நற்றமிழ்-07

152 views
Skip to first unread message

Thiruvengada Mani T K

unread,
Nov 21, 2009, 6:04:25 AM11/21/09
to Min Tamil

நற்றமிழ் – 07                       (21.11.2009)

 

 நண்பர்களே!

இந்த இலக்கணங்களெல்லாம் நாம் பள்ளிப்பருவத்திலேயே பயின்றவைதாம். பரீட்சைக்காகப் படித்து அநேகம் பேர் மறந்து போயிருப்போம். இப்போது கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளலாமே....!  அலுக்காமல் ஒருமுறை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இதில் தேர்வெல்லாம் கிடையாது. Progress Report ம் கிடையாது.

திருவேங்கடமணி

 

"5.     சொல்லியல் (Etymology)

      சொல் வகைகளாவன:

1.                        பெயர்ச்சொல் (Noun):  பொருளின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல்லாகும். (எ –டு) கந்தன், மாடு, மரம்.

2.                        வினைச்சொல் (verb) : பொருளின் வினையை (செயலை )

               உணர்த்துவது வினைச் சொல்லாகும். (எ –டு) நின்றான்; வருகிறது;

              காண்பேன்.

 

3.                        இடைச்சொற்கள் ( Dependent words or conjunctions and particles )

அ, இ, உ; எ, ஏ; யா, ஆ, ஓ, தான், மற்று முதலியன.

               நான் தான்     -   தான் இடைச்சொல்

                நீயே                 -          

                நல்லதோ         -             

                  தீயதோ          -                          

                              இவற்றில் உள்ள ‘ஏ’, ‘ஓ’ இவை இடைச்சொற்கள்

     4.                உரிச்சொல் -  (poetical words qualifying words or attributives)

                        (எ-டு) நனி, சால, தவ, கடி, உறு – முதலியன.

 

   6.    சொல்லின் பாகுபாடு

            1.  இயற்சொல் (Easy & pure Tamil Words)

                 இயல்பாய் உள்ளவை.

     

     2.  திரிசொல் (Hard & Pure Tamil words)

  கடினமான சொல்: கிள்ளை, படர்ந்தான் முதலியன.  ‘கிளி’ என்பது          ‘கிள்ளை’ என்றும் ‘சொன்னார்’ என்பது ‘படர்ந்தான்’ என்றும் – இவ்வாறு வழக்கத்தில் இல்லாத கடினமான சொற்களால் கூறப்படுவன திரிசொற்கள் எனப்படும்.

  

  1. வட சொல் (Sanskrit words)

தமிழில் வழங்கிவரும் சமஸ்கிருதச் சொற்கள் (எ – டு) கமலம், செயம், - முதலியன.

 

  1. திசைச் சொல் (Foreign or Loan words)

தமிழில் வழங்கிவரும் அரபு, ஆங்கிலம், இந்தி முதலிய பிற மொழிச் சொற்கள்.

 

7.       வினை வகைகள்

            வினை வகைகளுக்கு எடுத்துக்காட்டுகள்,

1.           தன் வினை :  அவர் செய்தார் (இதில் அவர் தாமே செய்கிறர்)

2.           பிற வினை :  அவர் செய்வித்தார் (இதில் அவர் பிறரைக் கொண்டு

                                                  செய்விக்கிறார்)

3.           செய்வினை (Active Verb): 

                          (எ – டு) முருகன் மலையைக் கடந்தான்.

               (வாக்கியங்கள் செய்வினையில் அமைந்திருப்பது தான் தமிழ் மொழிக்கு உரிய சொந்தமான நல்ல நடை)

4.           செயப்பாட்டு வினை(passive Verb): 

                                  (எ –டு)  மலை முருகனால் கடக்கப்பட்டது.                    

               (ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் மிகுதியாகக் காணப்படும்).

 

  1. எண், காலம், இடம், திணை, பால் வகைகள்

i. எண் (Number) (2)

1.       ஒருமை (singular) (எ – டு) கல்; மனிதன்

2.       பன்மை (plural) (எ – டு) கற்கள்; மனிதர்கள்

 ii. காலம் (Tense) (3)   

                                1. இறந்த காலம் (Past tense)

    (எ – டு) வந்தான்

2. நிகழ் காலம் (Present tense)

                                     (எ – டு) வருகின்றான்

                                3.  எதிர் காலம் (Future tense)

                                     (எ – டு) வருவான்

    iii. இடம் (Person) (3)

                                      1.  தன்மை (Frist Person)

                                             (எ – டு) நான், நாம், நாங்கள், யான், யாம்

                                 2.  முன்னிலை (Second Person)

                                             (எ – டு) நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள்

                                 3.  படர்க்கை (Third Person)

                                             (எ – டு) அவன், அவள், அவர், அது, அவை

 

       iv.  திணை (Class) (2)

1.      உயர்திணை : மக்கள், தேவர், நரகர்

2.      அஃறிணை   : மேற்கண்டவர் தவிரப் பிற அனைத்தும்

 

 v.   பால் வகைகள்  (Gender) (5)

                                 உயர்திணை:

                     1.  ஆண்பால்: ஆணைக் குறிக்கும் உயர்திணைப் பெயர்கள்

                                                (எ – டு) அவன், கண்ணன்

                       

                     2. பெண்பால்: பெண்ணைக் குறிக்கும் உயர்திணைப் பெயர்கள்

                                     (எ – டு) அவள், பொன்னி

 

3.      பலர்பால்: பலரைக் குறிக்கும் உயர்திணைப் பெயர்கள்

(எ – டு) அவர்கள், மக்கள், மனிதர்கள், ஆண்கள், பெண்கள்

 

                                     அஃறிணை:

                    4. ஒன்றன்பால்: ஒன்றைக் குறிக்கும் அஃறிணைப் பெயர்கள்

(எ – டு) அது, மாடு, மரம்.

 

5. பலவின்பால்: பலவற்றைக் குறிக்கும் அஃறிணைப் பெயர்கள்

(எ – டு) அவை, மாடுகள், மரங்கள்"

 

(……..பேராசிரியர் முனைவர் தி. முத்து - கண்ணப்பன், அவர்களின் “தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்……)

 



The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

விஜயராகவன்

unread,
Nov 21, 2009, 11:57:41 AM11/21/09
to மின்தமிழ்
On 21 Nov, 11:04, Thiruvengada Mani T K <thiruveng...@yahoo.com>
wrote:

>  
>    6.    சொல்லின் பாகுபாடு
>             1.  இயற்சொல் (Easy & pure Tamil Words)
>                  இயல்பாய் உள்ளவை.
>      
>      2.  திரிசொல் (Hard & Pure Tamil words)
>   கடினமான சொல்: கிள்ளை, படர்ந்தான் முதலியன.  ‘கிளி’ என்பது          ‘கிள்ளை’ என்றும் ‘சொன்னார்’ என்பது ‘படர்ந்தான்’ என்றும் – இவ்வாறு வழக்கத்தில் இல்லாத கடினமான சொற்களால் கூறப்படுவன திரிசொற்கள் எனப்படும்.

>         1. வட சொல் (Sanskrit words)


> தமிழில் வழங்கிவரும் சமஸ்கிருதச் சொற்கள் (எ – டு) கமலம், செயம், - முதலியன.
>  

>         1. திசைச் சொல் (Foreign or Loan words)


> தமிழில் வழங்கிவரும் அரபு, ஆங்கிலம், இந்தி முதலிய பிற மொழிச் சொற்கள்.

ஐயா மணி

சொல்லின் பாகுபாடுகள் தொல் காலத்திலிருந்து வருவன ஒழிய, அதற்கு ஒரு
வலுவான ஆதாரம் இருக்கும் போல தோன்றவில்லை


தமிழர்கள் பேசிவது எல்லாம் தமிழ் தானே, யார் பரவலான புழக்கமான சொற்களை
அது தமிழ் மூலமா, இல்லையா என கவலைப் பட போகின்றனர். உதாரணமாக
”இயற்சொல்”லுக்கும், ”திரி சொல்லுக்கும்” ஒரு வேறுபாடும் இல்லை. “கிள்ளை”
என சொல்வதில் என்ன கடினம் இருக்கு? நீங்கள் வழக்கத்தில் இல்லாதவை கடினமான
வார்த்தை என்கிறீர்களா? “கடினம்” என்பது உள்ளுணர்வு , அதாவது ஒருவருடைய
சொந்த அபிப்பிராயமே தவிற , `கடினம்` என்று எந்த சொல்லையும் புறவயமாக
நிரூபிக்க முடியாது. சொற்களை ’இயல்பு/`சுலபம்`, `கடினம்` என பிரிப்பது
சரியாக இல்லை. அதைப் போல் சொற்களை `தமிழ்` மூலம், சமஸ்கிருதம்/மற்ற மொழி
மூலம் என பிரிப்பதும் இலக்கணக் காரரின் வேலை இல்லை. இலக்கணம் பொதுவாக
எப்படி ஒரு பேச்சு மொழி புரியப்படுகின்றது, புரிதலுக்கான அமைப்புகள்
யாவை , அதன் நியதிகள் யாவை என விவரிப்பதுதானே தலையாய கடன்?

உதாரணமாக முன்சிப் என்ற சொல் எல்லா தமிழர்களும் அறிந்த சொல். சாதாரண
மனிதனுக்கு, அதன் `மூலம்` எப்படு இருந்தால் என்ன ? அதை மற்றவர்களுடன்
தொடர்பு கொள்ளும் போது அது எப்படி மாறுதல்கள் அடைகின்றது, அதுதானே தமிழை
கற்பவர்களுக்கு தெரிய வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள `சொல் பாகுபாடுகள்` தமிழை எப்படி சரியாக
பிரயோகிக்க் வேண்டும் என்பதற்கு ஓரளவும் துணை புரிவதில்லை.


மேலும் சமஸ்கிருதத்தை ஏன் வட சொல் என அழைக்க வேண்டும். தமிழுக்கு வடக்கே
இருக்கும் மொழி தெலுங்கு அல்லவா. ? உண்மையில் `வட மொழி` என்றால்
தெலுங்கு.

 
> 7.       வினை வகைகள்
>             வினை வகைகளுக்கு எடுத்துக்காட்டுகள்,
> 1.           தன் வினை :  அவர் செய்தார் (இதில் அவர் தாமே செய்கிறர்)
> 2.           பிற வினை :  அவர் செய்வித்தார் (இதில் அவர் பிறரைக் கொண்டு
>                                                   செய்விக்கிறார்)
> 3.           செய்வினை (Active Verb): 
>                           (எ – டு) முருகன் மலையைக் கடந்தான்.
>                (வாக்கியங்கள் செய்வினையில் அமைந்திருப்பது தான் தமிழ் மொழிக்கு உரிய சொந்தமான நல்ல நடை)
> 4.           செயப்பாட்டு வினை(passive Verb): 
>                                   (எ –டு)  மலை முருகனால் கடக்கப்பட்டது.                    
>                (ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் மிகுதியாகக் காணப்படும்).


தன் வினைக்கும் செய்வினைக்கும் வித்தியாசம் இல்லை போல் தோன்றுகிறது.

அவர் தோசை செய்தார்
அவர் மலையை கடந்தார்.

இவை இரண்டிற்க்கும் வினையை பொறுத்த வரை ஒரு வேறுபாடும் இல்லை.

இன்னும் சில கேள்விகள் உள்ளன. இன்றைக்கு இது போதும்


விஜயராகவன்

Tirumurti Vasudevan

unread,
Nov 21, 2009, 10:01:12 PM11/21/09
to mint...@googlegroups.com


2009/11/21 விஜயராகவன் <vij...@gmail.com>


மேலும் சமஸ்கிருதத்தை ஏன் வட சொல் என அழைக்க வேண்டும். தமிழுக்கு வடக்கே
இருக்கும் மொழி தெலுங்கு அல்லவா. ? உண்மையில் `வட மொழி` என்றால்
தெலுங்கு.

:-)))))))))))))))
 
இன்னும் சில கேள்விகள் உள்ளன. இன்றைக்கு இது போதும்

இன்னைய சிரிப்புக்கு இது போதும்!
நாளைக்கு கொஞ்சம் மீதி வைங்க!

:-))
திவாஜி
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Thiruvengada Mani T K

unread,
Nov 21, 2009, 10:17:52 PM11/21/09
to mint...@googlegroups.com

அன்பின் விஜயராகவன்!

 

என்னை ‘ஐயா’ என விளிப்பதைத் தவிருங்கள். கொஞ்சம் அந்நியமாகப் படுகின்றது. மின்தமிழை ஒரு குடும்பமாகப் பாவிப்பவன் நான். மேலும் நான் தமிழாசானும் அல்லன். ஒரு தமிழ் மாணாக்கன் என்று வேண்டுமானால் கொள்ளலாம். எனவே தாங்கள் ‘ஐயா’ என அழைக்கும் போது கொஞ்சம் அச்சமாகி விடுகிறது.

 

தங்களின் ஐயங்களும், விமர்சனங்களும் தாங்கள் இவ்விழையை எவ்வளவு கூர்ந்து படித்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகின்றன. மகிழ்ச்சி – இதுவே இவ்விழையின் வெற்றியும் கூட; நான் முன்னரே குறிப்பிட்ட படி இவ்விழை துவங்கப்பட்டதே அடிப்படை இலக்கணங்களையாவது நம்மவர் அறியத்தர வேண்டும் என்பதற்காகத்தான். தங்கள் கருத்துகள் பலவும் 19.11.2009 தேதியிட்ட இழையில் “ஏற்றந்தரும் மாற்றங்கள்” எனும் தலைப்பின் கீழ் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைத் தங்களுக்காக மீண்டும் தருகிறேன்.

“அவ்வக் காலக்கட்டங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும், வழக்குகளுக்கும் ஏற்ப மாற்றங்கள் நிகழும் – நிகழ்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் நிலவிய வழக்குச் சொற்களும், பொருள்களும், எழுத்துக்களும் நன்னூல் காலத்தில் எவ்வளவோ வேறுபட்டுள்ளமையைக் காண்கிறோம்.  ஏறத்தாழ 750 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய நன்னூலுக்குப் பின்னர் இன்றுவரையுள்ள இடைவெளியில், சமுதாயச் சூழ்நிலைகளில் எவ்வளவோ மாறுதல்கள் தோன்றியுள்ளன. அவையனைத்தும் மக்கள் சமுதாயத்தின் வாழ்க்கை நிலையினைப் பிரதிபலிப்பவை. அவ்வக் காலத்தெழும் இலக்கியங்கள், வழக்கு முறைகள், மரபுகள் முதலியவற்றின் அளவுகோல் அல்லது சட்டக்கட்டமே இலக்கணம் என்பதை மறுத்தற்கில்லை. எனவே மொழியின் மூல உருவைச் சிதைக்காமல் அதன் எழிலையும், பொலிவையும் மேலும் பெருக்கி, ஒளியுறச் செய்யுமாயின் அம்மாற்றங்களை ஏற்பதில் தவறில்லை. அவை இன்றியமையாதனவே.”

 

மேலும் இலக்கணங்கள் நம்மால் இயற்றப்பட்டவை அல்ல; பலதலை முறைகளுக்கு முன்னால் வகுக்கப்பட்டவை. இன்றியமையா இலக்கணங்கள் சில  மட்டுமே இவ்விழையில் இயம்பப்படுகின்றன. ஒவ்வொரு இழையிலும் நான் மறக்காமல் குறிப்பிடும்படி இவையனைத்தும் “பேராசிரியர் முனைவர் தி. முத்து - கண்ணப்பன், அவர்களின் “தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்”.

நூலாசிரியர் திருவான்மியூர் முத்துச்சாமி கண்ணப்பன் (1915 - 2003) பற்றிய குறிப்பு ‘நற்றமிழ்-01’ என்ற இழையில் வழங்கப்பட்டுள்ளது. இப்பேராசான் எனது தந்தையாரும் கூட; கல்லூரியில் அவரிடம் தமிழ்ப் பயிலும் பேறு அவரது பிள்ளைகளில் எனக்கு  மட்டுமே கிட்டியதை நான் பெருமையாகக் கொள்கிறேன். அவர்தம் காலங்களில் கணிவழிக் கல்வி பலருக்கும் கிட்டாததால் “மகன் தந்தைக் காற்றும் ஒரு சிறு கடனாகக் கருதியும்”, மின்தமிழ்க் குழுமச் சான்றோரின் அன்பாணைப்படியும் இவ்விழை வெளியிடப்படுகிறது.

 

எனினும் தங்களின் எல்லா ஐயப்பாடுகளும், வினாக்களும், விமர்சனங்களும் குறித்து வைக்கப்பட்டுள்ளன. இழையின் முடிவில் (இன்னும் 10 -15 வரும் என நினைக்கிறேன்) தேவைப்பட்டால், உரிய மொழியியல் வல்லுநர்களைக் கொண்டு விளக்கம் தர விழைகிறேன்.

நன்றி மிக,

தி.க.திருவேங்கடமணி

 




From: விஜயராகவன் <vij...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Sat, 21 November, 2009 10:27:41 PM
Subject: [MinTamil] Re: நற்றமிழ்-07

விஜயராகவன்

unread,
Nov 22, 2009, 5:23:22 AM11/22/09
to மின்தமிழ்
On 22 Nov, 03:01, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2009/11/21 விஜயராகவன் <viji...@gmail.com>

>
>
>
> > மேலும் சமஸ்கிருதத்தை ஏன் வட சொல் என அழைக்க வேண்டும். தமிழுக்கு வடக்கே
> > இருக்கும் மொழி தெலுங்கு அல்லவா. ? உண்மையில் `வட மொழி` என்றால்
> > தெலுங்கு.
>
> > :-)))))))))))))))
>
> > இன்னும் சில கேள்விகள் உள்ளன. இன்றைக்கு இது போதும்
>
> இன்னைய சிரிப்புக்கு இது போதும்!
> நாளைக்கு கொஞ்சம் மீதி வைங்க!
>
> :-))
> திவாஜி


திவாஜி

இது சின்ன விஷயமாக இருந்தாலும், சின்ன விஷ்யங்களிலும் நமது சொல்லாடல்
மாறினால், 2000 ஆண்டு பழைய மனப்பான்மையில் இருந்து விலக எளிதாகும்.
சமஸ்கிருதத்தை சமஸ்கிருதம் என சொல்வதே சரி என நினைக்கிறேன்.


விஜயராகவன்

V, Dhivakar

unread,
Nov 22, 2009, 5:30:09 AM11/22/09
to mint...@googlegroups.com
வடமொழி தென்மொழி எனப் பெயர் கொடுத்தவர்களே நம் பெரியவர்கள்தான். மாணிக்கவாசகர் நம்மாழ்வார் பாடலில் உள்ளது.
மேலும் தெலுங்கு வடமொழி ஆகாது.  தெலுங்கு தென் மொழியில் ஒரு பிரிவு. வடுகர் என்று திசைக்காக அழைப்பது உண்டுதான்.. அதற்காக தெலுங்கை வடமொழியாக அழைப்பது கிடையாது.
 
சமஸ்கிருதம் என்றாலும் சரி.. வடமொழி என்றாலும் சரி.. எப்படி வேண்டுமானாலும் அழைத்து விட்டுப் போகட்டுமே..
 
தி

 

Innamburan Innamburan

unread,
Nov 22, 2009, 5:30:30 AM11/22/09
to mint...@googlegroups.com
பாடம் கற்பிப்பதின் முதல் படி அதை பகுத்து, பகுதிகளை, ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுத்து, மாணவன் எழுப்பக்கூடிய வினாக்களை தொகுத்து, விடைகளை உள்ளடக்கு வழங்குவது எனலாம். மேற்படி அரிய நூல் என்னிடம் இருப்பதால், இலக்கணக்கல்வி முற்றுப்பெறவில்லை, படித்த பின் கூட, மறதியும் நிழல் போல தொடருவதால். இத்தருணம், நண்பர் திருவேங்க்டமணி, “மகன் தந்தைக் காற்றும் ஒரு சிறு கடனாகக் கருதியும்” செய்யும் தொண்டு நமக்கு பயன் தருகிறது என்பதில் ஐயமில்லை. நாளொரு மேனியாகவும், பொழுதொரு வண்னமாகவும், சுவையுற, இலக்கணம் கற்கிறோம். மகனாரே, தொடர்க.

தெலுங்கு திராவிடமொழியே. நமக்குள் வடக்கென்ன, தெற்கென்ன? தவிர, பல நூற்றாண்டுகளாக வழக்கில் உள்ள சொல் 'வடமொழி'. நம் எல்லாருக்கும் பொருள் புரிகிறது. அதற்காக, ரஷ்ய மொழியை, 'உச்ச வடமொழி' என்போமா என்ன?

என்னைப் பொறுத்தவரையில், குறுக்கிடாமல் பாடம் படிக்கிறேன். பேராசிரியர் நுமானின் இலக்கணக்கருத்துக்களை நினைவு கூர்கிறேன்.

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

2009/11/22 Thiruvengada Mani T K <thiruv...@yahoo.com>



--
இன்னம்பூரான்

விஜயராகவன்

unread,
Nov 22, 2009, 5:22:24 PM11/22/09
to மின்தமிழ்
அன்புள்ள திருவேங்கடமணி

உங்கள் உழைப்பை பாராட்டுகிறேன். அதே சமயம் ஒவ்வொரு கட்டுரையின் மேலுள்ள
என் சிந்தனைகளையும் அவ்வப்போது பரிசீலனைக்கான எழுதுகிறேன்.

பொருளியலாளர் அமர்த்ய சேன் சொன்னார்ப்போல் நானும் ஒரு விவாதக்கார
இந்தியன். மேலும் விவாதங்கள் வரலாம். நீங்கள் அதை தக்க மனோபாவத்தில்
எடுக்கிறீர்கள் என நம்புகிறேன்


விஜயராகவன்

On 22 Nov, 03:17, Thiruvengada Mani T K <thiruveng...@yahoo.com>
wrote:


> அன்பின் விஜயராகவன்!
>  
> என்னை ‘ஐயா’ என விளிப்பதைத் தவிருங்கள். கொஞ்சம் அந்நியமாகப் படுகின்றது. மின்தமிழை ஒரு குடும்பமாகப் பாவிப்பவன் நான். மேலும் நான் தமிழாசானும் அல்லன். ஒரு தமிழ் மாணாக்கன் என்று வேண்டுமானால் கொள்ளலாம். எனவே தாங்கள் ‘ஐயா’ என அழைக்கும் போது கொஞ்சம் அச்சமாகி விடுகிறது.
>  
> தங்களின் ஐயங்களும், விமர்சனங்களும் தாங்கள் இவ்விழையை எவ்வளவு கூர்ந்து படித்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகின்றன. மகிழ்ச்சி – இதுவே இவ்விழையின் வெற்றியும் கூட; நான் முன்னரே குறிப்பிட்ட படி இவ்விழை துவங்கப்பட்டதே அடிப்படை இலக்கணங்களையாவது நம்மவர் அறியத்தர வேண்டும் என்பதற்காகத்தான். தங்கள் கருத்துகள் பலவும் 19.11.2009 தேதியிட்ட இழையில் “ஏற்றந்தரும்
>  மாற்றங்கள்” எனும் தலைப்பின் கீழ் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைத் தங்களுக்காக மீண்டும் தருகிறேன்.
> “அவ்வக் காலக்கட்டங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும், வழக்குகளுக்கும் ஏற்ப மாற்றங்கள் நிகழும் – நிகழ்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் நிலவிய வழக்குச் சொற்களும், பொருள்களும், எழுத்துக்களும் நன்னூல் காலத்தில் எவ்வளவோ வேறுபட்டுள்ளமையைக் காண்கிறோம்.  ஏறத்தாழ 750 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய நன்னூலுக்குப்
>  பின்னர் இன்றுவரையுள்ள இடைவெளியில், சமுதாயச் சூழ்நிலைகளில் எவ்வளவோ மாறுதல்கள் தோன்றியுள்ளன. அவையனைத்தும் மக்கள் சமுதாயத்தின் வாழ்க்கை நிலையினைப் பிரதிபலிப்பவை. அவ்வக் காலத்தெழும் இலக்கியங்கள், வழக்கு முறைகள், மரபுகள் முதலியவற்றின் அளவுகோல் அல்லது சட்டக்கட்டமே இலக்கணம் என்பதை மறுத்தற்கில்லை. எனவே மொழியின் மூல உருவைச் சிதைக்காமல் அதன் எழிலையும்,
>  பொலிவையும் மேலும் பெருக்கி, ஒளியுறச் செய்யுமாயின் அம்மாற்றங்களை ஏற்பதில் தவறில்லை. அவை இன்றியமையாதனவே.”
>  
> மேலும் இலக்கணங்கள் நம்மால் இயற்றப்பட்டவை அல்ல; பலதலை முறைகளுக்கு முன்னால் வகுக்கப்பட்டவை. இன்றியமையா இலக்கணங்கள் சில  மட்டுமே இவ்விழையில் இயம்பப்படுகின்றன. ஒவ்வொரு இழையிலும் நான் மறக்காமல் குறிப்பிடும்படி இவையனைத்தும் “பேராசிரியர் முனைவர் தி. முத்து - கண்ணப்பன், அவர்களின் “தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில
>  பகுதிகள்”.

> நூலாசிரியர்திருவான்மியூர் முத்துச்சாமி கண்ணப்பன் (1915 - 2003)பற்றிய குறிப்பு‘நற்றமிழ்-01’ என்ற இழையில் வழங்கப்பட்டுள்ளது. இப்பேராசான் எனது தந்தையாரும் கூட; கல்லூரியில் அவரிடம் தமிழ்ப் பயிலும் பேறு அவரது பிள்ளைகளில் எனக்கு  மட்டுமே கிட்டியதை நான் பெருமையாகக் கொள்கிறேன். அவர்தம் காலங்களில் கணிவழிக் கல்வி பலருக்கும் கிட்டாததால் “மகன் தந்தைக் காற்றும் ஒரு


>  சிறு கடனாகக் கருதியும்”, மின்தமிழ்க் குழுமச் சான்றோரின் அன்பாணைப்படியும் இவ்விழை வெளியிடப்படுகிறது.
>  
> எனினும் தங்களின் எல்லா ஐயப்பாடுகளும், வினாக்களும், விமர்சனங்களும் குறித்து வைக்கப்பட்டுள்ளன. இழையின் முடிவில் (இன்னும் 10 -15 வரும் என நினைக்கிறேன்) தேவைப்பட்டால், உரிய மொழியியல் வல்லுநர்களைக் கொண்டு விளக்கம் தர விழைகிறேன்.
> நன்றி மிக,
> தி.க.திருவேங்கடமணி
>  
>
> ________________________________

> From: விஜயராகவன் <viji...@gmail.com>


> To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
> Sent: Sat, 21 November, 2009 10:27:41 PM
> Subject: [MinTamil] Re: நற்றமிழ்-07
>
> On 21 Nov, 11:04, Thiruvengada Mani T K <thiruveng...@yahoo.com>
> wrote:
>
> >  
> >    6.    சொல்லின் பாகுபாடு
> >             1.  இயற்சொல் (Easy & pure Tamil Words)
> >                  இயல்பாய் உள்ளவை.
> >      
> >      2.  திரிசொல் (Hard & Pure Tamil words)
> >   கடினமான சொல்: கிள்ளை, படர்ந்தான் முதலியன.  ‘கிளி’ என்பது          ‘கிள்ளை’ என்றும் ‘சொன்னார்’ என்பது ‘படர்ந்தான்’ என்றும் – இவ்வாறு வழக்கத்தில் இல்லாத கடினமான சொற்களால் கூறப்படுவன திரிசொற்கள் எனப்படும்.
> >         1. வட சொல் (Sanskrit words)
> > தமிழில் வழங்கிவரும் சமஸ்கிருதச் சொற்கள் (எ – டு) கமலம், செயம், - முதலியன.
> >  
> >         1. திசைச் சொல் (Foreign or Loan words)
> > தமிழில் வழங்கிவரும் அரபு, ஆங்கிலம், இந்தி முதலிய பிற மொழிச் சொற்கள்.
>
> ஐயா மணி
>
> சொல்லின் பாகுபாடுகள் தொல் காலத்திலிருந்து வருவன ஒழிய, அதற்கு ஒரு
> வலுவான ஆதாரம் இருக்கும் போல தோன்றவில்லை
>
> தமிழர்கள் பேசிவது எல்லாம் தமிழ் தானே, யார் பரவலான புழக்கமான சொற்களை
> அது தமிழ் மூலமா, இல்லையா என கவலைப் பட போகின்றனர். உதாரணமாக
> ”இயற்சொல்”லுக்கும், ”திரி சொல்லுக்கும்” ஒரு வேறுபாடும் இல்லை. “கிள்ளை”

> என சொல்வதில் என்ன கடினம் இருக்கு? நீங்கள் வழக்கத்தில் இல்லாதவை கடினமான ...
>
> read more »

வி. சு.

unread,
Nov 23, 2009, 2:34:05 AM11/23/09
to மின்தமிழ்
On Nov 21, 4:04 pm, Thiruvengada Mani T K <thiruveng...@yahoo.com>
wrote:
...

> "5.     சொல்லியல் (Etymology)
...

Etymology என்பது சொல்லியல் இல்லை; சொற்பொருளியல், பகுபத உறுப்பிலக்கணம்,
சொல் வழக்கு (வெவ்வேறு காலங்களில்) போன்றவற்றைச் சொல்வது.

வி. சு.

unread,
Nov 23, 2009, 2:39:41 AM11/23/09
to மின்தமிழ்
On Nov 21, 9:57 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
...

> மேலும் சமஸ்கிருதத்தை ஏன் வட சொல் என அழைக்க வேண்டும். தமிழுக்கு வடக்கே
> இருக்கும் மொழி தெலுங்கு அல்லவா. ? உண்மையில் `வட மொழி` என்றால்
> தெலுங்கு.
...

தமிழில் இது போல சொற்களைப் பிரித்த போது, தெலுங்கு என்ற ஒரு மொழி
இல்லாதிருந்திருக்கலாம். வடக்கேதான் சீனமும் உள்ளது. :)

Reply all
Reply to author
Forward
0 new messages