தமிழ் வேட்டை போட்டி அறிவிப்பு

34 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Oct 19, 2025, 6:21:48 AM10/19/25
to
வணக்கம்,
இரண்டாமாண்டாக, தமிழ் அநிதமும் வாணி பிழைதிருத்தியும் இணைந்து "தமிழ் வேட்டை" என்ற இணையவழிப் போட்டியை ஐப்பசி மாதம் முழுவதும் அறிவித்துள்ளனர். தமிழ்ப் பிழைகளை வேட்டையாடுவதே இதன் இலக்காகும். இதனால் மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு, இப்பிழைகளைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.

நீங்களும் கலந்து கொள்ளலாம். அவரவர் சமூகத் தளங்களில் #tamilvettai என்ற கொத்துக்குறியுடன் பிழையைச் சுட்டிக் காட்டலாம். அந்தப் பதிவை இக்குழுவிலோ, கூகிள் படிவத்திலோ பகிர்ந்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கலாம். விரிவான போட்டி விதிகள் இந்த இணைப்பில் உள்ளன.
https://vaanieditor.com/contest
Screenshot 2025-10-18 at 2.50.06 AM.png

இலக்கணம் கற்றுக் கொள்ள கீழுள்ள குழுக்களில் இணையலாம்.

--

அன்புடன்,
நீச்சல்காரன்

Neechal Karan

unread,
Dec 8, 2025, 1:42:24 AM12/8/25
to
வணக்கம்,
இரண்டாமாண்டாக, தமிழ் அநிதமும் வாணி பிழைதிருத்தியும் இணைந்து "தமிழ் வேட்டை" என்ற இணையவழிப் போட்டியை ஐப்பசி மாதம் முழுவதும் நடத்தினர். முதலாண்டை விட அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டு தமிழ்ப் பிழைகளை வேட்டையாடினர். அதன் போட்டி முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.
image.png
வெற்றியாளர்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம். விரிவான விவரங்கள்: https://www.facebook.com/share/p/1Fgkx2ma9W/

எங்களுடன் வெற்றியாளர்களை ஊக்கப்படுத்த இணைந்த https://www.tamiltshirts.in/ நிறுவனத்தாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற மொழிசார்ந்த முன்னெடுப்புகளுக்குத் பொதுச்சமூகம் ஆதரவளிப்பது ஆரோக்கியமான போக்கு.

போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட பிழைகள் தொகுக்கப்பட்டு வகைப்படுத்தாத நிலையில்(Non Annotated) பிற ஆய்வுகளுக்கும் மேம்பாடுகளும் உதவும் நோக்கில் CC BY-NC-SA 4.0 உரிமத்தில் கேகிள் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

போட்டி தான் முடிந்துள்ளது. பிழைகளை எப்போதும் போலச் சுட்டிக் காட்டி நல்ல தமிழை வளர்க்கலாம். https://www.facebook.com/groups/vaanieditor தளத்தில் இணைந்து கொள்ளலாம். 



அன்புடன்,
நீச்சல்காரன்

Neechal Karan

unread,
Jan 11, 2026, 1:12:03 PM (16 hours ago) Jan 11
to கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், Groups, vallamai, santhav...@googlegroups.com, ThamiZha! - Free Tamil Computing(FTC)
வணக்கம்,
இரண்டாமாண்டாக 2025 ஆம் ஆண்டின் தமிழ்வேட்டை போட்டியின் முடிவுகள் கடந்த மாதம் வெளிவந்தன. இன்று நடைபெற்ற அதன் இணையவழி நிறைவு விழாவின் ஒளிப்பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 

Orange and Yellow Retro Raffle Contest Instagram Post.png

இலக்கணம் கற்றுக் கொள்ள கீழுள்ள குழுக்களில் இணையலாம். தொடர்ந்து நல்ல தமிழை வளர்ப்போம்.

அன்புடன்,
நீச்சல்காரன்
On Sun, 19 Oct 2025 at 15:51, Neechal Karan <neecha...@gmail.com> wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages