த.இ.க. – தொடர்புமையங்கள் மற்றும் தமிழ் கற்பிக்கும் அமைப்புகளின் தேவைகள் பெறுதல் – தொடர்பாக.
தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்ப் பரப்புரைக்கழகத்தின் மூலம் தமிழ் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளுக்கான பல்வேறு பரப்புரைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதில், பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, தமிழ்மொழிக் கல்வியை இணையம் வாயிலாக வழங்கி வருகின்றது. மொழித்திறன்களின் அடிப்படையில் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், கட்டணமின்றி இணையவழி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பாடங்களை எளிதாகக் கற்று, பயிற்சி பெறும் வகையில் கற்றலுக்கான துணைக்கருவிகளான ஒலிப்புத்தகம், மொழிப்பெயர்ப்புப் புத்தகம், ஒலிப்பெயர்ப்பு புத்தகம், காணொலிப் புத்தகம், அசைவூட்டுக் காணொலிகள், மின்னட்டைகள், பல்லூடகப் பயிற்சி நூல்கள், பயிற்சி நூல்கள் முதலானவை உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், தன்னார்வல ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பட்டயப் பயிற்சி, தமிழிசை ஆர்வலர்களுக்கு மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சி, இந்தி வாயிலாக பேச்சுத் தமிழ்ப் பயிற்சி முதலான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனைத்தொடர்ந்து, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள தமிழ் அமைப்புகள் / தொடர்புமையங்களின் தேவைகளுக்கான நிதியுதவிகள் வழங்குவதற்கான முன்னெடுப்புகளையும், தேவைகளின் அடிப்படையில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி தமிழ்க் கற்பிக்கும் பணியையும் செய்து வருகின்றது.
தற்போது தங்கள் அமைப்புகளின் தமிழ் கற்றல் – கற்பித்தல் செயல்பாடு தொடர்பான தேவைகள் இருப்பின் அதன் விவரங்களைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு கீழ் இணைக்கப் பெற்றுள்ள படிவத்தின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு :
https://forms.gle/nvqxDQAVFi2jnEaH9