தஞ்சைவாணன்கோவை தமிழின் ஒருமுக்கிய நூல். பொய்யாமொழிப்புலவர் 12-ஆம் நூற்றாண்டில்தஞ்சாக்கூர் என்னும் ஊர்த் தலைவன் மேல் பாடினது. அதுவும், தண் + செய் + ஆக்கூர் = தஞ்சை + ஆக்கூர் = தஞ்சாக்கூர்.சேலத்தில் வாழ்ந்த சொக்கப்ப நாவலர் 17-ஆம் நூற்றாண்டில் உரை செய்துள்ளார். 2000 வருஷ வேளாண் வாழ்க்கைநூலாலும், உரையாலும் விளங்கும்.
வணக்கம்.சிவகங்கை மாவட்டம்,
பழையனூருக்குக் கிழக்கே, திருப்பாச்சேத்தி ஊருக்குத் தெற்கே சுமார் 5கி.மீ. தூரத்தில் உள்ளது தஞ்சாக்கூர்.
இங்கு எனது தந்தையின் நண்பருக்குச் சொந்த ஊர் அது.2015-03-17 5:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தஞ்சைவாணன் கோவை இணைத்தில் உள்ளதா? என அறியத் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.தஞ்சைவாணன்கோவை தமிழின் ஒருமுக்கிய நூல். பொய்யாமொழிப்புலவர் 12-ஆம் நூற்றாண்டில்தஞ்சாக்கூர் என்னும் ஊர்த் தலைவன் மேல் பாடினது. அதுவும், தண் + செய் + ஆக்கூர் = தஞ்சை + ஆக்கூர் = தஞ்சாக்கூர்.சேலத்தில் வாழ்ந்த சொக்கப்ப நாவலர் 17-ஆம் நூற்றாண்டில் உரை செய்துள்ளார். 2000 வருஷ வேளாண் வாழ்க்கைநூலாலும், உரையாலும் விளங்கும்.இந் நூல் கிடைத்தால், வாசித்து மகிழ்ந்து பின் அவர்களிடமும் கொடுப்பேன்.
பொய்யாமொழிப் புலவர் |
திருமதி.கீதா சாம்பசிவம் Aug 6, 2009
“பொன் போலும் கள்ளிப் பொறி பறக்கும் கானலிலே
தம் கனவில் வந்து தன்னைப் பாடச் சொன்ன முருகனும், தாம் அதற்கு மறுத்ததும், கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாடமாட்டேன் எனச் சொன்னதும் நினைவில் வந்தது. அதனால் தான் முருகனே வேடனாய் வந்து முட்டையைப் பற்றித் தம்மைப் பாட வைத்துத் தம் அறியாமையைப் போக்கித் திகைப்பை உண்டுபண்ணி உள்ளான் எனப் புரிந்து கொண்டார் புலவர். வந்தது வேறு யாரும் அல்ல, முருகனே எனவும் அறிந்து கொண்டார். புலவரின் ஆணவம் அகன்றது. அன்றிலிருந்து வித்தியாசம் பார்க்காமல் தெய்வங்களைக் குறித்துப் பாடி வந்தார் பொய்யாமொழிப் புலவர். இவரின் காலம் பதினாறாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது. இந்தப் புலவரைப் பற்றிய திரைப்படம், “சிவகவி” என்னும் பெயரில் திரு எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடி நடித்து வெளிவந்து பல நாட்கள் ஓடியதாய்த் தெரிய வருகிறது. |
| Last Updated on Saturday, 19 September 2009 09:10 |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பொய்யாமொழிப் புலவர்
திருமதி.கீதா சாம்பசிவம்
Aug 6, 2009
இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது சரியாய்த் தெரியவில்லை. ஆனால் குருவின் மேல் அதீத பக்தி உள்ளவர். குருவின் கட்டளையைச் சிரமேல் கொண்டு அதைச் சரிவர நடத்தித் தருவார். இவர் தமிழில் கரைகண்டவர். மாகாளியின் அருளால் இவர் சொன்ன வாக்கும் பலிக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும் வரையில் இவருக்கே தன்னுடைய இந்தச் சிறப்புத் தெரியாமல் இருந்தது. ஒருநாள் குருநாதரின் தினைப்புலத்தைக் காவல் காக்கச் சென்றார். அந்த ஊரில் ஓர் முரட்டு வீரன் இருந்தான். அவன் பெயர் காளிங்கராயன். அவன் குதிரையும் அவனைப் போலவே முரடாக வளர்க்கப் பட்டிருந்தது. பொய்யாமொழிப் புலவரின் இயற்பெயர் என்ன என்பதும் யாருக்கும் தெரியாது. இவர் தினைப்புலம் காவல் காக்கும் நேரம் காளிங்கராயனின் குதிரை அங்கே வந்து மேய்ந்து பயிரை இஷ்டத்துக்கு அழித்துவிட்டது. புலவர் குதிரையை விரட்டினாலும் அது போகாமல் புலவர் மீது ஆக்ரோஷமாய்ப் பாய்ந்தது. செய்வதறியாது திகைத்த புலவர் எச்சரிக்கை உணர்வோடு ஒதுங்கிக் கொண்டு மாகாளியையும், தம் குருவையும் மனதில் நினைத்துக் கொண்டு,
“வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே
காய்த்த தினைப்புனத்துக் காலை வைத்துச் –சாய்த்துக்
கதிரை மாளத்தின்னும் காளிங்கன் ஏறும்
குதிரை மாளக் கொண்டு போ!” என்று பாடிவிட்டார். உடனேயே குதிரை துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. கனைத்த வண்ணம் கீழே விழுந்து இறந்துவிட்டது.
திகைத்தார் புலவர். தன்னுடைய பாடலுக்கு இப்படி ஒரு சக்தியா? வியப்பாய் இருந்தாலும் பயமாகவும் இருந்தது அவருக்கு. ஐயோ! என் செய்வேன், காளிங்கராயனுக்கு இது தெரிந்தால் நம்மைச் சும்மாவிடமாட்டானே? எனத் தம்மைத் தாமே நொந்து கொண்டு குருநாதரிடம் போய்ச் சொன்னார். குருநாதரும் பதறி அடித்துக் கொண்டு வேதனையோடு இறந்த குதிரையின் அருகே தம் சீடரோடு வந்து சேர்ந்தார். புலவரை ஒரு பார்வை பார்த்தார். உடனேயே குருவின் உள்ளத்தை உணர்ந்தவராய்ப் புலவர், “குதிரை மாளக் கொண்டு போ!” என்னும் அடியை மாற்றிக் “குதிரை மீளக் கொண்டு வா!” என்று பாடினார். என்ன ஆச்சரியம்?? அதிசயம்?? குதிரை உயிர்பெற்று எழுந்து துள்ளிக் கொண்டு ஓடியது வேகமாய். உடலை உதறிக் கொண்டு சென்ற குதிரையைப் பார்த்த குருநாதர் மனம் மகிழ்ந்து தன் பயத்தையும் உதறிவிட்டுச் சீடனைப் பார்த்து, “அப்பா, உன் வாக்குப் பலிக்கிறதே! இன்று முதல் நீ பொய்யாமொழிப் புலவன் என்னும் பெயர் பெறுவாய்!” என்று வாழ்த்தினார். பின்னர் பொய்யாமொழிப் புலவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் பாண்டியநாட்டிற்குச் சென்றார். அங்கே பாடல்கள் பாடி, சிலை உருவில் இருந்த சங்கப் புலவர்கள், கரக்கம்பம், சிரக் கம்பம் செய்யும்படிச் செய்து, பொற்றாமரைக் குளத்தில் ஆழத்தில் மூழ்கிக் கிடந்த சங்கப் பலகையை மேலே வந்து மிதக்க வைத்தார். இயல்பாகவே சிவபக்திச் செல்வரான இந்தப் பொய்யாமொழி, இன்னும் ஆலவாயனிடம் தீராத பக்தி பூண்டு, சிவனைத் தவிர, வேறொரு தெய்வமே இல்லை என்றும், வேறு எந்தக் கடவுளையும் பாடவும் மாட்டேன் என்றும் சொல்லி வந்தார்.
ஒரு நாள் பொய்யாமொழிப் புலவரின் முன் முருகன் தோன்றினான். “ புலவரே, உம் தமிழால் எம்மைப் பாடுவீராக! “ என்று கேட்க, புலவரோ, “கோழியைப் பாடிய இந்த என் வாயால் அதன் குஞ்சைப் பாடுவேனோ? அப்பனைப் பாடிய வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?” என்று சொல்லி மறுத்துவிட்டார். அவ்வளவில் மறைந்தான் முருகன். நாட்கள் சென்றன. வைகைக் கரையில் இருந்த தஞ்சாக்கூர் என்னும் ஊரில் தஞ்சை வாணன் என்பவர் வசித்து வந்தார். அவரைக்காணவேண்டிச் சென்றார் பொய்யாமொழிப் புலவர். வழியில் பாலை நிலக் காடுகள் இருந்தன. அந்தக் காட்டைக் கடந்தே செல்லவேண்டும். புலவர் சென்று கொண்டிருந்த போது, ஒரு வேடன் அவரை வழிமறித்தான். இடக்கையில் வில், வலக்கையில் அம்பு, தோளில் அம்புறாத்தூணி எனக் காட்சி அளித்தான் வேடன். இளைஞன். வசீகரமான முகம். முகத்தின் காந்தி பிரமிக்க வைத்தது. அவன் நிறமோ, செக்கச் சிவந்த சூரியனை ஒத்திருந்தது. இளம் சூரியனோ எனக் காட்சி அளித்த அந்த வேடன் தன் கண்களை உருட்டி விழித்துப் பயம் காட்டியதைக் கண்டார் புலவர். தம்மிடம் பொருள் ஏதும் இல்லை எனத் தெளிந்தார். வேடனும் புரிந்து கொண்டான் அவரிடம் பொருளில்லை என்பதையும் அவர் ஒரு புலவர் என்றும் அறிந்து கொண்டான்.
“ஹாஹ்ஹா! ஹாஹ்ஹா! புலவனா நீ? உன்னிடம் பொருள் இல்லையா? சரி, போகிறது, என் மேல் ஒரு பாடல் பாடு!” என்றான் வேடன். புலவர் சற்றுத் தயங்கினாலும், இவனிடமிருந்து தப்பவேண்டி, “சரியப்பா, உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் முட்டை!” என்று பதில் வந்தது.
“பொன் போலும் கள்ளிப் பொறி பறக்கும் கானலிலே
என் பேதை செல்லற்கியைந்தனளே- மின் போலும்
மானவேல் முட்டைக்கு மாறாய் தெவ்வர் போம்
கானவேல் முட்டைக்குங்காடு!”
என்று பாடினார் புலவர். பாட்டின் பொருளாவது: முட்டை என்னும் பெயருள்ள இந்த வேடன் மின்னல் போல் மின்னும் கூர்மையான வேலை வைத்திருக்கிறான். இந்த அடர்த்தியான கருவேலங்காட்டுக்குள்ளே செல்லுபவர்கள் முட்டையின் எதிரிகளாய்த் தான் இருக்க முடியும். சூரிய வெப்பத்தினால் இந்தக் காட்டுக் கள்ளிச் செடிகள் எல்லாம் தீப்பிடித்து எரியும். அத்தகைய இந்தக் காட்டுக்குள் பேதையும், இளம்பெண்ணுமாகிய என் மகள் தன் தலைவனோடு செல்ல இசைந்தாளே!” என்பது இதன் பொருள்.
பாடலைக் கேட்ட வேடன் பெரிதாகச் சிரித்தான். “புலவா, உன் பாட்டில் உண்மை ஏதுமே இல்லை, ஆனால் நீ பொய்யாமொழி என அறிமுகம் செய்து கொண்டாயே? தண்ணீர் இல்லாமல் வெப்பம் தாங்காமல் கள்ளிச் செடிகள் காய்ந்துபோய்த் தீப்பிடிக்கும் நிலையில் இருக்கும்போது அங்கே கருவேலமுட்கள் மட்டும் எப்படித் தாக்குப் பிடிக்கும்? என்ன புலவன் நீ? இதோ, நான் பாடுகிறேன், பார்!” என்று சொல்லிவிட்டு வேடன் பாடலை மாற்றிப் பாட
(பாடல் கிடைக்கவில்லை, கிடைத்தவர்கள் இடலாம்)
| இச்செய்யுளைக் கேட்டுக்கொண்டிருந்த முருகவேடன், ‘இச் செய்யுளிற் பொருள் குற்றமுளது. அஃதாவது கள்ளியே பொரிந்து தீயாகி அதன் பொறி பறக்குங் கானலில் வேல முட்கள் வெந்தெரிந்து போகாமல் கிடப்பதெங்ஙனம்?‘ என்று நகைத்தார். ‘வேலமுள் வெந்து போகாது கிடந்து காலில் தைக்க இயலுமோ? இவ்வாறு குற்றமுள்ள பாடல் புலவர் பாடுவரோ? யான் பாடுவேன் கேட்டிடுக,‘ என்று பொய்யாமொழியார் மீது, | |
| "விழுந்ததுளி அந்தரத்தே வேமென்றும் வீழின் எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் - செழுங்கொண்டல் பெய்யாத கானகத்திற் பெய்வளையும் சென்றனளே பொய்யா மொழிப்பகைஞர் போல்" |
| என்னும் வெண்பாவைப் பாடினார். அப்பால் ‘நீ முன் குஞ்சைப் பாடேனென்று கூறிய வாயால் இப்போது முட்டையைப் பாடியது வியப்புக் குரித்தே,‘ என்று கூறினார். அப்போது புலவர், இவ்வுருவில் வந்துள்ளோர் முருகப்பெருமானே எனத் துணிந்தனர். தம் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டி வணங்கினர். முருகக் கடவுள் தம் தெய்வத் திருக்கோலங் காட்டிப் புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தனர். | |
On Tuesday, March 17, 2015 at 7:30:55 AM UTC-7, kalai wrote:வணக்கம்.சிவகங்கை மாவட்டம்,
பழையனூருக்குக் கிழக்கே, திருப்பாச்சேத்தி ஊருக்குத் தெற்கே சுமார் 5கி.மீ. தூரத்தில் உள்ளது தஞ்சாக்கூர்.
இங்கு எனது தந்தையின் நண்பருக்குச் சொந்த ஊர் அது.2015-03-17 5:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தஞ்சைவாணன் கோவை இணைத்தில் உள்ளதா? என அறியத் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.தஞ்சைவாணன்கோவை தமிழின் ஒருமுக்கிய நூல். பொய்யாமொழிப்புலவர் 12-ஆம் நூற்றாண்டில்தஞ்சாக்கூர் என்னும் ஊர்த் தலைவன் மேல் பாடினது. அதுவும், தண் + செய் + ஆக்கூர் = தஞ்சை + ஆக்கூர் = தஞ்சாக்கூர்.சேலத்தில் வாழ்ந்த சொக்கப்ப நாவலர் 17-ஆம் நூற்றாண்டில் உரை செய்துள்ளார். 2000 வருஷ வேளாண் வாழ்க்கைநூலாலும், உரையாலும் விளங்கும்.இந் நூல் கிடைத்தால், வாசித்து மகிழ்ந்து பின் அவர்களிடமும் கொடுப்பேன்.இருக்கிறது காளை ஐயா. சங்க இலக்கியம் பாடும் தமிழகத்தின் பழைய வேளாண்டொழிலின் - அண்மைக்காலம்வரை இருந்த செய்திகளைப் - பொய்யாமொழிப்புலவர் 12-ஆம் நூற்றாண்டில் தஞ்சாக்கூர் என்னும்மாறை நாட்டு ஊரன் பேரில் பதிவு செய்து அருளியுள்ளார்கள்.
தஞ்சாக்கூரும் மாரநாடும் (மாறைநாடு) அருகருகே உள்ள வெவ்வேறு ஊர்கள்.
தஞ்சாக்கூர் வைகைக் கரையில் இல்லை.வைகைக் கரையிலிருந்து தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
தஞ்சைவாணன் கோவை
தஞ்சைவாணன் கோவை என்ற நூலின் ஆசிரியர் யார்? பாட்டுடைத் தலைவன் யார்? இந்நூலின் பாடுபொருள் என்ன? இது எத்தகைய இலக்கியம்? இவற்றை இப்பகுதியில் பார்க்கலாம்.
நூல் ஆசிரியர்
இந்த நூலை எழுதியவர் பொய்யாமொழிப் புலவர். இவர் பிறந்த ஊர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த துறையூர். தொண்டை மண்டலம் என்பது தமிழகத்தின் வடக்கே உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி ஆகும். அங்குச் செங்காட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது இந்தத் துறையூர்.
இவருடைய ஆசிரியர் பெயர் வயிரபுரம் ஆசான். இந்த ஆசிரியரே இவருக்குப் பொய்யாமொழி என்று பெயரிட்டார் என்று கூறப்படுகிறது.
