'தமிழகத்து சார்லி சாப்ளின்' கிரேட் நாகேஷின் பிறந்த நாள் இன்று!

83 views
Skip to first unread message

Suba

unread,
Sep 27, 2017, 5:58:23 AM9/27/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
 

நாகேஷ்.... தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கண்டிருந்தாலும் என்றும் மகா உச்சத்தில் தெரியும் கலைஞன். அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர்.
 
நாடகங்களில்தான் நடித்துக் கொண்டிருந்தார், அப்பொழுது ஒரு நாடகத்திற்கு தலைமைதாங்க எம்ஜி ராமச்சந்திரனை அழைத்தார்கள், நாடகத்தில் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தில் சில நொடிகள் வந்தார் அந்த குண்டுராவ், ஆனால் அந்த வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்தார்.

அதனை ரசித்த எம்ஜிஆர், பின்பு மேடைக்கே அழைத்து ஒரு கோப்பை வழங்கினார், அங்கேயே கேட்டார் குண்டு ராவ், "அண்ணே எல்லார் முன்னாடியும் கோப்பை குடுக்குறீங்க, அப்புறமா புடுங்கிற மாட்டீங்களே, ஏன்னா நான் அவ்வளவா ஒண்ணும் நடிக்கல!"

சிரித்து வாழ்த்தினார் எம்ஜிஆர். தமிழகத்திற்கு நாகேஷ் எனும் கலைஞனை அடையாளம் காட்டினார் எம்ஜிஆர்.
நெஞ்சில் ஓர் ஆலயம் படம் நாகேஷுக்கு பெரும் பெயரினை பெற்றுக் கொடுத்தது, அதிலிருந்து அவருக்கு ஏறுமுகமே. அந்த இயல்பான குணமே அவரை உச்சத்திற்கு அழைத்து சென்றது. அவரின் முதல் வாய்ப்பு பெற்றதே அப்படித்தான்.

வாய்ப்புக்காக படக் கம்பெனி அலுவலக வாசலில் காத்திருக்கிறார் நாகேஷ். அந்த கம்பெனி முதலாளி ஒல்லியான தேகம் கொண்டவர். காரில் இறந்து இறங்கி கூன் போட்ட முதுகுடன் கையில் சிகரெட் பெட்டியுடன் நடக்கிறார்.

அவர் முதலாளி என்பதை அறியாத நாகேஷ் அவர் பக்கம் சென்றார். சிகரெட் பெட்டியினை பார்த்து சொன்னார்: "ரொம்ப வெயிட்டா இருக்கா, பரவாயில்ல நான் வேணா சுமந்துட்டு வரட்டுமா"
அந்த முதலாளிக்கு சிரிப்பு பொத்துகொண்டு வந்தது, முதுகில் தட்டி கொடுத்துச் சிரித்தார், நாகேஷூம் சிரித்தார். பின் அலுவலக அறையில் அவரை கண்டதும், காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார், அந்த முதலாளி சொன்னார், உனக்கு நல்ல திறமை இருக்கு, யாருக்கும் பயப்படாம மனதில் பட்டதை இப்படியே பேசு, முன்னேறி விடுவாய்"

அப்படித்தான் முன்னேறினார் நாகேஷ்.
கலைவாணருக்கு பின்னரான‌ பாலையா, சோ ராமசாமி, தங்கவேலு என அக்கால நகைச்சுவையாளர் வரிசையில் தனித்து நின்றவர் நாகேஷ்.
இதில் எம்.ஆர் ராதா என்பவர் ஆல்ரவுண்டர். நிச்சயம் வேறுவகை.


இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் நாகேஷ், அவரின் அலட்டிகொள்ளாத முகபாவங்களுக்கும், நொடியில் சீறிவரும் காமெடி வரிகளுக்கும், உடல் மொழிகளுக்கும் அவருக்கு முன்னாலும் பின்னாலும் யாருமில்லை.
அவர் பல ஆண்டுகள் நகைசுவை நடிகராகவே அறியபட்டார், ஆனால் அவருக்குள் மிகபெரிய குணசித்திர நடிகன் இருந்தான் என்பது பாலசந்தரின் எதிர் நீச்சல், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் தெரிந்தது.
எந்த மகா நடிகனுக்கும் தன் நடிப்பு குறைந்தது அல்ல, என அந்த படங்களில் தன்னை நிரூபித்து நின்றார் நாகேஷ். அவரின் அற்புத நடிப்பினை பாலசந்தர்தான் வெளிகொண்ர்ந்தார்.

