இந்தோனேசியா ஆசியத் தமிழ்ச்சங்கம் ஏற்பாட்டில் 2.9.2025 அன்று மாலை ஜகார்த்தா நகரில் உள்ளூர் தமிழ் மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உள்ளூர் மக்கள் ஏறக்குறைய 30 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் இந்தோனேசியாவில் அவர்கள் ஒவ்வொருவரின் தமிழ்க் கல்வி தொடர்பான பிரச்சனைகள் தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய கலந்துரையாடலாக அமைந்தது. அதன் பின்னர் நான், முனைவர் கௌதம சன்னா, திரு.சண்முகம் ஆகியோர் உரையாற்றினோம்.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேல் இந்தோனேசியாவில் பணியாற்றி வரும் திரு முத்துமணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அமைப்பின் தலைவர் திரு விசாகன் அவர்கள் தலைமை உரை வழங்கினார்.
சுவையான மாலை உணவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்தோனேசியா ஆசியத்தமிழ்ச் சங்கத்தின்-இந்தோனேசியாவில் தமிழ்க்கல்வி நிகழ்ச்சியில்
முனைவர் சுபாஷிணி உரை