சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்.

3 views
Skip to first unread message

srirangammohanarangan v

unread,
Jan 12, 2010, 12:56:14 PM1/12/10
to minT...@googlegroups.com
கிழக்கின்  கடலொன்று   கடல்  கடந்து  வருகுது
கீர்வாண   ஞானமெல்லாம்  அலையெறிந்து  பொங்குது
போர்வான   நாடுகளில்  பக்திப்  புயல்  அடிக்குது
சோர்வான    உள்ளமெல்லாம்   ஸோஹம்  என்று  பாடுது 
சொந்த  நாட்டு  சோதரரின்   சோகம்   உள்ளே வாட்டுது 
எந்தக்  காட்டுள்  போனாலும்  சிந்தாகுலம்  ஆகுது 
பந்தம்  அறுத்துப்  பற்றறுத்துப்  பார்சுற்றியாய்  ஆனாலும் 
பாரதத்தின்   சொந்தம்  மட்டும்  பாரமாக   கனக்குது  
 
கிழக்கின்  கடலொன்று   கடல்  கடந்து  வருகுது 
கீர்வாண  ஞானமெல்லாம்  அலையெறிந்து  பொங்குது 
 
காளி  கோவில்  பூசாரி  கர்ப்பம்  தரித்த  கனவிது 
காலமெல்லாம்   தொட்டில்  கட்டித்  தாலாட்டும்  விதியிது 
ஞாலமெங்கும்    ஞானமாகிக்  கோலம்  கொண்ட  கொள்கையில் 
சீலம்  மிக்க  தெய்வம்  வந்து  சீர்படுத்தும்    சதுரிது 
மேலை  நாட்டு  மோஹமும்  தெரிந்ததுபோல்  மத  வேகமும் 
கூலமாகிப்  பிரிவினையில்   மாச்சரியப்  புன்யூகமும் 
புலனுகர்வில்  காமமும்  பொறாமையால்  பெருங் கோபமும் 
அன்றாடம்  ஓடும்  வாழ்வில்  அமைந்துவிட்ட  லோபமும் 
பொன்ற  எழும்    புலரியென    புறப்பட்டு  வரு  தீரமும் 
மன்பதைக்கு  மனம்  உருக  மடை  திறந்த  ஈரமும் 
மனிதர்  எல்லாம்  நடைபயின்ற  கடவுள்  என்ற  தேற்றமும்  
புனிதமாக்கப்  பாமரத்தை    நட்ட  வித்தின்  விளைச்சலாய்க்  
கனிந்த  காலக்  கடைக்கண்  ஓடி  குவிந்த   காதின்  குழையொலி 
சினுசினுங்க   சீவனோங்க    சுருதியின்  கீதம்  பாடியே 
 
கிழக்கின்    கடலொன்று    கடல்  கடந்து   வருகுது 
கீர்வாண     ஞானமெல்லாம்   அலையெறிந்து   பொங்குது 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

 
(படம்  நன்றி:  நம்பிக்கையில்  இடுகை), Sankar Kumar  wrote:
ஞானச் சுடரைப் பணிவோம்! எழுவோம்!



?ui=2&view=att&th=126201efb33571ae&attid=0.1&disp=attd&realattid=ii_126201efb33571ae&zw



--

swami-vivekananda.jpg

shivan .

unread,
Jan 12, 2010, 1:25:40 PM1/12/10
to mint...@googlegroups.com
உள்ளத்திலிருந்து வந்திருக்கிறது.
வணக்கங்கள்.

2010/1/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

swami-vivekananda.jpg

annamalai sugumaran

unread,
Jan 12, 2010, 1:55:06 PM1/12/10
to mint...@googlegroups.com
இன்று காலையிலேயே நினைத்தேன்
அறிவுச்சுடரின் பிறந்த நாள் இன்று என்று .
இங்குமாணவர்களின் பேரணி ஒன்றை ஒரு பள்ளி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது
நினைத்து கொண்டே இருந்தேன் அருமையாக செய்து விட்டீர்கள்
அன்புடன்
ஏ சுகுமாரன்

2010/1/12 shivan . <siva...@gmail.com>



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !
swami-vivekananda.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages