மீன் தொட்டி

5 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
Feb 17, 2026, 5:31:28 AM (3 days ago) Feb 17
to மின்தமிழ்

மீன் தொட்டிக்குள்
மின்னல்களின் வானங்கள்
வரி பிளந்து காட்டியது என்ன‌
வண்ணதாசன் அவர்களே?
மச்ச அவதாரங்களில்
மிச்சமாய் ஊறிப்போன‌
ஊறுகாய் நாற்றங்களின்
புராணங்கள்
அதன் கண்களில்
கனல் தெறித்த‌தைக்கூட‌
மழுங்கிய மரகதத் தீவுகளாய்
கவிதை ஆக்கி
பேனாக்களின் கொட்டாவிகளில்
சோம்பல் முறுத்துக்கிடக்கலாம்.
தொட்டிகளில் திமிங்கிலங்களுக்கு
தொட்டில் கட்டும்
சிந்தாந்தக்கூடுகளிலும்
சிக்கிக்கிடக்கும்
கனவுச்சொக்கப்பனைகள்
தீ முழக்கம் செய்வது
மெல்லிதாகவாவது கேட்கின்றதா?
_________________________________________
சொற்கீரன்.
(17.02.26 ல் கவிஞர் வண்ணதாசன் அவர்களின் 
முகநூல் கவிதை சார்ந்த கவிதை இது)
Reply all
Reply to author
Forward
0 new messages