கோபுரம் உயர்ந்தது - விமானம் தாழ்ந்தது.

134 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Mar 15, 2015, 3:06:09 AM3/15/15
to mint...@googlegroups.com

கோபுரம் உயர்ந்தது...விமானம் தாழ்ந்தது

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன், தொல்லியலாளர் பத்மாவதியின் தோழமையின் பயனாய்.

கோவில் கட்டிடக் கலை பற்றி ரஞ்சித் எனும் இளைஞர்- தொல்லியலாளர்- காட்சி உரை நிகழ்த்தினார். நன்றாக இருந்தது. நிறைய அரிய செய்திகளை அறிந்த கொள்ள முடிந்தது.

என் போன்ற சாமானியர்களுக்கு எழும் கேள்வி

 “திருவதிகை போன்ற பல்லவர் கால கோவில், தஞ்சை போன்ற சோழர் கால கோவில் , இவற்றிலெல்லாம் கருவறைக்கு மேலேயுள்ள விமானம் உயரமாக உள்ளது ஆனால் மதுரை போன்ற கோவில்களில் நுழைவாயிலுக்கு மேலேயுள்ள கோபுரம் உயரமாக உள்ளது-விமானம் உயரம் குறைவாக உள்ளதே - இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது ?”

எனக்குக் கிடைத்த விளக்கம் –

“ மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை விமானம் உயரமாக கட்டும் முறை இருந்தது –பின்னர் வந்த நாட்களில் , சுற்றுசுவரில் உள்ள நுழைவாயிலின்  மேலே கோபுரம் உயரமாகக் கட்டும் முறை வந்தது.”

ஆக, நான் புரிந்து கொண்டது , -விமானம் உயரமாக இருந்தால் அந்தக் கோவில் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

Dhivakar

unread,
Mar 15, 2015, 3:39:58 AM3/15/15
to மின்தமிழ்
//“திருவதிகை போன்ற பல்லவர் கால கோவில், தஞ்சை போன்ற சோழர் கால கோவில் , இவற்றிலெல்லாம் கருவறைக்கு மேலேயுள்ள விமானம் உயரமாக உள்ளது ஆனால் மதுரை போன்ற கோவில்களில் நுழைவாயிலுக்கு மேலேயுள்ள கோபுரம் உயரமாக உள்ளது-விமானம் உயரம் குறைவாக உள்ளதே - இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது //

தில்லை, திருவாரூர், திருவரங்கம், திருவானைக்கோயில், திருவொற்றியூர் போன்ற முந்தைய சோழர் காலத்திலும் புகழ் பெற்ற கோயில்களைப் பார்க்கவேண்டும். திருவொற்றியூர் நுழைவாயில் கோபுரம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.  . தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் தேவார மூவர் காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டன.எல்லாமே விமானங்கள் உயரமானவை என்று சொல்லமுடியாது.   எல்லாக் கோயில்களையும் ஒப்பு நோக்கவேண்டும். 

மூன்றாம் குலோத்துங்கன் காலம் முடிந்த பின் அடுத்த நூறு ஆண்டுகள் தமிழகத்தில் சற்று இருளடைவான காலம். பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து நாயக்கர் காலங்களில் வெளிக்கோபுரங்கள் உயரமாக இருக்கவேண்டுமென முன்னுரிமைக் கொடுக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உயரமான வெளிவாயில் கோபுரங்களோடு புதுப்பிக்கப்பட்டன.

குடவாயில் பாலு அவர்கள் கோபுரக்கட்டடக் கலை வரலாறு எழுதியுள்ளார். அருமையான நூல் அது.

