”கயிலாயம் ஓர் அனுபவம் ‘ ’ # 7

85 views
Skip to first unread message

Krishnan S

unread,
Jun 15, 2012, 9:53:08 AM6/15/12
to mint...@googlegroups.com, tamil_ulagam

கயிலாயம் ஓர் அனுபவம் ‘’ 7


சூரபஸ்மனை  விஷ்ணு மோகினி ரூபத்தில் எரித்த இடம்.


    தார்சனீருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் தீர்த்தபதி இருகிறது. யாவரும் அறிந்த புராணக் கதைத்தான். 

சூரபஸ்மன் எனும் ஒருவன் பல காலம் சிவனை நோக்கித் தவமிருந்து ஒரு வரம் பெற்றான். தான் யார் தலையில்

கை வைத்தாலும் அவர்கள் பஸ்மமாகி விட வேண்டும் என்ற வரம் பெற்றான்.

       [ வரம் வாங்குவதிலும் ஒரு தெளிவு வேண்டும். தவறான வரம் வாங்கினால்,

         தன்னை தானே அழிந்தும்.  தன்  வினை தன்னையேச் சுடும் ]

 

      வரம் கொடுத்த சிவபெருமானிடமே தன் வரத்தை சோதிக்க எண்ணினான் சூரபஸ்மன். சிவன் விஷ்ணுவிடம்

உதவி நாட..விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சூரபஸ்மனை எரித்த இடம் இந்த தீர்த்தபதி..  கயிலாயத்தில் எல்லா

மலைத் தொடர்களையும் பார்த்தால் வெண்மையாக பனி படர்ந்து இருப்பதைக் காணலாம். ஆனால் சூரபஸ்மன் எரிந்த

இடத்திலுள்ள மலை சாம்பலாகவும், பல இடங்களில் மண் சிகப்பாகவும் இருக்கிறது.சிகப்பாக இருக்கும் மண் சூரஸ்மனின்

இரத்தமும், சதையும் என்கிறார்கள் அங்குள்ளவர்கள் கூறினார்கள்.


  மலைக்கு அருகிலேயே வெந்நீர் ஊற்றுகள் இருப்பது வியப்பான விஷயம்தான்.. பனி நிறைந்த, குளிர் மிகுந்த பிரதேசத்தில்

   வெந்நீர் ஊற்று. சற்று தள்ளி ஒரு சிறு குட்டை இருக்கிறது. குட்டையில் சேறும்,தண்ணீரும் கலந்து சாக்லெட் நிறத்தில்

இருக்கிறது.  குட்டை நடுவில் '' குபுக் குபுக் ’’ கொப்பளிக்கிறது.  இதனைக் குறித்து விளக்கம் கேட்ட போது அங்குள்ள

திபெத்தியர் பெரியவர் ஒருவர், எங்கள் வழிகாட்டியிடம் விளக்கினார்.  வழிகாட்டி ஆங்கிலத்தில் எங்களுக்கு விளக்கம்

கூறினார்.

    “” மலையிலிருக்கும் சாம்பல் சூரபஸ்மன் எரிந்தது எனவும், சில,பல இடங்களில் தெரியும் சிகப்பு அவனுடைய இரத்தம்

      எனவும், -- குட்டையில் குமிழியாக வெளிப்படுவது அவனது ஆவணம்’’ என்றார்.


   [ களைப்பாக இருக்கும் நமக்கு அந்த சுடு நீர் ஊற்று ஓடையில் காலை வைத்து களைபாறியது மிகவும் இதமாக இருக்கிறது ]

 =============================================================================================================================

   { TARCHEN } தர்சன் அல்லது தர்ச்சன்

 

     இது கயிலை மலையின் அடிவாரத்தில் அமைந்த இருக்கும் கிராமம். தர்சன் என்ற திபேத் சொல்லுக்கு “ பிராத்தனைக் கொடி” என்று

பெயர். முதன் முதலில் கயிலையின் தரிசனம் கிடைப்பது இங்குதான்.. முதன் முதலில் நமக்கு கயிலையின் தரிசனம் கிடைக்கும்

இடம் என்பதால் தரிசனம் என்று பெயர் வழங்கி இருக்கலாம். [ எதிலும், எங்கும் ஒற்றுமை காண்பதே நமது பண்பாடு அல்லவா ? ! )

மலை உச்சி சூட்சமமாக  மேலே உள்ள உலகங்களை வியாபித்து இருக்கிறது. சூட்சமமாக கீழே உள்ள உலகங்களையும் வியாபித்து

இருக்கிறது. என்று கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணம் கூறுகிறது.

     வேதப் பொருள்: இன்னதென்றும் வேதம் கடந்த

        மெய்ப் பொருளைக் கண்டு மனம் மேவிய விரும்பி

     போதப் பொருள் இன்னதென்று போதனை செய்யும் பூரண

        இடமாக நமக்கு புலனாகிறது.

 

     கயிலை பிரபஞ்சத்தின் நடுநாயமாக விளங்கிறது. அதன் தூல வடிவம்தான் கயிலாயம். கயிலைக்குப் பல்வேறு பெயர்கள்

உண்டு. ஸ்ரீ சைலம், ஸ்ரீ கிரி, ஸ்ரீ பர்வதம், நொடித்தான் மலை, வெள்ளியங்கிரி, கனகமால்வரை, ரஜித கிரி, வடமலை, திருமலை, என்பன.

மேலே விண்னை எட்டிப் பிடித்து நிற்கும் கயிலாய சிகரத்திற்கு விசுலிங்கம் என்று பெயர். கயிலாயத்தை வலம் வருவது என்பது இந்த

பிரபஞ்சம் முழுவதையும் வலம் வருவது போன்றது என்கிறார்கள். கயிலையை வலம் வந்தால் ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தும்

நீங்கிவிடும் என்று திபேத்திய பெளத்தவர்கள் கூறுகிறார்கள். காரண, காரியங்களுக்கு எட்டாத தெய்வீக நிலையை, வீடு பெறும் வகையை

மென்மேலும் நமக்கு நினைவுப்படுத்துகிறது கயிலாயம். அடுக்காக்காக ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டு அமர லோகத்தோடு உராய்கின்ற,

பொன்னில் ஒளி போல எங்கும் பூரணமதாய், இமய மலைக்கு அதிபதியாக இருப்பது கயிலைங்கிரி. இதன் அகலம் 200 மைல்.

 

   சங்க இலக்கியங்களில்,,காப்பியங்களில் இமயமலையும் அதன் பகுதிகளும் சொல்லப்பட்டு இருக்கிறது. திருமுறையில் கயிலை மிகச்

சிறந்த இடத்தினைப் பெற்று இருக்கிறது.  கயிலை, கேதாரம், அனேக தங்க பருவதம்,  இந்திர நீல பருவதம் ஆகிய பகுதிகளில் பாடல்

பெற்றுள்ளன. இந்த கயிலைத் தரிசித்து  வணங்கினாலும் அங்குள்ள இயல்பான வடித்தைக் கண்டு களித்த முனிவர்களும், ஞானிகளும்

அங்குள்ள அழகியக் காட்சிகளை மற்றவர்களும் உணரும் வண்ணம் விளக்கியுள்ளதைப் பல்வேறு புராணங்களில் அறியமுடிகிறது.  இந்த

வகையில் கயிலை மலையின் சிறப்பையும் அழகையும் சிவ மகா புராணங்களாலும், ஸ்காந்தம் முதலான பழம் பெரும் புராணங்களாலும்

  அறிந்துகொள்ள முடிகிறது.

 

    பூலோக கயிலாயம், பிரகிருதி கயிலாயம் என்று பலவாறு அழைப்படும், கயிலாச கிரி பர்வதம் திபெத் நாட்டின் மேற்குப் பகுதியில்

ஒரு தனித்த இடத்தில் மலைத் தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ளது.. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து

22,028 அடிகள். கயிலாயத்தின் சுற்றளவு சுமார் 55 கி,மீ. இங்கு மனிதனால் கட்டப்பட்ட கோயில் எதுவுமில்லை. கிரிவலம்

என்பதை இங்கு பரிக்கிரிமா என்பார்கள். சாதாரண நம்மை போன்றவர்கள் இந்த பரிக்கிரமா என்னும் கிரி வலம் வருவதற்கு மூன்று

பகல், இரண்டு இரவுகள் ஆகலாம்.

    [ இது நம் போன்றவர்களுக்கு . திபேத் துறவிகள், சன்னியானிகள் ஒரு பகல்  நேரத்தில் முடித்துவிடுவார்கள் ]

     கயிலாய கிரிவலம் கரடுமுரடான மலைப் பகுதிகளில் பயணம் செய்ய வேண்டும்.உடல் வலிமையும்,உள்ளத்தில்

     உறுதியும், திண்மையும், மன உறுதியும்,  உள்ளவர்களுக்கே இப்புனிதப் பயணம் எளிமையாக அமையும்.

 

TARBOCHI TI DIRAPHUK, ( 5000.M / 20 KMS)

  எங்களின் யாத்திரை தொடங்கும் முன் திபெத்தியர்கள் எப்படி தங்கள் வேண்டுதலைகளை அல்லது அவர்களின்

  பக்தியினை வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டேன்..


’’ ஊனுடைய வனப்பை எல்லாம் உதறி என்புடம் பேயாக’’ காரைக்கால் அம்மை கயிலை சென்றார்கள்.

“ உடல் பெரிதும் நலியுற்று, மார்பும் தசையும் நைந்து என்பு முறிந்திட புரண்டு புரண்டு சென்றார் ‘’ நாவுக்கரசு

  இவர்களும் அவர்களுக்கு ஒப்பானவர்கள்தான்.

 

   இவர்கள்.....,

    நின்று....  கைகளை மேலே உயர்த்தி அப்படி நெடுஞ்சாணாக, சாஸ்டமாக தரையில் வீழ்கிறார்கள்.

  நீட்டிய கை எங்கு படுகிறதோ... அப்படியே எழுந்து கைப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் வீழந்து....,

  இப்படியே கயிலை மலையை சுற்றி கிரி வலமாக வருகிறார்கள். அவர்க்கு உதவியாக ஒருவர்

  உடன் வருகிறார்.

   இவர்கள் தர்சனின் இருந்து மட்டும் இப்படி வருவதில்லை.

   50 - 60 மைலுக்கு அப்பால் இருக்கும் கிராமத்தில் இருப்பவர்களும் இப்படிதான் வருகிறார்கள்

    தூரத்திலிருந்து வருபவர்கள் உடன் ஒரு மட்டக்குதிரையும் கொண்டு வருகிறார்கள்.

   மட்டக்குதிரையில் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை ஏற்றி வருகிறார்கள். இப்படி

   அவர்கள் வர ஒரு சில மாதங்களும் கூட ஆகிறதாம். வருகிறவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே

   இருக்கிறார்கள்.   [  இவர்கள் நம் சிவன் அடியார்க்கு குறைந்த அல்ல ]

         &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

   எங்கள் முதல் நாள் கிரிவலம்   GOD OF VALLEY    ‘தேவர்கள் பள்ளத்தாக்கு  என்னும் இடத்திலிருந்து ஆரம்பமானது.

அந்த இடத்திற்கு’’ யம தவார் “ என்று பெயர். யாத்திரிகள் பரிகிரமா தொடங்கும் இடம். பரந்த மணல் நிலப்பரப்பாக இருந்தது.

இங்கு ஒரு பெரிய கொடி மரம் இருக்கிறது. அருகில் ஒரு சிறு கல் மண்டபம் இருக்கிறது. “” யம தவார் “ என்று பெயர்.

யாத்திரிகள் பரிகிரமா தொடங்கும் முன் மூன்று முறை இந்த சிறு மண்டபத்தைச் சுற்றிய பின் மண்டபத்தில் நுழைந்து

செல்வார்கள். அப்படிச் செல்லும் யாத்திரிகளுக்கு எம பயம் நீங்கும், நோய்கள் தீரும் , நமது கருமம், தீவினை தீரும் என்று

சொல்கிறார்கள்.

      முதல் நாள் பரிகிரமாவின் போது நாம் காண்பது அஷ்டபத் என்னுமிடம். இவ்விடம் கயிலாயத்தின் தென்முகப் பதியாக

விளங்குகிறது. அதனால் இதைத் தட்சணாமுர்த்தி முகம் என்று கூறுவார்கள். அஷ்டபத் என்ற இடத்தில் ஜைன மதத்தின் தீர்த்தங்கரர்

முக்தி பெற்றார்.  ஆதாலால் ஜைன மதத்தினர் அஷ்டபத்தினை தங்கள் திருத்தலமாகக் கொண்டு வழிப்பட்டு வருகிறார்கள்.

  

    இங்கு திபேத்தியர்கள் தங்களின் பிராத்தனைக் கொடி தோரணங்களைக் கட்டி இருக்கிறார்கள். பெளத்தவர்கள் பரிக்கிரமா வலம்

வரும் போது தங்கள் பிராத்தனையைக் சொல்லிய வண்ணம் வலம் வருகிறார்கள். இந்த 55 கி,மீ. பரிகிரமா கரடு முரடான பாதையின்

வழியே நடக்கும் போது சிரமமாகவும்,. மூச்சுத்திணறல் இருக்கிறது. காரணம் இப்போது நாம் சுவாசிக்கும்’காற்று 100 சதவீதம் இருப்பதால்

நிம்மதியாக மூச்சுனை இழுத்து விடுகிறோம். ஆனால், இங்கு காற்றின் அடர்த்தி குறைவு. 15 சதவீத காற்றின் தன்மை இருக்கிறது.

ஆகவே, நாம் சுவாசத்தை, மூச்சை அதிகமாகத்தான் இழுத்து விடவேண்டியுள்ளது. ஆகவே, களைப்பும், சோர்வும் ஏற்படுகிறது.

[மூச்சுப்பயிற்சி, சுவாசப் பயிற்சி உள்ளவர்கள், பெற்றவர்களுக்கு எளிதாக அமையும்] சம தரையில் நடப்பதற்கு சற்று எளிதாக

இருந்தாலும் சுமார் 20 கி,மீ நடக்க வேண்டும். முடிந்த அளவு நீர் அருந்துவது நல்லது. முதல் நாள் பயணத்தின் முடிவில்

’’ பொன்னார் மேனியில் ’’ தங்கினோம். இந்த பொன்னார் மேனி வடக்கு முக இருக்கிறது. இந்த பொன்னார் மேனி திருப்பதிகம்

பாடியவர் திருநாவுக்கரசர். கயிலாயம் வட முகம் அமைந்துள்ள இந்த பகுதியின் முன் பக்கம் இரு மலைகள் இருக்கிறன.

கணவாய் வழியாக நன்றாக பார்க்க இயலும். கணவாய் வழியாக கயிலையின் பனி உருகி ஓடையாய் கீழ் நோக்கி வரும்.

அந்த ஓடையின் நீரை எடுத்து முகர்ந்து பார்த்தால் விபூதியின் வாசம் வரும்.

 

  கயிலாயத்தில் இரவு பத்து மணிக்குத்தான் சூரியன் மறைவான். அதிகாலை 2 மணிக்கு கதிரோன் தன் ஒளி கிரணங்களை வெளி உலகிற்கு

பரப்ப முயல்வான். கதிரோனின் சென்னிற ஒளி வெண்மையான பனி படர்ந்த கயிலையின் மீது படரும் போது கயிலாயம் பொன் மலையாக

ஒளிரும். இந்த அற்புத காட்சினைத்தான்  சுந்தரமூர்த்தி நாயனார் பெருமான்  ‘ பொன்னார் மேனியனே ’’ பாடினார்.

  பொன்னார் மேனியனே... என்று தொடங்கும் பதிகம் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளால் (7ஆம் திருமுறை - 24ஆம் பதிகம்)

பாடப்பட்ட "திருமழபாடி" பதிகமாகும்.

  பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

 மின்னார் செஞ்சடைமேல் மிளிர்  கொன்றை யணிந்தவனே

 மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

                  அன்னே உன்னையல்லால்  இனியாரை  நினைக்கேனே …. எனவும்,
  (
சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1, பதிகம்- 50 பாடல்-8 -     தலம்:  திருவலிவலம் )

   

   ....நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை    -- எனவும்,

 

 இதே பதிகத்தில் 10ஆவது பாடலும் நேரடியாகச் சொல்கிறது.

   ...பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப்   --            எனவும்…..

 

     அப்பர் பெருமான் கனகத்திரள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.

 (   அப்பர் தேவாரம் - திருமுறை 6, பதிகம்-55 பாடல்-9 - திருக்கயிலாயம் )

         ...காவாய் கனகத் திரளே போற்றி  கயிலை  மலையானே  போற்றி  போற்றி  --எனவும்…..

    

 சுந்தரர் பொன்  செய்த மேனியினீர் என்று சொல்வது,  அந்தக் கயிலையின்  நள்ளிரவுக் காட்சியை நினைவுக்குக் கொண்டு

வருவதாக அமையக்கூடும்.        (சுந்தரர் தேவாரம் - திருமுறை 7 25.1 - திருமுதுகுன்றம்)

            ....பொன்செய்த மேனியினீர்  புலித்தோலை  அரைக்கசைத்தீர்        


மேலும்,

       பொன்னியலும் மேனியனே என்று அப்பர் சொல்வதை கயிலைமலையின் பொன்னிறத்துக்கு ப்பிடக் கூடியது.

 

அப்பர் தேவாரம் - (திருமுறை 6, 32.4 - திருவாரூர்)

....பொன்னியலும் மேனியனே  போற்றி  போற்றி  பூதப்  படையுடையாய்  போற்றி  போற்றி,   --- எனவும்..


சம்பந்தர் பொன்னொப்பவன் என்று சொல்வதும் கயிலைத் திருக்காட்சியை ஒப்பிட்டுச் சொல்லத் தக்கது.

சம்பந்தர் தேவாரம் -( திருமுறை 2, 22.9-   திருக்குடவாயில் )

       .பொன்னொப் பவனும்  புயலொப்  பவனுந்        

.      .தன்னொப்  பறியாத்  தழலாய்  நிமிர்ந்தான்        

..    .கொன்னற்  படையான்  குடவா  யில்தனில்        

....   மன்னும்  பெருங்கோ  யில்மகிழ்ந்  தவனே.  

 

      - இப்படி நமது சைவக்குரவர்கள் வியந்தும், மகிழ்ந்தும் பாடிய இடம் ‘ பொன்னார் மேனியனே ’’..........................

    ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

   

அன்பொடு

கிருஷ்ணன்,சிங்கை

தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/


Golden kailash.jpg
krishnan.jpg
Kailayam.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages