ஆடிப்பிறப்பு

173 views
Skip to first unread message

Gowri Vimalendran

unread,
Jul 16, 2013, 7:26:57 AM7/16/13
to mint...@googlegroups.com
ஆடிப் பிறப்பு

மாதப்பிறப்பு என்றாலே எம் மனதில் ஒரு உணர்வு ஏற்படும். இன்று மாதப்பிறப்பு என்று சில காரியங்களை செய்வதை தவிர்க்கிறோம். சில காரியங்களை செய்தால் அவை தொடரும் என்றும் நினைக்கிறோம். காலையில் ஆலயம் செல்வது, இறைவனை மனசாரத் தொழுவது, விரதம் இருப்பது, சில நல்ல காரியங்களைகூட இன்று, மாதப்பிறப்பு வேண்டாம் என்று சொல்வதும், ஒரு நோய் நொடி வருத்தமா.. இன்றைக்கு மருந்து எடுக்கப் போகவேண்டாம் ஒருநாள் போகட்டும், நாளைக்குப் போகலாம் என்பதும், இன்றும் நடைமுறையில் இருக்கிறது.விஞ்ஞான வளர்ச்சியிலும், அறிவு பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், இந்த மாதப்பிறப்பு அடிமனதில் உறுத்துகிறதுதான். 

தைமாதப்பிறப்பை சூரியனுக்கு பொங்கலிட்டுப் படைத்து நாமும் உண்டு பிறர்க்கும் கொடுத்து மிகவும் மகிழ்வுடன் வரவேற்று கொண்டாடி மகிழ்கிறோம். அந்த வரிசையில் சித்திரை வருடப்பிறப்பு..புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, ஆலயம் சென்று, கைவிசேஷம் கொடுத்து, வாங்கி மகிழ்ந்து அந்த மாதத்தை வரவேற்கிறோம்.  ஒவ்வொரு மாதப்பிறப்பும் அந்த மாதத்துக்குரிய சிறப்புக்களை எமக்கு ஞாபகப்படுத்தி எடுத்து வருகின்றன. சில மாதப்பிறப்புக்களை விழாக்களாக  கொண்டாடி மகிழ்கிறோம். சில மாதப்பிறப்புக்கள் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. 
தை சித்திரை போல, ஆடிமாதப்பிறப்பும் விசேஷமானதுதான். தைமாதப்பிறப்பு, சித்திரைமாதப்பிறப்பு என்பதுபோல, ஆடிமாதப்பிறப்பு என்று சொல்லாமல், ஆடிப்பிறப்பு என்று கூறுவதே ஆடிமாதத்துக்குரிய தனிச் சிறப்பு. 

ஆடிப்பிறப்பென்றால் எமக்கு நினைவுக்கு வருவது நம் நாட்டின் பெருமைகுரியவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் "ஆடிப்பிறப்புக்கு நாளைவிடுதலை" என்ற இனிமையான, மகிழ்ச்சிதரும் பாடலும் ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் தான். என்றைக்குத்தான் இதை மறக்க முடியும். ஈழத்தமிழ் மக்கள்  இதை என்றுமே மறக்க மாட்டார்கள். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இந்த ஆடிக்கூழ் அவரவர் இல்லங்களில் இயன்றவரை சிறு அளவிலேனும் இடம்பெற்றேயாகும். விதம் விதமான தின்பண்டங்கள் இன்று பலராலும் புதிது புதிதாக எம் உணவில் சேர்க்கப்பட்டாலும் இந்த  ஆடிக் கூழ் விசேஷமானதுதான். வருடம் ஒருதடவை வரும் இந்த நாளை எம் தமிழ் ம்க்கள் விசேஷமான ஒரு நாளாகத்தான் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் ஆலயம் செல்லும் மக்கள் அசைவம் சாப்பிடுபவர்கள், அசைவத்தை தவிர்த்து, சைவமாக உணவருந்துவதும், ஆடிக்கூழ் காய்ச்சுவதும், கொழுக்கட்டை அவிப்பதும், அயலவர்க்கும், கூழ்காய்ச்ச இயலாதவர்க்கும் பலருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பதும், இந்த ஆடிப்பிறப்பன்றுதான். 
எம் தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எம் மக்கள் எங்கள் தமிழ் பாரம்பரியங்களை மறக்காமல் இருப்பதுகூட பாராட்டுக்குரியது. அங்குள்ள மக்களில், பலர் எங்கள் சைவப் பழக்க வழக்கங்களை முடிந்தவரை ஏற்று நடப்பது பெருமைக்குரியது. இதற்குக் காரணம் அதில் ஊன்றிப்போன  பெற்றோர்தான். தம் பிள்ளைகளுக்கு அதைச் சொல்லிச் சொல்லி வளர்ப்பதும், இயன்றவரை செய்துகாட்டுவதும், அவர்களை கடைப்பிடிக்க வைப்பதும், மேல்நாட்டு நாகரிகத்தில் ஈடுபட்டாலுமே,  எங்கள் தமிழ் நாகரிகப் பண்புகளையும் மறக்காமல் எத்தனையோபேர் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.  பெற்றோர் இவற்றை பழக்கத்தில் கொண்டுவரும்போது பிள்ளைகளும் அதை நடைமுறைப்படுத்த இயன்றவரை முயல்வார்கள். வெளிநாடுகளில் இன்று சகல பொருட்களும் இறக்குமதியாகின்றன. வாழை இலை வேப்பிலைமுதல் பனங்கட்டி, பாசிப்பருப்பு ஈறாக சர்க்கரை எல்லாமே( இங்கு கிடைகாவிட்டாலும்),  அங்கு கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி தமிழ் பண்பை மறக்காதவர்கள் தம்மால் முடிந்தவர நேரத்தை ஒதுக்கி வீட்டில் விழாக்களையும் கொண்டாடுகிறார்கள். ஆடிப்பிறப்பை பற்றி புலம் பெயர்ந்த மக்களுடன் கதைத்தபோது, "ஆடிக்கூழ் கொழுக்கட்டை எல்லாம் செய்வோமே" என்று உற்சாகமாக கூறி மகிழ்கிறார்கள். 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே...
கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே...



--
அன்புடன்
கெளரி விமலேந்திரன்

Sri Sritharan

unread,
Jul 16, 2013, 8:15:18 AM7/16/13
to மின்தமிழ்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

- நவாலியூர் சோமசுந்தரப்புலவர் -

 

டிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!



பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி

வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து



வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து

தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு



வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்

பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே



பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு

மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே



குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து

அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே



வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே

அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே



வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்

கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே




ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!




Date: Tue, 16 Jul 2013 16:56:57 +0530
Subject: [MinTamil] ஆடிப்பிறப்பு
From: gowri...@gmail.com
To: mint...@googlegroups.com
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Gowri Vimalendran

unread,
Jul 17, 2013, 2:43:59 AM7/17/13
to mint...@googlegroups.com
அருமையான பாடலை முழுமையாக பதிவு செய்தமைக்கு நன்றி.


2013/7/16 Sri Sritharan <ksth...@hotmail.com>

Subashini Tremmel

unread,
Jul 17, 2013, 11:00:07 AM7/17/13
to மின்தமிழ், Subashini Tremmel
நல்ல பகிர்வு.  பல பாரம்பரிய சிறப்பு தினங்கள் இன்றைய காலகட்டத்தில் மறக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் இத்தகைய பதிவுகள் மீண்டும் இப்பண்டிகைகளை நினைத்துப் பார்க்க வைக்கின்றன. 


2013/7/16 Gowri Vimalendran <gowri...@gmail.com>
..


ஆடிப்பிறப்பென்றால் எமக்கு நினைவுக்கு வருவது நம் நாட்டின் பெருமைகுரியவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் "ஆடிப்பிறப்புக்கு நாளைவிடுதலை" என்ற இனிமையான, மகிழ்ச்சிதரும் பாடலும்
இதனைக் கேட்டதில்லை. இணையத்தில் இருந்தால் சுட்டி தர முடியுமா?

 
ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் தான்.

இவை இரண்டும் சாதாரண்மக நாம் செய்யும் கூழ், கொழுக்கைகளிலிருந்து வேறுபாடுடையவனவா?
இவை எப்படி செய்வார்கள் என்ற தகவலும் தந்தால் நன்றாக இருக்குமே. 


சுபா 

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Subashini Tremmel

unread,
Jul 17, 2013, 11:01:27 AM7/17/13
to மின்தமிழ், Subashini Tremmel
பாடல்வரிகள் பகிர்வுக்கு நன்றி.

நன்கு பண்டிகையை ரசித்து இப்பாடலை எழுதியிருக்கின்றார் கவிஞர் என்று தெரிகிறது.

சுபா


2013/7/16 Sri Sritharan <ksth...@hotmail.com>

தேமொழி

unread,
Jul 17, 2013, 6:08:23 PM7/17/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel


On Wednesday, July 17, 2013 8:00:07 AM UTC-7, Suba.T. wrote:

ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் தான்.

இவை இரண்டும் சாதாரண்மக நாம் செய்யும் கூழ், கொழுக்கைகளிலிருந்து வேறுபாடுடையவனவா?
இவை எப்படி செய்வார்கள் என்ற தகவலும் தந்தால் நன்றாக இருக்குமே. 




ஆடிக் கூழ் செய்முறை:
ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும்.

REF: http://temple.dinamalar.com/news_detail.php?id=20659

 
..... தேமொழி



Gowri Vimalendran

unread,
Jul 18, 2013, 1:00:53 AM7/18/13
to mint...@googlegroups.com
ஆடிக்கூழ் கொழுக்கட்டை செய்முறையை நிச்சயமாக எழுதுகிறேன். நீங்கள் செய்வதுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் சகோதரி.  கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். விரைவில் எழுதுகிறேன். 



2013/7/18 தேமொழி <them...@yahoo.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Gowri Vimalendran

unread,
Jul 18, 2013, 5:03:34 AM7/18/13
to mint...@googlegroups.com
தமிழ் பஞ்சாங்கத்தில் , ஆடிமாதம் பிறந்துவிட்டால் மகிழ்ச்சிதான். ஆடி தொடக்கம் மார்கழி வரையிலான கால எல்லையில், சீதோஷ்ண நிலை குளிர்ச்சியாக மாறுவதுடன், விரதங்களும், பண்டிகைகளும் மிகுந்த காலமுமாயிருக்கும். இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடும் முகமாக, கொழுக்கட்டையும், பனங்கட்டி போட்டுக் காய்ச்சப்பட்ட கூழும் , சிறப்புப் பண்டங்களாகத் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவது நமது பாரம்பரிய வழமையாகும். 
ஆடிக்கூழ் தயாரிக்க....
தேவையானது.
1/2 சுண்டு புழுங்கலரிசி, 3 சுண்டு தண்ணீர், 3 மே.கரண்டி வறுத்துக் குற்றிய
பாசிப்பருப்பு, 1 சுண்டு சுமாரான தடிப்பான தேங்காய்ப்பால், 175 கிராம் பனங்கட்டி, சிறிது உப்பு, 1/2 தே.கரண்டி மிளகுடன், 1/2 தே.கரண்டி நற்சீரகம், வறுத்துப் பொடியாக்கியது, 1 மே.கரண்டி பல்லுப்பல்லாக வெட்டிய தேங்காய்ச் சொட்டு.
அரிசியை 3-4 மணிநேரம் ஊறவிட்டு கழுவி, வடித்து நல்ல நைஸாகவும், இறுக்கமாகவும் அரைத்தெடுத்து, 1/4 பங்கை சிறிய தூதுவளங்காய் அள்வு உருண்டைகளாக உருட்டி, மீதி 1/4 பங்கையும் 1 சுண்டு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். 

1/4 சுண்டு தண்ணீரில் பருப்பை வேகவிட்டு, ஓரளவு வெந்தவுடன் மீதித்தண்ணீரை விட்டு, மா உருண்டகள், தேங்காய்ச்சொட்டு என்பவற்றையும் போட்டுச் சிறிது நேரம் வேகவிட்டு, பிறகு கரைத்துவைத்த மாவை விட்டு கட்டிபடாமல் துழாவிக் காய்ச்சவும். கொதித்து, மாவும் வெந்தவுடன், தேங்காய்ப்பாலில் பனங்கட்டியை துருவிப் போட்டுக் கரைத்து அதனுடன் சேர்த்து  ருசிக்கேற்றவாறு சிறிதளவு உப்பையும் போட்டு, கொதித்த பிறகு மிளகு, சீரகப் பொடியைத் தூவிக் கலந்து இறக்கவும். மிளகு சீரகத்தை அவரவர் விருப்பப்படி கூட்டிக் குறைக்கலாம். இந்த கூழைசுடச்சுட அருந்தினால் அதன் சுவையே தனி. தடிமன் இருமலுக்கு கிராமிய மக்களின் கை மருந்து. 
ஒருதடவை செய்து அருந்திப் பாருங்களேன். 
இந்த கூழை ஆடி மாதப்பிறப்பன்று ஈழத்துத் தமிழ் மக்கள் தம் இல்லங்களில் காய்ச்சி அருந்துவார்கள். 

நம் நாட்டுக் கொழுக்கட்டை

கொழுக்கட்டையின் உள்ளே வைப்பதற்கு தேவையானவை:
1/2 சுண்டு வறுத்துக் குற்றிய பாசிப்பருப்பு, 1 சுண்டு துருவிய சர்க்கரை (நம்மூரில் சர்க்கரை என்றால் வெல்லம்,சீனி அல்ல), 1/2 தே.கரண்டி ஏலப்பொடி, 1 1/2 சுண்டு பழத்தேங்காய்த்துருவல்,  பருப்பு அவிய 1 1/2 சுண்டு தண்ணீர். 

கொழுக்கட்டை மேல் மா செய்வதற்கு,
1 சுண்டு வறுத்த அரிசிமா, 1 மே.கரண்டி நெய் அல்லது எண்ணெய்,  1 தே.க்.உப்பு. 
பருப்பை தண்ணீர்விட்டு அவிக்கவும். நசிக்ககூடிய பதமாக இருக்கவேண்டும். தண்ணீர் நன்கு வற்ற வேண்டும். அத்துடன், தேங்..துருவல், சர்க்கரை ஏலப்பொடி என்பவற்றைப் போட்டு கிளறி இறக்கி வைக்கவும். 
அரிசிமாவை ஒரு பாத்திரத்தில் இட்டு, உப்பு சேர்த்து நன்கு கொதித்த நீரை விட்டு கையில் ஒட்டாத பதத்தில் குழைத்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். நெய் அல்லது எண்ணெய் தொட்டு நன்கு பிசையவும். பின்பு, எலுமிச்சம்பழ்ம் அளவு  மாவைக் கிள்ளி எடுத்து, ந்ன்கு உருட்டி, நெய்யை தொட்டு சிறிய கிண்ணம் போல் வடிவில் குவித்து எடுத்து அதற்குள் 1 1/2 அல்லது 2 தே.க்.பயற்றுக் கலவையை அதனுள் வைத்து பாதியாக மடித்து மூடி, இரு விளிம்புகளையும் அமர்த்தி ஒட்டி, பெருவிரல் நுனியால்  பல்லுபோல் வரகூடியதாக அழகுபடுத்தி நெய் பூசிய இடியப்ப தட்டில் 3, 4 ஆக முட்டாமல் அடுக்கி, ஆவியில் வைத்து அவித்து த்ண்ணீர் தெளித்து இறக்கி எடுக்கவும். 
இட்டலிச் சட்டியில் வெள்ளைத் துணியில் வைத்தும் அவிக்கலாம். 

உங்கள் ஊரிலும் இப்படித்தான் செய்வார்களா என்பது தெரியவில்லை
பல்லுக் கொழுக்கட்டை
. இந்தக் கொழுக்கட்டை விளிம்பில், தேங்காச் சொட்டுக்களை மிக மெல்லிய துண்டுகளாக வெட்டி வைத்தும் அவிப்பார்கள். இதை பல்லுக் கொழுக்கட்டை என்று சொல்வார்கள். குழந்தைகளுக்கு முதன்முதலாக பல் முளைத்ததும் இந்த கொழுக்கட்டைகளை அவித்து குழந்தையை உட்காரவைத்து, அதன் தலைமீது ஒரு வெள்ளைத்துணியை விரித்து, அதன்மீதுஇந்த பல்லுக் கொழுக்கட்டைகளை கொட்டுவார்கள். நிறைய செய்து, உற்றார் உறவினர் அயலவர்களுக்கு கொடுத்து சாப்பிடுவார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வு இதுவாகும். 

சகோதரி சுபாஷினி இவை நீங்கள் செய்வது போல் இருக்கிறதா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலை இசையுடன் கேட்டால் அருமையாக இருக்கும். இணையத்தில் தேடித் தருவதற்கு சிறீதரன் அவர்களின் உதவியை வேண்டுகிறேன். அல்லது. வேறு யர்ருக்கும் தெரிந்தால் தரவும். 
இவற்றை பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி.நன்றியும்கூட. 

                        


2013/7/18 Gowri Vimalendran <gowri...@gmail.com>

Gowri Vimalendran

unread,
Jul 18, 2013, 6:00:51 AM7/18/13
to mint...@googlegroups.com
இதுதான் நம்மூர் கொழுக்கட்டை ஆடிக்கொழுக்கட்டைக்கு தேங்காய்சொட்டு விளிம்பில் போடமாட்டார்கள். பல்லுக் கொழுக்கட்டைக்கு போடுவார்கள்.


2013/7/18 Gowri Vimalendran <gowri...@gmail.com>
kolkata.jpg
kolkata2.jpg

Geetha Sambasivam

unread,
Jul 18, 2013, 6:55:55 AM7/18/13
to mint...@googlegroups.com
கொழுக்கட்டை செய்முறை எல்லாம் தமிழ்நாட்டுச் செய்முறையே.  இங்கே கடலைப்பருப்புப் பயன்படுத்துவார்கள்.  அங்கே பாசிப் பருப்பு. அவ்வளவே வித்தியாசம்.  பல்லுக் கொழுக்கட்டை எனச் சொல்லி இருப்பதை இங்கேயும் செய்வதுண்டு.  செய்முறை:

ஊற வைத்து இடித்த அரிசி மாவு வறுத்தது ஒரு கிண்ணம், வெல்லத்தின் தன்மைக்கேற்ப அரைக்கிண்ணத்திலிருந்து ஒரு கிண்ணம் வரை வெல்லத்தூள்(பாகு வெல்லம் எனில் அரைக்கிண்ணம் போதும்), ஏலக்காய்ப் பொடி, பொடிப்பொடியாய் நறுக்கிய தேங்காய்க் கீற்றுகள். வேக வைக்க நீர்.நெய் ஒரு டேபிள் ஸ்பூன்.

ஒரு கிண்ணம் மாவிற்கு இரண்டு கிண்ணம் நீர் சரியாக இருக்கும்.  நீரைக் கொதிக்க விட வேண்டும்.  ஒரே ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்துக் கொஞ்சம் போல் நெய்யையும் சேர்த்துக் கொதிக்கும் நீரில் வெல்லத்தூளைச் சேர்த்துக் கொதிக்க விட்டுப் பின் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கொண்டே கிளற வேண்டும். கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே தேங்காய்க் கீற்றுகளையும் ஏலப் பொடியையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். கெட்டியாகப் பதம் வந்ததும் கீழே இறக்கி நெய்யைத் தொட்டுக் கொண்டு உருண்டைகளாக உருட்டி மீண்டும் ஆவியில் வேக வைக்க வேண்டும்.  இந்தக் கொழுக்கட்டையைப் பிடி கொழுக்கட்டை என்றும் சொல்வார்கள்.  பிடிச்ச பிடி நிறைவேறவும் பிரார்த்தித்துக் கொண்டு செய்வார்கள்.  இந்தக் கொழுக்கட்டைகளோடு, இலந்தைப் பழம், கரும்புத் துண்டுகள், முளைப்பயிறு, சில்லறைக்காசுகள் எட்டணா, ஒரு ரூபாய் தான் இப்போது சரியா இருக்கும். எல்லாம் சேர்த்து நிறை நாழியில் வைத்துச் சின்னக் குழந்தையை அதன் தாய் மாமன் அல்லது அத்தை மடியில் அமர்த்தி வைத்துக் கொட்டுவார்கள். அக்கம்பக்கம் சிறு குழந்தைகளை, பெண்மணிகளை அழைப்பது உண்டு.  எல்லாரும்போட்டி போட்டுக் கொண்டு பொறுக்குவார்கள் ஒருத்தருக்குக் கொழுக்கட்டை மட்டுமே கிடைக்கும்.  சிலருக்குக் காசுகள் கிடைக்கும். சிலருக்குக்கரும்புத் துண்டுகள். ஒரே மகிழ்ச்சியும், கூக்குரலுமாகப் பங்கிட்டுக் கொள்வார்கள்.  வந்திருக்கும் அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு, கொழுக்கட்டை, பணம் வைத்துத் தருவார்கள்.


சென்னையில் இருக்கையில் ஆடிக்கூழுக்கு தானியங்கள் வாங்கிக் கொடுப்போம். நெற்றுத் தேங்காய், வெல்லம் போன்றவையும் கொடுப்பது உண்டு.

2013/7/18 Gowri Vimalendran <gowri...@gmail.com>

Gowri Vimalendran

unread,
Jul 18, 2013, 8:41:17 AM7/18/13
to mint...@googlegroups.com
மிக்க நன்றி அம்மா..பல்லுக்கொழுக்கட்டை முறைகநன்றாகவே இருக்கின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி. இப்படி நாமும் செய்யலாம்...திருமணங்கள் எல்லாமே அந்தக்காலம் போல் அல்லாமல் இப்போது (எங்கள் நாட்டில்) சந்தர்ப்பம் சூழல், பண வசதி, நேரம், இவற்றுக்கேற்ப என்னவெல்லாமோ முறைகளில் எல்லாம் செய்கிறார்கள். இந்த பல்லுக் கொழுக்கட்டை பற்றிய உங்கள் முறைகளை வாசிக்கும்போது சந்தோஷ்மாக இருக்கிறது.சின்னக் குழந்தைகளின் இப்படியான நிகழ்வுகளை நாமும் பின்பற்றுவது தப்பில்லை என்று நினைக்கிறேன். பிடி கொழுக்கட்டை உங்கள் முறைப்படி நாமும் செய்வதுண்டு. ஆனால் அதை இங்கு பிரியப்பட்டு உண்ண மாட்டார்கள். மீண்டும் மிகவும் நன்றி கீதாம்மா. 


2013/7/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Subashini Tremmel

unread,
Jul 18, 2013, 3:15:16 PM7/18/13
to மின்தமிழ்
கௌரி, கீதா, தேமொழி அனைவருக்கும் வழங்கிய செய்முறை மற்றும் விளக்கத் தகவல்களுக்கு நன்றி. னான் படத்திலேயே பார்த்து ரசித்துக் கொள்கின்றேன். நிச்சயமாக செய்து ருசிக்க நேரம் கிடைக்காது :-(

சுபா


2013/7/18 Gowri Vimalendran <gowri...@gmail.com>



--
Reply all
Reply to author
Forward
0 new messages