இவை பொருள் விளங்க சொல்லடிபடையில் பிரிக்கப்பட்டவை.
1. குறள் எண்ணையும் சுட்டி பதிவிட்டுருக்கலாம்.
2. இவை பொருள் விளங்க சொல்லடிபடையில் பிரிக்கப்பட்டவை.
சீர் அடிப்படையில் முதலில் பதிவிடுவோம்
rnk
-----
நேர்-நேர்/நிரை-நிரை/நேர்-நேர்-நேர்/ நேர்-நிரை-நேர்/
நேர்-நேர்/நிரை-நிரை-நேர்/நேர
----
வள்ளுவர் எழுத்துச்சிக்கனம் பார்ப்பவர்.
'அது ஒருவன்' என்றால் (னதொருவன்) நிரை- நிரை என்று வரும். தளையும் ஓசையும் கெடும். இங்கு ஆயுதம் அசை அலகிடும் ஒற்று போல் வந்துள்ளது.
rnk
தங்கள் அளவு தமிழ் ஞானமும் புலமையும் இல்லாதவன். அஃது வந்தால் வரும்சொல் உயிர் கொண்டு துவங்கும் என்பது திருக்குறளில் கண்கூடு. ஆனால், உயிர் வந்தால் அது அஃது என மாறும் என்பது கேள்விக்குரியதே.
கூகுளார் உதவியுடன் (from tamilconcordance by mr pandyaraja) தங்கள் பார்வைக்கு:
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு - குறள் 8:4
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு - குறள் 24:1
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார் பெறின் - குறள் 26:7
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எ ப்பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்கு பொறை - குறள் 57:10
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் - குறள் 100:6
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து - குறள் 115:4
========
அது + ஒருவன்: அதொருவன்? அதுவொருவன்?
அது + அல்லது : அதல்லது? அதுவல்லது?
( ஏனென்றால் மேலே காட்டபட்ட குறள் 24:1
ஈதல் இசைபட வாழ்தல்ல(து) வல்லது
ஊதிய மில்லை யுயிர்க்(கு)
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்(கு)
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதிய மில்லை யுயிர்க்(கு)
என்றெல்லாம் பாடம் வரும்.)
rnk
ஹரிகி அய்யா.
தங்கள் அளவு தமிழ் ஞானமும் புலமையும் இல்லாதவன். அஃது வந்தால் வரும்சொல் உயிர் கொண்டு துவங்கும் என்பது திருக்குறளில் கண்கூடு. ஆனால், உயிர் வந்தால் அது அஃது என மாறும் என்பது கேள்விக்குரியதே.
கூகுளார் உதவியுடன் (from tamilconcordance by mr pandyaraja) தங்கள் பார்வைக்கு:
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு - குறள் 8:4
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு - குறள் 24:1
49 (இல்வாழ்க்கை)
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று
அற/னெனப் பட்/டதே யில்/வாழ்க்/கை அஃ/தும்
பிறன்/பழிப்/ப தில்/லா/யின் நன்று.
நிரைநிரை நேர்நிரை நேர்நேர்நேர் நேர்நேர்
நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்(பு).
கருவிளம்-கூவிளம்-தேமாங்காய்-தேமா
கூவிளங்காய்-தேமாங்காய்-காசு.
rnk
இரண்டு குற்றியலுகரங்கள்
1) உம்மை உருபும், புணர் ஒற்றும் வந்ததால் அலகிடப்பட்டது (அஃதும்)
2) புணர்ச்சியில் மறைந்தது (பழிப்பது இல்லாயின்)
---
3) ஆய்தம் மெய் எழுத்துபோல் அசையிறுதியில் அலகில்லாமல் (அஃ தும்)
( அன்புடைமை 76)
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
அறத்/திற்/கே அன்/புசார் பெ/ன்ப அறி/யார்
மறத்/திற்/கும் அஃ/தே துணை
நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நேர்(நேர்பு).
கருமாங்காய் கூவிளம் தேமா கருவிளம்
கருமாங்காய் தேமா நாள்(காசு).
rnk
1) மூன்று குற்றியலுகரங்கள். நான் அலகிட்டது சரியென்றே எண்ணுகிறேன்.
2) பெரும்பாலும் ஈற்றுச்சீர் ஓரசையாகவோ குற்றியலுகரம் சேர்ந்தோ இருக்கும். ஐகாரக்குறுக்கம் இங்கே. ஆகையால் காசு க்குபதில் நாள்.
3) இது எப்படி??
அறத்/திற்/கே அன்/புசார் பெ/ன்ப அறி/யார்
மறத்/திற் குமஃ/தே துணை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பென்ப மனம் ஒன்று நினைக்க கை வேறாக தட்டச்சு.
ஈற்றுச்சீர் மிகப்பெரிய தவறுதான்.
rnk
அறத்/திற்/கே அன்/புசார் பென்/ப அறி/யார்
மறத்/திற்/கும் அஃ/தே துணை
நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை
கருமாங்காய் கூவிளம் தேமா கருவிளம்
கருமாங்காய் தேமா மலர்.
rnk
1) ஈற்றுச்சீரில்- ணை ஐகாரக்குறுக்கம். ஆதலால் இரு குறில். நிரை அசை. மலர் எனும் வாய்ப்பாடு.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்/பின் வழி/ய துயிர்/நிலை அஃ/திலார்க்
கென்/புதோல் போர்த்/த உடம்பு
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
நேர்நிரை நேர்நேர் நிரை(பு)
தேமா-புளிமா-கருவிளம்-கூவிளம்
கூவிளம்-தேமா-பிறப்பு
rnk
(இது இயற்சீர் மட்டுமுள்ள குறள். அவ்விழையிலும் பதிவு)
ஒழுக்கமுடைமை. 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
பரிந்/தோம்/பிக் காக்/க ஒழுக்/கந் தெரிந்/தோம்/பித்
தே/ரினு மஃ/தே துணை.
நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநேர் நிரைநேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை
கருமாங்காய்-தேமா-புளிமா-கருமாங்காய்
கூவிளம்-தேமா-மலர்
rnk
குற்றியலுகரமும் ஆய்தமும் பொதுவாக அலகு கொள்ளா. குற்றியலுகரம், புணர்ச்சியில் பின்னொற்று வருகையில் குறிலாய்த் தோன்றி அலகு பெறும். தளை தட்டினால் அலகு பெறும்.
அதே முறையில், ஆய்தமும் பொதுவாக ஒற்றாக அலகு பெறாது. தளை தட்டினால் அலகு பெறும்.
======≠=====≠==========≠=====≠
அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:162)
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
விழுப்/பேற்/றி னஃ/தொப்/ப தில்/லையார் மாட்/டு
மழுக்/காற்/றி னன்/மை பெறின்.
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் தேமா மலர்
=======≠======≠======≠====
rnk
rnk
அதிகாரம்:அழுக்காறாமை
குறள் எண்: 170
(இங்கு ஆய்தம் ஒற்றாக.)
அழுக்காற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
அழுக்/காற் றகன்/றா/ரு மில்/லையஃ தில்/லார்
பெருக்/கத்/திற் றீர்ந்/தா/ரு மில்.
நிரைநேர் நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்.
புளிமா புளிமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் தேமாங்காய் நாள்.
rnk
1). இணையத்தில் பல இடங்களில் ' 'அழுக்கற்று அகன்றாரும்' என்றே பதிவாயுள்ளது.
2) மதுரை தமிழிலக்கிய மின் தொகுப்பு பதிவிலும் ( தேமொழி அம்மையார் எடுத்த நகல்) அப்படியே.
உவேசா, கிவாஜ முதிலியோர் என்ன சொல்லியுள்ளனர்.
'பெருக்கத்தில்' சொல்லோடு இயைய 'அழுக்கற்று' என்றாரா?
கெடுப்பதும் என்பதை 'கெடுப்பதூம்' என்று நீட்டினார்போல் அழுக்காற்று என்பதை அழுக்கற்று என்று குறுக்கினாரோ??
வஉசி அதிகாரமே ' அழுக்கறாமை' என்றும், அழுக்கறு என்றால் பொறாமை கொள் என்றும் பொருள் தருகிறார். (அஃதாவது, பொறாமை கொள்ளாமை.
தருமர் பாடம் அழுக்கறாமை. மணக்குடவர், நச்சர், பரிமேலழகர் பாடம் ‘அழுக்காறாமை’. தாமத்தர் பாடம் ‘அழுக்காறுறாமை’.)
http://vocarappal.blogspot.com/2010/09/blog-post_4649.html
ஆனால் இந்தக் குறளை அழுக்காற்று என்று பாடம் கொள்கிறார் (அகலம்: தருமர், மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘அழுக்காற் றகன்றாரும்’. பரிமேலழகர் பாடம் ‘அழுக்கற் றகன்றாரும்’. நச்சர் பாடம் ‘அழுக்கற் றகன்றதும்’, ‘பெருக்கத்திற் றீர்ந்ததும்’. இல்லார் என்பது ஏழாம் வேற்றுமைத் தொகை.)
rnk
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
நடு/வின்/றி (நடு/வன்/றி) நன்/பொருள் வெஃ/கின் குடி/பொன்/றுங் (குடி/பொன்/றிக்)
குற்/றமு மாங்/கே தரும்.
நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை.
புளிமாங்காய் கூவிளம் தேமா புளிமாங்காய்
கூவிளம் தேமா மலர்.
( ஃ ஒற்றாக அலகு கொள்ளவில்லை.)
====≠====≠====≠====≠====≠====
172
படு/பயன் வெஃ/கிப் பழிப்/படு/வ செய்/யார்
நடு/வன்/மை நா/ணு பவர்
நிரைநிரை நேர்நேர் நிரைநிரைநேர் நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை.
கருவிளம் தேமா கருவிளங்காய் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.
( ஃ ஒற்றாக அலகு கொள்ளவில்லை. குற்றியலுகரம் 'ணு' குறிலாக, நேரசையாக அலகிடப்பட்டது)
====≠====≠====≠====≠====≠====
173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
சிற்/றின்/பம் வெஃ/கி யற/னல்/ல செய்/யா/ரே
மற்/றின்/பம் வேண்/டு பவர்.
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமா மலர்
( ஃ ஒற்றாக அலகு கொள்ளவில்லை. குற்றியலுகரம் 'டு' குறிலாக, நேரசையாக அலகிடப்பட்டது)
====≠====≠====≠====≠====≠====
174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
இல/மென்/று வெஃ/குதல் செய்/யார் புலம்/வென்/ற
புன்/மையில் காட்/சி யவர்.
நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை.
தேமாங்காய் கூவிளம் தேமா புளிமாங்காய்
கூவிளம் தேமா மலர்.
(ஃ ஒற்றாக அலகு கொள்ளவில்லை. குற்றியலுகரம் 'று' குறிலாக, நேரசையாக அலகிடப்பட்டது. சிலர் -நானும் கூட- இலமென்றும் என்று கொள்ளுவர். இல்லாவிட்டாலும்..என்ற பொருளில்..அப்பொழுது குற்றியலுகரம் மறையும்).
====≠====≠====≠====≠===≠====≠
175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
அஃ/கி யகன்/ற வறி/வென்/னாம் யார்/மாட்/டும்
வெஃ/கி வெறி/ய செயின்.
நேர்நேர் நிரைநேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.
தேமா புளிமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமா மலர்.
(இரண்டு இடங்களில் ஃ ஆய்தம். இரண்டும் அலகிடப்படா ஒற்றெழுத்து )
====≠====≠====≠====≠
176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
அருள்/வெஃ/கி யாற்/றின்/க(ண்) ணின்/றான் பொருள்/வெஃ/கிப்
பொல்/லா/த சூ/ழக் கெடும்.
