Archaeologist Amarnath Ramakrishna says he stands by his report on the excavations at the ancient site of Keezhadi

76 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 24, 2025, 2:38:33 PM5/24/25
to மின்தமிழ்
Archaeologist Amarnath Ramakrishna says he stands by his report on the excavations at the ancient site of Keezhadi

Archaeologist Amarnath Ramakrishna says he stands by his report on the excavations at the ancient site of Keezhadi in Sivaganga district. In his response to the Archaeological Survey of India (ASI), which had requested that he rewrite and resubmit his report, Mr. Ramakrishna firmly defended his conclusions.

Screenshot 2025-05-24 1.jpg

Screenshot 2025-05-24 news clip.jpg

Screenshot 2025-05-24 .jpg
-------------------------------------------------------------------------------------------------------------------

தேமொழி

unread,
May 25, 2025, 2:41:07 PM5/25/25
to மின்தமிழ்
ref:


🔹கி.மு. 8 ஆம் நூற்றாண்டு வரையிலான கீழடியின் தொல்லியல் ஆய்வை ஏற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு!

🔹வரலாற்று உண்மையை ஒதுக்கித் தள்ளி புராண அகத்தியரை முன்னிறுத்துவது ‘‘ஆரியர் – திராவிடர்’’ கண்ணோட்டமே!

🔹திராவிடப் பண்பாட்டை மீட்டெடுக்க விரைவில் போராட்ட அறிவிப்பு!

தமிழர் வரலாறு - பண்பாட்டின் மீதான தனது வெறுப்பை மீண்டும் ஒரு முறை ஆளும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தியுள்ளது.2,600 ஆண்டுகளுக்கும் முந்தைய தொன்மை வாய்ந்த கீழடி நகர நாகரிகம் அகழாய்வு மூலம் வெளிக்கொணரப்பட்டதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எழும் காழ்ப்பும், கோபமும் கொஞ்சநஞ்சமல்ல; ஆரியத்துக்கு மூத்த திராவிட நாகரிகத்தின் அறிவியல் சார்ந்த நிரூபணம் அவர்களுக்குத் தரும் அளப்பரிய ஆற்றாமையும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது.

🔹கீழடி ஆய்வை நிறுத்திட ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சிகள்!

2014-2015 ஆம் ஆண்டில் (முதல் ஆண்டு) கீழடியில், இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தொன்மைக்கான சான்றுகள் வெளிப்படத் தொடங்கின. அடுத்த ஆண்டு ஆய்வுகள் (2015-2016) நடைபெற்ற பின், கீழடியின் காலம் குறித்தும், தமிழ்நாட்டில் நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றாகவும், தொல்லியல் ஆய்வில் முதல்முறையாக வாழ்விடப் பகுதி கிடைத்த நிலையிலும், கீழடி ஆய்வை நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியது ஒன்றிய அரசு.

மூன்றாம் ஆண்டு ஆய்வு நிறுத்தப்பட்டது. அதற்கும் வழக்கு தொடர்ந்து, ஆய்வு தொடரப்பட வேண்டும் என்று போராட வேண்டியிருந்தது! ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அசாமுக்கு மாற்றப்பட்டார். அவரிடமிருந்து அகழாய்வுப் பணி பறிக்கப்பட்டு சிறீராம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. அவர் இனிமேல் கீழடியில் எதுவும் இல்லை என்று கூறினார். அதன்பின், தமிழ்நாட்டில் எழுந்த தொடர் எதிர்ப்பின் காரணமாக அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவருகிறது. இப்போது பத்தாவது ஆண்டு ஆய்வு நடைபெற்றுவருகிறது.

🔹கோயில்களை ஆய்வதிலேயே கவனம்!

1939 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் வைகை நாகரிகமும், பொருநை நாகரிகமும் சிந்துவெளிக்கு இணையான தொன்மை படைத்தவையாக இருக்கக்கூடும் என்று அந்நாளைய இந்தியத் தொல்லியல் துறையின் தலைவர் கே.என்.தீட்சித் என்பவர் முன்னறிவித்திருந்தும், அது குறித்த தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேயில்லை. தமிழ்நாட்டில் கோயில்களை ஆராய்வதிலேயே தொல்லியல் துறை அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. திராவிடப் பண்பாட்டின் தொன்மையை நிறுவும் ஆதிச்சநல்லூர் ஆய்வுகளும் முடக்கி வைக்கப்பட்டே இருந்தன. இந்நிலையில் கீழடி ஆய்வுகள் தான் மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கின. அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின் மூலம், இந்தியாவில் இரும்புக் காலத்தின் தொடக்கமே தமிழ்நாட்டிலிருந்து தான் என்னும் அளவுக்கு தொன்மைத் தடயங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரியது எத்தனை உண்மை என்பது தொடர்ந்து நிறுவப்பட்டுவருகிறது.

🔹புராணமும், வரலாறும் ஒன்றா?

காலம் காலமாக இந்திய வரலாற்றின் தொடக்கமே வேத கால நாகரிகம் தான் என்றும், புராணங்களும், இதிகாசங்களுமே இந்திய வரலாறு என்றும் அளந்துவிட்டுக் கொண்டிருந்தவர்களின் புளுகுகள் எல்லாம் சிந்துவெளி ஆய்வுகள் மூலம் அம்பலப்படத் தொடங்கின. தெற்கின் வரலாறு கீழடி ஆய்வுகள் மூலம் வெளிவரத் தொடங்கியதும், மொத்தமாக அவர்களின் பொய்மூட்டைகள் அடியற்றுப் போயின. சிந்துவெளி ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகத்தை, சரஸ்வதி நாகரிகம் என்று திரிக்க முயல்கிறார்கள். கிருஷ்ணனுக்கு ஆதாரம் துவாரகைக் கடலுக்குள் தேடுகிறோம் என்கிறார்கள். ஆனால், கிடைத்த ஆதாரங்களை அழிக்கவும், மொத்தமாக இழுத்துமூடவும் முயல்கிறார்கள்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கிடப்பில் போட, ‘ஆதாம் பாலம்’, ‘இராமர் பாலம்’ என்ற ‘புரூடா!’ வழக்கு விசாரணையின்போது பா.ஜ.க. ஆதாரம் தரவில்லை!

இந்நிலையில் பல்வேறு இடையூறுகளுக்குப் பின்னர் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான 982 பக்க ஆய்வு அறிக்கையை 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. அதை வெளியிடாமல் இருப்பதைக் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் அரசு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று ஆராய்வதற்கான கூட்டம் வரும் 27 முதல் 29 ஆம் தேதி வரை ஊட்டியில் நடைபெறவுள்ள நிலையில், கீழடி அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என்னும் கேள்விக்குப் பதில் அளிக்காமல் தப்பிப்பதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றொரு சதிச் செயலில் இறங்கியுள்ளது.

🔹அறிக்கை வெளியிடுவதிலும்
ஒன்றிய அரசின் தாமதம்!

முதல் இரண்டு ஆண்டுகளுக்கான கீழடி அகழாய்வு அறிக்கையை அந்தத் துறை சார்ந்த இரண்டு நபர்களிடம் கொடுத்து, சரிபார்க்கச் சொன்னதில், இவ்வறிக்கையில் கூடுதல் தகவல்கள் தேவை என்று அவர்கள் கேட்டிருப்பதாகவும், சிலவற்றுக்குச் சரியான ஆதாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறி, 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அறிக்கையில் திருத்தங்களைச் செய்யச் சொல்லி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன், அதாவது அறிக்கை தரப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கடிதம் அனுப்பியுள்ளது ஒன்றிய அரசின் தொல்லியல் துறை.
நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, கடந்த 2024 பிப்ரவரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் 9 மாதங்களுக்குள் அறிக்கையை வெளியிடுவோம் என்று உறுதியளித்த ஒன்றிய அரசு, 15 மாதங்கள் ஆன பின்பு, இப்போது திருத்தம் கோரி திருப்பி அனுப்புகிறது என்றால், இந்த ஆய்வின் மீது ஒன்றிய அரசுக்கு இருக்கும் வெறுப்பு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
கட்டுக்கதைகளைப் புறம்தள்ளி, ஆதாரக் குவியல்களுடனான ஆய்வறிக்கைகள் வழங்கப்படுவது – தங்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்று அஞ்சுகிறது ஆரியம்! தமிழின் தொன்மைக்கு எதிராக ஆரியக் கட்டுக்கதையான அகத்தியரை முன்னிறுத்தும் ஆர்.எஸ்.எஸ்.சும், ஒன்றிய பாஜக அரசும், கீழடியின் மீது காழ்ப்பு காட்டுவது ஏன்? ஏனெனில், இது அறிவியல் அடிப்படையிலான சான்று. அகஸ்தியர் கட்டுக்கதை - புராணப் புளுகுகளின் அடிப்படையில் கோரப்படும் 'வெற்று நம்பிக்கை’ என்னும் அறுந்த கயிறு!

🔹ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின்
பதில் கடிதம்!

கி.மு. எட்டாம் நூற்றாண்டு வரை கீழடியின் தொன்மைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்று அறிக்கையில் கூறப்படும் தகவல் மிகையானதாகத் தெரிகிறது என்றும், கி.மு.மூன்றாம் நூற்றாண்டு அளவில் வேண்டுமானால் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளது இந்தியத் தொல்லியல் துறையின் கடிதம். எத்தனை முரண்பாடு என்பதைப் பார்த்தீர்களா? எந்த ஆதாரமும் இல்லாத அகத்தியருக்கு விழா - சங்கமம் - கல்லூரி நிகழ்ச்சிகள் - ஆரவாரங்கள்! ஆனால், ஆதாரப்பூர்வமாக அறிவியல் ரீதியாக நிறுவப்படும் அறிக்கைக்கு ஆயிரம் தடைகள்! அறிக்கை தெளிவாகவே இருப்பதாகவும், திருத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் பதில் கடிதம் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களால் எழுதப்பட்டிருப்பதாக இன்று வந்த ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், கவிஞர் கனிமொழி கருணாநிதி, து.ரவிக்குமார் போன்றோர் அவையில் எழுப்பும் குரலும், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும், சான்றோர் அவையிலும் நம்மைப் போன்றோரும், மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன், வழக்குரைஞர் கனிமொழி மதி உள்ளிட்டோரும் எழுப்பும் குரலும், குறிப்பாகத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் அறிவியல் ரீதியாக உண்மைகளை வெளிக் கொண்டு வர மேற்கொள்ளும் முயற்சிகளும் மக்களை இப் பிரச்சினையில் விழிப்புடன் வைத்திருக்கும் இந்தச் சூழலிலும் ஒன்றிய அரசு இத்தனைத் தடைகளை, இடைஞ்சல்களை ஏற்படுத்த முயல்கிறதென்றால், அவர்களின் உள்நோக்கம் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது அல்லவா? இந்தியாவின் ஒற்றுமை, வரலாறு என்றெல்லாம் பேசுபவர்கள், அந்த வரலாறும் தொன்மையும் தமிழ்நாட்டில் இருக்கிறது - மதச்சார்பற்றதாக இருக்கிறது - ஆரியத் தொடர்பற்று இருக்கிறது என்றதும் அதை மறைக்க எத்தகைய நேர்மையற்ற நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் உறுதியோடு நாம் போராட வேண்டும்
திராவிடப் பண்பாடும், வரலாறும் மீட்டெடுக்கப்பட்டு, உண்மை வரலாறு எழுதப்பட இன்னும் உறுதியோடு நாம் போராட வேண்டும் என்பதைத் தான் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.

இதுபற்றி ஒத்தக் கருத்துள்ளவர்கள் திரண்டு, முக்கிய பெருநகரங்களில் அறப்போர் நடத்த விரைவில் அறிவிக்கப்படும்.

- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
24.5.2025

தேமொழி

unread,
May 25, 2025, 2:53:15 PM5/25/25
to மின்தமிழ்
keezhadi.jpg
கீழடி அறிக்கை விவகாரம்... என்ன நடக்கிறது? - பத்திரிகையாளர் சிவப்ரியன்


On Saturday, May 24, 2025 at 11:38:33 AM UTC-7 தேமொழி wrote:

தேமொழி

unread,
Jun 11, 2025, 4:59:06 PM6/11/25
to மின்தமிழ்
கீழடி ஆய்வறிக்கை; “இன்னும் வலுவான ஆதாரங்கள் தேவை” - மத்திய அமைச்சர்!
 https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/union-minister-says-stronger-evidence-needed-keezhadi-research-report

நக்கீரன் செய்திப்பிரிவு
11/06/2025 | Edited on 11/06/2025
 
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் 2 கட்டங்களாக அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இந்த அகழாய்வு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இருப்பினும் முதல் 2 கட்ட அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை தொல்லியல்துறை ஆய்வாளர் அமர்நாத் இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் மத்திய தொல்லியல் துறை இந்த அறிக்கையை இதுவரை பொதுவெளியில் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது. அதேபோன்று அகழாய்வின் போது கிடைத்த பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 4ஆம் கட்ட அகழாய்வை தொடங்கிய நிலையில் தற்போது 10ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தான் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்காதது ஏன்? என்று விளக்கமளித்திருந்தார். அதில், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டியிருக்கின்றன. அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,”தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம்.

ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை. அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடரவிரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

தேமொழி

unread,
Jun 12, 2025, 1:50:53 AM6/12/25
to மின்தமிழ்

santhalingam.jpg
அறிவியல் அவர்களுக்கு எதிராக இருக்கிறது - தமிழ்நாட்டை முடக்க நினைக்கிறார்கள்!
-தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம்
__________________________________________________________________________

தேமொழி

unread,
Jun 13, 2025, 3:09:49 AM6/13/25
to மின்தமிழ்

Another round of Centre-south clash as Union minister says Keeladi report ‘needs scientific validation’
Gajendra Singh Shekhawat says report submitted to ASI by archaeologist Amarnath Ramakrishna—who found an ancient civilisation in Keeladi—not technically supported yet.

Prabhakar Tamilarasu
11 June, 2025 10:23 am IST



Chennai: Union Minister Gajendra Singh Shekhawat has said that the archaeological findings from the Keeladi excavation site in Tamil Nadu require further scientific validation before it is given official recognition.

The report submitted to the Archaeological Survey of India (ASI) by archaeologist Amarnath Ramakrishna, who conducted the first two phases of excavation at Keeladai, lacked sufficient technical support, the culture minister told reporters Tuesday.

“The reports are not yet technically well supported. A lot remains to be done before recognising the findings presented by the archaeologist who conducted the survey. Let them come with more results, data and evidence. Because, a single finding cannot change the entire discourse,” he added.

The culture minister also expressed concerns over attempts to politicise the archaeological findings and using the new findings and discoveries to trigger the regional sentiments.

“People in the positions are trying to use it to grow their regional sentiments. That is not good. We have to be very cautious about it. Let archaeologists, historians and technical experts discuss this and let politicians leave it to them,” he said.

Keeladi is an archaeological excavation site located on the banks of Vaigai river at Sivagangai district. The ASI unearthed over 20,000 artifacts and dated them back to 6th century BCE, which was supported by advanced dating techniques

Tamil Nadu Minister for Archaeology Thangam Thennarasu responded to Shekhawat’s statement, saying that history and truth would not wait for cheap politics.

“Even though world scientific studies agree that we are 5350 years old; technologically advanced, and have an ancient civilization, why is the Union Government in the same country so reluctant to admit it? Is it because of the unquenchable thirst to keep Tamils as second-class citizens forever,” Thangam Thennarasu questioned in his post on ‘X’.

“When the Prime Minister said in Parliament that ‘Sanskrit is the mother tongue of all Indian languages,’ we didn’t ask, ‘What is the scientific evidence?’ Because no such study has been conducted.”

Madurai MP Su Venkatesan also took a dig at the Union minister, stating that he cannot do further examination since “cow remains are not available now”

“Scientific institutions have conducted research on the history of Keezhadi and submitted reports. The bones of the cows found in Keezhadi have been examined. But since the cow remains are not available now, there is no opportunity for further examination, Minister,” the CPI(M) MP said in a post Tuesday on ‘X’.

Also Read: Tamil Nadu is waging a new North-South clash of civilisations— Sivagalai to Keezhadi

Journey of Keeladi excavation
In 2013-14, Superintending Archaeologist K Amarnath Ramakrishna conducted a survey on the banks of the Vaigai river and identified as many as 293 potential archaeological sites including the Keeladi in Sivagangai district for excavation because of its proximity to Madurai district.

In 2015, the ASI began its first phase of excavation at Pallichanthai Thidal in Keeladi where the archaeologists excavated artifacts suggesting an early urban settlement which includes brick stricture, and potteries, referring to the Sangam era.

The next year, Amarnath unearthed about 5,800 artifacts which include potsherds inscribed with Tamil-Brahmi scripts, and other evidence of trade links. Carbon dating of the charcoal samples dated the settlement to around 200 BCE and some of the findings even suggested early dates of 6th century BCE.

It was at this juncture that the ASI transferred the archaeologist to Guwahati circle. This sparked controversy in Tamil Nadu, with political parties alleging that the ASI was attempting to suppress the findings of archaeological sites which discovered the ancientness of Tamil.

The ASI appointed archaeologist P.S Sriraman to continue the third phase of excavation in 2017 and concluded it in September that year stating that there were “no significant findings” This again triggered widespread criticism from Tamil Nadu politicians.

Subsequently, in 2017, a Public Interest Litigation (PIL) was filed in the Madras High Court, urging the excavation be and publishing of Amarnath’s report. The HC then directed the Tamil Nadu State department of Archaeology (TNSDA) to take over the excavations from the fourth phase onwards and continue the excavation.

The TNSDA then unearthed about 5,820 artifacts, including brick structures and gold ornaments. Samples dated by Beta Analytic Lab in Miami dated the samples to be between 6th century BCE and 1st century BCE, pushing the Sangam Era further back.

In 2023, Amarnath submitted a 982-page report on the first two phases of Keeladi excavation, which had reports on the evidence of urban structure, pottery and trade network. It was also said that the report placed the Keeladi settlement between 8th century BCE and 3rd century BCE.

Two years after the submission of the report, on May 21, 2025, the ASI wrote to the archaeologist to revise his report to enhance authenticity and question the classification of historical period and dating the site earlier to 300 BCE. He refused to revise the report, saying that his report was backed by scientific evidence.

தேமொழி

unread,
Jun 13, 2025, 4:13:17 PM6/13/25
to மின்தமிழ்

India's second urbanisation: It's confirmed, Keeladi is as old as the Gangetic plains; radiocarbon dating traces site's origins to 580BCE

- A Ragu Raman / TNN / Jun 13, 2025

Excavations at the Keeladi site in Tamil Nadu have revealed an urban settlement dating back to the 6th century BCE, contemporary with the Gangetic plains urbanization. Discoveries include brick structures, artifacts indicating a literate society, and evidence of trade routes. Ongoing research aims to reconstruct the life and identity of the ancient Tamils who inhabited the region.

தேமொழி

unread,
Jun 20, 2025, 8:14:28 PM6/20/25
to மின்தமிழ்
அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிவும் அஞ்சாமையும் : முரசொலி பாராட்டு

amarnath ramakrishnan .jpg

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages