சிவகாமிப்பாட்டியின் சித்தக் கலக்கல் - காயமே இது காற்றடைத்த பையடா பேராண்டி

409 views
Skip to first unread message

கணினிதாசன்

unread,
Mar 4, 2015, 12:35:56 PM3/4/15
to mint...@googlegroups.com

சிவகாமிப் பாட்டி:  என்னடா பேராண்டி ஆளே காணோம் என்ன ஆச்சு

பேராண்டி: குழந்தை அழுதுச்சு பாட்டி உன் பேராண்டிக்கு சர்க்கரை அதிகமாகி கண்ணைத் தாக்கீடுச்சு.  அதுக்காம மருத்துவ சோதனைகள் தொடர்ந்து நடக்குது.  எல்லாம் கருவிமயம்.  ஆளப்புடிச்சு ஒவ்வொரு கருவியுடன் இணைத்து ஏதோ கணக்குப் போடறாய்ங்க.  எல்லாம் நர்ஸ்மாருங்கதான் செய்யுறாங்க.  டாக்கடரை எங்கேயோ ஒரு ஓரமா ஒளிச்சுவச்சிட்டு மிஷினக்காட்டிய்ந்ந் துட்டைக் கற்றக்குறாங்க பாட்டி

சிவகா: எங்க காலத்தில் இங்கிலீஸ் டாகடரைக் கண்டால் எல்லாரும் பயந்தோடுவோம்.  இத்தனைக்கும் அவர் உட்காரச் சொல்லி நாக்கை நீட்டச் சொல்லுவார் கண் இமையைத் தூக்கிப் பார்ப்பார் ஸ்ட்தாஸ்கோப் வச்சு இதயத் துடிப்பை அளப்பார்.  அதுக்கே அவ்வளவு பயம்.  எல்லாம் முடிஞ்சதும் புரியாத கையெழுத்தில் எதையோ எழுதுவார்.  அந்த கம்பவுன்டர் மாத்திரைகலர்த் திரவம் குடுத்து வீட்டுக்கு அனுப்புவாங்க.இப்ப டாகர்கள்பலவிதமா படிச்சு தொழில் செய்யுறாங்கபோல

பேரா:  பாட்டி இப்ப ஆங்கில மருத்துவம் எங்கேயோ எட்டமுடியாத உயரத்துக்குப் போயிடுச்சு. குடும்ப் டாக்டர் பாட்டி வைத்தியம் எல்லாம் படுத்துப் போச்சு பாட்டி.  பெருசாப் பேசறதுக்கு நம்ம உள்ளூர் வைத்தியத்தில் என்ன இருக்கு பாட்டி

சிவகா: அடே பேராண்டி மட்டம்தட்டிப் பேசாதடா. உன் ஊர் சித்தர்கள் வாழ்ந்த பூமி.  சித்தர்கள் சிந்தனைகளை மட்டமா நினைக்காதே

பேரா: அப்படி என்னதான் இருக்குது பெரிசாப் பாராட்ட சொல்லு பாட்டி

சிவகா: பேராண்டி சித்தர்கள் உயிர்வாழ் இனங்களை மிகத் தெளிவாகப் பிரித்துப்பட்டியலிட்டிருக்கிறார்கள். 

ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற் காலோர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
அந்தமில் சீர்த்தாவரநா லைந்து.

ஊர்வன : 11
மானுடம் : 9
நீர் :10
பறவை :10
நாற்காலோர் :10
தேவர் :14
தாவரம்(4*5) : 20
******************
மொத்தம் = 84
******************

ஆக 84 இலட்ச தோற்றபேத ஜீவராசிகளாகும்

இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் சித்தர்கள் ஏழுவகையாகப் பிரித்துள்ளனர்.  அவற்றில் நான்கு குட்டிபோடும் பிரிவுகளாகும்

தரையில் ஊர்ந்து செல்வது 11 லட்சம் தோற்றபேதங்கள் உதாரணமாக பாம்பு, பல்லி, தேள், நட்டுவாக்கிளி, புழு போன்றவைகள். 
மானுடம் 9 லட்சத் தோற்ற பேதமுடைய மனிதர்கள். 
நீர்வாழ் ஜீவராசிகள் பத்துலட்ச தோற்ற பேதமுடையவைகள். உதாரணமாக மீன், திமிங்கலம், முதலை, தவளை போன்றவை. 
பறவை இனங்கள் 10 லட்ச தோற்ற பேதமுடையவை. உதாரணமாக புறா, காகம், கிளி போன்றவை. 
நாற்காலோர்(நான்கு காலுடைய ஜீவராசிகள்) பத்து லட்ச தோற்ற பேதங்கள். உதாரணமாக யானை, குதிரை, மான் போன்றவை.

நமது கண்களுக்குப் புலப்படாத 14 லட்சம் தேவர்கள் இருக்கிறார்கள். 
தாவரங்கள் மட்டும் 20 லட்சம் தோற்ற பேதங்கள் கொண்டவை. 

இயற்கையான மனிதனும் மனிதனால் மாற்றப்பட்ட இயற்கையும்

மனிதர்கள் உட்பட மற்ற எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ இயற்கை கொடுத்தது. புல், செடி, கொடி, மரம் நான்குதான். 
புல் வகை என்பது குறுகிய கால பலன் தரக்கூடிய கம்பு, நெல், கேழ்வரகு, சோளம் போன்றவை. 
செடி என்பது மிளகாய், தக்காளி, கொத்தவரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை. 
கொடி வகைகள் : அவரைக்காய், புடலங்காய், பீக்கங்காய், சுரக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் மற்றும் சில கொடி வகை மூலிகைகளும், வேலிப்பருத்தி முதல் உண்டு. 
மரம் : மா, தென்னை, பனை ஆகிய கணக்கில் அடங்கா வகைகள்.

மனிதனுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பசி இயற்கையே. 
அதனதன் உடல் இயல்புக்கேற்ப உணவும் இயற்கையே, 
அதை உண்ணுவதும் இயற்கையே, 
அதை உண்டபின் ஜீரணமாகக்கூடிய இயல்பும் இயற்கையே. 
உணவில் உள்ள சத் அசத்தை பிரித்து, அசத்சை நீக்கி, சத்தை மனிதனுக்கு 72 ஆயிரம் நாடி நரம்புகளையும் உரமேற்றுவதும் இயற்கையே. 
பின்பு அதன் காரணமாக மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்த கரணங்களும் இயற்கையே. 
மெய், வாய், கண், மூக்கு, செவி, என்று சொல்லப்பட்ட பொறிபுலன்கள் அடங்கிய தத்துவம் 96ம் இயற்கையின் செயல்பாடுகளே. 
பசியும் இயற்கையே,  
உண்ணுவதும் இயற்கையே, 
அறுசுவையும் இயற்கையே, 
உறங்குவதும் இயற்கையே, 
உறங்கி விழிப்பதும் இயற்கையே,
 உடல் இன்பமும் இயற்கையே, 
கரு கூடி பின் குழந்தை ஆவதும் இயற்கையே. 
ஆக அனைத்தும் இயற்கையின் செயல்பாடாகும்.

பேரா: என்ன பாட்டி எல்லாம் இயற்கையே என்று நீட்டி முழக்கினால் என்ன பயன் 

சிவகா:பேராண்டி சித்தர்கள் உலகில் உயிர்வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் பிறப்பும் இறப்பும் கால அளவில் இறுதிசெய்யப்பட்டு அவை அக்கால நியதிக்குட்பட்டுத் தோன்றிமறைவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  மனிதன் மட்டுமே அவர் பிறப்பையும் இறப்பையும் குறைக்கவோ நீட்டவோ இயலும்.  இயற்கையான குழந்தை பிறப்பை செயற்கையாகத் தடை செய்யவும் வாழ வேண்டிய பருவத்தில் மற்றவரை வதைப்பதும் தன்னைத்தானே கொலைசெய்வதும் அவன் கற்றுக்கொண்டு அவனை அண்டிய மற்ற உயிரினங்களின் வாழ்க்கையிலும் அவற்றை அழிக்கவும் வதைக்கவும் கற்றுக்கொண்டான் என்பது சித்தர்கள் தெரிவிக்கும் கருத்துடா பேராண்டி

பேரரா"பாட்டி சித்தர்களும் ஆழ்வார்களும் நூற்றாண்டுகள் வாழ்ந்ததாகவும் திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கதை சொல்கிறார்களே அது உண்மையா பாட்டி

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). 
இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். 
இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். 

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை

(இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

(ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம்.)

பேரா: பாட்டி நூறாண்டுகளுக்குமே வாழ்வது இந்த விஞ்ஞான யுகத்தில் பெரிய காரியமில்லை பாட்டி.  ஆனால் அவன் நோயுடன் நூறாண்டு வாழ்தைவிட நோயில்லாமல் சிலகாலம் இருந்து இறப்ப்தே மேல் இல்லையா 

சிவகா:  பேராண்டி இயற்கையுடன் இயைந்த வாழும் வாழ்வில் நோய்க்கு இடமில்லை.  இஅய்ற்கையை எதிர்த்து இயற்கை நியதிக்கு மாறாக வாழும் வாழ்வில் நோய் ஏற்படுவது இயற்கை.  இன்றைய விஞ்ஞானத்தால்கூட இறுதி செய்யமுடியாத நோயின் எண்ணிக்கைகளை உறுப்புவாரியாகச் சித்தர்கள் பட்டியலிட்டுள்ளர்களே பேராண்டி

பேரா:  அப்படியா ஆச்சரியமாக உள்ளது எங்கே கொஞ்சம் எடுத்துவிடு பாட்டி

சிவகா: சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். மேல்நாட்டு மருத்துவம் இவ்வாறு பட்டியலிட்டுச் சொல்ல முடியாமல் தடுமாறுதே பேராண்டி

மேல்நாட்டு மருத்துவம் உடலின் முக்கிய உறுப்புகளை மட்டும் நோக்குவதாக அமைந்துள்ளது தமிழ்ச் சித்தர்கள் 72 ஆயிரம் நரம்புகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தியவர்கள்.  நீ சொன்ன கருவிகள் எதுவும் இல்லமலே நாடி பிடிதே நோய் நாடி நோய் முதல்நாடி அதை முற்றும் அகற்றும் திறனை வளர்த்துக்கொண்டவர்கள்.  வர்மக்க்லை மூலம் உடம்பை அறுக்காமல் நரம்பு மூலங்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் நோயைக் குணப்படுத்தியுள்ளார்கள் பேராண்டி.  மென்மையான மனித உடம்பை வர்மக்கலைப் பயிற்சிமூலம் வலிமைமிக்க மன உடல்வலிமையைப் பெறும் வழியை உருவாக்கியவர்கள்ம் சித்தர்களே பேராண்டி

பேரா:  இவ்வளவு சிறப்புமிக்க சித்தர்களைத் தமிழர்கள் ஏன் பெரிதாக மதிக்கவில்லை பாட்டி

சிவகா: பேராண்டி இவ்வுலக வாழ்வில் பற்றில்லாமல் மேலுல்கை அடைய முயற்சி செய்வதே ஆன்மீகம் என்று கருதியவர்கள் தாம் அறிந்த அறிவை மறைத்துவைத்து அந்நியர்கையில் சிக்காமல் போற்றிப் பாதுகாத்து இவ்வுகல வாழ்வில் மனிதன் நோயின்றி வாழ உறுதுணையாக இருந்தவர்களை இவ்விலக வாழ்வில் நாட்டமுள்ளவர்கள் என்று குற்றம்சாட்டி ஆன்மீகவாதிகள் ஒதுக்கிவிட்டார்கள்.  சித்தர்களின் அறிவுவளங்கள் இன்று பலருக்கும் புரியாத புதிராக மாறிப்போனது. உலகமயமாதலில் இப்போது பாட்டிவைத்தியம் மேல்நாடுகளுக்கும் மேல்நாட்டு அரைகுறை வைத்தியம் தமிழ்நாட்டுக்கும் வந்த்விட்டது காலத்தின் கோலமடா பேராண்டி

பேரா:  பாட்டி உன் சித்தர் கலக்கல் செமக் கலக்கல் பாட்டி

சி. ஜெயபாரதன்

unread,
Mar 4, 2015, 2:54:14 PM3/4/15
to mintamil, vallamai

Ayurveda (Sanskrit: Āyurveda आयुर्वेद, "life-knowledge"; English pronunciation /ˌ.ərˈvdə/[1]) or Ayurvedic medicine is a system of Hindu traditional medicine[2] native to the Indian subcontinent. Practices derived from Ayurvedic traditions are a type of alternative medicine.[3] Ayurveda is a discipline of the upaveda or "auxiliary knowledge" in Vedic tradition. The origins of Ayurveda are also found in the Atharvaveda,[4][5] which contains 114 hymns and incantations described as magical cures for disease. There are also various legendary accounts of the origin of Ayurveda, e.g., that it was received by Dhanvantari (or Divodasa) from Brahma.[6][7][8] Ayurvedic practices include the use of herbal medicines, mineral or metal supplementation (rasa shastra), surgical techniques, opium, and application of oil by massages.

Originated in prehistoric times,[9] some of the concepts of Ayurveda have been discovered since the times of Indus Valley Civilization and earlier.[10] Ayurveda significantly developed during the Vedic period and later some of the non-Vedic systems such as Buddhism and Jainism also incorporated in the system.[10][11] Balance is emphasized, and suppressing natural urges is considered unhealthy and claimed to lead to illness.[12] Ayurveda names three elemental substances, the doshas (called Vata, Pitta and Kapha), and states that a balance of the doshas results in health, while imbalance results in disease. Ayurveda has eight canonical components, which are derived from classical Sanskrit literature. Some of the oldest known Ayurvedic texts include the Suśrutha Saṃhitā and Charaka Saṃhitā, which are written in Sanskrit. Ayurvedic practitioners had developed various medicinal preparations and surgical procedures by the medieval period.[13]

The eight components of Ayurveda

The canonical components of Ayurveda are derived from classical Sanskrit literature, in which Ayurveda was called "the science of eight components" (Sanskrit aṣṭāṅga अष्टांग). The components are:[17][18][19][20][21][22]

  • Kayachikitsa (general medicine): "cure of diseases affecting the body".
  • Kaumāra-bhṛtya and Bala Roga: deals with the treatment of children.
  • Shalya tantra deals with surgical techniques.
  • Śālākya-tantra (ophthalmology) deals with diseases of the teeth, eye, nose, ear etc.
  • Bhuta-vidya deals with the causes, which are not directly visible and not directly explained by tridosha,[22] pertaining to micro-organisms or spirits.[23][24]
  • Agada-tantra deals with antidotes to poison.
  • Rasayana-tantra (Geriatrics)/(Anti Agings) : deals with rejuvenation.
  • Vajikarana tantra (aphrodisiacs) deals with healthy and desired progeny.

India

According to some sources, up to 80 percent of people in India use some form of traditional medicine, a category which includes Ayurveda.[75][76]

In 1970, the Indian Medical Central Council Act which aimed to standardise qualifications for Ayurveda practitioners and provide accredited institutions for its study and research was passed by the Parliament of India.[77] In 1971, the Central Council of Indian Medicine (CCIM) was established under the Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (AYUSH), Ministry of Health and Family Welfare, to monitor higher education in Ayurveda in India.[78] 

The Indian government supports research and teaching in Ayurveda through many channels at both the national and state levels, and helps institutionalise traditional medicine so that it can be studied in major towns and cities.[79] The state-sponsored Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) is designed to do research on Ayurveda.[80] Many clinics in urban and rural areas are run by professionals who qualify from these institutes.[77] As of 2013, India has over 180 training centers offer degrees in traditional Ayurvedic medicine.[32][81]

To fight biopiracy and unethical patents, in 2001 the government of India set up the Traditional Knowledge Digital Library as a repository for formulations of various systems of Indian medicine, such as Ayurveda, Unani and Siddha.[82][83] The formulations come from over 100 traditional Ayurveda books.[84]

++++++++++++++++

இந்திய ஆயுர்வேதிக் மருந்துகள் எல்லாம் ஆன்மீகம் நம்பாத நாத்திகர் கண்டு பிடிப்புகளா ?  மெட்டா பிசிக்ஸ் ஞானமுள்ள சித்தர் எல்லாம் நாத்திகரா ?

சி. ஜெயபாரதன்.

++++++++++++++

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 4, 2015, 3:04:07 PM3/4/15
to mint...@googlegroups.com
மின்தமிழ் சார்பில் ஒரு வேண்டுகோள் ...

///
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை
///
என்ற குறிப்பில் காணப்படும் ....
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை என்பதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்பது வேண்டுகோள்.

மற்ற முயற்சிகளுக்கும் மருத்துவர் ஒருவரை அணுகி அவர் அனுமதியுடன் செய்தல் நலம்.

..... தேமொழி

...

Suba.T.

unread,
Mar 4, 2015, 3:20:42 PM3/4/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-04 21:04 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மின்தமிழ் சார்பில் ஒரு வேண்டுகோள் ...

///
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை
///
என்ற குறிப்பில் காணப்படும் ....
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை என்பதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்பது வேண்டுகோள்.

​நிச்சயமாக நான் செய்ய மாட்டேன்..
பத்வை எழுதியவர்களே செய்து பார்த்து பின்னர் தெரிவித்தால் யோசிக்கலாம்..

சுபா

Oru Arizonan

unread,
Mar 4, 2015, 6:02:38 PM3/4/15
to mintamil
சித்து விளையாட்டு விளையாடி இருக்கிறீர்கள், சித்தரே!  இன்னும்பல சித்து விளையாட்டுத் தகவல்களைக் கொடுங்கள்.

சித்தரின் சின்னத்தம்பி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Mar 4, 2015, 8:08:46 PM3/4/15
to மின்தமிழ்

2015-03-05 1:34 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை என்பதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்பது வேண்டுகோள்.

மற்ற முயற்சிகளுக்கும் மருத்துவர் ஒருவரை அணுகி அவர் அனுமதியுடன் செய்தல் நலம்.

​இருந்தாலும் இவ்வளவு தூரம் எச்சரிக்கை எத்திராணியாகி சிவப்பு விளக்குக் காட்டவேண்டாம் என்பது பாட்டியின் வேண்டுகோள்

சித்தர்கள் மட்டுமல்ல ​இன்றைய நவீன மருத்துவர்களும் மனிதன் மூச்சை அடக்கித் தன்னைத் தற்கொலை செய்துகொள்ள முடியாது என்று அறுதியிட்டுக் கூறுவதாக சிவகாமிப்பாட்டி சொல்கிறார்.  யாராவது ஒருத்தர் மூச்சை அடக்கி உயிர் நீத்ததற்கு ஆதாரம் இருந்தால் கொடுக்கவும் என்று கூவுகிறார்

அவருக்குச் சரியான சவால் தேடுபுலிதான் 
பாப்பம் 
சபாஷ் சரியான போட்டி என்று யாரோ ஒரு வஞ்சிக்கோட்டை வாலிபன் வீரப்பா கூறுவது காதில் கேட்கிறது
கணினிதாசன்

Nagarajan Vadivel

unread,
Mar 4, 2015, 8:20:33 PM3/4/15
to மின்தமிழ்

2015-03-05 1:50 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
நிச்சயமாக நான் செய்ய மாட்டேன்..
பத்வை எழுதியவர்களே செய்து பார்த்து பின்னர் தெரிவித்தால் யோசிக்கலாம்..

​அஸ்க் புஸ்க் ஆசை தோசை
என்ன பேராசை எடுத்த எடுப்பிலேயே சிகரம் தொடும் கெட்ட எண்ணம்
முதல்ல கூரை ஏறிக் கோழி பிடிக்கனும்
நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்து 83 வயசைத் தாண்டுங்க தாயி
அப்புறம் 0 சுவாசத்துக்குப் போயி வானம் ஏறி வைகுண்டம் போகலாம்
மேலைநாட்டு மருத்துவம் மனித உடல் நீரால் ஆனது என்று கூற தமிழ்நாட்டுச் சித்தர்கள் காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பை என்று கூறினார்கள்
ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.21,600 ஆகும்

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்
ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்.

இது பழனிச் சித்தர் கூற்று என்று சிவகாமிப்பாட்டி அடித்துக் கூறுகிறார்

கணினிதாசன்

ராம் காமேஸ்வரன்

unread,
Mar 4, 2015, 9:31:02 PM3/4/15
to mint...@googlegroups.com
அனைத்து மிருகங்களுக்கும் ஆயுளில் சராசரியாக 100 கோடி இதயத் துடிப்பு இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள்.
மேலும் ஒரு மிருகத்தின் சைஸ் (மற்றும் எடைக்கும்) அதன் இதயத் துடிப்புக்கும் விகிதசமன்பாடு உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
மனிதன் இந்த சமன்பாட்டு லிமிட்டை தாண்டிய ஒரு outlier.
இந்த PBS கானொளி இதை அழகாக விளக்குகிறது

shylaja

unread,
Mar 5, 2015, 5:58:15 AM3/5/15
to mintamil

2015-03-04 9:35 GMT-08:00 கணினிதாசன் <radius.co...@gmail.com>:

சிவகாமிப் பாட்டி:  என்னடா பேராண்டி ஆளே காணோம் என்ன ஆச்சு>>>நானே  நினச்சேன் சி. பாட்டியை ரொம்பநாளா   காணமேன்னு,,மகாமகத்துக்குதான்  வரணும்னு திட்டம் போலும்:)  ..

பேராண்டி: குழந்தை அழுதுச்சு பாட்டி உன் பேராண்டிக்கு சர்க்கரை அதிகமாகி கண்ணைத் தாக்கீடுச்சு.  அதுக்காம மருத்துவ சோதனைகள் தொடர்ந்து நடக்குது.  எல்லாம் கருவிமயம்.  ஆளப்புடிச்சு ஒவ்வொரு கருவியுடன் இணைத்து ஏதோ கணக்குப் போடறாய்ங்க.  எல்லாம் நர்ஸ்மாருங்கதான் செய்யுறாங்க.  டாக்கடரை எங்கேயோ ஒரு ஓரமா ஒளிச்சுவச்சிட்டு மிஷினக்காட்டிய்ந்ந் துட்டைக் கற்றக்குறாங்க பாட்டி>>
 
 சர்க்கரைவர்த்தியானா   இதான் பிரச்சினை  கண்ணைப்போய் தாக்கி விட்டதே பாவம்.. கவனமா  இருக்க சொல்லுங்க,, ஆனாகருவிகளுக்கு மத்தில உங்க  பேராண்டி கணிணில கண்பதிச்சிட்டு  இருக்கறத நீங்களும் கவனிங்கபாட்டி:)

சிவகா: எங்க காலத்தில் இங்கிலீஸ் டாகடரைக் கண்டால் எல்லாரும் பயந்தோடுவோம்.  இத்தனைக்கும் அவர் உட்காரச் சொல்லி நாக்கை நீட்டச் சொல்லுவார் கண் இமையைத் தூக்கிப் பார்ப்பார் ஸ்ட்தாஸ்கோப் வச்சு இதயத் துடிப்பை அளப்பார்.  அதுக்கே அவ்வளவு பயம்.  எல்லாம் முடிஞ்சதும் புரியாத கையெழுத்தில் எதையோ எழுதுவார்.  அந்த கம்பவுன்டர் மாத்திரைகலர்த் திரவம் குடுத்து வீட்டுக்கு அனுப்புவாங்க.இப்ப டாகர்கள்பலவிதமா படிச்சு தொழில் செய்யுறாங்கபோல

பேரா:  பாட்டி இப்ப ஆங்கில மருத்துவம் எங்கேயோ எட்டமுடியாத உயரத்துக்குப் போயிடுச்சு. குடும்ப் டாக்டர் பாட்டி வைத்தியம் எல்லாம் படுத்துப் போச்சு பாட்டி.  பெருசாப் பேசறதுக்கு நம்ம உள்ளூர் வைத்தியத்தில் என்ன இருக்கு பாட்டி<<பாட்டிவைத்தியம் மறுபடி  தொலைக்காட்சிகளில்  வருகிறதே...ரேவதி சங்கரன் மேடம்  முன்னெல்லாம்  விஜய்ல சொல்வாங்க,,,

சிவகா: அடே பேராண்டி மட்டம்தட்டிப் பேசாதடா. உன் ஊர் சித்தர்கள் வாழ்ந்த பூமி.  சித்தர்கள் சிந்தனைகளை மட்டமா நினைக்காதே>>>
 
 அப்படிபோடுங்க...சித்தவைத்தியம் புகழை உங்களமாதிரி நாலுபேராவது சொல்லணும்.
 
பாட்டி!  எப்படி  இவ்வளவு  தெரிஞ்சிருக்கு உங்களுக்கு!  amazing really! 

பேரா: என்ன பாட்டி எல்லாம் இயற்கையே என்று நீட்டி முழக்கினால் என்ன பயன் 

சிவகா:பேராண்டி சித்தர்கள் உலகில் உயிர்வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் பிறப்பும் இறப்பும் கால அளவில் இறுதிசெய்யப்பட்டு அவை அக்கால நியதிக்குட்பட்டுத் தோன்றிமறைவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.  மனிதன் மட்டுமே அவர் பிறப்பையும் இறப்பையும் குறைக்கவோ நீட்டவோ இயலும்.  இயற்கையான குழந்தை பிறப்பை செயற்கையாகத் தடை செய்யவும் வாழ வேண்டிய பருவத்தில் மற்றவரை வதைப்பதும் தன்னைத்தானே கொலைசெய்வதும் அவன் கற்றுக்கொண்டு அவனை அண்டிய மற்ற உயிரினங்களின் வாழ்க்கையிலும் அவற்றை அழிக்கவும் வதைக்கவும் கற்றுக்கொண்டான் என்பது சித்தர்கள் தெரிவிக்கும் கருத்துடா பேராண்டி

பேரரா"பாட்டி சித்தர்களும் ஆழ்வார்களும் நூற்றாண்டுகள் வாழ்ந்ததாகவும் திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கதை சொல்கிறார்களே அது உண்மையா பாட்டி

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). 
இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். 
இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். 

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.>>>>ப்ராணாயாமம்  இதுக்குத்தான் செய்யணும் என்கிறார்கள்

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை

(இது சித்தர்களால் மட்டுமே முடியும்)>>>>>  
 
சித்தர்கள்கள்  இயற்கையோடு ஒன்றியவர்கள்.நம்மைபோல உப்பு புளிகாரம் என்று  உணவு உட்கொள்வதும் ஐஸ்வாட்டர் குளிர்பானம் குடிப்பதும் கிடையாது, இயற்கை உணவுகள்தான் உண்பார்கள் அதனாலே  மெல்லிய உடல்வாகு உடையவர்களாய் பல சித்தர்கள்  இருப்பார்களாம். சித்தமாகிய மனத்தை வெற்றிகொண்டவர்கள் என்றபொருளில்தான் சித்தர்கள் எனப்படுகிறார்கள்.பிராந்தர் என்ற சித்தர் வரம் கேட்டு எதிரில்வந்த காளியையே,”போய்ச்சேர் என்னை தொல்லை செய்யாதே” என்றவர்.தனக்குள் தெளிவோடும் திடத்தோடும் இருப்பதே வாழ்வு என்றவர் பிராந்தர் எனும் சித்தர். ஒருவகையில் கடவுளையே வியப்படவைத்தவர் இவர் எனலாம். 

(ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம்.)>>>அப்படியா!

பேரா: பாட்டி நூறாண்டுகளுக்குமே வாழ்வது இந்த விஞ்ஞான யுகத்தில் பெரிய காரியமில்லை பாட்டி.  ஆனால் அவன் நோயுடன் நூறாண்டு வாழ்தைவிட நோயில்லாமல் சிலகாலம் இருந்து இறப்ப்தே மேல் இல்லையா 

சிவகா:  பேராண்டி இயற்கையுடன் இயைந்த வாழும் வாழ்வில் நோய்க்கு இடமில்லை.  இஅய்ற்கையை எதிர்த்து இயற்கை நியதிக்கு மாறாக வாழும் வாழ்வில் நோய் ஏற்படுவது இயற்கை.  இன்றைய விஞ்ஞானத்தால்கூட இறுதி செய்யமுடியாத நோயின் எண்ணிக்கைகளை உறுப்புவாரியாகச் சித்தர்கள் பட்டியலிட்டுள்ளர்களே பேராண்டி

பேரா:  அப்படியா ஆச்சரியமாக உள்ளது எங்கே கொஞ்சம் எடுத்துவிடு பாட்டி

சிவகா: சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். மேல்நாட்டு மருத்துவம் இவ்வாறு பட்டியலிட்டுச் சொல்ல முடியாமல் தடுமாறுதே பேராண்டி>>>>>அடேயப்பா  வாசிக்கவே ம்மூச்சு வாங்குதே.

மேல்நாட்டு மருத்துவம் உடலின் முக்கிய உறுப்புகளை மட்டும் நோக்குவதாக அமைந்துள்ளது தமிழ்ச் சித்தர்கள் 72 ஆயிரம் நரம்புகளை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தியவர்கள்.  நீ சொன்ன கருவிகள் எதுவும் இல்லமலே நாடி பிடிதே நோய் நாடி நோய் முதல்நாடி அதை முற்றும் அகற்றும் திறனை வளர்த்துக்கொண்டவர்கள்.  வர்மக்க்லை மூலம் உடம்பை அறுக்காமல் நரம்பு மூலங்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் நோயைக் குணப்படுத்தியுள்ளார்கள் பேராண்டி.  மென்மையான மனித உடம்பை வர்மக்கலைப் பயிற்சிமூலம் வலிமைமிக்க மன உடல்வலிமையைப் பெறும் வழியை உருவாக்கியவர்கள்ம் சித்தர்களே பேராண்டி>>>

மனவலிமை   இதில் முன்னிற்கிறது.

மனம் புத்தி சித்தம் மகிழ்வு அறிவு  ஆங்காரமதாய்
நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே

என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.
 
பேரா:  இவ்வளவு சிறப்புமிக்க சித்தர்களைத் தமிழர்கள் ஏன் பெரிதாக மதிக்கவில்லை பாட்டி>>
 
மதிக்காமல் இல்லை ஆனா சித்தர்கள் எல்லாருக்கும்  ரகசியத்தை சொல்வதில்லை. 

சிவகா: பேராண்டி இவ்வுலக வாழ்வில் பற்றில்லாமல் மேலுல்கை அடைய முயற்சி செய்வதே ஆன்மீகம் என்று கருதியவர்கள் தாம் அறிந்த அறிவை மறைத்துவைத்து அந்நியர்கையில் சிக்காமல் போற்றிப் பாதுகாத்து இவ்வுகல வாழ்வில் மனிதன் நோயின்றி வாழ உறுதுணையாக இருந்தவர்களை இவ்விலக வாழ்வில் நாட்டமுள்ளவர்கள் என்று குற்றம்சாட்டி ஆன்மீகவாதிகள் ஒதுக்கிவிட்டார்கள்.  சித்தர்களின் அறிவுவளங்கள் இன்று பலருக்கும் புரியாத புதிராக மாறிப்போனது. உலகமயமாதலில் இப்போது பாட்டிவைத்தியம் மேல்நாடுகளுக்கும் மேல்நாட்டு அரைகுறை வைத்தியம் தமிழ்நாட்டுக்கும் வந்த்விட்டது காலத்தின் கோலமடா பேராண்டி

பேரா:  பாட்டி உன் சித்தர் கலக்கல் செமக் கலக்கல் பாட்டி>>>

சித்தர்களைப்பற்றி  தனியா  பதிவே எழுதலாம்  அவ்வளவு இருக்கு  ஆனா சி பாட்டியின்  ஆராய்ச்சி நிஜமா கலக்கல்தான்.(ஆமா  பாட்டிக்கு தெரியுமா   பேரர் பெயர்சித்தர் எனவும் அந்தப்பெயர்  அமெரிக்காவரை  போயிருக்கிறதும்  சிஷ்யகோடிகள் இருப்பதும்?:)_ 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 
அன்புடன்
ஷைலஜா

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.......

குலசேகர ஆழ்வார்

Megala Ramamourty

unread,
Mar 5, 2015, 11:07:48 AM3/5/15
to மின்தமிழ்
சிவகாமிப் பாட்டி மற்றும் பேராண்டியின் உரையாடல் தொடர்கிறது...(ஹி..ஹி என் கற்பனையில்தான்; வெறும் நகைச்சுவைக்காக எழுதியுள்ளேன் கணினிதாசரே! சொற்குற்றம், பொருட்குற்றம், வேறு எக்குற்றம் இருப்பினும் பொறுத்தருள்க! no hurt feelings please!)  :-)

பாட்டி: என்ன பேராண்டி... கண் பரிசோதனையெல்லாம் முடிஞ்சுதா?  இப்ப கண்பார்வை எப்படி இருக்கு...?

பேராண்டி: கண்பார்வை இப்ப சூப்பராத் தெரியுது பாட்டி...நீ சொன்னபடி அகத்திக் கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரைன்னு ஒண்ணு விடாம சாப்பிட்டேனா...இப்ப கண்ணு சும்மா ’பளிச்’சுன்னு தெரியுது!

பாட்டி: அப்படி சொல்லு என் வெல்லக்கட்டின்னானாம்...! :-)
My dear grandchild! சர்க்கரை நோயால் வேறு என்னென்ன உடல் பாதிப்புக்கள் வரும்னு உனக்கு சொல்ல விரும்பறேன் கேட்டுக்கோ!
 See...If you have type 2 diabetes, the chances are more for you to get diabetic retinopathy, diabetic neuropathy, diabetic cardiomyopathy and diabetic nephropathy. So, you should be more cautious about your diet and lifestyle. Don't let your sugar level ramp up at any cost!

பேராண்டி: பாட்டி நிப்பாட்டு...நிப்பாட்டு! என்ன திடீர்னு 'அந்தபதி..இந்தபதி'ன்னு என்னவோ இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சுட்ட..!  ஒண்ணும் புரியல!  (நீ ஆசப்பட்டியேன்னு உனக்கு வாத்தியார்வச்சு இங்கிலீஷ் கத்துகுடுத்தேன் பாரு...என்னச் சொல்லணும்!   பாட்டி காதில் விழாதவாறு முணுமுணுக்கிறார் பேராண்டி.)  :-)

பாட்டி: கடகடவெனச் சிரித்த பாட்டி... என்னருமைப் பெயரா! உன் பாட்டிக்குச் சித்தருங்க சொன்னது மட்டும்தான் தெரியும்னு நெனச்சியா...? never! இந்தக் காலத்து நோய்கள் பேரும் இங்கிலீஷ்லயே சொல்லத் தெரியுமாக்கும்! இதோ அதையெல்லாம் தமிழ்லயே விவரமாச் சொல்றேன் கேட்டுக்க...

சர்க்கரை வியாதி கட்டுக்கடங்காமப் போனா, அது உடம்புல முக்கியமாச் சில இடங்களைத் தாக்கும். அதுல ஒண்ணு ‘கண்ணு’; இன்னொண்ணு சிறுநீரகம்; அடுத்தது இதயம், அடுத்தது நரம்பு மண்டலம். சர்க்கரை நோய் கண்ணைத் தாக்கறதைத்தான் diabetic retinopathyன்னு சொல்றாங்க; சிறுநீரகத்தைத் தாக்கினா diabetic nephropathy; இதயத்தைத் தாக்கினா diabetic cardiomyopathy; நரம்புகளைத் தாக்கினா diabetic neuropathy. புரிஞ்சுதா?

பேராண்டி: என்ன பாட்டி நீ? இப்படியா நோய்கள் பட்டியலச் சொல்லி என்ன பயமுறுத்துவ? ஏற்கனவே நான் ரொம்ப பயந்த சுபாவம்!  :-))

பாட்டி: Fear no more grandchild! ஆரம்ப கட்டத்திலேயே எல்லா நோய்களையும் கண்டுபிடிச்சுட்டா சரி செய்யறது சுலபம். நீ ஒண்ணும் கவலப்படாத! சர்க்கரையைக் கட்டுப்பாட்டுல வச்சுக்க...மைசூர்பாகு, ஜிகிர்தண்டா இதெல்லாம் எனக்குத் தெரியாம இனிமே சாப்பிடாத!   தினமும் 30 நிமிஷம் நடைப்பயிற்சி செய்! முடிஞ்சா ’வசூல்ராஜா எம்.பி.பி.ஸ்ல’ பிரகாஷ்ராஜ் சிரிப்பாரே அதுமாதிரி ’laughter therapyங்கற பேர்ல தினமும் 10 நிமிஷம் சிரி; வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்.  ஓகே? :-))

பேராண்டி: (கவலையோடு) தனியாச் சிரிச்சா எல்லாரும் ஒரு மாதிரி பாப்பாங்களே பாட்டி?

பாட்டி: ரோட்டுல தனியாச் சிரிச்சாதான் ஒருமாதிரி பாப்பாங்க. வீட்டுக்குள்ள தனி ரூம்ல யாருக்கும் தெரியாம சிரிச்சுட்டுப் போயேன்!   :-)

பேராண்டி: சரி பாட்டி!

பாட்டி: ஆங்! நோயைப் பத்திப் பேசினதும் ‘மருந்து’ எனக்கு ஞாபகத்துக்கு வருது!

பேராண்டி: அது என்ன மருந்து பாட்டி? அலோபதியா? சித்த மருந்தா?

பாட்டி: ரெண்டும் இல்ல பேராண்டி...இது சித்தத்தைச் சுத்தமாக்கும் ‘திருக்குறள்’ எனும் மாமருந்து! அதுல ‘மருந்து’ன்னு ஓர் அதிகாரமே எழுதியிருக்கார் திருவள்ளுவர். தெரியுமா உனக்கு?

பேராண்டி: தெரியாது பாட்டி.

பாட்டி: பரவாயில்ல...வருத்தப்படாத! அதுல இருக்கற குறள்களையெல்லாம் படிச்சுப் புரிஞ்சுகிட்டு அதுமாதிரி நடந்தேன்னா...எந்த நோயும் உன் தெருப்பக்கம் கூட வரஅஞ்சும்! ’சாம்பிளுக்கு’ ஒண்ணு சொல்றேன் ‘நோட்’ பண்ணிக்கோ!

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (942)

பேராண்டி: இதுக்கு என்ன அர்த்தம் பாட்டி?

பாட்டி: ’ஏற்கனவே சாப்பிட்ட உணவு செரிச்சதுக்கப்புறம்தான் புதுசா எதையுமே சாப்பிடணும்; அது செரிக்கறதுக்கு முன்னாலேயே மேல மேல சாப்பிட்டோம்னா அது உடம்புக்கு நல்லதில்ல; பல நோய்களையும் அது உண்டாக்கும்’ங்கறார் வள்ளுவர்.

இதுமாதிரி அருமையான குறள்கள் நெறய இருக்கு அந்த அதிகாரத்துல; நேரம் கெடைக்கும்போது படிச்சுப்பாரு தம்பி! அதோட, நான் சொன்ன கீரை வகைகள், கேரட், முட்டை, பெர்ரீஸ் (berries), பாதாம் பருப்பு, வைட்டமின் சி அதிகமுள்ள பழங்கள், மீன் இதெல்லாம் தவறாம சாப்பிடு! அப்புறம் பாரு...இருட்டுலகூட எரும மாடு நல்லாத் தெரியும். 

அப்புறம்...முக்கியமா இன்னொண்ணும் சொல்லணும் ஒனக்கு! ’கணினிதாசன்’னு பேர் வெச்சுகிட்டு ராத்திரி 11 மணி 12 மணின்னு கொட்டக் கொட்டக் கண்ணு முழிச்சுக் கணினி பாக்கறதையும், ’மின்கடுதாசி’ எழுதறதையும் நீ கொறச்சிக்கணும்...yes! you need more cranial downtime my dear! சதா சர்வகாலமும் எதையாவது யோசிச்சுட்டும், செய்துட்டும் இருக்காம ’மூளைக்கும் கொஞ்சம் ஓய்வுகொடு’ங்கறதத்தான் அப்படிச் சொன்னேன்.  :-)

சரி பேராண்டி, நேரமாயிட்டுது...நான் வேற ஆல்பர்ட் தியேட்டருக்குப் போகணும் ‘அநேகன்’ படம் பாக்க..வரட்டுமா!  (பேரனைப் பார்த்து ஒரு முத்தத்தைக் காற்றில் பறக்கவிட்டுப் பாட்டி தன்னுடைய ஸ்கூட்டியை உதைத்துக் கிளம்புகிறார்.)  :-))

பேராண்டி: ”பாட்டின்னா... பாட்டிதான்!” என்று எண்ணியபடி சீட்டியடித்துக்கொண்டே (சீழ்க்கை) தன் ரூமுக்குள் போகிறார் ‘laughter therapy' பழக!   :-)))

(டிஸ்கி: குழும நண்பர்களே! அனைத்தும் கற்பனை கலந்த நகைச்சுவையே; எங்கள் பேராசானான கணினிதாசரைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை...இல்லை...கிஞ்சித்தும் இல்லை.)  :-)

அன்புடன்,
மேகலா

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 5, 2015, 11:25:24 AM3/5/15
to mintamil
அருமை திருமிகு மேகலா.
இன்று சீக்கிரம் 11.30க்கு படுக்கைக்குச்செல்லலாமென முடிவெடுத்துள்ளேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Nagarajan Vadivel

unread,
Mar 5, 2015, 12:01:03 PM3/5/15
to மின்தமிழ்
எங்கிட்டயே சிவகாமிப்பாட்டி பேராண்டி மடல் ஒன்றைத் தயாரித்துத் தரச் சொல்லி அதை நைசா உங்கபேர்ல போட்டுக்கிட்டீங்க பரவாயில்ல.  ஆனா என்ன ஒன்னு பாட்டிக்கு இங்கிலீஸ் தெரியும்னு எனக்குத் தெளிவாகாத புதுப்பாதையில் கொஞ்சம் மாற்றிப்போட்டிருக்கிறீர்கள்
நடக்கட்டும் நடக்கட்டும் மின்தமிழில் ஒவ்வொருத்தரும் என்னமா மாயாஜாலம் செய்யுறாய்ங்க. எனக்கு மகிழ்ச்சிதான்.  ஆனாலும் நான் பொது இடத்தில் சிரிக்கக் கூடாதென்று தடை செய்யப்பட்டுள்ளதால் தனியறையில் தனிச் சிரிப்புதான்

கணினிதாசன்

2015-03-05 21:37 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

--

annamalai sugumaran

unread,
Mar 5, 2015, 1:21:52 PM3/5/15
to mint...@googlegroups.com
பேராசியர்   அவர்களே ,
சிவகாமிப்பாட்டியின் சித்தக் கலக்கல் என்றபெயரிலே   ஒரு 
சித்தர் களஞ்சியமே தந்துவிட்டீர்கள் .சிறப்பாகவே இருக்கிறது .
அதில் சுவாசத்தைப்பற்றி 

//ரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு//  என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் .

நாம் சுவாசம்  செய்யும்போது  காற்று  நுரையீரலை அடைந்து   அங்கே காற்றில் உள்ள ஆக்சிஜென் எடுத்துக்கொள்ளப்பட்டு கரிமிலவாயு  வெளியேற்றப்படுகிறது 
ஒருமுறை காற்று உள்ளே சென்று வெளியே வருவதைத்தான் சுவாசம் என்று நமக்கு சொல்லிக்கொடுக்க்சப்பட்டிருக்கிறது .
ஆனால் இந்த சுவாசம் எனும் தொடரிலே ஒரு   முரண்பாடு இருக்கிறதே 

  சுவாசிப்பதற்கான  இந்த செயலுக்கு  சாதனமான மூக்கிலே 
ஏன் இரண்டு துளைகள் .?
   ஒரே  துவாரமாக  இருந்து ,அந்த ஒருதுவாரத்தின் வழியே காற்று நுரையீரலுக்கு 
போய்  வந்தால் என்ன ? 
இரண்டு   நாசித்துளைகள் வாழியாகக் காற்று இழுக்கப்பட்டாலும் ,ஒரே மூச்சு குழாயின் வழியாகப்  போய்த் தானே  நுரையீரலின் 
இரண்டு அறைகளுக்கும் காற்றுப் பிரிந்து செல்கிறது .
பிறகு  ஏன் இரண்டு நாசித் துளைகள் ?

டைப்பின் உச்சமான மனித உடலில் எதுவும் படைப்புத்   தவறாக இருக்க இயலாதே . பரிணாமத்தின் உச்சம் தானே மனித உடல் . 
பின் ஏன் இரண்டு துளைகள் ?

ஆனால் இதற்க்கு சித்தர்களின் யோக முறையில்  விடை இருக்கிறது .
சிவகாமிப் பாட்டியின் வார்த்தைகளில் இதை யும் கேட்க்க ஆசை .

அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 

4 மார்ச், 2015 ’அன்று’ 11:05 பிற்பகல் அன்று, கணினிதாசன் <radius.co...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

shylaja

unread,
Mar 5, 2015, 8:28:26 PM3/5/15
to mintamil
கற்பனை மடல் படித்து சிரித்துவிட்டேன் மேகலா. :)// ’கணினிதாசன்’னு பேர் வெச்சுகிட்டு ராத்திரி 11 மணி 12 மணின்னு கொட்டக் கொட்டக் கண்ணு முழிச்சுக் கணினி பாக்கறதையும், ’மின்கடுதாசி’ எழுதறதையும் நீ கொறச்சிக்கணும்...yes! you need more cranial downtime my dear! சதா சர்வகாலமும் எதையாவது யோசிச்சுட்டும், செய்துட்டும் இருக்காம ’மூளைக்கும் கொஞ்சம் ஓய்வுகொடு’ங்கறதத்தான் அப்படிச் சொன்னேன்.  :-)//

சரியாக சொன்னீங்க!   

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Mar 5, 2015, 8:31:10 PM3/5/15
to மின்தமிழ்

2015-03-05 23:51 GMT+05:30 annamalai sugumaran <amirth...@gmail.com>:
ஆனால் இதற்க்கு சித்தர்களின் யோக முறையில்  விடை இருக்கிறது .
சிவகாமிப் பாட்டியின் வார்த்தைகளில் இதை யும் கேட்க்க ஆசை .

​பாடிகிட்ட கேட்டால்கண்கள் மின்ன ஒரு பொக்கவாய்ச் சிரிப்பை உதிர்த்து பேராண்டி அவரு உன்னை வம்பில் மாட்டிவிடுவார்.  அவர் நல்லவர்தான் ஆனா இங்கே உனக்கு (மறைமுக நகைமுக) எதிர்ப்பு அதிகம்.  அதனால் உன்னைவிட நல்லவே தமிழ் எழுதும் மேகலாவையே நான் சொல்லும் பாடல்களுக்கு விடை எழுதச் சொல் என்று சொல்லி சில பாடல்களைக் குறிப்பிட்டார்.  அவை பின் வருமாறு
1ஆண், பெண், அலியாவது ஏன்?
"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)

​2, 
குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)

​3. கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

​பாட்டி பேரா அருகில் வாடா என்றழைத்து வெற்றிலை இடிக்கும் இரும்புலக்கையால் நங்கென்று மெதுவாகத் தட்டி நேற்று ஏன் அந்தப்பெண் மேகலா எழுதியதை நீ எழுதியதாகச் சொன்னாய் என்று கேட்டார்.  பாட்டி எப்பப்பாத்தாலும் அவங்கெல்லாம் ஒன்றுகூடி காலை வாருவாங்க.  நானும் ஒருதபா காலைவாரிவிட்டேன் அவ்வளவுதான் பாட்டி என்றேன்

பாட்டியோ பேராண்டி அந்தப்பெண் நவீன கிருபானந்தவாரியார்டா பேரா சும்மா வாராதே என்று அறிவுறுத்தி அனுப்பினார்.  என்னமா கிழவியிலிருந்து குமரிவரை பெண்கள் பெண்களுக்குச் சப்போர்ட்.

கணினிதாசன்

Megala Ramamourty

unread,
Mar 6, 2015, 3:04:16 PM3/6/15
to மின்தமிழ்

//உன்னைவிட நல்லவே தமிழ் எழுதும் மேகலாவையே நான் சொல்லும் பாடல்களுக்கு விடை எழுதச் சொல் என்று சொல்லி சில பாடல்களைக் குறிப்பிட்டார்.//

என் தமிழ் நல்லாருக்குன்னு சொன்ன ஒங்களுக்கு ரொம்ப நன்றி பாட்டி. ஒங்க நல்ல மனசு யாருக்கு வரும்?  அவ்....வ்....வ்! (இது ஆனந்தக் கண்ணீர்!)   :-)

பாட்டி! நீங்கள் கொடுத்துள்ள மானுடப் பிறப்பின் ’சூட்சுமத்தை’ விளக்கும் பாடல்களுக்கு எனக்குத் தெரிந்த அளிவில் விளக்கம் தருகிறேன். தவறிருந்தால் திருத்துக!

முந்தைய மடலில் அண்ணாமலை சுகுமாரன் ஐயா கேட்டதுபோல் எதற்காக மனித உயிர்களுக்கு இரண்டு நாசித் துவாரங்களை இறைவன்/இயற்கை படைத்துள்ளது எனும் வினா நம்மில் பலருக்கு எழலாம்.

அதற்கான பதிலாகத் திருமூலர் தருவது ’இவ்விரு நாசித் துவாரங்களிலிருந்தும் வெளியேறுகின்ற காற்று மனித உயிர்களின் படைப்பை, பால் வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றது; எனவே இரு நாசித் துவாரங்களும் காரணத்தோடுதான் படைக்கப்பட்டிருக்கின்றன’ என்பதே. 

சரி...பாட்டி குறிப்பிட்டுள்ள திருமந்திரப் பாடல்களுக்கு வருவோம்.
 
குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்

குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்

குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே. (திரு:482)

கலவிக் காலத்தில் ஆண்மகனின் உயிர்க்காற்று/ஆக்சிஜன் சூரியகலையில் (வலது நாசியில்) இயங்குமாயின் பிறக்கும் குழந்தை ஆணாயிருக்கும்; சந்திர கலையில் (இடது நாசியில்) இயங்குமாயின் பிறக்கும் குழந்தை பெண்ணாயிருக்கும். சுக்கிலத்தைச் (விந்து) செலுத்தும் உயிர்க்காற்றை ’அபானன்என்னும் மலக்காற்று எதிர்த்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும். சூரியகலை, சந்திரகலை ஒத்து இயங்கினால் குழந்தை அலியாகப் பிறக்கும் என்பது மேற்கண்ட பாடலில் சொல்லப்படும் கருத்து.

பாய்கின்ற வாயுக் குறையில் குறளாகும்

பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே.
(திரு: 480)

போக காலத்தில், (ஆணின்) சுக்கிலத்தைச் செலுத்துகின்ற வாயு குறையுமானால் குழந்தை குட்டையாக இருக்கும்; அவ்வாறு செல்லுகின்ற வாயு மெலிந்திடின் குழந்தை முடமாகும். அவ்வாயு தடைப்படின் குழந்தை கூனாகும். ஆராய்ந்து பார்க்குங்கால், பெண்களுக்கு (இவ்வாறு) செலுத்துகின்ற வாயு இல்லை. (இப்பாடலிலிருந்து தெரியவருவது ஒரு குழந்தை உடற்குறைகளோடு பிறப்பதற்கு அக்குழந்தையின் தந்தையே காரணம் என்பதே!)  :-)

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்

கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்

கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே. (483)

உயிர்க்காற்றானது (கலவிக் காலத்தில்) கணவன், மனைவி இருவருக்கும் ஒத்து இயங்குமாயின் கருக்கொண்ட குழந்தை அழகாக இருக்கும். அக்காலத்து இருவர்க்கும் உயிர்க்காற்றில் தடுமாற்றம் உண்டானால், பெண்ணுக்குக் கரு உண்டாவற்கான வாய்ப்பு இல்லை என்பது திருமூலரின் கருத்து.

Unfortunately we don't have any scientific evidences to prove them as facts. :(

ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரையில் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தீர்மானிப்பவை X மற்றும் Y குரோமசோம்களே (these X, Y chromosomes are known as sex chromosomes.). ஓர் ஆணுக்கு உடலில் XY எனும் இருவகைக் குரோமசோம்கள் இருக்கும்; பெண்ணுக்கு XX எனும் ஒரேவகைக் குரோமசோம்கள்தான் இருக்கும். எனவே ஆணின் X-உம் பெண்ணின் X-உம் இணைந்தால் பிறப்பது பெண்ணாகவும், ஆணின் Y-யும் பெண்ணின் X-உம் இணைந்தால் பிறப்பது ஆணாகவும் இருக்கும். (இங்கும் பிறக்கும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆணேயன்றிப் பெண்ணில்லை என்பதை அறிக).  :-)

இந்தக் குரோமசோம்களில் சிதைவோ அல்லது வேறு குறைபாடுகளோ இருந்தால் அவை பிறக்கும் குழந்தைகளின் மன/உடல் வளர்ச்சியில் நிச்சயம் மாற்றத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தும். அவ்வகைப் பாதிப்புக்களில் ஒன்றே பருவ வயதில் ஏற்படும் பாலியல் பிறழ்ச்சி மாற்றங்களான ஆண் பெண்ணாவதும்; பெண் ஆணாவதும் (உளவியல் அடிப்படையில்). 

அறிவியல் கண்டுபிடிப்புகளெல்லாம் இல்லாத அந்தக் காலத்திலேயே தன் ஞான திருஷ்டியின் அடிப்படையில் மனித உயிர்களின் பிறவிக் கோட்பாட்டை வரையறுத்த திருமூலர் ’really great’ இல்லையா பாட்டி?

அன்புடன்,

மேகலா

Megala Ramamourty

unread,
Mar 6, 2015, 3:53:41 PM3/6/15
to மின்தமிழ்
//பாட்டி எப்பப்பாத்தாலும் அவங்கெல்லாம் ஒன்றுகூடி காலை வாருவாங்க.  நானும் ஒருதபா காலைவாரிவிட்டேன் அவ்வளவுதான் பாட்டி என்றேன்.//

இதெல்லாம்வடிகட்டினசுத்தப் பொய் பாட்டி! நம்பாதீங்க!

உங்க பேராண்டி எப்போதும் தன் மாணவிகளைச் சந்தேகக் கண்கொண்டே பார்க்கப் பழகிட்டார். சாளேஸ்வரத்துக்கு மருந்து சொல்றீங்களே பாட்டி! அப்படியே உங்க பேராண்டியின் சந்தேகத்துக்கும் ஏதாவது மருந்து சொல்லுங்களேன்!   :-)))

//பாட்டியோ பேராண்டி அந்தப்பெண் நவீன கிருபானந்தவாரியார்டா பேரா சும்மா வாராதே என்று அறிவுறுத்தி அனுப்பினார்.//

அப்படியா சொன்னீங்க பாட்டி...ஸோ ஸ்வீட்!  :-)
கிருபானந்தவாரியாரின் பேச்சுத் திறமையும், புத்திக்கூர்மையும், நகைச்சுவை உணர்வும் உலகப் பிரசித்தமாயிற்றே! அவரோடு என்னை ஒப்பிட்டுப் புல்லரிக்க வச்சுட்டீங்களே பாட்….டீஈஈஈ!   :-))

கிருபானந்தவாரியாரைப் பாட்டி நினைவுபடுத்திவிட்டதால் நான் இரசித்த அவருடைய பேச்சின் ஒருபகுதி உங்களுக்காக...

(நண்பர்களே! பின்வருவனவற்றையெல்லாம் கிருபானந்தவாரியார் ஸ்டைலில் சொல்லிப் பார்க்கவும்.)  :-))

பக்தகோடிகளே! வயலூரிலே குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.

என்ன இது? முன்வரிசை நாற்காலிகள் எல்லாம் காலியா இருக்கு....! 

ஓஹோ! உங்களையெல்லாம் ’பக்தகோடிகளே’ன்னு கூப்பிட்டதாலே எல்லாரும் கோடி வரிசை நாற்காலிகளில் உட்கார்ந்துவிட்டீர்களா? :-)

மெய்யன்பர்களே! கோடிக்குச் செல்லாதீர்கள் தமிழமுதைப் பருக முந்தி வாருங்கள்னு உங்களையெல்லாம் கேட்டுக்கறேன்!

இப்போதெல்லாம் மக்களுக்கு எதைச் செய்யவேண்டும்; எதைச் செய்யக்கூடாது என்றே தெரியாமல் போய்விட்டது. கலிகாலம்! எம்பெருமான் முருகனின் அருளால் அதை நான் உங்களுக்குப் புரியவைக்க விரும்பறேன்!

உண்டு கெட்டது வயிறு; உண்ணாமல் கெட்டது உறவு!

பார்த்துக் கெட்டது கண்; பார்க்காமல் கெட்டது பயிர்!

ஆமாம் அன்பர்களே! அளவுக்கு அதிகமாக உண்பதால் நம் வயிறு கெட்டுப்போகிறது; அதேநேரம் நம் உறவினர்களை நாம் புறக்கணித்து அவர்கள் வீட்டில் கை நனைக்காமல் (உண்ணாமல்) போவதால் உறவுகெட்டுப் போகிறது. இல்லையா?

அதே போல, பார்க்கக்கூடாத காட்சிகளையெல்லாம் பார்ப்பதால் உறுப்புக்களில் சிறந்த கண் கெட்டுப்போகிறது. ஆனால், வயலிலிருக்கும் பயிரைப் பார்க்காமல் இருக்கலாமா? கூடாது! அப்படிப் பயிரைத் தினமும் பார்த்துக் கவனிக்க மறந்தால் என்ன ஆகும்? அவை பலன் தராமல் அழிந்துபோகும்!

முருகா...முருகா...முருகா...!

இனிமேலாவது செய்யவேண்டியதையும், செய்யவேண்டாததையும் நன்றாக அறிந்து செய்யுங்கள்! எம்பெருமானின் திருவருளுக்குப் பாத்திரமாகுங்கள்!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

ஓம்!

திருமுருகக் கிருபானந்தவாரியாரின் புகழ் ஓங்குக!  :-)

Oru Arizonan

unread,
Mar 6, 2015, 4:19:41 PM3/6/15
to mintamil
தங்களின் திருமந்திர அறிவு என்னை வியக்க வைக்கிறது, மேகலா!  தாங்கள் குறிப்பிட்ட குழந்தை பிறக்கும் உயிர்க்காற்று பற்றிய செய்யுள்களை நானும் படித்திருக்கிறேன்.  தமிழில் அறிவியல் நூல் இல்லை என்பவர்கள் திருமந்திரத்தைப் படித்து ஆராய்ச்சி செய்யவேண்டும்.

பதஞ்சலியின் யோகசூத்திரத்தைவிடச் சிறந்தது திருமூலரின் திருமந்திரம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர் யந்திரங்களைப் பற்றி எழுதும் இடம்தான் எனக்குச் சிறிது குழப்பமாக உள்ளது.  தங்களுக்கு அதுபற்றித்ட் தெரியுமா?

ஒரு அரிசோனன் 

Megala Ramamourty

unread,
Mar 6, 2015, 7:16:01 PM3/6/15
to மின்தமிழ்
//அவர் யந்திரங்களைப் பற்றி எழுதும் இடம்தான் எனக்குச் சிறிது குழப்பமாக உள்ளது.  தங்களுக்கு அதுபற்றித்ட் தெரியுமா?//

எனக்குத் திருமந்திரம் முழுமையாகத் தெரியாது அரிசோனரே! சில பாடல்களே பரிச்சயம்.
ஆகவே யந்திரங்கள் பற்றிய திருமூலரின் கருத்துக்களைத் தங்களுக்கு விளக்க இயலாத நிலையில் உள்ளேன். அவை குறித்துப் படித்தறியும் வாய்ப்புக் கிட்டினால் அவசியம் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி!

அன்புடன்,
மேகலா 
2015-03-06 16:19 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
தங்களின் திருமந்திர அறிவு என்னை வியக்க வைக்கிறது, மேகலா!  தாங்கள் குறிப்பிட்ட குழந்தை பிறக்கும் உயிர்க்காற்று பற்றிய செய்யுள்களை நானும் படித்திருக்கிறேன்.  தமிழில் அறிவியல் நூல் இல்லை என்பவர்கள் திருமந்திரத்தைப் படித்து ஆராய்ச்சி செய்யவேண்டும்.

பதஞ்சலியின் யோகசூத்திரத்தைவிடச் சிறந்தது திருமூலரின் திருமந்திரம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர் யந்திரங்களைப் பற்றி எழுதும் இடம்தான் எனக்குச் சிறிது குழப்பமாக உள்ளது.  தங்களுக்கு அதுபற்றித்ட் தெரியுமா?

ஒரு அரிசோனன்

shylaja

unread,
Mar 7, 2015, 2:52:34 AM3/7/15
to mintamil
2015-03-06 12:53 GMT-08:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
//பாட்டி எப்பப்பாத்தாலும் அவங்கெல்லாம் ஒன்றுகூடி காலை வாருவாங்க.  நானும் ஒருதபா காலைவாரிவிட்டேன் அவ்வளவுதான் பாட்டி என்றேன்.//

இதெல்லாம்வடிகட்டினசுத்தப் பொய் பாட்டி! நம்பாதீங்க!>>>

நாளை மகளிர்தினத்துக்கு நம்மைப்பாராட்டி எழுதப்போறார்  பாருங்க மேகலா:)
 
உங்க பேராண்டி எப்போதும் தன் மாணவிகளைச் சந்தேகக் கண்கொண்டே பார்க்கப் பழகிட்டார். சாளேஸ்வரத்துக்கு மருந்து சொல்றீங்களே பாட்டி! அப்படியே உங்க பேராண்டியின் சந்தேகத்துக்கும் ஏதாவது மருந்து சொல்லுங்களேன்!   :-)))

//பாட்டியோ பேராண்டி அந்தப்பெண் நவீன கிருபானந்தவாரியார்டா பேரா சும்மா வாராதே என்று அறிவுறுத்தி அனுப்பினார்.//

அப்படியா சொன்னீங்க பாட்டி...ஸோ ஸ்வீட்!  :-)
கிருபானந்தவாரியாரின் பேச்சுத் திறமையும், புத்திக்கூர்மையும், நகைச்சுவை உணர்வும் உலகப் பிரசித்தமாயிற்றே! அவரோடு என்னை ஒப்பிட்டுப் புல்லரிக்க வச்சுட்டீங்களே பாட்….டீஈஈஈ!   :-))>>>

பாட்டி  வாய்ல ஒரு ஸ்வீட்டைப்போடணும் இப்படி சொன்னதுக்கு:).
 
கிருபானந்தவாரியாரைப் பாட்டி நினைவுபடுத்திவிட்டதால் நான் இரசித்த அவருடைய பேச்சின் ஒருபகுதி உங்களுக்காக...

(நண்பர்களே! பின்வருவனவற்றையெல்லாம் கிருபானந்தவாரியார் ஸ்டைலில் சொல்லிப் பார்க்கவும்.)  :-))

பக்தகோடிகளே! வயலூரிலே குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வணங்கி என் உரையைத் தொடங்குகிறேன்.

என்ன இது? முன்வரிசை நாற்காலிகள் எல்லாம் காலியா இருக்கு....! (நான் எப்பவும் மேகலான்னா முன் வரிசைல இருப்பேன்)

ஓஹோ! உங்களையெல்லாம் ’பக்தகோடிகளே’ன்னு கூப்பிட்டதாலே எல்லாரும் கோடி வரிசை நாற்காலிகளில் உட்கார்ந்துவிட்டீர்களா? :-)>>.ஹஹ்ஹா:0  ஜோக்கெல்லாமும்  கிருபானந்தவாரியார்போலவே வருதே.

மெய்யன்பர்களே! கோடிக்குச் செல்லாதீர்கள் தமிழமுதைப் பருக முந்தி வாருங்கள்னு உங்களையெல்லாம் கேட்டுக்கறேன்!>>>.மெய் நிகர்க்காரர்  இழை என்பதால் மெய்யன்பர்களா?:)

இப்போதெல்லாம் மக்களுக்கு எதைச் செய்யவேண்டும்; எதைச் செய்யக்கூடாது என்றே தெரியாமல் போய்விட்டது. கலிகாலம்! எம்பெருமான் முருகனின் அருளால் அதை நான் உங்களுக்குப் புரியவைக்க விரும்பறேன்!

உண்டு கெட்டது வயிறு; உண்ணாமல் கெட்டது உறவு!

பார்த்துக் கெட்டது கண்; பார்க்காமல் கெட்டது பயிர்!

ஆமாம் அன்பர்களே! அளவுக்கு அதிகமாக உண்பதால் நம் வயிறு கெட்டுப்போகிறது; அதேநேரம் நம் உறவினர்களை நாம் புறக்கணித்து அவர்கள் வீட்டில் கை நனைக்காமல் (உண்ணாமல்) போவதால் உறவுகெட்டுப் போகிறது. இல்லையா?

அதே போல, பார்க்கக்கூடாத காட்சிகளையெல்லாம் பார்ப்பதால் உறுப்புக்களில் சிறந்த கண் கெட்டுப்போகிறது. ஆனால், வயலிலிருக்கும் பயிரைப் பார்க்காமல் இருக்கலாமா? கூடாது! அப்படிப் பயிரைத் தினமும் பார்த்துக் கவனிக்க மறந்தால் என்ன ஆகும்? அவை பலன் தராமல் அழிந்துபோகும்!

முருகா...முருகா...முருகா...!

இனிமேலாவது செய்யவேண்டியதையும், செய்யவேண்டாததையும் நன்றாக அறிந்து செய்யுங்கள்! எம்பெருமானின் திருவருளுக்குப் பாத்திரமாகுங்கள்!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!>>>>

அருமை அருமை  எங்க  நவீன க்ருபானந்தவாரியாரின் சொற்பொழிவு! 

ஓம்!

திருமுருகக் கிருபானந்தவாரியாரின் புகழ் ஓங்குக!  :-)

அன்புடன்,

மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 7, 2015, 5:04:56 AM3/7/15
to mintamil
2015-03-07 2:23 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
அவரோடு என்னை ஒப்பிட்டுப் புல்லரிக்க வச்சுட்டீங்களே பாட்….டீஈஈஈ!  
 
:))

கிருபானந்தவாரியாரைப் பாட்டி நினைவுபடுத்திவிட்டதால் நான் இரசித்த அவருடைய பேச்சின் ஒருபகுதி உங்களுக்காக...

இப்போதெல்லாம் மக்களுக்கு எதைச் செய்யவேண்டும்; எதைச் செய்யக்கூடாது என்றே தெரியாமல் போய்விட்டது. கலிகாலம்! எம்பெருமான் முருகனின் அருளால் அதை நான் உங்களுக்குப் புரியவைக்க விரும்பறேன்!

உண்டு கெட்டது வயிறு; உண்ணாமல் கெட்டது உறவு!

பார்த்துக் கெட்டது கண்; பார்க்காமல் கெட்டது பயிர்!

ஆமாம் அன்பர்களே! அளவுக்கு அதிகமாக உண்பதால் நம் வயிறு கெட்டுப்போகிறது; அதேநேரம் நம் உறவினர்களை நாம் புறக்கணித்து அவர்கள் வீட்டில் கை நனைக்காமல் (உண்ணாமல்) போவதால் உறவுகெட்டுப் போகிறது. இல்லையா?

அதே போல, பார்க்கக்கூடாத காட்சிகளையெல்லாம் பார்ப்பதால் உறுப்புக்களில் சிறந்த கண் கெட்டுப்போகிறது. ஆனால், வயலிலிருக்கும் பயிரைப் பார்க்காமல் இருக்கலாமா? கூடாது! அப்படிப் பயிரைத் தினமும் பார்த்துக் கவனிக்க மறந்தால் என்ன ஆகும்? அவை பலன் தராமல் அழிந்துபோகும்!

மேலும் இவ்வாறே வரிகள் உண்டு.
முழுவதும் தெரிந்தால் நண்பர்கள் எழுதவும்.

இட்டுக்கெட்டது காது இடாமல் கெட்டது கண் என்பார்கள். (காதில் குச்சி, ஹேர்பின் என்று இட்டு குடைந்து கெடுத்துக்கொள்வார்கள். அஞசனம் இடாவிடில் கண் கெடும் என்பது அந்ந்நாளைய நம்பிக்கை)

இவ்வரிசையில் “கேட்காமல் கெட்டது கடன்” என்று ஒரு சொலவடை வரும். அதனைச்சொல்லிவிட்டு நான் இன்சூரன்சு விற்பனையாளருக்கான பயிற்சிகளில் “கேட்காமல் கெட்டது இன்சூரன்சு” என்று உணர்த்துவதுண்டு!

(இன்று போய் நாளை வா என்று கூறும் கொடாக்கண்டர் வாடிக்கையாளரும் தொடர்ந்து படையெடுக்கும் விடாக்கண்டர் விற்பனையாளரும் எங்களைப்போல விற்பனை டார்கெட் இல்லாத பயிற்சியாளர்களுக்கு இரசிக்கத்தக்கவர்கள்.)

சிவகாமிப்பாட்டியும் செல்லப் பேராண்டியும் ’சித்தர்கலக்கல்’ இழை கலங்கியிருச்சுனு தயவுசெய்து கோவிச்சுக்காதீங்க ஐயா.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

annamalai sugumaran

unread,
Mar 7, 2015, 11:30:37 AM3/7/15
to mint...@googlegroups.com
ன்பின் சகோதரி ,
தங்களின் மடலை  இன்று நான் சற்று வெளியே சென்றிருந்ததால் தாமதமாகவே பார்க்கநேர்ந்தது .

பாட்டிச் சொல்லைத்தட்டாத பேராண்டியான  பேராசிரியர் தந்திருந்த திருமந்திரப்பாடல்களுக்கு விளக்கமாகவே பொருள் எழுதியிருந்தீர்கள் .வாழ்த்துக்கள் 

//முந்தைய மடலில் அண்ணாமலை சுகுமாரன் ஐயா கேட்டதுபோல் எதற்காக மனித உயிர்களுக்கு இரண்டு நாசித் துவாரங்களை இறைவன்/இயற்கை படைத்துள்ளது எனும் வினா நம்மில் பலருக்கு எழலாம். 
அதற்கான பதிலாகத் திருமூலர் தருவது ’
இவ்விரு நாசித் துவாரங்களிலிருந்தும் வெளியேறுகின்ற காற்று மனித உயிர்களின் படைப்பை, பால் வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றது; எனவே இரு நாசித் துவாரங்களும் காரணத்தோடுதான் படைக்கப்பட்டிருக்கின்றன’ என்பதே.  //
நான் எனது மடலில் மனிதனின் நாசியில் இரண்டு துளைகள் எதற்கு ?
சுவாசிப்பதர்க்ககவே மட்டும் நாசி இருப்பின் ஒரே துளையில் காற்று சென்று ஒரே மூச்சுக்குழாயில் சென்றுதானே சேருகிறது அப்போது நாசியில் ஒரே துளை போதுமே என வினவி இருந்தேன் .
இது படைப்பின் பிழையா? என கேட்டிருந்தேன் .இதற்க்கு சித்தர்கள் விளக்கம் தந்திருப்பதாவும் தெரிவித்திருந்தேன் .
 
திருமூலர் பாடல்களில்  இரண்டை மாத்திரம் எடுத்துக்காட்டி 

//இவ்விரு நாசித் துவாரங்களிலிருந்தும் வெளியேறுகின்ற காற்று மனித உயிர்களின் படைப்பை, பால் வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றது; எனவே இரு நாசித் துவாரங்களும் காரணத்தோடுதான் படைக்கப்பட்டிருக்கின்றன’ என்பதே.//

என்றுபால் வேறுபாட்டைத் தீர்மானிப்பதில்  உதவுகிறது என பதில் கூறியதாக எடுத்துக்கொள்ளலாமா ?
நாசியின் இரு துளைகள் அதற்க்கு மட்டும் தானா ?

அப்படி எனில் இந்தபதிலில் உள்ள முரண்பாடுகளை ( திரு மூலரின் பாடலில் 
அல்ல )
புரிதலின் முரண்பாடுகளை  விளக்கலாமா என பாட்டியிடம்  பேராண்டி கேட்டு சொன்னால் பிறகு எழுதுகிறேன் .

 ஆதி காலத்து மின் தமிழர்களுக்குநான் மின்தமிழில்  எழுதிய " எனக்குப்புரிந்தது இதுவே "(
எனும் தொடர் ( சுமார் 40கட்டுரைகள்  என நினைக்கிறேன்) நினைவிருக்கலாம் ,அது வேறு ஒரு இணையத்தில் இன்றுவரை தொடர்ச்சியாக 12000 பேர் படித்துக்கொண்டு இருப்பதாக  பதிவு இருக்கிறது .
இயன்றால்  மின் தமிழ் முந்தய இழைகளைப்பார்க்கவும் . 

எனினும் பதிலுக்கு நன்றி சகோதரி ,
நீங்கள் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுக்கு உறவா ?
நான் அவரின் சிந்தாதிரிப்பேட்டை வீட்டுக்கு வந்திருக்கிறேன் .அவரிடம் பழகி இருக்கிறேன் .எனது தொழ்ற்சாலையை அவர்தான் தொடங்கிவைத்தார் .
அன்புடன் 
அண்ணாமலை  சுகுமாரன் 
னக்கு புரிந்தது இதுவே ! (2)----
பிறப்பு 
நமது இச்சையால் நாம் பிறக்கவில்லை

இறப்பும் நம் வசம் இல்லை

பற்ப்பலபிறவியின் கர்ம வினைகளின் தொகுதியும்

சத்வம் ரஜோ தமோ எனும் முக்குண நிலையால்

உருவான வாசனையாலும்

வந்து முளைத்தது இப்பிறவி !

நமது தாய் தந்தையை நாம் தேர்ந்தெடுக்வில்லை !

அவர்களும் நம்மை வேண்டி இருக்கவில்லை !

பின் எதுதான் நம்மைப் பிணைத்தது ! 
எது இந்த உறவுகளை அமைத்தது ?

பிணைப்போ தொடர்வது

இன்று நேற்றல்ல ! கொடுக்கல்வாங்கல்

தீரும் வரை தொடரும் இத்தகைய பந்தங்கள் !

ஆனால்பாத்திரங்கள் தான் மாறுகின்றன !

நம் தாய் தந்தை நமக்கு தரவேண்டிய

தீர்க்க வேண்டிய கடனை சரிசெய்ய

நாம் அவர்களுக்கு பிள்ளையைபிறக்கிறோம்

இத்தகைய கொடுக்கல் வாங்கல் தீரும் வரை

இருவர் தொடர்பும் தொடர்திடும்,

பிறவி பிறவியாக அறுபடாமல் !

நமது சகோதர சகோதரிகளும் நண்பர்களும்

நாம் தொடர்பு கொள்ளும் அத்தனை

அத்தனை பேரும்ஒன்றும் தற்செயல் இல்லை !

நம் ஆயிரம் ஆயிரம் பிறவியிலே அறுபடாமல்

தொடரும் தொடர்புகள்தான் ! தீரும் வரை

கடன் பெற்ற ஊரும் நபர்களும்

தட்டாமல் வந்தே தீரும் ।!

இறைவனின் மாயா சக்தி இயற்க்கை ! 

மாயை என்றால் இல்லாமல் இருப்பது அல்ல

இருப்பதுவே இல்லாமல் இருப்பது !

இயற்கையின் பிரதிநிதி சந்திரன்

பரமனின் பிரதிநிதி சூரியன் !

பிறப்பின் ஆதாரம் பரவிந்து ,நாதம்

உடல் எடுக்க வேண்டிய உயிர்

சூரிய சந்திர கதிர்கள் மூலம் பரவி

உண்ணும் உணவின் மூலம்

அவன் தாயின் உடலில் பரவி ,

தந்தையின் பிராணனின் உந்துதலுக்கு காத்திருக்கும் !

பிறப்பின் ஆயுள் என்பது புகும் பிராணனின்

அளவைப்பொறுத்தே அமைகிறது !

அந்த பெற்றோரின் புனித "உறவின்" போதே பிள்ளையின் 
வாழும் காலம்ஆரோக்கியம் ,வாழும் வழி நிச்சயம்
ஆகிவிடுகிறது ।!

ஓம்கார நாதம் என்பதுவே 
பிறவிக்கு அடிப்படை நாதம் !

செய்த அந்த நல்வினை தீவினை

அவன் பெறும் பிறவியில்

அவனது தாய் தந்தை அமைவதும்

உடலின் வண்ணமும் ,குணமும்

சுக துக்கமும் அமைவதாகும் !

கழிந்த பிறவியில் வறியவனாக இருந்தும்

வாழ்வில் சத்தியத்துடன் ,சகிப்புடன்

தான் உண்ண வழி இல்லாமல் இருந்தும்

தன் சுதர்மத்தை சரிவர்செய்தவன் ,

பிறர் பசி தீர்த்தவன் - பெறுவது
இப்பிறவியில் ஒரு புதிய பிறவி

அதில் உத்தம தாய் தந்தை

ஆரோக்கிய அமைதியுடன்

அவன் சஞ்சித கர்மம் தீர்க்க நிமதியான

ஒரு சுழல்அமைகிறது ! மாறாக உத்தம சுழல் அமைந்தும்

அதர்மமாக அடக்கமில்லா லோபியாக வாழ்தவன்

அடைவதோ தரித்திர குடும்பம் தீராத நோய் 
பிறர் பழிப்பு இன்னபிற !

ஆயினும் அவன் பிறவியின் நோக்கம்

மீதம் இருக்கும் சஞ்சிதம் தான் !

வாழ்வு என்னமோ ஒன்றுதான் ,ஆயினும் 
ஒருவன் பயணம் மூன்றாம் வகுப்பு

நெருக்கடி துன்பமிகு ரயில் பயணம் ! 
நல்வினை புரிந்த மற்றவன் பெறுவது 

குளிர்சாதன இன்ப முதல் வகுப்பு ரயில் பயணம் !

ஆனால் போவது என்னவோ ஒரே ஊருக்குத்தான் !

பிறப்பின் ஆரம்பம் அவன் விடும் முதல் மூச்ச்தான்
மூச்சில் தான் இருக்கு வாழ்வின் அந்த சூச்சுமம் !
யாராவது பிறந்த குழந்தைக்கு மூச்சு விட சொல்லித்தருகிரார்களா ?
அது விதிப்படி விடுகிறது தன மூச்சினை !
அதுகுறித்து அடுத்து வரும் பகுதியிலே !

7 மார்ச், 2015 ’அன்று’ 1:34 முற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:

துரை.ந.உ

unread,
Mar 7, 2015, 11:39:31 AM3/7/15
to Groups, Subashini Tremmel
2015-03-05 1:50 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை என்பதை முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்பது வேண்டுகோள்.

​நிச்சயமாக நான் செய்ய மாட்டேன்..
பத்வை எழுதியவர்களே செய்து பார்த்து பின்னர் தெரிவித்தால் யோசிக்கலாம்..
​ :)))))))))) ​

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Mar 7, 2015, 11:43:01 AM3/7/15
to Groups
​மிக அருமையான மதிப்பு மிகுந்த தொகுப்பு ..... மிக நன்றி ஐயா ​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

annamalai sugumaran

unread,
Mar 7, 2015, 1:03:05 PM3/7/15
to mint...@googlegroups.com

நன்றி   திரு துரை ,
நினைவில் இருந்ததற்கு ,
நீண்ட நாட்களுக்குப்  பின் தொடர்புக்கு ,
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 
எனக்குப் புரிந்தது இதுவே ! (3)----
பிராணாயாமம்*

பிறப்பின் முதல் மூச்சில்தான்
பிறவி எல்லோர்க்கும் தொடங்குகிறது !
பிறப்பின் இறுதி மூச்சில்தான்
இறப்பின் இருள் என்பது தொடக்கம் !

ஆனால் இந்தப் பிறப்பும் இறப்பும்
நாளும் தொடர்கிறது !
நாளுக்கு நாம் விடும் சுவாசம்
21600 மூச்சு , அத்தனை மூச்சும்
சேர்ந்து ஆவதுதான் நாள் ஒன்று !
நாளும் சுவாசத்தை கொஞ்சம் கொஞ்சம் 
மிச்சம் செய்தால் கூடுவது அவன் ஆயுள் .

ஒவ்வொரு நாளும் அவன் விடும் மூச்சில்
உள்ளே இழுப்பது பிறப்பு ! வெளியே விடுவது இறப்பு !
இது தொடரும் வினை ,மூச்சடக்குவதும் ,
வெளியிடுவதும் முழுவதும் அவன்செயல் இல்லையாம் !

மூச்சு விடுவது காற்றை இழுத்து
விடுவது மட்டும்தானா ? மூச்சினிலே
தான் இருக்கு வாழ்வின் சூட்சுமம் !
மூச்சு விடுதல்தான் வாழ்தலின் அடையாளம்;

நாசியின் இருதுளை வழியே
லயம் தப்பாமல் மாறிடும் மூச்சு !
வலப்புற மூச்சுக்கு சூரியகலை
இடப்புற மூச்சுக்கு சந்திர கலை !

சூரியகலையும் சந்திரகலையும் !
அர்த்தமறிந்து பிரயோகிக்கத் தெரிந்தால்
வாழ்வின் அர்த்தத்தையே மாற்றிவிடலாம் !
வாழ்வின் போக்கு நமது மூச்சிலேதான் !

தாறுமாறான மூச்சினால் தான்
பூர்வஜன்ம வினைகளும் ,தொடர்ந்து
வரும் இன்ப துன்பங்கள் ,
மனத் தடுமாற்றம் குழப்பங்கள் ,
வறுமை முதலிய அவலங்கள்
தொடர்ந்து வந்து நம்மை தாக்குகின்றன !

பிறந்ததும் எதை எதையோ
சொல்லித்தரும் நமக்கு
மூச்சு விடுதல் பற்றி மட்டும்
ஏனோ யாரும்சொல்லித்தர சிரத்தை எடுப்பதில்லை !

மூச்சை அறிந்தவன்தான் யோகி !
இயற்கையை மூச்சிலே நட்புக் கொள்ளலாம் !
குளிர் அடிக்குதா ? வலப்பக்கம் மட்டும்
மூச்சு, அதுவே சூரிய கலை ! சூடாகிடும்
ஐந்தே நிமிடத்தில் !

தாக்கிடும் அந்த வெப்பமா ? பிடித்திடு
இடப்பக்க மூச்சை குளிர்தே விடும்
உடம்புதான் ஐந்து நிமிடத்தில் ! ஆண் மகவு வேணுமா ?
சூரியகலை நடைபெறும் பொது உறவு கொள் !

ஆசையுடன் பெண் மகவு வேண்டிடின்
சந்திர கலை நடைபெறும் காலம்
உறவுக்கு உகந்த காலம் !ஆயிடினும்
கூடுதலுடன் ஐம்பூத ஆற்றல் இணைய வேண்டும் !

இத்தகு மூச்சிதனை வயப்படுத்தும்
பயிற்சிதான் பிராணாயாமம் ! அது மூச்சுடன்
பிராணனையும் வயப்படுத்தும் வழியாகும் .!
பிராணனை உணர்ந்தால் எதுவும் சாத்தியம் !

அளவில்லாது விடும் மூச்சுக் காற்றை
அளவுடன் கணக்கிட்டு ,காலஅளவுடன்
சுவாசிப்பதே பிராணாயாமம் ! குறைவாகவும்
மெதுவாகவும் மூச்சு கூடவே 
ஆயுளும் பெருக்கம் அல்லது குறைவு !

வாழும் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதும் இந்த ஆகாயத்திலே
ஒடுங்குவதும் இந்தஆகாயத்திலே!
இந்த ஆகாயமோ பிராணசக்தி ! எங்கும் வியாபித்துள்ள
இந்த சக்தியே பிரபஞ்சத்தின் இயக்கமாகும் !

இன்னும் பல இருக்குது மூச்சினிலே !
அது இதன் அடுத்த பகுதியிலே !

7 மார்ச், 2015 ’அன்று’ 10:12 பிற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:

--

Megala Ramamourty

unread,
Mar 7, 2015, 3:32:17 PM3/7/15
to மின்தமிழ்
//திருமூலர் பாடல்களில்  இரண்டை மாத்திரம் எடுத்துக்காட்டி
//இவ்விரு நாசித் துவாரங்களிலிருந்தும் வெளியேறுகின்ற காற்று மனித உயிர்களின் படைப்பை, பால் வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றது; எனவே இரு நாசித் துவாரங்களும் காரணத்தோடுதான் படைக்கப்பட்டிருக்கின்றன’ என்பதே.//
என்றுபால் வேறுபாட்டைத் தீர்மானிப்பதில்  உதவுகிறது என பதில் கூறியதாக எடுத்துக்கொள்ளலாமா ?
நாசியின் இரு துளைகள் அதற்கு மட்டும் தானா ?//

இல்லை ஐயா! நாசித் துவாரங்கள் பாலினத்தைத் தீர்மானிப்பதில் மட்டும்தான் பங்கு வகிக்கின்றன அவற்றிற்கு வேறு பயன்பாடுகளே இல்லை என்பதாக நான் கூறவும் இல்லை; அவ்வாறு பொருள்கொள்வது பொருத்தமுடையதும் இல்லை. இடைகலை, பிங்கலையிலிருந்து வெளியேறுகின்ற உயிர்க்காற்று குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பலநூறு பாடல்களில் தொடர்ந்து திருமூலர் விளக்கிக்கொண்டு போகிறார்.

எங்கள் சிவகாமிப் பாட்டி நீங்கள் கேட்டிருந்த வினாவுக்கு விடையாகத் தந்து, என்னை விளக்குமாறு பணித்திருந்த மூன்று பாடல்களுக்கு மட்டும் நான் இங்கே பொருள் சொல்லியிருக்கிறேன். அவ்வளவே!  :-)

//...அப்படி எனில் இந்தபதிலில் உள்ள முரண்பாடுகளை ( திரு மூலரின் பாடலில் 
அல்ல )
புரிதலின் முரண்பாடுகளை  விளக்கலாமா என பாட்டியிடம்  பேராண்டி கேட்டு சொன்னால் பிறகு எழுதுகிறேன் .//

ஐயா! திருமந்திரப் பாடல்களில் எனக்கு ஆழ்ந்த புலமையோ பயிற்சியோ கிடையாது;  உரையாசிரியர்கள் விளக்கியிருந்ததன் அடிப்படையிலேயே நான் (பாட்டி தந்த) மூன்று பாடல்களுக்கும் விடையிறுத்திருந்தேன். எனவே, தாங்கள் அப்பாடல்களுக்கான விளக்கங்களில் இருக்கும் முரண்பாடுகளை/குறைபாடுகளை எடுத்தியம்பினால் நாங்கள் அனைவருமே பயன்பெறுவோம். 

இப்போதுதான் சிவகாமிப் பாட்டியிடம் தொலைபேசியில் உங்களைப் பற்றிச் சொன்னேன்.
‘பருத்தி பொடவையாக் காச்சாப்புல... உடனே சுகுமாரன் ஐயாவின் விளக்கங்களைப் பதிவிடச் சொல்’ அப்படின்னு எனக்கு உத்தரவு போட்டாங்க.  :-))
எனவே மேற்கண்ட பாடல்களுக்கான தங்கள் விளக்கங்களைத் தயக்கமின்றி உடனே அளியுங்கள்!  அவற்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அப்புறம், நம் குழும நண்பர் திரு. அரிசோனன் அவர்கள்கூட எந்திரங்களைப் பற்றித் திருமூலர் கூறும் கருத்துக்களில் தமக்கு ஐயங்கள் உள்ளதாக (இவ்விழையில்) குறிப்பிட்டுள்ளார். இயன்றால் அவருடைய ஐயங்களையும் களையுங்கள்.

//நீங்கள் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுக்கு உறவா ?//

இல்லை ஐயா இல்லை. சிவகாமிப் பாட்டி என்னை ‘நவீனக் கிருபானந்தவாரியார்’ என்று அன்போடு அழைத்தார். அதற்காகத்தான் வாரியார் பேசும் பாணியில் சிலவற்றை எழுதியிருந்தேன்.  :-))

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 9, 2015, 11:09:00 AM3/9/15
to mintamil

On 05-Mar-2015 9:37 pm, "Megala Ramamourty" <megala.r...@gmail.com> wrote:
>
> சிவகாமிப் பாட்டி மற்றும் பேராண்டியின் உரையாடல் தொடர்கிறது...(ஹி..ஹி என் கற்பனையில்தான்; வெறும் நகைச்சுவைக்காக எழுதியுள்ளேன் கணினிதாசரே! சொற்குற்றம், பொருட்குற்றம், வேறு எக்குற்றம் இருப்பினும் பொறுத்தருள்க! no hurt feelings please!)  :-)

போரபோக்கைப் பார்த்தால் ,
பாட்டி பெயரில் ரேசன்கார்டு வாங்கி விடுவாங்க போலிருக்கே!!!

> --

annamalai sugumaran

unread,
Mar 12, 2015, 9:23:55 AM3/12/15
to mint...@googlegroups.com
நன்றி  சகோதரி ,
 பதில் இடுவதற்க்குத்தான்  சற்றுத் தாமதம் ஆகி விட்டது 
பொறுத்தருள்க 

ஒருவகையில் மடலாடலும் மேடை நாடகமும்  ஒன்று போன்றது .
மடலாடலில் மடலுக்குமடல் உடனே பதில் இட்டால்தான் சுவைகூடும் 
மேடை நாடகத்திலும் பேசும் வசனத்தின் வரவேற்ப்பை அப்போதே கண்டுவிடலாம் 
அடுத்த வசனத்தின் போது  முந்தய வசனத்தை ரசித்துக்கொண்டிருந்தால் ,
அது பொருத்தமாக இராது .
அப்படியே த்தான் அடுத்து அடுத்து  வரும் மடல்கள் மடலாடலில் முக்கியத்துவும் 
பெறுவது இயற்கையே .

எனினும் மூக்கில் ஏன் இரண்டுத் துளைகள் எனும் நான் கேட்ட கேள்வியிலே ,பல சித்தர்களின் ஞான ரகசியங்கள் பதிலாகப பொதிந்துள்ளது . 
 நமது பள்ளிப்பாடதிட்டத்தில் இத்தகைய கேள்வி  இல்லை என நினைக்கிறேன் .இதுகுறித்து  விளக்கம் தரவும் இல்லை 

கொன்றால் வந்த பாவம் தின்றால்  போகும் என  ஒரு பாமர மொழி உண்டு .
அறிந்ததால் ஏற்ப்பட்ட , வினைகள் 
படித்ததால் படிந்த கர்மவினைகள் ,
சொன்னால் மட்டுமே போகும் என 
இந்தப்பாமரனும் நினைக்கிறேன் .
 
எனவே   தாமதம் ஆகிவிட்டாலும், எழுதாமல் போவது சரியில்லை   என்பதால்  எழுத முனைகிறேன்
 ,கொள்ளுவோர் கொள்ளட்டும் .

 பேராசிரியரிடம் ( பாட்டி சொல் தட்டாத பேராண்டி ) ,நான் அனுமதி கேட்ட காரணம் 
,இந்த இழையை ஆரமித்தவர் அவரே ,அதில் குறுக்கே புகுந்து நான் நினைப்பதை  புகுத்தி  இழையின்  தடம்  மாற்றிவிடக்கூடாதே என்ற நாகரீகமே  காரணம் 
 அதற்காக அவரிடம் நீங்கள் அனுமதி வாங்கித்தந்ததக்கு நன்றி .

நீங்கள் கேட்டபடி திருமூலரின் தந்திரங்கள் எந்திரங்கள் பற்றியும் எழுத அவாஉண்டு 
 .பிறகு விரிவாக எழுதுகிறேன் .

 இனி  விஷயத்துக்கு வருவோம் .

//ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு//  என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள் .

நாம் சுவாசம்  செய்யும்போது  காற்று  நுரையீரலை அடைந்து   அங்கே காற்றில் உள்ள ஆக்சிஜென் எடுத்துக்கொள்ளப்பட்டு கரிமிலவாயு  வெளியேற்றப்படுகிறது 
ஒருமுறை காற்று உள்ளே சென்று வெளியே வருவதைத்தான் சுவாசம் என்று நமக்கு சொல்லிக்கொடுக்க்சப்பட்டிருக்கிறது .
சுவாசிப்பதற்கான  இந்த செயலுக்கு  சாதனமான மூக்கிலே 
ஏன் இரண்டு துளைகள் .?
  ஒரே  துவாரமாக  இருந்து ,அந்த ஒருதுவாரத்தின் வழியே காற்று நுரையீரலுக்கு 
போய்  வந்தால் என்ன ? 

இரண்டு   நாசித்துளைகள் வாழியாகக் காற்று இழுக்கப்பட்டாலும் ,ஒரே மூச்சு குழாயின் வழியாகப்  போய்த் தானே  நுரையீரலின் இரண்டு அறைகளுக்கும் காற்றுப் பிரிந்து செல்கிறது .
பிறகு  ஏன் இரண்டு நாசித் துளைகள் ?

படைப்பின் உச்சமான மனித உடலில் எதுவும் படைப்புத்   தவறாக இருக்க இயலாதே ?. பரிணாமத்தின் உச்சம் தானே மனித உடல் . 
பின் ஏன் இரண்டு துளைகள் ?
படைப்பின் பிழையா ?
எனக்கேட்டிருந்தேன் .

நம்மால் நாசி வழியே உள்ளிழுக்கப்படும் காற்று, நுரையீரலை சென்று அடைகிறது. மார்பு விரிவடைந்து, ரத்தக்குழாய்கள் காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. நுரையீரலில்  சிறிய, மெல்லிய கொத்துகளாக ஆயிரக்கணக்கான காற்றுப்பைகள் உள்ளன.
 நாம் சுவாசித்த காற்றின் பிராண வாயுவை ரத்தக் குழாய்கள்உள்ள  சிவப்பு அணுக்கள் எடுத்துக் கொண்டு விடுகின்றன. இரத்தத்தில் உள்ள கரியமில வாயு வெளியாகிறது இதுவே சுவாசம் , என நமக்கு கற்ப்பிக்கப் பட்டிருக்கிறது .
ஆனால் இந்த செயலைச் செய்ய நமது நாசியில் இரண்டு துளைத் தேவை இல்லை ஒன்றேப்போதும் .

நாம் விடும் முதல் மூச்சுதான் பிறப்பின் ஆரம்பம் 
மூச்சை முதலில் ஆரமித்தது யார் ?
 
நாம் விடும் மூச்சு நுரையீரலின் இயக்கத்தை உண்டாக்கவில்லை . 
மாறாக நுரையீரல்களின் இயக்கமே மூச்சை உண்டு பண்ணுகிறது

அப்படியானால் நுரையீரலை எது இயக்குகிறது ?
நுரையீரலை பிராணனே இயக்குகிறது 
பிராணன்   எனும் உயிர் ஆற்றல்  இயக்குகிறது

 பிராணன் நுரையீரலை செயல்படுத்தும்போது பிராணக் காற்று உள்ளிழுக்கபடுவதும் 
வெளிவிடுவதும் நடைபெறுகின்றது .

இவ்வாறே நமது உடலில்  உள்ள இதயம் போன்ற உயிர் வாழ தேவையான பல உறுப்புகள் நமது இச்சை இல்லாமல் தானே ,இயங்குகிறது .அத்தனை இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது பிராணனே .

பிராண வாயு இன்றி நாம் உயிர் வாழ முடியாது. 
இந்த பிராணநின் சக்தியான பிராண வாயுவை  நாம் சுவாசத்தின் மூலமாக பெறுகிறோம்.
பிராண சக்தி ,உடலின் இயக்கம், அதன் அறிவு,  எனும் ஆன்மிகம் எனும் ஆன்மாவை அறியும்  இவைகளின் வளர்ச்சிகளை ஊக்குவிக்கிறது.
பிராணன் இல்லாவிடில் உலகில் ஒன்றுமே வாழ முடியாது.
பிராணனே பிரபஞ்சத்தின் அடிப்படை சக்தி.

இந்தப் பிரபஞ்சமும் , மனித உடலும் ஐம்பூதத்தினால் உருவானது என்று அறிவோம் .
ஆனால் அந்த ஐம்பூத்திலும் ஊடுறுவிருக்கும் சக்தி பிராணனே ஆகும் .

பிராணாயாமம் என்பது சுவாசத்தின் இயக்கம் மட்டுமே என்று நினைப்பது தவறாகும்.
பிராணனை வயப்படுத்தும் முறையே பிராணாயாமம் ,இதற்க்கு  துணை புரிகிறது .
பிராணாயாமத்திற்கும் சுவாசத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு எனினும்  அதன்  பங்கு மிகக்குறைவே 

 பிராணன் என்பது LIFE FORCE
OXYGEN எனப்படுவது  பிராணவாயு .

நாம் சுவாசிக்கும் காற்றில் பல்வேறு விஷயங்கள் கலந்துள்ளது .
ஒளியின் அலைகளும் காற்றிலே கலந்துள்ளது .
ஒலி யின் அலைகளும் காற்றிலே கலந்துள்ளது .
பிராணம் எனும் உயிர் ஆற்றலும் காற்றின் வழியே  செல்கிறது .
 
பிராணன் உள்ளிருந்து பருவுடலை இயக்குகிறது. பிராணன் சரியாக இயங்காவிட்டால் பருவுடல் நோய்வாய்படுகிறது. இதை உணர்ந்தவர்கள் பிராணனை கட்டுபடுத்தி உடல் நோயை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இது போன்ற மருத்துவ முறை உலகில் பல பகுதிகளிலும் பல பெயர்களில் (Pranic healing, Reiki, Chi energy, Tai Chi) மக்களிடையே பிரபலமாக உள்ளது.

பிராணம்  செய்யும் தொழிலை வைத்து .பத்து வகையான தசவாயு என்று அழைக்கப்படுகிறது  
 பிராணன்
இதுவே உயிர்வாயு என்று அழைக்கப்படுகிறது. நாசி துவாரம் வழியாக உள்ளேச்சென்று மூச்சுப்பையை நிரப்பி பின் உடல் முழுவதும் பரப்பசெய்வதும்,இதுவே 
 
 அபானன்
உணவு சீரணத்தபின் தள்ளப்பட்ட அசுத்த வாயுவை வெளியே தள்ளுவது, 
வியானன் 
இதன் முக்கிய செயல் ஒலியை உண்டாக்குவது. குரல் காற்று என்று கூறலாம். 
 வியானன்
உடலில் உள்ள அனைத்து அசைவுகளும் இந்த  வாயுவின் மூலமே நடைபெறுகிறது.
 சமானன்
தண்ணீர் முதல் கடினமான பொருள் மற்றும் எளிதில் சீரணிக்க முடியாத பொருள் வரை இந்த வாயு சமப்படுத்தி இரப்பைக்கும் குடலுக்கும் கொடுத்து செரிமானத்திற்கு உதவி செய்கிறது.
 நாகன்
உடலில் உள்ள பாகத்தை சுருங்கவும் விரியவும் செய்வது இந்த வாயுவாகும். 
 கூர்மன்
இது விழிக்காற்று எனப்படுகிறது. கண்களை திறப்பதும் மூடுவதும் இதன் செயலாகும்.
 கிருகரன்
தும்மல், இரும்பல், விக்கல் போன்றவற்றை உருவாக்குவதும், 
 தேவதத்தன்
கொட்டாவியை உண்டாக்குவது இந்த வாயுவின் செயலாகும்.
 தனஞ் செயன்
இது வீங்கச் செய்யும் வாயுவாகும். உடலில் எங்கு அடிப்பட்டாலும் வீங்கசெய்வது இந்த வாயுவின் செயலாகும். மரணத்திற்கு பிறகு உடலை வீங்க செய்வது இந்த வாயுவே.,மரணத்திற்கு பின் இறுதியாக வெளியேறுவது இதுவே 
இவ்வாறு பல செயல்கள் இருப்பினும் சுருக்கமாக தந்திருக்கிறேன் 
 .

 இவ்வாறு  இந்த பிராணன்  தசவாயு என்ற பெயரில் காற்றுடன் கலந்து உடல் இயக்கத்துக்கு உதவுகிறது 

ஆனால் பிராண சக்தி எவ்வாறு  எதன்வழியே நம் உடலில் பரவுகிறது?

நம் உடலில் ஏராளமான நாடிகள் (72,000)எனப்படும் சூட்சுமமான குழாய்கள்  உள்ளதாக சொல்லப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவை தச நாடிகள். இவற்றில் மிக முக்கியமானவை 3 நாடிகள். இவை

1-இடா  எனும் நாடி - வலதுகால் பெருவிரல் தொடக்கி கத்தரிக்கோல் போல் மாறி 
இடது மூக்கைச் சென்று அடையும் 
2- பிங்கலா  எனும் நாடி  - இடது கால் பேரு விரலில் ஆரம்பித்து மாறிச் சென்று வலது புற மூக்கை பற்றி நிற்கும் 
3- சுழுமுனை - மூலாதாரத்தில் தொடங்கி எல்லா நாடிகளுக்கும் 
ஆதாரமாக நடுநிலையாய் இருந்து சிரசில் போய் முட்டி நிற்கும் 
4 - சி (ன் ) குவை - உள் நாக்கில் நின்று தண்ணீர்,சோறு ஆகியவற்றை 
விழுங்கப் பண்ணும் 
5 - புருடன் - வலது கண்ணில் இருந்து செயல் படும் 
6 - காந்தாரி - இடது கண்ணளவாய் நிற்பது 
7 - அத்தி - வலது காதலவாய் நிற்பது 
8 - அலம்புடை - இடது கண்ணில் நின்று செயல் படுவது 
9 - சங்கினி - ஆண், பெண் குறியின் வாய் நிற்ப்பது
10 - குரு - ஆபானத்தில் - குதத்தில் நிற்கும்

எழுபத்தீ ராயிர நாடி யவற்றுள் 
முழுபத்து நாடி முதல் "
: நம் உடலில் மொத்தம் உள்ள நாடிகள் 72,000. அவற்றுள் தச நாடிகள் என்னும் நாடிகளே முதல் என்று கூறுகின்றார் ஞானக் குறளில்  ஔவை 

நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லா 
முரம்பெறு நாடியொன் றுண்டு "

இடா எனும் இடது நாசியில்  உள்ள நாடி ,இடது நாசித்துளை மூலம் 
சுவாசிக்கும் இடகலை எனும் காற்றில் உள்ள பிராணனை எடுத்து உடல் மூலம் 
72,000   நாடிகள்  மூலம்  செலுத்தி உடலில் உள்ள அவயங்களை ஒரு விதமாக 
செயல்படுத்துகிறது .
இந்த இடா நாடி மூளையின் வலது பக்கத்தை செயல்படுத்துகிறது .

அப்போது வலது நாசித்துளை வழியே காற்றுப்புகாது .

பிறகு  இரண்டு மணிக்கு ஒருமுறை  சுவாச 
சரம் மாறும் போது   வலது  நாசித்துளையில் உள்ள  பிங்கலா  நாடி வழியாக 
காற்று பிங்கலை எனும் பெயரில் செல்கிறது .

இந்த வலது நாசித்துளை வழியாக செல்லும் நாடி மூளையின் 
இடது  பக்கத்தை இயக்குகிறது .
,
இடகலை பிங்கலை எனும் இரண்டுவகையான பிராணனின் ஓட்டமும் , வித்தியாசங்களை 
 இயக்கத்தில் கொண்டுள்ளது .

 காற்றின் வழியாக  இல்லாமல் நாம் உண்ணும் உணவு ,குடிக்கும் நீர் , என பல  விதமாக நாம் பிராணனைப் பெறுகிறோம் .

புல்லாங்குழலில் உள்ள ஓட்டைகளை இயக்கி நாம்  இசை இன்பத்தைப் பெறுவது போல் ,
 நாசியில் இருக்கும் இரு துளைகளின் மூலம் காற்றை இயக்கத்தெரிந்தவர்கள் ,உடலைக் கொண்டே ,உடலினைப்பெற்ற பயனை அடைகிறார்கள் .சரம் எனும் மூச்சின் வலது இடது பக்க இயக்கங்களை அறிந்தவர்கள் ,அனைத்திலும் வெற்றி அடைகின்றனர் .வாசி எனும்  கலையை அறிந்தவர்கள் மரணமில்லா  பெரு வாழ்வு வாழலாம் 

எனவே நாசியில் உள்ள இரு  துளைகளும் ஞான மார்கத்தில் உடலினை செலுத்த 
 கிடைத்த சாதனமாகும் 
இன்னமும்  எத்தனையோசெய்திகள்   இருக்கிறது , 
நீளம் கருதி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் .
 இத்தனை செய்திகளுக்கும் ஆதாரம் திருமந்திரமே .

இன்னமும் ஒரு  முக்கியமான பயன் நாசியின் இரு துளைகளுக்கும் இருக்கிறது .
அதை அடுத்த  மடலில் பார்க்கலாம் 
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 

 கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்

துள்ளி நடப்பிக்கும் சோம்பர் தவிர்ப்பிக்கும்

உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.'

திருமந்திரம்- 

"

8 மார்ச், 2015 ’அன்று’ 2:02 முற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Krishnan S

unread,
Mar 12, 2015, 9:37:53 AM3/12/15
to mint...@googlegroups.com
அன்பார்ந்த  திரு, அண்ணாமலை சுகுமாரன் 
வணக்கம்.
சிறப்பான கட்டுரையினை படைத்துள்ளீர்கள்
பிராணன் விளக்கம் நன்கு விளக்கியுள்ளீர்.
அனைவரும் படித்து அறிய வேண்டிய செய்தியாகும்
தொடர்க. வாழ்த்துக்கள்
அன்பொடு
கிருஷணன்
சிங்கை

அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

Innamburan S.Soundararajan

unread,
Mar 12, 2015, 10:29:13 AM3/12/15
to mintamil
பதிவை எழுதியவர்களே செய்து பார்த்து பின்னர் தெரிவித்தால் யோசிக்கலாம்..

!? அவங்களாலே முடியாதே. நீங்க அங்கே போய் கேப்பீகளா?

யாராவது ஒருத்தர் மூச்சை அடக்கி உயிர் நீத்ததற்கு ஆதாரம் இருந்தால் கொடுக்கவும் என்று கூவுகிறார்

அதே! அதே! சபாபதே!

மூக்கிலே 
ஏன் இரண்டு துளைகள் .?

பெண்ணும் ஆணுமாகவே.....

Nagarajan Vadivel

unread,
Mar 12, 2015, 11:33:48 AM3/12/15
to மின்தமிழ்
என் பங்குக்கு ஒரு தகவல்
நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.

இதையே விநாயகர் அகவலில்

"ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே"

நமது முதுகுத்தண்டு (தூண்) வடத்தின் உள்ளே இடகலை, பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.(இதுவே மூன்று மண்டலத்து முட்டிய தூணின்). நமது மூச்சு ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 1மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன. அந்த 21,600 மூச்சுக்களில் துரியம், ஆக்கினை, விசுத்திச் சக்கரங்கள் முறையே 6000 மூச்சுக்கள் வீதம் 18,000 எடுத்துக் கொள்கின்றன. அடுத்துள்ள அனாகதம், மணிப்பூரகம், சுவாதிட்டானம் இம் மூன்று சக்கரங்களும் 1000 வீதம் 3000 மூச்சுக்களை எடுத்துக் கொள்கின்றன.மீதம் உள்ள 600 மூச்சுக்களை மூலாதாரம் எடுத்துக் கொள்கின்றது. இவ்வாறு மூச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இயங்கும் சக்கரங்கள், இவை இயங்கும் அந்தந்தப் பகுதிகளை பார்த்துக் கொள்வதுடன், அந்த இடத்தின் உள் உறுப்புக்களையும் பார்த்துக் கொள்கின்றன. இவையே நம் உயிர் இயங்கத் தேவையான சக்தியினை மூச்சின் மூலம் பெற்று உடலெங்கும் 72000 நாடி நரம்புகளின் வாயிலாக பாய்ந்து உடலை இயக்குகின்றன. இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன. படுவர்மம் என்றால் உயிர் பட்டுப்(செத்துப்) போகச் செய்யும் வர்மங்கள் என்று பொருள். 

கணினிதாசன்

Megala Ramamourty

unread,
Mar 12, 2015, 12:07:12 PM3/12/15
to மின்தமிழ்
கணினிதாசரே!

எப்போதிலிருந்து என் ‘mind voice'-ஐயும் படித்தறியும் ’மகான்’ ஆனீர்கள்? believe me or not... நானே, சுகுமாரன் ஐயாவிடம் விநாயகர் அகவலுக்கு விளக்கம் பெறவேண்டும் என்று நினைத்திருந்தேன் தெரியுமா? இப்போது என்னவென்றால் நீங்களே அதண் ஒரு பகுதிக்கு விளக்கம் எழுதிவிட்டீர்கள். அதைப் பார்த்ததும் ‘மெர்சலாயிட்டேன்’!

 (பாட்டி ஒங்க பேராண்டிக்கு எல்லாரோட மனசையும் படிக்கறதுக்கு ஏதாவது ஸ்பெஷல் ட்ரீமெண்ட் குடுத்திருக்கீங்களா என்ன...இந்தப் போடு போடறாரே?)  :-)) 

விநாயகர் அகவலுக்கு திரு. இரசபதி அவர்கள் எழுதியுள்ள ’ரசமிக்க’ அருமையான சித்தாந்த விளக்கவுரை ஒன்றைப் பல்வேறு இலக்கிய ஒப்பீடுகளுடன் (அதில் திருமந்திரப் பாடல்களும் அடக்கம்) கண்டேன்.

அதன் சுட்டி:http://library.senthamil.org/320.htm

அன்புடன்,
மேகலா

Megala Ramamourty

unread,
Mar 12, 2015, 12:08:53 PM3/12/15
to மின்தமிழ்
அதண் ஒரு பகுதிக்கு - பிழையாய் எழுதியுள்ளேன்.

அதன் ஒரு பகுதிக்கு - என்பதே சரி.

Nagarajan Vadivel

unread,
Mar 12, 2015, 1:23:38 PM3/12/15
to மின்தமிழ்
2015-03-12 19:58 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
யாராவது ஒருத்தர் மூச்சை அடக்கி உயிர் நீத்ததற்கு ஆதாரம் இருந்தால் கொடுக்கவும் என்று கூவுகிறார்

​திருமூலர் லாஜிக் சொல்வது

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

இந்த லாஜிக்படி மூச்சுவிடுவது குறையக் குறைய ஆயுள் அதிகரிக்கும்.  உயிர் போகும் என்று எப்படிக்கூறமுடியும்.
மூச்சை நிறுத்த பிறர் உதவி அது தெய்வமாகவோ அல்லது மருத்துவராகவோ வந்து உதவ வேண்டும்
​கணினிதாசன்​

Oru Arizonan

unread,
Mar 12, 2015, 4:49:32 PM3/12/15
to mintamil
திருமந்திர விளக்கம் அருமை, அருமை.  அண்ணாமலை சுகுமாரன் அவர்களுக்கும், சித்தருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.  திருமந்திரம் ஒரு யோக சூத்திரம்(yoga formula) என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அச்சூத்திரத்தை கற்றறிந்த பெரியோர்கள் விளக்கவேண்டும் என்றும் படித்திருக்கிறேன்.  இங்கு மின்தமிழில் இரு கற்றறிந்த பெரியோர்கள் விளக்கம் தருவது பேரானந்தத்தை அளிக்கிறது.

சித்தர், அண்ணாமலை சுகுமாரன் இவர்களில் யாரவது ஒருவர், திருமூலர் எழுதி இருக்கும் எந்திரங்களைப் பற்றியும் விளக்கம் அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.  

திருமந்திரத்தில் அப்பகுதியைப் படிக்கப் படிக்க எனக்குக் குழப்பமே மேற்படுகிறது. என் குழப்பத்தைத் தீர்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

Megala Ramamourty

unread,
Mar 12, 2015, 5:28:31 PM3/12/15
to மின்தமிழ்
அன்பு அரிசோனரே,

நீங்கள் எந்திரங்களைப் பற்றித் திருமூலர் கூறியுள்ள கருத்துக்களை அறிந்துகொள்ள மிகுந்த ஆவலாக இருக்கிறீர்கள் என்பதை நான் ஏற்கனவே அண்ணாமலை சுகுமாரன் ஐயாவிடம் தெரிவித்துவிட்டேன். அவரும் அது குறித்துப் பின்பு விளக்குவதாகப் பதிலளித்திருக்கிறார்.

அன்புடன்,
மேகலா

2015-03-12 16:49 GMT-04:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
திருமந்திர விளக்கம் அருமை, அருமை.  அண்ணாமலை சுகுமாரன் அவர்களுக்கும், சித்தருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.  திருமந்திரம் ஒரு யோக சூத்திரம்(yoga formula) என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அச்சூத்திரத்தை கற்றறிந்த பெரியோர்கள் விளக்கவேண்டும் என்றும் படித்திருக்கிறேன்.  இங்கு மின்தமிழில் இரு கற்றறிந்த பெரியோர்கள் விளக்கம் தருவது பேரானந்தத்தை அளிக்கிறது.

சித்தர், அண்ணாமலை சுகுமாரன் இவர்களில் யாரவது ஒருவர், திருமூலர் எழுதி இருக்கும் எந்திரங்களைப் பற்றியும் விளக்கம் அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.  

திருமந்திரத்தில் அப்பகுதியைப் படிக்கப் படிக்க எனக்குக் குழப்பமே மேற்படுகிறது. என் குழப்பத்தைத் தீர்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Megala Ramamourty

unread,
Mar 12, 2015, 5:42:43 PM3/12/15
to மின்தமிழ்
தச வாயுக்கள் பற்றியும், தச நாடிகள் பற்றியும் அருமையான விளக்கங்கள் பலவற்றைத் தந்திருக்கின்றீர்கள் சுகுமாரன் ஐயா; வெகுமானம் என்ன தருவது உங்களுக்கு?  :-)

நாசியிலிருந்து வெளிப்படும் காற்றின் நீளத்தை (நாசிக்கு வெளியே நம் கையை வைத்துப் பார்த்து அறியலாம்) வைத்து ஒருவரின் ஆயுட்காலத்தை அளக்கலாம் என்று திருமந்திரத்தின் வாயிலாக அறிந்தபோது பெரிதும் வியப்படைந்தேன். இதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா?

எளிதில் விளங்கிக்கொள்ள இயலாத பல சூக்குமத் தகவல்களைத் திருமந்திரம் உள்ளடக்கியிருக்கின்றது. இந்நூலைக் கற்கும் பேறுபெற்ற நீங்கள் இவற்றில் சிலவற்றையேனும் எங்களுக்கு அறியத் தந்தால் பயன்பெற்றவர்களாவோம்.

(சிவகாமிப் பாட்டியிடம் நீங்கள் அளித்திருந்த விளக்கங்களைக் காட்டினேன்; படித்துவிட்டு உங்களை வெகுவாகப் பாராட்டினார்; நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து எழுதுமாறு சொல்லச் சொன்னார்.)  :-))

annamalai sugumaran

unread,
Mar 13, 2015, 6:06:04 AM3/13/15
to mint...@googlegroups.com

13 மார்ச், 2015 ’அன்று’ 3:12 முற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:

annamalai sugumaran

unread,
Mar 13, 2015, 6:23:46 AM3/13/15
to mint...@googlegroups.com
//தச வாயுக்கள் பற்றியும், தச நாடிகள் பற்றியும் அருமையான விளக்கங்கள் பலவற்றைத் தந்திருக்கின்றீர்கள் சுகுமாரன் ஐயா; வெகுமானம் என்ன தருவது உங்களுக்கு?  :-)//

உங்கள் அன்பிற்கு நன்றி ,
வெகுமதி ஒன்றும் தேவையில்லை .
 பதில் அளித்ததில் நானும் மகிழ்வுற்றேன் .
அதுவே எனக்கு வெகுமதி .
பாராட்டிய உங்கள் கடிதம் திரு கிருஷ்ணன்  இட்ட கண்ணியம் மிக்க பாராட்டு 
இவைகளை விட என்ன வெகுமானம் தேவை .,

சுவாசத்திற்கும் வாழும் ஆயிளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு .
நுட்பமான நிறைய விஷயங்கள் உண்டு .
இன்னம் சரம் பார்த்து காரியம் செய்யும் சித்தத் தந்திரம் ஒன்று உண்டு .
நாசியின்  இருதுளைகளுக்கு இன்னமும் ஒரு முக்கிய பயன் பற்றிக் கூறவேண்டி இருக்கிறது .
முதலில் அதைசொல்லி  முடிக்கிறேன் .

பேராசியர் போல் எனக்கு உடனே பதிவு இட முடியவில்லை .இதற்க்கு என்ன மாயம் வைத்திருக்கிறாரோ ? தெரியவில்லை .
 எனக்கு பதில் இட சமயம் கிடைத்து ஒவ்வொரு எழுத்தாக அடித்துமுடித்து  பதிவிடுவதற்குள் ,காலம் கடந்து விடுகிறது .

அகவலைப்பற்றிவேறு எழுதி ஆவலைத்தூண்டிவிட்டுவிட்டார் .
 அகவலின் ஆழம் மிக அதிகம்
  அவர் கூறியிருந்ததை விட இன்னமும் நுண்ணிய பொருள்கள் பொதிந்துள்ளது 

அதையும் இன்று எழுதுகிறேன் .

அன்புடன் 
 அண்ணாமலை சுகுமாரன் .

13 மார்ச், 2015 ’அன்று’ 3:35 பிற்பகல் அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:

annamalai sugumaran

unread,
Mar 13, 2015, 7:00:40 AM3/13/15
to mint...@googlegroups.com
அன்பின் பேராசிரியர் அவர்களுக்கு ,
எத்தனை விரைவாக தகவலை எடுத்து  பதிவிட்டுவிட்டீர்கள் .
 உடனே பதில் அளிக்க இயலாமைக்கு பொறுத்தருள்க.
 விளக்கத்தில் இருக்கும் சில முரண்பாடுகளை  அனுமதியுடன் கூற விழைகிறேன் .

//நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.

இதையே விநாயகர் அகவலில்

"ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
த்தி பேச்சுரை யறுத்துபேரா நிறு

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே"

நமது முதுகுத்தண்டு (தூண்) வடத்தின் உள்ளே இடகலை, பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.//
இவை நீங்கள் கூறியது .

மூன்று  மண்டலங்கள் சூரிய மண்டலம் ,சந்திரமண்டலம் ,அக்னி மண்டலம் .
இவைகளுக்கும் நாடிகளுக்கும் சம்பந்தம் இல்லை .

''இடை பிங்கலையின் எழுத்து அறிவித்து '' என்று அவ்வையார் கூறுகிறார் .

இடை , பிங்கலா  என்பதுதான் இரண்டு நாடிகள் .

நீங்கள் கூறிய    //இடகலை   பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.//
காற்றின் கலைகள் .

மேலும் '''இடை பிங்கலையின் எழுத்து அறிவித்து '' என்று அவ்வையார் கூறுகிறார் .
அவர் எழுத்தைபற்றிதான் கூறுகிறார் ,அந்த  அறிவித்ததற்கு நன்றி கூறுகிறார் 

அதன் எழுத்துக்கள் என்ன என்று கூற மறந்து விட்டீர்கள் .

அதன் எழுத்துக்கள் மறை முகமானவை .மிக முக்கியமானவை , அர்த்தம் உடையவை ,பல பொருள் கொண்ட பரிபாஷை அவை .
இடை க்கு எழுத்து  அ  காரம் 
பின்கலைக்கு எழுத்து உ  காரம் .
 இவ்வை எழுத்து மட்டுமல்ல சில ஞான சாதனங்களான உறுப்புகளையும் சுட்டிக்காட்டுகின்றது .

''ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து''
எது  ''ஆறாதாரத்து    அங்குசம்  என்பதையும் கூற மறந்து விட்டீர்கள் .
எது பேச்சை அறுக்கும் என்று அவ்வையார் கூறுகிறார் ?

இவைகளுக்குப்பின் தான் கபாலம் ஏறுதல் ,மூன்று மண்டலங்கள் வருகின்றன .

இவ்வாறு இன்னமும் ஒவ்வொரு வரியிலையும் மிக ஆழமான நுட்பமான சங்கதிகள் இருக்கின்றன .
பொருத்தமாக இந்த பாடலை இங்கே இட்டதற்கு மிக்க நன்றி .
 இவைகளைப்பற்றி இங்கே சிந்திக்க ஒரு வாய்ப்பு தந்தீர்கள் .

தங்கள் அன்பிற்கு மீண்டும் நன்றி .
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 

12 மார்ச், 2015 ’அன்று’ 9:03 பிற்பகல் அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 13, 2015, 7:42:55 AM3/13/15
to மின்தமிழ்
திரு.அண்ணாமலை சுகுமாரனின் பதிவுகள் மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகின்றன... எத்தனை தகவல்களுடன் கூடிய பதிவு!.. குழுமத்திலும், யோக மார்க்கத்தைப் பற்றி அறியும் ஆவலுடன் கூடியவர்கள் மிகுதியாகி வருவது கண்டும் மனம் மகிழ்கிறேன்.. நான் திருவெம்பாவை எழுதும் போது, யோக மார்க்கம் எழுதியதால்  தோன்றிய விளைவுகள் முற்றிலும் மாறியிருப்பது மிகுந்த மன மகிழ்வைத் தருகின்றது.

விநாயகர் அகவலே யோக சூத்திரம்.. 'கால்' என்றால் காற்று... 'காலால் எழுப்பும்' என்ற வார்த்தைக்கே பொருள் கூற ஆரம்பித்தால் விரியும்..எழுப்புதல் என்பதன் பொருள் அநேகம்... திருமந்திரத்தின் நுட்பமும் அப்படியே!..

திரு.அண்ணாமலை சுகுமாரன் அவர்கள் அழகாகப் பதிவிட்டுக் கொண்டு வருவதால் இத்துடன் நிறுத்திக் கொண்டு, ஆவலுடன் தொடர்கிறேன்.. ஆயினும் ஒரு வேண்டுகோளை அன்பர்கள் முன்வைக்கிறேன்.... யோகமும் ஒரு விஞ்ஞானமே எனினும், அதற்கான ஆதாரங்கள் நம்பிக்கையின் பாற்பட்டவை..முழுமைக்குமே ஆதாரங்கள் தருவது என்பது இயலாத செயல்.. எடுத்துக்காட்டாக ஆதாரச் சக்கரங்கள்.. இதை குருவின் கருணையால் மட்டுமே, தொடர்ந்த பயிற்சிகளின் மூலமே உணர இயலும் என்று சொல்லப்பட்டு வருகின்றது..ஆகவே, இம்மாதிரியான விஷயங்களை நம்பிக்கையின் துணை கொண்டு அணுக வேண்டும் என்பதே என் தாழ்மையான அபிப்பிராயம்.

பார்வதி இராமச்சந்திரன்.

2015-03-13 16:30 GMT+05:30 annamalai sugumaran <amirth...@gmail.com>:
​       
​       
​      
​          
​     
​             
​        
​  
​     
​    
​  
​  
​     
​  
​    
​  
​  
​           

annamalai sugumaran

unread,
Mar 13, 2015, 8:08:34 AM3/13/15
to mint...@googlegroups.com
நன்றி சகோதரி ,
 வெளிப்படையான மதிப்பீட்டுக்கு நன்றி .
உங்களின் அவ்வப்போதைய புரிதலை எழுதினால் ,மேலும் எழுத 
 எனக்கும் ஊக்கம் பிறக்கும் .
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 

13 மார்ச், 2015 ’அன்று’ 5:12 பிற்பகல் அன்று, பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

annamalai sugumaran

unread,
Mar 13, 2015, 10:54:51 AM3/13/15
to mint...@googlegroups.com
நண்பர்களே ,
நாசியில் இருக்கும் இரண்டு துவாரங்கள் ஏன் என்ற ஒரு கேள்விக்கு ,
 என்று இன்னம்  ஒரு விடை இருக்கிறது  முந்தய மடலில் கூறியி ருந்தேன் .

 நான் இந்த வினாவை எழுப்பியவுடனே  ஏன்  கண்கள் கூடத்தான் இரண்டு இருக்கிறது .
காதுகள்  இரண்டு இருக்கிறது என்று பதில்  கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்த்தேன் .
ஆனால்  இந்தக் கேள்வியை யாரும்  அத்தனை சீரியஸ்  ஆக எடுத்துக்கொள்ளவில்லை .போல் இருக்கிறது .

சொல்லப்போனால் அநேகமாக அனைத்து பிராணிகளுக்கும் இரண்டு கண்கள்  இருக்கின்றன ,
பறப்பன ,நடப்பன ஊர்வன  நீந்துவன என்று அனைத்துக்கும் இரண்டு கண்கள் உண்டு .
ஏனெனில் இரண்டு கண்கள் இருந்தால் தான் நாம் காணும் உருவத்தின் 
பிம்பத்தின் முப்பரிமாண தோற்றத்தை உள்ளது உள்ளபடி காணமுடியும் .
காணும் பிம்பத்தின் வண்ணத்தை முழுமையாக அறியமுடியும் .

அதேப்போல் அனைத்து பிராணிகளுக்கும் இரண்டு காதுகள் உண்டு . ,இரண்டு காதுகள் இருந்தால் தான் 
பலவித ஒலிகளின் வித்தியாசத்தையும் , யாருடைய குரல் , எந்த  ஓசை என பிரித்தெறிய முடியும் .
இன்னமும்  ஒலி எந்த திசையில்  வருகிறது என அறியமுடியும்  

ஆனால் இரண்டு மூக்கு முகத்தில் இருந்தால் அது அழகாக இராது என ஒரே மூக்கில் இரண்டு துளைகளை படைத்துள்ளது   இறைசக்தி .
மூக்கில் இரண்டு துளைகள் இருப்பதால் தான் நாம் அனைத்து மனங்களையும், நுகர்கிறோம் .
 எந்த திசையில் இருந்து வருகிறது என உணர்கிறோம் .

இவை எல்லாம் அறிவியல்  தரும் பயன்கள் 
ஆயினும் யோகா முறையில்  இடது கண் சந்திரனாகவும் ,வலது கண் சூரியனாகவும் கருதப்படுகிறது .
இரண்டு கண் பார்வைகளையும்  ஒரே முனையில் சந்திக்கச் செய்தால் ஒரு யோகா சக்தி பிறக்கும் என கிரியா யோகா கூறுகிறது .

சந்திரனும் சூரியனும்  சேருமாமே என முடியும் 100 பாடல்கள் அகஸ்தியர் துறையறி விளக்கம் எனும் நூலில் விளக்கிருக்கிறார் 

கண்கள் பஞ்சபூதத்தில் தீயின்  அம்சமாக கருதப்படுகிறது .

காதுகள் ஆகாயத்தின் அம்சமாகக்  கொள்ளப்படுகிறது 

வாய்  நீரின்  அம்சமாகக்கொள்ளப்படுகிறது .

  நாசி வாயுவின் அம்சமாக கொள்ளப்படுகிறது 

நாசியின் இரண்டு பக்கத்தில் ஓடும் இரண்டு நாடிகள் மூலம் 
சுழுமுனை திறக்கப்பட்டு வாயு கபாலம் ஏறும் .
காற்றின் கணக்கரிந்தவர்கள்  பல  யோக சாதனைகள் அடையலாம் .

இரண்டு கண்கள் மூலம் பல யோக சாதனைகள் நிகழ்த்தலாம் 

வாய்  மூலமாகவும் ,வாயில்  உள்ள நாக்கைக் கொண்டு பல யோகா சாதனைகள் நிகழ்த்த மூடியும் ,
 
முகத்தில் உள்ள பொறிகளுக்கு பவ்தீக காரணங்கள்  மட்டும் இல்லாமல் 

பல யோகசாதனைகளுக்கு , பிறப்பறுக்க உதவும் முறைகளை இவை கொண்டிருப்பதாலேயே 
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று இதனாலேஎக் கூறப்படுகிறது .
அன்புடன் 
 அண்ணாமலை சுகுமாரன் 

13 மார்ச், 2015 ’அன்று’ 5:38 பிற்பகல் அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:

Dev Raj

unread,
Mar 13, 2015, 1:43:51 PM3/13/15
to mint...@googlegroups.com
On Saturday, 7 March 2015 10:03:05 UTC-8, ஏ .சுகுமாரன் wrote:
மூச்சு விடுவது காற்றை இழுத்து
விடுவது மட்டும்தானா ? மூச்சினிலே
தான் இருக்கு வாழ்வின் சூட்சுமம் !
மூச்சு விடுதல்தான் வாழ்தலின் அடையாளம்;
 
Holding your breath for 20 minutes? Seems impossible, but the scientists will explain all.

If you want more OUTRAGEOUS ACTS OF SCIENCE like these tune in for our mini-marathon from 7p - 12a! - 

Tthamizth Tthenee

unread,
Mar 13, 2015, 2:27:36 PM3/13/15
to mint...@googlegroups.com
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே 

என்று  பாரதியாரும்   சக்தி பிறக்குது  மூச்சினிலே   என்றுதான் பாடியுள்ளார்

சக்தி பிறக்குது  மனதினிலே  என்று  பாடாமல்    மூச்சினிலே  என்று பாடியதற்கு   நிச்சயமாக  பொருள் இருக்கும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Nagarajan Vadivel

unread,
Mar 13, 2015, 9:41:03 PM3/13/15
to மின்தமிழ்
மூச்சை ஒருவரால் நிறுத்தமுடியாது அடக்கி மேலாண்மை செய்யத்தான் முடியும்.  அவ்வாறு செய்யும்போது வழக்கத்துக்கு மாறான ஒரு சக்தி கிடைக்கிறது.  இதன் பின்புலத்தில் ஒரு நுண்ணிய கணிதம் அடங்கியுள்ளது.  ஒரு நாளிக்கு மனிதனின் சுவாசம் 21,600 அதில் பெரும்பகுது 14000 அளவிலான மூச்சுக்காற்று மனிதனின் உடலுக்குள் அடங்கி நிற்கிறது.  மனிதன் வளர வளர இந்த இருப்புக் குறைந்துகொண்டே வரும். ஒரு கட்டத்தில் உள் மூச்சு முற்றும் குறந்துவிடுவதால் மூச்சு நின்று இறப்பு ஏற்படுகிறது.  இந்த உள்மூச்சை எப்படிக் கட்டுப்படுத்தித் தன்னிச்சையாகச் செயல்படும் உடல் செயல்பாடுகளை தன்னுடைய நலத்துக்கும் மற்றவர்கள் நலத்துக்கும் செயல்படுத்துபவர்களே சித்தர்கள்.  வாழ்க்கையின் பிறப்புச் சுழலை முற்றுமாக அறுத்து பிறவிப் பெருங்கடலை நீந்துவது சித்தர்களின் கடமை அல்ல.  அவர்கள் மனிதகுல மேம்பாட்டுக்காக வாழ்வாங்கு வாழ உள்மூச்சை மூலதனமாக பயன்படுத்துவார்கள்.

சித்தர்களின் அறிவு வளத்தை சற்றே மாற்றியமைத்து சமயத்தின் நோக்கம் உடலை வருத்தி தவமிருப்பது மட்டுமல்ல முறையான முழுமையான பயிற்சி பெற்று உடலையும் மனதையும் அதன் பூரண வளர்ச்சிக்குத் திருப்பிவிடவேண்டும் என்று வலியுறுத்தியவர் போதி தர்மர்.  கிழக்காசிய நாடுகள் பயன்படுத்திய குங்ஃபூ சித்தர்கள் அறிவியல் அடிப்படையில் அமைந்ததே

கணினிதாசன்

annamalai sugumaran

unread,
Mar 16, 2015, 3:21:47 AM3/16/15
to mint...@googlegroups.com
அன்பின் திரு தேவ் ,
மூச்சு விடுவது காற்றை இழுத்து
விடுவது மட்டும்தானா ? மூச்சினிலே
தான் இருக்கு வாழ்வின் சூட்சுமம் !
மூச்சு விடுதல்தான் வாழ்தலின் அடையாளம்; 
என்றும் நான் எழுதியதை குறிப்பிட்டு மூச்சை 28 நிமிடம் அடக்கிய ஒரு தொடுப்பையும் 
தந்திருந்தீர்கள் .

இவ்வாறு மூச்சை உயர்வு பற்றி நான் மட்டுமா கூறுகிறேன் அகத்தியர் கூட 
தனது அகஸ்தியர் ஞானம் எனும் நூலில் 

"ஆச்சப்பா இந்தமுறை பதிநேன்பேரும் அயன்மாலும் 
அரநோடுத்தேவரல்லாம் 

 மூச்சப்பா தெய்வமன்றெ  அறியச்சொன்னார் 

முனிவோர்கள் இருடியரிப்படியே சொன்னார்" 

என்று 18 சித்தர்களும் ,மும் மூர்த்திகளும் ,இந்த்திரன் முதலான 
தேவர்களும் ,முனிவர்களும் ரிஷிகளும் மூச்சே தெய்வம் என்று கூறியதாகக் கூறுகிறார் .

மூச்சிலேதான் வாழ்வின் சூக்ஷமமும் உள்ளதாககூறி இருந்தேன் .
 எவ்வளவு எழுதினாலும் முழுவதும்எழுதியத்   திருப்தி தராதத்துறை இது .

மூச்சைக்கணக்கோடு உபயோகிக்கும் கலையைக் கொண்டு விரும்பும் வரை  வாழலாம் 
மூச்சு  விடும் எண்ணிக்கையிலும் நியதி உண்டு .
மூச்சின் நீளத்தை கவனித்தில் கொண்டாலும் அதிக நாள் வாழலாம் .
பகல் முழுக்க இடது நாசியிலும் , இரவிலே வலது நாசியிலும் 
மூச்சு இட்டால் அவன் சிறந்த யோகியாவான் என வாசி யோகம் கூறுகிறது 

மூச்சுக்காற்று மூலம் பிராணனையும் ,மனத்தையும் கட்டுப்படுத்தலாம் ,
மனதை அடக்கும் கடிவாளம் மூச்சே ஆகும் .
சரம் எனும் காற்றின் போக்கு செல்லும் நாசித்துளையைக்கொண்டு ,
 காரிய வெற்றியை அடையலாம் .
சரம் கொண்டு ஆருடம் கூறலாம் .
சரம் பார்த்து நோயை  நீக்கும் முறை  உண்டு 
சரம் பார்த்து அன்று அன்றே உடலை சீரமைத்துக் கொள்ளலாம் .
எல்லா அசைவுக்கும் ஒரு ஓசை இருக்கும் ,
சுவாசத்தின் கேட்க்காத ஓசையான ஸோ -ஹம எனும் இரண்டு அஜபா 
மந்திரம் கொண்டு பிராணன் , உயிர் இவற்றின் ஆற்றலை வளர்க்கலாம் 
 இன்னமும் பல சூட்சுமங்கள் மூச்சிலே இருக்குது .
விஷ்ணுவின் பள்ளிகொண்ட கோலம் யோகா நித்திரை தான் 
வலது நெற்றிப்பொட்டை அழுத்து இடா நாடியில் ,இடகலையில் அவரது சரம் உள்ளது 

மூச்சை 28 நிமிடம் ஹோல்ட்செய்த   செய்தி நமக்குப் புதிதல்ல .

நமது பரதவர்கள் முழ்கி முத்து எடுப்பதில் பண்டை நாளில் சிறப்புற்றிருன்தனர் .
மகேஷ்  யோகி, யோகி ராமையா போன்றோர் மேல்நாட்டு மருத்துவ மனையில் 
ஆய்வுக்காக இதயத்துடிப்பையே நிறுத்திக்காட்டி இருக்கிறார்கள் .
கேவல கும்பகம் எனும் பயிற்சி மூலம்  மூச்சை நிறுத்தலாம் என்று யோகா நூல்கள் 
கூறுகிறது .
 பதில் இட்டதற்கு நன்றி தேவ் ,
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன்  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Mar 16, 2015, 7:19:20 AM3/16/15
to mint...@googlegroups.com
On Monday, 16 March 2015 00:21:47 UTC-7, ஏ .சுகுமாரன் wrote:
மூச்சை 28 நிமிடம் ஹோல்ட்செய்த   செய்தி நமக்குப் புதிதல்ல .

ஆம், ஹடயோகம் வல்ல யோகியர் பலர் இருந்துள்ளனர்.
காசியில் வாழ்ந்த திரைலிங்க ஸ்வாமிகள் ஸ்ரீ ராமக்ருஷ்ண
பரமஹம்ஸராலும் புகழப்பட்டவர்.

தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages