பார்த்து வியந்த மனிதர்களை பற்றிய இந்த இழையை துவக்குகிறேன்

77 views
Skip to first unread message

s.bala subramani B+ve

unread,
Apr 10, 2011, 3:13:43 AM4/10/11
to மின்தமிழ்
உங்களுக்கு தெரிந்த தனி மனிதர்களின் உழைப்பில் உள்ள நூலகங்கள் அல்லது
அவர்களின் சேகரிப்புகள்


கடந்த சில வருடங்களில் நான் பார்த்து வியந்த மனிதர்களை பற்றிய இந்த
இழையை துவக்குகிறேன்

பல்லடம் மாணிக்கம் தமிழ் நூல் காப்பகம் விருத்தாசலம்,
ஞானாலய கிருஷ்ண மூர்த்தி புதுகோட்டை
பாரதி நூலகம் பழங்காசு ஸ்ரீனிவாசன் திருச்சி
ராமசாமி அவர்களின் நூலகம் நாமக்கல்
திரு சுந்தர் பரத்வாஜ் சோழர்கள் பற்றிய அறிய நூல்கள் சென்னை

திரு அண்ணாமலை சுகுமாரன் (அனைவருக்கும் தெரியும்) புதுவை
குடவாயில் பாலசுப்ரமணியன் தஞ்சை
கலைக்கோவன் திருச்சி
ராஜா சேகர தங்கமணி வரலாற்று தகவல்கள் கரூர்
ஆய்வு களஞ்சியம் பத்மநாபன் நாகர்கோயில்
வரதராஜன் பாரி பற்றிய ஆய்வுகள் குளச்சல்
மு இளங்கோவன் நன்னன் பற்றிய ஆய்வுகள் மற்றும் ஏராளம் புதுவை
கல்பனா சேக்கிழார் சங்க கால இட பெயர்கள் சிதம்பரம்
பார்த்திபன் அதியமான் தொடர்பான் தகவல்கள் தர்மபுரி
புலவர் ராசு கொங்கு ஆய்வு மையம்
புலவர் கோவிந்தன் கிருஷ்ணகிரி, தர்மபுரி ,சித்தேரி மலையாளிகள் தர்மபுரி
ஆசிரியர் வீரராகவன் கல்வெட்டுகள் மற்றும் விழுப்புரம் மாவட்டம்
தகவல்கள் விழுப்புரம்
கே.வீ . ஷர்மா ஆய்வு மையம் விண்ணியல் மற்றும் ஆய்வு நூல்கள் சென்னை

இன்னும் இன்னும் வரும் நீங்களும் தொடருங்கள்

Swaminathan Venkat

unread,
Apr 10, 2011, 3:16:29 AM4/10/11
to mint...@googlegroups.com
GREAT.

2011/4/10 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Apr 10, 2011, 7:24:36 AM4/10/11
to mint...@googlegroups.com
நன்றி ஐயா, இத்தனை பேர் வரலாற்று ஆய்வில் ஈடுபட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது.

2011/4/10 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
உங்களுக்கு  தெரிந்த தனி மனிதர்களின்  உழைப்பில் உள்ள நூலகங்கள் அல்லது

அவர்களின் சேகரிப்புகள்




இன்னும் இன்னும் வரும் நீங்களும் தொடருங்கள்

வேந்தன் அரசு

unread,
Apr 10, 2011, 7:37:30 AM4/10/11
to mint...@googlegroups.com


10 ஏப்ரல், 2011 3:13 am அன்று, s.bala subramani B+ve <sunke...@gmail.com> எழுதியது:
உங்களுக்கு  தெரிந்த தனி மனிதர்களின்  உழைப்பில் உள்ள நூலகங்கள் அல்லது
அவர்களின் சேகரிப்புகள்


இன்னும் இன்னும் வரும் நீங்களும் தொடருங்கள்


 
பூர்ண சந்திர ஜீவா எனும் தமிழ் ஆசிரியர் சிந்துவெளியில் முந்து தமிழ் எனும்ஆய்வு நூலை எழுதியுள்ளார்
 
மகாதேவன் போன்றோரிடம் காட்டியுள்ளார். சிந்துவெளி என்றால் அவர்தானே அதாரிட்டி. ஆனால் மைமீன் அறுமீன் என்று வாசித்தவரிடம் போய் அது மைம்மீன் அல்ல என்று சொன்னால் ஏற்கும் உள்ளக்கனிவு தமி்ழனுக்கு இருக்குமா?
 
இதுவரை நான் வாசித்தவைகளில் இவரது வாசிப்பு முறை ஏற்கத்தக்கதாக எனக்கு தோணுது. மதிவாணன் அவர்களை இன்னும் நான் வாசிக்கலை
 
சேசாத்திரி அவர்கள் இந்த நூலை கட்டாயம் வாசிக்கணும்
 
 
ஜீவா நுவன்ற  நூல் :
 
”சிந்து வெளியில் முந்து தமிழ்”
 
தய்யல் பதிப்பகம், 127 பாலாஜி நகர், திருவாயர்பாடி, பொன்னேரி 601 204
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

s.bala subramani B+ve

unread,
Apr 10, 2011, 8:19:06 AM4/10/11
to mint...@googlegroups.com
> பூர்ண சந்திர ஜீவா எனும் தமிழ் ஆசிரியர் சிந்துவெளியில் முந்து தமிழ்
> எனும்ஆய்வு நூலை எழுதியுள்ளார்
>>
> சேசாத்திரி அவர்கள் இந்த நூலை கட்டாயம் வாசிக்கணும்
>
>
> ஜீவா நுவன்ற நூல் :
>
> ”சிந்து வெளியில் முந்து தமிழ்”
>
Mobile number 99432 68698

mmanivannan

unread,
Apr 10, 2011, 4:23:46 PM4/10/11
to மின்தமிழ்
அன்புள்ள நண்பர்களுக்கு,

ஒரு வேண்டுகோள்.

தனிப்பட்ட ஆட்களின் தொலைபேசி எண்களையோ, முகவரியையோ மின் தமிழ் போன்ற
மடலாடற்குழுக்களில் பொதுவில் பதிப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எல்லோரும் படிக்கக் கூடிய இத்தகைய செய்திகளைத் திரட்டி வேறு சிலர்
சீண்டல் வேலைகளிலோ, அல்லது குற்றச் செயல்களிலோ ஈடுபடலாம். குறிப்பாகப்
பெண்களின் எண்களையும், முகவரிகளையும் பதிப்பிப்பதை அறவே தவிர்க்க
வேண்டுகிறேன்.

மின் தமிழ் நண்பர் ஒருவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டது
போல, சில குற்றவாளிகள் பெண்களின் எண்களைத் திரட்டி அவற்றை ஆபாச
வேலைகளுக்கு விளம்பரம் தடும் வலைத்தளங்களில் பதிப்பித்துச் சீண்டல்
செயல்களுக்கு வழிவகுத்துப் பிழைக்கிறார்கள். இவர்களைக் கட்டுப்படுத்தத்
தேவையான சட்ட முறைப்படியான சான்றுகளைச் சேகரிப்பது என்பது எளிதல்ல.

அதனால், உங்களுக்கு நேரடியாகத் தெரிந்த நம்பகமான நண்பர்களுக்கு மட்டுமே
இது போன்ற, பொதுவில் இல்லாத, தனிப்பட்ட முகவரிகளையும், தொலைபேசி
எண்களையும் கொடுங்கள். எப்படி நீங்கள் உங்கள் நண்பர்களின் தனிப்பட்ட
விவரங்களை அச்சடித்து துண்டுச்செய்தியாக ஊர்ச் சந்தையில் எல்லோரிடமும்
கொடுக்க மாட்டீர்களோ அதே போல் இத்தகைய விவரங்களை மடலாடற்குழுக்களில்
வெளியிடாதீர்கள். வேண்டுமென்றால் கண்ணன்/சுபாஷிணிக்கு மட்டும்
தெரிவியுங்கள். அவர்களிடம் தேவையுள்ளவர்கள், அறிமுகமானவர்கள் கேட்டுப்
பெறலாம்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு

On Apr 10, 5:19 pm, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com>
wrote:

s.bala subramani B+ve

unread,
May 14, 2011, 3:53:44 AM5/14/11
to mint...@googlegroups.com
 
நான் பார்த்து பேசி பின் வியந்த மனிதர்களில் sir c.v.raman அவர்களின் மகன் ராதா கிருஷ்ணன் ஆவார் 
 
புவனேஸ்வரில் , ஓவியர்  சத்தின் தாஸ் அவர்களின் அரங்கில் பார்த்து அவருடன் தொடர்பில் இருந்தேன் 
அவரே செய்த படகில் உலகை சுற்றி வர முடிவு செய்து பயணம் நிறைய செய்தார்
ஆனால் உலகை சுற்றி வர முடிய வில்லை
அவர் இறந்து விட்டார் ஆனால் அவர் செய்த படகு கொச்சி துறைமுகத்தில் இன்றும் உள்ளது
 
என்னையும் அழைத்தார் ஆனால் என்னுடன் உடன் இருக்கும் வறுமை என்னை போக விட வில்லை
 
என்பது வயதை கடந்த அவர் என்னுடன் குழந்தை போல் அவரின் அனுபங்களை பல முறை தொலை பேசியில் பகிர்ந்து கொண்டது
 
இன்னும் என்னில் இருந்து விலக  வில்லை
 
அவர் இறப்பதற்கு சிறிது நாள் முன்பு பேசிய போது எப்பொழுது பெங்களூர் வருகிறாய் என்றார்
போக தான் முடிய வில்லை
 
 

s.bala subramani B+ve

unread,
May 17, 2011, 11:41:03 PM5/17/11
to mint...@googlegroups.com
தர்மபுரி பார்த்திபன்

 இருபது வருடங்களாக தகடு அதியமான் தொடர்பாக ஆய்வுகள் செய்து வருகிறார் 

நிகழ்ச்சிக்காக  நான்கு வருடங்களுக்கு முன்பு தர்மபுரி  சென்ற போது  அறிமுகமாகி அவருக்காக கன்னியாகுமாரி கேரளா பகுதிகளிள் 

மற்றும் இணையம் மூலமாக தரவுகளை தேடிமேலும்  நெருங்கிய நண்பராகி உள்ளார்

கிட்டத்தட்ட 10000 நூல்களை சேகரித்து உள்ளார்
அடிப்படையில் ஒரு  துணிக்கடை மற்றும் தர்மபுரி lodge இன் உரிமையாளர்

இது வரை ஆறு நூல்களை எழுதி அனைவரின் பாராட்டுகளையும்  பெற்றவர்
அவரின் கடைசி நூலான கிருஷ்ணகிரி வரலாறு மிகவும் படிக்க தக்கது

இலக்கிய உலகில் இருந்து வரலாற்று ஆய்வுக்கு வந்தவர் 

இரும்பு தகடு நாகரிகம் தமிழகத்தில் தான் உருவாகி உலகம் முழுவதும் சென்றது என்பதை இணைந்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம்
தமிழகத்தில் இது போல் ஏராளமான மனிதர்கள் மிகவும் அமைதியான வழியில் செயல் பட்டு கொண்டு இருக்கிறார்கள் 


2011/5/14 s.bala subramani B+ve <sunke...@gmail.com>



--
S.Balasubramani B+ve

s.bala subramani B+ve

unread,
Sep 21, 2011, 7:51:38 AM9/21/11
to mint...@googlegroups.com
என்னை மிகவும் கவர்ந்த புதுகோட்டையை சேர்ந்த பெரியவர் ராஜா முகம்மது அவர்களின் கட்டுரை பஹரின் பாரதி வலை தளத்தில் இருக்கிறது
 
சென்னை அருங்காட்சியகத்தில் உதவி இயக்குனராக இருந்த ஒய்வு பெற்றவர்
புதுகோட்டை வரலாற்றை  சுவை பட எழுதியவர்
நிறைய நற்பணிகள் செய்து வருபவர்
 
முஸ்லிம் மக்களின் கடல் வணிகம் பற்றிய ஆய்வுகள் நிறைய செய்து வருபவர்
அவரின்
முஸ்லீம்ஸ் of கோரமண்டல் கோஸ்ட் என்ற ஆங்கில  நூல நல்ல வரவேற்பை பெற்றது
 
திரு நரசைய அவர்களை போலவே என் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்
 
 

அரேபிய தமிழக வணிக கலாச்சார தொடர்புகள்



அரேபிய தமிழக வணிக கலாச்சார தொடர்புகள்
- ஒரு வரலாற்றுப் பார்வை

டாக்டர் ஜெ.ராஜா முகமது, M.A. (Hist), M.A. (Arch), M.A. (Anth), BGL.,PhD
முன்னாள் காப்பாட்சியர் அரசு அருங்காட்சியகம், புதுக்கோட்டை
தமிழ்நாடு, இந்தியா

தமிழகத்திற்கும், அரேபியாவிற்கும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பு இருந்து வந்தது. அரேபியர் தொகுத்து வைத்திருந்த புவியியல் செய்திகளும், பல்வேறு நாடுகளின் கடல் வரைபடங்களும் அவர்களது திரைகடலோடும் திறமைக்கு தக்க வழிகாட்டிகளாக அமைந்து, அவர்கள் கடல் சார்ந்த தொழில்களை (பிற நாட்டுடன் வணிகம், முத்துக் குளித்தல், மீன் பிடித்தல் போன்றவை) சிறப்பாக மேற்கொள்ள காரணமாக இருந்தது.

பஹ்ரைன், ஏமன், ஹோர்முச், ஆகிய நாட்டு துறைமுகங்களிலிருந்து புறப்பட்ட அரேபிய கப்பல்கள், இந்திய நாட்டுக் கடலில் வலம் வந்தன. அரேபிய தென்முனைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டக் கப்பல்கள், 47 நாட்களில் தமிழகத்தின் வட எல்லையைத் தொட்டன. அரேபிய வணிகர்கள் பொன்னையும், புதுமை பொருட்களையும், மிளகு, முத்து ஆகியவற்றையும் பெற்றுச் சென்றனர். இவ்வாறாக தமிழகத்தின் வணிகப் பொருட்கள் அரேபிய வணிகர்களின் மூலமாக உலகின் பல பகுதிகளுக்கும் சென்றன.

வணிக நிமித்தம் தமிழ் நாட்டிற்கு வந்த அரேபிகள், தமிழகத்துதுறைமுகப் பட்டினங்களில் தங்கலாயினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற நூல்களில் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

அரபுமக்களை யவனர் எனவும், அவர்களது குடியிருப்புகளை யவனச்சேரி என்றும் இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. அரேபிய வணிகர்களின் பண்டமாற்று வணிகம் குறித்த செய்திகளும் இவற்றில் நிறைய காணப்படுகின்றன.

அரேபிய குதிரைகள் தமிழகத்திற்கு பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கு தமிழகத்தில் நல்ல விலை கிடைத்தது. அரேபியரின்கப்பல்களில் குதிரைகள் வந்து இறக்குமதியான செய்தியினை

“நீரில் வந்த நிமர்பரிப்புரவியும்”

எனப் பட்டினப்பாலை கூறுகிறது. தமிழகத்திலிருந்து திரும்பிச்செல்லும் அவர்களது கப்பல்கள் இங்கிருந்து மிளகுப் பொதிகளைச் சுமந்து சென்றன. இச்செய்தியை கூறும் சங்ககாலஇலக்கியமான அகநானூறு

“யவனர் தந்த வினைமாணன் கலங்கள்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”

எனக் கூறுகிறது. பொற்காசுகளைக் கொண்டு வந்து கொடுத்து மிளகு ஏற்றிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது. (கறி என்பது மிளகைக் குறிக்கும்) உலகின் கீழ்க் கோடியான சீனத்துடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த அரேபியருக்கு தென் இந்திய துறைமுகங்கள் மையமாக விளங்கின. தமிழகத்து துறைமுகங்களை தொட்ட பின்பே அவர்களது கப்பல்கள் ஜாவா, சுமத்ரா, மலாக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்றன. இந்நாடுகளிலிருந்து கொள்முதல் செய்த பலதரப்பட்ட பொருட்களையும், ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு சென்று அறிமுகப்படுத்தியவர்களும் அரேபியரே ஆவார். சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் துறைமுகத்தை பந்தர் என்று அழைக்கின்றன.

“இன்னிசை புணரி இரங்கும் பெளவத்து
நங்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்”

என பதிற்றுப் பத்து கூறுகிறது. பந்தர் என்பது அரபுச் சொல் ஆகும். இச்சொல் துறைமுகத்தைக் குறிக்கும். அக்காலத்தில் துறைமுகங்களாக இருந்த ஊர்கள் சில இன்றும் பந்தர் என வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தென்னாற்காடு மாவட்டம் பரங்கிப்பேட்டை (போர்ட்டோ நோவோ) மஹ்மூது பந்தர் எனவும், சென்னைக்கு அருகிலுள்ள கோவலம், ஷஹீதுபந்தர் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழகத்திற்கும், அரேபியாவிற்கும் நிலவிய நெருங்கிய தொடர்பினை இந்த சான்றுகள் வலியுறுத்துகின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரேபியரின் தொடர்பினால் சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் இடம் பெற்றுள்ளன. அவை அரபுச் சொற்கள் என அடையாளம் காண முடியாத அளவுக்கு தமிழ்மயமாகி உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட சில சொற்களை மட்டும் இங்கு குறிப்பிடுவோம்.

அசல், அத்தர், அண்டா, அமல், அல்வா, அமினா, அயன், அனாமத்து, அக்கப்போர், ஆசாரி, இனாம், இலாகா, ஊதுபத்தி, கசாப்பு, கச்சா, கஜானா, கம்மி, கிராக்கி, கெடுபிடி, கிஸ்தி, குமாஸ்தா, கைதி, குத்தகை, சர்க்கார், சர்பத், சலாம், சிப்பந்தி, டபேதார், தரகர், தண்டோரா, தராசு, நகல், நமூனா, பட்டுவாடா, பந்தோபஸ்து, பலே, பூந்தி, பைசல், பேஷ், மசோதா, மராமத்து, ,மாஜி, முகாம், மிட்டாய், ரத்து, ரஸ்தா, ராஜினாமா, வக்கீல், வக்காலத்து, வஜா, வாபஸ், வாய்தா, ஜாமீன், ஜாஸ்தி, ஜோர், ஜில்லா, ஜமீன், மைதானம் ஆகியன.

வானசாஸ்திரத்திலும், கணித முறையிலும், புதிய நடைமுறைகள் ஏற்பட்டன. நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலை அறியும் வழக்கம், அரேபிய எண் முறையும் இங்கு வந்து சேர்ந்தன (1 முதல் 9 வரை அரேபிய எண்களாகும்.) தமிழகத்தில் வழக்கிலிருந்த சித்த வைத்திய முறையுடன் புதிதாக யூனனி என்ற மருத்துவமுறையும் அறிமுகமாகி இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.

உணவுப் பழக்கங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. நாம் சுவைத்து உண்ணும் பிரியாணி (இது ஈரான் நாட்டு உணவு), புலவு, நான், புரோட்டா, சமூசா, கஞ்சி ஜிலேபி, ஹல்வா இன்னும் இது போன்று புதுவகை புலால் உஅணவுகள் இந்தியா நாட்டு அடுக்களைக்கு வந்துச் சேர்ந்தன. ஒரே தட்டில் பலர் கூடி உண்ணும்முறை அரேபியரின் வழக்கம். இம்முறை தமிழகத்திற்கு அறிமுகமாகியது. தமிழகத்து கடற்கரைப் பட்டினங்களில் வாழும் மரக்காயர்களது திருமணம் போன்ற வைபவங்களில் ஒரே தட்டில் நான்கு பேர் , ஆறுபேர் சேர்ந்து உண்ணும் பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. உடை உடுத்தும் பழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களது சல்வார் கமீஸ், குப்பாயம், ஆண்களின் ஜிப்பா போன்றவை அரேபியரின் தொடர்பால் கிடைத்தவை.
Reply all
Reply to author
Forward
0 new messages