குழந்தைகள் போன்றவர்கள்
​///​.

​தங்கள் பகிர்வினைப் போலவே, இந்த வார்த்தைகள் மனதுக்கு சொல்லொணா நிறைவைத் தருகின்றன.. மிக்க நன்றி தங்களுக்கு!.​
 
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

​​
2014-09-24 8:49 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​                    
​       
​          
​                        
​   
​   
​  
​ 
​ 
​ 
​  
​  
​  
​           
​     
​          
​                
             
shylaja

unread,
Sep 24, 2014, 9:39:58 AM9/24/14
to vallamai, mintamil
எங்கள்  வீட்டில்  வண்ண வண்ணப் புடவைகள்தான் படிக்கட்டுகளில்!

2014-09-24 4:37 GMT-07:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​​
நவராத்திரி  ரதம் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தேன்

எங்கள் வீட்டிலும்  இந்த முறை   கொலு வைத்திருக்கிறோம்

சென்ற வருடம் அமெர்க்காவில் இருந்ததனால் வைக்க முடியவில்லை

இந்த முறை  நானும் என் சகதர்மிணியும் சேர்ந்து   கொலு வைத்திருக்கிறோம்

அனைவரும் வருக

அப்படியே நாங்கள் வைத்திருக்கும்  கொலுவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

ஒரு உண்மை  தெரிந்தது

சிறு வயதிலிருந்துஒ வ்வொரு முறை கொலு வைக்கும் போதும் பார்த்திருக்கிறேன்
இப்போதுதான்  மனதில் உறைக்கிறது

அட  கொலுப்படியில் அத்துணை  சக்திகளையும் தாங்கி இருப்பது  ஆண் உபயோகப் படுத்தும்  வேட்டிதானே!

சக்திகளைத் தாங்க  ஆண்  தன் கைகளை  அகல விரிக்கிறான்

கையெடுத்து சக்திகளைக் கும்பிட்டாலும்  அவனும்  சக்தியைத் தாங்குகிறான்

என்று தோன்றியது

சக்தி என்பது  ஆணும் பெண்ணும் கலந்ததே  எனும் உணர்வு மேலிட்டது

நாம் அனைவருமே  அர்த நாரிகள் தான்  எனத் தோன்றியது

வாழ்க   சக்தி

அன்புடன்
தமிழ்த்தேனீ  

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

2014-09-24 14:16 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
மைசூர்தசரா கட்டுரை உங்களிடமிருந்து வரக்காத்திருக்கோம். நல்லதொரு விழிப்புணர்வுக்கட்டுரை அளித்த ரஞ்சனி மேடம்க்கு  நன்றி.. ஆமாம்  நாம் இயற்கையைப்பேண வேண்டும்

எத்தனை மலர்கள் எத்தனை இலைகள்!
எத்தனைபறவைகள் எத்தனை உயிர்கள்!
மரங்கள் இருந்தால்..?

சுற்றுச்சூழல்பற்றி ஒரு சிறுமி எழுதியகவிதை இது.

மரங்கள் இருந்தால் என்றுமுடிக்கிற போது அந்தச்சிறுமியின் கவலை நமக்குப்புரிகிறது.

"மரம் செடிகொடி சுத்தமான நீர் காற்று என்று
வருங்காலக்குழந்தைகளுக்கு நாம் அனுபவித்த இயற்கைசெல்வத்தை அப்படியே விட்டுப்போகப்போகிறோமா இல்லையா நாம்?" என்னும் விடைதெரியாத கேள்வியும் எழுகிறது.

காற்று நீர் நிலம் நெருப்பு ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் அடங்கிய இயற்கை, மனிதன் இல்லாமல் வாழ்ந்துவிடும். ஆனால் மனிதனால்தான் இயற்கை இல்லாமல் வாழமுடியாது.

தண்ணீரும் காற்றும் உணவுமின்றி மனிதன் வாழ்வது சாத்தியமே இல்லையே.

ஒருபக்கம் மரங்களைவெட்டுகிறோம்.
இன்னொருபக்கம் மலைகளை இடிக்கிறோம்
காற்றை மாசுபடுத்தி பிராணவாயுவை அழித்துவருகிறோம்.

'க்லூரோஃப்ளூரோ கார்பன்' என்னும் ரசாயனபுகையை நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் ஏசி, ஃப்ரிட்ஜ் புகையூட்டும்கருவிகள் இன்னபிற சாதனங்கள் வெளிவிடுவதால் இது விண்வெளியை அடைந்து ஓசோனைப்பெரிதும் அழித்துக்கொண்டிருக்கிறது.

2014-09-24 0:02 GMT-07:00 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>:
நவராத்திரி ரதத்திற்கு அபிராமி அன்னையையும் அபிராமி பட்டரையும் அழைத்து வந்த பவளாவிற்கு முதலில் பாராட்டுக்கள். திருக்கடவூர் அபிராமி பட்டரின் சரித்திரமும், அன்னை அவருக்கு அருளை வழங்கிய நிகழ்ச்சியும் எத்தனைமுறை படித்தாலும் கண்கள் நிறைந்துவிடும்.

 அபிராமி அன்னையின் பதிகத்தின் மூலம் 

//அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்திட
அகமது தூய்மையாய் என்றும் திகழ்ந்திட
மறவாது
 பற்றினேன் நின்னடி 
தனையே
பிறவாமை
 நல்கியே பேரின்பம் காட்டு!//

என்ற பிரார்த்தனையை முன் வைத்த மேகலாவிற்குப் பாராட்டும், நன்றியும். உங்கள் பதிகத்தின் வழியே மனோன்மணி அன்னையையும் இன்று உணர்ந்து கொண்டேன். 

நல்ல நல்ல பாடல்களைத் தொகுத்துக் கொடுத்துள்ள தேமொழிக்கு நன்றி.

மைசூரு தசரா தயாராகிக்கொண்டிருக்கின்றது. விரைவில் அனுப்பி வைக்கிறேன், ஷைலூ.

இன்று வல்லமையில் வெளியாகியிருக்கும் எனது ஒரு கட்டுரை நம் குழுமத்தில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 

நன்றிக் கடன்!

புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனபடுகிறது. இந்த நிறைந்த நாளே நவராத்திரியின் ஆரம்ப நாள். அதுமட்டுமில்லாமல் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நமது நன்றிக்கடனை நாம் செலுத்தும் நாளும் இதுவே.

பல மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் மனித இனம் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த தலைமுறை மனிதர்கள் எல்லோருமே நமது இன்றைய வாழ்விற்கு ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இன்றைக்கு நாம் பேசும் மொழி, நாம் உடுத்தும் உடை, நாம் வசிக்கும் வீடுகள், நமது நடை என்று எல்லாமே அவர்களிடமிருந்து நாம் கற்றவைதான். நாம் பெற்றவைதான், இல்லையா?

இந்தப் பூமியில் விலங்குகள் மட்டுமே இருந்துவந்த காலத்தில் உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் இவற்றினூடே தங்களைக் கொல்லவரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பது இவையே முக்கியமானவைகளாக இருந்தன. பின் மெதுமெதுவே  விலங்குகள் பரிணாமம் பெறத் தொடங்கின. அகலமாக வளர்ந்தவைகள் எழுந்து நிற்கத் தொடங்கின.  மூளை, வளர்ச்சி பெறத் தொடங்கியவுடன், பல்வேறு திறன்களும் வளரத் தொடங்கின.. ஒரு செல் பிறவியாக இருந்த உயிரினம் பல செல் பிறவியாக, மனிதனாக பரிணாமம் பெற்றது. மனித இனத்தின் மிக முக்கியமான பரிணாமம் தன்னைச்  சுற்றியிருக்கும் பொருள்களை பல்வேறு வகைகளில் அவன்  பயன்படுத்தத் தொடங்கியது தான். இந்த எளிமையான திறன் தான் பிற்காலத்திய தொழில் நுட்பங்களுக்கு அடிகோலியது. தன் கைகளை மட்டுமே நம்பியிருந்தவன் மரக்கிளைகளை ஆயுதமாகக் கொண்டு தன்னை எதிர்த்து வந்த எதிரியுடன் போரிட்டபோது நுட்பவியலின் கதவுகள் திறந்தன. தன்னைச் சுற்றியுள்ள பல பொருட்களையும் கொண்டு தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான் மனிதன். இதுவே மனித இனத்தின் நீடித்த வாழ்வின் ஆரம்பம் எனலாம்.

விலங்குகளைப் போல இருந்த மனிதன் மெதுமெதுவே தன் வாழ்வை செப்பனிட்டுக் கொள்ள ஆரம்பித்தான். இதனால் விலங்குகளைவிட சிறந்த வாழ்வு அவனுக்குக் கிடைத்தது. தனக்கென தங்குமிடம் வேண்டுமென விரும்பியதால் கட்டிடங்கள் வர ஆரம்பித்தன. கட்டடக்கலை இப்போது வானுயர வளர்ந்திருப்பதற்கு என்றோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவரின் மனதில் தோன்றிய ‘தனக்கென ஒரு இடம் வேண்டும்’ என்ற எண்ணம். குளிர், வெயில், மழை இவற்றிலிருந்து உடலை காக்க விரும்பியதால் உடைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த உலகத்தில் மனிதனாலேயே பலவும் நிகழ்த்தப்பட்டன. இரண்டு கற்கள் உரசும்போது ஏற்பட்ட தீப்பொறியால்  அதுவரை பச்சையாகத் தின்னப்பட்ட உணவு சமைக்கப்பட்ட உணவானது. காலங்கள் செல்லச்செல்ல சமைக்காத உணவை பதப்படுத்தவும், சமைத்த உணவை பாதுகாக்கவும் மனிதன் கற்றான். அதுவே இப்போது நமக்குக் கிடைக்கும் தயார் நிலை உணவிற்கு முன்னோடி.

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்’

கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; அவைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் நவீனப்படுத்தப்பட்டன; மேம்படுத்தப்பட்டன.  இன்னும் மேம்படுத்தலுக்கு இடமும் அளித்தன. என்னைபோல தையல் கலையை அறியாத தையல்களும் இன்று தைத்த உடைகளை அணிவதற்கு எப்போதோ ஒரு தலைமுறையில் தைத்து உடுத்த வேண்டும் என்ற உந்துதலுடன் பிறந்த ஒரு மனிதனோ மனுஷியோ தானே காரணம். தான் தைத்து உடை உடுத்தியதுடன் தையற்காரர் என்ற ஒரு தலைமுறையையும் உருவாக்கிய தலைமுறைக்கு நாம் எல்லோருமே கடன்பட்டிருக்கிறோமே! தயார் நிலை ஆடைகளை தைக்கும் தொழிற்சாலை நடத்தும் வியாபாரிகளும், அங்கு தைக்கும் பெண்களும், அவற்றை விற்கும் கடைக்காரர்களும் யாரோ ஒரு புண்ணியவானுக்கு / புண்ணியவதிக்கு பட்ட கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள்!

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதால் அல்லவா இன்று போக்குவரத்து நெருக்கடியில் நாம் சிக்கித் தவிப்பது தினசரி நடவடிக்கை ஆகிவிட்டது! எண்களில் ஜீரோவைக் கண்டுபிடித்து எண்ணற்ற கணித மேதைகளை உருவாக்கியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். என்னைப் போன்ற கணித வெறுப்பாளர்களையும் உருவாக்கியதும் அவர்களே. மருத்துவ உலகில் எத்தனை எத்தனை அரிய கண்டுபிடிப்புகள்! நமது வாழ்நாளின் அளவு நீண்டிருப்பதற்கு எத்தனையெத்தனை முன்னோர்கள் காரணம்!

இன்றைக்கும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன; நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இவை நிச்சயம் பயன்படும். ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. நம்மிடையே யாருக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று ஒரு அலட்சியம். இருக்கும் வளத்தையெல்லாம் நாமே பயன்படுத்திக் கொண்டுவிடவேண்டும் என்ற ஒரு சுயநலம் பிறந்துள்ளது.

‘உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வது எனக்காக

அன்னை மடியை விரித்தாள் எனக்காக’

எல்லா இயற்கை வளங்களும் நமக்காகவே இறைவனால் படைக்கப்பட்டன என்பது உண்மை.  ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நதி நீர் மாசு படிந்துவிட்டது; காற்று அசுத்தமாகிவிட்டது; பல நதிகள் இருந்த இடமே தெரியாமல் வறண்டு போய்விட்டன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நீர் வேண்டாமா? நமது பேரக்குழந்தைகள், அவர்களது பேரக்குழந்தைகள் நல்ல நீர் குடிக்க வேண்டாமா? நல்ல காற்றை சுவாசிக்க வேண்டாமா? ‘இருக்கும் நல்லவற்றையெல்லாம் நீங்கள் அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு அழுக்கு நீரையும் அசுத்தக் காற்றையும் விட்டுவிட்டுச் செல்லுகிறீர்களே’ என்று நம் இளைய தலைமுறைகள் கேட்கும் முன் விழித்துக் கொள்வோம்.  

நாம் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நன்றி சொல்லும் இந்த மஹாளய பட்ச தினத்தில் நம் வருங்கால சந்ததியினரையும் மனதில் கொள்வோம். அவர்களது நலன்களையும் பாதுகாக்க உறுதி பூணுவோம். அவர்களும் நாளை இன்று நாம் செய்வதுபோல நமக்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள் முழு மனதுடன்.

அன்புடன்,
ரஞ்சனி 

--

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
           ளாக விளங்கிடுவாய்!
     தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
            விண்ணப்பம் செய்துடுவேன் .
     எள்ளத் தனைபபோழு துமபய னின்றி
             யிராதென்றன் நாவினிலே
      வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
             வேல்சக்தி வேல்சக்தி வேல்

பாரதியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

golu.JPG

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 24, 2014, 9:41:28 AM9/24/14
to வல்லமை, மின்தமிழ்
ரொம்ப அற்புதமான காணொளிகள் தேமொழி!.... ரொம்ப நன்றி!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-09-24 10:08 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
​         

shylaja

unread,
Sep 24, 2014, 9:47:57 AM9/24/14
to vallamai, mintamil
சீர்காழி  தான் கணீரென்று பாடுகிறார் நாளை பூஜைக்கு சீர்காழியுடன் அபிராமி அந்தாதி சொல்லிவிடவேண்டும்... அளித்தமைக்கு நன்றி.. பி சுசீலாவின்  மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி ஜெய்ஜெய தேவி துர்க்கா தேவியையும்  கேட்க ஆசை..நேயர்விருப்பத்தில்  போய்  கேட்கலாம்னா வழக்கமாய் அளிப்பவர் ‘பெண்களுக்கு அனுமதி  இல்லை’ என சொல்லிடுவாரா என பயமா இருக்கு!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 24, 2014, 9:54:26 AM9/24/14
to வல்லமை, mintamil
/// பி சுசீலாவின்  மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி ///

///ஜெய்ஜெய தேவி துர்க்கா தேவி////

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-09-24 19:17 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​                  

shylaja

unread,
Sep 24, 2014, 9:57:15 AM9/24/14
to vallamai, mintamil
நன்றி பாரு.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 24, 2014, 10:00:24 AM9/24/14
to வல்லமை, மின்தமிழ்
சரியான நேரத்தில் சொன்னீர்கள்!.. எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய கருத்துக்கள் ரஞ்சனிம்மா!... பகிர்வுக்கு மிக்க நன்றி!.. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-09-24 12:32 GMT+05:30 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>:
​               

Ranjani Narayanan

unread,
Sep 24, 2014, 12:47:00 PM9/24/14
to vall...@googlegroups.com, mintamil

மைசூரு தசரா

நவராத்திரி என்றால் இந்தியாவில் இரண்டு நிகழ்வுகள் நமக்கு நினைவிற்கு வருகின்றன. முதலாவது மைசூரு தசரா. இரண்டாவது மேற்குவங்கத்தில் நடக்கும் காளி பூஜை. வருடங்கள்தோறும் இவை மாறாமல் நடைபெற்று நமது பெருமை மிக்க பழைய பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றி வருபவை. மைசூரு தசரா பண்டிகை நாடஹப்ப (கர்நாடக மாநிலத்தின் பண்டிகை) என்று கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினம்  மைசூருவின் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். மகிஷாசுரன் என்கிற பெயரிலிருந்தே மஹிஷூர் (பிற்காலத்தில் மைசூரு)  வந்திருப்பதாகவும் சொல்லுகிறார்கள். 2010 ஆம் வருடம் இந்த பண்டிகை தனது 400வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.

இந்தப் பண்டிகை விஜயநகரப் பேரரசர்களால் 15ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பெர்ஷியன் தூதுவர் அப்துர் ரஜாக் இந்த பண்டிகையைப் பற்றி தனது Matla-us-sadain wa Majma-ul-Bahrain (இரண்டு புனித நட்சத்திரக் கூட்டங்களின் எழுச்சியும், இரண்டு கடல்களின் சங்கமமும்) என்ற புத்தகத்தில் மகாநவமி என்ற பெயரில் தசரா கொண்டாட்டங்கள் நடந்தன என்று குறிப்பிடுகிறார். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூரை ஆண்டுவந்த ஒடையார் வம்ச அரசர் ராஜ ஒடையார் இந்த தசராவை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் கொண்டாட ஆரம்பித்தார். தசரா கொண்டாட்டங்களில் 3வது கிருஷ்ணராஜ ஒடையார் காலத்தில் சிறப்பு தர்பார் இடம் பெற்றது. இந்த தர்பார் மைசூரு அரண்மனையில் கூடியது. அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும், அதிகாரிகளும், பொதுமக்களும் இந்த தர்பாரில் பங்குபெற்றனர். சென்ற வருடம் (2013) வரை இந்த வழக்கம் தொடர்ந்தது. மஹாநவமி என்று சொல்லப்படும் ஒன்பதாவது தினம் அரச உடைவாள் யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தில் யானைகளுடன் கூட ஒட்டகங்களும், குதிரைகளும் இடம் பெரும்.

இந்தக் கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும்  மைசூரு அரண்மனை வண்ண வண்ண  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பது பார்க்க பார்க்க திகட்டாத ஒரு காட்சி. இதற்காக ஒரு லட்சம் விளக்குகள் ஒரு கோடி ரூபாய் செலவில் ஏற்றப்படுகின்றன. பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் அரண்மனையின் முன் நடைபெறும்.

Inline image 1

விஜயதசமியன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். தங்க மண்டபத்தில் சாமுண்டேச்வரி தேவி எழுந்தருளப்பட்டு மைசூரு நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவாள். இந்த தங்க மண்டபத்தின் எடை 750 கிலோ மட்டுமே! இந்த தங்கமண்டபம் அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் ஏற்றப்பட்டு ஊர்வலம் வரும். ஊர்வலம் ஆரம்பிப்பதற்கு முன் அரச குடும்பத்தினரும், சிறப்பு விருந்தாளிகளும் தேவியை ஆராதிப்பார்கள்.

Inline image 2

விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் மைசூரு அரண்மனை 

நடனக் குழுக்கள், இசைக்குழுக்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டங்கங்கள் எல்லாம் இந்த ஊர்வலத்தின் அழகைக் கூட்டும். இந்த ஊர்வலம் மைசூரு அரண்மனையிலிருந்து துவங்கி பன்னிமண்டபம் (Banni Mantapam) என்று சொல்லப்படும் இடத்தில் முடிவடையும். இந்த இடத்தில் இருக்கும் பன்னி (வன்னி மரங்கள்) மரங்களுக்கு பூஜை நடக்கும். பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாதவாசத்தின் போது இந்த மரங்களில் தான் தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்கள் என்பதால் அரசர்கள் இந்த மரத்தை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அன்று அரசர்கள் செய்த வழிபாடு இன்றும் மைசூரு தசரா பண்டிகையில் தொடருகிறது.

Inline image 3

ஜம்போ சவாரி - தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவி 

விளக்கொளி அணிவகுப்பு

தசரா கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்ச்சியாக விளக்கொளி அணிவகுப்பு பன்னிமண்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் லேசர் காட்சிகள், கரணங்கள் போடுபவர்களின் சாகசங்கள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் மற்றும் குதிரையேற்றம் ஆகியவை இடம் பெறும். விளக்கொளி அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது அரசர் குதிரையேற்ற உடையில் குதிரை மீதமர்ந்து வந்து இராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்வார். இந்த நிகழ்ச்சி துவங்கும் சமயம் இரவுப் பொழுது வந்துவிடுமாதலால் நிறைய விளக்குகள் ஏற்றுவார்கள். அரசர் தனது இராணுவ பலத்தை தனது எதிரிகளுக்குத்  தெரியப்படுத்தவும், மக்களிடையே ‘இத்தனை பலமுடைய நான் உங்கள் ராஜா; உங்களைக் காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது’ என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவுமே இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.

இந்த வருடம் மைசூரு தசரா நடைபெறுமா என்பது இன்னும் சந்தேகமாகவே இருந்து வருகிறது. மாநில அரசு நிச்சயம் நடக்கும் என்று சொன்னாலும், மைசூரு அரண்மனையைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் தசரா பூஜை உண்டு என்று சொன்னாலும் எப்போதும் போல சோபையுடன் இந்த வருடம் நடக்காது என்றே சொல்ல வேண்டும்.

Inline image 4

தர்பாரில் அரசர் அமர்ந்திர்க்கும் காட்சி 

தசராக் கொண்டாட்டங்களில் தர்பார் ஒரு பகுதிதான் என்றாலும் பொதுமக்களுக்கு அரசரை அரியணையில் பார்ப்பது மிகவும் பிடித்த விஷயம். என்னதான் சுதந்திரம் கிடைத்து, குடியரசாக நாடு மாறிவிட்டாலும், இன்னும் அரசர்களுக்கும், அரச குடும்பங்களுக்கும் நம் நாட்டில் மிகப்பெரிய மரியாதை இருக்கத்தான் செய்கிறது

கடைசி அரசர் ஸ்ரீகண்டதத்த ஒடையார் இயற்கை எய்தி இன்னும் ஒரு வருடம் கூட பூர்த்தி ஆகாத நிலை. அவருக்குப்பின் இதுவரை வாரிசு என்று யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை அரச குடும்பத்தினர். தசராவின் போது அரசர் தர்பாரில் அமர்ந்து காட்சியளிப்பது கண்ணுக்கினிய காட்சி. அரசர் இல்லாத நிலையில் யார் இந்த தர்பாரில், அரசரின் அரியணையில் அமருவார்கள்? மிகப்பெரிய கேள்வி இது. மறைந்த அரசரின் மனைவி அரியணையில் அமர விரும்பவில்லை என்று செய்திகள் வருகின்றன.

என்னுடைய எழுபது வயதுவரை எனது வாரிசு பற்றி யோசிப்பதாக இல்லைஎன்றவர் வாரிசு இல்லாமல் 60 வயதில் மரணமடைந்து தலக்காடு சாபத்திற்கு ஆளாகிவிட்டார் என்று எண்ண வைத்துவிட்டார் ஸ்ரீகண்டதத்த ஒடையார்.

அது என்ன தலக்காடு சாபம்?

விஜயநகரத்தின் தளபதி ஸ்ரீரங்கராயனிடமிருந்து ஸ்ரீரங்கப்பட்டினத்தை 1610 ஆம் ஆண்டு அன்றைய மைசூரு மகராஜா ராஜ ஒடையார் கைப்பற்றினார். ஸ்ரீரங்கராயனின் மனைவி அலமேலம்மா ஆதிரங்கனின் ஆலய நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானபோது, ராஜ ஒடையார் அவரைப் பிடிக்க தனது படை வீரர்களை அனுப்புகிறார். அவர்களிடமிருந்து  தப்ப அலமேலம்மா தலக்காடு நோக்கி ஓடிவருகிறார். அங்கு மாலங்கி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, தப்ப முடியாத அலமேலம்மா, ‘தலகாடு மணல் மூடி போகட்டும்; மாலங்கி நதி மடுவாகட்டும்; ஒடையார் பரம்பரை வாரிசற்றுப் போகட்டும்என்று சாபமிட்டு விட்டு நதியில் குதித்து விடுகிறார்.

இப்போதும் தலக்காடு மணல் மூடித்தான் இருக்கிறது. மாலங்கி நதியில் நீர் வரத்து இல்லை. இந்த இரண்டு சாபங்களும் பலித்தது போலவே ஒடையார் பரம்பரையிலும் நேர் வாரிசு என்பது இல்லை. ஸ்ரீகண்டதத்தாவின் அந்திமக் கிரியைகளை அவரது சகோதரி மகன் காந்தராஜ் அர்ஸ் செய்தார். அவரே ஒடையார் பரம்பரையின் அடுத்த வாரிசாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

தசரா கொண்டாட்டங்களை நடத்த அரசியார் ப்ரமோதா தேவி சம்மதித்துவிட்டார்; ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற மாட்டார்கள்; அரண்மனையில் எந்த கொண்டாட்டமும் நடப்பதையும் அவர் விரும்பவில்லை என்று அண்மைய செய்திகள் கூறுகின்றன. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதற்கு முன் இந்த தசரா கொண்டாட்டங்களை நேரில் கண்டு அனுபவித்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

coral shree

unread,
Sep 25, 2014, 1:44:20 AM9/25/14
to vallamai, mintamil
//இதற்கு முன் இந்த தசரா கொண்டாட்டங்களை நேரில் கண்டு அனுபவித்தவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்!// 

ரஞ்சனி மேடம், நாங்கள் உங்கள் விரிவான, அற்புதமான கட்டுரையைப் படிக்கக் கொடுத்து வைத்துள்ளோம். பகிர்விற்கு நன்றி. மனமார்ந்த பாராட்டுகள்! பயனுள்ள கட்டுரை.

அன்புடன்
பவளா

Take life as it comes.

Suba.T.

unread,
Sep 25, 2014, 2:46:57 AM9/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
அருமையான தொடக்கம் ஷைலஜா. மிக்க நன்றி இந்த இழையை ஆரம்பித்து வைத்த தங்களுக்கும் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஏனைய நண்ப்ரகளுக்கும்.

கடந்த 10 நாட்களாக மலேசியாவிலிருந்து வந்து என்னுடன் இருந்து சென்ற நண்பர் குடும்பத்தினரை நேற்று ஃப்ராங்பர்ட் விமான நிலையம் வரை வாகனத்தில் அழைத்துச் சென்று வழி அனுப்பி வைத்து வரும் பணி எனக்கு. காலையில் 2 மணி நேர பயணத்தில் காரிலேயே லலிதா சகஸ்ரநாமம் கேட்டுக் கொண்டே எங்கள் நவராத்திரி வழிபாடு தொடங்கியது என்று தான் சொல்ல வேண்டும். 

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நற்சிந்தனைகளைப் பகிர்ந்து வருவோம்.

அனைவருக்கும் என் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுபா

அன்புடன்
ஷைலஜா.

தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே
 
அபிராமி அந்தாதி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
coral shree

unread,
Sep 25, 2014, 2:55:57 AM9/25/14
to vallamai, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தென்றல், mintamil

பவள சங்கரி

10461319_599716563472336_3628801855800448289_n

அம்மையும் நீயோ இப்புவியும் உன்னதோ
உன்னைநினைந்தே தமிழை ஓதினேன் – என்னை
கனிந்தேற்றுக் கொள்ளாத நாயகியுண்டோ உண்டோ
செருக்கேற்றுக் கொள்ளாத கவிஞனும்!

Devi_Kanya_Kumari

தேவி பிறந்தவூர் அலைகடல் சூழுமூர் 
சிற்றாடையும் சிந்தூரமும் மாணிக்கமும் சூடியவள்
புன்னகையும் புதுப்பொலிவும் பூமணமும் நித்தம்
நிறைதலம் நீள்கடல் நாயகியே!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.

Ramalakshmi Rajan

unread,
Sep 25, 2014, 10:31:15 AM9/25/14
to வல்லமை, mintamil
அனைவருக்கும் நவராத்திரி விழாக்கால நல்வாழ்த்துகள்! ஒவ்வொருவரின் பகிர்வும் அருமை. நன்றி. ரதத்தைத் தொடருகிறேன்.
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

shylaja

unread,
Sep 26, 2014, 12:32:34 AM9/26/14
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், mintamil
காவிரி நீர்பாய்ந்துவரும் திருவரங்க நகரினிலே
பூவிரியும் சோலைசூழ் பொற்கோவில் மேவிடுவாள்
தீவிரியும்  வினை தீர அருள் புரியும் ஸ்ரீரங்கநாயகியை
நா விரியும் கீர்த்தியினால்  சீர்பாடி நாம் நோற்போம்!

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

srirangam-sri-ranganayaki-thirvadi-sevai.jpg
pinnazaku.jpg

shylaja

unread,
Sep 26, 2014, 12:35:26 AM9/26/14
to vallamai, mintamil
மைசூர்தசராபற்றிய சிறப்பான பதிவு ..தசரா கொண்டாட்டம் இந்தவருடம் சற்று   சுவைகுறைந்தாலும் கலைநிகழ்ச்சிகள் வழக்கம்போல  அமர்க்களமாக இருக்கும் என்கிறார்கள்  ..தலக்காடு சாபம்  கதை கோயிலை   நேரில்பார்த்தபோது  உண்மை என விளங்கியது.

shylaja

unread,
Sep 26, 2014, 12:36:12 AM9/26/14
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், mintamil
குமரி அன்னை படம்  குளிர்விக்கிறது மனதை/நன்றி பவ்ழா

2014-09-24 23:55 GMT-07:00 coral shree <cor...@gmail.com>:
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

shylaja

unread,
Sep 26, 2014, 12:37:02 AM9/26/14
to vallamai, mintamil
வருக ராமலஷ்மி உங்க படங்கள்  அழகுக்கு அழகு சேர்க்க வரவேண்டும்
 
அன்புடன்

coral shree

unread,
Sep 26, 2014, 1:44:43 AM9/26/14
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், mintamil

அம்புவியைக் காக்கும் அருளன்னை - கனிவுடனே
இப்புவி மாந்தரின் சங்கடம் போக்குமலர்ப்பாதம்
மந்திரச் சொல்லால் பணிந்து நாளும்
வெந்தயத்தீயின் விதியை வீழ்த்து!

நன்றி
அன்புடன்
பவளா
Narayani1.jpg

meena muthu

unread,
Sep 26, 2014, 1:08:24 PM9/26/14
to vallamai, mintamil
அழகு ரதம் அசைந்து வருகுது! 
அகிலமெங்கும் அருள் பொழிய
அன்னையவள் பவனி வர
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

(தோழர்)தோழியர் அனைவரும் கோலாகலமாக நவராத்திரி விழாவை கொண்டாட குழுமிவிட்டீர்கள்! இந்த ஜோதியில் இதோ நானும் கலந்துவிட்டேன்!.

ஒவ்வொருவரும் விதவிதமாக அன்னையை நினைத்து அவளுக்கு பாமாலை 
பூமாலை எல்லாம் அணிவித்து ஜோடித்து அழகு பார்த்திருக்கிறீர்கள்! 

அடடா..!அனைத்தும்(பார்த்)தேன்!(வாசித்)தேன்!(அதிசயித்)தேன்

அன்புடன்
மீனா

coral shree

unread,
Sep 27, 2014, 3:02:51 AM9/27/14
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், mintamil

கற்பகவல்லியே! காமாட்சியே!

நன்றி : வல்லமை

பவள சங்கரி

8

நவ்வி போலுமே விழியுடையாள் – ஐயன்
கவ்வி கடுந்தவம் கலைத்துமகிழ செல்வி
நஞ்சுண்டகண்டனவன் பாதம் பணிந்தே 
பாவவினை களையும் வரமளிப்பவளே!!

கனிவளச் சோலையில் கற்பகத்தருவாய் படர்ந்து
கசிந்துருகும் பக்தரின் பரிதவிப்பில் சொற்பதமாய்
விரிந்துவிரிந்து விசித்திரமாய் விந்தையானாய்
விரைந்துவந்து உந்தன் மகவைக் காத்தருளே!

சிந்திய முத்துக்களின் புத்தொளியில் சீவனின்
சிந்தை மலர்களின் சிலிர்ப்பில் சித்தாந்தம்
பேசும் சின்னக் கிளியின் கொஞ்சுமொழியில்
சித்தம் கலங்காமல் இறுமாப்பு கொண்டாயோ?

ஒங்காரரூபினி என்றால் ஓயாமல் ஓசைஎழுப்பி
ரீங்காரம் செய்யும் தேனீயாய் சுற்றிவரும்
பாங்கான பக்தருக்கு வரமருளும் நித்தமும்
நீங்காத நாயகியே! காத்தருளும் காமாட்சியே!!

நன்றி
அன்புடன்
பவளா
Narayani1.jpg

தேமொழி

unread,
Sep 27, 2014, 4:09:20 AM9/27/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

அருமையான பாடல் ஒன்று:  http://youtu.be/KQxEgUNDDbo

..... தேமொழி

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
           ளாக விளங்கிடுவாய்!
     தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
            விண்ணப்பம் செய்துடுவேன் .
     எள்ளத் தனைபபோழு துமபய னின்றி
             யிராதென்றன் நாவினிலே
      வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
             வேல்சக்தி வேல்சக்தி வேல்

பாரதியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

coral shree

unread,
Sep 28, 2014, 9:45:22 PM9/28/14
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், mintamil

வெற்றிவாகினியே வீரத்திருமகளே
ஊரெல்லாம் குதூகலமாய்
கூடிக் களித்திருக்கையில்
பாடிப்பரவசமாய் ஓருயிர்
பத்ரகாளியுந்தன் பதம்பணிந்தே
நித்தமுன்நாமம் கூவியழைத்து
வெதும்பியழ பாவியானென 
பரிதவித்து உனைத்தொழ
சூழும்துயர் களையாமல்
எங்கனம் செல்வாயோநீயே!

கங்கனம்கட்டாமலே காவலுக்கு
நில்லாமலே சொல்லெலாம்
நிறைந்தாலும் சுள்ளென்று
தீக்கனல் சொரிந்து தள்ளென்று
தவிக்கவிட்டு பகடையாயுருட்டி
பச்சிளம்குழவியாய் பாசவினைக்காய்
ஏங்கிஏங்கி மாய்ந்துமாய்ந்து
மருண்டுநிற்கும் பேதைதனை
தளிர்க்கரம் நீட்டி தாவியணைக்காமல்
தீக்கனல்மூட்டி சுட்டெரித்து
அச்சமூட்ட குற்றமென்னசெய்தேன்?

குவிந்த இதழ் முத்தமிட்டது
உன்திருநாமம் மட்டும்தானே
பணிந்தசிரம் தொட்டணைத்தது
உந்தன்பாதமலர்மட்டுமன்றோ
விரிந்தகூந்தலில் விருப்பமாயமர்ந்தது
 இதயமலர் என்பதையறியாயோ
இரத்த நாளங்களனைத்தும்  சுற்றியுனை
உருகிஉயிர் உன் காலடியில் 
மருகிமயலாகி மடிந்துஒளிருதே
அறியாயோ நீயே! வரம் அருளாயோ தாயே!

ஆங்காரம் அடியோடு ஒடுங்கி
ஓங்காரமாய் நிற்கும் தேவியுந்தன்
பாதாரவிந்தம் சேரும்நாள் எந்நாளோ
வாழும் உயிர்களனைத்தும்
பாழும்பந்தத்தில் உழலாமல் 
சித்தம்சீராய் சிந்தைதெளிவாய் 
நம்பிக்கை ஒளியாய் நயமான
கற்பகத்தேரில் கனிவாய் பவனிவரும்
அற்புதக்காட்சி! கருத்தில் நிறைந்த 
கற்கண்டாய் கனிரசமாய் மலர்ந்த காட்சி!
சொற்பதங் கடந்த மௌனமொழிக்காட்சி!
கருணைக்கடலே! காக்கும் அன்னையே! 
காத்தருள் காளியே! சிம்மவாகினியே!

நன்றி

அன்புடன்
பவளா

Narayani1.jpg

Meena Muthu

unread,
Sep 29, 2014, 6:52:50 AM9/29/14
to thamiz...@googlegroups.com, தமிழ் வாசல், vallamai, mintamil
ஒவ்வொருநாளும் அன்னையின் அற்புததரிசனம்! 

அனைவரும் காண இங்கு எழுந்தருளச்செய்யும் அன்பின் பவளாவிற்கு வாழ்த்துகள்!

On 29-Sep-2014, at 9:45 am, coral shree <cor...@gmail.com> wrote:

வெற்றிவாகினியே வீரத்திருமகளே
ஊரெல்லாம் குதூகலமாய்
கூடிக் களித்திருக்கையில்
பாடிப்பரவசமாய் ஓருயிர்
பத்ரகாளியுந்தன் பதம்பணிந்தே
நித்தமுன்நாமம் கூவியழைத்து
வெதும்பியழ பாவியானென 
பரிதவித்து உனைத்தொழ
சூழும்துயர் களையாமல்
எங்கனம் செல்வாயோநீயே!

shylaja

unread,
Sep 29, 2014, 9:26:55 AM9/29/14
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், mintamil
வெற்றி வாகினி! ஆஹா  பவழா  இந்தவார்த்தையே அழகாய் இருக்கே...ரதம்  சிலர் இழுவை என்கிறார்கள்  இதெல்லாம் கண்லபடாதுபோலும்  !
Narayani1.jpg

shylaja

unread,
Sep 29, 2014, 9:28:29 AM9/29/14
to vallamai, mintamil
பிடித்த பாட்டு  இதுவும்.நன்றி தேமொழி

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

coral shree

unread,
Sep 29, 2014, 11:12:20 AM9/29/14
to vallamai, mintamil
​மீனா மேடம், ஷைலு, துளசி மேடம், பார்வதி, தேமொழி, மேகலா, விசாலம், ரஞ்சனி மேடம், தமிழ்த்தேனீ சார், சுபா, அனைவருக்கும், நன்றியும், வாழ்த்துகளும்​.

அன்புடன்
பவளா

தேமொழி

unread,
Sep 29, 2014, 5:19:34 PM9/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

"ஜனனி" எனக்கு மிகவும் பிடித்த கல்யாணி ராகப் பாடல்  :D

மேலும் "மைசூர்பாகு" போன்ற இனிமையான பாடல்களும் அடுத்து இடம் பெரும் ...அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கலாம்...

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 29, 2014, 9:10:46 PM9/29/14
to வல்லமை, மின்தமிழ்
ஆஹா!.. நவராத்திரி ரதம் அழகுற அசைந்தாடி வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி..அனைவருக்கும் மனமார்ந்த நன்றி....துளசிம்மா, கொலு அழகோ அழகு. மீனாம்மா, பவளாக்கா எல்லாரும் அற்புதமாக வடம் பிடிக்கிறார்கள். தினமும் பாமாலை சூட்டி மகிழும் ப‌வளாக்கா, ஷைலஜாக்கா இருவரும் மனதில் தெய்வீகம் நிரப்புகின்றார்கள். தேமொழி வழங்கிய பாடல் எனக்கும் மிகப் பிடித்தமானதே..

நிறைய விருந்தினர்கள்.. அதனால் கொஞ்சம் நேரப் பிரச்னை.. சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து வாசிக்கின்றேன்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-09-30 4:10 GMT+05:30 Tulsi Gopal <gopal...@gmail.com>:
​        

shylaja

unread,
Sep 29, 2014, 9:23:16 PM9/29/14
to vallamai, mintamil
:):) மைசூர்பாகு என்றதும் ஏதோ  புரிவதுபோல பிரமை:)

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 29, 2014, 9:47:33 PM9/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
புரிந்தால் சரி :)))))))))))))

..... தேமொழி

தேமொழி

unread,
Sep 30, 2014, 1:27:40 AM9/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பெயர் குறிப்பிட விரும்பாத தோழி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படைப்பு இங்கு பதிவிடப்படுகிறது.

__________________________________________________________________________________________________________________________________

வாஷிங்டனில் நவராத்ரி

 வாஷிங்டனில் திருமணம் என்று பலவருடங்கள் முன்பு விகடனில் சாவி என்னும் எழுத்தாளர் நகைச்சுவைகதை எழுதிஇருந்தார். 

வாஷிங்டனில் நவராத்திரி கேள்விப்பட்டிருக்கீங்களா?

இருங்க அதைத்தான் இப்போ சொல்லப்போறேன்.
4வருடம் முன்பு நவராத்திரி நேரம் நான் என் சித்தப்பாவின் வீட்டில் வாஷிங்டனில் இருந்தபோது நவராத்திரிகொலு வைக்கும் ஆசைவந்தது.

நம்ம ஊர் மாதிரி அங்க வீடுகளில் எல்லா இடங்களிலும் தரையே தெரிவதில்லை(சிலவீடுகளில் சமையற்கட்டுமட்டும்) அங்கே பெரும்பாலும் கார்பெட் போர்த்தியதரைகளே. மாடிப்படிகள், சுவர்
எல்லாம் மரத்தில்தான் .. சகலமும் விருட்ச ராஜ்ஜியம்,அபார்ட்மெண்ட் வீடுகளில் நாலாவது மாடியில் குடி இருப்பவர்கள் ராத்திரியில் நடந்துபோனால் சரக்சரக் என சில நேரம் சத்தம் கீழ்வீட்டுக்காரங்களுக்குக் கேட்கிறது.  போனபுதிதில் நான் கொஞ்சம் அரண்டுபோனது நிஜம்.

ஆனால் இந்தமரசுவர்களில் ஒரு பெரியவசதி என்னவென்றால் சுவரில் ஒரு காலண்டர் அடிக்கவேண்டுமானால் டக் என்று ஆணி அடித்த உடன் சமத்தாய் ஆணி இறங்கிப் போகிறது. ஆனால் வாடகைவிட்டில்
அபார்ட்மெண்ட்டில் எல்லாம் இப்படி டக்டக் என்றுஆணி அதிகம் அடிக்கக் கூடாதாம்
வாடகைவீடுகளில் மாவிலைதோரணம் வாசலில்கோலம் என்று பல நம்மூர் வழக்கங்கள் நாட் அலவ்ட்!

வாஷிங்டனில் அக்டோ பர் குளிர் நாளில் நான் போனபோதுதான் தசரா வந்தது.

இந்தியாவில் ஸ்ரீரங்கத்தில் இருந்தநாட்களில் கொலுபொம்மைகள் வைக்க ஒருவாரம்முன்பே
கோயில் வளாகத்தின் ரங்கவிலாசில் படை எடுத்து புதுப்புதுபொம்மைகளாய் சேர்த்துவிடுவோம். அப்போதெல்லாம் கள்ளி(அல்லது கல்லுவா அர்த்தமே சரியா இல்லயே:))பெட்டிகள் கண்டாமுண்டாசாமான்கள் கனம்நிறைந்த பழைய தீபாவளிமலர்கள் டால்டாடப்பாக்கள் என்று கொலுபடிக்கு ஆதார வேர்களாய்பல பொருட்கள் வீட்டில் சுலபமாய் கிடைக்கும்.. 
பார்க் ஜூ அருவி என்று கற்பனைக்கு வந்தபடி
கைவரிசையைக்காட்டுவோம்..அப்புறம் ஸ்லாட்டட் ஆங்கிள்வந்தது சாதாரணநாட்களில் அது எங்களுக்குபுத்தக அலமாரி கொலுநாட்களில் அதுவே படிக்கட்டுகளாய் அவதாரம் எடுக்கும்.
வாஷிங்டனில் விஸ்தாரமாய் கொலுவைக்க ஆசைப்பட்டு தயாராகத்தான் ஊரிலிருந்துவந்திருந்தேன்.

ஆறேழுமாதம் சுற்றிபார்க்கவந்த இடத்தில் சித்தப்பாவிடம் அதைவாங்குங்க இதைவாங்குங்க என்று ஆர்டர் போடமுடியுமா? ஆனாலும் கொலு என்றால் படிகள் அமைத்து அதில்பொம்மைவைத்தால் அதன் அழகே தனிதான்.

ஆனால் சித்தப்பாவும (அமெரிக்க) சித்திக்கும் என்கவலைபுரிந்தது போலும்

". டோ ண்ட் ஒர்ரி இங்க மரக்கடைகளுக்குபோனால் விதம்விதமாய் சைஸ் வாரியாய் மரப்பலகைகள்கிடைக்கும் வாங்கிவரலாம்" என்றனர்.

மரக்கடை என்றதும் நான் கூட திருச்சிபாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் மரக்கடைகளைவிட சற்றுப்பெரிதாய் கற்பனை செய்துகொண்டேன். ஆனால் அங்கே போனதும்தான் தெரிந்தது அது ஒரு
கிரிக்கட் மைதானம் அளவில் இருக்கிறதென்று !அமெரிக்காவில் எல்லாமே பெருசு தான்!

விதம்விதமான அளவில் மரப்பலகைகள் வாங்கினதும் அதை அறுப்பதற்கு என்ன செய்வதென்று விழித்தோம்.

என் கணவர்," நீதான் இருக்கிறாயே ?"என்று தன் பங்குக்கு அறுத்தார்! மறுபடி,அறம் ரம்பம் இழைப்புளி இன்ன பிறஆயுதங்களை சித்தப்பா வாங்கினார்.

எல்லாம் கார்டில் தேய்த்து வாங்கிவிட்டதால் அப்போது விலை தெரியாத எனக்கு பிறகு டாலரில்
விலை கேட்டுதெரிந்து அதை என் இந்தியமூளை ரூபாயில் பெருக்கிப்பார்த்து மொத்தம் பத்தாயிரம்
ரூபாய்க்குமேல அகிவிட்டது எனப்புரிந்ததும் திகைப்பானது.

"இட்ஸ் ஆல்ரைட்" என்றார் சித்தப்பா பெருந்தன்மையாக.

வீட்டிற்குவந்து மரப்பலகைகளை மெதுவாய் இறக்கி வீட்டிற்குள்கொண்டுவந்து சேர்த்தோம்
சித்தப்பாவும் என்கணவரும் இஞ்ச் டேப்பால் அளவு எடுத்து குறித்து அளந்து ஒருவழியாய் அறுத்து எடுத்த போது பலமணிநேரங்கள் ஓடிவிட்டன.

இந்தியாவிலிருந்த் புறப்படும்போதே ஒரு அட்டைப்பெட்டியில் தசாவதார(சினிமா அல்ல):) செட், சீதாராம பரத சத்ருகுண ஆஞ்சநேய செட் இன்னும் பலபொம்மைகளை தெர்மாகொலில் பதுக்கிக்கொண்டுவந்திருந்தேன்
தஞ்சாவூர் தலையாட்டி செட்டியார்பொம்மை எந்த ஏர்போர்ட் ஸ்டாண்டார்ட் பெட்டிகளிலும் அடங்காமல் உடைந்த பல் வெளியே தெரிய செட்டியார் மானத்தை வாங்கிவிட்டார்!

செட்டியாரை அமுக்கி கைப்பையில் பெரியதுண்டில் சுற்றிப்போட்டுகொண்டு திருட்டுமுழி முழித்தபோது லுஃப்தான்சா விமானப்பணிப்பெண் என்னை ஒரு சந்தேகப்பார்வை பார்த்துப்பின் பையைத்திறந்து பார்த்து சமாதானமானாள்.

எல்லாவற்றையும் இப்போது ஆர்வமாய் வெளியே எடுத்தேன்.

மீராபாயின் தம்புராவில் இரண்டு இழை விலகி இருக்க காந்தீஜீ நூற்றுக்கொண்டிருந்த தக்ளிகாணாமல்போயிருக்க ராமலட்சுமண செட்டில் அனுமாரின் கன்னத்தில் காயம்பட்டமாதிரி லேசாய் பொம்மை உடைந்துவிட்டிருந்தது.

தசாவதார செட்டில் வாமன அவதாரம் இந்தியாவிலேயே மறந்து விட்டுவந்திருப்பதை உணர்ந்தேன்.

தசாவதாரம் நவராத்ரிக்கு ஏற்றமாதிரி நவாவதாரம் ஆக இருக்கட்டும் என்ன செய்வது!

சித்தப்பா ஈமெயில் முலம் நவராத்திரிக்கு தமிழ்க்குடும்பங்களை அழைத்து அழைப்பு விடுத்திருந்தார்.

சித்தி அரைகுறைதமிழில் நவராத்திரி மகாத்மியத்தை என்னிடம் கேட்டுத்தெரிந்துகொண்டார். நான்
வாங்கிவந்திருந்த மைசூர் சில்க் சேலையைக்கட்டிக்கொண்டு சுண்டல் செய்ய உதவி புரிந்தார்.

ஏழெட்டுமாமிகள்முதல்நாளே பி எம் டபில்யூ காரில்வந்துஇறங்கினர்.

ஒருமாமி கொலுவைக்கண்டதும் தானாகவே
'சரஜிஜநாபசோதரி ' என்று உணர்ச்சிவசப்பட்டுப்பாடதொடங்கிவிட்டார்.

இன்னொரு மாமியிடம் நான் தான் சும்மா இல்லாமல் "ஸ்ரீசக்ரராஜ." :பாடச்சொல்லி வேண்டுகோள் விடுக்க அவங்க, 'பலவிதமாயுன்னைப்பாடவும் ஆடவும்' என்ற வரியைமட்டும் பலவிதமாய்ப்பாடி அபிநயித்து
நீணட்டிமுழக்கி பாடிக்கொண்டே இருந்தார்! அப்புறம் சுண்டல் விநியோகித்துப் படுக்கப்
போகும்போது நள்ளிரவாகிவிட்டது!நித்திரைபறிபோனதில் நொந்து போய் என்கணவர்"இனிமே மாமிகளை பாடச்சொல்லி வற்புறுத்தாதே ப்ளீஸ்" என்று என்னிடம் கைகுவித்தார்.

இன்னொருநாள் நாலைந்து சிறுமிகள்பட்டுப்பாவாடை காதில் ஜிமிக்கி கழுத்தில் காசுமாலை என்று அசல் கிராமத்துச்சிறுமிகள்போல டொயோட்டா காரில் வந்து இறங்கினர்.

ஆங்கிலமும்தமிழும்கலந்து பேசியபடி அவர்கள் தங்கள் அம்மாக்களோடும் தாத்தா பாட்டிகளோடும்வந்து அமர்ந்ததும்" யாராவதுபாடுங்களேன்" என்றேன்.

"வர்ஷா நன்னா திவ்யமா பாடுவா" என்றார் குழந்தையின் தாத்தா பெருமையாக.

:”ஆமா  ஸ்கைப்ல  கத்துக்கறா”

கூடவந்த குழந்தையின் பாட்டி என் கழுத்தில் இருந்த  முத்துமாலையை நோட்டம் விட்டபடியே சொன்னார். அரைக்கணத்திலேயே  காதருகில்வந்து,”மாலை ஜெம் ஷோல வாங்கினியா என்ன எவ்வளோ டாலர்?” என்று கிசுகிசுத்தார்.

அந்த ஏழுவயது வர்ஷாவைபாடச்சொன்னேன்.

அதுபலமாய்த் தலையாட்டியது.

"எனக்குதமிழ் சாங் தெரியுமே?" என்றது குஷியானகுரலில்.

"ஆஹா இந்த அமெரிக்கால இருந்துண்டு தமிழ் பேசறியே அதே பெருமையா இருக்கு..எங்க
ஒருபாட்டுபாடு,,கேக்கலாம்?"

"ஸ்ருதிப்பெட்டி கொண்டுவரலையே அச்சச்சோ" தவித்தது குழந்தை.

அமெரிக்க சித்தி,"நான் வச்ருக்கேன்  த்ரேன்.." என்று ஆர்வமாய் இந்தியாபோனபோது வாங்கிய எலெக்ட் ரானிக் ஸ்ருதிப்பெட்டியயை எடுத்துவந்து கொடுக்கவும் குழந்தையின் அம்மா அதனில் ஸ்ருதி சேர்த்து அதை, குழந்தை அங்கீகரிக்க அரைமணி ஆகியது. 

வர்ஷா கைவளையல்களைபின்னுக்குத் தள்ளிக்கொண்டு சம்மணம்போட்டுகொண்டு அமர்ந்தாள்

"வலதுகைலதான் தாளம்போடணும் வர்ஷு" குழந்தையின் அம்மா எச்சரித்தாள்.

'ஒகேமாம்மீ"

தொண்டையைக்கனைத்துக்கொண்டதுகுழந்தை

சூடா பால் குடிக்கறியா வேணா?

வேணாம்...பால் அலர்ஜி குழந்தைக்கு

பாத்துகுழந்த.. ஸ்ருதிபிசகாம பாடு என்ன? நவராத்திரி நாள்ள பாடற..அமோகமா கலை வளரணும்.

இடக்கரத்தால் தலைப்பின்னலை எடுத்து முன்னேதள்ளிக்கொண்டபடி," ஆரம்பிக்கட்டுமா?" என்றுகேட்டது

அட! ஆரம்பமே அமர்க்களமா இருக்கே! --- தாத்தா பூரித்துப்போனார்.

"பாடு குழந்தே.. கேக்க காத்துக்கொண்டிருக்கோம்"

"சுட்டும்விழிச்சுடரே சுட்டும்விழிச்சுடரே என்னுலகம் உன்னைச்சுற்றுதே, சட்டப்பையில் உன்படம் பற்றிக்கொண்டு உரச ..." வர்ஷா உரத்தகுரலில்  தாளம் போட்டபடி   குதூகலமாய்ப்பாட 

தாத்தா தலைஆட்டி ரசிக்க, கூட்டம் கைத்தட்டி உடன்பாட, நான் ஙே என்று விழிக்க......

இப்படி ஏக அமர்க்களத்துடன் வாஷிங்டனில் நவராத்திரி நடந்து முடிந்தது.
********************************************************************** 
(மஞ்சுளாரமேஷின் சிநேகிதிபத்திரிகையில் பிரசுரமானது)

Suba.T.

unread,
Sep 30, 2014, 2:59:18 AM9/30/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-30 3:22 GMT+02:00 shylaja <shyl...@gmail.com>:
:):) மைசூர்பாகு என்றதும் ஏதோ  புரிவதுபோல பிரமை:)

​எனக்கு புரியலையே.. விளக்கினால் நன்று.

சுபா​
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Meena Muthu

unread,
Sep 30, 2014, 3:55:46 AM9/30/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
Hahaha .....எழுத்தின் நடை..
தோழி யாருன்னு சொல்லிருச்சே...!
ஆமா ஏன் இந்த தலைமறைவு படலம் :))

shylaja

unread,
Sep 30, 2014, 5:57:32 AM9/30/14
to vallamai, mint...@googlegroups.com
//ஆமா ஏன் இந்த தலைமறைவு படலம் :))

மீனாஜி..! நல்ல கேள்வி.எல்லாம் ஒரு பயபக்திதான்:)  நீங்களும் துளசியும்  மரத்தடி காலமிருந்தே  ஸ்மார்ட் ..உங்களூக்கெல்லாம் கண்டுபிடிக்கமுடியலேன்னாதான் ஆச்சரியம்:)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Sep 30, 2014, 6:06:55 AM9/30/14
to mintamil
தேருக்கு(ரதத்துக்கு) முட்டுக்கட்டையோ என்னவோ போடுவாங்களே அதை மைசூர்பாக் என தேமொழி சொல்கிறாரோ  புரியவில்லை எனக்கும்:) இன்னும் பிரமைலஜா தான்:)

meena muthu

unread,
Sep 30, 2014, 11:46:13 AM9/30/14
to மின்தமிழ்
// "மைசூர்பாகு" போன்ற இனிமையான பாடல்களும் அடுத்து இடம் பெரும் .....//

’அதான் ”மைசூர்பாகு” மாதிரி தித்திக்கும் பாடல்கள் ன்னு தெளிவா சொல்லிருக்காங்களே தேமொழி... அப்புறம் என்னப்பா..’!

meena muthu

unread,
Sep 30, 2014, 11:51:20 AM9/30/14
to vallamai, mint...@googlegroups.com

2014-09-30 17:57 GMT+08:00 shylaja <shyl...@gmail.com>:
மீனாஜி..! நீங்களும்--------மரத்தடி காலமிருந்தே  ஸ்மார்ட் ..உங்களூக்கெல்லாம் கண்டுபிடிக்கமுடியலேன்னாதான் ஆச்சரியம்:)

’அய்யோ... ஷைலு... இப்படியா காமெடி பண்ணுவாங்க ஹைய்யொ ஹைய்யோ... 

meena muthu

unread,
Sep 30, 2014, 1:06:22 PM9/30/14
to vallamai, mintamil
                   
நவராத்திரி நாயகி:

"ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி"

என்னுள்ளத்தில்(எங்களின்  வீட்டிற்கு  அருகில்)குடி கொண்டிருக்கும் அன்னையர்களுக்கெல்லாம்  அன்னையான  அவளை  நினைத்து...

'ஆயிரம் நாமத்தால் அர்ச்சனை செய்தாலும்

அன்னை உந்தன் பெருமை சொல்லத்தரமோ

ஆயுளும் யோகமும் ஐஸ்வர்யம் யாவும் உன்

அன்பினால் கடைக்கண் பொழி அருளே - திருவே..

ஸ்ராவண பௌர்ணமி முன் சுக்கிரவாரத்தில்

சௌந்தர்யவதி உன்னை ஸ்ரத்தையாய் பூஜிக்க

தேவாதி தேவரும் தேடி வருவார் தேவி

உந்தன் திருவருளை நாடி வருவார்

ஸர்வா பரணமொடு காஷி தருவாய்

மன ஸஞ்சலங்கள் துடைத்து ஆட்சி புரிவாய் - திருவே செந்திருவே..'

பீம்ப்ளாஸ் ராகத்தில்  அமைந்திருக்கும்  இந்தப் பாடல்  கேட்கும் பொழுதெல்லாம் குளமான கண்களுக்குள் ராஜேஸ்வரி அமர்ந்திருப்பாள்!

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம் சிறிய குன்றின் மேல், ஆற்றின் கரையோரம் அற்புதமான அழகுடன்  இயற்கை  சூழலில் அமைந்திருக்கிறது.  ஆலயத்தின்  நுழைவாயிலில் இருபத்தைந்து படிகள் ஏறி மேலே வந்தால்பளிச்சென்று நல்ல காற்றோட்டத்துடன் விசாலமான(பிராத்தனை)மண்டபம். (உள்ளே நுழைந்தவுடன் மனதில் ஏற்படும் அந்த உணர்வு!)  கோயிலின் அடித்தளத்தில் கல்யாண மண்டபம்  (இங்குதான் கொலுவைக்கப்பெறும்!) அதன் மேல் தளத்தில்  ஆலயம் அமைந்திருக்கிறது.

 மண்டபத்தின் உள்ளே ஆலயத்தின் பிரதான கருவறையின் இடப் பக்கத்தில் வீற்றிருக்கிறார் (ஐந்து கரப்பெருமான்)சித்திவிநாயகர். ஆலயத்தின் மற்ற திருமேனிகளைப் போலவே இந்தத் திருமேனியும் தமிழகத்தின் புகழ் பெற்ற சிற்பி தேவகோட்டை முத்துக் கருப்பரால் ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப் பட்டதாகும்! 1977 ல் நிகழ்ந்த முதல் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவில் இத்திருமேனி பிரதிஷ்டை செய்யப் பட்டது.

சித்திவிநாயகரைச் சுற்றி வலம் வரும்போது முதலில் காட்சி அளிப்பவர் விஷ்ணுதுர்கை என வழங்கப்படும் அன்னை துர்காதேவி, தொடர்ந்து வலம் வர (பிரதானக் கருவறையின் வலப்பக்கம்) இங்கு காட்சி அளிப்பவர் (பாலசுப்பிரமணியனாக அருள்பாலிக்கும்) திருமுருகப்பெருமான் ஆவார்.அடுத்து பிரார்த்தனை மண்டபத்திற்கு வரும் படிக்கட்டுகளின் எதிரே மூலஸ்தானம், (இப்பிரதான கருவறையின்)வாயிலில் (தூய வெண்ணிறத்தில்)  துவார பாலகர்கள் இருவருடன் நடுநாயகமாக ஏற்றமுடன் காட்சியளிப்பது பொற்றாமரையின் மேல் அமர்ந்த நிலையில் சௌந்தரவல்லியாக உலகநாயகி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரித் தாயார்!.

பிரார்த்தனை மண்டபத்தின் இருபுறமும் இரு சிறிய மண்டபங்கள் உள்ளன, மூலஸ்தானத்தின் இடப்புறம் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் ஸ்ரீகணேசர், ஸ்ரீதுர்கை, வள்ளிதெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப்பெருமான் வீற்றிருக்கின்றனர். வலப்புறம் உள்ள நடராஜ மண்டபத்தில் சண்டிகேஸ்வரராக சிவபெருமான், சிவகாமி சமேதரராய் நடராஜர், நாயன்மார்கள் நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.கீழே ஆலயத்தின் இடப்பக்கம் வெளிப் 

பிரகாரத்தில் ஆற்றின் ஓரத்தில் நவக்கிரக நாயகர்களுக்கென்று தனி திருக்கோவில் அமைந்திருக்கிறது.

நவக்கிரக சந்நிதிக்கும் ஆற்றுக்கும் இடையில் அரசமரம் ஒன்று ஆலயத்தின் மேல் குளு குளுவென்று தன் நிழலைப் பரப்பிக் கொண்டு கம்பீரமாக நிற்பது, ஆற்றின் இருபக்கமும் (கோயிலின் உள்ளே) செண்பக மரங்களும், கரும்பும், நவக்கிரக மூலஸ்தானத்திற்கு வலப்புறம் பெரி(ய்)யநாவல் மரம் ஒன்று(!) மஞ்சள் பூக்களுடன் பழங்களுடன் பசுமையாக கிளை பரப்பி நிற்பதும் (கொட்டிக் கிடக்கும் பழங்களைப் பொறுக்கி ஒட்டியிருக்கும் மண்ணை ஊதும் போது ஔவையும், ஆடுமேய்க்கும் முருக(சிறுவ)னும் நினைவில் வருவது!) கருவறையின் முன்புறம் வில்வமரம் ஒன்று உயர்ந்து அடர்ந்த கிளைகளுடன், கோவிலின் உட்புறம் வன்னி  மரங்களும், ஆலயத்தின் இடப்பக்க  நுழை வாயிலுக்கும் கோயிலின் வெளிப்பிரகாரத் துக்கும் இடையில்  இரு வேப்பமரங்கள் இம்மரங்களின் கிளைகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு மேல் குடைபோல் படர்ந்து இருப்பது வெகு அழகு!.

இங்கு வருடம்தோறும் நவராத்திரி கொண்டாட்டம் பிரமாதப்படும். இந்தப் பத்து நாளும் கோவில் திருவிழாக் கோலத்துடன்  தக தகவென்று ஜொலிக்கும்!.

மண்டபத்தில் ஒன்பது படிகளுடன் அழகாக அடுக்கப்பட்டிருக்கும் கொலுவின்  வலதுபக்கத்தில் நடுநாயகமாக பெரிய உருவத்தில் தத்ரூபமாக திருப்பதி ஏழுமலையான் எழுந்தருளியிருப்பார்,

அவருக்கு அடுத்தாற்போல் சிறிய மேடை அமைத்து அதில் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அழகாக காட்சி தருவாள்,.கொலுவின் கடைசி நாள் அம்பு போடுவதும், அதற்கு அடுத்தநாள் (ஒவ்வொருவரும் உற்சாகத்துடன்  வித விதமாக  சீர்வரிசை எடுத்துச்செல்ல) விமரிசையாக  திருக்கல்யாணமும் ,அதையொட்டி திருமண விருந்தும் அமர்களப்படும்.

இப்படி  நாட்டியம், வீணை, வயலின், பாட்டு என ஒவ்வொரு நாளும் இன்றைக்கென்ன அலங்காரத்தில் அன்னை இருப்பாள்?  இன்று யாரின் நாட்டியம், பாடுவது யார்,?வயலினா, வீணையா.. வாசிக்கப் போவது யார் ? என அறியும் ஆவலுடன் ஆலயம் சென்று பார்க்க  கேட்க  ரொம்பவும் மகிழ்ச்சியாக ஆனந்தமாக இருக்கும்.

அகில உலகமும் சுபிட்சம் பெற நம் அன்னை ராஜராஜேஸ்வரி யின் அருள் வேண்டி வணங்குவோம் வாருங்கள் தோழியரே!.

தற்போது இக்கோவில் புதிய மாற்றங்களுடன் மிகப்பெரிதாக விரிவாக்கம் செய்து வெகுசிறப்பான முறையில் சென்ற வருடம் நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இப்பதிவு10 வருடங்களுக்கு முன் ”தோழியர்” (womankind.yarl.net/archives/2004/10/22) வலைப்பதிவில் எழுதியது.

நீண்ட விரிவான பதிவின் சுருக்கத்தை இங்கே மீள்பதிவு செய்துள்ளேன் நன்றி.

அன்புடன்

மீனா

Sri Raja Rajeswary Amman.jpg

coral shree

unread,
Sep 30, 2014, 8:22:07 PM9/30/14
to vallamai, mintamil
அரிதான இடுகை.. மீள் பதிவிற்கு மிக்க நன்றிங்க மீனா மேடம்.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Take life as it comes.
Sri Raja Rajeswary Amman.jpg

shylaja

unread,
Sep 30, 2014, 10:48:54 PM9/30/14
to vallamai, mintamil
2014-09-30 10:06 GMT-07:00 meena muthu <ranga...@gmail.com>:
                   
நவராத்திரி நாயகி:

"ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி"

என்னுள்ளத்தில்(எங்களின்  வீட்டிற்கு  அருகில்)குடி கொண்டிருக்கும் அன்னையர்களுக்கெல்லாம்  அன்னையான  அவளை  நினைத்து...

'ஆயிரம் நாமத்தால் அர்ச்சனை செய்தாலும்

அன்னை உந்தன் பெருமை சொல்லத்தரமோ

ஆயுளும் யோகமும் ஐஸ்வர்யம் யாவும் உன்

அன்பினால் கடைக்கண் பொழி அருளே - திருவே..

ஸ்ராவண பௌர்ணமி முன் சுக்கிரவாரத்தில்

சௌந்தர்யவதி உன்னை ஸ்ரத்தையாய் பூஜிக்க

தேவாதி தேவரும் தேடி வருவார் தேவி

உந்தன் திருவருளை நாடி வருவார்

ஸர்வா பரணமொடு காஷி தருவாய்

மன ஸஞ்சலங்கள் துடைத்து ஆட்சி புரிவாய் - திருவே செந்திருவே..'

பீம்ப்ளாஸ் ராகத்தில்  அமைந்திருக்கும்  இந்தப் பாடல்  கேட்கும் பொழுதெல்லாம் குளமான கண்களுக்குள் ராஜேஸ்வரி அமர்ந்திருப்பாள்!>>பாட்டையும்  கொடுங்க மீனாஜி யு ட்யூப்ல இருக்கா  கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறது

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம் சிறிய குன்றின் மேல், ஆற்றின் கரையோரம் அற்புதமான அழகுடன்  இயற்கை  சூழலில் அமைந்திருக்கிறது.  ஆலயத்தின்  நுழைவாயிலில் இருபத்தைந்து படிகள் ஏறி மேலே வந்தால்பளிச்சென்று நல்ல காற்றோட்டத்துடன் விசாலமான(பிராத்தனை)மண்டபம். (உள்ளே நுழைந்தவுடன் மனதில் ஏற்படும் அந்த உணர்வு!)  கோயிலின் அடித்தளத்தில் கல்யாண மண்டபம்  (இங்குதான் கொலுவைக்கப்பெறும்!) அதன் மேல் தளத்தில்  ஆலயம் அமைந்திருக்கிறது.

 மண்டபத்தின் உள்ளே ஆலயத்தின் பிரதான கருவறையின் இடப் பக்கத்தில் வீற்றிருக்கிறார் (ஐந்து கரப்பெருமான்)சித்திவிநாயகர். ஆலயத்தின் மற்ற திருமேனிகளைப் போலவே இந்தத் திருமேனியும் தமிழகத்தின் புகழ் பெற்ற சிற்பி தேவகோட்டை முத்துக் கருப்பரால் ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப் பட்டதாகும்! 1977 ல் நிகழ்ந்த முதல் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவில் இத்திருமேனி பிரதிஷ்டை செய்யப் பட்டது.

சித்திவிநாயகரைச் சுற்றி வலம் வரும்போது முதலில் காட்சி அளிப்பவர் விஷ்ணுதுர்கை என வழங்கப்படும் அன்னை துர்காதேவி, தொடர்ந்து வலம் வர (பிரதானக் கருவறையின் வலப்பக்கம்) இங்கு காட்சி அளிப்பவர் (பாலசுப்பிரமணியனாக அருள்பாலிக்கும்) திருமுருகப்பெருமான் ஆவார்.அடுத்து பிரார்த்தனை மண்டபத்திற்கு வரும் படிக்கட்டுகளின் எதிரே மூலஸ்தானம், (இப்பிரதான கருவறையின்)வாயிலில் (தூய வெண்ணிறத்தில்)  துவார பாலகர்கள் இருவருடன் நடுநாயகமாக ஏற்றமுடன் காட்சியளிப்பது பொற்றாமரையின் மேல் அமர்ந்த நிலையில் சௌந்தரவல்லியாக உலகநாயகி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரித் தாயார்!.

பிரார்த்தனை மண்டபத்தின் இருபுறமும் இரு சிறிய மண்டபங்கள் உள்ளன, மூலஸ்தானத்தின் இடப்புறம் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் ஸ்ரீகணேசர், ஸ்ரீதுர்கை, வள்ளிதெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப்பெருமான் வீற்றிருக்கின்றனர். வலப்புறம் உள்ள நடராஜ மண்டபத்தில் சண்டிகேஸ்வரராக சிவபெருமான், சிவகாமி சமேதரராய் நடராஜர், நாயன்மார்கள் நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.கீழே ஆலயத்தின் இடப்பக்கம் வெளிப் 

பிரகாரத்தில் ஆற்றின் ஓரத்தில் நவக்கிரக நாயகர்களுக்கென்று தனி திருக்கோவில் அமைந்திருக்கிறது.

நவக்கிரக சந்நிதிக்கும் ஆற்றுக்கும் இடையில் அரசமரம் ஒன்று ஆலயத்தின் மேல் குளு குளுவென்று தன் நிழலைப் பரப்பிக் கொண்டு கம்பீரமாக நிற்பது, ஆற்றின் இருபக்கமும் (கோயிலின் உள்ளே) செண்பக மரங்களும், கரும்பும், நவக்கிரக மூலஸ்தானத்திற்கு வலப்புறம் பெரி(ய்)யநாவல் மரம் ஒன்று(!) மஞ்சள் பூக்களுடன் பழங்களுடன் பசுமையாக கிளை பரப்பி நிற்பதும் (கொட்டிக் கிடக்கும் பழங்களைப் பொறுக்கி ஒட்டியிருக்கும் மண்ணை ஊதும் போது ஔவையும், ஆடுமேய்க்கும் முருக(சிறுவ)னும் நினைவில் வருவது!) கருவறையின் முன்புறம் வில்வமரம் ஒன்று உயர்ந்து அடர்ந்த கிளைகளுடன், கோவிலின் உட்புறம் வன்னி  மரங்களும், ஆலயத்தின் இடப்பக்க  நுழை வாயிலுக்கும் கோயிலின் வெளிப்பிரகாரத் துக்கும் இடையில்  இரு வேப்பமரங்கள் இம்மரங்களின் கிளைகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு மேல் குடைபோல் படர்ந்து இருப்பது வெகு அழகு!.

இங்கு வருடம்தோறும் நவராத்திரி கொண்டாட்டம் பிரமாதப்படும். இந்தப் பத்து நாளும் கோவில் திருவிழாக் கோலத்துடன்  தக தகவென்று ஜொலிக்கும்!.

மண்டபத்தில் ஒன்பது படிகளுடன் அழகாக அடுக்கப்பட்டிருக்கும் கொலுவின்  வலதுபக்கத்தில் நடுநாயகமாக பெரிய உருவத்தில் தத்ரூபமாக திருப்பதி ஏழுமலையான் எழுந்தருளியிருப்பார்,

அவருக்கு அடுத்தாற்போல் சிறிய மேடை அமைத்து அதில் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அழகாக காட்சி தருவாள்,.கொலுவின் கடைசி நாள் அம்பு போடுவதும், அதற்கு அடுத்தநாள் (ஒவ்வொருவரும் உற்சாகத்துடன்  வித விதமாக  சீர்வரிசை எடுத்துச்செல்ல) விமரிசையாக  திருக்கல்யாணமும் ,அதையொட்டி திருமண விருந்தும் அமர்களப்படும்.

இப்படி  நாட்டியம், வீணை, வயலின், பாட்டு என ஒவ்வொரு நாளும் இன்றைக்கென்ன அலங்காரத்தில் அன்னை இருப்பாள்?  இன்று யாரின் நாட்டியம், பாடுவது யார்,?வயலினா, வீணையா.. வாசிக்கப் போவது யார் ? என அறியும் ஆவலுடன் ஆலயம் சென்று பார்க்க  கேட்க  ரொம்பவும் மகிழ்ச்சியாக ஆனந்தமாக இருக்கும்.

அகில உலகமும் சுபிட்சம் பெற நம் அன்னை ராஜராஜேஸ்வரி யின் அருள் வேண்டி வணங்குவோம் வாருங்கள் தோழியரே!.>>>>>அருமையான இடுகை .

தற்போது இக்கோவில் புதிய மாற்றங்களுடன் மிகப்பெரிதாக விரிவாக்கம் செய்து வெகுசிறப்பான முறையில் சென்ற வருடம் நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இப்பதிவு10 வருடங்களுக்கு முன் ”தோழியர்” (womankind.yarl.net/archives/2004/10/22) வலைப்பதிவில் எழுதியது.>>>அப்போதும் வாசித்தேன்  .சிறப்பாக இருக்கிறது மீனாஜி.

நீண்ட விரிவான பதிவின் சுருக்கத்தை இங்கே மீள்பதிவு செய்துள்ளேன் நன்றி.

அன்புடன்

மீனா

Sri Raja Rajeswary Amman.jpg

Geetha Sambasivam

unread,
Sep 30, 2014, 11:09:13 PM9/30/14
to மின்தமிழ்
இது முன்னர் ஷைலஜா எழுதினது இல்லையோ?????????? 

Geetha Sambasivam

unread,
Sep 30, 2014, 11:12:08 PM9/30/14
to மின்தமிழ்
அனைவரின் படைப்புக்களையும் இன்றுதான் வாசிக்க முடிந்தது.  தொடர் மின்வெட்டு, பல்வேறு வேலைகள், நவராத்திரி கொலுவுக்கு வருபவர்கள், கணவரின் கண் அறுவை சிகிச்சை என அடுத்தடுத்துத் தொடரும் வேலை பளுவினால் இணையத்துக்குச் சரியாக வர முடிவதில்லை.   எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு ரதத்தை இழுத்து வந்திருக்கிறீர்கள்.  நாளை சரஸ்வதி பூஜை ஒரு சாராருக்கு.  மற்றொரு சாராருக்கு வெள்ளியன்று சரஸ்வதி பூஜை.  ரதம் என்று நிலைக்கு வருகிறது? :)))))

shylaja

unread,
Oct 1, 2014, 12:02:48 AM10/1/14
to mintamil
நன்றி கீதா  நேரம் கிடைக்கறப்போ வாங்க... ரதம் நிலைக்கு வருவது விஜயதசமிநன்னாளில்.. சரஸ்வதி பூஜை இங்கும் குழப்பம்..ஊர் கொண்டாடும் நாளில் நான் கொண்டாடுவது எப்போதும் பழக்கம்!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Oct 1, 2014, 12:36:43 AM10/1/14
to mint...@googlegroups.com
Oct 2 சரஸ்வதி பூஜை என தினமலர் சொல்கிறது... அதனால் நாளைதான் ...

..... தேமொழி 

On Tuesday, September 30, 2014 9:02:48 PM UTC-7, shylaja wrote:
நன்றி கீதா  நேரம் கிடைக்கறப்போ வாங்க... ரதம் நிலைக்கு வருவது விஜயதசமிநன்னாளில்.. சரஸ்வதி பூஜை இங்கும் குழப்பம்..ஊர் கொண்டாடும் நாளில் நான் கொண்டாடுவது எப்போதும் பழக்கம்!
2014-09-30 20:11 GMT-07:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
அனைவரின் படைப்புக்களையும் இன்றுதான் வாசிக்க முடிந்தது.  தொடர் மின்வெட்டு, பல்வேறு வேலைகள், நவராத்திரி கொலுவுக்கு வருபவர்கள், கணவரின் கண் அறுவை சிகிச்சை என அடுத்தடுத்துத் தொடரும் வேலை பளுவினால் இணையத்துக்குச் சரியாக வர முடிவதில்லை.   எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு ரதத்தை இழுத்து வந்திருக்கிறீர்கள்.  நாளை சரஸ்வதி பூஜை ஒரு சாராருக்கு.  மற்றொரு சாராருக்கு வெள்ளியன்று சரஸ்வதி பூஜை.  ரதம் என்று நிலைக்கு வருகிறது? :)))))

2014-10-01 8:38 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
இது முன்னர் ஷைலஜா எழுதினது இல்லையோ?????????? 

2014-09-30 10:57 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

பெயர் குறிப்பிட விரும்பாத தோழி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படைப்பு இங்கு பதிவிடப்படுகிறது.

__________________________________________________________________________________________________________________________________

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Oct 1, 2014, 12:56:37 AM10/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

இன்று நவராத்திரி கொலுவில் பாட வரும்  பிரபலம் ...

சௌமியா 

 மகாகவி பாரதியார் எழுதிய 

"மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்" என்ற நவராத்திரி பாடலைப் பாடுகிறார் 

ராகம்: ராகமாலிகை 
பாடல்: மாதா பராசக்தி - நவராத்திரிப் பாட்டு
.............................................................................

பரா சக்தி 
(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி) 

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்?
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே    

வாணி

வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

ஸ்ரீதேவி

பொன்னரசி நாரணனார் தேவி,புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்.
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள்,ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே.

பார்வதி

மலையிலே தான்பிறந்தாள்,சங்கரனை மாலையிட்டாள்,
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,
நிலையில் உயர்ந்திடுவாள்,நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.

Tthamizth Tthenee

unread,
Oct 1, 2014, 2:21:08 AM10/1/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
சகோதரிகளே,  அன்புக்கும் பாசத்துக்கும்   உரிய  மகள்களே

நவராத்திரி, தீபாவளி  , என்று எந்தப் பண்டிகையை நினைத்தாலும்   அடிப்படையான  பக்தி இல்லாமல்  எதையுமே  முழுமனதாகக் கொண்டாட முடியாது

ஆகவே  பக்தி  என்னும்  தலைப்பில் ஒரு செய்தியை அளிக்கிறேன்

அதன்  தொடர்ச்சியாக  என் தாயார்  ஆர்.கமலம்மாள்  அவர்கள்  எழுதிய பாடல்களை   "தெய்வீகப் பாமாலை"  என்னும்  இசை வடிவமாகப் பாடிய  பாம்பே சகோதரிகளுக்கு  நன்றி சொல்லி     என் தாயாரின் பாடல்களையும்  இணைக்கிறேன்

பக்தி என்றாலே நம் கண் முன் வரும் தோற்றங்களுள் முதன்மையானது
கையில் தம்பூருடன் கண்களில் ஆனந்த பாஷ்பத்துடன்ஆன்மாவையே உருக்கும்
தோற்றம் கொண்ட  இருக்கும் தியாகைய்யர் என்கிற தியாகராஜன் என்கிற  தியாகப்
ப்ரும்மம்தான்,அவர் வீட்டு  வாயில் திண்ணையில் அவர்
அமர்ந்திருக்கிறார்.  நாம் அந்த மகானை தரிசிக்க  அவர் வீடு நோக்கி
செல்கிறோம்,நாம் நெருங்க நெருங்க அவர் பாடும் ராமநாமம், தம்பூரின் ஒலி
நயத்தோடு நம் காதுகளில் கேட்க ஆரம்பிக்கிறது,

,
சதா  ராம நாமத்தில் மூழ்கியிருக்கும் அவர்அப்போதும் ராம நாமாமிருதத்தில்,ஸ்ரீ ராமனுடைய குண விசேஷங்களில் மனதை ஆழ்த்தி  ராம நாம, சங்கீர்த்தனத்தில் மூழ்கியிருக்கிறார்,  அந்த இடமே கறவைகள் கன்றுகள்  முதற்கொண்டு உருகி நிற்கின்றன,

மரங்கள் செடிகள்கூட இதமான தென்றலில்  இளமையாக ஆடுகின்றன, அந்த மோனத்தவத்தில் அவர் மூழ்கியிருக்கும்போது  அந்த  மோனத்தவத்தைக் கலைக்கும்  வலிமை யாருக்குமே கிடையாது,அப்படி  அவர் ஆழ்ந்த  பக்தியில் திளைத்திருக்கும்போது அன்று ஏனோ தெரியவில்லை இடையிடையே  சிறு
சலனம்  அவர் மனதை ஆக்ரமித்துக்கொண்டிருந்தது,

ஆம் அவர் ஆழ் மனத்தையும்  மீறி    சலங்கை ஒலி ,பொற்சதங்கை ஒலி அவரின் ராம நாம சங்கீர்த்தனத்திற்கு  மெருகூட்டியது,

ஒரு நாள், மறு நாள் ,அதற்கும் மறு நாள்,அதே நேரத்துக்கு கடந்த மூன்று
நாட்களாக  அவருக்கும் அந்த பொற்சதங்கை ஒலி பழகியிருந்தது, மறுநாள் அவரின்
ராம நாம சங்கீர்த்தனத்தை தொடங்கும் போதே அந்த சலங்கை ஒலிக்காக  அவரே
காத்திருப்பது போன்ற ஒரு தோற்றம்  அவருள் விளைந்தது,

கண்களை மூடி மனதில்  ஸ்ரீ ராமனின் தோற்றத்தையே மனதில் நிறுத்தி நாம் சங்கீர்த்தனம் செய்யும்  அவர் மனதும் கண்களும் விழித்துக்கொண்டன,
அங்கே அவர் கண்ட காட்சி, உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும்
வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்று ஈடுபட்ட ஆழ்வாரைப் போல
ராம நாமத்தில் மூழ்கியிருந்த தியாகையர் கண்களில் முதல் பட்டது 

இரு செந்தாமரை இதழ்கள் ,அல்ல அல்ல இரு திருவடிகள், செம்பஞ்சுக்கு குழம்பு
பூசி  தங்கக் கொலுசுகள் மின்ன  தகதகத்த பாதங்கள்,அந்தப் பாதங்கள் நகர
நகர அந்தப் பாதங்களின் பின்னாலேயே  தியாகையரின் மனதும் செல்ல  அந்த
திருவடிகள் இரண்டும் மெல்லடி நடந்து தியாகையரின் வீட்டினுள்ளே சென்றது.

தியாகையரின் கண்களில்  கண்ணீர்?  இது என்ன ஆனந்தக் கண்ணீரா?  விரஜா நதியில்
குளித்தது போல் உடல் லேசாகி ஆனந்த்த்தில் மிதந்தது,சில வினாடிகள்
அப்படியே அந்த திருவடிகளில் லையித்திருந்த தியாகைய்யர் நினைவுக்கு மீண்டு
தன் வீட்டுக்குள் நுழைந்த அந்தத் திருவடிகளை மீண்டும் காண்வேண்டும்
என்னும் ஆசையால் ,அந்த செந்தாமரைப் பாதங்களுக்கு திருவடிகளுக்கு
சொந்தக்காரி யார்  என்று அறியும் ஆவல் மிஞ்ச தன் வீட்டிற்குள்ளேயே  ஒரு
அன்னியனைப் போன்ற உணர்வுடன் நுழைந்தார்,

அங்கே..

அங்கே  அவரின் மனைவி கமலா ! தூணில் சாய்ந்த படி கண்கள் திறந்தபடி, எங்கோ
பார்த்தபடி தன் நிலை மறந்து உட்கார்ந்திருந்தாள், ஏதோ பரவசத்தில்
ஆழ்ந்திருந்தாள், அவள் தவத்தைக் கலைக்க விரும்பாமல் அப்படியே
பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்  தியாகையர், கணவனைக் கண்டவுடன்
எழுந்து மரியாதை செய்யும் அந்த உத்தமப் பெண்மணி  தான் வந்ததையும்
கவனிக்காமல் இருக்கிறாள் எப்படி? தனக்கும் மேலான அப்படி ஒரு சொர்க நிலையை
அவள் அடைந்திருக்கிறாள், அப்படி ஒரு ஆனந்தமயமான ஆழ் நிலையை அவள்
அனுபவித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை கண்டு அவர் மனம் பெருமித்த்தால்
விம்மியது,  எப்படிப்பட்ட  பெண்மணி இவள்? இவளை மனைவியாக அடைய என்ன தவம்  செய்திருக்கிறோம் நாம் என்று பரவசமடைந்தார் தியாகையர்,

திடீரென்று தன் சுய நிலைக்கு திரும்பிய  கமலா திடுக்கிட்டு எழுந்திருக்க
அவளை  எழுந்திருக்க விடாமல் இதமாக  அப்படியே உட்காரவைத்து தானும் அவளருகே  உட்கார்ந்து அவளைப் பரிவோடு பார்த்து , கமலா  என்று அன்போடு அழைத்தார்  தியாகையர்

கமலா  அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள், நானும் சில நாட்களாக
கவனித்துக்கொண்டே இருக்கிறேன், பொற்சதங்கை  அணிந்த இரு திருப்பாதங்கள்
தினமும் நம் வீட்டிற்கு வரக் காண்கின்றேன், அந்த செந்தாமரைப் பாதங்களைப்
பார்த்தவுடன்  என் மனமும்  அப்படியே மயங்குகிறது  ,அந்தத்  திருவடிகளுக்கு  உரிய பெண்மணி யார் தெரியுமா ? என்று கேட்டார்.

அதற்கு கமலா தினமும் அந்தப் பெண் இங்கே வருகிறாள்,என் எதிரே அமர்கிறாள்,
ஏதோ  பேசுகிறாள், அவள் வந்துவிட்டால் நான் என்னையே மறந்துவிடுகிறேன்,
அவள் கண்களைப் பார்த்துவிட்டால் போதும் , அப்புறம் இந்த உலகமே மறந்து
போய்விடுகிறது, அப்பா..!! அந்தக் கண்கள்! எத்தனை விசாலம், எவ்வளவு ஆழமான
அழகான கருணையோடு இருக்கும் கண்கள்!அந்தக்   கண்களைப் பார்த்துவிட்டால்
பார்த்துக்கொண்டே இருக்கிறேன், பசி தாகம் எதுவுமே தெரிவதில்லை, நீங்கள்
யாரம்மா என்று கேட்கவேண்டும் என்று தினமும் நினைக்கிறேன், ஆனால் என்னால்
முடியவே இல்லை, ஆமாம் யார் அந்தப் பெண்மணி?  என்றாள் கமலா
அவள் யார்..?

ஒரு கணத்தில் தியாகைய்யருக்கு உடம்பு சிலிர்க்கிறது..அவள் யார்  என்று
அவருக்கு புரிந்துவிட்டது!  திரும்பிப் பார்த்தவுடன்  தன் குஞ்சுகளின்
பசியை தன் பார்வையாலேயே போக்கும் மீனைப் போன்றவள் அவள்!அவள்தான்
மீனாக்‌ஷி , அவள்தான் பராசக்தி, அவள்தான் அகிலாண்டேஸ்வரி .

இதுவரை நான் அவளைப் பற்றிப் பாடவே  இல்லையே!  அதை நினைவூட்டவே அவள் இங்கே வந்திருக்கிறாள்,  அது மட்டுமல்ல  என் பிரிய சகியே அவள் உனக்கு மட்டும் எதற்காக தரிசனம்   தந்தாள்  தெரியுமா? மஹா பதிவிரதையான  உனக்கு மோட்ஷ சாம்ராஜ்யத்தை  அளிக்கவே அவள் கருணையோடு இங்கே வந்தாள்!நான் அவளைக் கண்டு கொண்டேன்! என்   தேவியை நான் தெரிந்து கொண்டேன்,என்றவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.    வழிந்தது!பக்திப் பரவசமாய்ப் பாட ஆரம்பித்தார்

தாரிணி தெலுசு கொண்டி த்ரிபுரசுந்தரிஎன்று அமிர்த வர்ஷமாக இன்றும்
அவருடைய க்ருதி ஒலித்துக்கொண்டே இருக்கிறது
                           
சுபம்

தொடரும்

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

meena muthu

unread,
Oct 1, 2014, 2:49:22 AM10/1/14
to vallamai, மின்தமிழ்
//ஒரு கணத்தில் தியாகைய்யருக்கு உடம்பு சிலிர்க்கிறது..அவள் யார் என்று அவருக்கு புரிந்துவிட்டது!திரும்பிப் பார்த்தவுடன் 
தன் குஞ்சுகளின் பசியை தன் பார்வையாலேயே போக்கும் 
மீனைப் போன்றவள்அவள்!அவள்தான் மீனாக்‌ஷிஅவள்தான் பராசக்தி, அவள்தான் அகிலாண்டேஸ்வரி .//

அழகுபட விவரிக்கும் அற்புதக்காட்சி! 

meena muthu

unread,
Oct 1, 2014, 3:03:45 AM10/1/14
to vallamai, மின்தமிழ்
மனதிற்கு இதம் தரும் இனிய குரல்வளம் மிக்கவர் சௌம்யா!
அருமையான பாடல்!நன்றி தேமொழி.

Suba.T.

unread,
Oct 1, 2014, 3:13:49 AM10/1/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-01 9:03 GMT+02:00 meena muthu <ranga...@gmail.com>:
மனதிற்கு இதம் தரும் இனிய குரல்வளம் மிக்கவர் சௌம்யா!

​னக்கு மிகப் பிடித்த பாடகி.. யாதுமாகி நின்றாய் காளி  அவர் குரலில் கேட்டு என்னை மறந்து விடுவேன்..

சுபா​
அருமையான பாடல்!நன்றி தேமொழி.

2014-10-01 12:56 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்?
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே    

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

Dhivakar

unread,
Oct 1, 2014, 7:39:54 AM10/1/14
to vallamai, மின்தமிழ்
ரதமிது இதமிது அருள்தரும் சுகமிது
பதமிது அன்னை பதமிது கனிவிது
சுடரிது சுடாதது நெஞ்சில் படுமிது
படருது விடாமல் தொடருது மலரிது
விழியிது நம்மேல் விழுமது அன்பிது
அழகிது அணையா விளக்கிது வழியிது
சொல்லிது சொல்லும் பொருளிது தேனிது
நல்லது நவிலும் நாவிது கவியிது

​(படத்துக்கு நன்றி கூகிள்) 

ரதத்தை நகர்த்தும் அத்தனை நல்லிதயங்களுக்கும்
என் கனிவான நவராத்திரி வாழ்த்துகள்.

அன்புடன்
திவாகர்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Sri Raja Rajeswary Amman.jpg

shylaja

unread,
Oct 1, 2014, 8:21:15 AM10/1/14
to vallamai, மின்தமிழ்
மாதா பராசக்தி  ..ஆஹா பாரதியின் இப்பாடலை நான் சொல்லாத நாளில்லை .ஐந்துவயதில் அப்பா கற்றுக்கொடுத்த பாரதியின் முதல் பாடல் இதுதான். சௌம்யாவின் குரலில் தேனாய் இனிக்கிறது.அளித்த தேமொழிக்கு நன்றி.
  உலையிலே  ஊதி உலகக்கனல் வளர்த்தாள் ! இதற்கு ஆழ்ந்த பொருள் இருக்கவேண்டும்!  ’கொல்லனூது உலைகயை நகுமெனலுமிழுங் கண்ணினார்’ என அண்மையில் கம்பனின் காவியத்தில் பஞ்சசேனாதிபதிகள் வதைப்படலத்தில் வரிகள் வந்தபோது ஹரிகிஜீ  இந்தவரியை நினைவுபடுத்தினார்!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
Megala Ramamourty

unread,
Oct 1, 2014, 10:15:45 AM10/1/14
to மின்தமிழ், vallamai

வேறோர் இழையில் தம்பி பிரசாத் கேட்டிருந்த சுண்டல்கள் ரதத்தில் அவருக்காகக் காத்திருக்கின்றன. :-)

தொண்டைக்கு இதமான கொண்டைக்கடலை சுண்டல்

பார்த்தாலே பரவசமாக்கும் பட்டாணி சுண்டல்

வேர்க்கடலையில் செய்த அற்புதச்சுண்டல்

ஊரார் போற்றும் காராமணிச் சுண்டல்

உடலுக்கு நலம் பயக்கும் கடலைபருப்புச் சுண்டல்

இனிப்புச் சோளத்தில் செய்த தனிச்சுவையான சுண்டல்

தம்பி பிரசாத் இவற்றையெல்லாம் உண்டின்புற இயலாவிடினும் கண்டின்புறுக!  :-))

நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba.T.

unread,
Oct 1, 2014, 10:21:33 AM10/1/14
to மின்தமிழ், Subashini Tremmel
​இது சரியா மேகலா.. இப்படி படம் போட்டால்.. வேலை செய்வதா இல்லை.. பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பதா... ​:-)
அந்தக் காராமணி ஸ்வீட் சுண்டம் பார்க்கவே நன்றாக இருக்கே..

shylaja

unread,
Oct 1, 2014, 10:26:23 AM10/1/14
to mintamil, vallamai
வாழ்க மேகலா!

Innamburan S.Soundararajan

unread,
Oct 1, 2014, 10:41:14 AM10/1/14
to vall...@googlegroups.com, mintamil
என் கிட்டே அந்த பாடல்கள் உளனே. யதேச்சையாக, இன்று காலை அனுபவித்துக் கேட்டேன்.

shylaja

unread,
Oct 1, 2014, 11:17:38 AM10/1/14
to vallamai, மின்தமிழ்
திவாகர் இனிது இனிது என வியக்கும் உங்கள்  கவிதை அழகு!(குங்குமம் புக்ல  உங்களைப்பார்த்தேன்)
Sri Raja Rajeswary Amman.jpg

shylaja

unread,
Oct 1, 2014, 11:21:05 AM10/1/14
to vallamai, mintamil
எந்தப்பாடல்கள் இ சார்?

PRASATH

unread,
Oct 1, 2014, 1:22:53 PM10/1/14
to மின்தமிழ், vallamai
சாப்பிட்டவர்களுக்கு வயிறுவலிச்சா நான் காரணமில்லை... நான் சுண்டல் மேல கண்ணு வைக்கலை... :))) 

shylaja

unread,
Oct 1, 2014, 8:43:15 PM10/1/14
to vallamai, மின்தமிழ்
ஜெய்ஸ்ரீ சங்கர்  தனி மடலில் அனுப்பிய கவிதை இது.

இரத்தின மேடையாம் நவராத்திரி படிதனில் 
கொலுவேறினாள்  ராஜமாதங்கி...!
பஞ்சமி தனிலே நவகிரக நாயகி 
இகபர சுகமளி சதுர்மறை சங்கரி..!
வைர ஒளி  வீசும்  பரிபூரணி  பவானி 
தீங்கேதும் வாராமல் ரட்சிப்பாள் ரஞ்சனி..!

பொற்குடை மலைமகளே உமையவளே 
மஞ்சளில் மகிழும்  மங்களவல்லி..!
ஸ்ரீசக்ர நாராயணி ஸ்ரீயோகினி 
நீலமணிச் சுடர் சிவசக்தி நீ..!
நாடிடும் யாவர்க்கும் நலமளிப்பாய் 
கோலத்தில் கோலோட்சும் கல்யாணியே..!

வரங்களை வர்ஷிக்கும் வனிதாமணி 
பிரபஞ்ச நிவாஸினி  பராசக்தி நீ..!
கும்பத்தில் கொலுவிருக்கும் மங்கலமே 
முத்து மாலையிட்டு மனங் குளிர்ந்தோம் 
மாதாவே அன்னையே பரமேஸ்வரி 
ஸ்ரீ திரிபுர சுந்தரியே மனம்மல்கப் பாடுகிறேன்..!

பலவரம் அருள்வாள் பவளத்து பார்கவி நீ..!
தெய்வீக தைவதமே சாமந்திப்  ப்ரியவதனி  ..!
தாழம்பூ தந்திடுவேன் தாம்பூலம் தந்திடுவேன் 
அழகு முகத்தில் அருட்புன்னகை கண்டிடுவேன் 
அலைகடலைக் காக்கும் புவனத்துக் கவசமே..!
என்றென்றும் நீயும் எந்தன் வசமே ..!

செல்வத்தை அருள்வாய் செண்பகவல்லி 
லோகத்தைப்  பார்த்திடும் லோகேஸ்வரி நீ 
உனையல்லாது யாருண்டு இங்கெனக்கு?
கடைக்கண் பார்வையும் நின் பொற்பாதமும் 
இல்லந்தோறும் யந்திரமாய்ப் பதித்து விடு 
தன ஆகர்ஷண யந்திரமே மாணிக்கமே..!

பச்சைப் பட்டுடுத்தி கிளி கொஞ்சும் பொற்கொடியே 
சந்தனக் காப்புக்குள் புன்னகை பூத்திடும் அலைமகளே 
சுகந்த நிவாஸினி  மனம் நிறை மனோன்மணி 
திருவிழிப் பார்வையால் மருள் நீக்கும் மரகதமே..!
புவனத்தை ஆகர்ஷிக்கும் அருணோதயம் நீ..!
ஆராதனை செய்தோம் கோமேதகமே..!

ருத்ர வீணை நாதம் சூழ அக்ஷரமாலை நகர 
புத்தகம் கொண்ட ஸ்ரீவித்யே..!
தீப ஒளியில் ஒளிரும் புஷ்பராகமே..!
அன்ன வாகினியே ஸ்படிகவேணீ..நீ !
சின்முத்ர தாயினி ஸ்ரீ லோசனி..!
ஆரோக அவரோக ஸ்ருங்காரி நீ..!

வெண்டாமரையில் வீற்றிருக்கும் ஓய்யாரி நீ..
நல்வாக்கு சித்திக்கும் வாக்தேவி நீ 
நவமணி நிறைந்திடும் வைடூரியமே 
தேனாபிஷேகப் ப்ரியே ஸ்ரீசாரதே ..!
ஓங்கார ரீங்கார ஏகாந்தக் கலைகளை 
வரமளிபாய் பூந்தோட்ட மனோஹரி..!

------------------------------------------------------------------------------------

ஜெயஸ்ரீ ஷங்கர் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Oct 1, 2014, 10:55:56 PM10/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
இன்று நவராத்திரி கொலுவில் பாட வரும்  பிரபலம் ...

கே. ஜே. யேசுதாஸ்

 மகாகவி பாரதியார் எழுதிய 

"வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள்" என்ற கலைவாணியின் புகழ் பாடும் பாடலைப் பாடுகிறார் 

வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளையின்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப்  பெற்றாள்.   

தேமொழி

unread,
Oct 1, 2014, 10:59:37 PM10/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

மிக அழகிய சரஸ்வதி படமொன்று 

Oru Arizonan

unread,
Oct 1, 2014, 11:36:45 PM10/1/14
to mint...@googlegroups.com
இது காப்பிரைட் உள்ள படமா?  நான் என் இணையத்தில் வெளித் தடை ஒன்றும் இல்லையே?
ஒரு அரிசோனன் 

On Wed, Oct 1, 2014 at 7:59 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

மிக அழகிய சரஸ்வதி படமொன்று 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Oct 1, 2014, 11:54:43 PM10/1/14
to mint...@googlegroups.com

All rights reserved. Copyright 2014 © Exotic India

"Kerala mural" என்று 

தளத்தில் தேடிப் பார்க்கவும் 

மேலும் இது போன்ற அழகிய படங்கள் சில அங்கு உள்ளன.

****  படங்களைப் பயன்படுத்தினால் courtesy  www.exoticindiaart.com குறிப்பிட்டு விட்டு பயன்படுத்தவும்.

Link exchange போல அவர்களுக்கு விளம்பர வகையில் அது உதவும்.

search engine optimization வகையில் அவர்கள் தளம் கூகுள் தேடலில் முன்னுக்கு வரவும், விற்பனையிலும்  உதவி செய்யும்.  

அவர்களுக்கும் உதவி செய்வதாலும், யாருடையது என்று சொல்லிவிடுவதாலும்   சட்டப்படி நடவடிக்கை இருக்காது.

இருவருக்கும் mutual benefit

****  பி.கு. எனக்கும் இந்த வர்த்தக நிறுவனத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தகவலுக்காக குறிப்பிட்டேன். 

..... தேமொழி

On Wednesday, October 1, 2014 8:36:45 PM UTC-7, oruarizonan wrote:
இது காப்பிரைட் உள்ள படமா?  நான் என் இணையத்தில் வெளித் தடை ஒன்றும் இல்லையே?
ஒரு அரிசோனன் 
On Wed, Oct 1, 2014 at 7:59 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

மிக அழகிய சரஸ்வதி படமொன்று 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Oct 2, 2014, 12:03:32 AM10/2/14
to மின்தமிழ்
படத்தை அப்படியே அப்பட்டமாக அரே அளவுக்கு வெளியிட்டல்தான் காப்புரிமைச் சிக்கல்.  75% குறைத்துப் போட்டால் காப்புரிமை மீறியதாகக் கருத முடியாது.  அதுபோன்று இணையத்தில் வெளியான பதிப்பை அப்படியே வெட்டி ஒட்டாமல் ஃபாண்டின் அளவை அல்லது வேறு ஃபான்டில்  மாற்றி வெளியிட்டாலும் காப்புரிமை மீறல் ஆகாது.  இது ஏகப்பட்ட வழக்கறிஞர் கலந்துரையாடல் மூலம் அறிந்தது.  அப்போது இணையத்தில் வலைத்தளங்கள் உருவாக்கிக் கொண்டிருந்தபோது நிறைய காப்பிரைட் மீறல் என்று வக்கீல் நோட்டீஸ் வந்த காலத்தில் சொந்தச் செலவில் கற்றுக் கொண்டது
அசடுமுசுடு

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Oct 2, 2014, 12:35:17 AM10/2/14
to mint...@googlegroups.com
மிக்க நன்றி தேமொழி.  அப்படியே செய்கிறேன்.
ஒரு அரிசோனன் 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Oct 2, 2014, 2:46:50 AM10/2/14
to மின்தமிழ்
On Thu, Oct 2, 2014 at 4:59 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

மிக அழகிய சரஸ்வதி படமொன்று 

​கண்களையும் கருத்தையும் கவர்ந்த பகிர்வு. பேரழகு இந்தக் கலைவாணி

சுபா

Nagarajan Vadivel

unread,
Oct 2, 2014, 3:53:42 AM10/2/14
to மின்தமிழ்

​கலைமகள்/சரஸ்வதி பற்றிய விளக்கம் மேலே.  கலைமகள் கற்றலுக்கும் வாக்குக்கும் பொறுப்பில் இயங்கி
படைப்புக்கு ஆதாரமாக இயங்குவதாகப் போற்றபடும் மரபு தென்னக மரபு

எழுத்துக்கு அதிவன் விநாயகர் என்று எழுத்தை இரண்டாம் நிலையில் வைக்கப்படுவதும் மரபு

கவின்கலை நுண்கலை கலைமகளை வீணையுடன் தென்னாட்டு மரபிலான சேலை அணிந்து இருப்பதுபோல்
அமைத்தது
ராஜா ரவிவர்மா ஓவியத்தை இந்தியவயப்படுத்தியபோது ஏற்பட்ட மாற்றம் இது என்பது புலனாகும்
அசடுமுசடு

--

தேமொழி

unread,
Oct 2, 2014, 7:35:28 PM10/2/14
to mint...@googlegroups.com

On Thursday, October 2, 2014 12:53:42 AM UTC-7, அசடுமுசுடு wrote:

கவின்கலை நுண்கலை கலைமகளை வீணையுடன் தென்னாட்டு மரபிலான சேலை அணிந்து இருப்பதுபோல்
அமைத்தது
ராஜா ரவிவர்மா ஓவியத்தை இந்தியவயப்படுத்தியபோது ஏற்பட்ட மாற்றம் இது என்பது புலனாகும்

பேராசிரியரே சமண மத சரஸ்வதி  பற்றிய தகவல் கீழே...

 In Jainism Saraswati recognized as supreme deity of knowledge and wisdom The various Jain texts mentioned about the different name of Saraswati such as Srutadevata, Bharati Sarada ect. As Srutadevata, she presides over the Sruta or preaching of Tirthankara. The antiquity of the worship of Saraswati among Jain community was very popular from very ancient times and it can be established from literary as well as archaeological evidence.     
 The ancient Jain text like Jain Sutras. Bhagawati- Sutra, Mahanistha- Sutra, and Sansare-Daranala etc.mentioned about her form and different attributes. As per as the textual reference Saraswati is popularly depicted; in standing posture. Though her four armed form is very popular but her two armed, six armed. eight armed and sixteen armed forms are also found. She is always white complexioned. Varada (boon), Kamal (lotus), Pustaka (books),  and Mala (rosary) are her usual ayudhas but vina ; has also been used in some cases, probably in imitation of Hindu Saraswati. Her vahana is hamsa but in some exceptional cases it is ; replaced by mayura generally in the Digambara tradition. The literally reference are also supported by archaeological evidences. Mathura is the place from where the earliest of Jain Saraswati was discovered. 
  The site has yielded three significant  Sarasvati sculptures including  the oldest known  one.   The  earliest extant image of Sarasvati, dated 132 C.E. also belongs to Jaina  tradition  is now  housed  in the State museum of Lucknow, U.P. Rajasthan is one  of  the  most  important places of Jainism where it spread from very early times. Among the two sect of Jain community Svetambara sect has more popularity in this region. A  good  number of Jain art and architecture are observed in this state. Saraswati the learning goddess of  Jainism  were  also acceptable in this region and we found her sculpture from  different temple as   well  as discard form. One  of  the  earliest  sculpture  of Sarasvati found form Vasanthgadh in Rajasthan, is measured 15.5  cm. and  stylistically  similar  to  the  images from Akola  (Gujarat). She holds book in her left hand, and  padma  in  her  right  arm.  She  stands  on  a  pedestal  and  wears  an  elaborate crown made of projections. This  image  has  been shifted to the Mahavirsvami temple in Pindawada Rajasthan and on  the  basis  of  stylistic  ground  the  image assignable  to c. 7th  century   C. E. 
  Two  image of the goddess Saraswati  are found on the Caumukha temple at Ranakapur in Udaipur distric of Rajasthan  (Shah. 1941).  First  one  carved  on a  pillar of  this temple. The deity standing in the tribhanga pose  plays on her vina with both the hands. Her cognizance swan resting near the right foot and  appears to be enchanted by the divine music. The other one shows that the goddess with vina and  book  in the two upper hands, and rosary and kamandaluin the two lower ones. Here also the deity rides on a swan. No Jaina literary evidence is forthcoming fot this form. But it would be interesting to note that the Hindu tradition, as maintained the Visnudharmottara puran describes the variety. 

   Marble images of Saraswati in Abu temples
   Marble images of Saraswati in Vimala  Vasahi  temple of Dilwara at Mt. Abu 
  The  Vimala Vasahi  temple of Dilwara at Mt. Abu in Rajasthan is a very famous Jain temple where some marble images of Saraswati are found. One of them is  carved  on  the  ceiling  of  dome  of the mandapa  (Kramrish. 1965).    The  goddess  seated  in  padmasana, with  her body quite erect, shows  rosary, lotus, vina  and  book  as  her  attributes. Vidyadharas  fly above, whereas the small figures, probably representing donor, kneel at the bottom of the throne. In this example Saraswati  is being saluted by two architects who built the Vimala Vasahi temple. The bearded architect to the  right  of  the goddess is inscribed as Loyana Sutradhara, the other holding the measuring  rod  is names as Sutradhara Kela. The goddess is elegantly ornamented. A  small swan  as  the vehicle is seen in the pedestal. 

    Another image carved  on a pillar ; of this temple. shows ; the goddess Saraswati in a standing attitude and holding lotuses in ; the two upper hands; the right lower hand is mutilated, while the left  lower  carries a book. This  form  has  been  further   illustrated in  a palm-leaf miniature from a  manuscript of theJnatasutra, dated 1127 A. D., and preserved in  the  Santinath  Bhndara,  Cambay (Ghose.  1975).  Here  the  goddess,  standing  in  tribhanga,  holds   the rosary  in   the  right  lower, pustaka in  the  left  lower  and the lotuses in the upper two hands. The swan, her vehicle, is shown beside the left leg. Two male attendants with folded hands sit by her two sides.    A beautiful sculpture of sixteen-armed form of the goddess of learning is Found on the ceiling of Vimala Saha's  temple,  Mt. Abu. Unfortunately, the image is mutilated. Two male figure on dancing posture  stand on  each  side,  the goddess ; sites in  bhadrasana showing lotus (padma), book (pustaka)  and  water-vessel  (kamandalu)  in  the  three  left hands.  All other hands, along with the ayudhas they  held, are  mutilated beyond recognition. However, the figure of the swan can be seen on the pedestal. A small seated figure of a Tirthankara is noticed above the crown. 

Nagarajan Vadivel

unread,
Oct 2, 2014, 8:31:47 PM10/2/14
to மின்தமிழ்
தகவல் கொடுத்தமைக்கு நன்றி தேமொழி அம்மையீர் அவர்களே
நான் தெனிந்தியக் கடவுளரின் உருவ வடிவை அடிப்படையாகக் கொண்டு தென்னாட்டில் கோவில்களில் கொலுவீற்றிருந்த முப்பெரும் கடவுளர் அவர்தம் தேவியர் ஆகமக் கோவில்களின் பிரகாரங்களில் கூரையுடன் கூரையின்றி வீற்றிருக்கும் இறைவழிபாட்டுக்கான உருவங்கள் பெண் தெய்வங்கள் கிராமப் பெண்தெய்வங்கள் ஆண் தெய்வங்கள் என உருவ வழிபாட்டு அடிப்படையில் 19 ஆம் நுற்றாண்டில் கிருஷ்ண சாஸ்திரி என்பவர் ஆங்கில அரசின் அறிவுறுத்தலின்படி கள ஆய்வு செய்த தரவுகளின் அடிப்படையில் எழுதிய நூலின் அடிப்படையில் குறிப்பிட்டேன் என்க.
அசடுமுசுடு
டிஸ்கி:  இப்புடி எழுதுனா நல்லத்தே இருக்கு. ஆனா என் தனித்தன்மை என் முகவரி தொலைந்து கூட்ட்த்தில் கோவிந்தா போடுவதுபோல் ஆகீடுதே. 
நூலகம் என்பது குமுகத்தின் நற்சிந்தனைகளை கொட்டுப்போகாமல் பதப்படுத்தி வேண்டுவோருக்கு அளிக்கும் பொறி என்பதுபோல் இணையத்தைச் சொல்ல இயலவில்லை.  ஒளியின் வேகத்தில் வெளியாகும் இணையக் கருத்துக்கள் நீரின்மேல் எழுத்தாகத் தோன்றி மறையும் நிலையில் சிரஞ்சீவித்தன்மை உடையதாகக் கருதி இணையத்தை நூலகமாகக் கருதுவதும் இணையக் கருத்து வெளிப்பாட்டுக்கு ஒரு இலக்கணம் வகுப்பதும் அடிமட்டச் சிந்தனைகள் மட்டமாக இருந்தாலும் வெளிப்பட்ட வாய்த்திருக்கும் வாய்க்காலைத் தூர்வாருவதைவிட மூடிவிடுவதாக ஆகிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.  காலத்தை வெல்லும் கருத்துக்களைப் படைக்கும் நோக்கில் பொறுப்பும் கவனமும் கலந்த குமுக நோக்குடன் எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என்ற நினைப்பு மயிலிறகு அழுத்தத்துடன் எழுத்து கருத்துத் தவறுபற்றிக் கவலைப்படாமல் ஒவ்வொருவனும் எழுத்தாளன் அவன் தனக்கு எழுதுகிறான் பிறர் முனைந்தால் படிக்கட்டும் எழுதுகிறான் அவன் எழுத்தில் கருத்தில் உள்ள நிறைகுறைகளை தான் மற்றவர்கள் கருத்தையும் மற்றவர்கள் தங்கள் கருத்தையும் அலசத் திறனாய்வு செய்ய உரிமை கொண்டு செயல்படுகிறான்.குமுகத்தில் உள்ள சிறப்பைச் சொல்லி முன்னோர் பெருமையைத் தற்பெருமையாகப் பறைசாற்றுகிறான்.  குமுகத்தின் வரலாற்றுப் பிழைகளில் குறை கூறுகிறான்.  இதெல்லாம் இந்தக் கட்டுப்பாடுகளால் மறைந்து தமிழை ஒரு புனித நோக்குடன் தனிமைப்படுத்தி இணையத்தில் மெய்நிகர் அக்கிரகாரமாக உருவாக்கி குமுகத்திலிருந்தும் பாமரகளிடமிருந்தும் தனிப்பட்டுப் போகாதோ ஞானப்பெண்ணே என்று பாடத் தோன்றுகிறதே
அய்யய்யோ இவ்வளவும் எழுதீட்டேனே என்னமா அடிகிடைக்குமோ என்று பயப்படவேண்டுமா வேண்டாம என்பது புரியவில்லையே
அசடுமுசுடு

--

Megala Ramamourty

unread,
Oct 2, 2014, 8:40:38 PM10/2/14
to மின்தமிழ், vallamai

கருணைக் கடலே...கலைமகளே!

saraswati

வெள்ளத்தால் போகாத வெந்தணலால் வேகாத செல்வம் கல்விச் செல்வம் ஒன்றேயாகும். ஏனைய செல்வங்கள் எல்லாம் கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடும்; கல்வி ஒன்றே மற்றவர்க்கு வழங்க வழங்க (அதனைத் தருபவனுக்குக்) குறையாது மிகும். செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவதும்; செல்லும் தேயமெல்லாம் புகழ் பெறுவதும் கற்றாரே.

கல்வி எனும் உயரிய செல்வத்தை வாரி வழங்கும் தெய்வமாகக் கருதப்படுபவள் நான்முகனின் நாயகியாகிய கலைவாணி. கல்வியேயன்றி ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விப்பவள் அவள்.

மனிதர்களின் நாவில் அந்தக் கலைமகள் நிலைத்திருப்பதாக நம்பப்படுகின்றது. அதனாலேயே அவள் ’நாமகள்’ என்று தமிழிலும் ’வாக்தேவி’ என்று வடமொழியிலும் அனைவராலும் அழைக்கப்படுகின்றாள். கொள்ளை இன்பத்தை மனிதர்க்குத் தருகின்ற பாவலர்களின் கவிதையிலும், இனிய குரலில் மாதர்கள் பாடும் பாட்டிலும் விரும்பிப் பவனி வருபவள் அவள்.

தன் திருக்கரத்தில் மாணிக்க வீணையேந்தி அதன் ஒலியில் மகிழ்ந்திருக்கும் அந்த மாதரசி, மழலை மிழற்றும் கிள்ளையின் நாவிலும், கீதமினிய குயிலின் குரலிலும்கூட விருப்பமொடு வாசம் செய்பவள் என்கிறார் மகாகவி பாரதி.

கலைவாணியைப் போற்றுமுகத்தான், ‘நாமகள் இலம்பகம்’ எனும் பெயரோடு ’நா  வீற்றிருந்த புலமா மகளோடு….” என்ற அடியை ஆரம்பமாகக் கொண்டே ஐம்பெருங்காப்பியங்களில் சிறந்த ஒன்றான சீவக சிந்தாமணி தொடங்குகின்றது. சாத்தனாரின் மணிமேகலையிலும் ஆபுத்திரனின் வரலாற்றைக் கூறும் பகுதியில் ’சிந்தாதேவி’ எனும் பெயரால் கலைமகள் குறிக்கப்பெறுகிறாள்.

அவ்வரலாறு இதோ

தன் வளர்ப்புத் தந்தையான இளம்பூதி என்பவனால் கைவிடப்பட்ட ஆபுத்திரன் எனும் அந்தண இளைஞன் செல்வர்கள் பலர் வாழ்ந்த மதுரை நகரின்கண் பிச்சை வாங்கிக் குருடர்கள், முடவர்கள் முதலிய உடற்குறை யுடையோர்க்கெல்லாம் முதலில் அளித்துவிட்டு மீதமிருந்த உணவைத் தான் உண்டு, அவ்வூரிலே இருந்த ‘சிந்தாதேவி’யின் கலை நியமத்தில் (கோயில்) தங்கியிருந்தான். மாரிக் காலத்து நள்ளிருள் வேளையில் ஒருநாள், சில ஏழை மக்கள் ஆபுத்திரன் தங்கியிருந்த சிந்தாதேவிக் கோயிலுக்கு வந்து அவனிடம் தங்கள் பசிக்கொடுமையைக் கூறி உணவளிக்கும்படி வேண்ட, பிச்சையாய்ப் பெறும் உணவேயன்றி வேறு உணவு ஏதுமில்லாத தன் வறுமை நிலையை அவன் அவர்களுக்கு வேதனையோடு விளக்க, ஆபுத்திரன் உணவளிப்பான் என்று நம்பிவந்த அந்த ஏழை மக்கள் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர்.

மற்றவர்களின் பசிப்பிணியைத் தீர்க்க இயலாத தன் நிலையை எண்ணி அவன் வருந்தியிருந்த அவ்வேளையில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது! ஆம்…நியமத்தில் சிலையாயிருந்த சிந்தாதேவி உயிர்பெற்றாள்; ஆபுத்திரன் அருகே ஓர் பாத்திரத்தோடு அவள் தோன்றி, ”வருந்தாதே! இதோ என் கையிலுள்ள ஓட்டினைக் கொள்வாய்; நாடு வறுமையுற்றாலும் இந்த ஓடு வறுமையுறாது. இதிலிருந்து வரும் அளவிலா உணவை வாங்குவோர் கைகள்தான் வருந்துமேயின்றி; இதில் உணவு ஒருநாளும் குறைவுபடாது” எனக்கூறி அந்த அமுதசுரபியை ஆபுத்திரனுக்கு அளித்தாள்.

தேவி சிந்தா விளக்குத் தோன்றி
ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய்
நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது
வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது
தான்தொலை வில்லாத் தகைமைய தென்றே. (மணி: பாத்திர மரபு கூறிய காதை)

சிந்தாதேவியை நேரில் கண்ட அதிசயத்தில் வாயடைத்துப்போன ஆபுத்திரன்,

”சிந்தையில் உறையும் தேவியே, கலைக்கோட்டத்தில் வீற்றிருக்கும் நந்தா விளக்கே, நாமகளே, வானோர்க்கெல்லாம் தலைவியே, மண்ணோர்க்கெல்லாம் முதல்வியே மக்களின் இடர்கள் அனைத்தையும் நீ களைவாயாக!” என்று அவளைத் தொழுது வணங்கினான்.

சிந்தா தேவி செழுங்கலை நியமத்து
நந்தா
விளக்கே நாமிசைப் பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி
ஏனோர் உற்ற இடர்களை வாய்..” (மணி: பாத்திர மரபு கூறிய காதை)

கிடைத்தற்கரிய அந்த அமுதசுரபியின் உதவியோடு மக்களின் பசியைப் போக்கிவந்தான் ஆபுத்திரன் என்கிறது மணிமேகலைக் காப்பியம்.

இதன்மூலம் கல்விக்குத் தெய்வமான கலைமகள் கருணைக்கும் பிறப்பிடமாக இருந்ததை உணரமுடிகின்றது அல்லவா?

கலைவாணியின் மகிமையை உணர்த்தும் மற்றொரு நிகழ்வு…

முருகன் அருளால் பேசிய குழந்தையாகக் கருதப்படும் குமரகுருபரர் புண்ணியத் தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் காசித் திருத்தலத்தில் ஓர் சைவமடத்தை நிறுவும் ஆசை கொண்டார். அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்துவந்த முகலாய மன்னரிடம் (ஷாஜஹான்?) அதுகுறித்துத் தன் கோரிக்கையை வைக்க விரும்பினார். ஆனால் அவருக்கோ மன்னருடன் உரையாடுவதற்குத் தேவையான ஹிந்துஸ்தானி மொழி தெரியாது; மன்னருக்காவது நம் தமிழ் மொழி தெரியுமா என்றால் அவருக்கும் தமிழ் தெரியாது.

இந்தச் சங்கடமான சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்று யோசித்தார் குமரகுருபர சுவாமிகள். அவர் மனத்திலே திடீரென்று ஓர் எண்ணம் மின்னலாய் உதித்தது. ஹிந்துஸ்தானி மொழியில் புலமை பெறுவதற்குக் கலைமகளின் அருளை உடனடியாக நாடினால் என்ன? என்பதே அது.

உடனே சகலகலாவல்லியான சரஸ்வதியின் அருள்வேண்டிச் ’சகலகலாவல்லி மாலை’ எனும் தெள்ளுதமிழ்ப் பாக்களைக் கொண்ட பதிகத்தைப் பாடிமுடித்தார். அப்பாடல்கள் அனைத்துமே சுவாமிகளின் தமிழ்ப் புலமைக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளன.

சான்றாகச் சில:

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.

இப்பாடல்களின் சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் சிந்தாதேவியே தன் சிந்தையைப் பறிகொடுத்தாள் போலும். குமரகுருபரரின் விருப்பத்திற்கேற்ப ஹிந்துஸ்தானி மொழிப்புலமையை அவருக்கு நல்கினாள். அவரும் மன்னரைக் கண்டு உரையாடிக் காசியில் ஓர் மடத்தை நிறுவினார் என்று ஆன்மிக அருளாளர்கள் கூறுகின்றனர். அம்மடம் ‘காசி மடம்’ எனும் பெயரால் இன்றும் காசி நகரில் காட்சியளிக்கின்றது.

வேண்டுவோர்க்கு வேண்டுவனவற்றை நல்கும் இக்கலைத் தெய்வத்தை, கருணைக் கடலை அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி என்கிறார் கல்வியில் பெரியவரான கம்பர் தன் சரஸ்வதி அந்தாதியில். எனவே கல்வியிலும், கலைகளிலும் நாமும் சிறந்து விளங்க எல்லையில்லா அருள்முதல்வியான கலைமகளை ஒன்பான் இரவுகளின் (நவராத்திரி) ஒன்பதாம் நாளான வாணி பூசையன்று துதித்துப் பயன்பெறுவோம்.

அன்புடன்,

மேகலா

(இக்கட்டுரையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி: http://www.vallamai.com/?p=51268)

--

Megala Ramamourty

unread,
Oct 2, 2014, 8:49:36 PM10/2/14
to மின்தமிழ்
//அய்யய்யோ இவ்வளவும் எழுதீட்டேனே என்னமா அடிகிடைக்குமோ என்று பயப்படவேண்டுமா வேண்டாம என்பது புரியவில்லையே//

அச்சம் தேவையில்லை பேராசானே! நாங்கள் காந்தியின் அகிம்சை வழியை எங்கள் கண்ணாகப் போற்றுகின்றவர்கள். ஏசுநாதரைப்போல் சகிப்புத் தன்மை கொண்டவர்கள்.
அதனால் நாங்கள் யாரையும் அடியோம்! (அடிக்கமாட்டோம்!). :-)
நாங்கள் அனைவரும் உங்கள் அடியோம்! (அடியார்கள்...அதாவது சிஷ்யைகள்)  :-))
குருதட்சணையாகக் கட்டை விரலைக் கேட்டாலும் கொடுக்க மாட்டோமா? (யாருடைய கட்டை விரலை என்று கேட்டுவிடாதீர்கள்!) :-))

நவராத்திரி ரதத்தில் தாங்கள் ஏறிப் பயணிப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.

அன்புடன்,
மேகலா

Nagarajan Vadivel

unread,
Oct 2, 2014, 9:03:57 PM10/2/14
to மின்தமிழ்
இது என்ன மதுரைக்கு வந்த சோதனை.  திருட்ப்போய் தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாய் இந்த மடலாடலுக்குள் நுழைந்துவிட்டேனே
துப்பாக்கியும் சிலுவையும் எங்காள் கிட்டங்கியில் உண்டு என்று கோடிட்டிக் காட்டுகிறார்களே

செல்வன் ஐயா நன்றி உங்களுக்கு
அசடுமுசுடு

shylaja

unread,
Oct 2, 2014, 9:28:56 PM10/2/14
to mintamil
;:):)மேகலா வந்தாலே  ரதம் கலகல தான்!  கலைமகள் பதிவினை வாசித்துவருகிறேன்!
அன்புடன்
ஷைலஜா

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்..

(வெள்ளைத்தாமரைபூவிலிருப்பாள்-==பாரதியார்)

தேமொழி

unread,
Oct 2, 2014, 10:14:37 PM10/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com

இன்று நவராத்திரி கொலுவில் பாட வரும்  பிரபலம் ...

ஷைலஜா 

சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் எழுதிய 

"குறையொன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா" என்ற பாடலைப் பாடுகிறார் 

பாடல் வரிகள்: ராஜாஜி 
..................................................................................

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 2, 2014, 10:32:13 PM10/2/14
to வல்லமை, மின்தமிழ்
சூப்பரோ சூப்பர்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

2014-10-03 7:52 GMT+05:30 Tulsi Gopal <gopal...@gmail.com>:

​  
​         

It is loading more messages.
0 new messages