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.
புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமாங்காய் தேமா மலர்.
(இரண்டு இடங்களில் ஃ ஆய்தம். இரண்டும் அலகிடப்படா ஒற்றெழுத்து. ' பொருள்வெஃகின்', இன்னும் பொருள் தரும் பாடம்.)
====≠====≠====≠====≠====≠====
177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
வேண்/டற்/க வெஃ/கியா மாக்/கம் விளை/வயின்
மாண்/டற் கரி/தாம் பயன்.
நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரைநிரை
நேர்நேர் நிரைநேர் நிரை.
தேமாங்காய் கூவிளம் தேமா கருவிளம்
தேமா புளிமா மலர்.
====≠====≠====≠====≠====≠====
178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
அஃ/கா/மை செல்/வத்/திற் (கி)யா/தெனின் வெஃ/கா/மை
வேண்/டும் பிறன்/கைப் பொருள்.
நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.
தேமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமாங்காய்
தேமா புளிமா மலர்.
( 'கு' குற்றியலுகரம் 'யா" வர 'கி' எனும் குற்றியலிகரமாய் மாறி, அலகிடாமல் வந்தது. ).
====≠====≠====≠====≠=====≠===
179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந்து ஆங்கே திரு.
அற/னறி/ந்து வெஃ/கா வறி/வுடை/யார்ச் சே/ருந்
திற/னறிந் தாங்/கே திரு.
கருவிளங்காய் தேமா கருவிளங்காய் தேமா
கருவிளம் தேமா மலர்.
( மிகச் சில குறட்களே இரண்டு கருவிளங்காய்ச் சீர் கொண்டவை. இது ஒன்று. அற/னறி/ந்து சீரில் 'து' குற்றியலுகரம் என அலகிடாவிடில் தளை தட்டாது: கருவிளம் சீராய் மாறும்.)
180
இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.
இற/லீ/னு மெண்/ணா/து வெஃ/கின் விற/லீ/னும்
வேண்/டா/மை யென்/னுஞ் செருக்கு.
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரை(பு).
புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமாங்காய் தேமா பிறப்பு.
(1. 'து' எனும் குற்றியலுகரம் சீர் இறுதியில் குறிலாய் மெண்/ணா/து அலகிட்டு காட்டியுள்ளேன். மாறாக, மெண்/ணா துவெஃ/கின் என்றும் அலகிடலாம்.
2. செருக்கு எனும் எழுவாய்க்கு விறலீனும் என்னும் பயனிலை. அவ்வழியே, வெஃகின் என்பதற்கு பதில் 'வெஃகு' அல்லது 'வெஃகல்' எனுமெழுவாய் சிறப்பான பாடம்.
வஉசி:
http://vocarappal.blogspot.com/2010/09/blog-post_8628.html
தருமர் பாடம் ‘இறலீனு மின்னாத’. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘வெஃகின்’. வெஃகின் என்னும் பாடத்தைக் கொள்ளுங்கால், ‘அது’ என்னும் தோன்றா எழுவாயை வருவிக்க வேண்டிய திருத்தலானும், ‘வேண்டாமை யென்னுஞ் செருக்கு விறலீனும்’ என்று கூறியிருத்தல் போல ‘வெஃகல் இறலீனும்’ என்று கூறுதலே பொருத்த மாகலானும், ‘வெஃகல்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.
====≠====≠====≠====≠====≠====
பொறுத்தல், பொறுமை, பொறாதல், மனச்சுருக்கம், புழுக்கம், மனவெரிச்சல், பொறாமை என தொடர்பு விளங்கினாற்போல் தோன்றுகிறது. செய்யவள் தவ்வையின் தொன்ம விளக்கமும் தாங்களே தந்திருக்கலாம்
இணைய மின்னூலகத்தில் முதல் இரு பாகங்கள் மட்டும். அதுவும் jpg படத்தொகுப்பாக. தேடுகிறேன்
rnk
rnk
மன்னிக்கவும். இது நான் வேண்டுமென்றே எழுதியது. தவறுதான்.
rnk
Rnk
ஒப்/புர/வி னால்/வருங் கே/டெனி னஃ/தொரு/வன்
விற்/றுக்/கோட் டக்/க துடைத்து.
நேர்நிரைநேர் நேர்நிரை நேர்நிரை நேர்நிரைநேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை(பு)
கூவிளங்காய் கூவிளம் கூவிளம் கூவிளங்காய் தேமாங்காய் தேமா பிறப்பு
(ஆய்தம் அலகிடப்படவில்லை, ஒற்றெனக் கொள்ளப்பட்டது.)
ஃஃஃ இக்குறளில் அஃதொருவன் எனும் சீரில் ஆய்தம் குறிலாக அலகிடப்பட்டது ஃஃஃ
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
அற்/றா ரழி/பசி தீர்த்/த லஃ/தொரு/வன்
பெற்/றான் பொருள்/வைப் புழி.
நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநிரைநேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.
தேமா கருவிளம் தேமா கருவிளங்காய்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
தோன்/றிற் புக/ழொடு தோன்/றுக வஃ/திலார்
தோன்/றிலிற் றோன்/றா/மை நன்று.
நேர்நேர் நிரைநிரை நேர்நிரை நேர்நிரை
நேர்நிரை நேர்நேர்நேர் நேர்(பு).
தேமா கருவிளம் கூவிளம் கூவிளம்
கூவிளம் தேமாங்காய் காசு.
(ஃ, ஆய்தம் ஒற்றாகவே கொள்ளப்பட்டது. அலகிடபடவில்லை.)
rnk
நல்/லாற்/றா னா/டி யரு/ளாள்/க பல்/லாற்/றாற்
றே/ரினு மஃ/தே துணை.
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை.
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா மலர்.
(ஆய்தம், ஃ, ஒற்றாக அலகிடபடவில்லை)
rnk
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
தவ/முந் தவ/முடை/யார்க் கா/கு மவ/மத/னை
யஃ/திலார் மேற்/கொள் வது.
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநிரைநேர்
நேர்நிரை நேர்நேர் நிரை.
புளிமா கருவிளங்காய் தேமா கருவிளங்காய்
கூவிளம் தேமா மலர்.
(ஃ, ஆய்தம், ஒற்றாகவே வந்தது. அலகு பெறவில்லை)
=====≠=====≠=====≠=====≠=====
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
ஆண்டும் அஃதொப்பது இல்
வேண்/டா/மை யன்/ன விழுச்/செல்/வ மீண்/டில்/லை
யாண்/டு மஃ/தொப்/ப தில்.
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்.
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமாங்காய் நாள்.
(மேலே காட்டியபடி அலகிட்டால், 'ஆண்டும் அஃதொப்பது' என்பதில் ஃ குறிலாக 'அகுதொப்பது' என்று வந்து அலகிடப்பட்டது)
=======≠======≠======≠======
rnk
( இதுவரை பார்த்த 24 குறட்பாக்களில் இது இரண்டாவது, ஃ குறிலாக அலகிடப்பட்டது)
அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
அவா/வில்/லார்க்/ கில்/லா/குந் துன்/பமஃ துண்/டேற்
றவா/அது மேன்/மேல் வரும்.
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்
நிரைநிரை நேர்நேர் நிரை.
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம் தேமா
கருவிளம் தேமா மலர்.
1) ஃ ஆய்தம் அலகிடப்படவில்லை
2) சீரின் இறுதி எழுத்தாக ஃ; 'து' வரும்சீரின் உயிரோடு புணர்ந்து மறைந்தது.
===≠===≠===≠=======≠===≠===≠
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
கற்/றில னா/யினுங் கேட்/க வஃ/தொரு/வற்
கொற்/கத்/தி னூற்/றாந் துணை.
நேர்நிரை நேர்நிரை நேர்நேர் நிரைநிரைநேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.
கூவிளம் கூவிளம் தேமா கருவிளங்காய்
தேமாங்காய் தேமா மலர்.
1) இங்கு ஃ ஆய்தம் குறிலாக அலகிடப்பட்டது.
2) அஃதொருவன் இங்கு அ'கு'தொருவன்.
====≠====≠====≠====≠====≠====
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
அறி/வுடை/யா ரா/வ தறி/வா ரறி/விலா
ரஃ/தறி கல்/லா தவர்.
நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரை
நேர்நிரை நேர்நேர் நிரை.
கருவிளங்காய் தேமா புளிமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்.
ஆய்தம் ஃ அலகிடப்படவில்லை. ஒற்றாகவே வந்தது.
===≠===≠===≠===≠===≠===≠===≠=
Quote:======
அ ஃ தொப்பது =அஃது+ஒப்பது
அஃது / ஒப் /ப(து) என்று அலகிட்டால் நிரை நேர் நேர் =புளிமாங்காய்
இங்கு ஆய்தத் தொடர்க குற்றியலுகரம் உள்ளது.....'ஃது ' அடுத்தடுத்து இரண்டு ஒலிகளும் வருங்கால் ஆய்தத்தைக் குறிலாகக் கொள்ள வேண்டியதில்லை
'து ' சொல்லுக்கு இடையில் வருவதால் அதைக் குறிலாக அலகிட்டதாகக் கொள்ளலாம்.
கண்மணி
======
ஆச்சர்யமான விளக்கம்:
அஃது, இதில் 'து' ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம், அதனால் அஃது நிரை அசை என்கிறீர்கள். து தனியாக இல்லை, பின் வரும் உயிரில் புணர்ந்து து+ஒ தொ ஆகியது ( குற்றொலி உ மறைந்து முற்றொலி ஒ வந்தது.)
ஆக 'அஃ' நிரையானது (தளை தட்டாமலிருக்க). அதனால் ஃ அலகிடப்பட்டது.
தங்கள் விளக்கம் யாப்பிலக்கண விதிகளிலிருந்தா? அல்லது 'teachers and students escapism' விதியா?
ஒற்று பின் வரும் மற்ற குற்றியலுகரங்களுக்கும் இவ்விதி எற்கலாமோ? எ.கா:
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
இரு/மை வகை/தெரிந் தீண்/டறம் பூண்/டார்
பெரு/மை பிறங்/கிற் றுலகு.
இங்கு 'ஈண்டுஅறம்'. டு குற்றியலுகரம், நடுவில் உள்ளது.
இதை ஈண்டு/அறம் என்றும் அலகிடலாமொ? அதுவும் நிரை நிரை என்று?
rnk
==========
அம்மணீ. மீண்டும் ஆகா! நீங்கள் காட்டியுள்ளது:
துன் / பம் அஃது / உண் / டேல்
நேர் நேர் நிரை நேர் நேர்
சரி. இதைத்தொடர்ந்து வரும் 'தவாஅது மேன்மேல் வரும்' என்ன ஆகும்? உங்கள் 'புளிமாங்காய்' பின் நிரை அல்லவா வருகிறது?
rnk
மன/நலத்/தி னா/கு மறு/மைமற் றஃ/து
மின/நலத்/தி் னே/மாப் புடைத்து.
நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
நிரைநிரைநேர் நேர்நேர் நிரை(பு).
கருவிளங்காய் தேமா கருவிளம் தேமா
கருவிளங்காய் தேமா பிறப்பு.
ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை.
அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஃ பொதுவாக ஒற்று போல, குற்றியலுகரம் போல 1/2 மாத்திரை கொண்டது, அலகு பெறாது. ஆனால் தளை தேவைப் படும்போது அலகு பெறும். இது பாட்டின் தேவைக்கேற்ப.
ஃ மட்டுமல்ல, குற்றியலுகரம் சில இடங்களில் அலகு பெறுகிறது.
ஒருவேளை முன்பு குற்றியலுகரம் தனி அடையாளம் கொண்டதாய்க் காட்டப்பட்டது ( கீற்று, புள்ளி இப்படி) அதுபோலவே ஆய்தமும் குறிலாய் வருகையில் தனி வரிவடிவம் இருந்ததோ?
rnk
தேமா கருவிளம் தேமா கருவிளங்காய்
நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நிரை நேர்
அற் / றா ரழி / பசி தீர்த் / தல் அஃது / ஒரு / வன்
பெற்றான் பொருள்வைப் புழி.
தேமா கருவிளம் தேமாங்காய் கூவிளங்காய்
நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
வீழ் / நாள் படா / அமை நன் / றாற் / றின் அஃ / தொரு / வன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.
கூவிளங்காய் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நேர்
ஒப் / புர / வி னால் / வருங் கே / டெனி னஃ / தொரு / வன்
விற்றுக்கோட் டக்க துடைத்து.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அய்யா, தாங்கள் வெளிப்படையாகக் கேட்டதே பலர் மனதிலும் உள்ளிருக்கும் எண்ணம்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் இந்த அலகிடும் முயற்சியில் நுழைந்தேன். SSLC படித்தபோது கடைசியாக முறையாக அசை, சீர் இதெல்லாம் பழக்கம். பின் தொடர்பில்லாமல் போனது. தமிழ் யாப்பு பின்புலம் இல்லாததால் இணையத்தில் படித்துப்பார்க்கிறேன். பலரும் எழுதுவது குற்றியலுகரம், ஆய்தம் மிகப்பெருவாரியாக மெய்போலவே அலகு பெறா --ஆனால்... இந்த ஆனால் இழுப்புதான் இங்கு பெருங்கேள்வி.
இதுமற்றுமின்றி, இல்/இல அன்று/அன்றும், சேராதார்/சேராதவர் என்று இதுபோல் சிறிய-சிறிய பாடபேதங்கள். உரையாசிரியர் விளக்கத்தில் இவை தெரிகின்றன.
எகா:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா
ரிறைவனடி சேரா தார்.
பிற/விப் பெருங்/கடல் நீந்/துவர் நீந்/தா
ரிறை/வ னடி/சே/ரா தார்.
பிற/விப் பெருங்/கடல் நீந்/துவர் நீந்/தா
ரிறை/வன/டி சே/ரா தவர்.
=====
rnk
///நான், இணையத்திலிருந்து கற்றவரை, 'அஃதொருவன்' எனும் தனிச்சொற்றொடர் 'அஃ/தொரு/வன்' என்று பிரிக்கப்படும். ஏனென்றால் இங்கு தளை என்ற கட்டுபாடு கிடையாது. ///
ஃ பொதுவாக ஒற்று போல, குற்றியலுகரம் போல 1/2 மாத்திரை கொண்டது, அலகு பெறாது. ஆனால் தளை தேவைப் படும்போது அலகு பெறும். இது பாட்டின் தேவைக்கேற்ப.
நான் இதுவரை அப்படிப் பார்த்ததில்லை .நீங்கள் ஆர்வத்தோடு அலகிட்ட போது நானும் உங்களோடு சேர்ந்து பழையதை நினைவூட்டி .....படித்த காலத்தில் பத்து குறளுக்கு மேல் அலகிட்டுப் பார்த்ததில்லை....தேர்வு நோக்கிற்கு அது போதும்.பாடமெடுத்த போதும் தேர்வு நோக்கே ....ஆனால் என் வகுப்பு ஒருநாளும் one-way traffic ஆக இருக்காது. நானும் என் மாணவர்களும் சேர்ந்து ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வோம். ஆனால் கடந்த நான்கு நாட்களாக இந்த இழையில் இடம்பெறும் தொனி எனக்கு வித்தியாசமாக ஒலிக்கிறது.
///ஒருவேளை முன்பு குற்றியலுகரம் தனி அடையாளம் கொண்டதாய்க் காட்டப்பட்டது ( கீற்று, புள்ளி இப்படி) அதுபோலவே ஆய்தமும் குறிலாய் வருகையில் தனி வரிவடிவம் இருந்ததோ?///ஆய்தம் குறிலாய் வருமா? இது எனக்கு புதுச் செய்தி. புரியவும் இல்லை.அதனால் போதும் என்று நினைக்கிறேன். நன்றி .
rnk ///கண்மணி
2018-07-06 23:50 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
நான், இணையத்திலிருந்து கற்றவரை, 'அஃதொருவன்' எனும் தனிச்சொற்றொடர் 'அஃ/தொரு/வன்' என்று பிரிக்கப்படும். ஏனென்றால் இங்கு தளை என்ற கட்டுபாடு கிடையாது.
ஃ பொதுவாக ஒற்று போல, குற்றியலுகரம் போல 1/2 மாத்திரை கொண்டது, அலகு பெறாது. ஆனால் தளை தேவைப் படும்போது அலகு பெறும். இது பாட்டின் தேவைக்கேற்ப.
ஃ மட்டுமல்ல, குற்றியலுகரம் சில இடங்களில் அலகு பெறுகிறது.
ஒருவேளை முன்பு குற்றியலுகரம் தனி அடையாளம் கொண்டதாய்க் காட்டப்பட்டது ( கீற்று, புள்ளி இப்படி) அதுபோலவே ஆய்தமும் குறிலாய் வருகையில் தனி வரிவடிவம் இருந்ததோ?
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஐயா,வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்வாழ்நாள் வழியடைக்குங் கல்நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர் நேர்நிரைநேர்நேர்நேர் நிரைநிரைநேர் நேர்------------------------ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்விற்றுக்கோட் டக்க துடைத்துநேர்நிரை நேர்நிரை நேர்நிரை நேர்நிரைநேர்நேர்நேர்நேர் நேர்நேர் நிரைபு-------------------------என்ற குறள்களில் அமைவதுபோல் நாலாஞ்சீரை நேர்நிரைநேர் என்றே கொள்ளவேண்டுமெனில்,அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழிநேர்நேர் நிரைநிரை நேர்நேர் நேர்நிரைநேர்நேர்நேர் நிரைநேர் நிரைஎன்ற குறளின் மூன்றாஞ்சீரில் நமக்குத் தெரியாது, ஏதோவொரு படியெடுப்புப் பிழை நடந்திருக்குமோ? பழஞ்சுவடிகளில் பாடபேதங்கள் ஏதுமுண்டா? தெரியவில்லை. காட்டாக, ”தீர்த்தலோடு” இங்கே இன்னொரு இல் பயிலுமானால் (தீர்த்தல்+ இல்+ அஃதொருவன் = தீர்த்தலி லஃதொருவன் என்றமைய) யாப்பில் சிக்கலில்லை. பொருளும் மாறாது அதேபொழுது ”ஈசனின் பொற்றாமரைக் குளத்தில் சங்கப்பலகை நீண்டு இடங்கொடுத்த திருக்குறளில் இதுபோல் கைவக்க நாம் யார்?” என்றும் தோன்றுகிறது. (20 ஆம் நூற்றாண்டில் குறளிற் கைவந்த ஆங்கிலேய ஆட்சியாளர் கதை என்னைப் பயமுறுத்துகிறது.) இது யாப்புபற்றிக் குறித்து வைக்கவேண்டிய குறளே. அதனாற்றான், ஒருசிலர் ஃ எழுத்தில் கைவைத்து ஒரு குறளில் அரை மாத்திரையும், இன்னொரு குறளில் இரு மாத்திரையும் கொடுக்கமுனைந்தார் போலும். அப்படிச் செய்கையில், ”இடம்பொறுத்து இருவேறு மாத்திரைகள் ஓரெழுத்திற்கு அமைய இலக்கண விதியென்ன? - என்ற கேள்வி ஞாயமாய் எழுகிறது. பேசாமல் படியெடுப்புப் பிழை என்றே கொள்ளலாமா? அப்படிச்செய்தால் யாப்பதிகாரம், இலக்கணம் என்ற இரண்டிலும் பிழை தவிர்க்கலாமே?. என்ன சொல்கிறீர்கள்?அன்புடன்,இராம.கி.
@திரு.பாண்டியராஜன், Mrs kanmani, /others,
மீதமிருக்கும் ஃ-குறியுள்ள குறட்பாக்களைத், தற்சமய புரிதல்படி (அலகிடாமலும், தளை தட்டினால் அலகிட்டும்) தொடர்கிறேன். தொடர்ந்து படித்துத் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள்.
@கண்மணி. 'அஃது' தனி நிரையாக நான் கொள்ளவில்லை. (As i am in Chennai without a laptop and using an android, tough to show quotes when replying. So bear with me. I would reply later in detail on this when back in Mumbai.
rnk
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்.
நுனிக்/கொம்/ப ரே/றினா ரஃ/திறந் தூக்/கி
னுயிர்க்/கிறு/தி யா/கி விடும்.
நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நிரை நேர்நேர்
நிரைநிரைநேர் நேர்நேர் நிரை.
புளிமாங்காய் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளங்காய் தேமா மலர்.
ஆய்தம் (ஃ) ஒற்றாகவே கொள்ளப்பட்டது. அலகு பெறவில்லை.
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃதுஒப்பது இல்.
இழுக்/கா/மை யார்/மாட்/டு மென்/றும் வழுக்/கா/மை
வா/யி னஃ/தொப்/ப தில்.
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்.
புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா புளிமாங்காய் நாள்.
1) இப்படி அலகிட்டால் தளை தட்டாது ஆனால், ஃ (ஆய்தம்) குறிலாக அலகிடப்பட்டது.
2) மாறாக, 'இல்' என்பதை 'இல' எனக்கொண்டால்,
இழுக்/கா/மை யார்/மாட்/டு மென்/றும் வழுக்/கா/மை
வா/யினஃ தொப்/ப தில.
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர் நிரை.
புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளம் தேமா மலர்.
இப்படி அலகிட்டால் தளை தட்டாது; ஃ (ஆய்தம்) அலகிடத் தேவையும் இல்லை.
3) இணையத்தில் பல இடங்களில் இக்குறள் ஆய்தம் இல்லாமலும் வருகிறது
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0536.aspx
http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=31&auth_pub_id=31&pno=54
ஆனால் எப்படி சீர் பிரிப்பார்கள் என்பது கேள்வி...
ஒர்ந்துகண் ணோடாது
இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
ஓர்ந்/துகண் ணோ/டா திறை/புரிந் (தி)யார்/மாட்/டுந்
தேர்ந்/துசெய் வஃ/தே முறை.
நேர்நிரை நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர்
நேர்நிரை நேர்நேர் நிரை.
கூவிளம் தேமா கருவிளம் தேமாங்காய்
கூவிளம் தேமா மலர்.
(ஆய்தம், ஃ அலகிடப்படவில்லை.
குற்றியலுகரம் து பின்வரும் யா-வுடன் புணர்ந்து குற்றியலிகரம் தி ஆயிற்று -அலகிடப்படவில்லை.)
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.
மன்/னர்க்/கு மன்/னுதற் செங்/கோன்/மை யஃ/தின்/றேல்
மன்/னா/வா மன்/னர்க் கொளி.
நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரை.
ஆய்தம், ஃ அலகிடப்படவில்லை. 'மன்னர்க்கு' இருமுறை வந்தது- ஒருமுறை கு அலகுபெற்றது; இரண்டாம் முறை கு பின் வரும் உயிரோடு புணர்ந்த்து.
====≠====≠====≠====≠====≠====
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
கண்/ணோட்/டத் துள்/ள துல/கிய(ல்) லஃ/திலா
ருண்/மை நிலக்/குப் பொறை.
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நிரை
நேர்நேர் நிரைநேர் நிரை.
தேமாங்காய் தேமா கருவிளம் கூவிளம்
தேமா புளிமா மலர்.
ஆய்தம், ஃ அலகிடப்படவில்லை.
===≠===≠===≠===≠===≠===≠===≠=
அதிகாரம்: கண்ணோட்டம்.
குறள் எண்: 575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
கண்/ணிற் கணி/கலங் கண்/ணோட்/ட மஃ/தின்/றேல்
புண்/ணென் றுண/ரப் படும்.
நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.
தேமா கருவிளம் தேமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமா மலர்.
ஆய்தம், ஃ அலகிடப்படவில்லை.
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
உடை/மை யெனப்/படு/வ தூக்/கமஃ தில்/லா
ருடை/ய துடை/யரோ மற்று.
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நிரை நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்(பு).
புளிமா கருவிளங்காய் கூவிளம் தேமா.
புளிமா கருவிளம் காசு.
ஆய்தம், ஃ (கூவிளம்) சீரின் ஈற்றொற்றாய் வந்தது. அலகிடப்படவில்லை.
===≠===≠===≠===≠===≠===≠===≠=
அதிகாரம்: ஊக்கமுடைமை.
குறள் எண்: 600
உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு.
உர/மொரு/வற் குள்/ள வெறுக்/கையஃ தில்/லார்
மர/மக்/க ளா/தலே வேறு.
நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நிரை நேர்(பு).
கருவிளங்காய் தேமா கருவிளம் தேமா
புளிமாங்காய் கூவிளம் காசு.
ஆய்தம், ஃ (கருவிளம்) சீரின் ஈற்றொற்றாய் வந்தது. அலகிடப்படவில்லை.
செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனில் கூரியது இல்.
செய்/க பொரு/ளைச் செறு/நர் செருக்/கறுக்/கு
மெஃ/கத/னிற் கூ/ரிய தில்.
நேர்நேர் நிரைநேர் நிரைநேர் நிரைநிரைநேர்
நேர்நிரைநேர் நேர்நிரை நேர்.
தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்.
(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)
பேராண்மை என்ப தறுகண் ஒன்றுஉற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
பே/ராண்/மை யென்/ப/ தறு/கணொன் றுற்/றக்/கா
லூ/ராண்/மை மற்/றத னெஃகு.
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரை நேர்(பு).
தேமாங்காய் தேமா கருவிளம் தேமாங்காய்
தேமாங்காய் கூவிளம் காசு.
(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை. ஈற்றுச்சீர், நேர்பு-வில் நேரசைப்பகுதியில் வந்தது.).
அற்றால் அறவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
அற்/றா லள/வறிந் துண்/க வஃ/துட/ம்பு
பெற்/றா னெடி/துய்க்/கு மாறு.
நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்(பு).
தேமா கருவிளம் தேமா புளிமாங்காய்
தேமா புளிமாங்காய் காசு.
(ஆய்தம், ஃ அலகிடப்பட்ட மற்றொரு குறள்)
உண்க என்பதற்குப் பதில் உண்ணுக என்று வந்தால் ஆய்தம் அலகிடபடவேண்டிய அவசியம் இல்லை.
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.
ஒளி/யொரு/வற் குள்/ள வெறுக்/கை யிளி/யொரு/வற்
கஃ/திற/ந்து வாழ்/து (வா/ழு) மெனல்.
நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரைநேர்
நேர்நிரைநேர் நேர்நேர் நிரை.
கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமா மலர்.
(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்
வைத்/தான்/வாய் சான்/ற பெரும்/பொரு ளஃ/துண்/ணான்
செத்/தான் செயக்/கிடந்/த தில்.
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநிரைநேர் நேர்.
தேமாங்காய் தேமா கருவிளம் தேமாங்காய்
தேமா கருவிளங்காய் நாள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
அணி/யன்/றோ நா/ணுடை/மை சான்/றோர்க்/கஃ தின்/றேற்
பிணி/யன்/றோ பீ/டு நடை.
நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர் நிரை.
புளிமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் தேமா
புளிமாங்காய் தேமா மலர்.
ஆய்தம், ஃ (தேமாங்காய்) சீரின் ஈற்றொற்றாய் வந்தது. அலகிடப்படவில்லை.
என்னிடம் கணினி இல்லாததால் இப்பொழுது என் கேள்வியையும், தாங்கள் கூறியுள்ள முறைக்கு என்னுடைய அடுத்த சந்தேகங்களையும் (with quotes from your detailed replies) எழுதவியலாத நிலை. இன்னும் இருநாட்கள் பொறுக்கவும்.
rnk
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
உழு/வா ருல/கத்/தார்க் கா/ணியஃ தாற்/றா
தெழு/வா/ரை யெல்/லாம் பொறுத்து.
நிரைநேர் நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை(பு).
புளிமா புளிமாங்காய் கூவிளம் தேமா
புளிமாங்காய் தேமா பிறப்பு.
1) ஆய்தம், ஃ (கூவிளம்) சீரின் ஈற்றொற்றாய் வந்தது. அலகிடப்படவில்லை.
2) மணக்குடவர் பாடம்:
( உழு/வா ருல/கத்/தார்க் கா/ணியஃ தாற்/றார்
தொழு/வா/ரே யெல்/லாம் பொறுத்து.)
அற்/றா லள/வறிந் துண்/க வஃ/துட/ம்பு
பெற்/றா னெடி/துய்க்/கு மாறு.
நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்(பு).
தேமா கருவிளம் தேமா புளிமாங்காய்
தேமா புளிமாங்காய் காசு.
(ஆய்தம், ஃ அலகிடப்பட்ட மற்றொரு குறள்)
_-----------------
திருத்தியது:
அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
அற்/றா லள/வறிந் துண்/க வஃ/துடம்/(பு)
பெற்/றா னெடி/துய்க்/கு மாறு.
நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநிரை(நேர்)
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்(பு).
தேமா கருவிளம் தேமா கருவிளம்(காய்)
தேமா புளிமாங்காய் காசு.
(ஆய்தம், ஃ அலகிடப்பட்ட மற்றொரு குறள். பு, குற்றியலுகரம் அலகிட்டாலும், இடாவிட்டாலும் தளை தட்டாது.)
==========
தவறான பதிவுக்கு மன்னிக்கவும்.
தவறு:============
அதிகாரம்: பெருமை.
குறள் எண்: 971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.
ஒளி/யொரு/வற் குள்/ள வெறுக்/கை யிளி/யொரு/வற்
கஃ/திற/ந்து வாழ்/து (வா/ழு) மெனல்.
நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரைநேர்
நேர்நிரைநேர் நேர்நேர் நிரை.
கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய் கூவிளங்காய் தேமா மலர்.
(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)
----+++++++++++++++
=========திருத்தியது:
அதிகாரம்: பெருமை.
குறள் எண்: 971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.
ஒளி/யொரு/வற் குள்/ள வெறுக்/கை யிளி/யொரு/வற்
கஃ/திறந்/(து) வாழ்/து (வா/ழு) மெனல்.
நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர் நிரைநிரைநேர்
நேர்நிரை(நேர்) நேர்நேர் நிரை.
கருவிளங்காய் தேமா புளிமா கருவிளங்காய்
கூவிளம்(காய்) தேமா மலர்.
(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை. குற்றியலுகரம் து அலகிட்டாலும், இல்லாவிட்டாலும் தளை தட்டாது.)
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
நோக்/கினா ணோக்/கி யிறைஞ்/சினா ளஃ/தவள்
யாப்/பினு ளட்/டிய நீர்.
நேர்நிரை நேர்நேர் நிரைநிரை நேர்நிரை
நேர்நிரை நேர்நிரை நேர்.
கூவிளம் தேமா கருவிளம் கூவிளம்
கூவிளம் கூவிளம் நாள்.
ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை. (அஃதவள், அஃது/அவள் என்று பிரியாமல், அஃ/தவள் என்றே வந்தது. ஃ ஒற்றாகவே கொள்ளப்படுகிறது).
இயற்சீர் மட்டும் உள்ள குறள். அங்கும் பதிவு
மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
மறைப்/பேன்/மன் யா/னிஃ/தோ நோ/யை யிறைப்/பவர்க்
கூற்/றுநீர் போ/ல மிகும்.
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநிரை
நேர்நிரை நேர்நேர் நிரை.
புளிமாங்காய் தேமாங்காய் தேமா கருவிளம்
கூவிளம் தேமா மலர்
ஃ, ஆய்தம் காய்ச்சீரின் இடையில் வந்ததால், அலகிட்டாலும், இல்லாவிட்டாலும் தளை தட்டாது.
இங்கு அலகிடப்படவில்லை.
====≠===≠===≠==≠=====≠====≠==
அதிகாரம்: படர்மெலிந்து இரங்கல் குறள் எண்: 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதுஅடுங்கால்
துன்பம் அதனில் பெரிது
இன்/பங் கடல்/மற்/றுக் கா/ம மஃ/தடுங்/கால்
துன்/ப மத/னிற் பெரிது.
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநிரைநேர்
நேர்நேர் நிரைநேர் நிரை(பு).
தேமா புளிமாங்காய் தேமா கருவிளங்காய்
தேமா புளிமா பிறப்பு.
இக்குறளில் ஃ(ஆய்தம்) அலகு பெற்றது. 'மஃ' நிரையசையாகக் கொள்ளப்பட்டது.
====≠====≠====≠====≠====≠====
அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்
குறள் எண்: 1279
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது.
தொடி/நோக்/கி மென்/றோ/ளு நோக்/கி யடி/நோக்/கி
யஃ/தாண் டவள்/செய் தது.
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரை.
புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமா புளிமா மலர்.
(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)
====≠====≠====≠====≠====≠====
அதிகாரம்: புலவி
குறள் எண்:1308
நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃதுஅறியும்
காதலர் இல்லா வழி.
நோ/த லெவன்/மற்/று நொந்/தா/ரென் றஃ/தறி/யுங்
கா/தல ரில்/லா வழி.
நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரைநேர் நேர்நிரை நேர்நேர் நிரை.
தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
கூவிளம் தேமா மலர்
(ஃ, ஆய்தம் அலகிடப்படவில்லை)
=============================
crap google settings; it trims a long post; i give up!
நன்றி அய்யா தற்பொழுதுதான் பார்த்தேன்
திருத்திக்கொள்கிறேன்
On Sunday, June 10, 2018 at 3:45:39 AM UTC-7, nkantan r wrote:நன்றி.இவை பொருள் விளங்க சொல்லடிபடையில் பிரிக்கப்பட்டவை.
1. குறள் எண்ணையும் சுட்டி பதிவிட்டுருக்கலாம்.
2. இவை பொருள் விளங்க சொல்லடிபடையில் பிரிக்கப்பட்டவை.
சீர் அடிப்படையில் முதலில் பதிவிடுவோம்rnk
அடிபடை என்பது வினைத்தொகை. ’தாக்குகின்ற படை’ எனப் பொருள். இராமன் அடிபடையொடும் இலங்கை சென்றான்.அடியாள், அடிபடை, ....நீங்கள் சொல்ல நினைப்பது: அடிப்படை.‘சரவணன் தமிழ்மைந்தன்’ முகமது மேத்தா, அப்துல் ரகுமான், ... நல்ல புதுக்கவிதைகளை இடுகிறார்.அவர் காழ்புணர்ச்சி என எழுதுகிறார். அஃது காழ்ப்புணர்ச்சி. பலர் ஃபேஸ்புக்கில். பார்ப்பனர் ‘priests' என்னும்சொல்லைப் பார்பனர் என எழுதுகின்றனர். இவை போல் பல ....நா. கணேசன்