பொதுவாக கோபுரங்கள் மக்கள் தூரத்திலிருந்து அடையாளம் காண வேண்டுமேயென ஒரு வசதிக்காக கட்டப்பட்டது. தெய்வ ஆராதனை என்ற ஒன்று அடிப்படை நோக்கம் இருந்தாலும் சமூகக் கூடங்களாகவும் பயன்படவேண்டுமென்பதே அந்தக் கோயில் கட்டியவர்களின் விருப்பமாக இருக்கவேண்டும். மாடக் கோயில்கள் அனைத்தும் வெள்ளம் வரும் காலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களாக இருந்தன.

அன்புடன்
திவாகர்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Singanenjam Sambandam

unread,
Mar 15, 2015, 4:55:41 AM3/15/15
to mint...@googlegroups.com
### தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் தேவார மூவர் காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டன.எல்லாமே விமானங்கள் உயரமானவை என்று சொல்லமுடியாது.   எல்லாக் கோயில்களையும் ஒப்பு நோக்கவேண்டும். ####

முழுக்க முழுக்க சரி.
All Sardarjis are Punjabis- but, all Punjabis are not Sardarjis.

குடவாயில் பாலு அவர்கள் நூல் பற்றிய தகவலுக்கு நன்றி.

Suba.T.

unread,
Mar 15, 2015, 5:02:24 AM3/15/15
to மின்தமிழ், Subashini Tremmel
​நல்ல குறிப்பு.

கும்பகோணம் பகுதியில் இருக்கும் சில சிறிய கோயில்கள்.. கோணேரி ராஜபுரம் போன்றவை காலத்தால் 11ம் நூற்றாண்டு என்ற போதிலும் சிறிய ​
 
​கோபுரங்களுடனேயே உள்ளன. ​

சுபா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 15, 2015, 6:01:26 AM3/15/15
to mintamil
வணக்கம்.
நல்லதொரு சிந்தனையை முன் வைத்துள்ளீர்கள்.

கோயில் விமானம், கோபுரங்களின் அளவுகள் பற்றிய விதிகள் பலவற்றை 1987ஆம் ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கருத்தரங்கில் கணபதி தபதியார் விளக்கமாக எடுத்துரைக் கட்டுரை வாசித்தார்.

எனது நினைவில் நின்றவரையில்,
“மூல லிங்கத்தின் அளவிற்கு ஏற்ற வகையிலேயே,
அம்மையின் உயரம், மற்றும் கருவரையின் நீள அகல உயரங்கள் எல்லாமும் அமைக்கப்பட்டு வந்திருக்கின்றன.  சேர பாண்டிய மன்னர்களின் பரம்பரை ஆட்சிக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கோபுரங்களின் உயரங்களை அமைத்துள்ளனர்.  அதன்பின்னர், பின்னர் விமானம் கோபுரம் இவற்றை நிர்ணயம் செய்யும் விதிகள் சரியான முறையில் எல்லாக் கோயில்களிலும் பின்பற்றப் பெறவில்லை.“

கணபதி தபதியாரின் கட்டுரை அடங்கிய நூல் கிடைக்கிறதா எனத் தேடிப்பார்க்கிறேன்.  கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

எனவே,
எல்லாக் கோயில்களின் கோபுரம், விமானம் இவற்றின் உயரத்தோடு, அங்குள்ள லிங்கத்தின் உயரத்தையும், அம்மையின் உயரத்தையும்  கணக்கில் கொண்டால்தான் சரியான விடை கிடைக்கும்.

அன்பன்
கி.காளைராசன

2015-03-15 12:36 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Mar 15, 2015, 6:15:45 AM3/15/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-15 9:55 GMT+01:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
### தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் தேவார மூவர் காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டன.எல்லாமே விமானங்கள் உயரமானவை என்று சொல்லமுடியாது.   எல்லாக் கோயில்களையும் ஒப்பு நோக்கவேண்டும். ####

முழுக்க முழுக்க சரி.
All Sardarjis are Punjabis- but, all Punjabis are not Sardarjis.

குடவாயில் பாலு அவர்கள் நூல் பற்றிய தகவலுக்கு நன்றி.

