--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அடடா! விஷயம் எங்கயோ போய் லாக்காவுதே!
உண்மை ஒலிக்கின்றது.அரிய கட்டுரைசீதாம்மா
சங்கம் மருவிய காலத்தை இருண்ட காலம் என்று கூறுவதும் பொருத்தமற்றது. தமிழர்கள் அல்லாத களப்பிரர் ஆட்சி புரிந்தனர்; அவர்கள் சமண சமயத்தையே வளர்த்துச் சைவ சமயத்துக்கு எதிர்ப்பாக இருந்தனர் என்று கூறிச் சங்கம் மருவிய காலத்தை “இருண்ட காலம்” என்கின்றனர். தமிழிலக்கிய வளர்ச்சி இல்லை என்பதும், ஒரு குற்றச் சாட்டு. ஆனால் சமய உலகில் களப்பிரர்கள் எதனை எதிர்த்தார்கள் என்பதையும் அவர்கள் கால இலக்கிய, இலக்கண வளர்ச்சியையும் கூறிச் சங்கம் மருவிய காலம் இருண்ட காலம் அன்று என, மயிலை சீனி. வேங்கடசாமி, க.ப.அறவாணன், பொ.வேல்சாமி முதலியோர் விளக்கி உள்ளனர்.மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலும், க.ப.அறவாணன் எழுதிய சைனரின் தமிழ் இலக்கண நன்கொடை என்ற நூலும், பொ.வேல்சாமி எழுதிய பொற்காலங்களும் இருண்டகாலங்களும் தேவை; ஒரு தலை கீழ் பார்வை என்ற கட்டுரையும், குறிப்பிடத் தக்கவை. அவசரப் படாமல் ஆழ்ந்து சிந்தித்து எழுதியுள்ளார்கள். உயிர்ப்பலியாகம் செய்த வைதீகத்தை எதிர்த்தமையாலேயே களப்பிரர்கள் நிந்தனைக்கு ஆளானார்கள் என்பதைப் புலப்படுத்தி, அவர்கள் காலத்திலும் தமிழிலக்கிய வளர்ச்சியும் இருந்தது என்பதையும் தெளிவுறுத்தியுள்ளார்கள்.சங்கம் மருவிய காலத்தில்தான் பதினெண்கீழ்க்கணக்கில் பல நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்கள், பதினோராம் திருமுறையில் பல நூல்கள், குறிப்பாகக் காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, திருவரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகிய படைப்புகள், தமிழர்களின் தத்துவச் சொத்து என்று கூறப்படும் திருமந்திரம், முத்தொள்ளாயிரம், முதலிய இலக்கியங்கள் தோன்றின. சில இலக்கண நூல்களும் தோன்றின. புதிய யாப்பு வடிவங்கள் தோன்றின. கட்டளைக் கலித்துறை குறிப்பிடத் தக்கது.
காவிய உலகில் சிலப்பதிகாரமும், அந்தாதி உலகில் அற்புதத் திருவந்தாதியும், பதிக உலகில் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களும் தத்துவ உலகில் திருமந்திரமும் முதலில் பாடப்பட்டவை என்பதும், அவைகள் வழிகாட்டிகள் என்பதும் குறிப்பிடத் தக்கவை.களப்பிரர் ஆட்சிக்காலத்தில் நுண்கலைகளும் வளர்ந்தன என்று கூறும் மயிலை சீனி.வேங்கடசாமி ‘கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்து திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், தங்களுடைய தேவாரப் பதிகங்களில் கூறுகிற கோயில் கட்டட வகைகளான கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், பெருங்கோயில், இளங்கோயில், மாடக்கோயில், தூங்கானை மாடம், மணிக்கோயில் முதலான கட்டட வகைகள் களப்பிரர் காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தக் கட்டட வகைகள் எல்லாம் திடீரென்று 7ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்க முடியாது’ என்பார்.இவ்வளவுக்கும் பிறகும் சங்கம் மருவிய காலத்தை இருண்ட காலம் என்று கூறலாமா?தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் பேராசிரியர்கள் ‘பொற்காலம்’ ‘இருண்ட காலம்’ போன்ற புனைந்துரைகளை அல்லது சொல்லாடல்களைத் தவிர்த்து விட்டுச் ‘சங்க காலம்’ ‘சங்கம் மருவிய காலம்’ முதலிய காலப் பிரிவுகளைக் குறிப்பிட்டு, அவ்வக்காலப் படைப்புகளை, அவை குறிப்பிடும் செய்திகளோடும், சமூகப் பின்னணியோடும் தோன்றிய காரணங்களோடும் விளக்கிக் கூறி எழுதுவது நலம்.
- Show quoted text -
நான் வேறொரு நோக்கில் தமிழ் இலக்கிய போக்குகள் பற்றி எழுதி வருகிறேன்.
அது சிங்கப்பூர் கருத்தரங்கிற்கு.
எரிந்த கட்சி எரியாத கட்சி பொற்காலம், பொற்காத காலம் என்பதெல்லாம் வெறும்
கற்பனை. நான் பல காலமாகக் கேட்டுவரும் கேள்விதான். சங்க காலத்தில் எத்தனை
தமிழர் இருந்திருப்பர்? அவ்வளவு குறைவாக இருந்த போதே வள்ளுவன்
பட்டினிச்சாவு கண்டு இறைவனுக்குச் சாபம் போட வேண்டிய அவசியமென்ன?
பொற்காலம் என்பது நாம் காணும் இன்றைய இலக்கியச் செழுமைக்கு விதை நெல்
அன்று எப்படித்தோன்றியது, வளர்ந்தது என்பதை வைத்துச் சொல்வது.
அதையெல்லாம் அரங்கனார் இம்மன்றத்தில் விளக்கிய வண்ணம்தான் உள்ளார்.
அன்றும் இன்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வு இலக்கியமானால் பட்டினியும்,
அடுக்குமுறையும் இருக்கத்தான் செய்யும். அரசர்கள், அதிகாரம் இவை
அராஜகத்தை வளர்க்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? இராஜராஜன் தேவதாசிகளின்
உணவில் விஷத்தை வைத்து விளையாடுவானாம். இ.பா எழுதுகிறார். அது அரச
விளையாட்டு.
நான் நிரம்ப எதிர்பாத்தேன் இக்கட்டுரையில்.
நா.கண்ணன்
2011/6/26 Innamburan Innamburan <innam...@gmail.com>:
விளையாட்டு.
நான் நிரம்ப எதிர்பாத்தேன் இக்கட்டுரையில்.
நா.கண்ணன்