ஏற்கனவே பாட்டியின் பழமொழியும் சங்கவியும் என்ற பெயரில் சில பழமொழிகளை தொகுத்து ஒரு பதிவாக்கி இருந்தேன். மீண்டும் சில பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளேன் இப்பதிவில்.
பழமொழியை அனுபவத்தின் குழந்தைகள் என்று சொல்லலாம் தமிழ் இலக்கியத்தில் பழமொழியானது முதுசொல், முதுமொழி, பழஞ்சொல், மூதுரை , சொலவடைஎன்றும் கூறுகின்றனர்.
பழமொழியை கிராமத்தில் இருப்பவர்கள் இன்றும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் முன் போல் இல்லை இப்போது குறைந்து உள்ளது. பழமொழி அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.
அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
நடந்து முடிந்துவிட்ட ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு
பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
எந்தவிதமான காரியங்களைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கருத்தைச் செலுத்த வேண்டும். கொண்ட நோக்கத்தை மறந்து விட்டுக் கவனத்தை வேறொன்றில் செலுத்தல் கூடாது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை அப்பொருளோ அவரோ
இல்லாத போதுதான் வெளிப்படும்.
அடாது செய்பவன் படாது படுவான்
தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
தன்னிடமுள்ள ஒன்றின் சிறப்பினை உணராமல் பிறிதொன்றின் வெளித்தோற்றத்தில் மயங்கி அதனை உயர்வாகக் கருதுவதால் பயன் கிடையாது.
வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்
வாழ்க்கையில் கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் உதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.
கோத்திரம் அறிந்து பெண் கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு
பொதுவாக இது நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மறுமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும் அடுத்து , தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருக்கிறது.
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.
யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர். உண்மை அதுவல்ல,
அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான்,வாங்கவும் மாட்டான் .
அரை குறையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொருளையும் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொருளையும் திறமையாக வாங்கி வரவும் முடியாது. விற்று வரவும் முடியாது. நாம் இந்த பழமொழிக்கு நேரிடையாக உணரும் பொருள் இதுதான்.
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்
ஒரேயொரு வார்த்தை மாறினால் எப்படி தம் வசதிப்படி பழமொழிக்கு விளக்கம் அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட பழமொழியும் ஒரு சான்று .சிறுமை அடைய நேரிட்டாலும் கூட அதிலும் எதாவது சமாதானத்தை தேடிக் கொள்ளும் மனபாவம் உள்ளவர்களுக்காய் சொல்லப் பட்ட பழமொழியாக இது அறியப்படுகிறது .
ஆறு கெட நாணல் விடு. ஊரு கெட நூல விடு .
நேரடியாய் பழமொழியைப் பொருள் கொள்ளப் பார்த்தோமானால் ஆற்றை பாழாக்குவதற்கு நாணல் விட்டும் ஊரைக் கெட்டுப் போக செய்ய நூலை விடு என்பதாகவும் வரும். சில பழமொழிகள் இடம் மாற்றிப் பொருள் கொண்டோமானால்தான் அர்த்தம் விளங்கும். இது பற்றி இலக்கணப் பாடத்தில் இடம்மாற்றிப் பொருள்கோள் என்ற தலைப்பில் ஒரு பகுதியே தனியாக இருக்கிறது.
பழைய இஞ்சியில் காரம் அதிகம்
உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்
சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்
தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்
போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்
தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil