உ
ஶ்ரீராமஜெயம்
"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." [3வது தொகுப்பு]: [6] வாலி வதைப் படலம்
தாரையின் எச்சரிக்கையையும், இராமனின் குணாதிசயங்களை எடுத்துக்கூறி அதை வாலி புறக்கணித்ததையும் கண்டோம். 3959லிருந்து ஐந்து பாடல்களில், வாலி அவற்றை எடுத்துக்கூறிய கனிவையும், இராமபக்தியையும் பார்த்தோம். இராமனின் பண்புகளை துல்லியமாக அறிந்திருந்த வாலி இராமனை தவிர முருகன் போன்ற மற்றவர்களை தான் சந்தேகித்தான். தன் மார்பை கிழித்த அந்த அம்பை பிடுங்கி எடுத்து 'செம்மைசேர்நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்'. திகைத்துப்போனான். வியந்தான். நாணுற்று வருந்தினான்; நகைத்தான்.
இல்லறம் துறந்த நம்பி, எம்மனோர்க்காகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால், வேத நல்நூல்
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும், தொல்லை
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் (4014)
இராமன் இல்லறத்தை இழந்தவன்; வில்லறத்தைத் தொலைத்து விட்டான்; நல்லறம் அஸ்தமித்தது. இதோ அவனுடைய சொல்லறத்தின் இறங்குமுகம்.
1. ‘...நல் அறம் துறந்தது என்னா? நகை வர நாண் உட்கொண்டான்’ மாயமானின் மீது சீதை கொண்ட நாட்டத்தின் விளைவு: இராமன் இல்லறம் துறந்தது. வில்லறம் துறந்ததோ, சுக்ரீவனிடன் தஞ்சம் புகுந்ததால். வேதத்தின் நற்பயன் ஆகிய சனாதன தர்மத்துக்கு முரண், இந்த ‘கதலின் கனியினைக் கழியச்சேரும் ஊசி. சூரிய வம்சத்துக்குக் களங்கம். நல் அறமே தொலைந்தது. எல்லாம் போச்சு. அதனால் தான் வாலிக்கு நாணம், தன் பக்திக்கு வந்த வினையை பற்றி.
‘... அம்பு பட்டதால், தன் உயிருக்கு ஊறு நேர்ந்தது என்ற எண்ணம் வாலிக்குத்
தோன்றவே இல்லை. மாபெரும் வீரனாகிய அவன், சுக்கிரீவனைப் போல, உயிருக்கு
அஞ்சினவனும் அல்லன். எனவே, அவனுடைய மனத்தில் தோன்றிய
முதலாவது எண்ணம் 'இந்த அம்பை யார் எய்திருக்க முடியும்' என்ற
வினாவாகும். அந்த வினாவிற்கு விடை, அம்பைத் தெரியக் கண்டவுடன்
கிடைத்தது. உடன் ஏற்பட்ட எண்ணம் நாணமாகும். சூரிய குலத் தோன்றல்
ஒருவன்கூட 'வில் அறம்' துறந்தானே என்ற எண்ணம் தோன்றியவுடன்
நகைப்பும் நாணமும் ஒருங்கே தோன்றின என்கிறான் கவிஞன்.
இராகவனைப்பற்றி அவன் கொண்டிருந்த எண்ணங்கட்கு முற்றிலும்
மாறான ஒரு செயல் இப்பொழுது நிகழ்ந்துவிட்டது. சூரியகுலத் தோன்றலாகிய
இராகவன் வீழ்ச்சியை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. கதிரவனே
விண்ணிலிருந்து மண்ணில் வீழ்ந்துவிட்டது போன்ற ஒரு வீழ்ச்சி என்று
நினைக்கிறான். அதனாலேயே, ''சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும்,
தொல்லை நல் அறம் துறந்தது'' என்று நினைக்கின்றான்...’ [உரை]
கண்ணுற்றான் வாலி, நீலக்
கார்முகில், கமலம் பூத்து,
மண் உற்று வரிவில் ஏந்தி,
வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனைய சோரி
பொறியொடும் பொடிப்ப, நோக்கி,
‘எண் உற்றாய் என் செய்தாய்? ‘என்று,
ஏசுவான் இயம்பல் உற்றான். [4121]
வாய்மையும் மரபும் காத்து
மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ
பரதன் முன் தோன்றினாயே;
தீமைதான் பிறரைக் காத்துத்
தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?
தாய்மையும் அன்றி நட்பும்
தருமமும் தழுவி நின்றாய். [4122]
‘...எல்லா உயிர்களிடத்தும் தாய்போல் அன்புகாட்ட வேண்டியவன் ஒருவனிடத்துக் கொண்ட நட்புக் காரணத்தால் தரும நெறிவழுவலாமோ என்பது கருத்தாகும். ‘ (உரை)
குலம் இது; கல்வி ஈது;
கொற்றம் ஈது; உற்று நின்ற
நலம் இது; புவனம் மூன்றும்
நாயகம் உன்னது அன்றோ?
வலம் இது; இவ் உலகம் தாங்கும்
வண்மை ஈது; என்றால் திண்மை
அலமரச் செய்யலாமோ,
அறிந்திருந்து அயர்ந்துளார் போல். [4123]
பாவைத் திருவாய்மொழிப் பழத்தைப் பசும் கற்பதத்தின்
பூவைப் பெ கடல் போதோ அமுதைப் பொருள் சுரக்கும்
கோவைப் பித்தஎம் கோவையல்லா என்னைக் குற்றம் கண்டென்
நாவை பறிப்பினும் நல்லர் அன்றோ மற்றை நாவலரே. ..
என்ற சடகோபரந்தாதி 57வது பாடலை பற்றி சிந்திக்கலாம்.
கோ இயல் தருமம், உங்கள்
குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா
உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற
அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை,
திகைத்தனை போலும், செய்கை! (4124)
இராமன் திருமேனி பேரழகு வாய்ந்தது என்பது 'ஓவியத்து எழுத
ஒண்ணா உருவத்தாய்' என்ற தொடர் புலப்படுத்தும். 'ஓவியம் சுவை கெடப்
பொலிவது ஓர் உருவொடே' (1050) என வந்தமை காண்க. 'எழுதரிய
பெருமான் என்றெண்ணாது எழுதியிருந்தேனே' (திருவரங்கக் கலம்பகம் - 93)
எனப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் உருகுதலும் காண்க.
உன் உருவச் சிறப்பிற்கேற்ற செயல் அமையவில்லையே என வாலி
வருந்தி இரக்கத்தோடு ஏசுவதாகக் குறிப்பாக உணரலாம். இராமன் குலத்து
முன்னோன் மனு. அரசநெறிகளைக் கூறும் மனுதர்ம சாத்திரம் எழுதியவன்.
அந்நூலில் கூறியுள்ள தருமநெறிகளைக் குலத்துச் செல்வமாகப் பெற்றவன்
இராமன். அங்ஙனமிருந்தும் இத்தகைய இழிசெயலைச் செய்துவிட்டானே
என்று வாலி இரக்கமுற்றுக் கூறினான். இராமன் மாட்டு அன்பு கொண்ட
காரணத்தால், அவனது செயலுக்கு ஒரு காரியத்திற்கு ஒரு நியாயம்
கற்பிப்பவன் போலத் 'தேவியைப் பிரிந்தததால் செய்கை திகைத்தனையோ'
என்றான்...அமிழ்தின் வந்த தேவி- பாற்கடலில் அமுதத்தோடு பிறந்த திருமகளின் அவதாரமே சீதை என்பதைச்சிறப்பாகக் கூறியது. (உரை)
‘அரக்கர் ஓர் அழிவு செய்து
கழிவரேல், அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
மனுநெறி கூறிற்று உண்டோ?
இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால்
எப் பிழை கண்டாய்? அப்பா!
பரக்கழி இது நீ பூண்டால்,
புகழை யார் பரிக்கற் பாலார்? ‘ (4125)
‘...அரக்கர் ஓர் அழிவு செய்தது, இராவணன் சீதையைக் கவர்ந்த
செயலைக் குறிக்கும். அரக்கன் கெடுதி செய்ய, அவனுக்குத் தண்டனை
அளிக்காமல் குரங்கினத் தலைவனைக் கொல்லும் இச்செயல், குற்றம் ஒருவன்
செய்யத் தண்டனை வேறொருவர்க்குக் கொடுப்பது போலாகும் என்னும்
கருத்தில் வாலி பேசினான். அவ்வவறு செய்தல் உன்குலத்து மனு கூறிய
அரசியல் நெறிக்கும் ஒவ்வாது என்பது வாலி கருத்து. அருளாளனாகிய
இராமன் தன் இயல்பான இரக்க குணத்தை - வழிவழியாகப் பெற்ற பண்பை
எங்கே உகுத்துப் போக்கினான் என வினவ வேண்டி 'இரக்கம் எங்கு
உகுத்தாய்?' என்றான். இராமன் குல முன்னோன் சிபி ஒரு புறவின்
பொருட்டுத் தன் உடலையே அரிந்து கொடுத்தவன். பசுவின் பொருட்டுத்
தன்னையே உணவாக்கி்க் கொள்ளுமாறு சிங்கத்திடம் கூறியவன் திலீபன்.
இங்ஙனம் குல முன்னோர்க்கும் அவர்க வழி இராமனுக்கும் இயல்பாக
அமைந்த இரக்கப் பண்பு. உகுத்தல்-வேண்டுமென்றே சிந்துதல். தீமை செய்த
வரை ஒறுத்தல் அரசியல் நெறிமுறை என்றால், இரக்கமின்றித் தான் கொல்லப்
படத் தன்னிடத்துக் கண்ட குற்றம் யாது என அறிய விழைபவனாய் 'என்பால்
எப்பிழை கண்டாய்' என வினவினான். பரித்தல் - சுமையுடையதாயினும்
பொறுத்துச் சுமத்தல். பெரும்புகழைத் தாங்கக் கூடியவா இராமனைத் தவிரப்
பிறர் இலர் என்ற கருத்தில் வாலி 'புகழை யார் பரிக்கற்பாலார்' என்றான்.
அப்பா - அன்பு, வியப்பு, இரக்கம், துன்பம் ஆகிய உணர்ச்சிகளை
உணர்த்தும் சொல்.’(உரை)
உணர்ச்சிகளை கொட்டவில்லை. அடுக்குகிறான், வாலி. மேலும் தொடர்கிறான் அந்த ‘சிறியன சிந்தியாதான்’.
(தொடரும்)
இன்னம்பூரான்
15 11 2012
உசாத்துணை:http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?pno=228&bookid=56&auth_pub_id=72
& அடுத்து வரும் பக்கங்கள்: உரையும் அங்கிருந்து தான்.
உ
ஶ்ரீராமஜெயம்
"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." [3வது தொகுப்பு]: [6] வாலி வதைப் படலம்
& அடுத்து வரும் பக்கங்கள்: உரையும் அங்கிருந்து தான்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
பின்னூட்டங்களுக்கு நன்றி. முதல் பகுதியில் சொன்ன வண்ணம் தான் எழுதி வருகிறேன். திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் 64 ஆங்கிலகட்டுரைகளை படித்ததை அங்கேயே கூறியிருக்கிறேன். இந்த தொடரின் முகாந்திரமும், என்னுடைய குறிப்புக்கடுதாசி கிடைத்ததும் ஒரே நாள். அதனால் ஒரு சின்ன கட்டுரையை தொடராக எழுதி வருகிறேன். இறுதியில் என்னால் இயன்றவரை எல்லா கருத்துக்களுக்கும் பதில் அளிப்பதாக உத்தேசம். பேராசிரியர் எழுதியது ஷைலஜாவுக்கு, ‘இன் எ லைட்டர் வெய்ன்’ என்று நினைக்கிறேன். மறைந்திருந்து தாக்குவது என் இயல்பு அல்ல என்று அவருக்கு தெரியுமே. வெளிப்படையாக பேசுவதால் தானே எனக்கு டோஸ் கிடைக்கிறது. இத்தனைக்கும் நான் சண்டை ஒன்றும் போடவில்லையே, திரு.சொக்கன். கம்பன் சொன்னதை எங்காவதுத் திரித்து எழுதினேனா? அதீதம் இதழில் நீங்கள் எழுதுவதை படிக்கிறேன்.
என் பார்வையில் ‘பாமர மனிதன்’ சராசரி மனிதன் -’ஆம் ஆத்மி’ - ஆர்.கே.லக்ஷ்மணின் ‘காமன் மேன்’. பக்கத்தாத்து பத்து மாமா, அடுத்தாத்து அம்புலு, எதிர்வீட்டு கதிர்வேலு, அம்மங்கா, ஆபீஸ் சகபாடி. அவர்களில் மெத்தப்படித்த அறிவிலி, படிக்காத மேதை, அறிவு ஜீவி, ‘சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்’ எல்லாரும் அடக்கம். பெரும்பாலும் மத்திய தர மக்கள். என்னுடைய வரலாற்று படிப்பில் அவர்களுக்குத் தான் முதலுரிமை. பெருந்தனக்காரர்கள், மன்னர்கள், மன்னர்குஞ்சுகள், வித்வத் டாம்பீகர்கள் இங்கு எட்டிப் பார்க்கமாட்டார்கள்.
இன்று வந்த மின்னஞ்சல் ஒன்று ராஜாஜி அவர்களையும், அவரது மைந்தனையும் ‘பாமர மனிதர்களாக’ சுட்டிக்காட்டியது.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
16 11 2012