இசின் - சங்க இலக்கியத்தில்

38 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Feb 29, 2024, 12:35:54 AMFeb 29
to மின்தமிழ்

அன்புடையீர்,

சங்க இலக்கியத்திற்கான என்னுடைய தொடரடைவுகளைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அதில் கட்டுருபன்கள் என்று வரும் தொடரடைவுகளைப் பற்றிக் கேட்டார்.

அச் சொற்கள் தனித்து இயங்காதவை என்றும், ஆங்கிலத்தில் அவற்றை bound forms என்று சொல்வார்கள் என்றும் சொன்னேன். விளக்கம் கேட்டார். எல்லாருக்கும் தெரிந்த குறளைச் சொன்னேன்.

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

என் நோற்றான்கொல் எனும் சொல்.

இங்கே நோற்றான்கொல் என்பதில் கொல் என்பது வியப்புப் பொருளில் வந்த அசை. அது தனித்து வராது, வந்தால் அதன் பொருள் வேறு.

இதைப்போல,

நன்றுமன் வாழி தோழி

என்பதில் வரும் மன் என்பதும் ஒரு கட்டுருபன்தான் என்றேன்.

இச் சொற்கள் தனித்து வரா, வந்தால் பொருள் மாறும். பின் எப்படி இவை வருமிடங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள் என்று கேட்டார். அந்த வழியையும் சொன்னேன். இச்சொற்களை நோற்றான்-கொல், நன்று-மன் என்று அமைத்து, இவ்வாறு கோட்டுடன் இணக்கப்படுபவை கட்டுருபன்கள் என்று கணினிக்குக் கூறிவிடுவேன் என்றேன்.

உடனே அவர் கேட்டார். இதைப் போல் இன்னொன்று உள்ளது.

கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்

இங்கே ’கேட்டிசின்’ என்பதில் இசின் என்பது அசை. இதைப் போல வந்திசின், என்றிசின், உரைத்திசின், பிரிந்திசினோரே, அயர்ந்திசினால் என்பது போன்ற சொற்களில் வரும் இசின் என்பதை எவ்வாறு பிரிப்பீர்கள் என்று கேட்டார். இவ்வாறு சங்க இலக்கியங்களில் இந்த இசின் என்ற சொல் வரும் சொற்களைக் கொண்ட தொடர்களைத் தொகுக்கமுடியுமா என்று கேட்டார்.

இங்கே பெரும் சிக்கல் என்னவென்றால் இந்த இசின் என்ற உருபு தான் வரும் சொல்லுடன் இணைந்து உருமாறிவிடுகிறது. எனவே இதனைக் கோடு போட்டுப் பிரித்துக் கணக்கிடவும் முடியாது.

இருப்பினும் உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

ஒருவாறு என் கணினியை அதையும் செய்யவைத்துவிட்டேன். அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

யாருக்காவது பயன்படும்.

சங்க இலக்கியத்தில் ‘இசின்’ என்ற சொல் வருமிடங்கள்.

-இசின் (136)

நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும் - பெரும் 425

கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் - மது 208

செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ - குறி 34

பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய - நற் 35/8

நாண் இலை எலுவ என்று வந்திசினே - நற் 50/8

ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே - நற் 55/12

கண்ணும் படுமோ என்றிசின் யானே - நற் 61/10

கேட்டிசின் வாழி தோழி தெண் கழி - நற் 78/7

இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று - நற் 99/5

ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் - நற் 103/1

வைகி கேட்டு பையாந்திசினே - நற் 114/4

கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே - நற் 115/11

அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என - நற் 118/5

அது கண்டிசினால் யானே என்று நனி - நற் 128/5

அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் - நற் 128/6

செலவு அயர்ந்திசினால் யானே - நற் 149/9

காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி - நற் 176/4

குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட - நற் 177/4

மெல்லம்புலம்ப யான் கண்டிசினே - நற் 195/4

ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ - நற் 200/5

கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை - நற் 202/8

கானம் திண்ணிய மலை போன்றிசினே - நற் 240/10

நில்லா பொருள்_பிணி பிரிந்திசினோரே - நற் 241/12

இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல் - நற் 278/6

இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் - நற் 286/6

முன்கடை நிறீஇ சென்றிசினோனே - நற் 300/6

வழங்கு அரும் கானம் இறந்திசினோரே - நற் 302/10

என்றூழ் நீள் இடை சென்றிசினோரே - நற் 314/12

உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை - நற் 332/5

மறந்தனர்-கொல்லோ சிறந்திசினோரே - நற் 337/2

சென்றிசின் வாழியோ பனி கடு நாளே - நற் 394/6

வழிபடல் சூழ்ந்திசின் அவர்_உடை நாட்டே - குறு 11/8

யார் அஃது அறிந்திசினோரே சாரல் - குறு 18/3

கேட்டிசின் வாழி தோழி அல்கல் - குறு 30/1

தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே - குறு 35/5

எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே - குறு 63/4

என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே - குறு 94/5

கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே - குறு 112/5

கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே - குறு 127/6

பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே - குறு 216/4

கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே - குறு 217/7

கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே - குறு 220/7

கண்டிசின் வாழி தோழி தெண் திரை - குறு 240/5

ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை - குறு 247/4

பண்டை அற்றோ கண்டிசின் நுதலே - குறு 249/5

உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு - குறு 262/5

அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே - குறு 267/8

நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே - குறு 268/6

உரைத்திசின் தோழி அது புரைத்தோ அன்றே - குறு 302/1

வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே - குறு 336/6

நிலையா பொருள்_பிணி பிரிந்திசினோரே - குறு 350/8

வளையோய் உவந்திசின் விரைவு_உறு கொடும் தாள் - குறு 351/1

கண்டிசின் பாண பண்பு உடைத்து அம்ம - குறு 359/1

உவ காண் தோழி அ வந்திசினே - குறு 367/3

தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு - ஐங் 44/2

கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று_உற - ஐங் 59/1

தண்ணென்றிசினே பெரும் துறை புனலே - ஐங் 73/4

விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே - ஐங் 74/1

நகாரோ பெரும நின் கண்டிசினோரே - ஐங் 85/5

பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே - ஐங் 105/4

அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே - ஐங் 106/4

வந்திசின் வாழியோ மடந்தை - ஐங் 175/3

அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே - ஐங் 430/4

தே மொழி அரிவை தெளிந்திசின் யானே - ஐங் 466/5

பகைவர் நாடும் கண்டு வந்திசினே - பதி 15/15

நீடினை ஆகலின் காண்கு வந்திசினே - பதி 16/9

வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே - பதி 41/16

முழங்கு திரை பனி கடல் மறுத்திசினோரே - பதி 45/22

வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே - பதி 54/1

நல் இசை தர வந்திசினே ஒள் வாள் - பதி 61/14

காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் - பதி 64/15

இலங்கு கதிர் திகிரி முந்திசினோரே - பதி 69/17

சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே - பதி 72/16

பாடி காண்கு வந்திசின் பெரும - பதி 82/11

காண்கு வந்திசின் யானே செரு மிக்கு - பதி 90/55

சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் - பரி 8/79

காப்பும் பூண்டிசின் கடையும் போகலை - அகம் 7/5

இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என - அகம் 34/15

ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே - அகம் 38/18

ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் - அகம் 69/4

கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே - அகம் 76/13

சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து_உற - அகம் 77/4

கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை - அகம் 99/11

நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே - அகம் 103/15

பேது உற்றிசினே காதலம் தோழி - அகம் 135/6

இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி - அகம் 138/1

செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து - அகம் 147/10

இது நன் காலம் கண்டிசின் பகைவர் - அகம் 164/11

வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே - அகம் 183/15

உரைத்திசின் வாழி என் நெஞ்சே நிரை முகை - அகம் 191/13

இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே - அகம் 197/18

ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் - அகம் 200/5

நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே - அகம் 200/14

ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன் - அகம் 210/10

இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் - அகம் 237/8

இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து - அகம் 267/4

செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும் - அகம் 281/1

வழி நடை சேறல் வலித்திசின் யானே - அகம் 303/20

மணல் மலி மறுகின் இறந்திசினோளே - அகம் 306/15

அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே - அகம் 311/14

எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என - அகம் 314/14

செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே - அகம் 367/16

கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை - அகம் 369/1

இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை - அகம் 375/2

பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின் - அகம் 376/13

இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே - அகம் 384/8

துப்பு உறுவர் புறம்பெற்றிசினே - புறம் 11/9

சீர் உடைய இழை பெற்றிசினே - புறம் 11/13

வெள்ளி நாரால் பூ பெற்றிசினே - புறம் 11/18

காண்கு வந்திசின் பெரும ஈண்டிய - புறம் 17/33

உடம்பும் உயிரும் படைத்திசினோரே - புறம் 18/23

இனிது காண்டிசின் பெரும முனிவு இலை - புறம் 22/36

மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே - புறம் 27/6

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது - புறம் 82/3

உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே - புறம் 125/4

திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே - புறம் 125/20

தாய் வாழியர் நின் பயந்திசினோரே - புறம் 137/15

இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் - புறம் 139/13

பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே - புறம் 150/24

முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர் - புறம் 151/7

நின் படர்ந்திசினே நல் போர் குமண - புறம் 164/8

என்னோ பெரும உரைத்திசின் எமக்கே - புறம் 167/12

திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே - புறம் 180/13

தேற்றா புன் சொல் நோற்றிசின் பெரும - புறம் 202/16

அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு - புறம் 214/6

வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே - புறம் 255/6

காதல் நன் மரம் நீ நிழற்றிசினே - புறம் 272/3

எறி கோல் கொள்ளும் இழிசின - புறம் 287/2

இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே - புறம் 289/7

மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே - புறம் 289/10

பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும் - புறம் 357/3

உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே - புறம் 365/11

உரைத்திசின் பெரும நன்றும் - புறம் 366/12

பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று - புறம் 369/22

புகர்_முக முகவைக்கு வந்திசின் பெரும - புறம் 371/20

மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும - புறம் 373/34

காண்கு வந்திசின் பெரும மாண் தக - புறம் 391/14

 

நன்றி,

ப.பாண்டியராஜா

 

 

 

 

 

 

Dr.Chandra Bose

unread,
Feb 29, 2024, 12:54:40 AMFeb 29
to mint...@googlegroups.com
அன்பார்ந்த பேராசிரியர் அவர்களுக்கு,

பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வினை எப்படி பெறுவது என்பதை மிகச் சீராக தந்திருக்கிறீர்கள். 

மிக்க நன்றி.

வணக்கம்.

சந்திர போஸ்.
சென்னை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ebf34346-8829-4eb7-9cf8-5043063b6209n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages