தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையையும் அவற்றின் உச்சரிப்பையும் தொல்காப்பியம் வரையறுத்துத் தந்துள்ளதால் இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் அரிச்சுவடி மாறாமல் உச்சரிப்பும் நிலைத்துள்ளது.
ஆனால் தமிழ் எழுத்துகளின் வடிவம் மாறிக்கொண்டே வந்துள்ளதைக் கல்வெட்டுகள் மூலமாகவும் அவற்றை விளங்கப்படுத்தும் நிபணர்கள் வாயிலாகவும் அறிகிறோம்.
தமிழ் எழுத்துகளின் வடிவங்களை இதுவரை எங்கும் வரையறுத்து வைத்திருப்பதாக நான் அறியவில்லை.
இப்படியான ஒரு வரையறை உருவாக்கப்பட்டால் இனிவரும் காலங்களில் தமிழின் வரிவடிவம் நிலையாகிவிடும்.
எ.கா.
நிலைக்குத்தாக நேர்கோடு மேலிருந்து கீழாக ஓர் அலகு கீறி அது முடியும் இடத்திலிருந்து கிடையாக வலமாக இரண்டு அலகு நீளமாக நேர்கோடு கீறிட வருமே ட.
இது ட விற்கே ட எழுதுவது எப்படி என்று விளக்குவது போலத் தோன்றினாலும், இது தேவை என்று நான் எண்ணுகிறேன்.
இங்கிருப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
க. செயபாலன்