கோவலன் - மாதவி உறவு

1,559 views
Skip to first unread message

வைரம்

unread,
Sep 16, 2008, 6:45:45 AM9/16/08
to மின்தமிழ்
Probably the most popular belief might be that Kovalan went behind
Madahavi and spent all money for her and when Kovalan burnt all the
money he had , Madhavi broke up with him. But that’s not how things
happen in Illango’s master epic. Kovalan goes behind Madhavi and
spends all his wealth for her and expect sexual union and physical
pleasure from her when ever he visits her. Madhavi wants a emotional
bondage and just not physical pleasure from Kovalan. Kovalan gets
frustrated with Madhavi after some time because Madhavi expects love
but all Kovalan wanted was making love. Kovalan breaks off from
Madhavi after a period of time when Madhavi doesn’t give herself in
for a sexual union whenever he expected.

In Canto 7 Kaanalvari of Puhar Kandam, Illango brings the tension
between Madhavi and Kovalan. Madhavi and Kovalan sit in the shores of
the beach and sing songs. Kovalan to press his sexual urge, sings
lusty sailor songs which are vulgar, whereas Madhavi sings songs of
hapless girls who long for love.

I have selected two songs from this chapter to highlight this tension.
One poem sung by Kovalan and other by Madhavi.
http://karkanirka.wordpress.com/2008/09/16/kovalan_madhavi/

Vairam

venkatram dhivakar

unread,
Sep 16, 2008, 7:28:01 AM9/16/08
to minT...@googlegroups.com
In Canto 7  Kaanalvari of Puhar Kandam, Illango brings the tension
between Madhavi and Kovalan. Madhavi and Kovalan sit in the shores of
the beach and sing songs. Kovalan to press his sexual urge, sings
lusty sailor songs which are vulgar, whereas Madhavi sings songs of
hapless girls who long for love.
 
 
வைரம்,
தமிழ் உரை நூல்கள் இந்தக் கருத்தைப் பற்றி பல்வேறு வகைகளில் கருத்து சொல்கிறது. இருவருக்கும் இடையே பாடப்பட்ட பாடல்களின் பொருளினால் எழுந்த மனவருத்தம்தான் இவர்கள் பிரிவுக்குக் காரணம் என்றாலும் மாதவியின் காதல் தன் மீது அல்ல என்று பொருள் கொள்கிறான் கோவலன். இந்தப் பாடல்கள் அனைத்தும் இனிமையான பாடல்கள். நான் என்னிடமுள்ள உரைப் புத்தகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு பதில் எழுதுகிறேன்.
 
நம் பேராசிரியர் இளங்கோவன் என்ன சொல்லப் போகிறாரோ, அறிய ஆவல்.
 
திவாகர்

 

வைரம்

unread,
Sep 16, 2008, 8:38:28 AM9/16/08
to மின்தமிழ்
இந்த கட்டுரையை நான் எந்த உறையும் பார்க்காமல் நானே எழுதியது , அதனால்
நான் தந்துள்ள விளக்கம் முற்றிலும் சரியா என்று எனக்கு தற்பொழுது
தெரியாது .... இங்கே உள்ள பெரியவர்கள் உங்கள் கருத்துக்களை கூறி என்ன
திருத்தும் செய்யவேண்டும் என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்...
நன்றி
வைரம்

On Sep 16, 6:28 am, "venkatram dhivakar" <venkdhiva...@gmail.com>
wrote:

வேந்தன் அரசு

unread,
Sep 16, 2008, 12:01:52 PM9/16/08
to minT...@googlegroups.com
"

காதலர் ஆகி, கழிக் கானல், கையுறை கொண்டு,

                        எம் பின் வந்தார்

ஏதிலர்-தாம் ஆகி, யாம் இரப்ப, நிற்பதை யாங்கு

                        அறிகோம், ஐய?

 
கோவலன் கையுறை கொண்டு வருகிறான்
 
ஆனால் இவளோ காதலுக்காக ஏங்குகிறாள்.
 
சரிதான்
 
அல்லது
 
அன்று கையுறை கொண்டு வந்து காதலர் ஆனவர் இன்று ஏதிலர் ஆகி விட்டாரே என்றும் கொள்ளலாம்


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Elangovan N

unread,
Sep 16, 2008, 1:47:45 PM9/16/08
to minT...@googlegroups.com
On Tue, Sep 16, 2008 at 4:15 PM, வைரம் <vai...@gmail.com> wrote:

Probably the most popular belief might be that Kovalan went behind
Madahavi and spent all money for her and when Kovalan burnt all the
money he had , Madhavi broke up with him. But that's not how things
happen in Illango's master epic. Kovalan goes behind Madhavi and
spends all his wealth for her and expect sexual union and physical
pleasure from her when ever he visits her. Madhavi wants a emotional
bondage and just not physical pleasure from Kovalan. Kovalan gets
frustrated with Madhavi after some time because Madhavi expects love
but all Kovalan wanted was making love. Kovalan breaks off from
Madhavi after a period of time when Madhavi doesn't give herself in
for a sexual union whenever he expected.

In Canto 7  Kaanalvari of Puhar Kandam, Illango brings the tension
between Madhavi and Kovalan. Madhavi and Kovalan sit in the shores of
the beach and sing songs. Kovalan to press his sexual urge, sings
lusty sailor songs which are vulgar, whereas Madhavi sings songs of
hapless girls who long for love.

 அன்பின் நண்பர் வைரம்,

கானல்வரிப் பாடல்கள் மிகவும் சுகமான காதல் சுவைகளைக்
காட்டுகின்ற பாடல்கள். 

மாதவி கோவலன் பிரிவு என்பதை
எத்தனையோ விதத்தில் சிந்தித்துப் பார்க்க இருக்கின்றது.

இலக்கியத்தில் காணக் கிடைக்கின்ற செய்திகளை (ஒருவர் மாற்றி
ஒருவர் பாடிய பாடல்கள்) (மிகப்) பல கோணங்களில் பார்க்க இருக்கிறது.
ஆகவே தங்களின் பார்வை ஒரு கோணம் என்றளவில் எடுத்துக்
கொள்ளமுடிகிறது.

ஆயினும், கோவலன் செல்வத்தை எல்லாம் இழந்தான் என்று
பொதுவாக நம்பப் படுகிற கூற்று மீள்பார்வைக்கு உட்பட நிறையவே
இருக்கிறதாகவே நான் கருத்துகிறேன். 


கானல்வரியையும்

, கோவலன் மதுரை செல்லும்வழியில்
மாதவியின் இரண்டாம் மடல் கண்டு மனதில் கொண்ட மாற்றமும்,
பிற்காலங்களில் மாதவி மற்றும் மணிமேகலை பற்றிய செய்திகளும்,

ஒன்றாய்ப் பார்க்கப் படவேண்டியவை. 

அப்படிப் பார்க்கும் போதெல்லாம், அது கோவலனின் செகை மூட்டமாகத்
(செகை = sex நன்றி: இராம.கி ஐயா) (செகை மூட்டம் = sexual urge)
தெரியவில்லை. உண்மையில் சொல்லப் போனால் இருவருக்கும்
இடையேயான மிகுந்த காதலில் விழைந்த சிறு ஊடல் அல்லது முறுக்கு
என்று மட்டுமே சொல்ல முடிகிறது. இருவருக்கும் இடையே இருந்த
அதிகப் படியான பிரியத்திலும் அதனால் ஏற்பட்ட மிகையான பற்றினாலும்
(possesiveness) விளைந்த பிணைக்கு என்றே கருத முடிகிறது.
இருவரின் நல்ல இதயங்களையும் ஒட்டு மொத்தமாகக் காணும்போது
கோவலன் இறக்காமல் இருந்திருந்தால் மீண்டும் இணைந்து வாழ்ந்தே
இருந்திருப்பார்கள் என்று கருதவே இடம் நிறைய இருக்கிறதாக
நான் கருதுகிறேன்.

இன்னொரு முக்கியமான கோணத்தை நான் எழுதவேண்டும் என்று
எண்ணியது உண்டு. இன்னும் வாய்க்கவில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கோவல மாதவி பிரிவின் போது
மாதவி நிறைமாதத் தாய்மை நிலையில் இருந்தாள்.
முதல் பிள்ளையை வயிற்றில் சுமக்கும் பெண்ணின் 
நிறைமாத அல்லல்களும் அக்கால கட்டத்தில் அவளின்
மனநிலையும் ஊன்றிப் பார்க்கத் தக்கவை. அதனோடு ஒத்து
இந்தச் சூழலை எழுதவேண்டும் என்ற எண்ணம் நெடுநாள்களாக
இருந்ததுண்டு.

"...எட்டுத் திங்களில் கட்டம் பிழைத்தும்
 ஒன்பதில் வருதரு துன்பம் பிழைத்தும்,
 தக்க தசமதி தாயொடு தான் படும்
 துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்...'
என்ற மாணிக்கவாசகரின் போற்றித் திருவகவல் வரிகள்
கூர்ந்து கவனிக்கப் படவேண்டியவை.

மாதவி நிறைமாதச் சூல் கொண்டு இருந்ததால்
அவளிடம் இன்பம் அதிகம் பெற ஏலவில்லை என்று கோவலன்
ஓடிப் போய்விட்டான் என்ற சிறுமையான கருத்தைக்
கொண்டு விடக் கூடாது. அது சரியும் அல்ல. 

ஏனென்று சொன்னால், முதலில் ஐயுற்றது மாதவியே.
அவளின் மனஓட்டமும் அவள் சூல் தாங்கியிருந்த
உடல்நலமும் ஆழ்ந்து பார்க்க வேண்டியவை என்பது
என் கருத்து. வாய்ப்பிருப்பின் விரிவாக எழுதவே ஆசை.

ஆகவே, உறுதியாக "கோவலப் பிரிவு செகை மூட்டத்தால் அல்ல,
காதல் குறைவால் அல்ல, கோவலன் செல்வம் இழந்ததால் அல்ல
என்று உறுதியாக நம்ப நிறைய இருக்கிறது. அது மட்டுமல்ல
வரிப்பாடல்கள் செகைப் பாடல்களோ, மலிவான செகை ஆட்டப்பாடல்களோ
அல்ல". 

ஆழப் பார்த்தால் அப்பாடல்களில் இருந்து எண்ணற்ற கவிதைகள்
அல்லது கதைகளுக்கு மூலம் கிடைக்கும். 

சில்க் சுமிதாவின் செகை ஆட்டம் என்பது வேறு. அவரின் கண்களின்
வீச்சழகு என்பது வேறு. நாம் கண்டிருக்கிற 
திரைப் பட நடிகைகளில் வெகு சிலரின் கண்கள் மட்டும் அதிகம்
விரும்பப் பட்டிருக்கும். சில்க் சுமிதா, சிறீவித்யா, பானுமதி என்று
சொல்லிக் கொண்டு போக இருக்கவே இருக்கிறார்கள் :-)
குறிப்பாக சுமிதாவின் கண் வீச்சை மட்டுமே வைத்து
நிறைய கவிதையாக வடித்துவிட முடியும் என்று நான் நினைத்ததுண்டு :)

ஆனால் கானல்வரியில் வரும் ஒரு பாட்டுக்கு சுமிதாவின் கண்கள்
சிறிதளவு பொருந்தினாலும், மும்தாச்சின் கண்கள் சிறிது பொருந்தினாலும், முழுவதும் பொருந்தும் அந்தப் பெண்ணை, மன்னிக்கவும்
அந்தப் பெண்ணின் கண்களைத் தேடிக் கொண்டே இருக்கிறேன் :-))
அந்தப் பாட்டை நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்.

ஆகவே, நண்பரே vulgar என்ற தன்மை கொண்ட பாடல் சிலம்பில் இல்லை.
இதைப் படித்த போது எனக்கு ஒரு நினைவு வந்தது.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள்,  "தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்....." என்று தொடங்கும் பாடலை (மனையறம் படுத்த காதை என்று நினைக்கிறேன்) இளங்கோவடிகள் எழுதிய வெண்பா அல்ல என்று வாதிட்டு, பின்னர் இளங்கோவடிகள் வெண்பாவே எழுதவில்லை என்றும் வாதிடுவார்.

காரணங்களில் ஒன்றாக "பிணையல் பாம்புகளைப் போல கலவி
இன்பம் துய்த்தனர் கோவலனும் கண்ணகியும்" என்று இளங்கோவடிகள்
சொல்கிறார் - அப்படிச் சொல்வது செகை மூட்டம் காட்டுவதாக
இருக்கிறது - இளங்கோவடிகள் என்ற துறவி இப்படியெல்லாம் எழுதுவாரா
என்பது போன்றது அவரது கூற்று. எனக்கு அதில் துளியும் உடன்பாடு
கிடையாது. காதல், காமம், செகை என்பனவற்றுக்கு ஒவ்வொருவரும்
வைத்துக் கொள்ளும் அளவுகோல் வேறுபடும். ம.பொ.சி அவர்களின்
அளவு கோல் (இந்த விதயங்களில்) மிகச் சிறியது அல்லது 
குறுகியது என்பது என் கருத்து.

செகை, காமம், காதல் என்ற மூன்றனின் பரப்புகளும் மிக அதிகமானவை.
இலக்கியத்திலும் சரி - நடப்பு வாழ்விலும் சரி. சிலம்பின் பாடல்கள்
குறிப்பாக கானல் வரிப்பாடல்கள் மிக மென்மையான இதமான சுகமான
பாடல்கள். சுவைக்கக் கிடக்கிற பாடல்கள். தரம் குறைந்த தடுமாற்றுப் பாடல்கள் இல்லை அவை.

இச்சூழலை ஒரு கோணத்தில் நான் எழுதிய பழைய மடலை
வரியில் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுதியது சிலதே; ஆனால் 
எழுத அதில் ஆயிரம் இருக்கிறது என்று நம்புகிறேன்.

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்



 


 

Narayanan Kannan

unread,
Sep 16, 2008, 6:23:03 PM9/16/08
to minT...@googlegroups.com
2008/9/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>
> கோவலன் கையுறை கொண்டு வருகிறான்
>

கையுறை = (Condomn?)

>
> அன்று கையுறை கொண்டு வந்து காதலர் ஆனவர் இன்று ஏதிலர் ஆகி விட்டாரே என்றும்
> கொள்ளலாம்
>

ஏதிலர் = enemy? (not a friend?)

மாதவி கணிகை, பொதுமகள். பொதுமகளிடம் செல்வமுள்ள ஆண்மகன் போவது நமது
"ஹரிதாஸ்" காலம்வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தமிழர் வழக்கமாக
இருந்திருக்கிறது. ஆனால் ஒரு பொதுமகளிடம் "காதல்" கொள்வது என்பது மிக,
மிக அரிதான செயலே! உண்மையில் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு செயல்.
ஒரு பொதுமகளிடம் கோவலன் காதல் கொள்கிறான் என்பதிலிருந்தே அவர்களது உறவின்
சிறப்புப் புரிகிறது.

பொதுவாக விலைமகளிர் சூல் கொள்வதில்லை. அதைத்தவிர்க்கும் வித்தை
இந்தியாவில் அவர்கள் ஒருவருக்கே தெரியும்! (நமது மருத்துவர்கள்
அவர்களிடமிருந்து இந்த வித்தையைக் கற்றிருந்தால் இந்தியாவின் ஜனத்தொகைப்
பெருக்கத்தை என்றோ கட்டுப்படுத்தியிருக்கலாம்). ஆயினும் மாதவி
கருவுருகிறாள்! அப்படியெனில் அவள் கோவலனைக் கணவனாக ஏற்றுக்கொண்டுவிட்டாள்
என்று பொருள்.

மிகச் சிக்கலான ஒரு உறவு முக்கோணக்கதையை ஆயிரத்துச் சொச்சம் ஆண்டுகளுக்கு
முன்பு ஒரு துறவி (பாம்பு கூடுதல் உவமை!) எழுதியிருக்கிறார் என்றால் அது
அதிசயமே! ஏனெனில் இக்கருதுகோள் 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று
பெண்ணியல்வாதிகள் சொல்லலாம்!

க.>

Narayanan Kannan

unread,
Sep 16, 2008, 7:21:04 PM9/16/08
to minT...@googlegroups.com
On Tue, Sep 16, 2008 at 7:45 PM, வைரம் <vai...@gmail.com> wrote:
>
> Probably the most popular belief might be that Kovalan went behind
> Madahavi and spent all money for her and when Kovalan burnt all the
> money he had , Madhavi broke up with him. But that's not how things
> happen in Illango's master epic. Kovalan goes behind Madhavi and
> spends all his wealth for her and expect sexual union and physical
> pleasure from her when ever he visits her. Madhavi wants a emotional
> bondage and just not physical pleasure from Kovalan. Kovalan gets
> frustrated with Madhavi after some time because Madhavi expects love
> but all Kovalan wanted was making love. Kovalan breaks off from
> Madhavi after a period of time when Madhavi doesn't give herself in
> for a sexual union whenever he expected.


இச்சிந்தனை உ.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா கதையில் வருவது போலுள்ளது.
அக்கதையில் கொஞ்சம் கூட செகையூட்டம் (sexual drive) அற்ற தாரத்தை விட்டு
சேரியில் இருக்கும் செகைச்சுவைக் கிழத்தியைக் கூடுவான் கதாநாயகன்.
இச்செயலை அனுமதிக்காத சமூகம் அவனை சாதி விட்டுப் புறம் தள்ளும்! அவன்
செத்த பின் அவனுக்கு எம்முறையில் ஈமச்சடங்குகள் பண்ணுவது என்பதில் பெரிய
குழப்பம் வரும். மிக சுவாரசியமான புதினம். சாகித்ய அகாதமி விருது பெற்ற
கதை!

இந்தியாவில்தான் முதன்முறையாகக் செகைக்கல்வி (sexual education)
பாடத்திற்காக நூல் (காமசூத்ரா) உருவானது என்றாலும் அங்கு செகை என்பது
வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒன்றாக ஆகிப்போனது. இதனால் குடும்பப்பெண்கள்
இந்திரிய சுகம் அனுபவிக்கக் கூடாது என்றும், மகப்பேறு அளிக்கும் "தாய்"
எனும் அளவிலேயே பார்க்கப்பட வேண்டுமென்று ஆகிப்போனது. இதனால்
காமக்கிழத்தியராக பொதுமாதர் உருவாயினர். அவர்களுக்கு ஆயகலைகள் 64ம்
பாடாந்தரம்!

ஆனால் இது சங்ககாலத்திற்கும் பொருந்துமா? கண்ணகிக்கு செகையூட்டம் இல்லை
என்பதற்கு ஆதாரம் ஏதாவது உளதா?

க.>

வைரம்

unread,
Sep 16, 2008, 8:25:47 PM9/16/08
to மின்தமிழ்
Kamil Zvelebil அவர்கள் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார் அவர்
புத்தகத்தில் , கண்ணகி ஒரு 12 வயது பெண் , அவள் மிகவும் சிறிய பெண்
அவளுக்கு கட்டில் சாஸ்திரங்கள் அறியாதவள் , ஆனால் மாதவி யோ சிறு
வயதில் இருந்து பிறரை மகிழ்ச்சி செய்யும் வித்தைகளை
கற்றுக்ண்டுஇருந்தவள் .....
கோவலனும் முதலில் மாதவியை செகையூட்டம் காரணமாக சந்திப்பதில்லை ....
அவனும் ஒரு சிறுவன் , பதினாறு வயது தான் அவனுக்கு ... மாலையை ஏலத்தில்
அதிகாக பெரிசு கொடுத்து வாங்குகிறார்களோ அவர்களுக்கு மாதவி என்று கூறிய
பொழுது தன் பண பலத்தை காமிப்பதற்கு செய்த செயல் அவனை மாதவியிடம் அழைத்து
சென்றது .....
கோவலன் மாதவி யின் கலைகளில் மயங்கி அவள் கூடவே இருந்துவிடுகிறான் ...
என்று அவன் மோகம் தனிகிறதோ அன்று தான் அவனுக்கு கண்ணகி பற்றியே யோசனை
வருகிறது .... அதனால் அவன் கண்ணகி இடம் சென்று விடுகின்றன் ....
இவ்வாறு .... அக்காலத்தில் பணம்மும் பலமும் உள்ளவர்கள் இதை போல் நாட்டிய
பெண்களை நாடுவது தவறு அன்று ..... இவ் நாடிய பெண்களுக்கு தனி தெரு
இருந்தது , அவர்கள் மிக்க செல்வாக்கு உடையவர்கள் இதை நாம் சிலப்பதிகாரம்
இருந்தே தெரிந்து கொள்ளலாம் ....
அதே போல் நாட்டிய பெண்டிர் வழியில் வந்த மாதவி மனம் ஆன ஒருவனுடன்
இருப்பதும் அவனுக்கு அனைத்து சுகம் தருவதும் தவறு அன்று ...
கண்ணகி எந்த தவறும் செய்ய வில்லை என்று எல்லோருக்கும் தெரியும்...
இது போல் பெரிய தவறு செய்யாத மூன்று பேர் உள்வினை காரணமாக எப்படி பாடு
பட்டார்கள் என்பதை சமணம் வழி எடுத்து கூறும் கதை சிலப்பதிகாரம் என்று
கூறி உள்ளார்

>ஆனால் இது சங்ககாலத்திற்கும் பொருந்துமா?
மணிமேகலை படிக்கும் பொழுது... மணிமேகலைக்கு ஒரு பாட்டி உண்டு .... அவள்
எப்படி யாவது மணிமேகலை சோழ இளவரசன் உடன் சேர்த்து விட வேண்டும் என்று மிக
கடினமாக பிளான் போடுவார்.....
மணிமேகலை பாட்டி , மாதவி , மணிமேகலை .... சோ இது வம்சவரியாக செய்ய பட்ட
தொழில் .... அதனால் நாட்டிய பெண்களும் குழந்தைகள் பெற்று கொண்டார்கள் ...
மணிமேகலையில் பல இடங்களில் இது ஒரு வம்சா வரியான தொழில் என்று கூறப்பட்டு
உள்ளது


என் 23 வயது மூளைக்கு எட்டிய கருத்துக்களை கொண்டு எழுதப்பட்டது என்
blog .... ஆனால் இந்த சூழலை பலவிதமாக விளக்கலாம் என்று இங்கு உள்ளோர்
உணர்த்தியதற்கு மிக்க நன்றி

வைரம்

Narayanan Kannan

unread,
Sep 16, 2008, 8:50:21 PM9/16/08
to minT...@googlegroups.com
2008/9/17 வைரம் <vai...@gmail.com>:

> Kamil Zvelebil அவர்கள் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார் அவர்
> புத்தகத்தில் , கண்ணகி ஒரு 12 வயது பெண் , அவள் மிகவும் சிறிய பெண்
> அவளுக்கு கட்டில் சாஸ்திரங்கள் அறியாதவள் , ஆனால் மாதவி யோ சிறு
> வயதில் இருந்து பிறரை மகிழ்ச்சி செய்யும் வித்தைகளை
> கற்றுக்ண்டுஇருந்தவள் .....

சுவாரசியமாக உள்ளது!

கண்ணகிக்கு 12 வயது? சரி, மாதவிக்கு வயது என்ன?

"சிறு வயதில் இருந்து பிறரை மகிழ்ச்சி செய்யும் வித்தைகளை கற்றுக்ண்டுஇருந்தவள்>

எனில் எந்த வயதிலிருந்து காமக்கலை கற்க ஆரம்பிக்கின்றனர்?

க.>

வேந்தன் அரசு

unread,
Sep 16, 2008, 11:22:52 PM9/16/08
to minT...@googlegroups.com


2008/9/16 Narayanan Kannan <nka...@gmail.com>

2008/9/17 வைரம் <vai...@gmail.com>:
> Kamil Zvelebil அவர்கள் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார் அவர்
> புத்தகத்தில் , கண்ணகி ஒரு 12 வயது பெண் , அவள் மிகவும் சிறிய பெண்
> அவளுக்கு கட்டில் சாஸ்திரங்கள் அறியாதவள் , ஆனால் மாதவி யோ  சிறு
> வயதில்  இருந்து பிறரை மகிழ்ச்சி செய்யும் வித்தைகளை
> கற்றுக்ண்டுஇருந்தவள் .....

சுவாரசியமாக உள்ளது!

கண்ணகிக்கு 12 வயது? சரி, மாதவிக்கு வயது என்ன?
 
கண்ணகிக்கு மணம் ஆகும்போது வயது 12 . ஆனால் பல ஆண்டுகள் கோவலனுடன் வாழ்ந்து பின்னர்தான் அவன் மாதவியை சந்திக்கிறான்

venkatram dhivakar

unread,
Sep 17, 2008, 12:39:23 AM9/17/08
to minT...@googlegroups.com


On உண்மையில் சொல்லப் போனால் இருவருக்கும்
இடையேயான மிகுந்த காதலில் விழைந்த சிறு ஊடல் அல்லது முறுக்கு
என்று மட்டுமே சொல்ல முடிகிறது. இருவருக்கும் இடையே இருந்த
அதிகப் படியான பிரியத்திலும் அதனால் ஏற்பட்ட மிகையான பற்றினாலும்
(possesiveness) விளைந்த பிணைக்கு என்றே கருத முடிகிறது.
இருவரின் நல்ல இதயங்களையும் ஒட்டு மொத்தமாகக் காணும்போது
கோவலன் இறக்காமல் இருந்திருந்தால் மீண்டும் இணைந்து வாழ்ந்தே
இருந்திருப்பார்கள் என்று கருதவே இடம் நிறைய இருக்கிறதாக
-----------------------------------------
 
பேராசிரியர் இளங்கோவனின் இந்தக் கருத்து மிக முக்கியமான ஒன்று. அருமையான சிந்தனை. இளங்கோ அடிகள் பொதுவாகவே மாதவியையும் கோவலனின் குணநலன்களையும் ஒவ்வொரு நிலையிலும் நிறையாகவே எழுதியிருப்பார். ஊடல் இங்கு சற்று அளவு மீறிப் போய்விட்டது என்றே பொருள் கொள்ளவேண்டும்.
 
திவாகர்
Reply all
Reply to author
Forward
0 new messages