Re: [MinTamil] Abridged summary of mintamil@googlegroups.com - 6 updates in 5 topics

24 views
Skip to first unread message

Jeyapal K

unread,
Dec 2, 2025, 10:37:40 AM (2 days ago) Dec 2
to mint...@googlegroups.com
//
Magudeswaran Govindarajan (கவிஞர் மகுடேசுவரன் )
அரசுப் பணிக்கான தமிழ்த் தேர்வுக் கேள்விகளில் எளிதில் வெற்றி பெற வேண்டுமெனில் இரண்டு துறைகளில் ஒருவர் பேரறிவு பெற்றவராதல் வேண்டும். ஒன்று இலக்கணத்துறை. இன்னொன்று இலக்கியத்துறை.
அ). இலக்கணத்தைப் பழுதறக் கற்பதற்குச் சுருக்குவழியே இல்லை. முழுமையாக மொழியினைக் கற்றறிதலே வழி. எழுத்துகளில் தொடங்கவேண்டும். புணர்ச்சி இலக்கணத்தில் ஊன்றி நிற்கவேண்டும். யாப்பையும் அணியையும் செய்தியறிவு மட்டத்திலாவது தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
ஆ). ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற தலைப்பினில் பல்வேறு தமிழறிஞர்கள் எழுதிய நூல்கள் இருக்கின்றன. அவற்றை மனப்பாடம் செய்யுமளவிற்குப் படித்து முடிக்கவேண்டும். ’தமிழ் இலக்கிய வரலாறு’ குறித்த நூல்களில் தமிழண்ணல் எழுதிய நூல் மிகவும் சிறந்தது, எளியது. எண்ணற்ற செய்திப் படிவுகள் அடங்கியது. இணையத்தில் இலவயமாகவே கிடைக்கும். அதனை எப்படியாவது படித்துவிடுங்கள்.
- கவிஞர் மகுடேசுவரன்
//

தேர்வுத் தாளைச் சரிபார்ப்பவர் விடைகளை எப்படிக் கையாள்வார் என்றும் தெரிய வேண்டுமே!
அல்லது விடைத் தாள் முன்பே  தயாரிக்கப்பட்டதாயின், அங்கே என்ன எதிபார்ப்பு உண்டென்றும் தெரிய வேண்டுமே!
சரிபார்ப்பவரிடம் இதுவும் சரி, இதுவுஞ்சரி என்ற நெகிழ்ச்சித் தன்மை இருக்குமா?

எ.கா:
அரசுப் பணிக்கான தமிழ்த் தேர்வுக் கேள்விகளில் எளிதில் வெற்றி பெற வேண்டுமெனில் இரண்டு துறைகளில் ஒருவர் பேரறிவு பெற்றவராதல் வேண்டும். ஒன்று இலக்கணத்துறை. இன்னொன்று இலக்கியத்துறை.

இதனைப் பின்வருமாறு எழுதினால் சரி கிடைக்குமா? பிழை கிடைக்குமா?

அரசுப் பணிக்கான தமிழ்த் தேர்வுக் கேள்விகளிலெளிதில் வெற்றி பெற வேண்டுமெனிலிரண்டு துறைகளிலொருவர் பேரறிவு பெற்றவராதல் வேண்டும். ஒன்று இலக்கணத்துறை. இன்னொன்று இலக்கியத்துறை.

அன்புடன்
செயபாலன்

On Mon, Dec 1, 2025 at 3:46 PM <mint...@googlegroups.com> wrote:
இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>: Dec 02 12:12AM +0530

வெருளி நோய்கள் 756-760: இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் திருவள்ளுவன் ...more
Muduvai Hidayath <muduvai...@gmail.com>: Dec 01 11:16AM +0400

MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433
muduvai...@gmail.com
 
 
 
From: Abdus Salam <qibl...@gmail.com>
 
 
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ...more
தேமொழி <jsthe...@gmail.com>: Nov 30 06:13PM -0800

*பாரம்பரியப் பெட்டகங்கள் – சுவலி ஒலிப்பதிவுகளாக இங்கே . . . ...more
தேமொழி <jsthe...@gmail.com>: Nov 30 06:18PM -0800

[image: 30-31.jpg]
 
*https://publuu.com/flip-book/265728/2259414/page/30 *
சிற்பங்களில் காரைக்கால் அம்மையார்; ...more
தேமொழி <jsthe...@gmail.com>: Nov 30 04:52PM -0800

[image: Screenshot 2025-12-01.jpg]
 
*எங்கும் முல்லைப் பூக்களே!*
 
அவரோ வாரார்! முல்லையும் பூத்தன! ...more
தேமொழி <jsthe...@gmail.com>: Nov 30 03:42PM -0800

*Magudeswaran Govindarajan (கவிஞர் மகுடேசுவரன் )*
அரசுப் பணிக்கான தமிழ்த் தேர்வுக் ...more
You received this digest because you're subscribed to updates for this group. You can change your settings on the group membership page.
To unsubscribe from this group and stop receiving emails from it send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Dec 2, 2025, 4:06:02 PM (2 days ago) Dec 2
to மின்தமிழ்
நன்றி, இது அண்மைய செய்திப்  பின்புலம் கொண்டது.  
தேர்வு பன்முகத் தெரிவு வினாக்கள் (MCQ / multiple choice questions) முறையில் அமைந்துள்ளதாகத் தெரிகிறது. 
இது தொடர்பான ஒரு  ஃபேஸ்புக் பதிவு 
---



பதில் எழுத ஆள் குறைந்தாலும் கேள்வி கேட்க தமிழகத்தில் இன்னும் தமிழ்த்துறையில் ஆள் இருக்கிறார் என்பது ஆறுதலே.
அண்மையில் 85000 பேர் தேர்விழந்தனர் என்ற செய்தியை அளித்த வினாத்தாளின் பகுதி இவை. தாளின் பரவும் சமனும் அழகாக இருக்கின்றன.
இந்தப்பக்கங்களுக்கு விடையளித்துப் பார்த்தேன். அடிச்சி பிடிச்சி நான் தேர்வாயிட்டேன். நீங்கள் ? முயல்க. ( பதிலை அதிலேயே குறித்திருக்க மாதிரி இருக்குங்கிறதால 100/100 போட்டுக்காதிங்க 🙂 )

facebook post.jpg
----------------------------

தேமொழி

unread,
Dec 2, 2025, 4:14:46 PM (2 days ago) Dec 2
to மின்தமிழ்
/// அரசுப் பணிக்கான தமிழ்த் தேர்வுக் கேள்விகளிலெளிதில் வெற்றி பெற வேண்டுமெனிலிரண்டு துறைகளிலொருவர் பேரறிவு பெற்றவராதல் வேண்டும். /// 

இப்படிச் சொற்களைப்  பிரிக்காமல் எழுதுவதைத் தவிர்ப்பது இக்காலத்தில் நல்லது.  ஏனெனில். . . 

இணையத்தேடலில்  சொற்பிரித்து  (சொல் பிரித்து) எழுதுவதே பல தேடல் முடிவுகளைக் கொடுக்கும். அவற்றின் மூலம் தேடும் பரப்பில் மேலும் பல தகவல் கிடைக்கும். 
இக்காலத்தில் ஒற்றுப்பிழைகளைக் கொண்ட செய்திகளைக் கூட  யாரும் பொருட்படுத்தாத காரணமும் இதுவே என்று நான் கருதுகிறேன். 
காலத்திற்கு ஏற்ப இலக்கணம் நெகிழ்வுத் தன்மையை ஏற்றுக் கொள்வது தவறில்லை  என்பது என்னுடைய கருத்து 
Reply all
Reply to author
Forward
0 new messages