பகுதி 1
வெகு காலமாக தலித் மக்கள் இந்த சமூகத்தில், மனித ஜீவன்களாகவே மதிக்கப்பட்டதில்லை. சமூகத்தில் அவர்கள் எதிர்கொண்ட புறக்கணிப்பு அவ்வளவு கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், அதே சமயம் அவர்கள் எதிர்கொண்ட இத் தாழ்வு நிலையை, கொடுமையைப் பற்றிய வேதனையோடு கூடிய சிந்தனையும், அவர்கள் விரூப்பங்களையும் கனவுகளையும் அங்கீகரித்த ஆதரவும், இலக்கியங்களிலும், தத்துவார்த்த சிந்தனையிலும் வெளிப்பாடு பெற்றிருப்பதையும் காண்கிறோம். வேறு எங்கு காணப்பட்டாலும் காணப்படாவிட்டாலும், தமிழ் நாட்டின் இலக்கியத்தில் வரலாற்றில் .தலித்துகளின் கனவுகளும் லட்சியங்களும் பேசப்பட்டிருக்கின்றன, போற்றப்பட்டிருக்கின்றன. சிறப்பிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் உள்ளன. அவர்களை கடவுள் அருள் பெற்றவர்களாக, அவரது கருணைக்குப் பாத்திரமான புண்ய புருஷர்களாக, மேல் தட்டுகளில் இருப்போ ரையும் உள்ளடக்கிய மொத்த சமுகத்தாலும் தொழத்தக்கவர்களாக காவியங்கள் பாடுகின்றன. கோவில்களில் அவர்கள் சிலைகள் ஆழ்வார்ளாக, நாயன்மார்களாக வீற்றிருக்கின்றன. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், அவர்தம் காலத்துக்கு முன் வாழ்ந்த நாயன்மார்கள் அனைவரையும் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரும் தேவாம்சம் கொண்டவர்கள் என்றும் சிவனின் அருள் பெற்றவர் எனறும் அவர்களுக்கு முன் தாம் ஒரு எளிய தொண்டனே என்றும் தன் திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துப் பேசியுள்ளார். அத்தகைய பெரியார்களில், பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் என்று சிறப்பிக்கப்படும் நந்தனாரும் ஒருவர். நந்தனார் கோயில் தாளவாத்தியங்களுக்கு தேவையான பதனிடப்பட்ட தோல், நரம்பு, கோரோஜனை முதலிய பொருட்களைத் தயாரித்து அளிக்கும் வேலையைச் செய்து வந்தவர். இன்னொருவர் கண்ணப்பன் என்னும் வேடர் குலத்தைச் சேர்ந்தவர். அவர் பக்தி தனி ரகமானது. எச்சிலைத் துப்பி சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்தவர். அவர் தாமே முதலில் கடித்து ருசி பார்த்த மாமிசத் துண்டுகளையே நிவேதனமாக சிவனுக்குப் படைத்தவர். ஈசனின் கண்களில் ரத்தம் வடிவது கண்டு துயருற்று தன் கண்களை பெயர்த்துத் தந்தார் என்று சொல்கிறது அவரைப் பற்றிய கதை. திருநீலகண்டர் என்று போற்றப்படும் நாயனார் பிறப்பிலும் தொழிலிலும் ஒரு குயவர்.. சிவனடியார்களையெல்லாம் உபசரித்து அவர்களுக்கு திருவோடும் தானமாகத் தருவதை வழக்கமாகக் கொண்டவர். தாழ்ந்த் குலமாகக் கருதப்பட்ட பாணர் வகுப்பில் பிறந்த இன்னுமொரு நீலகண்டர், வீணை வாசிப்பதிலும் வல்லவரானதால் திருநீலகண்ட யாழ்ப்பாணர், என்று அறியப்பட்டவரும், 63 நாயன்மார்களில் ஒருவருமாவர். கோயில் வாயில் முன் நின்று வீணை வாசித்துக் கொண்டே சிவனைப் போற்றிப் பாடுபவர். மதுரை மன்னன் சௌந்திரபாண்டியனின் கனவில் மாத்திரம் அல்ல, ஆலவாய் கோயில் அர்ச்சகரின், இன்னும் மற்ற சிவனடியார்கள் கனவில் சிவன் தோன்றி , கோயில் வாயிலில் தன்னைப் பாடும் தன் பக்தனை கோவிலுக்குள் அழைத்து வந்து, அவரைத் தரையில் அல்ல, பலகையில் அமர்த்தி வீணையை மீட்டிப் பாடச் செய்யப் பணித்ததாக பெரியபுராணம் சொல்கிறது. இவர்கள் எல்லாம் சிவனடியார்கள். இவர்களது பெயரையும் வரலாற்றையும் ஏழாம் நூற்றாண்டு சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையிலிருந்தும், பன்னிரண்டாம் நூற்றாண்டு சேக்கிழாரின் பெரியபுராணத்தி லிருந்தும் தெரிந்து கொள்கிறோம்.. இன்னுமொரு பாணர்,. இவர் விஷ்ணு பக்தர், திருப்பாணாழ்வார் என்றே அறியப்படுபவர், இவரும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் பற்றிச் சொல்லப்படும் செய்தி போலவே, இவரைப்பற்றியும் வரலாறு சொல்லப் படுகிறது. அவரது யாழிலிருந்து பிறக்கும் நாதம் ”நாராயணா”, என்று ஒலிப்பது கண்ட சேனை முதலியார் யாரும் அறியாது இவரது கரத்தில் இலச்சினை பதித்துச் சென்றதாகவும் பின்னர் இவ்விலச்சினை கண்ட அரங்க முனிவர் இவரைத் தோளில் சுமந்து அரங்கன் சனனதிக்குள் பெருமாளின் முன் இறக்கி விட்டதாக வைணவ வரலாறு சொல்கிறது. இச்சம்பவம் காரணமாகவே இவர் முனிவாகனார் என்றும் பெயர் பெற்றவர். நாயன்மார்களைப் பற்றியாவது இலக்கியச் செய்திகளும் வரலாறுமே உண்டு. ஆனால், திருப்பாணாழ்வாரோ ‘அமலனாதி பிரான்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள் கொண்ட ஒரு பிரபந்தமே பாடி வேதமாகப் போற்றிப் பாடப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் இடம் பெற்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. பெருமாளின் திவ்ய தோற்றத்தை அங்கம் அங்கமாக பாதாதி கேசம் வர்ணித்துப் பாடிய காரணத்தால், இவ்வகையில் இதுவே முன்னோடி கிரந்தமாகவும் கருதப்படுகிறது. 30 வயதே வாழ்ந்தவர் திருப்பாணாழ்வார்.
சிவனை வழிபட்ட 63 நாயன்மார்களிலும், விஷ்ணுவை வழிபட்ட 12 ஆழ்வார்களிலும், அரசர்களும் உண்டு., வணிகர்களும் உண்டு. அந்தணர்களும் உண்டு. பெண்களும் உண்டு. தலித்துகளும் அவர்களோடு சமதையாக புண்யபுருஷர்களாகப் போற்றி வணங்கப் படுகிறார்கள். அவர்களை ஏதும் இன்றைய அரசியல் செயல்பாடு போல கண் துடைப்பாக, சமாதானப்படுத்து வதற்காகவோ, அவர்கள் ஆதரவைப் பெறுவதற்காகவோ, தன்னலத்திற்கான பகடை களாகவோ, பயன்படுத்த இச்சிறப்புக்கள் செய்யப்படவில்லை.. மற்றவர்கள் எவ்வாறு அரசர் என்பதற்காகவோ, மந்திரிகள் அல்லது தானைத் தலைவர் என்பதற்காகவோ போற்றப்படவில்லையோ அது போல இவர்களும் தலித் என்ற காரணத்திற்காக ஆழ்வாராகவோ நாயன்மாராகவோ போற்றப்படவில்லை. இவர்கள் அனைவரும் தம் திறத்தால் வாழ்க்கையால், பக்தியால் சிறப்புப் பெற்றவர், அனைத்து சமூகத்தாலும் வணங்கப்பட்ட பெரியார் வரிசையில் தலித்துகளும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று கொள்ள வேண்டும். தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை .மனிதர்கள் கவனிக்கத் தவறிய போது தெய்வமே இடை புகுந்து அவர்களைச் சிறப்பித்திருக்கிறது.
இது ஏதோ ஒரு கால கட்டத்தோடு நின்றுவிட்ட ஒன்று அல்ல. இது பற்றி நாம் அறிய வரும் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 10-ம் நூற்றாண்டில், நம்பி ஆண்டார் நம்பி, தேவார நால்வரின் பாடல்களைத் தேடித் தொகுத்த போது, சுந்தரர் போலவே,, தாமும் தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தனார், திருநீலகண்டர், கண்ணப்பர் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்து நாயன்மார் களையும் சிறப்பித்துப் பாடுகிறார். இதை அடுத்து வந்த பன்னிரண்டாம் நூற்றாண்டு சேக்கிழார், நாயன்மார் அறுபத்து மூவர் பற்றிய வாழ்க்கையையும் மிக விரிவாகச் சொல்லும் பெரிய புராணம் என்னும் ஒரு பெரும் காப்பியத்தையே இயற்றுகிறார்./ அது தமிழ் இலக்கிய வரலாற்றில், வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் ஒரு மைல் கல்லாகிறது. இவ்வரலாற்றுக் காவியத்திலிருந்து தான் நாம் நந்தனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திரு நீலகண்டர் போன்றோர் எத்தகைய சமூக அவமதிப்புகளை எதிர்கொள்ள் வேண்டி வந்தது பின் சிவபிரானே இடைபுகுந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டி வந்தது என்பதை அறிகிறோம். எட்டாம் நூற்றாண்டில் வந்த சுந்தரமூர்த்தி இவர்களைப் பற்றிப் பேசும் வரை இவர்களைப் பற்றி ஏதும் செய்தி இல்லை. இவர்கள் வாழ்ந்த காலம் எது என்பதும் இன்று வரை தெரியாது. திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தவிர. அவர் திருஞான சம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர்,. திருஞான சம்பந்தரோடு அவர் பாட, இவர் யாழ் வாசித்து உடன் செல்ல, ஞானசம்பந்தர் செல்லும் க்ஷேத்திரங்களுக் கெல்லாம் உடன் சென்றவர். திருஞான சம்பந்தர் ஒரு பால சன்னியாசி. கவிஞர். சிவ பக்தர். அந்தணர். அவர் ஒரு தலித் வைணிகரை, தம் கூட்டத்தோடு சேர்த்துக்கொண்டார். அவரும் ஒரு சிவ பக்தர், வீணை வாசிக்கும் கலையில் தேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அந்த அந்தணருக்கு இவர் தாழ்ந்த சாதியினர் என்பது தடையாயிருக்கவில்லை.
நான்கு நூற்றாண்டுகள் கழித்து, பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்திலிருந்து தான் நந்தனாரை கோயிலுக்குள் அனுமதிக்கும் முன்னர் தில்லை வாழ் அந்தணர் தீக்குளிக்கச் செய்தனர் என்ற செய்தி நமக்குத் தெரியவருகிறது. தாழ்ந்த குலத்தில் பிறந்த அழுக்குகள் நீங்கி, அவர் பூணுல் தரித்த அந்தணராக வெளிவந்ததாகச் சொல்கிறது பெரிய புராணம். இத்தகைய சோதனைக்கு நந்தனார் மட்டுமே ஆட்படவேண்டி வந்திருக்கிறது. கண்ணப்ப நாயனாருக்கோ, திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கோ, திருநீலகண்டருக்குமோ, அல்லது திருப்பாணாழ்வாருக்குமோ இத்தகைய சோதனைகள் விதிக்கப் படவில்லை. அவர் தீக்குளித்து பூணூல் அணிந்த அந்தணர் சொரூபத்தில் வெளிப்பட்ட கதையை நாம் நம்ப வேண்டாம். அத்தோடு நந்தனாரின் வாழ்வும் முடிந்ததாகவே இன்று வாழும் நாம் கொள்ளலாம். இன்று நம்மோடு வாழும் சித்தாந்திகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் நந்தனார் தீக்குளிக்க வைக்கப்பட்ட கதை மிகுந்த உவப்பளிக்கும் பிராமண துவேஷப் பிரசாரத்திற்கு உதவும் சலிப்புத் தராத விஷயமாகிப் போனது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பகுதி 2
அன்று தமிழ் பேசும் இடமாக இருந்த காலடி என்னும் இன்றைய கேரள கிராமத்தில் பிறந்த எட்டாம் நூற்றாண்டு ஆதி சங்கரர், தனக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையே நேர்ந்த ஒரு சந்திப்பில் நடந்த உரையாடலை அவரது மனிஷா பஞ்சகம் விவரிக்கிறது. காசியில் இருந்த போது சங்கரர் ஹரி காட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறார். வழியில் ஒரு மயானம் குறுக்கிடுகிறது. அங்கு எதிர்ப்பட்ட ஒரு சண்டாளனை நோக்கி, ”என் வழியை விட்டு ஒதுங்கி நில்” என்று சங்கரர் சொல்கிறார். அதற்கு அந்த சண்டாளன், வேதாந்தத்தையே உலகுக்கு உணர்த்திய சங்கரரை நோக்கிக் கேட்கிறான், “வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கற்றுணர்ந்து உலகுக்கு போதித்த ஆச்சாரியரே, நீங்கள் விலகி நிற்கச் சொல்வது யாரை? இந்த உடலையா? அல்லது இந்த உடலில் இருக்கும் ஆத்மாவையா? இந்த உடலைத் தான் விலகி இருக்கச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலும் என் உடலும், ஒரே மண்ணால் செய்யப்பட்ட பெரிதும் சிறிதுமான, கரியவும் சிவந்ததுமான நிறம் மட்டுமே மாறும் பானகள் போலத்தானே. ஒரே பொருளால் ஆனவை தானே. அப்படியிருக்க ஒரு உடல் இன்னொரு உடலை விலகியிருக்கச் சொல்வது எப்படி? எல்லாமே நீங்களே சொல்லியுள்ள மாயை தானே. அப்படியிருக்க ஒரு மாயை இன்னொரு மாயையை விலகி இருக்கச் சொல்வது எப்படி? மாயையின் ஒரு துண்டு இன்னொரு துண்டை ஏன் விலகச் சொல்லவேண்டும்? நீங்கள் விலகி இருக்கச் சொன்னது இவ்வுடலில் இருக்கும் ஆத்மாவை என்றாலோ, அது உங்களுக்கே தெரியும். ஆத்மா என்று சொல்லப்படுவது ஒன்றே. அது துண்டு துண்டுகளாக பிளவு படாதது. உங்கள் உடலில் இருக்கும் ஆத்மாவும், என் உடலில் இருக்கும் ஆத்மாவும், வெவ்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தனித்தனியாகக் பிரதிபலிக்கக் காணும் சூரியன் போல, வெவ்வேறு பானைகளில் நிரம்பியிருக்கும் தண்ணீர் போல, நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப் போல, உங்கள் உடலிலும் என் உடலிலும் உறைந்திருக்கும் ஆத்மாவும் ஒன்றேயல்லவா? பின் எதை எதனிடமிருந்து ஒதுங்கி இருக்கச் சொல்கிறீர்கள், ஆச்சாரியரே?” என்று அந்தச் சண்டாளன் கேட்கவே சங்கரர் பிரமித்துப் போய் வாயடைத்து நின்று விடுகிறார்.
ஒரு சண்டாளன், படிப்பறியாதவன், மயானத்தில் வேலை செய்பவன், பாரதத்தில் க்ஷீணமடைந்துள்ள ஹிந்து மதத்திற்குப் புனர்ஜீவனம் கொடுத்து வேதங்களுக்கும் உபநிஷத்துக்கும் விளக்கம் கொடுத்துள்ள தன்னை, தன்னைப்போன்ற ஒரு ஆசாரியனப் பார்த்து, தான் உலகுக்கு உபதேசித்ததையே தனக்குச் சொல்லிக்காட்டி, இப்படியெல்லாம் உபதேசித்த நீயே இப்போது இப்படிப் பேசுகிறாயே என்று தன்னை திக்கு முக்காடவைத்து விட்ட சம்பவத்தை தானே உலகறிய எழுதியும் வைக்கும் செயல், தன்னை விமர்சிக்கும், தன்னில் ஆழ்ந்து தன்னைத் திரும்பி நோக்கும் செயல் என்று தான் சொல்ல வேண்டும். தன்னையே தனக்குரைத்துக்கொள்ளும் செயல். இதெல்லாம் கட்டி விட்ட வெறும் கதை என்று சொல்பவர்கள் இருக்கக் கூடும். அப்படிச் சொல்பவர்கள், கல்வியறி வில்லாதவனும் தாழ்ந்த குலத்தவனுமான ஒரு சண்டாளன், ஆச்சாரியனான தன்னையே விசாரணக் குட்படுத்திவிட்ட ஒரு சம்பவத்தை, கற்பனை என்று சொல்லித் தட்டிக்கழிக்க முயன்றாலும்,அந்தக் கற்பனைய அவன் ஏன் தான் மேல் சுமத்திக்கொள்ள வேண்டும்? மேலும், இதுகாறும் கடந்து வந்துள்ள 13 நூற்றாண்டுகளாக அதை அழியாது காத்து வந்துள்ள சமூகம் சுய விசாரணயும் திரும்பத் திரும்ப தன்னை புதுப்பித்துக்கொள்ளும் குணம் கொண்டது மான சமூகம் இந்த ஹிந்து சமூகம் என்பதைத் தான் இன்றும் மறையாதிருக்கும் மனிஷா பஞ்சகம் சாட்சியப்படுத்துகிறது. தன் களங்கங்களையும் வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னை அவ்வப்போது சுய விசாரணை செய்து கொள்ளும் சமூகம் அல்லவா இது!
இந்தக் கட்டுரையின் அனைத்து பகுதிகளும் தமிழ்ஹிந்து தளத்தில் நான்கு
மாதங்கள் முன்பு வெளிவந்தன.
http://www.tamilhindu.com/2011/02/dalits-and-tamil-literature-7-final-part/
அங்கிருந்து தான் எடுத்து இடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மீள்பதிப்பு
செய்யும்போது, ஆசிரியரான வெ.சா என்று ஆசிரியர் பெயரைக் குறிப்பிட்டதோடு
பதிப்பித்த இதழின் பெயரையும் குறிப்பிடுவது நல்லது.
த.ஹி தளத்தில் கட்டுரை செம்மையாக, படங்களுடன் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.
கட்டுரை தொடர்பாக நடந்த விவாதங்களையும் மறுமொழிகள் பகுதியில் காணலாம்.
அன்புடன்,
ஜடாயு
On Jun 8, 4:31 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> இன்று இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியை இங்கே வெளியிடுகின்றேன். வாசித்து
> உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே..!
>
> அன்புடன்
> சுபா
>
> *தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
> வெ.சா*
>
> *பகுதி 2*
> செல்க.!<http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%...>
> 2011/6/7 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > வணக்கம் நண்பர்களே!
>
> > திரு.வெ.சா அவர்களின் கட்டுரை தொடர் ஒன்றினை இங்கே வெளியிடுகின்றேன்.
> > இக்கட்டுரை மரபு விக்கியில் இணைக்கப்பட்டுள்ளது. சிந்தனைக்கு விருந்தாக அமையும்
> > இக்கட்டுரையை வாசித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
>
> > அன்புடன்
> > சுபா
>
> > *தலித்துகளும் தமிழ் இலக்கியமும்*
> > *வெ.சா*
>
> > *பகுதி 1*
>
> > வெகு காலமாக
>
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நான் முன்னரே கோபாலகிருஷ்ண பாரதியாரையும் அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளையும் பற்றிச் சொன்னேன். அவரது கீர்த்தனைகளும் அந்த கீர்த்தனைகளில் சொல்லப்பட்ட நந்தன் கதையும் தான் பின் வந்த நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் கருவாயின அவர் சொன்ன கதைதான், இன்று நாம் கேட்கும் தலித் சித்தாந்திகளின் பிரசாரத்துக்கும் உதவுகின்றன. இந்தக் கதை முன்னர் சொல்லப்படாத விவரங்களும் பாத்திர சிருஷ்டிகளும் கொண்ட கதை. கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை தவிர் இன்னும் சில சைவ நாயன்மார் கதைகளையும் கீர்த்தனை வடிவத்தில் தந்திருக்கிறார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம், இயற்பகை நாயனார் சரித்திரம் ஆக மூன்றும் கூட. கோபால கிருஷ்ண பாரதியார் தன் கதா காலட்சேபத்துக்கு கீர்த்தனைகள் இயற்ற தேர்ந்தெடுக்கும் சரித்திரங்களிலும் கூட தன்னைத் தனித்துக் காட்டிக் கொள்கிறார். தீவிர ஆசார சீலரை, பழமையின் உருவே ஆனவரைக் கவர்வது தலித்துகள் அதிலும் ஒரு பெண்மணியின் கதையும் சேர்கிறது. இது நடப்பது நூற்றைம்பது வருடங்களுக்கு முன். தலித்துகளும் பெண்ணும் ஒரே கதாகாலட்சேப மேடையில். இன்று அரசியல் மேடைகளில் நிகழும் அதே கூட்டணி.
கோபால கிருஷ்ண பாரதி விட்ட இழையைத் தொடர்வது இன்னொரு பாரதி. சுப்பிரமணிய பாரதி (1882-1921). இந்த பாரதியாரும் அந்த பிராமண குலத்தில் பிறந்தவர் தான். இந்த பாரதி செய்த மகா பாப காரியம் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்து பிராமணன் என்று பிரகடனம் செய்து, சந்தியாவந்தன மந்திரங்கள் கற்பித்து மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்றும் சொன்னது.
• இந்த வரலாற்றுச் செய்தி நமக்குத் தெரிவது கனகலிங்கமே எழுதிய எனது குருநாதர் என்னும் நூலிலிருந்து தான். ஆனால் வேடிக்கை என்னவென்றால்,. பாரதியார் தான் பூணூல் அணிவதில்லை. சந்தியாவந்தனம் செய்து வந்ததாகவும் செய்திகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் பிராமண ஆசாரங்களைக் கடைப்பிடித்தவராகவும் தெரியவில்லை. அதற்கும் மேல் ஒரு கீழ்சாதிப் பையனுக்கு பூணூல் அணிவித்து சமஸ்கிருத மந்திரங்களும் கற்பித்தால், அவனைப் பிராமணன் என்றால் அவர் சமூக நிந்தனைக்கு ஆளாகாமல் தப்பிப்பது எப்படி சாத்தியம்? அவருடைய பாடல்களிலும் அவர் பிராமணர்களையும் சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகளையும் சாடுகிறார். “பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே” என்று உரக்கவே சொல்கிறார். பிரிட்டீஷ் அரசாங்கத்திடமிருந்து தப்பி வாழ் அவர் புதுச்சேரியில் இருந்த போது ஒரு முறை வீசிய பெரும் புயலில் அங்கிருந்த குடிசைகள் வீசி எறியப்பட்டன. குடிசைகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தவர்களிடையே தான் அன்று இந்த நூற்றாண்டின் தலையாய கவிஞர் அக்குடிசைகளைச் சீர் செய்து திரும்பக் கட்டுவதில் அவர்களுக்கு உதவுவதில் ஈடுபட்டிருந்தார். இக்காட்சிக்கு சாட்சியாக இருந்தவர் அப்போது பத்து பதினோரு வயது சிறுமியாக இருந்த யதுகிரி அம்மாள் தான் இறக்கும் முன் எழுதிய பாரதி நினைவுகள் என்ற சிறு புத்தகத்தில் இதைப் பதிவு செய்திருக்கிறார். இச் சம்பவங்கள் நிகழ்ந்தது, இத்தகைய சிந்தனைகளை பாரதியாரிடம் நாம் காண்பது, சமுதாய சீர்த்திருத்த இயக்கம் தொடங்குவதற்கும் இச்சிந்தனைகளுக்காக போற்றப் படும் தலைவர்கள் இது பற்றி சிந்திக்கக்கூடத் தொடங்குவதற்கும் பல ஆண்டுகள் முன்னராகும். அந்தத் தலைவர்கள் பாரதிக்குப் பின்னரே இது பற்றிச் சிந்திக்கவே தொடங்கி.னார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் பாரதி காலத்திலேயே கூட பாரதிக்கு வயதில் மூத்தவர்கள். பாரதி மறைந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னர் தான் அவர்கள் சமுதாய சீர்திருத்தங்கள் பற்றி சாதி வேறு பாடுகள் பற்றி சிந்திக்கத் தொடங்கினர். என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய வரலாற்றுத் தகவல்.
ஜடாயு ஏதோ நாங்கள் தமிழ் ஹிந்து தளத்திலிருந்து வெ.சாவின் எழுத்துக்களை
சுட்டு வெளியிடுகிறோம் என்று எண்ணிவிட்டார். உண்மையில் அங்கு
சேகரமாயிருக்கும் வெ.சாவின் எண்ணிறந்த கட்டுரைகளைக்காணும் ஒருவர் அவ்வாறு
எண்ண வாய்ப்பில்லை. ஏனெனில் அவையெல்லாம் ஹிந்து தளத்திலிருந்து
வந்தவையல்ல. ஆசிரியரின் அனுமதியுடன் அது வெளிவருகிறது என்று சுபா
விளக்கியது அவசியம். ஏனெனில் எழுத்தின் உரிமை ஆசிரியரைச் சேர்ந்தது.
அதுவன்றி யாராவது ஒருவர் ஆசைப்பட்டு வெ.சாவின் எழுத்துக்களை வேறொரு
தளத்திலிருந்து மரபு விக்கியில் சேகரிக்கவிரும்பினால், வெளியீட்டாளர்
பெயர் சுட்டுவது நலம். பொதுவாக எந்தத்தேதியில் எங்கு வெளியாகியது எனும்
சேதி சரித்திரபூர்வமாக நல்லது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் ‘மரபு விக்கியில்’ வெ.சாவின் எழுத்து இடம்
பெறுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
நா.கண்ணன்
2011/6/10 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:
சுபா, விளக்கத்திற்கு மிக்க நன்றி. கண்ணன், நான் “சுட்டு” என்று சொல்ல
வரவில்லை ஐயா, “எடுத்து இட்டு” என்று தான் கூறினேன் :))
வெளிவந்த தேதி, வெளிவந்த இதழ்/புத்தகம் ஆகியவை முக்கியமான விபரங்கள்,
எனவே அவற்றையும் இணைப்பது நல்லது. பொதுவாக எல்லா தொகுப்பு நூல்களிலும்
(anthologies) பின்பற்றப் படும் முறை அது.
On Jun 10, 4:19 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ஐயா:
>
> ஜடாயு ஏதோ நாங்கள் தமிழ் ஹிந்து தளத்திலிருந்து வெ.சாவின் எழுத்துக்களை
> சுட்டு வெளியிடுகிறோம் என்று எண்ணிவிட்டார். உண்மையில் அங்கு
> சேகரமாயிருக்கும் வெ.சாவின் எண்ணிறந்த கட்டுரைகளைக்காணும் ஒருவர் அவ்வாறு
> எண்ண வாய்ப்பில்லை. ஏனெனில் அவையெல்லாம் ஹிந்து தளத்திலிருந்து
> வந்தவையல்ல. ஆசிரியரின் அனுமதியுடன் அது வெளிவருகிறது என்று சுபா
> விளக்கியது அவசியம். ஏனெனில் எழுத்தின் உரிமை ஆசிரியரைச் சேர்ந்தது.
> அதுவன்றி யாராவது ஒருவர் ஆசைப்பட்டு வெ.சாவின் எழுத்துக்களை வேறொரு
> தளத்திலிருந்து மரபு விக்கியில் சேகரிக்கவிரும்பினால், வெளியீட்டாளர்
> பெயர் சுட்டுவது நலம். பொதுவாக எந்தத்தேதியில் எங்கு வெளியாகியது எனும்
> சேதி சரித்திரபூர்வமாக நல்லது.
>
> தமிழ் மரபு அறக்கட்டளையின் ‘மரபு விக்கியில்’ வெ.சாவின் எழுத்து இடம்
> பெறுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
>
> நா.கண்ணன்
>
> 2011/6/10 Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உண்மை சுபா! நம்மைக் குறைகூறிய ஜடாயு அக்கட்டுரைகளுக்கு வந்த
பின்னூட்டங்களை இங்கு பதிவு செய்திருந்தால் வெ.சாவின் சீரிய எழுத்து
மேலும் பேசப்பட்டதாக, இங்கு அதற்கொரு தூண்டுகோலாக இருந்திருக்கும்.
எதிலும் முன்னிற்பது, ‘தற்காத்து தகை கொள்ளுதலே’ :-))
நா.கண்ணன்
அன்புடன்,
ஜடாயு
On Jun 11, 8:15 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/6/10 Subashini Tremmel <ksubash...@gmail.com>:
இருப்பினும் பல தளங்களில் ஒரு ஆக்கம் பேசப்படுவது ஆரோக்கியமானதே. இன்றைய
இலக்கியப் போக்கின் மிக முக்கிய அங்கம் பற்றிய ஒரு விழிப்புணர்வூட்டும்
கட்டுரைத்தொடர் அது. அது பரவலாக அலசப்படவேண்டும் என்பதே என் ஆசை! அதற்கு
சில பின்னூட்டங்கள் விதை போடுமெனில் அவைகளை இப்பூமியில் விதைப்பதிலும்
தவறில்லை என்பது என் கருத்து. வேறொன்றுமில்லை. நன்றி.
நா.கண்ணன்
2011/6/11 ஜடாயு <jata...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
எனக்கு தலித் இலக்கியம், தலித் மக்கள் மீது எப்போதும் ஒரு ஒட்டுதலுண்டு.
அது என் கிராம வாழ்க்கை தந்த வரப்பிரசாதம். எங்கள் வீட்டு மண்சுவர்
கட்டவரும் கட்டாரி, வலையன் என்று சொல்லும் வகுப்பைச் சேர்ந்தவர். எங்கள்
மண் சுவர் ஒவ்வொறு மழைக்கும் கரைந்துவிடும். கட்டாரி கட்டுவார். எனவே ஒரு
நிலையில் இவர் குடும்ப உருப்பினர் ஆகிப்போனார். அவரை ரகசியமாக ஒரு ‘மாமா’
(அம்மாவின் தம்பி) என்று சொல்லிக்கொள்வோம். அடுத்தது என்
பள்ளித்தோழர்களான கண்ணப்பன், பரமன், கண்மணி போன்றோர். குறிப்பாக
கண்ணப்பன் எனுக்கு நெருக்கம். ஊருக்கு வெளியே இருக்கும் அவன்
வீட்டிற்குப் போய் கோடை விடுமுறைப் பொழுதுகளைக் கழிப்பதில் ஒரு சுகம்.
சாணி மெழுகிய குடிசை வீட்டின் குளிர்ச்சி அலாதி.மேலும் எங்கள் வீட்டிற்கே
மலம் அள்ளும் குரவர் வீட்டுப் பையன்கள் எங்களோடு படித்தனர். அவர்கள்
ஒருவிதமான தெலுங்கு பேசுவார்கள். பெண்களெல்லாம் சிவப்பாக, அழகாக
இருப்பார்கள் (ஒரு கிக் உண்டு). பாப்பாத்தி என்ற பெயர் சகஜம். இப்போது
யோசிக்கும் போது அந்த அழகிகளுக்கு முறையான வாய்ப்பு கிடைத்தால் உலக அழகி
போட்டியில் நிச்சயம் பங்கு பெறும் அழகு உண்டு என்பது என் எண்ணம்.
இன்னும் இரண்டு காரணங்கள். யாரும் இதுவரை காணாத நோக்குடையவை. அவை, 1.
வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து அகலக வாழ்வைத்தொடங்கும் போது நாங்கள்
எல்லோருமே தலித் வாழ்விலிருந்துதான் தொடங்குகிறோம். இந்தியாவில் நீங்கள்
எந்த உயர் மட்டத்தில் இருந்தாலும் வேறொரு நாட்டிற்குப் போகும் போது அங்கு
கீழ்நிலையிலேதான் வைக்கப்படுகிறோம். அது இயற்கையானது. எனவே தலித் உணர்வு
என்ன என்று என்னால் புரிந்து கொள்ள முடியும். 2. அக்கிரகாரத்தில்,
தமிழ்ச் சமூகத்தின் உயர் சாதி படிகளில் நின்றபோதும் ‘மடி, ஆச்சாரம்’
எனும் பெயரில் அங்கும் சிறுவர்கள் மீதான தீண்டாமை இருந்தது இளமையிலேயே
என்னைப் பாதித்தது.
இப்பின்புலத்தில் என் எண்ணங்களைப் பகிர்கிறேன். வெ.சாவின் அத்தனை
கட்டுரைகளும் வாசியுங்கள். அவருக்கு கூர்மையான பார்வையுண்டு.
விமர்சனமுண்டு. நெஞ்சுரமுண்டு.இக்கட்டுரைகள் தலித்தியம், தலித் இலக்கியம்
பற்றிய ஒரு புரிந்துணர்வை நமக்கு அளிக்கும் கட்டுரைகள்.
1. கழகங்கள் எப்படி சாதிப்பிரச்சனையைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி
தலித்துகளை ஏமாற்றி வருகின்றனர் என்ற கருத்தை மின்தமிழில் பலமுறை
முன்வைத்துள்ளேன். அத்தோடு நில்லாமல் அவர்கள் outright nazism
செய்ததையும் பலமுறை சுட்டிக்காட்டி இங்கு விமர்சித்துள்ளேன். அந்தவகையில்
வெ.சாவின் பார்வையுடன் ஒன்ற முடிகிறது.
2. வெ.சா. குருபரம்பரா கதைகளிலிருந்து பல நல்ல மேற்கோள்களைக்
காட்டுகிறார். அதில் முக்கியமான வேரொன்றை இங்கு சுட்ட விரும்புகிறேன்.
தலித்திய விடுதலை என்பது ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு இருப்பதால்
கிடைத்துவிடப்போவதில்லை. எல்லோரும் ஜாதீயம் எனும் மாபெரும்
ராட்சப்பிடியில் உழன்றுகொண்டு இருக்கும் போது, ஓர் அடிமை இன்னொரு அடிமையை
எப்படி விடுவிக்க முடியும் என்று நோக்க வேண்டும். உயர் ஜாதியாகட்டும்,
தாழ்ந்த ஜாதி ஆகட்டும் இருவருமே ஜாதீய தளத்தில் இருந்துகொண்டுதான்
பேசுகின்றனர். இதை மிக அழகாக சித்தரிக்கிறது கோவேறு கழுதை. இந்து வண்ணான்
எவ்வளவு தாழ்ந்தவனாக இருந்தாலும் அவனது இருப்பை மகிழ்ச்சியுற வைப்பது
அவனுக்கும் கீழே கிறிஸ்தவ வண்ணான் இருப்பது. இதுதான் ஜாதீயத்தின்
அடிப்படை உளவியல். இதிலிருந்து மீள வேண்டும் என்றுதான் ஸ்ரீஇராமானுஜர்
சந்நியாசம் வாங்கிக்கொள்கிறார். இந்தக் கொடுகைகளிலிருந்து மீள்வதற்கு
இந்து சமூகம் கொடுக்கும் ஒரே மாற்று சந்நியாசம், சாதுவாக காட்டில்
அலைவது. உலகே அதிசயக்கும் வண்ணம் திரிகூட சங்மத்தில் கூடும் சாதுக்களைப்
பற்றி சமூகவியல் ரீதியில் ஆய்வு செய்ய வேண்டும். கும்பமேளாவிற்கு வரும்
சாதுக்களில் எத்தனை சதவிகிதம் தலித் வேர்கள் கொண்டவர்கள் எனும் ஆய்வு
சுவாரசியமாக இருக்கும். இது பற்றியும் வெ.சா தமிழ்ச் சூழலில் பேசலாம்.
3. கிறிஸ்தவ கன்னிமாடங்களில் நடக்கும் கூடா ஒழுக்கம் பற்றிச் சொல்கிறார்.
தலித் சமூகத்தை உயர்விக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆண்களுக்கு,
பெண்களுக்கான மாணவ விடுதிகளில் நடைபெறும் கூடா ஒழுக்கம் பற்றி தலித்
எழுத்து பேசுகிறதா? என்று தெரியவில்லை. அறன் எனப்படுவது இல்வாழ்க்கை
என்பது ஆரியநீதி என்று தலித் சித்தாந்தம் கூறினால் கைக்கிளை, பெருந்திணை
என்பது தலித்துக்களின் தர்மமா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. எனவே
எதிர்வாதமாக, எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருந்தால் மேல்
நகர்வு எப்படி நடக்கும்? பூணூல் போட்டுக்கொள்ளாத பாரதி கனகலிங்கத்திற்கு
பூணூல் போடுவது, எல்லோரையும் கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு கொண்டு
வர வேண்டும் என்பதே. வைணவம் இதற்கு மாற்று வைக்கிறது. ஜாதீயம் என்பது
அடிநிலைக்கு ஆள்தேடும் இயக்கமெனில் அடியார்க்கு அடியாராக இருப்பதே வைணவம்
என்பது. இனிமேல் கீழ்ப்போகமுடியாது எனும் படியில் நின்று கொண்டு திராவிட
வேதம் செய்கிறார் சடகோபன். இந்த உளவியல் பற்றி ஆராய வேண்டும்.
4. கிறிஸ்தவ ஜாதீயம், முஸ்லிம் ஜாதீயம் பற்றி புதிய இலக்கியம் வர
வேண்டும். வெ.சா இது பற்றிப் பேசுகிறார். அதில் விட்டுப்போனது இஸ்லாமிய
தலித்தியம். அது பற்றி வெ.சாவின் கருத்தென்ன?
5. இளையராஜா, எம்.எஸ் போன்றோர் ஜாதீயப்படிநிலைகளில் உயர்வதற்கு
ஆன்மீகத்தை வழியாகக் கொள்கின்றனர். ஒரே பிறவியில் தலித்தாகப் பிறந்து
பிராமணர்களாக மாறியவர்கள் இவர்கள். இது பற்றி சமகால தலித்திய நோக்கு
என்ன?
6. தலித் இலக்கியத்தை தலித்துதான் எழுத வேண்டும் என்பதில் எனக்கு கருத்து
வேறுபாடு உண்டு. இலக்கியம் என்பது சமூகத்தின் எந்தப்படி நிலையில்
இருந்தாலும் அப்படிநிலையின் வாழ்வை முறையாக, அழகமைதியோடு செப்புவதே
இலக்கியம். எனவே தலித் மக்களும், அம்மக்களோடு மக்களாக வாழும் எவரும்
எழுதும் இலக்கியம் தலித் இலக்கியமே. மேலும் தலித்துதான் தலித் இலக்கியம்
படைக்க வேண்டும் என்பது நடைமுறையில் சரியென்று பட்டாலும் தத்துவார்த்தமாக
நோக்கின் அது போர்த்திய ஜாதீயமே! (another form of discrimination).
எனவே ஜாதீயம் என்பதை முறையாக விளங்கிக்கொண்ட பின் தான் தலித் இலக்கியம்
என்னவென்றெ பேசமுடியும். அதை விளங்கிக்கொள்ளாமல் தலித் சித்தாந்தம்
உருவாக முடியாது. வெ.சா மிக நாசூக்காக சுட்டிக்காட்டும் வைணவ வாழ்வுமுறை
(தேசிகன், இராமானுஜர், சங்கரர்) இதன் ஆழமான உளவியல் சமன்பாடு பற்றிச்
சுட்டிக்காட்டுகிறது. ஆன்மீகத்தில்தான் இதற்கும் விடை இருக்கிறது என்பது
என் துணிபு.
நா.கண்ணன்
நா.கண்ணன்
என்னைப் பாதித்த ‘முஸ்லிம் தலித்’ நாவல் என்றழைக்க வேண்டுமெனில் தோப்பில்
முகம்மதுமீரான் எழுதிய ஒரு கடற்கரை கிராமம் (தலைப்பு சரியா?) எனும்
நாவல். அது தலித் நாவல் இல்லைதான். ஆனாலும் இப்போதுள்ள தலித்
சூத்திரங்களை வைத்துப்பார்த்தால் அதை தலித் கதையாகவும் காணலாம்.
அடிப்படையாக முஸ்லிம் சமூகத்தில் உள்ள பேதம் (discrimination) என்பது
நிறம் சார்ந்தது., மொழி சார்ந்தது. அரேபியக் கலப்புள்ள சிவப்பு
முஸ்லிம்கள் கருப்பு திராவிட முஸ்லிம்களை விட உயர்வு. அடுத்து
அரேபியமொழி/உருது பேசும் முஸ்லிம் திராவிட பாஷை பேசும் முஸ்லிமைவிட
உயர்வு. இது பற்றி தோப்பில் மிக நாசூக்காக காட்டி இருப்பார். மூன்றாவதாக
பணம் உள்ள முஸ்லிம், ஏழை விவாசாய முஸ்லிம்மைவிட உயர்வு.
முஸ்லிம்கள் என்றில்லை, இந்திய யூதர்கள் பற்றியும் ஆராய வேண்டும்.
இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்த யூதர்கள் அங்கு
‘பறையர்களாக’ பார்க்கப்பட்டதை சரித்திரம் கூறும். இங்கு அவர்கள்
சமூகத்தில் ஜாதீயம் எப்படி உள்ளது என்று ஆராயலாம்.
அருந்ததிராய் எழுதிய சின்னவைகளின் தெய்வம் நாவல் எப்படி சிரியன்
கிறிஸ்தவர்கள், நம்பூதிரிகளை விட மேல் என்று பேசும்.
ஆங்கிலோ இந்திய சமூகங்களில் கூட ஜாதீயம் உண்டு.
இந்திய மண்ணில் இருந்து கொண்டு எந்த விடுதலை பேசுதலும் அபத்தம் என்றே சில
நேரங்களில் தோன்றும். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!
நா.கண்ணன்
2011/6/11 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:
--
புதுமைப் பித்தன் (1907 – 1948) போன்ற ஒரு பெரிய கலைஞன், தலித் பிரச்னையை அவர் பார்வைக்கேற்ப வேறு விதமாகத் தான் கையாள்கிறார். அவர் ஏற்கனவே சுப்பிரமணிய பாரதி தன் சந்திரிகையின் கதை என்ற நாவலில் தலித் விடுதலைக்குத் தந்த ஒரு லக்ஷியத் தீர்வைக் {டெபுடி கலெக்டர் கோபாலய்யங்கார் தன் நண்பர் வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் வேலை செய்து வந்த மீனாட்சி மீது காதல் கொண்டு பிரம்ம சமாஜ முறைப்படி கலப்பு மணம் செய்துகொள்கிறார்.) கேலி செய்யும் வகையில் அக்கதையின் பின் நிகழ்வுகள் யதார்த்தத்தில் என்னவாக இருக்கும் என்று சித்தரிக்கிறார். ஊரும் நண்பர்களும் கேலிசெய்கிறர்கள். “போயும் போயும் இவருக்கு ஒரு இடைச்சி தானா கிடைத்தாள்? என்று. படுக்கை அறை மயக்கம் ஏதும் பிரச்சினையைக் கிளப்பாது என்றாலும், அய்யங்காரின் லக்ஷியக் கனவுகளை நிறைவேற்ற இப்படி ஒரு கல்யாணம் செய்து கொண்டால், எழும் பிரச்சினைகள் முதலில் அவர் வீட்டுச் சமையலறையிலிருந்தே தொடங்கும் அதற்கும் முன்னால் தன்னை, மீனாட்சி “சாமி” என்றழைப்பதை முதலில் கவனிக்க வேண்டும்.. சமயலறையிலிருந்து வரும் கறிக்குழம்பு அடுத்த பிரச்சினை. இதையெல்லாம் அவர் சமாளித்து விடுவதாகவும் கடைசியில் மீனாட்சி, கோபாலய்யங்காரை, “ஏ பாப்பான்” என்றும் அவர் மீனாட்சியை “அடி என் எடச்சிறுக்கி” என்று செல்லமாக ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதாகவும் கதையை முடிப்பதும், பாரதியைக் கேலி செய்ய வந்த இந்தக் கதை அதே ஒரு எதிர்மறை லட்சியமாக முடிவதைத் தவிர்க்க முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் புதிய நந்தன் என்னும் இன்னொரு கதையில் வித்தியாசமான இன்னொரு பார்வை தெரிகிறது. இது இருபதாம் நூற்றாண்டு ஆதனூரில் நிகழும் கதை. பழைய ஆதனூர் பண்ணையாரின் இந்தத் தலைமுறையின் பிரதிநிதி ராமநாதன் அவன் தன் கலெக்டர் பதவியை உதறிவிட்டு காந்தியின் விடுதலைப் போராட்டத்திலும் ஐக்கியமாகி, ஹரிஜன விடுதலையிலும் நம்பிக்கை கொண்டு போராடி, ஜெயிலுக்குச் சென்று சிறையிலிருந்து வெளிவந்ததும் கிராமத்துக்குத் திரும்புகிறான். அங்கு பண்ணையில் வேலை செய்யும் ஒரு பறை சாதிப் பெண்ணைப் பார்த்ததும் அவளிடம் அவனுக்கு ஆசை .கொப்பளிக்கிறது சின்ன முதலாளிக்கு தன்னிடம் ஆசை என்பதிலும் அதற்கு இடம் கொடுப்பதிலும் அவளுக்கு சந்தோஷம் தான். என்றாலும், கல்யாணம் என்ற பேச்சுக்கு இடமில்லை அவளைப் பொருத்த வரை. “அதெப்படி முடியும் சாமி” என்று மறுக்கிறாள். அவள் தந்தை கருப்பனுக்கோ இது மகா பாதகமான காரியம். ஐயர் எஜமானுக்கு பறச்சாதிப் பொண்ணு எப்படி ஒத்துப் போகும்?
கருப்பனுக்கு ஒரு மகனும் கூட. பாவாடை. அவனுக்கு படிக்க ஆசை. ஜான் ஐயர் என்னும் வேளாள கிருத்துவர் அவனை முதலில் கிருத்துவனாக்கி, ஜான் தானியேல் என்று நாமகரணம் செய்வித்து பத்தாங்கிளாஸ் வரை படிப்பிக்கிறார். அவனுக்கு ஜான் ஐயரின் மகள் மேரி லில்லியிடம் காதல் பிறக்கிறது. இதை அறிந்த ஜான் ஐயருக்கு வந்த கோபத்தில், “பறக் கழுதை, வீட்டை விட்டு கீழே இறங்கு” என்று அவனை கழுத்தைப் பிடித்து வெளியே துரத்துகிறார். அவர் வேளாளக் கிருத்துவர். அவனோ கிருத்துவனான பறையன். கோபம் கொண்ட ஜான் தேனியேல், ராமசாமிப் பெரியாரின் சுமரியாதை இயக்கத்தில் சேர்ந்து விடுகிறான். தன் தங்கை மேல் ராமநாதன் என்னும் பாப்பானுக்கு ஆசை என்று தெரிந்ததும் அவனுக்கும் ஜான் ஐயருக்கு வந்த மாதிரியே கோபம் வருகிறது. எல்லா ஜாதிக் கொடுமைகளுக்கும் காரணமே இந்த பாப்பார சாதி தானே. அதை எப்படி அவனால் தாங்கிக்கொள்ள முடியும்? அந்தப் பாப்பான் தன் தங்கையை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் தான். ஆனாலும்,. இந்த[ப் பாப்பானுங்கள எப்படி பொறுத்துக்கொள்வது? கடைசியில் புதுமைப் பித்தன் கதை, “இதில் யார் புதிய நந்தன்? என்ற கேள்வியோடு முடிகிறது.
இந்தக் கதைகள் எல்லாம் புதுமைப் பித்தன் எழுதத் தொடங்கிய அவரது இருபதுகளின் பிராயத்தில் எழுதப்பட்டவை. இச்சிறு கதைகள் கலைவடிவில் குறைபட்டனவாகத் தோன்றலாம். ஆனால் அந்த வயதிலேயே, லக்ஷியத்துக்கும் நடைமுறை வாழ்க்கை உண்மைகளுக்கும் இடையேயான பெரிய வெளியையும் முரண்களயும் அவர் அறிந்திருந்தார். அது மட்டுமல்ல, அரசியல் சித்தாந்திகளும் அரசியல் வாதிகளும் சமூகப் பிரசினைகளுக்கு அளிக்கும் வாய்ப்பாட்டுத் தீர்மானங்களின் உணர்ச்சியற்ற வெளிப்பாடுகளையும் அவற்றின் போலித்தனத்தையும், அவை உள்ளீடற்ற பொக்கை என்பதையும் அறியும் பிரக்ஞை அவருக்கு இருந்திருக்கிறது. அப்பிரக்ஞை எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வளவு ஆண்டுகள் கழிந்த பின்னும் பதில்கள் கிடைத்த பாடில்லை. காலம் மாறியிருக்கிறது தான். மனிதனும் மாறியிருக்கிறான் தான். இருப்பினும்…..யார் புதிய நந்தன்? கட்சிகளும் சித்தாந்திகளும் தரும் வார்ப்புகள் பதில்கள் ஆக மாட்டா..
கண்ணனை இவ்வளவு தூரம் பேசவைத்த, ஜடாயு, சுபாஷிணி இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
6. தலித் இலக்கியத்தை தலித்துதான் எழுத வேண்டும் என்பதில் எனக்கு கருத்து
வேறுபாடு உண்டு. இலக்கியம் என்பது சமூகத்தின் எந்தப்படி நிலையில்
இருந்தாலும் அப்படிநிலையின் வாழ்வை முறையாக, அழகமைதியோடு செப்புவதே
இலக்கியம். எனவே தலித் மக்களும், அம்மக்களோடு மக்களாக வாழும் எவரும்
எழுதும் இலக்கியம் தலித் இலக்கியமே. மேலும் தலித்துதான் தலித் இலக்கியம்
படைக்க வேண்டும் என்பது நடைமுறையில் சரியென்று பட்டாலும் தத்துவார்த்தமாக
நோக்கின் அது போர்த்திய ஜாதீயமே! (another form of discrimination).
எனவே ஜாதீயம் என்பதை முறையாக விளங்கிக்கொண்ட பின் தான் தலித் இலக்கியம்
என்னவென்றெ பேசமுடியும். அதை விளங்கிக்கொள்ளாமல் தலித் சித்தாந்தம்
உருவாக முடியாது. வெ.சா மிக நாசூக்காக சுட்டிக்காட்டும் வைணவ வாழ்வுமுறை
(தேசிகன், இராமானுஜர், சங்கரர்) இதன் ஆழமான உளவியல் சமன்பாடு பற்றிச்
சுட்டிக்காட்டுகிறது. ஆன்மீகத்தில்தான் இதற்கும் விடை இருக்கிறது என்பது
என் துணிபு.
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தலித் எழுத்தாளர்கள் தம் அனுபவத்தை எழுதுவதுதான் தலித் இலக்கியமாகும்; மற்றவர்களது மனிதாபிமானமும் எட்டி நின்ற பார்வையுமே ஆகும் என்று எழுதியிருந்தேன். இந்தப் பாகுபாடு ஓர் இடைப்பட்ட காலகட்டத்துக்கே பொருந்துவதாகும். பின்னர் தலித் என்ற அடைமொழி அழிந்து பொது இலக்கியப் பிரவாஹத்தில் அவ்வெழுத்துகள் சேர்ந்து கொள்ளும், அதில் பெருமாள் முருகனும் சோ.தருமனும், இலக்கியாசிரியர்களாகவே அடையாளம் காணப்படுவார்கள். இந்த விளக்கத்தை தலித்துகள் எழுதுவதுதான் தலித் இலக்கியமா? என்று கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்டவர்களுக்கு, கடைசியில் தரலாம் என்று நினைத்தேன். இலக்கியாசிரியர்கள் தம்மை தலித் என்று எண்ணி எழுதுவதில்லை. அவர்கள் வாழ்க்கை தலித் வாழ்க்கையானதால் அது எழுதப்படுகிறது. அப்படித்தான் சோ.தருமன், பூமணி, இமையம் எல்லாம் தம்மை தலித் என்று அடையாளப்படுத்தப் படுவதை விரும்புவதில்லை.
இது போதும் என்று நினைக்கிறேன். இந்த வகைப் படுத்தல்கள் எல்லாம் ஒரு கால கட்டம் வரை தான். பின் எல்லாமே அழிந்து ஒன்றிணைந்த இலக்கிய பிரவாகத்தில் கலந்துவிடும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வண்ணனிலவனின் சிறுகதைப் பெயர் தாருங்கள்.
நன்றி,
நா. கணேசன்
On Jun 11, 12:20 am, Swaminathan Venkat
> 2011/6/11 N. Kannan <navannak...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
--
இஸ்லாமிய சமூகத்திற்கு உள் நிலவும் பாரபட்சங்கள், ஒடுக்குமுறைகள்,
பாவனைகள் பற்றி பேசும் ஜாகீர் ராஜாவின் எழுத்துக்களை இந்த வகையில்
சேர்க்கலாம் என்று தோன்றுகிறது.
ஜாகீர் ராஜாவின் கதைகள் பற்றி வெ.சாவே எழுதியிருக்கிறார் -
http://www.tamilhindu.com/2009/07/jakir_raja_book_review/
அன்புடன்,
ஜடாயு
> > > கீழ்நிலையிலேதான்...
>
> read more »
வெ.சாவினுடைய கடைசிக் கட்டுரையில் எப்படி முடிக்கிறார் என்பதை இங்கு
எடுத்துப் போட்டுள்ளார் (இது மரபுவிக்கியிலும் பதிவாகியுள்ளது).
அப்படித்தான் இலக்கியம் என்பது நடை பயிலும். ஏனெனில் இலக்கியத்திற்கு
ஜாதி கிடையாது. மகா சைவரான உ.வே.சா ஒரு சமண காப்பியத்தைப் பதிப்புச்
செய்யும் போது வீட்டில் சொன்னார்களாம், ஒரு ஐயராத்துப் பிள்ளை ஜீனனுடைய
காப்பியத்தை எதற்கு மெனக்கெடுத்து பதிப்பிக்க வேண்டுமென்று. அப்போது
உ.வே.சா சொன்னாராம். ‘தமிழுக்கு மதம் ஏது?’ என்று. அதே பதில்தான்
இங்கும்.
தலித் எழுத்து என்பது ஜாதீய எழுத்து என்று பார்க்கும் போது லா.ச.ரா,
தி.ஜா எழுதுவது போல் ஒரு தலித்தால் எழுதமுடியாதுதான். (இங்கு கூட விதி
விலக்காக ஜெயகாந்தன் இருக்கிறார். அவர் ஐயராத்தில் வளர்ந்ததால் அந்தப்
பாதிப்பு). ஒரு தலித் எழுதுவதை ஒரு இஐயர் எழுதமுடியாது.
ஆனால் தலித் எழுத்து என்பது அடக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் எழுத்து
என்றால் அந்தப் படிநிலையில், அவதியுறும் எவரும் எழுதமுடியும்.
எனவே தலி இலக்கியத்தை ஜாதீயக் கண்ணோடு முன்னெடுத்துச் செல்வது என்பது
இவர்கள் யார் மீது பழிபோடுகிறார்களோ அவர்கள் செய்ததையே திரும்பச் செய்வது
போலாகிவிடும்.
மேலும் 1814-ல் நடந்த ஒரு தவறுதலுக்கு 21ம் நூற்றாண்டு ஆசாமியைச் சிறை
வைக்க முடியாது. சமூக நீரோட்டத்தில் தவறுகள் நடந்து கொண்டே இருக்கும்.
அதை யார் செய்தாலும் திருத்திக்கொண்டே நடக்கவேண்டும். எனவே ஜாதியின்
பெயரால் பழிவாங்குவதெல்லாம் வெறும் வன்முறை. அப்பாவிற்கு சிராத்தம்
பண்ணுவது போல் தாத்தா பண்ணிய கொடுமைக்கு பேரனை அடிக்க முடியாது.
ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை அளித்து, பொருளாதார
முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும். இன/நிறவாதம் என்பது ஒரு உளவியல்
நோய். அது எல்லாத்தலைமுறையிலும், எல்லோரிடமும் தலைகாட்டிக்கொண்டே
இருக்கும். அது ஐயர், தலித், கிறிஸ்துவன், முஸ்லிம் என்று பார்க்காது.
அது மானுட நோய். ஒட்டுமொத்த விழிப்புணர்வே அதற்கு விடிவு. [பெண்ணியம்
என்பது அப்படித்தான் பெண்ணை வெறும் உடல் என்று பார்க்கும் போது பெண்
எழுத்தை பெண்தான் எழுத முடியும் என்று சொல்லலாம். ஆனால் பெண்ணின்
உணர்வுகளை ஆணால் நிச்சயம் புரிந்து கொள்ளமுடியும். ”தாயுமாகிய
தயாபரன்கள்” நிறைய உண்டு! இலக்கியம் என்பது உணர்வுகளின் ஊடகம்.]
அதனால்தான் இவ்விழை (தலைப்பு) பரவலாக பேசப்பட வேண்டுமென்றேன். வெ.சா
அபாரமான சரித்திர நோக்கில் இதை முன்வைக்கிறார்.
நா.கண்ணன்
2011/6/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
சங்க இலக்கியங்களில் சாதி என்னும் தலைப்பின்
தமிழ்ப் பேராசிரியர்களின் ஆராய்ச்சிகளை 30+ ஆண்டுகளாய்ப்
படித்து வருகின்றேன். வடமொழி இலக்கியங்கள் தரும்
செய்திகளுடன், தமிழ் இலக்கியங்கள் தருவனவற்றையும்
சேர்த்தால்தான் இந்திய சமூகத்தின் ஜாதியாக்கம்
முழுக்கப் புரியும். அரசன், பெண் (உ-ம்: கற்பு), தலித்
- இந்த மும்முனைப் புள்ளிகள் கொண்டு சங்க இலக்கியம்
காட்டும் சமூக அமைப்பைஹ் தெளிவாக ஜார்ஜ் ஹார்ட்
போன்றோர் விளக்கியுள்ளனர். இணையத்தில் அவைபற்றிச்
சில குறிப்புகள் காட்டியுள்ளேன்.
வண்ணநிலவன் கதை கிட்டும். அதை அனுப்புகிறேன்.
இல்லை இன்னும் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம். தெரியவில்லை. வாயைத் திற்ந்தால தானே வம்பு?
On Jun 13, 4:31 am, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:
> அன்புள்ள சுபாஷிணி,...
>
> read more »
>
> போன தடவை இப்படி ஒரு கட்டுரையை திரும்ப பிரசுரித்து கருத்து பரிமாற்றத்துக்கு
> விட்டிருந்தீர்கள். ஒருத்தரும் மூச்சு பரியவில்லை. அது எனக்கு ஏமாற்றமாக
> இருக்கவில்லை. அப்போது நான் கூட சொல்லியிருந்தேன். தமிழர்கள் சுதந்திரமாக தம்
> மனத்தில் உள்ளதைச் சொல்லிப் பழக்கமற்றவர்கள். யார் கண்டா என்ன ஆகுமோ ஏதோ,
> நமக்கேன் வம்பு, என்று தம் வழியில் செல்பவர்கள் என்று. அந்த பாலைவன
> அமைதியிலிருந்து இந்தத் தடவை ஏதோ மாற்றம் தெரிகிறது போலிருக்கிறதே. என்ன
> ஆயிற்று? தமிழ்னுக்கும் தமிழ் நாட்டுக்கும்? மரபு விக்கி சேர்க்கையிலிருந்து
> இங்கு எடுத்துப் போட்டாலே இந்த கதி. அங்கேயே இருந்தாலோ, இங்கு இந்தியாவில்
> ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கோடவுனில் மூட்டைகளை அடுக்கி வைத்து அது மக்கி
> வீணாவதைப் போலத்தான். கோதுமைக்கும் அரிசிக்குமே இந்த கதி என்றால், பரவு விக்கி
> சேமிப்புக்கு மாத்திரம் கதி வேறாகிவிடுமா என்ன? தமிழ் ஹிந்துவில் பிரசுரமான
> போது முதல் சில அத்தியாயங்கள் பொதுவான பழம் சரித்திரத்தைப் ப்ற்றிப் பேசியதால்
> கொஞ்சம் பேர் தம் அபிப்ராயத்தைச் சொன்னார்கள். பின்னால் வந்தவை நிகழ் கால
> எழுத்தைப் பற்றிப் பேசியதால், பரிச்சயம் இல்லாததாலோ அல்லது நிகழ்கால
> எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுவதால் “என்னத்துக்கு வம்பு? என்று
> இருந்துவிட்டார்களோ என்னவோ. மீர் சாஹிப், மீர் ஜாஃபரைப் பற்றிக் கருத்துச்
> சொல்லும் தைரியம் கருணாநிதியைப் பற்றியொ சோனியா காந்தியைப் பற்றியோ சொல்ல
> வந்துவிடுமா என்ன?
>
> இல்லை இன்னும் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம். தெரியவில்லை. வாயைத்
> திற்ந்தால தானே வம்பு?
>
ஒரு காரணமாக நான் பார்ப்பது. டிவி வந்தபிறகு பரந்த வாசிப்பு அனுபவம்
குறைந்து வருகிறது. மேலும், கணினி, இணைய இணைப்பு இருப்போர் சிலர்தான்
நிறையத் தமிழ் புத்தகங்களை வாசித்தவர்கள். வலைப்பதிவுலகத்தில் அன்றைய
அரசியல், சினிமா பற்றிய செய்திகளே நிறைய இருக்கின்றன.
அன்புடன்,
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அனேகமாக பஞ்சும் பசியும் என்னும் சிதம்பர ரகுநாதனின் நாவலிலிருந்து தொடங்கும் இடது சாரி சோஷலிஸ யதார்த்த வகை தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் ஏதோ தொழிற்சாலையில் முன் தீர்மானிக்கப்பட்ட ஸ்பெஸிஃக்பிகேஷனுக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் போல, மார்க்சிஸ விமர்சகர்கள் கட்சியின் கொள்கைகளுக்கேற்ப தரும் சட்ட திட்டங்களை சரி வர அனுசரித்து படைக்கப்பட்டவை. அதற்கு கட்சி சார்ந்த விமர்சகர்களே பொறுப்பேற்க வேண்டும். கடைசியில் இந்த உற்பத்திப் பெருக்கத்தில், அதன் ஐம்பது வருடங்களுக்கும் மேல் நீண்ட கால வரலாற்றில் இந்த முற்போக்கு எனப்படும் எழுத்தாளர் சமூகத்தின் எழுத்துக்களில் ஒன்று கூட, திரும்பவும் ஒன்று கூட, இலக்கியம் என்று சொல்லத்தக்க குணம் கொண்டவையாக இருக்கவில்லை.
ஆனால் தலித் எழுத்துக்களின் சமாசாரம் வேறாகத்தான் இருந்துள்ளது. இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை, படித்த இளம் தலைமுறையைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள் தலித் வாழ்க்கையின் அவஸ்தைகளையும் அவதிகளையும் அன்றாடம் எதிர்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்த வாழ்க்கையின் கசப்பு தான் அவர்கள் எழுதும் அனுபவமாக இருக்கிறது. இதற்கு நேர் எதிராக முற்போக்கு எழுத்தாளர்கள் பாட்டாளிகளின் விவசாயிகளின் அன்றாடப் பாடை அறிவார்களோ இல்லையோ அது அவர்கள் எழுத்துக்கு சம்பந்தமில்லாத விஷயம். அவர்கள் எழுதுவது கட்சியின் தாக்கீதுகளை மார்க்சிஸ்ட் விமர்சகர்கள் மூலம் கேட்டு அதற்கேற்ப கதைகளையும் மனிதர்களையும் அவர்கள் உணர்வுகளையும் வடிவமைத்துக்கொள்பவரகள். அவர்கள் எழுத்துக்கும் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்க்கைக்கும் எந்த உறவு இருந்ததில்லை. ஆனால் தலித் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் தலித் அவதிகள், தலித் இலக்கிய சித்தாந்திகள் வரையரைத்துக்கொடுப்பது போலிருப்பதில்லை. இந்த அடிப்படை அணுகலில் தான், ஆரம்பம் தொட்டு நேற்று வரை நாம் காணும் சோஷலிஸ யதார்த்த வகை எழுத்தாளர்களும் திராவிட கழகங்கள் சார்ந்த எழுத்தாளர்களும் கட்சிக் கொள்கைகள் சார்ந்து எழுதுபவர்களாகவும், , தலித் எழுத்தாளர்கள் எதிர்ப்படும் வாழ்க்கை சார்ந்து எழுதுபவர்களாகவும் வேறுபடுகிறார்கள். சித்தாந்திகளோ தம் அரசியல் பார்வைகளை, ஆங்கிலத்திலிருந்து இன்னும் மற்ற மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்படும் கொள்கைப் பிரகடனங்களிலிருந்து பெறுகிறார்கள்.
தலித் எழுத்தாளர்கள் நிச்சயமாக இன்றைய தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துள்ளார்கள். இது காறும் தமிழ் இலக்கியத்தில் பதிவு பெறாத உலகை, வாழ்க்கையை, அனுபவங்களை அவர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தின் எல்லைக்குள் கொணர்ந்திருக்கிறார்கள். தலித் அல்லாதவர்கள் சிலர் சில எழுதியிருக்கிறார்கள் என்றால், அவை தலித் எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் உக்கிரத்தில், விவரப் பெருக்கத்தில், நேர்முக நெருக்கத்தில் இல்லை என்று சொல்ல வேண்டும். அவர்களின் மொழிக்கு ஒரு வண்ணம் உண்டு. நேரடித் தன்மை உண்டு. ஒரு உயிர்ப்பும், தாக்க வலுவும் உண்டு. அவை இதுகாறும் வாழ்க்கை யில் காணப்பட்டாலும், எழுத்தில் பதிவாகியிருக்கவில்லை.
இப்பதிவுகளை முதலில் பூமணிதான் எழுபதுகளில் தொடங்கி வைத்தார்.. திரும்பவும் பூமணிக்கு இது ஒரு புதிய பாதையாக இருக்கவில்லை. இப்படி ஒரு வட்டத்தின் மொழியைக் கையாள்வது என்பது அவரது கண்டு பிடிப்பும் அல்ல. அவருக்கு முன் பி.ராஜம் அய்யரும், புதுமைப் பித்தனும் அவரவர் உலகின் மொழியைக் கையாண்டனர்,. பூமணி அந்த இழையைப் பற்றிக் கொண்டு தம் உலகின் அனுபவங்களின் மொழியைப் பதிவு செய்தார். இது காறும் தலித்துகளுக்கு தம் அவஸ்தைகள, தாம் அனுபவிக்கும் அவலங்களைச் சொல்ல ஒரு குரல் கிடைக்காதிருந்தது. பூமணியின் குரல் அந்த முதல் குரலாயிற்று.
இமையம் முற்றிலும் வேறான மனிதர், எழுத்தாளர். தலித் சித்தாந்தத்தை, தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது போல அதை முற்றிலும் மறுப்பவர். அவர் ஒரு சாதாரண ஏழை பள்ளி வாத்தியாராக இருந்தது, சித்தாந்திகளுக்கு மிகவும் சௌகரியமாகப் போயிற்று. தம் சித்தாந்தத் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களுக்கு சரியான குறியாக இமையம் வாய்த் தார் என்று தான் சொல்லவேண்டும். இமையத்தை தம் சித்தாந்தத் தாக்குதல்களுக்கு இரையாக்கினால் அது ஒரு சிறந்த முன்னுதாரணமாகி, எட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற தலித் எழுத்தாளர்களையும் சித்தாந்தத்தைச் சொல்லி மிரட்ட சௌகரியமாக இருக்குமே, அவர்களும் . பயந்து தானே அடங்கிப் போவார்களே.. சொல்வதைக் கேட்காது தம் இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கும் தலித் எழுத்தாளர்களிலேயே இமையம் தான் அதிகம் முரண்டு பிடிப்பவர். தன் சுதந்திரத்தை உரக்கக் கூவி அறிவிப்பவர். பூமணி போல, சோ. தருமன் போல இவருமல்லவா, தலித் பட்டைகளெல்லாம் எனக்குத் தேவை இல்லை. நான் தலித் எழுத்தாளர் இல்லை என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார் என்று அவர்களுக்குக் கோபம். இது சுத்த அடங்காபிடாரித்தனம் இல்லையா? கோவேறு கழுதைகள் அவரது முதல் நாவல். நாவல் என்னவோ தலித்துகளின் அவல வாழ்க்கையைப் பற்றியது தான். இங்கு அவலப்படுவது ஒரு பிரிவு தலித் கிறித்துவர்கள். அவர்கள் அடிமை சேவகம் செய்வது அவர்களை விட சற்று பொருளாதார முன்னேற்றம் அடைந்து விட்ட இன்னொரு பிரிவு தலித் குடும்பங்களுக்கு. அவர்கள் வாழ்வது அரசு குடியிருப்புகளில். . கொஞ்சம் படித்து அரசு உத்யோகத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். குடிசைகளில் வாழும் கிறித்துவ தலித்துகள் அரசு குடியிருப்புகளில் வாழும் தலித்துகளின் வீட்டு துணிகளை சலவை செய்து கொடுப்பவர்கள்.
தினம் காலனி வீடுகளுக்குச் சென்று வாயில் முன் நின்று மிச்சம் மீதி உணவு இருந்தால் கொடுப்பதை வாங்கி வரவேண்டும். இந்த தலித் கிறித்துவ குடும்பங்கள் முன்னேறிய தலித் குடும்பங்களுக்கும் தலித்துகள். தன் வீட்டுத் துணிகளை சலவை செய்பவன், தினம் வீட்டில் மிஞ்சிய சோத்தைக் கேட்டு வாங்கிப் போகவேண்டியவன் எப்படி தனக்குச் சமமாவான்? படித்து அரசு வேலையில் அமர்ந்து காரை வீட்டில் வாழும் தலித் இப்போது உயர் சாதிக்காரனாகி விட்டானே. உயர் சாதி மிதப்பில் அவன் சந்தோஷிக்கவேண்டாமா? அவனுக்கும் ஒரு தலித் இருந்தால் தானே தன் உயர் சாதி வாழ்வை அவன் அனுபவிக்க முடியும்?
தான் உயர்வதில்,மட்டுமல்ல நேற்றுவரை தன் சகாவாக இருந்த மற்றவனைத் தாழ்த்துவதிலும் ஒரு சுகம் உண்டே.
தமிழ்ஹிந்துவில் வந்தபோது கடைசி பகுதிகளில் மறுமொழிகள் குறைந்து விட்டன..
பெரும்பாலும் பல தொடர்களுக்கு நேர்வது தான் இது. ஆரம்பப் பகுதிகள்
கலகலக்கும்.. பிறகு வரும் பகுதிகள் தொய்வடையும்.
ஒட்டுமொத்தமாக கணிசமான வாசகர்கள் இத்தொடரைப் படித்தார்கள் என்று இணையதள
வருகைக் கணக்கு சொல்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாசக
குழுவினரும், வேறு சில தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் முழுக்க
படித்தார்கள் என்று கேள்விப் பட்டேன். ஆனால் அவர்கள் மறுமொழிகள் எதுவும்
தரவில்லை, மறுப்போ பாராட்டோ தெரிவிக்கவும் இல்லை. தங்கள்
குழுக்களுக்குள் விவாதித்திருக்கலாம்.
ஜெயமோகன் வாசகர்கள் குழுமத்திலும் இந்தக் கட்டுரைத்தொடர் விவாதிக்கப்
பட்டது.
அன்புடன்,
ஜடாயு
On Jun 13, 2:31 pm, Swaminathan Venkat <vswaminathan.ven...@gmail.com>
wrote:
> அன்புள்ள சுபாஷிணி,
>
> போன தடவை இப்படி ஒரு கட்டுரையை திரும்ப பிரசுரித்து கருத்து பரிமாற்றத்துக்கு
> விட்டிருந்தீர்கள். ஒருத்தரும் மூச்சு பரியவில்லை. அது எனக்கு ஏமாற்றமாக
> இருக்கவில்லை. அப்போது நான் கூட சொல்லியிருந்தேன். தமிழர்கள் சுதந்திரமாக தம்
> மனத்தில் உள்ளதைச் சொல்லிப் பழக்கமற்றவர்கள். யார் கண்டா என்ன ஆகுமோ ஏதோ,
> நமக்கேன் வம்பு, என்று தம் வழியில் செல்பவர்கள் என்று. அந்த பாலைவன
> அமைதியிலிருந்து இந்தத் தடவை ஏதோ மாற்றம் தெரிகிறது போலிருக்கிறதே. என்ன
> ஆயிற்று? தமிழ்னுக்கும் தமிழ் நாட்டுக்கும்? மரபு விக்கி சேர்க்கையிலிருந்து
> இங்கு எடுத்துப் போட்டாலே இந்த கதி. அங்கேயே இருந்தாலோ, இங்கு இந்தியாவில்
> ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கோடவுனில் மூட்டைகளை அடுக்கி வைத்து அது மக்கி
> வீணாவதைப் போலத்தான். கோதுமைக்கும் அரிசிக்குமே இந்த கதி என்றால், பரவு விக்கி
> சேமிப்புக்கு மாத்திரம் கதி வேறாகிவிடுமா என்ன? தமிழ் ஹிந்துவில் பிரசுரமான
> போது முதல் சில அத்தியாயங்கள் பொதுவான பழம் சரித்திரத்தைப் ப்ற்றிப் பேசியதால்
> கொஞ்சம் பேர் தம் அபிப்ராயத்தைச் சொன்னார்கள். பின்னால் வந்தவை நிகழ் கால
> எழுத்தைப் பற்றிப் பேசியதால், பரிச்சயம் இல்லாததாலோ அல்லது நிகழ்கால
> எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுவதால் “என்னத்துக்கு வம்பு? என்று
> இருந்துவிட்டார்களோ என்னவோ. மீர் சாஹிப், மீர் ஜாஃபரைப் பற்றிக் கருத்துச்
> சொல்லும் தைரியம் கருணாநிதியைப் பற்றியொ சோனியா காந்தியைப் பற்றியோ சொல்ல
> வந்துவிடுமா என்ன?
>
> இல்லை இன்னும் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம். தெரியவில்லை. வாயைத்
> திற்ந்தால தானே வம்பு?
>
> 2011/6/13 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > இன்று இக்கட்டுரையின் ஐந்தாம் பகுதியை இங்கே வெளியிடுகின்றேன். இதுவரை
> > வாசித்திராதவர்கள் வாசித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே..!
>
> > அன்புடன்
> > சுபா
>
> > *தலித்துகளும் தமிழ் இலக்கியமும்*
> > *வெ.சா*
>
> > *பகுதி 5*
> ...
>
> read more »