• கதைகள்
பொய்யாமொழிப் புலவரைப் பற்றிப் பல கதைகள் அபிதான சிந்தாமணி, தமிழ் நாவலர் சரிதம் முதலிய நூல்களில் காணப்படுகின்றன.
• பெற்ற பரிசுகள்
பொய்யாமொழிப் புலவர் இந்த நூலைப் பாடியபோது இதில் சிறப்பித்துப் பாடப்படும் தஞ்சைவாணன் என்ற அரசனின் மனைவி ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னால் செய்யப்பட்ட தேங்காயைப் பரிசாக அளித்தாள். தஞ்சைவாணன் அத்தேங்காய்களின் மூன்று கண்களிலும் மூன்று விலை உயர்ந்த மணிகளை வைத்துப் பரிசளித்து இவரைச் சிறப்புச் செய்தான் என்று கூறப்படுகிறது.
• காலம்
இவர் வாழ்ந்த காலம் கி.பி. 1268-1311 ஆகும். எனவே இந்நூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு ஆகும்.
பாட்டுடைத் தலைவன்
ஒரு நூலில் யார் சிறப்பித்துப் பாடப்படுகிறாரோ அவரே பாட்டுடைத்தலைவன் என்று அழைக்கப்படுவார். இந்நூலில் தஞ்சைவாணன் என்ற அரசன் சிறப்பித்துப் பாடப்படுகிறான். எனவே தஞ்சைவாணன் இக்கோவை நூலின் பாட்டுடைத்தலைவன் ஆவான். பொய்யா மொழியாரை ஆதரித்துப் போற்றிய வள்ளலாகிய தஞ்சை வாணனின் பல்வேறு சிறப்பியல்புகளும் இந்நூலில் புகழ்ந்துரைக்கப் பட்டுள்ளன.
• இயற்பெயர்
தஞ்சைவாணனின் இயற்பெயர் சந்திர வாணன். 13ஆம் நூற்றாண்டில் பாணர்கள் என்ற குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டில் வாழ்ந்தனர். அவர்கள் சோழ நாட்டிலிருந்தும் பல்லவ நாட்டிலிருந்தும் குடி பெயர்ந்து பாண்டிய நாட்டிற்கு வந்தவர்கள். அந்தப் பாணர் மரபில் வந்தவனே இந்தச் சந்திரவாணன் என்று தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் கூறுகிறார். (தெ.பொ.மீ. தமிழ் இலக்கிய வரலாறு ccc தமிழாக்கம் மு. இளமாறன். ப.176)
• நாடு
தஞ்சைவாணன் பாண்டிய நாட்டில் இருந்த மாறைநாடு என்ற சிறு நாட்டை ஆண்டு வந்தான். அதன் தலைநகர் தஞ்சாக்கூர். இவ்வூர் தென்காசிக்கு அருகில் உள்ளது. இந்த நூலில் தஞ்சை என்று போற்றப்படுவது இவ்வூரே ஆகும்.
• பாண்டியனின் படைத்தலைவன்
மாறை நாட்டை ஆண்டு வந்த தஞ்சைவாணன், பாண்டியன் கோமாற வர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகரனுக்குப் படைத்தலைவனாகவும் அமைச்சனாகவும் இருந்தான். பாண்டியனின் கண்போல இருந்து சேரநாட்டை வெற்றி பெறுவதற்கு இவன் உதவினான் என்று தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.
மலைநாடு கொண்ட வழுதிகண் போல்பவன் வாணன் (18)
(மலைநாடு = சேரநாடு; வழுதி = பாண்டியன்; போல்பவன் = போன்றவன்; வாணன் = தஞ்சைவாணன்)
உதாரண இலக்கியம்
தஞ்சைவாணன் கோவை நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பி அகப்பொருள் என்ற இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு அதற்கு உதாரண இலக்கியமாக எழுதப்பட்டுள்ளது.
நம்பி அகப்பொருள் நூலில் களவியல், வரைவியல், கற்பியல் ஆகிய இயல்களில் தலைவன் தலைவியின் அகவாழ்க்கை நிகழ்வுகளின் இலக்கணம் கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே இக்கோவை நூலிலும் களவியல், வரைவியல், கற்பியல் என்று மூன்று இயல்கள் உள்ளன.
நம்பி அகப்பொருளில் இம் மூன்று இயல்களிலும் உள்ள தலைவன், தலைவி, தோழி, தாய் போன்றோர் பேசும் பேச்சுகள் (கூற்றுகள்) தஞ்சைவாணன் கோவையில் அதே வரிசையில் உதாரணப் பாடல்கள் கொண்டு விளக்கப்படுகின்றன.
எனவே நம்பி அகப்பொருள் இலக்கணத்திற்கு உரிய முழுமையான இலக்கியம் தஞ்சைவாணன் கோவை என்பதை உணரலாம்.
- See more at: http://mazhalaigal.com/tamil/literature/201307tvu_thanjaivanan-kovai.php#sthash.U2lLmrY3.dpuf--
On Wednesday, 18 March 2015 03:30:19 UTC-7, kalai wrote:தஞ்சாக்கூரும் மாரநாடும் (மாறைநாடு) அருகருகே உள்ள வெவ்வேறு ஊர்கள்.தஞ்சாக்கூர் வைகைக் கரையில் இல்லை.வைகைக் கரையிலிருந்து தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
வணக்கம் ஐயா.மிக்க மிக்க நன்றி ஐயா. கோவையை விரைவில் முழுவதுமாகப் படித்து விடுகிறேன்.
தென்காசிக்கருகே ஒரு தஞ்சாக்கூர் இருக்கலாம்.
தஞ்சைவாணன் பாண்டிய நாட்டில் இருந்த மாறைநாடு என்ற சிறு நாட்டை ஆண்டு வந்தான். அதன் தலைநகர் தஞ்சாக்கூர். இவ்வூர் தென்காசிக்கு அருகில் உள்ளது. இந்த நூலில் தஞ்சை என்று போற்றப்படுவது இவ்வூரே ஆகும்.
தஞ்சக்கை என்பது சுந்தர முர்த்தி நாயனார் தம் ஏழாம் திருமுறைத்தேவாரத்தில் திருபூவணப் பதிகத்தின் அடுத்த பதிகமாகத் திகழும்
திருநாட்டுத்தொகை பதிகத்தில் 9 ஆம் பாடலில் ஓர் வைப்புத்தலமாக
குறிக்கப்பட்டுள்ளது என வரைபடத்துடன் காட்டி இருந்தேன் அந்த தேவாரப்பாடல் இஃ து.
நூல் ஆசிரியர்
இந்த நூலை எழுதியவர் பொய்யாமொழிப் புலவர். இவர் பிறந்த ஊர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த துறையூர். தொண்டை மண்டலம் என்பது தமிழகத்தின் வடக்கே உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி ஆகும். அங்குச் செங்காட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது இந்தத் துறையூர்.
///
• நாடு
தஞ்சைவாணன் பாண்டிய நாட்டில் இருந்த மாறைநாடு என்ற சிறு நாட்டை ஆண்டு வந்தான்.
அதன் தலைநகர் தஞ்சாக்கூர். இவ்வூர் தென்காசிக்கு அருகில் உள்ளது. இந்த நூலில் தஞ்சை என்று போற்றப்படுவது இவ்வூரே ஆகும்.

• பாண்டியனின் படைத்தலைவன்
மாறை நாட்டை ஆண்டு வந்த தஞ்சைவாணன், பாண்டியன் கோமாற வர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகரனுக்குப் படைத்தலைவனாகவும் அமைச்சனாகவும் இருந்தான். பாண்டியனின் கண்போல இருந்து சேரநாட்டை வெற்றி பெறுவதற்கு இவன் உதவினான் என்று தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.
மறைநாடு என்பது, பாண்டிய நாட்டில் கொற்கை, வல்லம், தஞ்சாக்கூர், மல்லை என்னும் நான்கு ஊருக்கும் இடைப்பட்டுப் பொருநையாற்றங் கரையிலுள்ள நாடு.என்று நீங்களே தகவல் கொடுத்துள்ளீர்கள்
மறைநாடு என்பது, பாண்டிய நாட்டில் கொற்கை, வல்லம், தஞ்சாக்கூர், மல்லை என்னும் நான்கு ஊருக்கும் இடைப்பட்டுப் பொருநையாற்றங் கரையிலுள்ள நாடு.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘தஞ்சாக்கூர்’ இருப்பதாகத் தெரியவில்லை.
வணக்கம் ஐயா.
On Wednesday, 18 March 2015 22:58:52 UTC-7, தேமொழி wrote:மறைநாடு என்பது, பாண்டிய நாட்டில் கொற்கை, வல்லம், தஞ்சாக்கூர், மல்லை என்னும் நான்கு ஊருக்கும் இடைப்பட்டுப் பொருநையாற்றங் கரையிலுள்ள நாடு.என்று நீங்களே தகவல் கொடுத்துள்ளீர்கள்அதை மறுத்தும் எழுதியுள்ளேன் -
On Wednesday, 18 March 2015 07:47:13 UTC-7, Dev Raj wrote:மறைநாடு என்பது, பாண்டிய நாட்டில் கொற்கை, வல்லம், தஞ்சாக்கூர், மல்லை என்னும் நான்கு ஊருக்கும் இடைப்பட்டுப் பொருநையாற்றங் கரையிலுள்ள நாடு.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘தஞ்சாக்கூர்’ இருப்பதாகத் தெரியவில்லை.எனக்கு சொந்த ஊர் தென்காசி. அந்த வட்டாரத்தில் ‘தஞ்சாக்கூர்’கிடையாது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீட்டிலும்தகவற்பிழை உள்ளது .‘வல்லம்’ எனும் சிற்றூர் தென்காசி வட்டத்திலும்உண்டு.’கழுமலம்’ சேர நாட்டிலும் இருந்தது
தேவ்
On Wednesday, 18 March 2015 07:47:13 UTC-7, Dev Raj wrote:
மாறைநாடு என்பது, பாண்டிய நாட்டில் கொற்கை, வல்லம், தஞ்சாக்கூர், மல்லை என்னும் நான்கு ஊருக்கும் இடைப்பட்டுப் பொருநையாற்றங் கரையிலுள்ள நாடு.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘தஞ்சாக்கூர்’ இருப்பதாகத் தெரியவில்லை.
எனக்கு சொந்த ஊர் தென்காசி. அந்த வட்டாரத்தில் ‘தஞ்சாக்கூர்’கிடையாது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீட்டிலும்தகவற்பிழை உள்ளது .‘வல்லம்’ எனும் சிற்றூர் தென்காசி வட்டத்திலும்உண்டு.’கழுமலம்’ சேர நாட்டிலும் இருந்தது
மல்லை என்பது என்ன ஊராக இருக்கும்?
தேவ்
ஒன்றுக்கு மேற்பட்ட "தஞ்சாக்கூர்" இருந்திருக்க வாய்ப்புள்ளதையும் மறுக்க இயலாதல்லவா?சான்றாகப் பொய்யாமொழிப்புலவர் பிறந்தது துறையூர் என்றும் அது தொண்டை மண்டலம் என்றும் தெரிகிறது.
////நூல் ஆசிரியர்
இந்த நூலை எழுதியவர் பொய்யாமொழிப் புலவர். இவர் பிறந்த ஊர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த துறையூர். தொண்டை மண்டலம் என்பது தமிழகத்தின் வடக்கே உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி ஆகும். அங்குச் செங்காட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது இந்தத் துறையூர்.
///
திருச்சிக்கு வடக்கே 50 கிமீ தூரத்தில்...ஒரு மணி நேரப் பயணத்திலும் ஒரு துறையூர் இருக்கிறது.வல்லவரையன் வந்தியதேவனின் வல்லம் தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்று நான் பல ஆண்டுகளாக நினைத்திருந்தேன்.. சமீபத்தில் அதுவும் தொண்டை மண்டலம் பக்கம் என்ற மற்றொரு தகவல் கிடைக்கிறது. எனவே ஒன்றுக்கு மேற்பட்டு அதே பெயரில் ஊர்கள் இருக்கலாம்.நூலில் காணப்படும் பாடல் குறிப்புபடி ...மறைநாடு என்பது, பாண்டிய நாட்டில் கொற்கை, வல்லம், தஞ்சாக்கூர், மல்லை என்னும் நான்கு ஊருக்கும் இடைப்பட்டுப் பொருநையாற்றங் கரையிலுள்ள நாடு.என்று நீங்களே தகவல் கொடுத்துள்ளீர்கள்அத்துடன் அங்கும் ஒரு வல்லம், மல்லை !!!
..... தேமொழி
இறைவியை இல்வயின் விடுத்தல்: | |
| மல்லையம் போர்வென்ற வாணன்தென் மாறைநின் மாளிகையாம் தொல்லையம் போருகந் தேடவுங் கூடுந் தொடித்தளிரால் முல்லையம் போது முகையுங்கொய் யாது முகிழ்முலையாய் செல்லையம் பொற்பனிங் கிற்றலம் பாதஞ் சிவப்பிக்கவே. 182 | |
| (இ-ள்.) மல்லை யென்னும் ஒரூரிடத்தில் போரை வென்ற வாணன் தென்மாறைநாட்டிருக்கின்ற முகை போன்ற முலையாய்! நின் மாளிகையாகிய பழைமையுடைய தாமரை யானது தேடவும் அமையுமாதலால் தொடி செறிந்த தளிர் போன்ற கையினால் முல்லைப்போதும் அதனது முகையுங் கொய்யாது அழகிய பளிங்குத் தலத்தைப் பாதமானது சிவப்பேறச் செய்யச் செல்லக்கடவை என்றவாறு. | |
| மல்லை - ஓரூர். `தொடித்தளிர்` ஆகுபெயர். அம் : சாரியை. அம்: அசைநிலை. செல் - செல்லக்கடவை ஐ : சாரியை. பொன் - அழகு. `தலம்` என்புழி இரண்டனுருபு தொக்கது. | |
| 717 | மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் கொல்லி காவலன் மால் அடி முடிமேல் கோலமாம் குலசேகரன் சொன்ன நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே |
8. | கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால் கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல் தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே |
| குலசேகர | ஆழ்வார் |
‘தஞ்சைவாணன் கோவை’ என்று கேள்விப்பட்டிருக்கலாம். ‘கோவை’ என்பது தொண்ணூற்றாறு ப்ரபந்த வகைகளில் ஒன்று. ‘அகப்பொருள்’ என்பதாக நவரஸங்களில் ச்ருங்காரத்தைச் சொல்கிறார்களல்லவா? அந்த ரஸப் பிரதானமாக ஆக்கப்பட்ட காவிய வகைகளில் ஒன்றே கோவை என்பது. இப்படி நாயிகா பாவத்தில் ஈச்வராராதனையே செய்துமாணிக்கவாசக ஸ்வாமிகள் செய்த நூலுக்குத்தான் ‘கோவை’ என்பதே டைட்டிலாகித் ‘திருக்கோவையார்’ என்று பெயர். முதலில் வரும் ‘திரு’ மரியாதை அடைமொழி; பின்னால் வரும் ‘யார்’ என்பதும் மரியாதை விகுதிதான்; ‘கோவை’ என்பது தஞ்சையில் இருந்த வாணன் என்ற வள்ளலைப் பற்றிய ச்ருங்கார காவியம்.
அவனைப் பற்றி ஒரு கதை உண்டு. ஒருநாள் தமிழ்ப் புலவர்கள் அவனுடைய அரண்மனைக்குப் போனபோது அவன் ஊரில் இல்லை. ஆனால் அவனுடைய ராணி இருந்தாள். அவளும் நல்ல ரஸிகத்தனம் உள்ளவள். அதனால், வந்த புலவர்கள் வெறுமே திரும்ப வேண்டாமென்று அவளுக்கே தாங்கள் இயற்றி வந்திருக்கும் பாட்டுக்களைப் பாடிக் காட்டுவது – அந்தப் புலவர்கள் பாஷையில் சொல்வதானால் ‘திருச்செவி சாற்றுவது’ – என்று முடிவு பண்ணி, அப்படியே செய்தார்கள்.
இவளையும் ஒரு தமிழ்ப்பாட்டி என்று சொல்லிவிடலாம். எப்படி என்றால், வயஸிலே இவள் பாட்டி இல்லை; யௌவனப் பிராயத்தில் இருந்தவள்தான். ஆனால் பாட்டுக்களைப் புலவர்களிடமிருந்து பெற்றவள் அல்லவா? அதனால் ‘பாட்டி’ என்று சொல்லலாம். பாட்டு ஸமர்ப்பணத்துக்குப் பாத்திரமானதால் பாட்டியான தஞ்சைவாணன் பத்தினி அவனைப் போலவே, அல்லது அவனையும்விட அதிகமாகவே, தானும் புலவர்களை ஸம்மானிக்க வேண்டுமென்று நினைத்தாள். அவர்கள் பாடிய ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு தாம்பூல மரியாதை பண்ணினாள். ஒவ்வொரு தாம்பூலத்திலும் ஸாதாரணத் தேங்காய்க்குப் பதில் தங்கத்தாலான ஒரு தேங்காயை வைத்துக் கொடுத்தாள். வாணன் ஊரிலில்லாத போது இவர்கள் வருவார்களென்று முன்னமேயே தெரிந்து, நிறைய ஸ்வர்ணத் தேங்காய்கள் பண்ணி வைத்துக் கொண்டிருந்தாள் போலிருக்கிறது!
புலவர்கள் ஒரே ஸந்தோஷமாக விடைபெற்றுக் கொள்ளும் ஸமயத்தில் தஞ்சை வாணன் திரும்பி வந்துவிட்டான். ராணி ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு தங்கத் தேங்காய் கொடுத்தாள் என்றதும் அவனுக்கு ஏக கோபம் வந்து விட்டது. “என்னது? தங்கத் தேங்காயா? எதற்கு என்ன மதிப்புக் கொடுக்கலாம் என்பதில் இப்படியா வியவஸ்தை கெட்டுப் பண்ணுவது?” என்று அவளை ரொம்பவும் கோபித்துக் கொண்டுவிட்டு புலவர்களைப் பார்த்தான். “தங்கத் தேங்காய்களை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு, இந்த ஸபையிலேயே சற்று நேரம் உட்கார்ந்திருங்கள். நியாயமாக உரிய ஸம்பாவனையை நான் தீர்மானம் பண்ணிவிட்டு அப்புறம் வந்து கொடுக்கிறேன்” என்றான்.
ராணிக்கு ஈயாடவில்லை. புலவர்களுக்கும் ரொம்ப ஏமாற்றமாயிற்று. ஆனாலும் வேறு வழியில்லாமல் தேங்காய்களை வாணனிடம் திருப்பிக் கொடுத்தார்கள். அவன் அரண்மனைக்கு உள்ளே போய் விட்டான். ஸபா மண்டபத்தில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த புலவர்கள், “கொடைவள்ளலாகவும், மரியாதைப் பண்பில் மிக்கவனாகவும் இருந்தவன் என்ன இப்படி அடியோடு மாறி, நம்மை இத்தனை நேரம் காக்க வைக்கிறானே!” என்று அலுப்படைந்தார்கள்.
வாணன், ராணி ஸஹிதம் திரும்பி வந்தான்.
புலவர்களுக்கு ஸம்பாவனை பண்ணினான். என்ன ஸம்பாவனை என்றால் அந்தத் தங்கத் தேங்காய் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களுக்குப் பதில் விலை மதிக்க முடியாத மூன்று ரத்தினங்கள் பதித்துக் கொடுத்தான்!
வெறும் தேங்காயாகக் கொடுக்காமல் தங்கத் தேங்காயாக ராணி தந்தாளென்றால், ‘வெறும் தங்கத் தேங்காயா தருவது?” என்றே கோபமடைந்து, ரத்தினங்கள் பதிப்பித்துக் கொடுத்தான் அந்த வள்ளல்.
இவனுடைய ராணி பாட்டி என்றால், இவனும் தமிழுக்கு அள்ளிக் கொடுத்த தாதா ஆதலால் தமிழ்த் தா(த்)தா தான்!
இந்த தஞ்சைவாணனைப் பற்றி ஸ்வாமிநாதையர் ஒரு ஆராய்ச்சி செய்திருந்தார். அதாவது, அவன் ஆட்சி நடத்திய தஞ்சை சோழ தேசத்திலுள்ள தஞ்சாவூர் இல்லை என்றும், பாண்டிய நாட்டிலுள்ள தஞ்சாக்கூர்தான் என்றும் பல காரணங்கள் காட்டி அவர் முடிவு செய்திருந்தார்.
மதுரையிலிருந்து மானாமதுரை போகும் ரயில்வே லைனில் திருப்பாச்சேத்தி என்று ஒரு ஸ்டேஷன் இருக்கிறது. அதற்கு ஒரு மைல் தெற்கே போனால் வருவது இந்தத் தஞ்சாக்கூர்.
http://www.kamakoti.org/tamil/7dk199br.htm‘தஞ்சைவாணன் கோவை’ என்று கேள்விப்பட்டிருக்கலாம். ‘கோவை’ என்பது தொண்ணூற்றாறு ப்ரபந்த வகைகளில் ஒன்று. ‘அகப்பொருள்’ என்பதாக நவரஸங்களில் ச்ருங்காரத்தைச் சொல்கிறார்களல்லவா? அந்த ரஸப் பிரதானமாக ஆக்கப்பட்ட காவிய வகைகளில் ஒன்றே கோவை என்பது. இப்படி நாயிகா பாவத்தில் ஈச்வராராதனையே செய்துமாணிக்கவாசக ஸ்வாமிகள் செய்த நூலுக்குத்தான் ‘கோவை’ என்பதே டைட்டிலாகித் ‘திருக்கோவையார்’ என்று பெயர். முதலில் வரும் ‘திரு’ மரியாதை அடைமொழி; பின்னால் வரும் ‘யார்’ என்பதும் மரியாதை விகுதிதான்; ‘கோவை’ என்பது தஞ்சையில் இருந்த வாணன் என்ற வள்ளலைப் பற்றிய ச்ருங்கார காவியம்.
அவனைப் பற்றி ஒரு கதை உண்டு. ஒருநாள் தமிழ்ப் புலவர்கள் அவனுடைய அரண்மனைக்குப் போனபோது அவன் ஊரில் இல்லை. ஆனால் அவனுடைய ராணி இருந்தாள். அவளும் நல்ல ரஸிகத்தனம் உள்ளவள். அதனால், வந்த புலவர்கள் வெறுமே திரும்ப வேண்டாமென்று அவளுக்கே தாங்கள் இயற்றி வந்திருக்கும் பாட்டுக்களைப் பாடிக் காட்டுவது – அந்தப் புலவர்கள் பாஷையில் சொல்வதானால் ‘திருச்செவி சாற்றுவது’ – என்று முடிவு பண்ணி, அப்படியே செய்தார்கள்.
