என்னது? மாதவிப் பந்தலுக்குக் கல்யாணமா? எப்போ? எங்கே? ஹா ஹா ஹா! இதோ, இங்கே! போய் ஆசீர்வாதம் பண்ணிட்டு வரீங்களா? :)
* என் தோழி கோதைக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!
* அவள் ஆருயிர் மாதவிப் பந்தலுக்கும், என் முருகனுக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!
இன்று பங்குனி உத்திரம்! (Mar-29,2010) !
அப்படி
என்ன இருக்கு பங்குனி உத்திரம் அன்னிக்கு?-ன்னு யோசிக்கறீங்களா? கீழே
படத்தைப் பாருங்க! சொல்ப சொல்ப, நூகே அர்த்தா கொத்தாகும்! :)
* தோழி கோதைக்கும் - அரங்கனுக்கும் திருவில்லிபுத்தூரிலே திருமணம் ஆகும் நாள்!
* என் ஒரு திரு முருகன், அவன் வள்ளியை மணக்கும் நாள்!
* சீதா கல்யாண வைபோகமே என்று சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் ஆகும் நாள்!
* பாற்கடலில் தோன்றி, அன்னை மகாலக்ஷ்மி, பெருமாளுக்கு மாலையிடும் நாள்!
* ஜகத் மாதா-பிதா, பார்வதி பரமேஸ்வரன் திருமண நாள்!
* பூலோக வைகுந்தமான திருவரங்கத்திலே, தாயாருடன் அரங்கன் சேர்த்தி காணும் திருநாள்!
இப்படித் திருமணத்துக்கென்றே தோன்றிட்ட திருநாள் பங்குனி உத்திரம்!
இரு மனம், ஒரு மனம் ஆகி, திரு மணம் ஆகும் திருநாள் = பங்குனி உத்திரம்!
இன்று மனத்துக்கினிய இராகவனுக்கும்-சீதைக்கும் கல்யாணம்-ன்னு சொன்னேன்-ல்ல?
சீதை கல்யாணம்-ன்னா என்ன பாட்டு? = சீதா கல்யாண வைபோகமே!
இந்தப்
பாட்டைத் தொடாத சினிமா, மேடை, வீடே இல்லை! அப்படி மர்ம ஜாலங்கள் இருக்கு
இந்தப் பாட்டில்!
இதை மெல்லிசா பாடும் போது...கல்யாணம் முடிஞ்ச கையோட...ரெண்டு பேரும் கைகோர்த்து,
இணைபிரியாத அன்னங்கள் போல்,
அப்படியே, அடி எடுத்து வச்சி வராப் போலவே இருக்கும்! அவ்ளோ ஒரு Softness இந்தப் பாட்டில்!
இவ்ளோ மெல்லீசா, ஒரு பாட்டை யார் எழுதினா-ன்னு கேட்கறீங்களா? = நம்
அனுமன் தான்!
தெலுங்கில் எழுதியது வேணும்-ன்னா =
தியாகராஜரா இருக்கலாம்!
ஆனால், இது மூலமா சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் நடத்தி வச்சதே நம் அனுமன் தான்!அட, அது எப்படிப்பா? அனுமார் காட்டுல தான் அறிமுகமே ஆவுறாரு? அதுவும் சீதையத் தொலைத்த பின்பு?
அவர்
எப்படி ரெண்டு பேருக்கும் கண்ணாலம் செஞ்சி வைச்சாரு-ன்னு கேட்கறீங்களா? அனுமன் நடத்தி
வைத்த கல்யாணம் பற்றி யாராச்சும் சொல்லுங்களேன்! இப்போ பாடலைக் கேட்போம்!
வழக்கம் போல் ஜீவனும்+மெட்டும் மாறாது, தமிழில் மொழியாக்க முயன்றுள்ளேன்!
படிச்சி-கேட்டுப் பார்த்துட்டு பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!
இதைத் தமிழில் அழகாகப் பாடிக் கொடுத்தவர் = மீனாட்சி சங்கரன்!
தமிழாக்கச் சொற்களின் கோர்வையை, அழகாப் பாட்டில் கொண்டாந்து கொடுத்த அவருக்கு, அடியேன் இனிய நன்றி! இதோ.....
வரிகள்: தியாகராஜர்
ராகம்: குறிஞ்சி (அ) சங்கராபரணம்
குரல்: பலரும்
சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!
பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ரஅனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா!
கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா!
(சீதா கல்யாண)பக்த ஜன பரிபால, பரித சர ஜால
புக்தி முக்தி தலீல, பூதேவ பாலதாழாதே சர மழையால், அன்பர்களைக் காக்கும்!
இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்!(சீதா கல்யாண)பாமரா அசுர பீம, பரிபூர்ண காம
சியாம ஜகத் அபிராம, சாகேத தாம
அல்லார்க்கு மருள் அருளி, நல்லார்க்கும் அருளும்!
அயோத்தி நகர் அபிராமன், கார்மேனி்த் திரளும்!(சீதா கல்யாண)
சர்வ லோக ஆதார, சமர் ஏக வீர
கர்வ மானவ தூர, கனக அக தீரபார்க் களத்தில் ஆதாரம், போர்க் களத்தில் வீரம்!
சீர்க் குணங்கள் உனது ஆரம், சினந்தார்க்கு தூரம்!
(சீதா கல்யாண)நிகம ஆகம விஹார, நிருபம சரீர
நக தர அக விதார, நதலோக ஆதாரஆகமங்கள் வேதங்களும், உன் அழகு பார்க்கும்!
ஆறாத பாவங்களை, அறுத்து(ன்) அடி சேர்க்கும்!(சீதா கல்யாண)பரமேச நுத கீத பவ ஜலதி போத
தரணி குல சஞ்சாத தியாக ராஜ நுத
சிவபெருமான் உளம் பாடும், பிறவிக் கடல் கலமே!
தியாகராஜன் உனைத் துதிக்க, தரணி வளர் நலமே!(சீதா கல்யாண)
பாடலின் பொருள் புரிவதற்காகத் தமிழில் கேட்டீர்கள்! மூலப் பாடலைத் தெலுங்கில் கேட்கலீன்னா எப்படி?இதோ, சுட்டி!
http://www.youtube.com/watch?v=IKwUIsONrgM
குழுவாகப் பாடினாலும், கூச்சலாப் பாடாம, எவ்ளோ அனுபவித்து பாடுறாங்க-ன்னு நீங்களே பாருங்க!
கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு அவ சொன்னது சரியாத் தான் இருக்கு!
இதுக்குப் பேரு தான் குணானுபவம் = கூடி இருந்து குளிர்தல்!
பாடலின் முடிவில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த முகத் திருப்தி...
Dont miss this Mesmerizing Effect of Seetha Kalyana Vaibhogame! Just Watch it!
anbudan,
krs
http://madhavipanthal.blogspot.com