பாலசந்தரை தவிர நாகேஷ முழுக்க பயன்படுத்திய இயக்குநர் யாருமில்லை.
எல்லாவற்றிற்கும் மேல் மிக சிறந்த நடன கலைஞனும் கூட, அவரின் பல நடனங்கள் அற்புதமானவை.
பல திறன் கொண்ட நடிகர் அவர். நடிப்பில் தன் முன்னால் நிற்கும் நடிகர்கள் யாராயினும் அசால்ட்டாக தூக்கி எறிவார். எம்ஜிஆரையே சில இடங்களில் அவர் தூக்கிச் சாப்பிட்டதை பார்த்திருக்கலாம். எம்.ஆர் ராதா, சிவாஜி கணேசன் வரிசையில் நாகேஷூக்கும் இடமுண்டு.
நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை ஒஹோ புரொடக்ஷன், பட்டணத்தில் பூதம், அன்பே வா, திருவிளையாடல் தருமி.. என நீண்ட வரிசையில் அவரின் அற்புதமான நடிப்புகள் உண்டு.
கிட்டதட்ட 4 தலைமுறை நடிகர்களோடு நெடிய பயணம் செய்தவர் அவர்.
ஒரு விஷயம் மகா உண்மை
சந்திரபாபு நடனம், நடிப்பு, நகைச்சுவை என பின்னி எடுப்பவர், அவராலும் கூட நாகேஷை நெருங்க முடியவில்லை
சோ ராமசாமி பெரும் அறிவாளி. அவரின் ஒரு வார்த்தையே நீண்ட நேரம் சிரிக்க வைக்கும், அவராலும் நாகேஷை அசைக்க முடியவில்லை
வடிவேலுவிற்கு சீனியரான தங்கவேலு நாகேஷ் பக்கமே வரமுடியவில்லை.
காரணம் நாகேஷின் பிறவி திறமை. அவருக்கும் முன்பும் பின்பும் வந்த எந்த நகைச்சுவை நடிகரும் அவர் இடத்தை நெருங்கவே முடியாமல் இருப்பது அதனால்தான்.
அவரின் ஏகபட்ட வசனங்களை இன்று நினைத்தாலும் சிரித்துகொண்டே இருக்கலாம்.
சோகங்களும் அவருக்கு ஏராளம் இருந்தது, ஆனால் ஒன்றையும் வெளிகாட்டவில்லை. உதாரணம் தன் முகத்தில் கொட்டிகிடக்கும் அம்மை தழும்புகள் பற்றி அவர் இப்படி சொன்னார்.
"அம்மி நல்லா அரைக்கணும்ணா கொத்துவாங்க, ஆண்டவன் நல்லா நடிடாண்ணு என் முகத்துல நல்லா கொத்திட்டான்"
தன் குறைகளை கூட அப்படி நகைச்சுவையாக சொன்ன நடிகன் அவன், பிறவி கலைஞன்.
மிகச்சிறந்த நடிகனான அவருக்கு, தமிழகம் அவருக்குரிய இடத்தினைக் கொடுக்கவில்லை. அவரே இதனை தனக்குரிய பாணியில் சொன்னார். "வீடு கட்ட சாரமாகும் சவுக்கு மரம், வீடு கட்டபட்ட பின் மூலையில் கிடக்கும் அல்லது அடுத்த வீடு கட்ட சென்றுவிடும். ஒரு வேலையும் செய்யாத வாழை மரத்தினைத்தான் அந்த கிரக பிரவேசத்திற்கு கட்டுவார்கள், நான் சவுக்கு மர சாதி."
எப்படிபட்ட வார்த்தைகள்!
அபூர்வ சகோதரர்களில் அவர்தான் வில்லன், அந்த குட்டை கமலை தூக்கிவரச் சொல்வார்கள், அவரைக் கண்டவுடன் கேட்பார்:
"பாதிதான் வந்திருக்கு மீதி எங்கே?"
வசனகர்த்தா எழுதாத வசனமது, அவரே அந்த நொடியில் சொல்லிகொண்டது. அந்த வசனத்திற்கு சிரிக்காதவர்களே இல்லை.
சோகமாக நாகேஷைப் பார்த்தும் அதே கேள்வியினைத்தான் கேட்க முடியும். நாம் பார்த்தது பாதி நாகேஷ்தான், மீதி பாதி பல விஷயங்களால் வெளிதெரியாமலே போய்விட்டது.
நாகேஷின் இடத்தினை இன்னொரு நாகேஷால் மட்டுமே நிரப்ப முடியும்.
"நான் மழையில்தான் அழுவேன் அப்பொழுதுதான் என் கண்ணீர் யாருக்கும் தெரியாது," என சொல்லி சோகங்களை தன்னோடு புதைத்துகொண்டு எல்லோரையும் சிரிக்க வைத்த அந்த சார்லி சாப்ளினின் தமிழக சாயல் நாகேஷ்.

அந்த தமிழகத்து சார்லி சாப்ளினுக்கு இன்று பிறந்தநாள். Long Long ago, So Long ago முன்னால் அவர் பிறந்தது இதே நாள்.

கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை அந்த கலைஞனின் ஆன்மா மன்னிக்காது.

அவருக்கு கண்ணீரை மறைத்துகொண்டு புன்னகையுடன் அஞ்சலி செலுத்தலாம், அதைத்தான் அவரும் விரும்புவார்.

- ஸ்டான்லி ராஜன்

N. Ganesan

unread,
Oct 6, 2017, 12:09:28 AM10/6/17
to மின்தமிழ், vallamai
2017-09-27 2:58 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:
 

நாகேஷ்.... தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கண்டிருந்தாலும் என்றும் மகா உச்சத்தில் தெரியும் கலைஞன். அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர்.



அபூர்வ ராகங்கள் படத்தில் நாகேஷைக் கவிஞர் கண்ணதாசன் வாழ்த்திய விருத்தம் ஒன்று உண்டு. சூரி என்ற மருத்துவராக மறைந்த நாகேஷ் நடிக்க, கவியரசர் தானாகவே வருவார். கட்டணமாக ஒரு விருத்தத்தைச் சொல்வார்

http://nganesan.blogspot.com/2009/02/nagesh.html

அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர் 
பெருமருந்து உயர்பக்தி என்பதைப் பெரியவர்பலர் பேசுவர் 
சுரமருந்தென எதனையோதரும் சூரி என்ற மருத்துவர் 
கரிமெலிந்தது போல்மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே ! 


சுர மருந்து = medicine for fever (சுரம் = காய்ச்சல் நோயின் வடசொல்). 'யானை மெல்லிசானால் தோல்போர்த்திய உடம்பிருக்குமே அப்படி நாகேஷின் உடல்வாகு, அவர் காலமெல்லாம் வாழி' என மங்கலிக்கிறார். பாட்டைக் கேட்டு நாகேஷ் 'அதுதான் கண்ணதாசன்' என்று வியப்பார், 'அதுதான் (டாக்டர்) ஃபீஸ்' என்று அதிர்வெடியைப் போட்டுவிட்டு எழுந்து செல்வார் கவிஞர் :-) தமிழர் நெஞ்சினில், காணொளிகளில் காலமெல்லாம் வாழ்க!

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்  

              அரும  ருந்துகள்  போன்ற  வர்தமிழ் 
                         அரச  ராம்திரு  வள்ளுவர் 
              பெரும  ருந்(து)உயர்  பக்தி   என்பதைப் 
                         பெரிய  வர்பலர்  பேசுவர் 
              சுரம   ருந்தென  எதனை  யோதரும் 
                         சூரி  என்றம   ருத்துவர் 
              கரிமெ  லிந்தது  போல்மெ  லிந்தவர் 
                         கால  காலங்கள்*  வாழ்கவே!  

 (*இங்கு, மெல்லின ஒற்று 'ங்'' அலகிடப்படாமல் விளச்சீராக ஒலிக்கும்). 
வாய்பாடு: புளிமா விளம் மா விளம் மா விளம் விளம் 
1,5 மோனை.    நன்றி: சந்தவசந்தம் குழுமம் 

நா. கணேசன் 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Oct 6, 2017, 2:25:23 AM10/6/17
to vallamai, மின்தமிழ்
வடிவேல், விவேக் வந்தபின் நாகேஷ் ஒரு நகைஞராகவே தோணலை.

6 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 9:39 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

dorai sundaram

unread,
Oct 6, 2017, 9:15:33 AM10/6/17
to mintamil
நாகேஷை நினைவு கூரும் இப்பதிவு அருமை. அவர், “ஜெர்ரி
லூயிஸி”ன்  ரசிகர். ஜெர்ரி லூயிஸின் சாயலை அவரிடம் கண்டிருக்கிறேன்.
சுந்தரம்.

Suba

unread,
Oct 6, 2017, 9:33:00 AM10/6/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
வடிவேல் ஒரு ரகம் என்றால் விவேக் ஒரு தனி ரகம்.

எனக்கு விவேக் காமெடி மிகப் பிடிக்கும்.

ஒவ்வொன்றிலும் விவேக் சொல்லி விட்டுப் போகும் கடைசி கருத்து.. அபாரம்.. :-)

சுபா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

N. Ganesan

unread,
Oct 6, 2017, 10:00:06 AM10/6/17
to மின்தமிழ்


On Friday, October 6, 2017 at 6:15:33 AM UTC-7, dorai sundaram wrote:
நாகேஷை நினைவு கூரும் இப்பதிவு அருமை. அவர், “ஜெர்ரி
லூயிஸி”ன்  ரசிகர். ஜெர்ரி லூயிஸின் சாயலை அவரிடம் கண்டிருக்கிறேன்.
சுந்தரம்.


நன்றி, சுந்தரம். கொங்கு நாடு தந்த நற்கலைஞர்களில் ஒருவர் நாகேஷ்.
கொழிஞ்சிவாடி (கன்னட) மாத்வர்கள் அக்கிரகாரம். கொழிஞ்சிவாடிக்காரர் நாகேஷ்.
 தாராபுரம் பற்றி எழுதியிருந்தீர்கள்: அவ்வூர் தந்த புகழ்பெற்றார் பலருண்டு.
முதன்மையானவர் திருத்தக்கதேவர். அவர் தந்த பெருங்காப்பியம்
சீவக சிந்தாமணி. விருத்தப் பாவில் காப்பியம் படைத்துக் காட்டினார்.
பின்னர் கம்பர் கொங்குப் பெரும்புலவர் வழிநடந்தார்.

இந்த விருத்தங்களில் அரிய விருத்தம் ஒன்றைக் கடகட என்று
கொழிஞ்சிவாடியரைப் பாராட்டிச் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

அது எந்தவகை விருத்தம் என யாப்பறிபுலவரைக் கேட்டு
நாகேஷ் மறைந்தபோழ்து எழுதினேன். சுபா அளித்த
நாகேஷ் பதிவு மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்தது,

இந்த வாரம் கொலராடோவில். கிண்டி எஞ்சினீரிங்
படித்த தோழர்களுடன். டென்வர், மலைவளம் மிக்க நாடு அது.

நா. கணேசன்
 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 14, 2017, 4:48:16 PM10/14/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Kana Praba
2017-10-06 6:15 GMT-07:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
நாகேஷை நினைவு கூரும் இப்பதிவு அருமை. அவர், “ஜெர்ரி
லூயிஸி”ன்  ரசிகர். ஜெர்ரி லூயிஸின் சாயலை அவரிடம் கண்டிருக்கிறேன்.
சுந்தரம்.

 

ஆஸ்திரேலிய வானொலிக்காக, கானா பிரபா எடுத்த பேட்டி:

நாகேஷ் குரலைக் கேட்கலாம். http://radio.kanapraba.com/nagesh.mp3
அதன் எழுத்தாக்கம் (transcript):


வானொலி: வணக்கம் நாகேஷ் சார்
நாகேஷ்: வணக்கம் சார்

வானொலி: உங்களிடம் இப்பொழுது என்னென்ன படங்கள் கைவசம் இருக்கின்றன?
நாகேஷ்: எங்கிட்ட இப்போ கைவசம் இருக்கின்ற படம் முருகன் படம், ராமர் படம், ஆஞ்சநேயர் படம், திருவள்ளுவர்... இதுமாதிரி நிறையப் படங்கள் இருக்கு

வானொலி: நடித்துக் கொண்டிருக்கின்ற படங்களைக் கேட்டேன்
நாகேஷ்: இப்ப யார் நடிக்கலேங்கிறீங்க? ஒவ்வொரு வீட்டிலேயும் அம்மா, பையன், பேத்தி, மாமன், மச்சான் எல்லோரும் ஒருத்தொருக்கொருத்தர் நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கிறாங்க

வானொலி: இல்லை, எத்தனை படங்கள்னு கேட்டேன்.
நாகேஷ்: ரசிக்கும் படங்கள் ரொம்ப.....கம்மி. ரசிக்க முடியாத படங்கள் நிறைய

வானொலி: உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்?
நாகேஷ்: இன்னிக்கே சொல்லணும்; இல்லையா? நான் உங்களைக் கேட்கிறேன், சார்.
உங்கலுக்கு மொத்தம் எத்தனை பல்லு? அப்படின்னு நான் கேட்டா, 32ன்னு சொல்லுவீங்க. சொல்லிக் கேட்டீங்களே தவிர என்னிக்காவது என்ணிப் பார்த்திருக்கீங்களா?

வானொலி: உங்கள் திருமணத்துக்குப் பிறகுதான் நீங்கள் பெரிய நிலையை அடைந்தீர்களென்று கேள்விப்பட்டேன், உண்மைதானா அது?
நாகேஷ்: நீங்க கேள்விப்பட்டது அப்படி, நான் கேள்விப்பட்டது என்ன தெரியுமா? Marriage is a romance in which the hero dies in the first chapter.

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.

வானொலி: நீங்கள் நடித்த முதல் படம்?
நாகேஷ்: இரண்டாவது படத்துக்கு முந்திய படம்

வானொலி: உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி?
நாகேஷ்: நினைவில் வச்சுக்கிற அளவுக்கு எந்த நிகழ்ச்சியுமே இல்லை, என்னைப் பொறுத்தவரையிலும். ஆனா ஒண்ணு. மறக்க முடியாம இருக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. ஒலிம்பிக்கிலே நடக்குதே அந்த ஓட்டப்பந்தயத்துல இந்தியா வர்ரது ரொம்பக் கஷ்டமாயிருக்கு. தமிழன் வர்ரது ரொம்பக் கஷ்டம். லிஸ்டிலேயே வரமாட்டேங்கிறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரையிலும் அது 100 மீட்டராயிருந்தாலும் சரி, 400 மீட்டர்ஸ் தடையோட்டமா இருந்தாலும் சரி ஒரு தமிழனுக்குப் பின்னால ஒரு வெறி நாயை விட்டாப் போதும், world best record அவன் தான். உயிருக்குப் பயந்து அப்படி ஓடுவான்னா அப்படி ஓடுவன் சார்.

இந்த ஒரு சான்ஸ் இருக்கு, ஒரு வேளை அவங்க ஒரு வெறி நாயும் கூட ஓடலாம்னு பர்மிஷன் குடுத்தாங்கன்னா.

வானொலி: முந்திய நகைச்சுவைக்கும் இன்றைய நகைச்சுவைக்கும் ஏனிந்த தேய்மானம்?
நாகேஷ்: நிலவு அதாவது நிலா....I mean moon....என்னிக்குமே ஒரே மாதிரித்தான் இருக்கும், ஆனா, நாம பார்க்கும் போது தேய்பிறையா வந்து ஒருநாள் இருட்டடிச்சுப் போய் அமாவாசை ஆகி, அதுக்கப்புறம் வளர்பிறை வரத்தான் செய்யும். அந்த வளர்பிறை வருவதற்கு அதிக நாட்கள் ஆகாதுங்குற நம்பிக்கை எனக்கு நிச்சயமா இருக்கிறது சார்.

வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
நாகேஷ்: பலபேர் பலவிதமான காரணக்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு ஐயர்ப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.

எங்கள் குடும்பத்தில் எதுவிதமான குழப்பமும் இல்லை. காரணம் எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்தது தான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத்தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.

ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இது நெம்பர் 1.

நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

நெம்பர் 3, உனக்கு ஒன்று பிடித்தது அதுவே எனக்கும் பிடித்தது. அதனால் உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.

வானொலி: அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்?
நாகேஷ்: அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்....நீங்க தயவு செய்து எனக்காக இல்லை மைக்கு....ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது பேசுறாங்கன்னா....அவங்க பேசும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி....செத்துடணும்...on the spot.

ஏன்னு கேட்டா.....இவன் எடுக்கும் போதே....அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா? சகோதரி மாதிரிப் பார்க்கிறானா? அப்படின்னு ஆரம்பிக்கும் போதே....டமால் அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்கு எவனுமே வரமாட்டான்.
மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த countryயும் முன்னுக்கு வரும் சார்.

வானொலி: உங்க குறிக்கோள் என்ன?
நாகேஷ்: குறிக்கோள்னு கேட்டா... ஒருத்தொருக்கொருத்தர் பேசாம.....யார் வம்புக்கும் போகாம....சும்மா உட்கார்ந்திடம்னு சொன்னாக்கா...ஏதோ சவ வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.

அதாவது ஒரு இழவு வீட்டிலே உட்கார்ந்த மாதிரி இருக்கும்.

அதனால, கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கணும்னா சண்டை வரணும் சார். ஆனா, சமாதானமா முடியணும். அப்புரம் வந்து....சழக்கு வழக்கெல்லாம் இருக்கணும். அது வந்து....சுவாரஸ்யமா முடியணும். பணக்காரன் ஏழையெல்லாம் இருக்கணும். ஆனா ஏழைதான் பணக்காரனுக்கே ஐடியா குடுக்கணும். இதெல்லாம் இல்லேன்னா வாழ்க்கை ரொம்ப சப்ணு போயிடும்.

இப்ப... ஏறி ஏறி இறங்கினாத்தான்....அதுக்குப் பேரே ட்ரெயின், கைகழுவி கைகழுவி சாப்பிட்டு முடிஞ்சவுடன் பந்திக்குப் பந்தி மாத்தி மாத்தி வேற பந்தி போட்டாத்தான் அது கல்யாண வீடே.
அது மாதிரி செத்துச் செத்துப் பிழைச்சாத்தான் உலகமே.
எதையுமே லேட் பண்ணுற தைரியம் வேணும் சார். அதான் சார் தமிழனுடைய குறிக்கோளா இருக்கணும்.

வானொலி: வாழ்க்கை சவுக்கியமா, சங்கீதமா இருக்கணும்னா என்ன பண்ணணும் சார்?
நாகேஷ்: நான் ஒரு கச்சேரிக்குப் போயிருந்தேன் சார். சிமிண்டுத் தரை போட்ட அற்புதமான ஆடிட்டோரியம். ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் தோடி ராகத்தில் மிகச் சிறப்பான வித்துவான். அப்பேர்ப்பட்ட மேதை தோடிராகத்தை வாசிச்சிட்டிருக்கும் போது உச்சக்கட்டத்தைத் தொடப் போறாரு. எல்லோரும் சீட் நுனிக்கு வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்காங்க. கை தட்டுறதுக்கு இரண்டு கையையும் விரிச்சு வைச்சிட்டிருக்காங்க. ஒண்ணு சேரணும். அந்த நேரத்தில் பின் வரிசையில் யாரோ ஒருத்தரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து டங்... என்ற சத்தத்தோட கீழ போட்டாரு. தன்னுடையதில்லைன்னு தெரிஞ்ச முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவன் கூட எல்லோரும் யார்ரது காசுன்னு பார்க்கிறான். இப்போ எந்த நாதம் பெரிசுங்கிறீங்க? காசுடைய நாதமா? இல்லே சங்கீதத்தினுடைய நாதமா?

We all people especially வெளிநாட்டுல இருக்கிறவங்களா நான் பார்த்திருக்கிறேன். They live only on dollars.

வானொலி: சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே?
நாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.

ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.

மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட - ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே வாஇகக்ணு; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.

அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.

வானொலி: இறுதியான கேள்வி சார், ஆஸ்திரேலியா தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள்?
நாகேஷ்: நண்பரே! ஆஸ்திரேலியத் தமிழர்களுக்காக நீங்கள் கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொன்னேன் தவிர எனக்கு இதெல்லாம் தெரியும், இதெல்லாம் என்னுடைய அனுபவம், இதெல்லாம் என்னுடைய சாதனையென்று சத்தியமாக தற்பெருமையிலயோ, இல்லை, மற்ற விதத்திலயோ நான் சொல்லவில்லை.

"நான் கடை மனிதன். தரைக்குச் சமமானவன். மிக எளியவன். எனக்குத் தெரிந்ததையெல்லாம் பிடித்ததையெல்லாம் தயவு செய்து யாரும் யாருக்கும் உபதேசம் செய்யாதீர்கள். Never advise anybody. If you need advise, anybody will help you. If you need help, everybody will only advise you



6 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 9:39 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
2017-09-27 2:58 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:
 

நாகேஷ்.... தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கண்டிருந்தாலும் என்றும் மகா உச்சத்தில் தெரியும் கலைஞன். அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர்.


N. Ganesan

unread,
Oct 15, 2017, 9:54:20 AM10/15/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Kana Praba

ஆஸ்திரேலிய வானொலிக்காக, கானா பிரபா எடுத்த பேட்டி:

நாகேஷ் குரலைக் கேட்கலாம். http://radio.kanapraba.com/nagesh.mp3


some feedback:

On Sunday, October 8, 2017 at 11:49:42 AM UTC-7, sv.venu wrote:
அன்பின் நா கணேசன் அவர்களுக்கு 

மிக்க நன்றி... அருமையான, பரவசமிக்க குறிப்புகள், கண்ணதாசன் இணைப்பு பலே ஜோர்!


இளவயதிலிருந்தே ரசித்துக் கொண்டாடி மகிழ்ந்த கலைஞர்களில் நாகேஷ் முக்கியமானவர். அவரது நகைச்சுவை பாத்திரத்தின் உடல்மொழி, வசன உச்சரிப்பு, 90 டிகிரியில் கீழே விழுந்து எழுந்திருக்கும் சாதுரியம், நடன ஆற்றல், கண்ணசைவு, குரல் வளம், பாடல் காட்சிகளில் சேஷ்டை, சக நடிகரை மேலும் சிறப்பாகத் தமது பாத்திரத்தைச் செய்யத் தூண்டும் அவரது கலை,...சொல்லிக்கொண்டே போகலாம்...

சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன் என எந்த ஹீரோவை எடுத்தாலும், அவர்களோடு நடிக்கும் காட்சியில் தனித்து மிளிர்வார் நாகேஷ்....

திருவிளையாடல் தருமி பாத்திரம் சாகா வரம் பெற்றது...அதில் பாடலுக்குப் பரிசை அமைச்சர் கொண்டுவருவார் என்ற அறிவிப்பின் இடைவெளியில் அவரது நடிப்பு அமர்க்களமானது....முதல்ல இந்தப் பால்காரன் கணக்கை அடைச்சுரனும் என்பார்...அடேங்கப்பா..எத்தனை எதார்த்தம்.

காதலிக்க நேரமில்லை படத்தில் அவர் பாலையாவுக்குச் சொன்ன கதையின் கிட்டத்தட்ட உல்டா, சந்திரமுகியில் ரஜினி-வடிவேல் பேய்க்கதை காட்சி. அந்தக் காலத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் ஸ்ரீதர், " பாலையாவுக்கு என்ன கதை சொன்னார் நாகேஷ் என்று தியேட்டருக்குப் போய்க் கேட்க நினைத்தேன்;...காட்சி தொடங்கியதும் ரசிகர்களது ஆரவாரமிக்க கைத்தட்டலும் உற்சாகக் கூச்சலும் ஒருமுறை கூட எங்கும் அந்த வசனத்தைக் கேட்க விடவில்லை, என்னை!" என்று சொல்லி இருந்தார். ஓஹோ ப்ரொடக்ஷன் எத்தனை பிரபலமானது!

பாலச்சந்தர் படங்களில் அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்த படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. மேஜர் சந்திரகாந்த், இருகோடுகள், சர்வர் சுந்தரம், ....இதில் சர்வர் சுந்தரம் படம் நகைச்சுவைக்கு சமமான துயரமிக்க காட்சிகளையும் உள்ளடக்கியது...இரண்டிலும் பின்னியிருப்பார் நாகேஷ். (நான் நீர்க்குமிழி பார்க்கவில்லை)

நாகேஷ் இல்லாது, அன்பே வா படத்தைக் கற்பனை செய்து பாருங்கள், அப்போது புரியும் அவரது உழைப்பு. 

தேன்மழை படத்தில் அவரும் நடிகர் சோவும் அடிக்கும் கூத்து அமர்க்களமானது. 

தில்லானா மோகனாம்பாள் படத்தின் விசித்திர வில்லத்தன வைத்தி பாத்திரத்தை, வேறு யார் செய்திருக்கக் கூடும்?

கமல், நாகேஷின் மிகப்பெரிய ரசிகராக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அபூர்வ சகோதர்கள் படத்தில் வில்லன் பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்திருப்பாரா... நம்மவர் படத்தில் நாகேஷ்,அசாத்திய பங்களிப்பு செய்திருக்கிறார். மெலோடிராமா வாக இருக்கும், தமது மகள் தற்கொலைக்குப் பிந்தைய காட்சியில் கிட்டத்தட்ட அவர் ஒருவர் மட்டும் வெகுநேரம் பேசும் காட்சியின் அவரது  உடல்மொழி, மகள் உடலுக்குத் தீ மூட்டியதும் அவர் கமலுடன் தன்னிலை பிறழ்ந்து ஆடும் நடனக் காட்சி....அம்மவோ !

நாகேஷ் - மனோரமா இணைந்து நடித்த படங்களில், இவரது நடிப்பை அவர் தமது கண்களால் ரசித்தபடி ஈடு கொடுத்து நடிப்பார்...சர்வர் சுந்தரம் படத்தில் திரையில் நடிக்கச் செல்கையில், ரங்காராவ் இயக்கத்தில் முதன்முதல் புதுமுகமாக நடிக்கத் தொடங்கும் காட்சியில் அவர் மனோரமாவைப் பார்த்ததும் பேசத் தொடங்கும் நக்கல் வசனத்திலிருந்து அந்தக் காட்சி முழுக்க அதகளம் செய்திருப்பார்...அவர் செட்டுக்கு வந்து சேரும் விதமே சர்க்கஸ் தான்...

இந்த இரவு முழுக்க அவரைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம்...மற்ற நகைச்சுவை நடிகர்களோடு இணைந்து நடித்த காட்சிகளில் அடுத்தவரை மிஞ்சும் முனைப்பு இல்லாதே தனித்துவத்தை வெளிப்படுத்தியவர் அவர்.

மிகச் சிறந்த நகைச்சுவைக் கலைஞர் வாழ்க்கை முழுக்க சோகமாகக் கழிக்க நேர்ந்தது அவருக்கு மட்டுமல்ல, சந்திரபாபு உள்ளிட்டு மற்ற சிலருக்கும் நேர்ந்த துயரம்...

ஆனால், நாகேஷ் பெயரைத் தவிர்த்துவிட்டு, தமிழ் சினிமா குறித்த சுருக்கமான வரலாறு கூட எழுத இயலாது. 

எஸ் வி வேணுகோபாலன் 
சென்னை 24
94452 59691


2017-10-07 14:00 GMT+05:30 Vasan Tha <vasanth...@gmail.com>:
ஐயா  உங்கள்  கட்டுரை  படித்தேன் .நாகேஷின் பிறந்த  நாளை  நினைவூட்டி  போற்றும்  உங்களை வாழ்த்து கிறேன் .நான்  அவருடன்  அவர்  குடும்பத்தில்  ஒருவராக 20 ஆண்டுகள்  பழகியவன்ன
 
Reply all
Reply to author
Forward
0 new messages