​தகவலுக்காக..​

​குடவாயில் பாலுவின் ராஜராஜேச்வரம் நமது மின்னூல் தொகுப்பில் உள்ளது. 
நூல் எண் 219.
சுபா

Dev Raj

unread,
Mar 15, 2015, 6:24:41 AM3/15/15
to mint...@googlegroups.com
சிறப்பான நுட்பமான ஒப்பீடு.
வடபுலத்தின் ஆலயங்களில் ஒரே சீராகக் கருவறை மேலுள்ள
பகுதியே கோபுரமாக உயர்ந்து காணப்படுகிறது

தேவ்

Singanenjam Sambandam

unread,
Mar 15, 2015, 8:16:33 AM3/15/15
to mint...@googlegroups.com
எங்கே இருக்கிறீர்கள் சுபா, ஜெர்மனியில் தானே..? 
வடமேற்கு நோக்கி வணக்கம் தெரிவிக்கிறேன்.
தா. ம. அ . புண்ணியத்தில் ​குடவாயில் பாலுவின் ராஜராஜேச்வரம் நூலை படித்துப்  பயனுற்றேன். 
நாங்கள் பெண் கொடுத்த ஊர் என்பதால் , அடிக்கடி தஞ்சை செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. (தண் + செய் = தஞ்சையாமே...இந்த நூலில் எழுதியுள்ளது. ..நன் + செய் = நஞ்சை என்பது போலவா?). 

கடந்த டிசம்பர் முழுநிலவில்,ஆ வென வாயைப் பிளந்துகொண்டு அம்புலியின் ஒளியில் ஆலயத்தின்  அழகை ரசித்து மகிழ்ந்தேன்.
இனி வரும் நாட்களில்  ​குடவாயில் பாலுவின் ராஜராஜேச்வரம் நூலைக்  கையில் கொண்டு பார்த்து மகிழ்வேன்.
மீண்டும் நன்றி.

Suba.T.

unread,
Mar 15, 2015, 10:12:29 AM3/15/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-15 13:16 GMT+01:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
எங்கே இருக்கிறீர்கள் சுபா, ஜெர்மனியில் தானே..? 
வடமேற்கு நோக்கி வணக்கம் தெரிவிக்கிறேன்.
தா. ம. அ . புண்ணியத்தில் ​குடவாயில் பாலுவின் ராஜராஜேச்வரம் நூலை படித்துப்  பயனுற்றேன். 
நாங்கள் பெண் கொடுத்த ஊர் என்பதால் , அடிக்கடி தஞ்சை செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. (தண் + செய் = தஞ்சையாமே...இந்த நூலில் எழுதியுள்ளது. ..நன் + செய் = நஞ்சை என்பது போலவா?). 

கடந்த டிசம்பர் முழுநிலவில்,ஆ வென வாயைப் பிளந்துகொண்டு அம்புலியின் ஒளியில் ஆலயத்தின்  அழகை ரசித்து மகிழ்ந்தேன்.
இனி வரும் நாட்களில்  ​குடவாயில் பாலுவின் ராஜராஜேச்வரம் நூலைக்  கையில் கொண்டு பார்த்து மகிழ்வேன்.
மீண்டும் நன்றி.

​உங்கள் மகிழ்ச்சி என்னை மகிழ்விக்கின்றது. அப்படியே இந்தப் பதிவையும் பாருங்கள். குடவாயில் பாலு அவர்கள் பேசும் பதிவும் கோயில் விளக்கமும் உங்களுக்கு மிகப் பயன்தரும்..

சுபா
 
On Sun, Mar 15, 2015 at 3:54 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
சிறப்பான நுட்பமான ஒப்பீடு.
வடபுலத்தின் ஆலயங்களில் ஒரே சீராகக் கருவறை மேலுள்ள
பகுதியே கோபுரமாக உயர்ந்து காணப்படுகிறது

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Dhivakar

unread,
Mar 15, 2015, 12:16:13 PM3/15/15
to மின்தமிழ்
//எங்கே இருக்கிறீர்கள் சுபா, ஜெர்மனியில் தானே..? 
வடமேற்கு நோக்கி வணக்கம் தெரிவிக்கிறேன்.//

அன்புள்ள சிங்காநெஞ்சன்,

நானல்லவா குடவாயில் பற்றி முதலில் சொல்லியது.. எனக்குதான் முதல் வணக்கம் சேரும்.. (எங்கள் ஊரைத் தாண்டிதான் வடமேற்கே வரும்) :-)  

இருக்கட்டும்.

குடவாயில் பாலுவின் ஒரு சிறிய புத்தகம்தான் எனது முதல் நாவலான வம்சதாராவுக்கு அடிப்படை வலு சேர்த்தது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘கருணாகரத் தொண்டைமான்’. உண்மையில் இந்த சிறிய புத்தகம் என் கைக்குக் கிடைத்த இடம் அண்ணா சாலை பிளாட்ஃபாரக் கடையில்..

 சுபா,

நாம் சென்னையில் ஒருநாள் மாலை கலைஞர் கௌரவிப்பு விழாவில் சந்தித்தபோது நம்மோடு குடவாயில் பாலுவும் அமர்ந்திருந்தார். உங்களுக்கு நினைவு இருக்கும் என நினைக்கிறேன். அப்போது சத்தத்தோடு சத்தமாக அவரின் சிறிய புத்தகம் விவரம் சொன்னபோது அவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.. ’போகட்டும் என் புத்தகம் எங்கே கிடைத்தாலும் ஒரு பயனுள்ள வகையில் உதவியிருக்கிறது’ என்றார்.

Malarvizhi Mangay

unread,
Mar 15, 2015, 1:04:37 PM3/15/15
to mint...@googlegroups.com

சுபா நலமா?இரு நாட்களுக்கு முன்
ஜெர்மன் தமிழ்எெழுத்தாளர் ராஜேஸ்வரி எழுதிய ரோசாலஸ்ஸம்பர் கதையை
அனுப்ப இயலுமா என்று உங்களிடம் கேட்டு இருந்தேன்.
காத்திருக்கிறேன் சுபா.நன்றி.

Suba.T.

unread,
Mar 15, 2015, 1:15:33 PM3/15/15
to மின்தமிழ்
2015-03-15 18:04 GMT+01:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

சுபா நலமா?இரு நாட்களுக்கு முன்
ஜெர்மன் தமிழ்எெழுத்தாளர் ராஜேஸ்வரி எழுதிய ரோசாலஸ்ஸம்பர் கதையை
அனுப்ப இயலுமா என்று உங்களிடம் கேட்டு இருந்தேன்.
காத்திருக்கிறேன் சுபா.நன்றி.

​அதே மடலில் பார்க்கவும் மலர்விழி. பத்ல் போட்டிருக்கிறேன்
சுபா
 
On 15-Mar-2015 9:46 pm, "Dhivakar" <venkdh...@gmail.com> wrote:

--

Oru Arizonan

unread,
Mar 15, 2015, 2:30:52 PM3/15/15
to mintamil
// மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை விமானம் உயரமாக கட்டும் முறை இருந்தது –பின்னர் வந்த நாட்களில் , சுற்றுசுவரில் உள்ள நுழைவாயிலின்  மேலே கோபுரம் உயரமாகக் கட்டும் முறை வந்தது.”//

உண்மை!  நுழைவாயில் கோபுரம்/ராஜகோபுரம் கட்டும் முறையைக் கொணர்ந்தது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனான மாறவர்மன் சுந்தபாண்டியன்.  மூன்றாம் குலோத்துங்கனைத் தோற்கடித்து நாடுகடத்தி, உறையூர், தஞ்சையை எரியிட்டு, அயிரட்டளியில் முடிசூட்டிக்கொண்டான்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்தாலும், தஞ்சைக்கோவில் விமானத்தைப்ப்போல உயர்ந்து நின்று, "இதோ இருக்கிறேன் நான்!"  என்று பெருமையைப் பறைசாற்றவில்லை.  அக்குறையை நீக்க கிழக்கு ராஜகோபுரத்தைக் கட்டினான்.  அது ஒரு காவல் கணிப்புக் கட்டுமானமாகவும் (watch tower) விளங்கியது.

இதை நான் என் தமிழ் இனி மெல்ல... புதினத்தின் இரண்டாம் நூலில் [இனி வெளிவரவேண்டும்] எழுதி உள்ளேன்.  இதற்கு வரலாற்றுச் சான்றுகளையும் கைக்கொண்டுள்ளேன்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Mar 16, 2015, 7:40:16 PM3/16/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, Santhavasantham

On Sunday, March 15, 2015 at 5:16:33 AM UTC-7, singanenjan wrote:
எங்கே இருக்கிறீர்கள் சுபா, ஜெர்மனியில் தானே..? 
வடமேற்கு நோக்கி வணக்கம் தெரிவிக்கிறேன்.
தா. ம. அ . புண்ணியத்தில் ​குடவாயில் பாலுவின் ராஜராஜேச்வரம் நூலை படித்துப்  பயனுற்றேன். 
நாங்கள் பெண் கொடுத்த ஊர் என்பதால் , அடிக்கடி தஞ்சை செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. (தண் + செய் = தஞ்சையாமே...இந்த நூலில் எழுதியுள்ளது. ..நன் + செய் = நஞ்சை என்பது போலவா?). 

முனைவர். சிங்கநெஞ்சன்,

ஆம் ஐயா. பல ஆண்டுகளாக எழுதியுள்ளேன். புன்+செய் = புஞ்சை உண்டல்லவா?

தஞ்சைவாணன்கோவை தமிழின் ஒருமுக்கிய நூல். பொய்யாமொழிப்புலவர் 12-ஆம் நூற்றாண்டில்
தஞ்சாக்கூர் என்னும் ஊர்த் தலைவன் மேல் பாடினது. அதுவும், தண் + செய் + ஆக்கூர் = தஞ்சை + ஆக்கூர் = தஞ்சாக்கூர்.
சேலத்தில் வாழ்ந்த சொக்கப்ப நாவலர் 17-ஆம் நூற்றாண்டில் உரை செய்துள்ளார். 2000 வருஷ வேளாண் வாழ்க்கை
நூலாலும், உரையாலும் விளங்கும்.  இவை கிடக்க.

இன்று ஸாப்ட்வேர் கேப்பிடல் என்கிறோமே. இந்திய மென்கலன் தலைநகர் பெங்களூர் பெயரை எடுத்துக்கொள்க.
பிபிசியில் உள்ள விளக்கம் மிகப் பிழைபட்டது:

வடகொங்கு நாட்டு ஊர் இது. மயிலை சீனி. வேங்கடசாமி, கொங்குநாட்டு வரலாறு. இப்போதுதான்,
இவ்வூர்ப்பக்கம் இருந்து வெள்ளையனை எதிர்த்த துப்பாக்கிக்கவுண்டர், அவரது சந்ததியார்கள்
பற்றி காளைராசன் சொல்ல அறிந்தோம்.

வெங்காலூர் என்பது பழைய தமிழ்ப்பெயர். வெங்கால மரங்கள் மிகுந்த ஊர்.
கொங்குநாட்டில் கரூர் (சேர ராஜாக்களின் தலைந்கரான வஞ்சி மாநகர்) அருகே வெங்காலநாடு என்னும் உள்நாடு இருக்கிறது.
வெங்கால் என்பது வெண் + கால். அதாவது, வெள்ளை, வெள்ளையான பகுதிகள் கொண்ட button-flower tree மரம்
நிறைந்த காடுகள் உள்ள ஊர். இம்மரம் ஞெமை என்ற பாலை நில மரம் சங்க இலக்கியம் நிறையக் காட்டுகிறது.. காவிரித் தண்ணி வருமுன் பாலைதானே வெண்காலூர் (= வெங்காலூர், இப்போதைய பெங்களூரு). தண்+செய் தஞ்சை, அதுபோல்,
வெண்+கால் = வெங்கால் (மரவகை). நமைமரம் < ஞெமை.

வம்பு = வன்+பு, இதனை, “வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே” என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.

வம்பு ‘> bamboo, மூங்கில்’ = வண்பு.
வேறுபாடு அறிய விளக்கம் ஈண்டுக் கண்டருள்க.

நா. கணேசன்

Malarvizhi Mangay

unread,
Mar 17, 2015, 12:52:19 AM3/17/15
to mint...@googlegroups.com

நன்றி சுபா.

Singanenjam Sambandam

unread,
Mar 21, 2015, 6:53:28 AM3/21/15
to mint...@googlegroups.com
மிக்க நன்றி....

நம் இலக்கியங்களில், கோபுரம் எனும் சொல் எந்த காலகட்டத்தில் பயன்பாட்டிற்கு வந்தது ?

அறிந்தவர்கள் பகிருங்கள்.

தேமொழி

unread,
Mar 21, 2015, 6:59:34 PM3/21/15
to mint...@googlegroups.com

ஆறாம் நூற்றாண்டு என்று நான் அறிந்தவரைக் குறிப்பிடுகிறேன்.

பாண்டியராஜா ஐயா வழங்கிய தளத்தின் உதவி கொண்டு தேடியதில் சங்க காலத்தில் கோபுரங்கள் இல்லை.

அதாவது சங்க இலக்கிய நூல்களில் "கோபுரம்" என்ற சொல் பயன்பாட்டில் இல்லை.

அத்தளத்தில் தேடிய நூல்களின் முடிவுகள் கீழே.....

தொல்காப்பியம் = இல்லை
இறையனார் அகப்பொருள் = இல்லை
பத்துப்பாட்டு = இல்லை
எட்டுத்தொகை = இல்லை
பதினெண்கீழ்க்கணக்கு  = இல்லை 
ஐம்பெருங்காப்பியங்கள்:
சிலப்பதிகாரம் = இல்லை 
மணிமேகலை = இல்லை
வளையாபதி = இல்லை 
குண்டலகேசி = இல்லை 

முத்தொள்ளாயிரம் = இல்லை 
நளவெண்பா = இல்லை 

காலத்தில் பின்பட்ட ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவகசிந்தாமணி நூலில் கோபுரம் என்ற சொல் காணக் கிடைக்கிறது.

பத்தாம் நூற்றாண்டு 
சீவக சிந்தாமணி 
 கோபுர (3)
குமரி கொடி மதில் கோபுர மூதூர் - சிந்தா:1 336/2
கோபுர மாட மூதூர் கூற்று உண விளிக என்பார் - சிந்தா:4 1111/4
சூலம் நெற்றிய கோபுர தோற்றமும் - சிந்தா:13 3003/2
 
    கோபுரங்கள் (2)
மெய் உரை விளங்கும் மணி மேல் உலக கோபுரங்கள்
   ஐயம் இலை நின்ற புகழ் வையகத்து மன்னும் - சிந்தா:13 2869/1,2
மையல் விளை மா நரக கோபுரங்கள் கண்டீர் - சிந்தா:13 2869/3
 
    கோபுரம் (2)
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன - சிந்தா:1 144/2
திகழ் மணி கோபுரம் திங்கள் வாள் முகம் - சிந்தா:6 1444/3

______________

பிறகு கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற நூல்களிலும் "கோபுரம்" என்ற சொல் உண்டு.

இதனால் .... திருமறைகளில் துவங்கிய தேடலில் ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் கோபுரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியது தெரிகிறது. 

தேவாரம் -  நான்காம் திருமுறை - (அப்பர்)
90 கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?

இதன் பிறகு சம்பந்தர், சுந்தரர் எனவும் தேடியதில் அப்பருக்கு  சமகாலத்தவர், பிற்காலத்தவர் இருவரும் பயன்படுத்தியுள்ளனர்.  

மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இல்லை.  ஆனால் அவருடைய திருக்கோவையார் காப்பு செய்யுளில் எழு கோபுரம் என்ற சொல் உள்ள தகவல் உள்ளது, எனினும் செய்யுள் காணக் கிடைக்கவில்லை.  
தென்தமிழக நம்மாழ்வார் கோபுரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். 

கோபுரம் என்ற சொல்லிற்கு  இலக்கிய கால நிர்ணயித்தலில்  பங்கு உள்ளது என்றால், திருமூலர் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் என்பது உண்மையல்ல என்பதாகிறது..

பத்தாம் திருமுறை - திருமூலர் இயற்றிய - திருமந்திரம்
11. சிவபூசை

1792. உள்ளம் பெருங்கோயில் 1ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

இது போலவே நம்மாழ்வாரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ( Nammalwar was born in 43rd Kali of 3059 BC?) பிறந்தவரல்ல என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது 

நாலாயிர திவ்யப் பிரபந்தம்
திருமங்கையாழ்வார்
1244
குலவும் இடம்-கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் 
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் 

நம்மாழ்வார்
3853
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான் 
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே 

3869
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் 
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே

கீழ் காணும் நெறி நூல்களில் கோபுரம் என்ற சொல் இல்லை....
ஆத்திசூடி = இல்லை 
கொன்றைவேந்தன் = இல்லை
மூதுரை = இல்லை
நல்வழி = இல்லை 
நறுந்தொகை = இல்லை
உலகநீதி = இல்லை 
நீதிநெறி விளக்கம் = இல்லை
அறநெறிச்சாரம் = இல்லை 
நீதி நூல் = இல்லை 

இல்லை என்பதும் ஒரு முக்கியமான ஆய்வு முடிவு என்ற கோணத்தில் இல்லாதது பற்றிய  தகவல்களும் இங்கு  கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே சமய இலக்கியங்கள் தோன்றிய காலங்களுக்கும் கோபுரம் என்ற சொல்லுக்கும் தொடர்பு தெரிகிறது.

..... தேமொழி

On Saturday, March 21, 2015 at 3:53:28 AM UTC-7, singanenjan wrote:
மிக்க நன்றி....

நம் இலக்கியங்களில், கோபுரம் எனும் சொல் எந்த காலகட்டத்தில் பயன்பாட்டிற்கு வந்தது ?

அறிந்தவர்கள் பகிருங்கள்.

2015-03-17 10:22 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

நன்றி சுபா.

On 16-Mar-2015 12:00 am, "Oru Arizonan" <oruar...@gmail.com> wrote:
// மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை விமானம் உயரமாக கட்டும் முறை இருந்தது –பின்னர் வந்த நாட்களில் , சுற்றுசுவரில் உள்ள நுழைவாயிலின்  மேலே கோபுரம் உயரமாகக் கட்டும் முறை வந்தது.”//

உண்மை!  நுழைவாயில் கோபுரம்/ராஜகோபுரம் கட்டும் முறையைக் கொணர்ந்தது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனான மாறவர்மன் சுந்தபாண்டியன்.  மூன்றாம் குலோத்துங்கனைத் தோற்கடித்து நாடுகடத்தி, உறையூர், தஞ்சையை எரியிட்டு, அயிரட்டளியில் முடிசூட்டிக்கொண்டான்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்தாலும், தஞ்சைக்கோவில் விமானத்தைப்ப்போல உயர்ந்து நின்று, "இதோ இருக்கிறேன் நான்!"  என்று பெருமையைப் பறைசாற்றவில்லை.  அக்குறையை நீக்க கிழக்கு ராஜகோபுரத்தைக் கட்டினான்.  அது ஒரு காவல் கணிப்புக் கட்டுமானமாகவும் (watch tower) விளங்கியது.

இதை நான் என் தமிழ் இனி மெல்ல... புதினத்தின் இரண்டாம் நூலில் [இனி வெளிவரவேண்டும்] எழுதி உள்ளேன்.  இதற்கு வரலாற்றுச் சான்றுகளையும் கைக்கொண்டுள்ளேன்.

ஒரு அரிசோனன் 

2015-03-15 0:06 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

கோபுரம் உயர்ந்தது...விமானம் தாழ்ந்தது

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன், தொல்லியலாளர் பத்மாவதியின் தோழமையின் பயனாய்.

கோவில் கட்டிடக் கலை பற்றி ரஞ்சித் எனும் இளைஞர்- தொல்லியலாளர்- காட்சி உரை நிகழ்த்தினார். நன்றாக இருந்தது. நிறைய அரிய செய்திகளை அறிந்த கொள்ள முடிந்தது.

என் போன்ற சாமானியர்களுக்கு எழும் கேள்வி

 “திருவதிகை போன்ற பல்லவர் கால கோவில், தஞ்சை போன்ற சோழர் கால கோவில் , இவற்றிலெல்லாம் கருவறைக்கு மேலேயுள்ள விமானம் உயரமாக உள்ளது ஆனால் மதுரை போன்ற கோவில்களில் நுழைவாயிலுக்கு மேலேயுள்ள கோபுரம் உயரமாக உள்ளது-விமானம் உயரம் குறைவாக உள்ளதே - இந்த மாற்றம் எப்போது ஏற்பட்டது ?”

எனக்குக் கிடைத்த விளக்கம் –

“ மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை விமானம் உயரமாக கட்டும் முறை இருந்தது –பின்னர் வந்த நாட்களில் , சுற்றுசுவரில் உள்ள நுழைவாயிலின்  மேலே கோபுரம் உயரமாகக் கட்டும் முறை வந்தது.”

ஆக, நான் புரிந்து கொண்டது , -விமானம் உயரமாக இருந்தால் அந்தக் கோவில் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Mar 22, 2015, 1:55:46 AM3/22/15
to mint...@googlegroups.com
தேமொழியாரின் தேடல் தெளிவு தருவதாக உள்ளது; நன்றி

குமரி கொடி மதில் கோபுர மூதூர் - சிந்தா:1 336/2”

முதலில் அரண்மனை நுழைவாயிலில் ‘கோபுரம்’ அமைந்திருக்க
வேண்டும்; பின்னர் ஆலய நுழைவாயில்களிலும்  பெரிய 
கோபுரம் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்

தேவ்

Singanenjam Sambandam

unread,
Mar 22, 2015, 4:26:22 AM3/22/15
to mint...@googlegroups.com
அப்பப்பா....அருமை ,அருமை தேமொழி, 
பல நூல்களைத் தேடி - பலமணி நேரம் படித்து அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களை அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். பயன் அடைந்தேன்,  மிக்க நன்றி. 
###எனவே சமய இலக்கியங்கள் தோன்றிய காலங்களுக்கும் கோபுரம் என்ற சொல்லுக்கும் தொடர்பு தெரிகிறது.###
  சமய இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் பெரும் சமுதாய -அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்றே  தோன்றுகிறது. 
தேவ் அய்யாவிற்கும் நன்றி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba.T.

unread,
Mar 22, 2015, 6:30:03 AM3/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
நல்லதொரு தேடல் தேமொழி.
இழை சிறப்பாகப் ப்யனிக்க இது உதவும்.

சுபா
Reply all
Reply to author
Forward
0 new messages