பகிர்வுகள்

20 views
Skip to first unread message

C.M உதயன்

unread,
Dec 1, 2011, 3:19:26 AM12/1/11
to

388437_10150383157187473_141482842472_8674460_300914621_n.jpg

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..
நன்றி - தமிழ்க்குடில்
தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் . 
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

rajam

unread,
Dec 1, 2011, 1:11:58 PM12/1/11
to mint...@googlegroups.com, "C.M உதயன்"
ஹ்ம்ம்ம்... நேத்து ராத்திரி ரொம்ப நேரம் தூக்கம் வராம ஒரு வழியா ஒரு மாத்திரை சாப்பிட்டுக் கொஞ்சம் தூங்கி வழிஞ்சு இப்பதான் எழுந்துவந்தேன். நம்ம மதுரை காமராமேன் இப்படி ஒரு படத்தப் போட்டுச் சோதிக்கிறாரே! அவருக்குக் கல்யாணம் ஆகியிருந்தாலும் மருமகப் பொண்ணுகிட்ட நல்லா நைஸ் பண்ணிக் கொஞ்சம் சாப்பாடு கேக்கலாம். அதுக்கும் வழியில்லெ ... ஹ்ம்ம்ம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

C.M உதயன்

unread,
Dec 1, 2011, 8:39:56 PM12/1/11
to C.M உதயன்

379479_10150384888422473_141482842472_8680317_192909830_n.jpg
தமிழர் பாரம்பரிய உடை
உலகத்தமிழர் பேரமைப்பின் தமிழர் தேசிய உடைக்கான பரிந்துரை
ஆண்களுக்கு:
ஒரு 1 செ.மீ அகலலமுள்ள கரையுடன் கூடிய வெள்ளைநிற வேட்டியும், சந்தன நிறத்தில் சிறிய கழுத்துப்பட்டியோடு கூடிய திறந்த ழுக்கைச் சட்டை மற்றும் விசிறி மடிப்பு அல்லது நெடுங்கரையுடன் கூடிய துண்டு (1 செ.மீ. அகலமுள்ள இருகோடுகள் இருக்கலாம்)

பெண்களுக்கு:
7 செ.மீக்கு மேற்படாத அகலமுள்ள அரக்குக் கரைபோட்ட சந்தன நிறச் சேலையும் மற்றும் அரக்குநிற இரவிக்கையும்.

தமிழர் உடை வரலாறு:

"பண்டைய கோவில் சிற்பங்கள் ஓவியங்கள் வெறும் கற்பனையல்ல. அவை மேலாடை அணியும் நாகரிகம் வந்த பின்னரே முன்னைய நிலை இன்று ஆபாசமாகத் தோன்றுகின்றது. உயர்குடிப் பெண்கள் கச்சைக்கு மேலாகச் சட்டை அணிவதும் சில நூற்றண்டுகளின் முன் தோன்றிய வழக்கமே. மற்றைய பெண்களில் ஒரு பகுதியினர் மேல் சட்டையின்றி தாவணிச் சேலையால் மார்பை மறைப்பதும், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மார்பை மூடத்தக்கதாக நெஞ்சோடு மட்டும் சேலை கட்டுவதும் வழக்கமாக தொடர்ந்தது. இப்போக்கை இன்றும் கிராமங்களில் காணலாம்."

"இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது. நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர். சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சைக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர். விலை மலிவானது; ஏற்றத்தாழ்வு காட்டாதது; விரைவாக நடக்க உதவுவது; இளமையாகக் காட்டுவது. இடையைக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டுச் சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது."

"ஆண்கள் அணியும் சட்டையும் அரைக்கால் அல்லது முழுக்கால் சட்டையும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களால் அறியப்படாதவையாகும். ஆங்கிலேயரும் நவாவுப் படையினர் எனப்படும் வடநாட்டு முசுலிம்களும் வந்த பின்னரே உடம்பின் மேற்பகுதியில் 'தைத்த சட்டை' அணியும் வழக்கம் புகுந்தது.

சுட்டது :http://www.facebook.com/photo.php?fbid=10150383157187473&set=a.10150383156862473.358450.141482842472&type=3&theater#!/photo.php?fbid=10150384888422473&set=a.10150383156862473.358450.141482842472&type=3&permPage=1

Hari Krishnan

unread,
Dec 1, 2011, 10:05:06 PM12/1/11
to mint...@googlegroups.com

2011/12/2 C.M உதயன் <udhay...@gmail.com>

"ஆண்கள் அணியும் சட்டையும் அரைக்கால் அல்லது முழுக்கால் சட்டையும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களால் அறியப்படாதவையாகும். ஆங்கிலேயரும் நவாவுப் படையினர் எனப்படும் வடநாட்டு முசுலிம்களும் வந்த பின்னரே உடம்பின் மேற்பகுதியில் 'தைத்த சட்டை' அணியும் வழக்கம் புகுந்தது.

விலங்குநடைச் செலவின் மெய்ப்பை புக்கு.... சிலப்பதிகாரம்.

பொற்கொல்லன் சட்டை போட்டுக்கொண்டிருந்தான் என்கிறது சிலம்பு.  சட்டை ஒரு ஸ்டேடஸ் சிம்பல். புறநானூற்றில் பக்குடுக்கை நன்கணியனார் என்றொரு புலவர் இருந்திருக்கிறார்.  பக்கு உடுக்கை.  தொளதொள உடை.  ஜிப்பா.

சிலப்பதிகாரமும் புறநானூறும் வடநாட்டு முசுலீம்களும் நவாவுப் படையிரும் வந்த பிறகே இயற்றப்பட்டனவோ?  :D

--
அன்புடன்,
ஹரிகி.

Raja sankar

unread,
Dec 1, 2011, 10:12:48 PM12/1/11
to mint...@googlegroups.com

ஏன் ஆங்கிலேயர் வரும் வரை நம்நாட்டில் கல்வியே கிடையாது அவர்கள் வந்துதான் பள்ளிக்கூடம் ஆரம்பித்தார்கள். அதுவரையிலும் நாம் இலை தலை கட்டிக்கொண்டு திரிந்தோம் என்பார்கள்

@ஹரிகி,
உங்கள் பதிலை உங்களைக்கேக்காமலே அந்த பேஸ்புக் சுட்டியிலும் இட்டுவிட்டேன். :-)

உங்களைப்போல் ஒரு நாலு பேர் இருப்பதால் தான் இதெல்லாம் ஆதாரத்தோடு சொல்ல முடிகிறது. நன்றிகள் பல.

ராஜசங்கர்

2011/12/2 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 1, 2011, 10:37:49 PM12/1/11
to mint...@googlegroups.com

2011/12/2 Raja sankar <errajasa...@gmail.com>

@ஹரிகி,
உங்கள் பதிலை உங்களைக்கேக்காமலே அந்த பேஸ்புக் சுட்டியிலும் இட்டுவிட்டேன். :-)

உங்களைப்போல் ஒரு நாலு பேர் இருப்பதால் தான் இதெல்லாம் ஆதாரத்தோடு சொல்ல முடிகிறது. நன்றிகள் பல.

அடட டடடோவ்!

நீங்க வேற!  குகன் பெர்மூடாஸ் போட்னு இருந்த கதை தெரியுமா?   கம்பன் குகனை வர்ணிக்கிறான்: 

காழம் இட்ட குறங்கினன், கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான், அரை
தாழ விட்ட செந் தோலன், தயங்குறச்
சூழ விட்ட தொடு புலி வாலினான்.

கங்கையின் ஆழம் என்ன என்பதை (படகோட்டுதலாலும், நீச்சலாலும்) அறிந்திருந்தவனான குகன், காழம் இட்ட குறங்கினன்.  குறங்கு அப்படின்னா தொடை.  தொடை வரைக்கும் நீண்டிருக்கும் ஹாஃப் பேண்ட்ஸ்.(வர்ணனையால ஊகிக்கணும்).  இடுப்பில சிவப்புத் தோல். இடுப்பச் சுத்தி அந்த பெர்மூடாஸையும் இந்தத் தோலையும் கட்டிக்கொள்ள புலி வால் பெல்ட்!  (புலிவாலை அப்படியே நறுக்கிக் கொண்டால் கயிறு மாதிரியான பெல்ட்டாயிடும்.)

இஸ்லாமியரும் ஆங்கிலேயரும் வரும்வரை இந்தியர் எல்லோரும் முக்கா நிர்வாணமாத்தான் திரிஞ்சிட்டிருந்தாங்கன்னு சொல்றதுல ஒரு சந்தோசம்.  அத்தக் கெடுப்பானேன்! (பேலூர் ஹலேபீடில் இந்த பெர்மூடாஸ் அணிந்தவனுடைய சிற்பம் ஒன்று இருக்கிறது.  என் பழைய ஃபோட்டோக்களில் தேடிப் பார்க்கிறேன்.)

rajam

unread,
Dec 1, 2011, 10:55:15 PM12/1/11
to mint...@googlegroups.com
ஓஓஓஓ!!

திருமுருகாற்றுப்படையிலிருந்து மட்டும் சில வரிகள் ("உடுப்பு" பத்தி):
------------------------------------------------------------------------------

"சீரை தைஇய உடுக்கையர்" 
"புலராக் காழகம் புலர உடீஇ"
"செய்யன் சிவந்த ஆடையன்"
"கச்சினன்"
"மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்"
+++++++++++++++++++
சங்க இலக்கியம் முழுவதிலிருந்தும் எடுத்துச் சொல்ல ... கொள்ளை கொள்ளையா இருக்கு.
இந்த மாதிரியெல்லாம் என்னெ வேலெ வாங்கக்கூடாது, சரியா? :-) :-) :-)

C.M உதயன்

unread,
Dec 2, 2011, 12:00:24 AM12/2/11
to mint...@googlegroups.com
முகப்பக்கத்தில் வந்த ஒரு கட்டுரை இது அய்யா. 

2011/12/2 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

N. Kannan

unread,
Dec 2, 2011, 2:45:58 AM12/2/11
to mint...@googlegroups.com
இதிலே தலைப்பு மாறி இருக்கே! இப்படியா சேலை கட்டுவாக? ஏதோ வடநாட்டு ஸ்டைலா இருக்கே :-)) (ரொம்ப செவத்த பொம்பளையா வேற இருக்கு! கொஞ்சம் பர்மாக்காரி போலவும் இருக்கு)

2011/12/2 C.M உதயன் <udhay...@gmail.com>

379479_10150384888422473_141482842472_8680317_192909830_n.jpg

Nagarajan Vadivel

unread,
Dec 2, 2011, 4:16:12 AM12/2/11
to mint...@googlegroups.com
வயசான காலத்தில் உதயன் என்னை ரொம்ப சோதிச்சிட்டாரு.  இந்தப் படத்தில் தலைப்பைவிட மிகப்பெரிய குற்றச் சாட்டு அந்தப் பெண்ணிமன் நெற்றியில் குங்குமம் இல்லாதது. 
பின்னால் இருப்பவரை அவர் நெற்றியில் உள்ள விபூதிப்பட்டையில் இருந்து சைவர் ந்ன்று த்ஹெரிந்துகொள்ல முடிகிறது.  இந்தப் பெண்ணிம் உடை துளு பகுதியைச் சேர்ந்த பன்ட் பெண்ணாக இருக்கலாம் என்று நினைத்து பன்ட் பெண்களை இணையத்தில் தேடியபோது கிடைத்தபெண்

Aishwarya Rai was born in Mangalore in the state of Karnataka, India to Krishnaraj and Vrinda Rai. She is not a Bengali as many speculate, her mother tongue is Tulu and she is from the Bunt community. A practicing Hindu, Aishwarya Rai has described herself as having "immense faith in God and my friends"

She speaks a number of languages, including English, Hindi, Kannada, and a bit of Tamil.
பன்ட் மக்களின் ஆடை பழக்க வழக்கம் இந்தப் புகைப்படத்துடன் தொடர்புள்ளதாகத் தெரிகிறது
http://banafl.globat.com/archives/boston07/bunt_customs.htm
நாகராசன்

2011/12/2 N. Kannan <navan...@gmail.com>
இதிலே தலைப்பு மாறி இருக்கே! இப்படியா சேலை கட்டுவாக? ஏதோ வடநாட்டு ஸ்டைலா இருக்கே :-)) (ரொம்ப செவத்த பொம்பளையா வேற இருக்கு! கொஞ்சம் பர்மாக்காரி போலவும் இருக்கு)

2011/12/2 C.M உதயன் <udhay...@gmail.com>

379479_10150384888422473_141482842472_8680317_192909830_n.jpg

--

C.M உதயன்

unread,
Dec 2, 2011, 4:18:44 AM12/2/11
to mint...@googlegroups.com
அய்யா நான் சுட்டு தான் போட்டேன், நான் எழுதியது அல்லா
இங்கே நீங்கள் இடும் பதில்களை தொகுத்து சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு அனுப்ப திட்டம். 

2011/12/2 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

வயசான காலத்தில் உதயன் என்னை ரொம்ப சோதிச்சிட்டாரு.  இந்தப் படத்தில் தலைப்பைவிட மிகப்பெரிய குற்றச் சாட்டு அந்தப் பெண்ணிமன் நெற்றியில் குங்குமம் இல்லாதது. 
பின்னால் இருப்பவரை அவர் நெற்றியில் உள்ள விபூதிப்பட்டையில் இருந்து சைவர் ந்ன்று த்ஹெரிந்துகொள்ல முடிகிறது.  இந்தப் பெண்ணிம் உடை துளு பகுதியைச் சேர்ந்த பன்ட் பெண்ணாக இருக்கலாம் என்று நினைத்து பன்ட் பெண்களை இணையத்தில் தேடியபோது கிடைத்தபெண்

Aishwarya Rai was born in Mangalore in the state of Karnataka, India to Krishnaraj and Vrinda Rai. She is not a Bengali as many speculate, her mother tongue is Tulu and she is from the Bunt community. A practicing Hindu, Aishwarya Rai has described herself as having "immense faith in God and my friends"

She speaks a number of languages, including English, Hindi, Kannada, and a bit of Tamil.
பன்ட் மக்களின் ஆடை பழக்க வழக்கம் இந்தப் புகைப்படத்துடன் தொடர்புள்ளதாகத் தெரிகிறது
http://banafl.globat.com/archives/boston07/bunt_customs.htm
நாகராசன்

Innamburan Innamburan

unread,
Dec 2, 2011, 8:56:04 AM12/2/11
to mint...@googlegroups.com
சுட்டாலும், குற்றம் குற்றமே.
பட்டை வீபூதியின் மர்மம் என்ன?
சட்டை போட்டால் பிரச்னை யாது?
திட்டம் போட்டால், சொல்லிட்டுப் போடு.

2011/12/2 C.M உதயன் <udhay...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 2, 2011, 4:14:04 PM12/2/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/12/2 Hari Krishnan <hari.har...@gmail.com>

2011/12/2 Raja sankar <errajasa...@gmail.com>
@ஹரிகி,
உங்கள் பதிலை உங்களைக்கேக்காமலே அந்த பேஸ்புக் சுட்டியிலும் இட்டுவிட்டேன். :-)

உங்களைப்போல் ஒரு நாலு பேர் இருப்பதால் தான் இதெல்லாம் ஆதாரத்தோடு சொல்ல முடிகிறது. நன்றிகள் பல.

அடட டடடோவ்!

நீங்க வேற!  குகன் பெர்மூடாஸ் போட்னு இருந்த கதை தெரியுமா?   கம்பன் குகனை வர்ணிக்கிறான்: 

:-)

சுபா 

காழம் இட்ட குறங்கினன், கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான், அரை
தாழ விட்ட செந் தோலன், தயங்குறச்
சூழ விட்ட தொடு புலி வாலினான்.

கங்கையின் ஆழம் என்ன என்பதை (படகோட்டுதலாலும், நீச்சலாலும்) அறிந்திருந்தவனான குகன், காழம் இட்ட குறங்கினன்.  குறங்கு அப்படின்னா தொடை.  தொடை வரைக்கும் நீண்டிருக்கும் ஹாஃப் பேண்ட்ஸ்.(வர்ணனையால ஊகிக்கணும்).  இடுப்பில சிவப்புத் தோல். இடுப்பச் சுத்தி அந்த பெர்மூடாஸையும் இந்தத் தோலையும் கட்டிக்கொள்ள புலி வால் பெல்ட்!  (புலிவாலை அப்படியே நறுக்கிக் கொண்டால் கயிறு மாதிரியான பெல்ட்டாயிடும்.)

இஸ்லாமியரும் ஆங்கிலேயரும் வரும்வரை இந்தியர் எல்லோரும் முக்கா நிர்வாணமாத்தான் திரிஞ்சிட்டிருந்தாங்கன்னு சொல்றதுல ஒரு சந்தோசம்.  அத்தக் கெடுப்பானேன்! (பேலூர் ஹலேபீடில் இந்த பெர்மூடாஸ் அணிந்தவனுடைய சிற்பம் ஒன்று இருக்கிறது.  என் பழைய ஃபோட்டோக்களில் தேடிப் பார்க்கிறேன்.)

--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Subashini Tremmel

unread,
Dec 2, 2011, 4:17:39 PM12/2/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/12/2 C.M உதயன் <udhay...@gmail.com>

தமிழர் பாரம்பரிய உடை
உலகத்தமிழர் பேரமைப்பின் தமிழர் தேசிய உடைக்கான பரிந்துரை

தமிழர் தேசிய உடை.. எதற்கு ???  பள்ளிக்கூட யூனிபார்ம் போலவா?

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Dec 2, 2011, 4:24:42 PM12/2/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
வாழை இலையில் சுவைக்கும் உணவின் சுவையே தனிச்சிறப்பு தான். எங்கள் ஊரிலும் வாழை இலையில் மடித்து வைத்து சில பலகாரங்கள் மலாய்காரர்கள் செய்வார்கள். வாழை இலையின் மனம் கலந்திருக்கும் அந்த உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பார்த்தவர்களால் அவற்றை மறக்க முடியாது..

pulut-inti.jpg

SSWF-PulutInti2.jpg

பூலூட் இந்தி... ஒருவகை காலை அல்லது மாலை பலகாரம்..

கொஞ்சம் மீனா வந்தால் விளக்கமாகச் சொல்வார்.. என்கே மீனா ?

சுபா

2011/12/1 rajam <ra...@earthlink.net>
Reply all
Reply to author
Forward
0 new messages