இவளையும் ஒரு தமிழ்ப்பாட்டி என்று சொல்லிவிடலாம். எப்படி என்றால், வயஸிலே இவள் பாட்டி இல்லை; யௌவனப் பிராயத்தில் இருந்தவள்தான். ஆனால் பாட்டுக்களைப் புலவர்களிடமிருந்து பெற்றவள் அல்லவா? அதனால் ‘பாட்டி’ என்று சொல்லலாம். பாட்டு ஸமர்ப்பணத்துக்குப் பாத்திரமானதால் பாட்டியான தஞ்சைவாணன் பத்தினி அவனைப் போலவே, அல்லது அவனையும்விட அதிகமாகவே, தானும் புலவர்களை ஸம்மானிக்க வேண்டுமென்று நினைத்தாள். அவர்கள் பாடிய ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு தாம்பூல மரியாதை பண்ணினாள். ஒவ்வொரு தாம்பூலத்திலும் ஸாதாரணத் தேங்காய்க்குப் பதில் தங்கத்தாலான ஒரு தேங்காயை வைத்துக் கொடுத்தாள். வாணன் ஊரிலில்லாத போது இவர்கள் வருவார்களென்று முன்னமேயே தெரிந்து, நிறைய ஸ்வர்ணத் தேங்காய்கள் பண்ணி வைத்துக் கொண்டிருந்தாள் போலிருக்கிறது!
புலவர்கள் ஒரே ஸந்தோஷமாக விடைபெற்றுக் கொள்ளும் ஸமயத்தில் தஞ்சை வாணன் திரும்பி வந்துவிட்டான். ராணி ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு தங்கத் தேங்காய் கொடுத்தாள் என்றதும் அவனுக்கு ஏக கோபம் வந்து விட்டது. “என்னது? தங்கத் தேங்காயா? எதற்கு என்ன மதிப்புக் கொடுக்கலாம் என்பதில் இப்படியா வியவஸ்தை கெட்டுப் பண்ணுவது?” என்று அவளை ரொம்பவும் கோபித்துக் கொண்டுவிட்டு புலவர்களைப் பார்த்தான். “தங்கத் தேங்காய்களை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு, இந்த ஸபையிலேயே சற்று நேரம் உட்கார்ந்திருங்கள். நியாயமாக உரிய ஸம்பாவனையை நான் தீர்மானம் பண்ணிவிட்டு அப்புறம் வந்து கொடுக்கிறேன்” என்றான்.
ராணிக்கு ஈயாடவில்லை. புலவர்களுக்கும் ரொம்ப ஏமாற்றமாயிற்று. ஆனாலும் வேறு வழியில்லாமல் தேங்காய்களை வாணனிடம் திருப்பிக் கொடுத்தார்கள். அவன் அரண்மனைக்கு உள்ளே போய் விட்டான். ஸபா மண்டபத்தில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த புலவர்கள், “கொடைவள்ளலாகவும், மரியாதைப் பண்பில் மிக்கவனாகவும் இருந்தவன் என்ன இப்படி அடியோடு மாறி, நம்மை இத்தனை நேரம் காக்க வைக்கிறானே!” என்று அலுப்படைந்தார்கள்.
வாணன், ராணி ஸஹிதம் திரும்பி வந்தான்.
புலவர்களுக்கு ஸம்பாவனை பண்ணினான். என்ன ஸம்பாவனை என்றால் அந்தத் தங்கத் தேங்காய் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களுக்குப் பதில் விலை மதிக்க முடியாத மூன்று ரத்தினங்கள் பதித்துக் கொடுத்தான்!
வெறும் தேங்காயாகக் கொடுக்காமல் தங்கத் தேங்காயாக ராணி தந்தாளென்றால், ‘வெறும் தங்கத் தேங்காயா தருவது?” என்றே கோபமடைந்து, ரத்தினங்கள் பதிப்பித்துக் கொடுத்தான் அந்த வள்ளல்.
இவனுடைய ராணி பாட்டி என்றால், இவனும் தமிழுக்கு அள்ளிக் கொடுத்த தாதா ஆதலால் தமிழ்த் தா(த்)தா தான்!
இந்த தஞ்சைவாணனைப் பற்றி ஸ்வாமிநாதையர் ஒரு ஆராய்ச்சி செய்திருந்தார். அதாவது, அவன் ஆட்சி நடத்திய தஞ்சை சோழ தேசத்திலுள்ள தஞ்சாவூர் இல்லை என்றும், பாண்டிய நாட்டிலுள்ள தஞ்சாக்கூர்தான் என்றும் பல காரணங்கள் காட்டி அவர் முடிவு செய்திருந்தார்.
மதுரையிலிருந்து மானாமதுரை போகும் ரயில்வே லைனில் திருப்பாச்சேத்தி என்று ஒரு ஸ்டேஷன் இருக்கிறது. அதற்கு ஒரு மைல் தெற்கே போனால் வருவது இந்தத் தஞ்சாக்கூர்.

--
வணக்கம்.
2015-03-23 7:54 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இந்த மடலில் வைத்துள்ள வரைபடம் நான் முன்பு வைத்து போல் தோ ன்று கின்றதுசரியான (அய்ய) வினாவா அல்லவா என எழுதலாமே
அப்போதும் இந்த தஞ்சாக்கை தேவார வைப்புத்தலம் பற்றி எழுதினேன் நினைவில் உள்ளது
தஞ்சாக்கூர் அருகே உள்ள ஊர்கள் பற்றி தெரிந்துகொண்டேன்.

<snip>