.gif?part=0.1&view=1)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//தெலுங்கர் தமிழ்நாட்டில் இருப்பது போல் ஆந்திராவிலும் தமிழர்கள் இருக்கிறார்களே. மும்பையில், டில்லியில், பங்கலூருவில் எத்தனையோ தமிழர்கள். சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபில் ஒரு கல்யாணத்திற்கு போனேன். அந்த மாவட்டத்து ஆட்சியர் ஒரு தமிழர். இன்னொரு முறை கோல்காத்தாவில் என் நண்பர் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டது. அதிகாரி யார் என்று கேட்டேன். பெயர் தமிழ் பெயராக இருந்தது. பேசினேன். தமிழனேதான். உடனே செய்து கொடுத்தார். //
நீங்கள் தமிழரா? நிரூபிக்கத் தயாரா? கருணாநிதிக்கு எம்ஜிஆர் சவால்.
1978-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி வெளியான பத்திரிகை செய்தி.
திமுகவினர் வரிசையில் வரவும்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//இது எந்த இழைத் தொடர்ச்சி? //மயிலிறகு குட்டிப் போடுறாப் போல, எதோவொரு இழை குட்டி போட்ருச்சேய்!!
திரு ஒரு அரிசோனன் அவர்களுக்கு,
(தமிழ்) பிராமணர்கள் தமிழர் அல்லாதவர் என்று செய்த திராவிடர்களின்
பிரச்சாரம் ஒரு சதிச் செயல் என்பதை தமிழறிஞர்கள் கண்டறிந்து
வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் குடியேறியர்கள் இங்கே அரசியல் செய்வதில் பிரச்சனை இல்லை.
ஆனால் அவர்கள் தமிழராக நடித்து அரசியல் செய்வதைத்தான் நாம்
கண்டிக்கிறோம். ஒரு தெலுங்கர் தன்னை தெலுங்கர் என்று அறிவித்து தான்
தமிழர்களுக்கு நன்மை செய்ய அரசியல் செய்கிறேன் என்று சொல்லி அரசியலில்
ஈடுபட்டால் அவரை நாம் வரவேற்போம்.
ஆனால் வீட்டிலே வேறு மொழி பேசிக் கொண்டு வெளியிலே தன்னை தமிழர் என்று
சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகளை எதிர்க்கிறோம்.
இவர்களுக்கு உதவியாக இருந்தவை திராவிடர்களின் பிரச்சாரமான ”சாதி
ஒழிப்பு”, “சாதிப் பெயர், பட்டப் பெயர் ஒழிப்பு” என்ற கருத்தியல்கள்தான்.
இதுபோன்ற முற்போக்கு கருத்துக்கள்தான் தமிழர்கள் தங்கள் அரசியல்
அதிகாரத்தை இழக்கச் செய்தன.
இதை வெளியே சொன்னால் அதை இனவாதம், மொழிவாதம் என்பார்கள் முற்போக்கு
முகமூடி ஆசாமிகள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அய்யோ... நீங்க நான் சொன்னதை சரியாப் புரிஞ்சிக்கிடலை. நீங்க விடுத்த இழை இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நானும் கூட அமெரிக்காவில் இருக்கும் சில சங்கங்கங்களின் உள்ளோட்டத்தைப் பற்றி எழுதிவிட்டுத்தான் இந்த இழைக்கு வந்தேன். இது, அதிலிருந்து பிரிந்து வந்த இழைதானே?? :-))
On Saturday, November 7, 2015 at 3:50:05 PM UTC-5, Suba.T. wrote:On Sat, Nov 7, 2015 at 5:40 PM, பழமைபேசி <pazam...@gmail.com> wrote://இது எந்த இழைத் தொடர்ச்சி? //மயிலிறகு குட்டிப் போடுறாப் போல, எதோவொரு இழை குட்டி போட்ருச்சேய்!!இல்லை. தமிழகத்தில் சாதியின் பெயராலும் சாதிப் பிரிவினையினாலும் நடக்கும் அவலங்களைச் சுட்டிக் காட்ட நான் உருவாக்கிய இழை.இப்போது தமிழர் நாட்டை ஆள்வதா அல்லது தெலுங்கர் ஆள்வதா என்ற வகையில் திசை திருப்பப்பட்டு ஓடிக் கொண்டிருக்கின்றது.சிலர் வேண்டுமென்றே தமிழர்களுக்குள்ளேயே மிக வெளிப்படையாக இருக்கும் சாதி என்ற கொடிய விசயத்தைப் பற்றி பேச விரும்பாமல் பிரச்சனையை வேறு பக்கம் திருப்ப முயற்சித்துக் கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை.அப்படி செய்வோர் அதனை விடுத்து இந்தஇழையின் நோக்கத்திற்குத் தகுந்தார் போன்ற பதிவுகளை மட்டும் பகிர்வதே சரியாக இருக்கும்.வேறு விசயங்களுக்கு புதிய இழைகளை வேண்டுவோர் உருவாக்கிக் கொள்ளலாம்.சுபா
//உங்கள் நிலைப்படி பிராமணர் என்பவர் யார்?
ஏன் ஐயரும், அயங்காரும் தமிழகத்தின் மண்ணின் மைந்தர் ஆக முடியாது?//
சகோதரி சுபா அவர்களுக்கு,
தமிழ் பிராமணர்கள் ஆரியர்கள் என்ற பிரச்சாரத்தை நானும்
நம்பிக்கொண்டிருந்தேன். தமிழ் அறிஞர்களுடன் இது குறித்து சர்ச்சை
செய்தபோது அவர்கள் இதனை தெளிவு படுத்தினார்கள். அது திராவிடர்களின்
பிரச்சாரமே என்பதை விளக்கினார்கள்.
அதனால் நான் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்.
அதோடு எனது முழுப் பெயர் பெருமாள் தேவன் என்பதை தங்களுக்கு நினைவூட்ட
விரும்புகிறேன்.
//உங்கள் நிலைப்படி பிராமணர் என்பவர் யார்?
ஏன் ஐயரும், அயங்காரும் தமிழகத்தின் மண்ணின் மைந்தர் ஆக முடியாது?//
சகோதரி சுபா அவர்களுக்கு,
தமிழ் பிராமணர்கள் ஆரியர்கள் என்ற பிரச்சாரத்தை நானும்
நம்பிக்கொண்டிருந்தேன். தமிழ் அறிஞர்களுடன் இது குறித்து சர்ச்சை
செய்தபோது அவர்கள் இதனை தெளிவு படுத்தினார்கள். அது திராவிடர்களின்
பிரச்சாரமே என்பதை விளக்கினார்கள்.
அதனால் நான் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்.
அதோடு எனது முழுப் பெயர் பெருமாள் தேவன் என்பதை தங்களுக்கு நினைவூட்ட
விரும்புகிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//ஆக, தற்போதைய தங்களின் முடிவுப்படி பிராமண சமுகத்தினர் மண்ணின்
மைந்தர் ஆக முடியுமா? அரசியலில் இடம் பெற உங்கள் இயக்கம்
சம்மதிக்கின்றதா?//
ஆக முடியும். சம்மதிக்கிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இன்று சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் நாளை ஒழிக்கத்
தேவையில்லை என்று சொல்வார்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//இப்போ ஒரு மந்திரி உங்க சாதியில் வேண்டும் என்று கேட்டால் அவர் உங்க
சாதிக்கு மட்டும் விசுவாசமாக இருப்பாரா? அல்லது தமிழகக்த்துகேவா--//
முதலில் அவங்க எங்கள் சாதிக்கும்
இரண்டாவது அவர் முக்குலத்தோருக்கும்
மூன்றாவது அவர் அனைத்து சாதிகளுக்கும்
நான்காவது அவர் அனைத்து மதத்தவருக்கும்
ஐந்தாவது அவர் இந்திய மக்களுக்கும்
ஆறாவது அவர் உலக மாந்தருக்கு விசுவாசமாக இருப்பார்.
ஆனால் அவர் அனைவரிடமும் ஒரே நீதியுடன் செயல்படுவார்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2015-11-08 21:55 GMT+05:30 Thevan <apth...@gmail.com>://இப்போ ஒரு மந்திரி உங்க சாதியில் வேண்டும் என்று கேட்டால் அவர் உங்க
சாதிக்கு மட்டும் விசுவாசமாக இருப்பாரா? அல்லது தமிழகக்த்துகேவா--//
முதலில் அவங்க எங்கள் சாதிக்கும்சரிஇரண்டாவது அவர் முக்குலத்தோருக்கும்இது என்ன புதுக் குழப்பம் .... இவங்க உங்கள்ல இருந்து குறைஞ்ச க்ரேடுதானா ???மூன்றாவது அவர் அனைத்து சாதிகளுக்கும்
நான்காவது அவர் அனைத்து மதத்தவருக்கும்
ஐந்தாவது அவர் இந்திய மக்களுக்கும்
ஆறாவது அவர் உலக மாந்தருக்கு விசுவாசமாக இருப்பார்.அனைவரிடமும் ஓட்டு வாங்கி மந்திரியான ஒருத்தரை இதைவிடக் கேவலப் படுத்தி விட முடியாது ..
//தமிழகத்தில் குடியேறியர்கள் இங்கே அரசியல் செய்வதில் பிரச்சனை இல்லை.
ஆனால் அவர்கள் தமிழராக நடித்து அரசியல் செய்வதைத்தான் நாம்
கண்டிக்கிறோம். ஒரு தெலுங்கர் தன்னை தெலுங்கர் என்று அறிவித்து தான்
தமிழர்களுக்கு நன்மை செய்ய அரசியல் செய்கிறேன் என்று சொல்லி அரசியலில்
ஈடுபட்டால் அவரை நாம் வரவேற்போம்.//
- தமிழ்நாட்டில் குடியிருக்கும் உரிமைபெற்றவர்களும் [Those who have nativity certificate; those who live in Tamilnadu state for five years can claim Tamilandu nativity] தங்களைத் தமிழர்கள் [தமிழ்நாடு மாநிலத்தின் குடிமக்கள்] என்றே அழைத்துக்கொள்வர், அவர்களுக்கு அந்த உரிமை உள்ளது. அவர்களுக்கு எம்மொழி தாய்மொழியாக இருந்தாலும் சரி. எனவே, அவர்கள் தங்களைத் தெலுங்கர் என்றோ, கன்னடியர் என்றோ, மலையாளி என்றோ, பஞ்சாபி என்றோ சட்டப்படி சொல்லிக்கொள்ளவேண்டியதில்லை.
இங்கு, மாநிலத்தின் பெயரும், மொழியின் பெயரும் ஒன்றாக இருப்பதால் இக்குழப்பநிலை ஏற்படுகிறது. சென்னை மாகாணமாக இருந்தவரை இக்குழப்பநிலை இல்லை; எல்லோரும் 'மதராசிகள்'தான்.- ஒரு அரிசோனன்
அன்பான தெலுங்கர்களே சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
நீங்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக இங்கே குடியேறி வாழ்ந்து வருகிறீர்கள்.
இயல்பாகவே தமிழர்கள் வந்தாரை வரவேற்கும் குணம் கொண்டவர்களே ஒழிய
வெறுப்பவர்கள் அல்ல.
அந்த வகையில் தமிழர்கள் உங்களை தங்களின் போட்டியாகவோ, எதிரியாகவோ இன்றும்
நினைக்கவில்லை. இன்றும் உங்களோடு அன்புடன்தான் பழகி வருகிறார்கள்.
ஆனால் ஈழப்போர் தமிழர்களின் அரசியல் சிந்தனையை தூண்டிவிட்டது. அது
தமிழர்களின் பெயரில் ஆட்சி செய்பவர்கள் தமிழர் அல்ல என்பதை உணர்த்தியது.
மேலும் அவர்கள் தெலுங்கர்கள் என்பதை புரிந்துகொண்டனர். எப்படி
“முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் தீவிரவாதிகள் எல்லாரும்
முஸ்லீம்களாக இருக்கிறார்கள்” என்பது உண்மையாக உள்ளதோ
அதுபோல
“தெலுங்கர்கள் எல்லாம் அரசியல்வாதி்கள் அல்ல, ஆனால் அரசியல்வாதிகள்
எல்லாரும் தெலுங்கர்களாக இருக்கிறார்கள்” என்பது கசப்பான உண்மையாக
உள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தின்படி ஒருவர் இந்தியாவுக்குள் எங்கு
வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம். அதில் தவறில்லை. ஆனால் ஒரு இனத்தவர்
தன்னை மாற்று இனத்தவராக காட்டி அரசியல் செய்வதை எந்த அரசியல் சட்டமும்
ஏற்காது.
தெலுங்கர்கள் தங்களை தெலுங்கர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல்
செய்தால் நாங்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழராக நடித்து
அரசியல் செய்வதை ஒருக்காலும் ஏற்க முடியாது.
நீங்கள் இந்த மண்ணின் வளத்தைப் பயன்படுத்தி, இந்த மக்களின் அன்பைப்
பெற்று வாழ்ந்து வருகிறீர்கள். அவர்களுக்கு நன்றிக் கடனாக என்ன செய்யப்
போகிறீர்கள்?
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பேரன்பும், பெருங்கொடையுள்ளமும் கொண்ட
அந்தத் தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாமா?
அதில் உங்களுக்கு பங்கில்லையா?
தமிழராக நடிக்கும் தெலுங்கு
அரசியல்வாதிகளை புறந்தள்ளுங்கள்.
தமிழர் அரசியல் அதிகாரம் பெற உங்களால் இயன்ற அத்தனை உதவியும்
செய்யுங்கள். தமிழர்கள் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு கொண்டவர்கள்.
அவர்களின் அன்பு குறையாமல் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும்.
அவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கச் செய்வதில் உங்களுக்கும் பங்கு
உள்ளது. அதை நிறைவேற்றத் தவறாதீர்கள்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
2015-11-09 2:32 GMT-07:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>://உங்கள் அமெரிக்க நிருவாக முறைகளை அமெரிக்காவோடு நிறுத்திக் கொள்ளுங்கள் இங்கே அதை திணிக்காதீர்கள்.//சேசாத்திரி ஸ்ரீதரன் அவர்களே,நான் எதையும் திணிக்க முற்படவில்லை. நீங்கள் இந்திய, தமிழநாடு சட்டங்களைப் படித்துவிட்டு என்னுடன் வாதிடுங்கள். இந்திய மற்றும் மாநில சட்டப்படி, அங்கு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்த எவரும் [இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில்] அந்தமாநிலக் குடியுரிமை [nativity] பெறுவார்கள். அப்படிப் பெறுபவர்கள் அந்த மாநில அரசுக் கல்லூரிகளிலும், அரசு நிறுவனகளிலும் வேலைசெய்யும் தகுதி அடைகிறார்.ஒரு மாநிலத்தின் குடியுரிமை பெற்றவர் அவர் தன்னை அந்த மாநிலத்துக்காரர் என்று அழைத்துக்கொள்ளலாம்.
நான் இங்கு பெருமாள் தேவன் அவர்களுக்குப் பதில் எழுதியிருப்பது மற்றமாநிலக்காரர்கள் தங்களை சட்டப்படி எப்படி தமிழர் என்று அழைத்துகொள்கிறார்கள் என்பதே. மேலும், தமிழ்நாட்டு வரலாறைப்பற்றியும் எழுதினேன்.
நான் எழுதியதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் நோக்காது, விழியை விரித்துப் பாருங்கள், உண்மை தெளிவாகும்.- ஒரு அரிசோனன்
இது தான் ஏமாற்றுவேலை. தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரியாதவர் எப்படி தமிழர் ஆக முடியும்.
தமிழர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தமிழ்ப்பாரம்பரிய நடன நிகழ்விலும் இசைக் கச்சேரி நிகழ்விலும் ஆங்கிலத்தில் நிகழ்வை நடத்துகின்றார்களே.. அவர்களை எந்தக் குழுவில் இணைப்பீர்கள். - சுபா

மனுதர்மத்தை மையப்படுத்தியே இயங்கும் இந்துத்துவம் நாகரிக சிந்தனைக்கு எதிரான பிற்போக்கு தத்துவம், அதை மறைமுகமாக உள்வங்கிகொண்ட கிறிஸ்துவமும் பிற்போக்குத் தத்துவமே. தலித் கிறிஸ்துவர்கள் இயேசுவின் தியாகத்தை பேசுவதை நிறுத்திவிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் , தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் தியாகத்தை பேசுங்கள் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு வரட்டும், சாதியம் எங்கே இருந்தாலும் அதை எதிர்க்கும் ஆற்றல் வரட்டும்.
தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து
ஹெச்.ஜி.ரசூல்
1)அன்வர்பாலசிங்கத்தின் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எழுத்துப்பிரதி. வாழ்வின் மீது படிந்துவிட்ட கசப்பையும், ஆற்றாமைகளையும் பேசுகிறது. தோல்வியின் மீதான வலிகளின் பரப்பில் நாவல் தன்னை புனைந்துள்ளது. யதார்த்தமே பிரதியாக்கத்தில் மறுயதார்த்தமாக உருப்பெற்றுள்ளது. யதார்த்தத்தின் கதைமாந்தர்கள் மறுயதார்த்த பிரதியின் பரப்பினுள் நடமாடுகிறார்கள்.விளிம்போரத்தில் யாரும் கவனித்திராத ஒரு வாழ்வியல் தரிசனத்தை மிகுந்த துயரத்தோடு நாம் இதில் அனுபவிக்க முடியும்.
இந்து சாதீய காலனியாதிக்கத்தின் இறுக்கத்திலிருந்து விடுபடுதலின் அறிகுறியே முஸ்லிம் மதமாற்றம். இஸ்லாத்தின் ஒரிறை குறித்த நம்பிக்கை, இறை அச்சத்தோடு நிறைவேற்றப்படும் தொழுகை, நோன்பு கடமைகளை நிறைவேற்றுவது பொதுத்தளத்தின் நோக்காக ஒருபக்கம் இருக்கிறது என்றாலும் இந்நாவல் மீனாட்சிபுரத்தை புனைவுத்தளத்தின் காமாட்சிபுரமாக மாற்றுகிறது. அங்குள்ள பள்ளர்குல தலித் மக்களின் மதமாற்றம் சமூகநீதியின்பாலும், சமத்துவத்தின் நம்பிக்கையினாலும் நிகழ்ந்திருக்கிறது. தமிழக சாதிக்கட்டுமான புலப்பரப்பில் இடைநிலையாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராகவும் தெற்குப் பகுதியில் தேவர்கள், மத்தியப்பகுதியில் கவுண்டர்கள் வடபகுதியில் வன்னியர்கள் என்கிற அமைப்பாக்கத்தினை கவனத்திற்கொள்ளலாம். பிராமணீய, வைதீக சமய அதிகாரத்திற்கு எதிராக நிகழ்ந்த பிராமணர் அல்லாதார் இயக்கம், திராவிட அரசியல் கருத்துருவாக்க அரசியல் நிகழ்தளத்தில் தமிழகத்தின் மேற்கண்ட மூன்று இடைநிலை சாதியினரின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மேலாதிக்கம் அறியப்பட்ட ஒரு உண்மையாகவே இருக்கிறது. இந்த மேலாதிக்கத்தின் கீழ் விவசாயக் கூலிகளாகவும், துப்புரவு தொழில் செய்யும் சமூகமாகவும், அடித்தள தொழில்சார்களத்தில் இயங்குபவர்களாகவும் தலித்துகள் இருக்கின்றார்கள்.
தலித் சொல்லாடலே சாதீய ரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட அடித்தள மக்களைக் குறிப்பிடுகிறது. இது சாதாரண நிலையில் மேலத்தெரு, கீழத்தெரு என வாழிடம் சார்ந்தும், ஊர் சார்ந்தும் கோயில் நுழைவுக்கான உரிமையின்மை என வழிபாடு சார்ந்தும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி என உணவு பழக்கம் சார்ந்தும் இன்னும் பல்வித குறிப்புகளாகவும் மிக எளிமையாக ஆனால் சிக்கலாள தன்மையோடு நம் கண்ணுக்கே புலப்படாவண்ணமும் தென்படுகிறது. தேவர், கவுண்டர், வன்னியர் சமூகங்களுக்கு மறு நிலையில் அடித்தளம் சார்ந்த பள்ளர், அருந்ததியர், பறையர் சமூகங்கள் என எதிர்மறைகளாகவும், சாதிய ஆதிக்க ஒடுக்குமுறை அரசியல் வலைப்பின்னலாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
சாதீய ஒடுக்கு முறைக்குள்ளான தங்களது பழைய அடையாளத்தை உதறித் தள்ள முயன்றதின் விளைவுதான் பள்ளர், தேவேந்திர குல வேளாளராகவும், அருந்ததியர் ஆதித்தமிழர் என்ற புதிய அடையாள சொல்லுருவாக்கமாகவும் நிகழ்ந்துள்ளது.
2)அன்வர் பாலசிங்கத்தின் நாவல் பிரதியில் தேவர், பள்ளர் முரண் சார்ந்த கட்டமைப்பு உள்ளுக்குள் அழுத்தமாக பதிந்திருக்கிறது. இத்தோடு பள்ளர், முஸ்லிம் என்கிற மற்றொரு கலாச்சார முரணும் நாவல் முழுவதும் மோதிக் கொண்டும், பல இடங்களில் சமரசம் செய்து கொண்டும் வெளிப்படுகின்றன.
ஒற்றுமைக்குள் நிலவும் வேற்றுமையின் அடையாளங்களை அங்கீகரிப்பதன் மூலமே ஒன்றுபடுதலைப் பற்றி யோசிக்க முடியும். ஒன்றுபடுதலுக்குள் தனித்த அடையாளங்கள், பண்பாடு, நடத்தை, மொழி என அனைத்தும் அழித்தொழிக்கப்படும்போது சினம் எழுகிறது. எது எனது அடையாளம் என்று குரல் வீரியத்தோடு தெறித்து விழுகிறது. பள்ளருக்கும், முஸ்லிமுக்கும் இடையிலான இந்த அடையாள அழிப்பும், ஒற்றை அடையாள உருவாக்கமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகவே இந்த நாவல் களம் அமைந்துள்ளது.
நாவலின் கதையோட்டத்தில் பள்ளர், முஸ்லிம் என்ற முரண் வகைப்பட்ட எதிர்வு முன்வைக்கப்படுகிறது. பிறகு முஸ்லிம், நவமுஸ்லிம் (புதிதாய் இஸ்லாத்திற்கு வந்த தலித் முஸ்லிம்) என்பதான இருமைகளால் பழையவடிவம் சிதைக்கப்பட்டு மீண்டும் முரண் புதுவடிவில் உருவாகிறது. பரம்பராய பெருமைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிற முஸ்லிம் சமூகம், தலித்துகளிலிருந்து மதம்மாறி இஸ்லாத்திற்கு வந்த முஸ்லிம்களை அணுகும் சாதி அரசியல் சார்ந்த நோக்கம் நாவலில் உருப்பெறுகிறது. தலித்களின் மீது கொண்டுள்ள சாதிய விலக்கல் பார்வைக்கு சற்றும் குறையாததாக பாரம்பரிய முஸ்லிம்களின் பார்வை அமைந்துவிடுகிறது. நவீன தீண்டாமையின் கொடுங்கரங்களுக்குள் சிக்குண்டு அதன் கூரிய நகங்களால் காயப்படுத்தப்பட்டு, பிறாண்டப்பட்டு குரூரப்படுத்தப்பட்ட தலித் முஸ்லிம்களின் துயரக்கதைகளாக இந்நாவல் மாறிவிடுகிறது.
கமாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த பள்ளர் குலமக்கள் முஸ்லிம்களாக மாறி காமாட்சிபுரம் பிலால் நகரான கதைப் பின்புலம் இந்நாவலில் தொழிற்படுகிறது. பிலால் நகர் என்ற புதுப்பெயரிடுதல் இஸ்லாமிய வரலாற்றின் அடையாளக் குறியீட்டின் மறு அர்த்த உற்பத்தியாகிறது. அரபுச் சூழலில் ஏழாம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் இஸ்லாமிய கருத்தாக்கங்களையும் புதிய அறவியல் ஒழுக்கங்களையும் முன்வைத்தபோது மக்கத்து பழங்குடி அரபுகள் அவற்றை எதிர்த்தனர். அப்போது முஸ்லிமாக மாறியவர்களில் ஒருவர்தான் பிலால். இவர் அபீசீனிய மண்ணின் கறுப்பின அடிமை. நபிகள் நாயகம், கறுப்பின அடிமையை விடுதலை செய்தார். இஸ்லாத்திற்கு வந்த கறுப்பினத்தைச் சேர்ந்த பிலாலுக்கு நிறவெறி வேறுபாட்டை ஒழிக்கும் பொருட்டு நபிகள் நாயகத்தால் தொழுகைக்கு அழைக்கப்படும் அதான் என்னும் பாங்கினை சொல்லும் சிறந்த பணி வழங்கப்படுகிறது. இன்றும் தமிழக பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும் பாங்கொலிக்கும் முஅத்தீன் எனப்படும் மோதினாரை பிலால் என அழைப்பதும் உண்டு. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயர்தான் தலித்களிலிருந்து முஸ்லிமாகிய மாறிய காமாட்சிபுரத்திற்கு பிலால் நகரென பெயர் சூட்டப்படுகிறது.
அன்வர் பாலசிங்கத்தின் படைப்பாக்க முறை குறித்து இரண்டுவித குறிப்புகளை இங்கு முன்வைக்கலாம். இது தன் வரலாற்றுப் புனைவாக உருவாகி இருக்கிறது. அதே தருணத்தில் உரையாடலியப் புனைவாகவும் வடிவம் பெற்றுள்ளது. தன் வரலாற்றுப் புனைவினை பெண் கதாபாத்திரம் செல்ல மகள் நூர்ஜஹான் வழியாக என் பிரியமுள்ள அத்தாவிற்கு என கடிதத்தின் கதை சொல்லும் முறையாக வெளிப்படுகிறது. நாவலின் பல பக்கங்களில் உரையாடலிய புனைவு பேச்சு, எதிர்மறைப்பேச்சு கருத்து பரிமாற்றம் என வெளிப்படுத்திக் கொள்கிறது. இருந்தபோதிலும் உரையாடலால் கதை நகர்வு என்பதைவிட சம்பவ நிகழ்வுகளில் உருவாகும் கதை நகர்வு வாசகனுக்கு இந்நாவலோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் சமூகத்தில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்திற்குள், அமைப்புக்குள், உறவுக்குள் பயன்படுத்தும் சொற்கள் எப்போதும் ஒற்றை அர்த்தம் கொண்டவையாக அமைவதில்லை. வேறுபடுந்தன்மை அவற்றில் உண்டு. தமிழ், உருது மொழி அடிப்படை, மரைக்காயர், ராவுத்தர், லெப்பை, ஒசா தொழில் அடிப்படை, ஷாபி ,ஹனபி, ஹம்பலி, மாலிகி என மார்க்க சட்டப்பள்ளிகளான மத்ஹபுகளின் சார்பு, பரேல்வி -தேவ்பந்து, என சூபிகள் ஆதரவுஎதிர்ப்புமதரஸாபள்ளிசார்ந்தபிரிவுசுன்னத்ஜமாஅத்தினர்,தர்காபண்பாட்டை எதிர்க்கின்ற வகாபிகள்,சுன்னிகள்,ஷியாக்கள்,அஹ்லேகுரானிகள்,காதியானிகள் என பலபிரிவுகள் முஸ்லிம் குழுமத்திற்குள் தொழிற்படுகின்றன.
அன்வர் பாலசிங்கம் நாவலின் துவக்கத்தில் நூர்ஜஹான் எழுதும் கடிதத்தில் பிரியமுள்ள அத்தாவிற்கு என்றே எழுதுகிறார். பிரியமுள்ள வாப்பாவிற்கு என்று எழுதவில்லை. தமிழ் முஸ்லிம் மரபில் தமிழ்பேசும் முஸ்லிம்கள், ஷாபி மத்ஹபை பின்பற்றுபவர்கள் தென்பகுதியில் தந்தைக்கு வாப்பா என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். உருது பேசும் முஸ்லிம்களிலும், ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்களும் வாப்பாவிற்கு பதிலாக அத்தா என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.
அன்வர் பாலசிங்கம் பாரம்பரிய முஸ்லிம்,நவ முஸ்லிம் என்ற பிரச்சினையை வெளிப்படையாக பேசியபோதிலும் வாப்பா, அத்தா என்ற சொல்லாடல்களை நாவலின் வெவ்வேறு பகுதிகளில் பயன்படுத்துவதின் மூலம் சொல்லப்படாத சூழ்நிலை வேறுபாடுகளை நனவிலி மனத்திலிருந்து படைத்துக் காட்டிவிடுகிறார்.
3)காதர்பாயின் மகள் நூர்ஜஹான் எழுதிய அந்த கடைசிக் கடிதம், தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதியது. அக்கடிதத்தின் வாசகங்களினூடேயே அக்குடும்பங்களின் வாழ்வியல் பரப்பு துயரம் நிறைந்த பின்னணியோடு சொல்லப்படுகிறது. இஸ்லாத்திற்கு மதம்மாறி வந்த காதர்பாய் நாற்பது வயதாகிவிட்ட தன் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாத ஒரு தகப்பனின் அலைக்கழிப்பை விவரணை செய்கிறது. மாப்பிள்ளை பார்க்க போகும்போது மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் வயசை குறைத்து சொல்லிவிட்டு வெளியே வந்து பொய்சொல்லிவிட்டோமே என அழுகிற சேதியை உமர்சாச்சா சொல்லுகிறார். தனது அத்தா ஒரு முஸ்லிமாக அடையாள மாற்றம் பெற்ற குதூகலிப்பையும் பிறகான வெறுமையையும் ஒரு சேர இணைத்துக் காட்டும்போது முன்னையெல்லாம் ஜும்ஆ வருதுன்னா அன்னைக்கு காலையிலேயே செங்கோட்டைக்கு போயி உங்க தாடியை ஒதுக்கீட்டு வருவீக, வச்சதாடியையும் தோளில போட்ட பச்சதுண்டயும் எடுக்க முடியல….. நூருக்குட்டின்னு சொல்லிக்கிட்டே இருந்தாலும் ஒரு நாளும் தொழுகை தப்பினதுல்ல, செங்கோட்ட சவுக்கு முக்கில நீங்க தாடி தொப்பியோடு நான் பர்தாவோடும் போறத ஏளனமா பார்க்கிற நாயி எத்தன இருக்கு தெரியுமாத்தா… என விவரிக்கும் வரிகள் ஒரு காட்சி படிமமாய் முஸ்லிம் மத மாற்றத்துக்கான எதிர் அரசியலை பேசுகின்றன.
முஸ்லிம் பெண்ணாக பர்தா அணிந்து இஸ்லாமிய வாழ்வியலை மேற்கொண்டாலும் நூர்ஜஹான் கதாபாத்திரத்தின் உள்மனம் தனது பூர்வீகம் பற்றிய அடையாளங்களுக்கே திரும்புகிறது. அதில் சாத்தியமாகிற திருமண உறவுகள், குழந்தைகுட்டியென பெருகும் குடும்ப உறவுகள் குறித்த ஏக்கங்களாகவும் தொனிக்கிறது. அக்கடிதத்தின் ஒரு வாசகம் இவ்வாறு பேசுகிறது.
அஞ்சாறு போட்டோ வச்சிருக்கியேளே உங்க மஞ்சபையில அந்த போட்டோவெல்லாம் விட உங்க வெத்தல பைக்குள்ள இருக்குமே, நான் கருப்பியா இருந்தப்ப எடுத்த போட்டோ அதுதாம்த்தா எனக்கு ரொம்ப புடிக்கும்…. பிறிதொரு இடத்திலும் நூர்ஜஹான் அக்கடிதத்தில் அத்தாவை நோக்கிச் சொல்கிறாள் நீங்களும் மதம்மாறாது அங்கிட்டே இருந்திருந்தா இந்நேரத்துக்கு நானும் ஒங்களுக்கு கொஞ்சிவிளையாட ரெண்டு பேரன் பேத்திய கொடுத்து கெழவியாயிருப்பேன்.
நூர்ஜஹான் நாற்பது வயதான பிறகும் தனது திருமணம் நடைபெறாத நிரந்தர வலியிலிருந்தும், தனது அத்தா அன்றாடம் பெறுகிற அவமானங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள தற்கொலை செய்து தன்னை அழிப்பதையே ஒரு தேர்வாக முன்னெடுக்கிறாள். செங்கோட்டைக்கு போற நேரமெல்லாம் சலீம் பேக்கரியிலே வாங்கிட்டு வருவியளே அந்த பப்ஸு நேத்தோடசரி. இன்னக்கு நீங்க வயலுக்கு போயிருக்கீங்க நாளைக்கு நீங்க எங்கயும் போக மாட்டியத்தா…. ஏன்னா உங்க செல்ல மகளை அனுப்பிவைக்க வேண்டாமா… இந்த வரிகளின் ஊடாக தனக்கு நடக்கவிருக்கிற மரணத்தையும், மய்யித்தை அடக்க எடுத்துப் போவதையும் நூர்ஜஹான் எழுதிச் செல்கிறார். மத்த வீட்ல எல்லாம் ஒரு தாய் பத்து மாசம்தான் பாரம்சுமப்பா ஆனா இங்கமட்டும் நீங்கரெண்டுபேரும் என்ன நாப்பது வருசம் பாரஞ் சுமந்து இருக்கிய என தனது ஆற்றாமையையும் அத்தாவின் நெடுந்துயரையும் வெளிப்படுத்துகிறார். முதிர்கன்னிகளின் அவலம் குறித்த எழுத்துக்கள் தமிழ் பரப்பில் வெளிப்படையாகவும், உள்ளொடுங்கியும் வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டுள்ளன என்றாலும் இந்த நாவலில் இதன் பரிமாணம் வேறுவகைப்பட்டதாக உள்ளது. தலித்தாக இருந்து முஸ்லிம் பெண்ணாக மாறிய காரணத்தால் இரட்டை ஆதிக்க ஒடுக்குமுறைதன்மை கொண்டதாக இந்த வகை துயரம் வெளிப்பட்டு உள்ளது.
மரபு வழி முஸ்லிம்கள், ஜமாஅத்துகளில் தலித்தாக இருந்து மதம்மாறிய முஸ்லிம் பெண்களை திருமணம் செய்ய மறுத்துவிடுகிறார்கள். இதன் காரணமாக முதல் தலைமுறையைச் சேர்ந்த தலித் முஸ்லிம் பெண்களின் வதைப்படுதல் தாளமுடியததாகிவிடுகிறது. பல வருடங்கள் கழிந்துவிட்டால் பாரம் பரிய முஸ்லிம் / நவமுஸ்லிம் என்ற பாகுபாடே இல்லாமல் மறைந்து விடும் என அறிவுத்தளத்தில் இயங்கும் விமர்சகர்கள் கூறுவது ஒரு பொய்யான கருது கோளாகவே மாறிப் போயிருக்கிறது. ஒரே சிறிய ஊருக்குள் இருக்கும் ரெண்டு மூணு ஜமாஅத்துகள், வெவ்வேறு பள்ளிவாசல்கள், தொழில் அடிப்படையிலான வேறுபாடுகள் நமக்கு இன்னும் எதையெதையோ உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நாவலில் முஹதீனத்தாவின் பெருங்குரல் ஓரிடத்தில் இவ்வாறாக ஒலிக்கிறது.
ஊரு உலகமெல்லாம் நோட்ட தூக்கிட்டு. பிலால் நகர்க்கு நிதி சேர்க்கோம் சேர்க்கோம்னு சொல்லியே லட்ச லட்சமா சம்பாதிச்சியளே வாப்பா.. எங்க பிள்ளைகளை கரையேத்த உங்கள்ள யாருக்குமே மனசு வரலியா ஒண்ணு ரெண்டா… அறுவது கொமருக மேல சமஞ்சு நிக்குதே யா அல்லாவே இதுக்கு வழி இல்லியா…
டீக்கடை ரஹிமின் ஆவேசப்பேச்சு பிலால்நகர் முஸ்லிம்பெண்கள் எதிர்கொள்கிற இப்பிரச்சினையை இன்னும் தீர்க்கமாக உரத்து பேசுகிறது.
ஒண்ணாரெண்டா ஐம்பது பிள்ளைகளுக்கு மேல சமஞ்சு உக்காந்து வருசம் இருவது ஆகுதுவே. மாறதுக்கு கூட்டம்போட்டு உசுப்பேத்திய நீரு இப்ப யாம்வே மூஞ்சியை உம்முன்னு வச்சுகிட்டு உட்கார்ந்திருக்கீரு…
காதர் மவ போயிட்டாளாமேன்னு ஊரே ரணகளபட்டு நின்றபோது செத்துப்போன நூர்ஹகானின் சித்தி பன்னீரு கதறி அழுது கோபத்தோடு பேசுகிறாள்.
பெத்துவச்ச புள்ளை காலகாலத்துல கெட்டிக்குடுக்கக துப்பில்லாம உங்களுக்கெல்லாம் தாடி தொப்பி ஒரு கேடா வெக்கமாயில்ல.. என்னவெல்லாம் நினச்சிருந்தாளோ எந்தங்கம்… அய்யய்யோ எந்த அல்லாவும் வந்து காப்பாத்திலியே என்பதாக அந்த கதறல் வந்து விழுகிறது.
இந்த பன்னீருதான் ஊரே முஸ்லிமா மாறும்போது அவுக அக்காளை மட்டும் நீ மாறாத முதலாளிக்கு சமமா நீயும் உம் புருசனும் நிக்க முடியாது, கருப்பாயி வாழ்க்கையே போயிடும்னு ஊரதிர கத்தி தீர்த்தவள்தான். அது இப்போது உண்மையாகிவிட்டது.
இந்த நாவலில் நடமாடும் போர்க்குணமிக்க பெண் கதாபாத்திரமாக பன்னீரு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள்.
நாப்பது வயசான போதும் திருமணமாகாத குமருகளின் நிலை ஒரு புறத்தே விவரிக்கப்பட்டாலும், அப்படியே பரம்பரை ஜமாஅத்துல யாராவது பெண்ணெடுக்க தயாரா இருந்தா ரெண்டாந்தாரமாட்டோ அல்லது மூணாந்தாரமாட்டோதான் திருமணம் செய்ய கேக்குறாங்க என்பது மற்றுமொரு வேதனைக்குரிய செய்தியாக முன் வருகிறது. முஸ்லிம்களில் யாரும் இப்பெண்கள் திருமணம் செய்ய முன்வராத நிலையில் இன்னொரு சம்பவமும் நடக்கிறது. திரும்பவும் தன் சாதிசார்ந்த பண்பாட்டுக்கு திரும்பி அங்குள்ள இந்து பள்ளர் சமூக இளைஞர்களை திருமணம் செய்வதான நிலையாக இது மாறுகிறது.
தென்கரை ஹஸனத்தா தனது உரையாடலில் துட்டு இல்லாத முஸ்லிம்னா அது பரம்பரையா இருந்தாலும் பாச்சா பலிக்காது வாப்பா துட்டுவேணும்… இந்த லட்சணத்துல நம்ம ஊரு பையமாரு கேரளாக்காரன் துட்டும் நகையும் ரொம்ப குடுக்குறானுவோன்னு அங்க ஓட்டமா ஓடி ரேட்டை ஏத்திட்டதாக கவலைப்படுகிறார். அவரது கருத்துப்படி பரம்பர-நவ முஸ்லிம் வேறுபாட்டைவிட வசதியுள்ளவன் வசதி இல்லாதவன்னு பொருளாதார ஏற்ற இறக்கமே அடிப்படை காரணமாக இருக்கிறது. இதற்கான எதிர்வினையாக பழைய தலைவரு செல்லப்பா இன்னொரு சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார்.
அல்லாபிச்சைக்கிட்ட இல்லாத பணமா.. அவன் பதினஞ்சு வருசம் வெளிநாட்டுல வேல பாத்திட்டு ஹஜ் பண்ணிகிட்டு வந்திருக்கான். அவனும் பத்து வருசமா மாப்பிள்ள தேடி நாயா அலஞ்சு கடைசியில எங்க ஜமாஅத்துல சொல்லிகிட்டு ஒரு இந்து பையனுக்கே கட்டி வச்சிருக்கான்… மறுமதமாற்றம் குறித்த பிரச்சினைக்கான காரணமாகவும் இப்பதிவுகளை நாம் வாசித்துக் கொள்ளலாம்.
பழையதலைவரு செல்லப்பா மிகவும் உறுதியான ஆளு. ஆனா காதர்பாய் மகள் நூர்ஜஹானின் தற்கொலைச் சாவு அவரை குலுங்கி குலுங்கி அழவைத்திருக்கிறது. பதினட்டாம் படியான் பள்ளனுக்கும், பாய்க்கும் என்னவே சம்பந்தம். ஊரசுத்தி ஒருவருசத்துக்குமுன்ன சாதிக்கலவரம் கொழுந்துவிட்டு எரிஞ்சப்போ இவருதான் ஜமாஅத் தலைவரு. செங்கோட்டை இன்ஸ்பெக்டரு இவரப் பார்த்து ஏளனமாக் கேட்டாரு.
யோவ் பாய் நீரு பள்ளி வாசலுக்குத்தான் நாட்டாமை பள்ளர் சமூகத்துக்கு இங்க யாருய்யா நாட்டாம… அப்போதுதான் செல்லப்பா சொல்றாரு இங்க பள்ளரும் பாயும் ஒண்ணுதான்.
பிலால் நகர் ஜமாஅத் தலைவர் செல்லப்பா, காமாட்சிபுரமே பிலால்நகராய் மாறியபோது இந்துமத தலைவர்களை எல்லாம் எதிர்த்து நின்று பேசி வீரம்காட்டியவர். வாஜ்பாயியும் ஜனசங்கத்து கட்சி ஆளுகளும் ஊருக்குள் வந்தபோது உள்ளே வரக்கூடாது என குறுக்கே நின்று தடுத்தவர் என்பதான பெயரும் புகழும் உண்டு.
கருப்பசாமியா இருந்தவர் காதர்பாயாய் மாறியபோது அந்த ஊரே முஸ்லிமா ஆனது. அப்போ வந்த விமர்சனங்களில் ஒன்றுதான் சோத்துக்கும் பிரியாணிக்கும் மதமாறினார்கள் என்பது. ஜமாஅத் தலைவர் இதுபற்றி நாவலில் பேசுகிறார்.
நாங்க மதம் மாறலவே மனம் மாறியாருக்கோம் எவனாயிருந்தாலும் சோத்துக்கும் பிரியாணிக்கும் மாறினீங்களான்னு கேட்டா இல்லவே மானத்துக்கும் ரோசத்துக்கும் மாறுனோம்.. சோத்துல உப்பு போட்டு திங்கறதை உறுதிப்படுத்த தாம்வே இந்த மாற்றம்.
காதர்பாயின் பழைய வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய தலைவர்களின் ஒருவராக இமானுவேல் சேகரன் வந்துபோகிறார். சின்னதான வீட்டில் காதர்பாய் மகன் அக்பர் வெளியே எடுத்துப் போட்ட பழைய போட்டாக்களில் ராணுவ உடையில மிடுக்காய் இருந்த அந்த இட்லர் மீசைக்காரர அம்புட்டு சீக்கிரம் மறக்க முடியுமா என்கிறார்.
தமிழ் சமூக வரலாற்றின் யதார்த்த வாழ்வில் தேவர் சமூகம் தெய்வீக புருசனாக கருதிய முத்துராமலிங்தேவரை எதிர்த்து நின்ற தலித் மக்களுக்கான போராளி இமானுவேல் சேகரன் என்பதான யதார்த்தம் மறுபுனைவுக்குறிப்பாக நாவலில் எழுதப்படுகிறது.
காதர்பாயின் முந்தைய வாழ்க்கையின் வீரம் சார்ந்த ஒரு காட்சியாக ஊருக்கு மேற்கில் கூப்பிடு தூரத்தில் உள்ள தலையண ஆத்துக்கு மேலே ரொம்ப நாளா சிலிப்பிகிட்டு நின்ன அந்த ஒத்தக்காட்டு பண்ணியை வெறும் கவுணால் அடிச்சு தோள்லே போட்டு தூக்கிகிட்டு வந்தாம் பாருங்க என்பதாக பதிவு நிகழ்கிறது.
4)முஸ்லிமாக தலித்துகள் மாறுவதற்கான சாதீயம் சார்ந்த புறச்சூழல்களை சம்பவச் சிதறல்களாக நாவல் எழுத்து சொல்லிச் செல்வதைக் காணலாம்.
தேவர்களுக்கும் பள்ளர்குலத்துக்குமான முரணைப் பற்றி பேசும் போது புளிச்சகுளம் கடுவா தேவருக்கும் கருப்பசாமிக்கும் போட்டி நடக்கிறது. காதர் பாய் பெயருதான் கருப்பசாமி, ஒரு மூட்டை உளுந்தை தலையில் வச்சுகிட்டு கையிட்டு பிடிக்காம திருமலைக்கோயில மலையில ஏறணும் ஐம்பத்தொரு ரூபாய் பந்தயம். அப்போதுதான் கடுவாதேவரு கேட்டார். பள்ளப்பய என்னோட போட்டிபோடுறதா.. கருப்பசாமிதான் மூலையில மூட்டையோடு முதல்ல கோயில் உச்சிக்கு போனாரு. யாரு முதல்ல கோயில தொட்டாலும் அங்க இருக்க பூசாரி மணியடிச்சு சொல்லணும். ஆனா அந்த பூசாரி என்ன சொன்னார் தெரியுமா? குமாரசாமிக்கு மணி அடிச்ச இந்தகை ஒரு குடும்பனுக்காடா அடிக்கும் போடான்னு சொல்லியிருக்கான். மற்றொரு இடத்தில் காமாச்சிபுரம் கிராமத்தின் சாதீய கொடுமையைச் சொல்ல வருகையில்அந்த ஊர்க்காரங்க பக்கத்துல ஊரில் உள்ள கடைக்கு டீ குடிக்கப்போனா அங்க கெடச்ச தனி மரியாதை அவங்களை ரொம்பவே யோசிக்க வச்சிருக்கணும். என்பதாகவே இடம் பெறுகிறது.
இந்நாவலில் பங்கெடுத்துக் கொள்ளும் பலவேசக் கிழவன் ஒரு அழுத்தமான தலித் கதாபாத்திரமாக வரலாற்றின் சுவடுகளை பேசிக் கொண்டே செல்வதைக் கேட்கலாம். சுத்துப்பட்டு மேல்சாதிகளுக்கு இருந்த நெலபுலன் தோப்பு துரவுகளை வச்சிருக்கக்கூடிய பலவேசக்கிழவனிடம்தான் மாட்டு வண்டியும் உண்டு. பொட்ட புள்ளைங்கள வெளியூருக்கு கட்டிக் கொடுத்தா அந்தக் காலத்தில் மாட்டு வண்டியிலதான் கூடிட்டு போகணும் கல்யாணத்துக்கு மொதநாளே மாடு ரெண்டையும் நல்லா குளிப்பாட்டி கொம்புநீவி பளபளன்னு வச்சுக்குவானாம்,,
சோளம் வித்து அவன் பொண்டாட்டி ஒளிச்சு வச்சிருந்த அம்புட்டு ஒட்டையணாவையும் களவாண்டுட்டு அன்னக்கு மதுரைக்கு வந்த அம்பேத்காரைப் பார்க்க பத்து இளவட்டங்களோடு ஓடுற அளவுக்கு தெம்புள்ள மனுஷனாக பலவேசக்கிழவன் காட்சிப்படுத்தப்படுகிறார். எங்கிருந்தோ ஒரு அம்பேத்கார் படத்தை ஒளிச்சுவச்சு எடுத்திட்டு வந்திட்டு அத ஒவ்வொரு வீட்டிலேயேயும் கொண்டு காண்பிச்சு சந்தோசப்பட்ட பலவேசக்கிழவன்தான் முதல்முதலா முஸ்லிமா மதம் மாறுறது பற்றி ஊரைக்கூட்டி தீர்மானம் போட்டிருக்கான்.
என்னதான் சொத்து சுகம் வச்சு, மாடிவீடு கட்டி பிழைச்சாலும் பொன்னாக்குடியில பிறந்த அஞ்சுவயசுப் பயகூட அம்பது வயசு நம்மூரு கிழவனைப் பார்த்து ஏ… சுப்பா கருப்பா…ன்னு பேர் சொல்லி கூப்பிடறது நல்லாப்படல..
காடு கழனியில நாயா உழைக்கிற நாம இன்னும் எத்தனை நாளைக்குத்தான் செருப்பு போடாமலும், தோளில துண்டு போடாமலும், அவங்க ஏசுற ஏச்சையெல்லாம் கேட்டுகிட்டு அமைதியா போறது… காமாட்சிபுரம் அது பள்ளப்பய ஊருன்னுலா சொல்லுறானுவ
அப்போதைய பலவேசக்கிழவனின் இந்தவித குரலுக்கு ஆதரவு இல்லை. முஸ்லிம்கள் தலித்துகளை நடத்துகிற விதம் குறித்த ஒரு விமர்சனமும் இந்த உரையாடலில் வந்து விழுகிறது. செங்கோட்டைக்கு சந்தைக்கு போயிட்டு அங்க இருக்க முக்குகடயில டீ குடிக்க போனமுன்னா கடைக்கார பாய் என்ன ஒம்ம வாங்க பலவேசம் உக்காருங்கன்னா சொல்லுறான் என அந்தக்குரல் இவ்விமர்சனத்தை எழுப்புகிறது. கிழவன் கண்ட கனவு முப்பத்தஞ்சு வருசத்துக்கு பிறகுதான் நிறைவேறி இருக்கு
5)முஸ்லிம் அடையாளத்துக்குள்ளேயே மேல் / கீழ் என உருவாக்கம் பெற்றிருக்கிற படிநிலை கட்டமைப்பு பரம்பரை முஸ்லிம், நவமுஸ்லிம் என்பதான வடிவத்தினோடும் இயங்கு தன்மை கொண்டுள்ளது. காமாட்சிபுரம், பிலால் நகரான பிறகு பிலால் நகர நவமுஸ்லிம்களை பிற ஜமாஅத்து முஸ்லிம்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதையும், இப்பிரதி உரையாடல் செய்கிறது.
முஸ்தபா வாத்தியாரு தனது நிக்காஹ் நடந்தபோது எங்க அத்தா பேருகிட்ட ராவுத்தர்னு போட்டபோது எழுந்த பேச்சில் ஒன்றுதான், நவமுஸ்லிமெல்லாம் ராவுத்த ராயிட்டா, அப்புறம் ராவுத்தர் என்னாவது … என்பதான விமர்சனமாக வெளிப்படுகிறது. மேலும் சம காலப்பிரச்சினையாக மதம் மாறிய முஸ்லிம்கள் பிற்படுத்தவர் அரசு சார் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ராவுத்தர், மரைக்காயர், லெப்பை எனத் தொடரும் பட்டியலில் தங்களை எதுவாக அடையாளப்படுத்த முடிகிறது என்பதான கேள்வியாகவும் இருக்கிறது.
இது மட்டுமல்ல மதம் மாறிய முஸ்லிம்களின் மனத்திலும் பரம்பரை முஸ்லிமை உயர்குடி முஸ்லிமாக கருதும் மனோ பாவங்களும் நிறைந்து உள்ளன. கவர்மண்ட் ஸ்கூலில் வேலை பார்க்கும் முஸ்தபாவிற்கு கல்யாணத்திற்கு பெண் பார்த்தபோது வந்த பேச்சு இவ்வாறாக வெளிப்படுகிறது.
உனக்கு கட்டினா பரம்பரை துலுக்கச்சித்தான். இந்த ஊருல உள்ள மாறுனசிறுக்கி எவளையாவது கட்டணும்னு நினைச்சா என்ன உசிரோடு பார்க்க முடியாதென எழுந்த குரலையும் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.
இரண்டாவது தலித்கள் முஸ்லிம்களாய் மதம் மாறிய பிறகு இவர்களது பெயரைச் சொல்லி கொள்ளையடிக்கும் உயர்தர வகுப்பாக தங்களை கருதி அதிகாரத்தையும் கைக்கொண்ட முஸ்லிம்கள் செய்யும் சுரண்டலின் குரூரமும் அம்பலம் செய்யப்படுகிறது.
காதர் பீவியை பெண்பார்க்க ஆள் வருகிறது என்றவுடன் பீவியின் ஏளனம் கலந்த விமர்சனம் அது யாருத்தா சீம மகராசன் பரம்பரையா… இல்லை நம்ம கேஸான்னு கேட்பதை இங்கு கருத்திற்கொள்ளலாம்.
ஹஸனத்தாவின் ஏளனம் நிறைந்த குரல் பரம்பரையோ,நவமோ யாராக இருந்தாலும் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்கிற நெருக்கடியாகவே இதனை பார்க்கிறது. நாலு புள்ளயில ஒரு புள்ளை ஒரு கோனார் பையனோடு ஓடிப்போனதை ஞாபகப்படுத்திவிட்டு அவர் கூறுகிறார்.
கலிமா சொல்லி எங்க கூட்டத்தோடு வந்துடுத்தா உனக்கு சொர்க்கம் கிடைக்கும்னு சொன்னா, அந்த பையன் நக்கலாக சிரிக்கிறான். என்ன ஒண்ணு காதர் தம்பிள்ளைய கெட்டிக் கொடுக்க முன்னால இழந்து நிக்காரு…நான் கெட்டிக் கொடுத்துட்டு இழந்து நிக்கிறேன்.
முஸ்தபாவின் குரலின் துயரம் நிறைந்த வன்மம் ஊர்க்கூட்டத்தில் தீவிரமாக அனுபவத்தின் அடிப்படையில் வெளிப்படுகிறது.
படிச்சு கவர்மெண்ட்ல வேலைபார்க்கிற நவமுஸ்லிமுக்கே இந்த நிலைன்னா ஒண்ணு அவங்களுக்கெல்லாம் வழி பொறக்கணும். இல்லைன்னா நாங்க ஊரோடு தூக்குபோட்டுதான் சாவணும்.
ஐந்துவருடம் முறையா ஓதி பட்டம் வாங்கியிருக்கிற பிலால் நகரின் உசேன் ஹசரத்து மேலும் வருத்தத்தோடு பேசுகிறார்.
நானும் பள்ளிவாசலில் ஹசரத்தாதான் வேலைபார்க்கிறேன். ஆனால் என் ஊரு என்னண்ணு தெரிஞ்சா வேலை இருக்குமான்னு தெரியவில்லை சந்தேகத்தை கிளப்பிவிட்டு கூறுகிறார்.
புதுசா ஒரு பையன் கலிமா சொல்லனும்னு சொல்றான்னா.. அசரத்து நாம அங்கயெல்லாம் போசக்கூடாது அந்த பையன் எஸ் ஸி ஆக்கும், அவங்க அவங்கதான் நாம நாமதான் என்பதாக அது அமைகிறது.
நவ முஸ்லிம் படும்பாட்டை பஷீரின் வாழ்வுக் கதையொன்று விளக்கிச் சொல்கிறது.பஷீருக்கு நான்கு பிள்ளைகள். மூணு பையன்கள் ஒரு பெண்பிள்ளை.நல்ல வியாபாரம் பண்ணி மாடிவீடு வரை போட்டுவிட்ட பஷீர் செங்கோட்டைக்கு வியாபாரத்துக்கு போன இடத்தில் மகளுக்கு திருமணம் பேசி முடித்திட ஏற்பாடு செய்கிறார். பொண்ணு பார்க்க நாள் குறித்தாயிற்று. பஷீர் ஊரையே கூட்டி ரெண்டு ஆடு அறுத்து பிரியாணிபோட்டு காத்து இருக்க, வரவேண்டிய மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை. நேரம் ஆக ஆக அவர்கள் வாறது மாதிரி தெரியவில்லை, என்ன காரணம் என்றும் தெரியவில்லை. நாளைக்கு காலையில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவாங்க என்று ஊர்மக்களை திருப்பி அனுப்பிவிட்ட பஷீர் தான் ஆசையாய் கட்டுன வீட்டின் மாடியிலபோய் தூக்கில் தொங்கினான். அவனுக்க மகள் மும்தாஜ் இன்னும் உயிரோடுதான் இருக்கா. நாற்பத்தி மூணுவயசாச்சு. என்ன நடந்தது என்று விசாரித்த போது செங்கோட்டை கார் ஸ்டாண்டுல இருந்து வந்துகிட்டு இருந்தபோது பஷீர் குடும்பம் புதுசா இஸ்லாத்துக்கு வந்த குடும்பம்னு அறிஞ்சதால மாப்பிள்ள வீட்டார் சொல்லாம கொள்ளாம வந்த வழியே திரும்பி போயிட்டாங்க.
6)இந்நாவலின் நீண்ட வரலாறு சார்ந்த கதையோட்டமும், உரையாடல்களும் காதர்பாயின் மகள் நூரின் மரணத்திற்கும், அந்த மய்யித்தை கொண்டுசென்று அடக்குவதற்கும், இடைப்பட்ட காலவெளியில் முதற்கட்டமாக நிகழ்த்திக் கொள்கிறது. இரண்டாம் கட்டமாய் மய்யித்தை அடக்கியதற்கு பிறகு நடைபெறும் ஊர்க்கூட்டத்தின் வழியாகவும் வெளிப்பட்டுக் கொள்கிறது. ஊர்க்கூட்ட பேச்சாகவே நாவலின் பிற்பகுதி உருவெளித் தோற்றம் பெறுகிறது.
இஸ்லாத்திற்கு மாறிய, முஸ்லிம்களை முன்வைத்து எழுப்பப்பட்ட சித்திரங்களில் ஒன்று அரபு நாட்டின் பணத்திற்காகவும் வெளிநாட்டு வேலை விசாவுக்காகவும், அடிமையாகிப்போனார்கள் என்பதாக எதிர்தரப்பால் முன் வைக்கப்படுகின்றது. இதை மறுக்கிற குரல் நாவலுள் பரவிக் கிடக்கிறது. பெரிய வீட்டு மீரான் இதனை நாங்க ஊரோடு மாறணும்னு முடிவு பண்ணினப்ப மானரோசத்தோட நாங்கதான் நாற்பத்தி நாலாயிரம் ரூபாய் ஊருல பிரிச்சு கொண்டாந்து கொடுத்தோம் என்கிறார்.
இருந்தபோதிலும் இதன் மற்றொருபக்கமாக மதம்மாறிய முஸ்லிம்களை முதலீடாக்கி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் பாரம்பரிய முஸ்லிம்களின் மூன்றாந்தர அரசியலையும் ஆளும் அதிகாரத்தின் பங்கேற்பாளர்களாக அவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளையும் தீவிரமாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவதையும் காணலாம்.
பிலால் நகருக்கு பெரிய பள்ளியை கட்டிக்கொடுக்க துபாய் சேட்டுக்கிட்ட லட்சக்கணக்கில் கமிசன் வாங்கின குலாம்பாயை நோக்கிய விமர்சனத்தில் வசூல் பண்ணின பணத்தில் பாதிய செலவழிச்சிருந்தாகூட ஊர் நல்லாயிருந்திருக்கும் என்பதான பதிவைக்காணலாம்.
எங்க பள்ளிக்கு கணக்கு பதினெட்டு லட்சம்னு சொல்லியிருக்கீங்க, அத மட்டும் நிரூபிச்சிடுங்க. நாம எல்லாரும் சித்தாள் வேலை பார்த்துதானே இந்த பள்ளிய கட்டினோம் பிறகெப்படி பதினெட்டு லட்சம் வந்தது இவ்வகையான எதிர்க் குரல்களையும் இந்நாவலினூடே அடையாளம் காணலாம்.
முஸ்லிம்களின் மரபு வழி நம்பிக்கைகளில் இறந்தவர்களுக்காக நிகழ்த்தப்படும் வழிபாட்டிற்கு ஜனாஸா தொழுகை என்பது பெயர். இறந்த உடலை குளிப்பாட்டி கபன் பொதிந்து, மணப்பொருள் தடவி, சந்தூக்கில் வைத்து கூட்டமாக தூக்கி வந்து மயானத்தில் அடக்கப்படுவதற்கு முன்பாக பள்ளிவாசலில் வைத்து இந்த ஜனாஸா தொழுகை நடத்தப்படுவதுண்டு. காதர் பீவியின் மரணத்தைப் பொறுத்த மட்டில் புதியதொரு பிரச்சினை எழுகிறது.பள்ளிவாசல் அசரத் (இஸ்லாமிய மதகுரு) இப்பிரச்சினையைக் கிளப்புகிறார். இயல்பாகவோ, நோய்வாய்ப்பட்டோ நிகழும் இயற்கை மரணத்திற்கு மாற்றாக தற்கொலை செய்து கொண்ட நபருக்கு ஜனாசா தொழுகை கூடாது என்று இஸ்லாமிய ஷரீஅத் சொல்வதாக இவ்விவாதத்தை கிளப்புகிறார்.
தலைவரே…. இந்த மய்யித்துக்கு என்னால ஜனாஸா தொழுகை வைக்க முடியாது. ஏன்னா… அந்த பொண்ணு தற்கொலை பண்ணி செத்திருக்கு… என்பதாக இக்குரல் எழும்புகிறது.
வயசு நாப்பதை கடந்தும் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இந்தப் பொண்ணு செத்திருக்கு இன்னும் முப்பது வயச கடந்த பொண்ணுங்க அறுபதுக்கு மேல இருக்கு. அவனவன் கைக்கு மீறிய கொமருகளை வச்சுகிட்டு படுதபாடு உனக்கு தெரியுமாவே…. இதுக்கு காரணம் நீங்கதான்… எதிர்வினைக்குப் பிறகே மக்ரிபு முடிந்த்தும் மய்யித்த அடக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் முன்னோக்கிய பயணத்தில் இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. தன் வாழ்நாளில் ஐந்து நேரமும் தொழுது மார்க்க கடமைகளை நிறைவேற்றி முஸ்லிமாக வாழாத ஒருவன் எனக் குற்றம்சாட்டி ஜனாஸா தொழுகை நடத்தமாட்டோம் வேண்டுமானால் மையவாடியில் அடக்கிக் கொள்ளலாம் என்பதாக தமிழகத்திலும் சில நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
அன்வர் பாலசிங்கம் இந்நாவலின் ஊடாக அரேபிய வாழ்வின் அவலங்களையும், அகதிமை மனநிலையோடு கொத்தடிமை உழைப்பாளிகளாக அடித்தட்டு மக்கள் மாற்றப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
பழைய தலைவரு காலையில கபுஹு தொழுதுகிட்டு பள்ளிவாசல்படியில் உட்கார்ந்து பழைய கதைகளை பேசுவதிலும், கேட்பதிலும் அலாதி விருப்பமுடையவர். தன்னைச் சுத்தி நடப்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதில் வெளிப்படுவதுண்டு. வெளிநாட்டிலிருந்து வந்த ஹாஜிமகன் கனியிடமும் இவ்வாறுதான் சவுதி அரேபியா எப்படியிருக்குப்பா மருமகனே என்பதாக தனது கேள்வியைத் தொடங்குகிறார்.
சுபுஹு தொழுது முடிச்சு வேலை ஆரம்பிச்சா தூங்கிறதுக்கு நைட் பதினொரு மணியாகும். தொழக்கூடிய நேரம் தவிர வேலைதான். கொத்தனாரு வேலையின்னா சம்பளம் நம்ம நாட்டு பணத்துக்கு சுமார் அறுநூறு விழும், வேகாத வெயிலில ரொம்ப கொடுமையாயிருக்கும், ஒருநாளைக்கு பத்து பெப்ஸி குடிச்சாதான் அவரால வேல செய்யமுடியும். மத்தியானம் மலையாளிக் கடையில நம்மூரு பிரியாணி மாதிரி கப்சான்னு ஒரு சாப்பாடு.
முஸ்லிம்தவிர்த்த மாற்று சமயத்தவர்கள் சவுதியில் வேலை பார்க்கும்போது நெத்தியில் திருநாறோ, குங்குமமோ, வைக்க கூடாது. ரூமுக்குள் சாமி போட்டாவை வைக்கக் கூடாது என்பதான சூழல்களும் இந்நாவலில் பிரதியாக்கம் செய்யப்படுகிறது.
சவுதி முஸ்லிம்கள் குறித்த விமர்சனம் சார்ந்த பார்வையும் இப்பகுதியில் முன் வைக்கப்படுகிறது.
கருப்பு சவுதி, வெள்ள சவுதி ரெண்டு பிரிவு நிற அடிப்படையில் இருப்பதும் வெள்ளை சவுதி அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதும் குலம், கோத்திரமன்று பிரிந்து கிடப்பதும் வெள்ளை சவுதிகள் கறுப்பு முஸ்லிம்களை கீழானவர்களாக பார்க்கும் மனோபாவமும் உருவாகியிருப்பதும் விவரணை செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டுக்காரனையும், ஏமானியனையும் கண்டால் மட்டும்தான் சவுதிகளுக்கு பயம். ஏனென்றால் அடித்தால் சவுதிகளை திருப்பி அடிக்கும் எதிர்ப்பு மனோபாவம் உடையவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.
இஸ்லாத்திற்கு வந்தபிறகு வெளிநாட்டுக்குப் போன அக்கிராமத்து முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து நடக்கும் சிஐடி விசாரணை நீள்கிறது.
இதுபற்றி விவரிக்கும்போது சவுதிக்குபோன பதினெட்டு பேரில் பத்துபேரு ஒட்டகந்தான் மேய்க்கிறார்கள். மீதி பேர் ஆஸ்பத்திரியில் வேல, நவமுஸ்லிமா மாறி முஸ்லிம் பேருல அங்க போயே ஒருத்தனும் மதிக்கல எண்ணூறு ரியால் நம்ம பணத்துக்கு ஒம்பதாயிரம் வரும், சவுதிக்கு போக செலவழிச்ச பணம் இருந்திச்சின்னா ஊருக்குள்ள பத்து பதினஞ்சு கிணறு வெட்டிருக்கலாம் என்பதான வலிநிறைந்த வரிகளாக வெளிப்படுகின்றன.
நவமுஸ்லிம் கருத்தாக்கத்தின் வடிவம் குறித்து பேசும்போது பாரம்பரிய முஸ்லிம்கள் நவமுஸ்லிம்களை ஜமாஅத்துகளில் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது போலவே சவுதியிலும் நிகழ்கிறது. ஹஜ்ஜுக்கு போனபோது கபத்துல்லாவில் டென்டுல தங்கியிருந்தபோது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்காரனை பார்த்து சூடானி புதுசா இஸ்லாத்துக்கு வந்தவங்க என்று குறிப்பிடுவதும், ஏமன்காரன் சூடானியை புதுசு என்பதும், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சவுதிக்கார முஸ்லிம் புதுமுஸ்லிம் என்பதுமாக இந்த மனோ நிலை கட்டமைப்பை அன்வர் பாலசிங்கம் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
இந்நாவலின் ஊர்க்கூட்ட உரையாடல்களின் வெளிப்பட்ட பல்வேறு விதமான பிரச்சினைகளின் ஆழங்களை பல்வேறு கதாபாத்திரங்களின் அனுபவங்களினூடே படைத்துக் காட்டுகிறார் அன்வர். நாங்க மாறி முப்பத்தஞ்சு வருசம் ஆகிப்போச்சுவாப்பா எம் பிள்ளைக்கு வயசு என்னண்ணு தெரியுமாவாப்பா நாற்பத்தியொண்ணு, அம்பாசமுத்திரத்துக்கு பக்கத்தில அசரத்துக்குகிட்ட மாப்பிள்ளை இருக்கான்னு கேட்டா ரெண்டாந்தாரமா கட்டி கொடுங்கோன்னு சொன்னான். சரி அதுக்காவது யாராவது மாப்பிள்ள இருக்கான்னு கேட்டா ஏன் என்ன பார்த்தா மாப்பிள்ள மாதிரி தெரியலையான்னு நையாண்டி பேசுறான். எம்புள்ளைக்கு தெரிஞ்சா என்னாகும் வாப்பா…ஏத்தா எந்திரிக்கலியா பாங்கு சொல்லியாச்சுன்னு காலையில சுபஹுக்கு எழுப்பிவிட இனி எனக்கு யாரு இருக்கா வாப்பா….
அக்கூட்டத்திலேயே தன் மகளை இழந்து காதர்பாய் துக்கத்தோடும், ஆத்திரத்தோடும் பேசிய நிலையில் மயக்கமடைந்து விழுகிறார். மூஞ்சியில் சோடா அடிச்சபிறகு அவரது மயக்கம் கலைகிறது. காதர்பாயும் அவரது மனைவியும், பன்னீரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்
7)நூர்ஜஹானின் தற்கொலைச்சாவு, அதைத் தொடர்ந்து எழுந்த அவலங்கள், உரையாடல்கள், இறந்த உடலை அடக்குவதற்கான சித்தரிப்புகள், பள்ளிவாசல் சூழல், ஊர்க்கூட்டம், அதில் கலந்துகொண்ட இஸ்லாத்துக்கு வந்த தலித்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், முப்பது வயசுதாண்டிய மகள்களுக்கு திருமணம் நடைபெறாத துயரங்கள், பாரம்பரிய முஸ்லிம்கள் நவமுஸ்லிம்களுடன் திருமணம் செய்து கொள்ள விருப்பமற்றநிலை, தொடர்ந்து ஒரு குடும்பத்தில் மதம்மாறிய காதர்பாயின் மகள் நூர்ஜஹான் காதர்பாயின் மனைவி, காதர்பாய் ஆகியோர்களின் தற்கொலைச்சாவு, அதே குடும்பத்தில் மதம்மாறாமல் தன் சாதிக் கலாச்சாரத்திலேயே தன்னை தக்கவைத்துக்கொண்ட பன்னீரின் தற்கொலைச் சாவு என்பதான காட்சிகளை இந்நாவல் கட்டமைத்துள்ளது
ஊர்க்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதுதான் ஓலமும் கதறலும் பொங்க அந்த செய்தி வந்தது. மொத்த ஜமாஅத்தும் காதர் பாய் வீட்டை நோக்கி ஓடியது. அங்கு காதர்பாய் நெடுஞ்சாண் கிடையாய் தன் வீட்டுவாசலில் கிடக்கிறார். அவர் அருகில் அவரது மனைவி. காதர்பாய் அழுதுகிட்டே இருந்தாரு. திடீர்னு வீட்டுக்குள்ளபோயி எதையோ ரெண்டு கிளாஸில் எடுத்துட்டுவந்தாரு. வீட்டுத் திண்ணையில் வச்சுதான் ரெண்டுபேரும் குடிச்சாங்க… மச்சான் ஒரே மடக்குல குடிச்சிட்டு அந்தக்கா மடியில படுத்திட்டாரு.
எதிர்வீட்டு அய்யம்மாதான் வந்தவர்களுக்கு விளக்கி கூறிக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் யாரோ ஒருவர் சத்தம் போட்டுக் கேட்டது. ஏத்தா பன்னீரு எங்க போனான்னு . ஒரு கூட்டம் இறந்துகிடக்கும் காதர்பாயின் மனைவியின் தங்கை பன்னீரைத் தேடியது. ஊர்க்கிணற்றை நோக்கி சென்றது. ஊர்க் கிணற்றில் பாதாளகரண்டிப்போட்டு தேடியபோது
பன்னீரு உடம்பு கரண்டியில் பிணமாகவே மாட்டியது. பன்னீரின் உடம்பையும் ஊர்க்காரர்கள் தூக்கி வருகிறார்கள்.
இங்கே இரு வேறுகாட்சிகள் நாவலில் நெருக்கமாக வைக்கப்படுகின்றன. நூர்ஜஹானின் கப்ருக்கு பக்கத்திலேயே அவளுடைய காதர்பாய் அத்தாவிற்கும் அம்மாவுக்கும் குழிவெட்டினார்கள். வெளியே சங்கூதும் சத்தம் கேட்கிறது. பன்னீரின் உடலை காதர்பாய் வீட்டின் முன்புறம் வைத்து குளிப்பாட்டுகிறார்கள். பன்னீரின் உடல் மயானத்தை நோக்கி ஒரு திசையிலும் காதர்பாய், அவரது மனைவியின் உடல் மையவாடியை நோக்கியும் செல்கிறது.
8)நாவல்கதையோட்டத்தையும் தாண்டி தலையீடு செய்கிற நாவலாசிரியரின் நேரடி பிரச்சாரத்தன்மை கொண்ட வாசகங்கள் இந்நாவலின் வடிவத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமையவில்லை என்பதையும் இவ்வேளையில் சொல்லியாக வேண்டும். படைப்பாளியின் குரல் ஓங்கி ஒலிப்பதை தவிர்ப்பதன் மூலம் படைப்பின் குரலை தீவிரமாக சாத்தியப்படுத்தி இருக்கலாம். என்றாலும் இந்நாவலை இரு வேறு கலாச்சாரங்களின் மோதலில் பலி கொடுக்கப்பட்ட முஸ்லிம்களாய் மாறிய தலித்துகளின் துயர வரலாற்றுப் புனைவு எனக் கூறலாம்.
இந்நாவல் இஸ்லாத்தில் மதம் மாறுதல் என்பது சமூகவிடுதலைச் சார்ந்தது எனும் சமத்துவ நிலைபாட்டின் மீதான எதிர்வினைகளை காத்திரமாக எழுப்புகிறது. கற்பிதங்கள் கட்டுடைத்து காட்டப்படுகின்றன.தூய அப்பழுக்கற்ற பிம்ப அரசியலின் தகர்வு நிகழ்கிறது. அனைத்து இஸ்லாமியர்களும் இந்த உண்மையை ஒத்துக் கொள்வார்கள், தங்கள் இருப்பின் அரசியல் குறித்த பிரச்சினைப்பாடுகளை மறு பரிசீலனை செய்வார்கள் என்றெல்லாம் எவரும் எளிதில் நம்பிவிடவும் முடியாது. இந்நாவலின் துயரம் சார்ந்த தற்கொலைகள் எதிர்ப்பின் அடையாளங்கள். எனவேதான் கருப்பாயி என்ற நூர்ஜஹான் எதிர்ப்பின் எழுத்தாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறாள்.
——————————————————————————————————————
(நாவலின் பெயர்: கருப்பாயி என்ற நூர்ஜஹான்
ஆசிரியர்: அன்வர்பாலசிங்கம்
வெளியீடு:கலங்கைப் பதிப்பகம்-யாதுமாகி பதிப்பகம்,திருநெல்வேலி)
—————————————————————————————————————-
// "கருப்பாயி என்ற நூர்ஜஹான்" நூல் மதிப்புரை - ஹெச்.ஜி.ரசூல் //பல வருடங்களுக்கு முன் வாசித்த தோப்பில் முக்கமதுமீரான் கதைகள் நினைவிற்கு வருகின்றன. உண்மையில் இதையெல்லாம், 'புகலிட இலக்கியம்' என்றே நான் சொல்கிறேன். ஒரே மொழி, ஒரே மண், ஆனால் ஜாதீயம் எனும் பெரும்பரப்பில் ஒரு ஜாதிவிட்டு இன்னொரு ஜாதி போவது நாடு விட்டு நாடு போவதற்கு ஒப்பு. இந்தியாவின் ஜாதீய ஆளுமை பீதி கொடுப்பதாய் உள்ளது. ஜாதியின் முன் மதங்கள் தோற்றன, சீர்த்திருத்தவாதிகள் தோற்றனர், அருளாளர்கள் தோற்றனர். அதுவொரு பிரம்மாண்ட ராட்சசனாக இந்தியாவில் உலாவுகிறது. அதைக் கொல்ல யார் வருவார்?நா.கண்ணன்
பொதுவாக ஜாதி என வந்தால் எல்லாரும் குற்றம் சாட்டுவது பிராமணர்ககளை. ஆனால் தமிழ்நாட்டில் கவுரவக்கொலை செய்யும் வழக்கம் இல்லாத ஒரே சாதியினர் பிராமணர் தான் என நினைக்கிறேன். வீட்டில் சேர்த்து கொள்ளாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் எத்தனை பணகாரரராக இருந்தாலும் கொலை, அடிதடியில் இறங்குவதில்லை.
கவுரவகொலை செய்யாமல் இருப்பதால் பாராட்டுகிறேன் என சொல்லும் அளவு நாட்டில் நிலைமை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது :-(
பொதுவாக ஜாதி என வந்தால் எல்லாரும் குற்றம் சாட்டுவது பிராமணர்ககளை. ஆனால் தமிழ்நாட்டில் கவுரவக்கொலை செய்யும் வழக்கம் இல்லாத ஒரே சாதியினர் பிராமணர் தான் என நினைக்கிறேன். வீட்டில் சேர்த்து கொள்ளாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் எத்தனை பணகாரரராக இருந்தாலும் கொலை, அடிதடியில் இறங்குவதில்லை.
கவுரவகொலை செய்யாமல் இருப்பதால் பாராட்டுகிறேன் என சொல்லும் அளவு நாட்டில் நிலைமை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது :-(
--
தேர்தல் சமயம் கூத்துக்களை காணலாம்.சாதி, மதம், இவற்றின் பேரால் அரசியல் வாதிகளின் பிழைப்பு நடக்கிறது. அரசியல் வாதிகள் சாதியைச் சாக விடமாட்டார்கள்.சாதியின் பேர் சொல்லி அரசியல் நடத்துவதைத் தவிர்ப்பது உடனடித்தேவை.நற்குணங்க்கள், நல்லறிவு எல்லாம் நாம் வளர்த்துக்கொண்டால் தான் வளரும்,என்றோ யாரோ சொன்னதால் தான் இவர்கள் செய்கிறார்கள் என்ற வாதம் பொருந்தாது.இந்தக் கொலையை யாரும் தூண்டிவிட்டிருக்க மாட்டார்கள்.கௌ ரவக் கொலைகள் ஜாதிபிரிவினையே இல்லாத பாகிதானிலும் நிகழ்வதாகச் சொல்கிறார்கள்,இது வக்கிர புத்தியுள்ள தனிப்பட்ட மனிதர்களின் செயல்.
பார்வதி14 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:49 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:பொதுவாக ஜாதி என வந்தால் எல்லாரும் குற்றம் சாட்டுவது பிராமணர்ககளை. ஆனால் தமிழ்நாட்டில் கவுரவக்கொலை செய்யும் வழக்கம் இல்லாத ஒரே சாதியினர் பிராமணர் தான் என நினைக்கிறேன். வீட்டில் சேர்த்து கொள்ளாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் எத்தனை பணகாரரராக இருந்தாலும் கொலை, அடிதடியில் இறங்குவதில்லை.
கவுரவகொலை செய்யாமல் இருப்பதால் பாராட்டுகிறேன் என சொல்லும் அளவு நாட்டில் நிலைமை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது :-(
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
ஹா ஹா ஹா ......--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ In fact: Why, with some videos, seeing shouldn’t be believing
A doctored or tampered video is one in which the actual visual or sound captured by a camera is manipulated to project an altered reality.
இதுவும் செய்திதான்
வழக்கமாக சாதி ஒழிப்பு, மனுஸ்ம்ரிதி குறித்து மணிக்கணக்கில் பேசும் திராவிட கட்சிகள், திராவிடர் கழகம் ஆகியவை இப்படுகொலை குறித்து வாயே திறக்க மாட்டார்கள். விடுதலையில் மூலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு பின்னால் யாராவது கேள்விகேட்டால் "அறிக்கை வெளியிட்டேன்" என சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அதிலும் பட்டும் படாமல் "மேல்சாதி, கீழ்சாதி" என்பது போல பூசிமெழுகபட்டிருக்கும்.
இவ்வாறு உள்ளூர் அளவில் பெருகி வரும் சாதி முரண்களை புரிந்து கொள்வதற்கான,எதிரிகொள்வதற்கான பேச்சும், உபகரணங்களும் தமிழகத்தில் சிறிதும் இல்லை என்பது தான் இன்னும் அவலம். தமிழகத்தின் கடந்தகால சாதி எதிர்ப்பு சொல்லாடல்கள் பிராமண அதிகாரத்தை கட்டுப்படுத்தியதை தாண்டி தலித் உரிமையாக மாறவில்லை என்பதற்கு இதுவொரு உதாரணம். மேலும் பிராமண எதிர்ப்பு அரசியலின் விளைவுகளை பெற்ற சமூகத்தவர்களே இன்றைக்கு இவ்வுரிமை மறுப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அண்மைக்காலமாக பெருகியிருக்கும் கௌரவக் கொலைகள், சாதி ஒடுக்கு முறைகள், தலித்துகளுக்கெதிரான அரசியல் கூட்டமைப்பு என்கிற தொடர் பின்னணியில் வைத்து இச்சம்பவத்தை மட்டுமல்ல, இதற்கு எதிராக யாரும் பேச மறுப்பதையும் கூட பார்க்க வேண்டும்.
இன்றைய தமிழக அரசியல் சொல்லாடல் என்பது முற்றிலும் கடந்தகால சமூக சீர்திருத்த நோக்கிலிருந்து விலகியிருக்கிறது. முழுக்க உடனடி அரசியல் நலன் சார்ந்ததாக மாறியிருக்கிறது. குறிப்பாக இன்றைய தேர்தல் அரசியலானது எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகளை சேர்ந்ததாக மாறியிருக்கும் நிலையில் அவர்களை பகைத்துக் கொள்ளும் எந்த செயலிலும் அரசும் அரசியல் கட்சிகளும் ஈடுபட மறுக்கின்றன. இங்கும் அதுதான் நடந்துள்ளன. உள்ளூர் அளவிலான முரண்பாடுகளில் பெரும்பான்மையினரை திருப்திபடுத்தி ஓட்டு வாங்க விரும்புவதால் சட்டத்தை நடைமுறைபடுத்தாமல், நடைமுறைபடுத்தக் கோரும் தலித்துகளையே அரசு ஒடுக்குகிறது.
PS3: south indian crimepoint WebTV mentions the caste of kausalya as DEVAR (not confirmed independently)
see https://www.youtube.com/watch?v=Y3X2tKjm1lM and
: http://www.southindiancrimepoint.com/ or https://twitter.com/crimepoint or http://sicpwebtv.blogspot.in/
அன்புடன்தமிழ்த்தேனீ
அன்புடன்தமிழ்த்தேனீஅனைத்து உயிருக்கும் அவனே ஆதிஅவனை விடவா உயர்ந்தது ஜாதி?மனிதமும்,உலகமும் காப்போம்,மௌனம் உணர்த்தாத பொருளை9840686463 9840884852
2016-03-15 12:42 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
https://youtu.be/R-X2QQJaapI?t=51sDon't be such a gullible person, be realistic. The election is just around the corner..... தேமொழி
On Monday, March 14, 2016 at 10:55:41 PM UTC-7, செல்வன் wrote:வழக்கமாக சாதி ஒழிப்பு, மனுஸ்ம்ரிதி குறித்து மணிக்கணக்கில் பேசும் திராவிட கட்சிகள், திராவிடர் கழகம் ஆகியவை இப்படுகொலை குறித்து வாயே திறக்க மாட்டார்கள். விடுதலையில் மூலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு பின்னால் யாராவது கேள்விகேட்டால் "அறிக்கை வெளியிட்டேன்" என சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அதிலும் பட்டும் படாமல் "மேல்சாதி, கீழ்சாதி" என்பது போல பூசிமெழுகபட்டிருக்கும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2016-03-14 11:35 GMT+01:00 Suba <ksuba...@gmail.com>:திருப்பூர்: உடுமலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் காதல் ஜோடியை சரமாரியாக அரிவாளால் ஒரு கும்பல் துடிக்க துடிக்க வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலித் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர வி சிகிச்சை பெற்று வருகிறார்.ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் மாமாவும் அவரது நண்பர்களும் இந்த படுபாதக செயலை அரங்கேற்றியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 22. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா, 19 என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.சங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் கவுசல்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சங்கருடன் சென்று விடவே, தங்களது பெண்ணை சங்கர் கடத்தி சென்று விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் கவுசல்யா கூறியதாலும், கவுசல்யா மேஜர் என்பதாலும் சங்கரோடு செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் பொருட்களை வாங்குவதற்காக உடுமலைக்கு வந்தனர்.
உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். சந்தோசமாக பேசி சிரித்தபடியே கடைவீதிக்கு செல்ல நின்றுகொண்டிருந்தவர்களுக்குத் தங்களின் பின்னே எமன் நிற்கிறான் தெரியாது. அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மூன்று பேரில் ஒருவன் கத்தியால் சங்கரின் கழுத்தில் திடீரென கத்தியால் குத்தினான். மற்றொருவன் அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினர்.
கத்தியால் குத்தப்பட்ட சங்கர் நடுரோட்டில் விழுந்து துடித்த போதும் விடாமல் அந்த கும்பல் வெட்டியது. இதேபோல கவுசல்யாவையும் துரத்தி துரத்தி வெட்டியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மயங்கினர். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தினை அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நிற்க முடிந்தது. இருவரையும் வெட்டிய பின்னர் மூவரும் சாவகாசமாக பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அருகில் உள்ள கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டனர். வரும் வழியில் சங்கர் இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜாதி மாறி திருமணம் செய்ததன் காரணமாக பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நந்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கருத்து கூறிய சங்கரின் தந்தை, என் மகனை அடிக்கடி கொன்று விடுவதாக மிரட்டி வந்தனர். இப்போது கொலை செய்து விட்டனர். என் மகனிள் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என்று கூறினார். சாதி மாறி காதலித்து திருமணம் செய்த தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போல உடுமலையில் நடு ரோட்டில் தலித் இளைஞர் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dalit-youth-killed-marrying-caste-hindu-girl-248901.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dalit-youth-killed-marrying-caste-hindu-girl-248901.html
2016-03-15 9:46 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
பெரியார் பிறந்த மண் என்கிறார்கள். அங்கேயே இப்படி என்றால் பெரியாரை யாரும் மதிக்கவில்லை என்று தானே பொருள். அவரே இந்த சாதி ஒழிப்பிற்கு தன் கட்சிக்காரர்கள் யாவரும் கலப்பு மனம் தான் புரியவேண்டும் என்று சொல்லவில்லை.தப்பித் தவறி கலப்பு மனம் புரியும் திராவிடக் கழகத்தார் தெலுங்கர் என்றால் தெலுங்கரை மட்டுமே மணக்கின்றனர். காட்டாக, சாரங்கபாணி என்ற தெலுங்கு இடையாரான வீரமணி ஒரு ரெட்டிப் பெண்ணைத் தான் மணந்தார். அவர் மருமகள் ஒரு மலையாளி. பெரியாரின் அண்ணன் மகன் சம்பத்து சுலோச்சனா நாயுடு வைத்தான் மணந்தார். தமிழரை வடுக தெலுங்கர் மதிப்பதில்லை. நல்ல மஞ்சள் நிறத்தவரான நாயுடு, ரெட்டி, ராசு போன்ற தெலுங்கர் ஆரியரே ஆவர். ஆனாலும் அதை மறைத்து திராவிட வேடம் போடுகின்றனர்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று முடிவெடுத்த ஒரு "இயக்கம்" சமூகப் பிரச்சனைகளை அணுகுவதற்கும்,ஆட்சியைப் பிடிக்க, தேர்தலில் சாதிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் கட்சிகள் சமூகப் பிரச்சனைகளை அணுகுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன.முந்திய பிரிவினருக்கு இழப்பு ஏதுமில்லை, மற்றவர்கள் செயல்பாட்டில்/செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் தன்னல நோக்கம்.
நானாக இருந்தாலும் தட்டி கேட்டிருப்பேனா தெரியலை என்பதும் ஏன் அவர்கள் தட்டி கேட்கவில்லை என்பதும் படித்த வுடன் சிரிப்புதான் வந்ததுபகிரங்கமா இணையங்களிலேயே சாதி ஆதிக்கம் பேசப்படுகிறது அதை தட்டி கேட்க ஆளில்லைநடுத்தெருவில் வெட்டினால் எப்படி தட்டி கேட்பார்கள் என்று அங்காய்க்கப்படுது ஒருவகை மனநிலைதான்
--
/பத்ரியிடம் துப்பாக்கி இருந்தால் அரிவாள் ஏந்திய மூவரை எதிர்த்து நின்றிருப்பார்.//எனது சொந்த அனுபவம் அப்படி இல்லை கையில் அரிவாளுடன் ஒரு குரூப் எங்கள் ஊருக்குள் புகுந்து விட்டதுஅழைத்து வந்த பெண்ணின் வீட்டாரை பிடித்து கொண்டு அவர்களிடன் கெட்ட வார்த்தையில் பேசிக்கொண்டு திட்டி கொண்டும் இருந்தனர்நான் தட்டி கேட்டேன் உடனே இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொன்னேன் நான் கேட்டதும் என்னுடன் சிலர் சேர்ந்து கொண்டனர் உடனே அந்த கும்பல் நியாயம் பேசி அந்த இடத்தை விட்டு தப்பிக்க பார்த்தது நாங்கள் அவர்களை போலீசில் ஒப்படைத்தோம் இம்மாதிரி நிறைய விபரங்கள் எனது சொந்த வாழ்வில் நடந்துள்ளதுஅரிவாளை கண்டு பயந்தால் ஒன்றும் செய்ய முடியாதுவிசயம் என்ன வென்றால் வெட்டுக்கு பயப்படாமல் யாராவது ஒருத்தர் முன் வந்து தட்டி கேட்கனும்
சும்மா அரிவாளை காட்டி மிரட்டுவதுக்கும், வெட்டும் நோக்கில் அரிவாளை வைத்திருப்பதுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யும் நோக்கில் வந்தவர்கள். உங்கள் ஊரில் சும்மா அரிவாளை காட்டி மிரட்ட வந்திருக்கலாம்.என் கண்முன் யாராவது கூலிபடையினர் கும்பலாக யாரையாவது அரிவாலால் வெட்டினால் நான் போய் தடுக்க மாட்டேன். என்னை கொன்றால் என் குடும்பத்துக்கு யர் பாதுகாப்பு? போலிசுக்கு மட்டும் போன் செய்வேன். ஆஸ்பத்திருக்கு கொன்டுபோவேன். கையில் துப்பாக்கி இருந்தால் தடுப்பேன்.
இணையத்தில் பேசும் நாம் இந்த விசயத்தில் என்ன செய்கிறோம் என்றால் உடனே சாதி மதம் இதனால் வந்த விளைவுன்னு ஒரு விவாதம் செய்துட்டு பிறகு சும்மா இருந்து விடுவோம்சாதியை எதிர்த்த இயக்கம் மீண்டும் பெரியார் காலத்தை போல் துவங்கப்பட வேண்டும்
.
--
கோவை பகுதியில் தலித் இளைஞரை காதலிக்கும் மேல்சாதிப்பெண்ணை போனில் அழைத்து அந்த சாதி இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வாட்ஸாப்பில் பரவி வருகிறது(ஆடியோவில் சாதிவசைகள் பயன்படுத்தபடுவதால் எச்சரிக்கையுடன் கேட்குமாறு கேட்டுகொள்ளபடுகிரார்கள்)
https://www.youtube.com/watch?v=p8Cxc20_Vug
ஆரிய-திராவிடம் பேசி ஆட்சியை பிடித்த எந்த கட்சியாவது, திராவிடர் கழகமாவது சம்பந்தபட்ட சாதி தலைவர்களை அமரவைத்து பேசி இம்மாதிரி சாதிய மோதல்களை, ஹானர் கில்லிங் படுகொலைகளை தடுத்து நிறுத்த முயன்றதுண்டா?
இவர்களது முற்போக்கு வேடமெல்லாம் பார்ப்பனருடனும், மனுஸ்ம்ரிதியுடனும் நின்றுவிடும். ஜாதி ஒழிப்பு எல்லாம் சும்மா பேசி ஆட்சியை பிடிக்க மட்டுமே பயன்படும்.
15 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 5:15 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
பெரியார் பிறந்த மண் என்கிறார்கள். அங்கேயே இப்படி என்றால் பெரியாரை யாரும் மதிக்கவில்லை என்று தானே பொருள். அவரே இந்த சாதி ஒழிப்பிற்கு தன் கட்சிக்காரர்கள் யாவரும் கலப்பு மனம் தான் புரியவேண்டும் என்று சொல்லவில்லை.
தப்பித் தவறி கலப்பு மனம் புரியும் திராவிடக் கழகத்தார் தெலுங்கர் என்றால் தெலுங்கரை மட்டுமே மணக்கின்றனர். காட்டாக, சாரங்கபாணி என்ற தெலுங்கு இடையாரான வீரமணி ஒரு ரெட்டிப் பெண்ணைத் தான் மணந்தார். அவர் மருமகள் ஒரு மலையாளி. பெரியாரின் அண்ணன் மகன் சம்பத்து சுலோச்சனா நாயுடு வைத்தான் மணந்தார். தமிழரை வடுக தெலுங்கர் மதிப்பதில்லை. நல்ல மஞ்சள் நிறத்தவரான நாயுடு, ரெட்டி, ராசு போன்ற தெலுங்கர் ஆரியரே ஆவர். ஆனாலும் அதை மறைத்து திராவிட வேடம் போடுகின்றனர்.
இது இயல்பாக நடக்கணும். பெற்றோர் பார்க்கும் திருமணத்தில் இன்னொரு சாதியில் போய் பெண் கேட்க இயலாது