மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

1,472 views
Skip to first unread message

செல்வன்

unread,
Oct 24, 2011, 5:33:47 PM10/24/11
to mintamil, தமிழமுதம், பண்புடன், தமிழ் சிறகுகள்
மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

http://kalachuvadu.com/issue-128/page52.asp

பி.ஏ. கிருஷ்ணன்

“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.

என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”

இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.

புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.

புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.

உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.

2

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.

Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.

“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”

தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.

“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”

தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”

உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.

மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.

3

ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;

“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”

கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.

“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”

மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.

ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.

4

கோர்லே கூறுகிறார்:

“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”

மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.

1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.

“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.

மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’

மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”

எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.

கோர்லே கூறுகிறார்:

நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”

5

இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.

இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.

இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

6

இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.

இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.

கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்

அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.

1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது

சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.

இந்த விதவைகள் யார்?

முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.

1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:

அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.

இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.

தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.

மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,

கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:

1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London

2. Military Reminiscences - James Welsh 1830 London

3. The Examiner 1813 Collection – Leigh Hunt

4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London

--
செல்வன்

"தன்னை எப்போதும் உயர்வாக கருதுவது மனித இயல்பு. ஆனால் தன்னை பாதிக்கபட்டவனாக கருத சொல்லி கற்பிப்பதே கம்யூனிசத்தின் இயல்பு "- செல்வன்

Innamburan Innamburan

unread,
Oct 24, 2011, 5:39:09 PM10/24/11
to mint...@googlegroups.com
புரியவில்ல்லையே, செல்வன். 'அன்றொரரு நாளை' கண்டுகொள்வதில்லையோ:-()
இன்னம்பூரான்

செல்வன்

unread,
Oct 24, 2011, 6:01:48 PM10/24/11
to mint...@googlegroups.com
இப்ப தான் அலுவலகம் இருந்து வீடு வந்தேன் இ சார்.இன்னும் மடல்களை முழுக்க படிக்க துவங்கலை.

2011/10/24 Innamburan Innamburan <innam...@gmail.com>
புரியவில்ல்லையே, செல்வன். 'அன்றொரரு நாளை' கண்டுகொள்வதில்லையோ:-()
இன்னம்பூரான்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

s.bala subramani B+ve

unread,
Oct 25, 2011, 11:03:56 AM10/25/11
to mint...@googlegroups.com

மீ  மனோகரனின்
 
மருது பாண்டியர்கள் படிபதற்கும் ஆய்விற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
 
திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில்   தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர்   இலான் காபெரியல் உதவியுடன்
ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன
வேலு நாச்சியார் ஹைதர்  திப்புவை திண்டுகல்லில்  சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

K R A Narasiah

unread,
Oct 25, 2011, 11:09:41 AM10/25/11
to mint...@googlegroups.com
TO SOME EXTENT i HAVE COVERED THE STORY OF mARUTHU PANDIAYAS IN MY AALAVAI. i HAVE SEEN THE BOOK (ORIGINAL COPY) OF WLSH IN THE ARCHIVES OF MADRAS fORT.
NARASIAH

2011/10/25 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Oct 25, 2011, 2:16:05 PM10/25/11
to mint...@googlegroups.com

மதிற்பிற்குரிய நரசய்யா அவர்களுக்கு 
வணக்கம் 
நலமா 

என் கடல் கொண்ட தென்னாடு தொடர்பான கடலடி ஆய்வுகளும், தென் கிழக்கு மாநில  இந்தியர்கள் (தமிழர்கள்  )   தொடர்ந்த ஆமைகளின்  கடல் வழிகளும் 
தெளிவான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றன 

நலம் விரும்பிகளின்  துணையுடனும் 
செய்யாதே என்றவர்களிடம் விலகியும் 

தீதும் நன்றும் பிறர்  தர வார 
என்பதை  உணர்ந்து சென்று என் தேடலில்  கொண்டு இருக்கிறேன் 

அடிக்கடி உங்கள் நினைவு வரும் 
அனைவரின் நலம் குறித்து அறிய ஆவல் 

அன்புடன்
 ஒரிசா பாலு 

2011/10/25 K R A Narasiah <naras...@gmail.com>

K R A Narasiah

unread,
Oct 25, 2011, 3:24:53 PM10/25/11
to mint...@googlegroups.com
Pl carry on, On my return we will discuss more things. You must carry on with your valuable work. May God be with you in your efforts.
DEEPAVALI GREETINGS
Narasiah

s.bala subramani B+ve

unread,
Oct 25, 2011, 9:58:51 PM10/25/11
to mint...@googlegroups.com
நன்றி 

ஒரிசாவில் தமிழ் தொடர்பான வரலாற்றையும் 
தமிழ்நாட்டில் கலிங்க தொடர்பான தகவல்களையும் 

தேடி அலைந்து திரிந்த என்னை காலம் 
திரு சந்தான கோபாலான் அவர்களின் மூலம் கடல் கொண்ட தென்னாட்டின் உண்மையான  நிலவரம் தேடி கடலோடு தொடர்பு கொள்ள வைத்தது 

குமரி கடல் பற்றிய தகவல் மட்டும் பத்தாது  என்று இந்திய பெருங்கடலை பற்றி ஆய்வில் முழுமையாக ஈடுபட்டபோது 

ஏற்கனவே எனக்கு பழக்க மாகிய ஆமைகள்   மூலம் கடலில் மூழ்கி உள்ள தீவுகளை பற்றி ஆய்வு செய்தபோது 
தான் 
பிடி படாத பல உண்மைகள் தெளிவாகியது 

ஆமைகளின்  கடல் வழிகளில் உள்ள பல இடங்கள் தமிழ் பெயர்களாக இருப்பது 
உலக கடற்கரைகளில் ஆமைகள் தொடர்பான இடங்கள்  பிற்காலத்தில் துறை முகங்களாய் மாறி உள்ளது 

தென் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகள் கடல் நீரோட்டத்தை அடிப்படியாக வைத்து பல நாட்டு கடற்கரைகளின் தொடர்பில் இருந்தது 
நம்முடிய கப்பல் கட்டும் பாரம்பரியம் 
மிதப்பில் தொடங்கி தெப்பம் ,குடும்பகர், சலங்கு ,ஓடம் ,தோணி, மஞ்சு, வத்தல்  என்று நீரோட்டத்தில் செல்லும் மிதப்பில் இருந்து பின் காற்றை பயன்படுத்தி பாய் மர கப்பல்கள் என்று 
1939 இல் தேவ கோட்டை நாகப்பா செட்டியாரிடம்இருந்து ராபின்சன்  வாங்கிய அண்ணா பூரணி கப்பல் அதை செய்த வல்வெட்டி துறைமுகத்தில் உள்ள மாலுமிகளை வைத்து அமெரிக்காவிற்கு ஏடன் வழியாக சென்றது வரை 

நம்முடிய கப்பல்கள் சர்வ சாதரணமாக 
மெக்ஸிகோ, பெரு ,சிலி ,என்று தென் கிழக்கு மற்றும் உலகமெங்கும் வளம் வந்த நிகழ்ச்சிகள் மெதுவாக பல ஆவண கோப்புகள் மூலம் 
என்னிடம் வர தொடங்கி உள்ளது 

இந்த கடலை  நம் மக்கள் எப்படி எல்லாம் இயற்கையின் ஆற்றலை புரிந்து கொண்டு பயன் படுத்தினார்கள் என்று என் ஆய்வை தீவீரபடுதிய போது தான் 
அரசரை பற்றி மட்டுமே பேசி வந்த அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி தெரிந்து கொள்ள என் ஆய்வுகள் துணை புரிகிறது 
கலிங்கத்தை பற்றியும் குமரி கடலை பற்றி ஆய்வை தொடங்கிய எனக்கு இன்று 
ஒருங்கிணைந்த கடல் ஆய்வுகளின் பல் வேறு பரிமாணங்களை
  நான் சந்தித்த தொடர்பு வைத்து இருக்கும் மனிதர்களின் மூலமும் 
இணையத்தின் முழு சக்தியையும் வைத்து பயணிக்க முடிகிறது 

உங்களை போன்ற வாழ்வின் பயனை  அனுபவித்து அந்த எண்ணங்களை  அசை போட்டு கொண்டு இருக்கும் பெரியவர்கள் ஆசிகள் இருக்கும் வரை 

என் ஆய்வின் எல்லைகள் அதிகமாகி போனாலும் பலன் என்னோமோ நான் சார்ந்த இந்த நிலத்திற்கு தான் 

கடல தொடர்பான பலருக்கு தொடர்ந்து பயிற்சிகள் கொடுப்பது மூலம் தரவுகள் வந்து கொண்டே இருக்கிறது 

அன்புடன் சிவ பாலசுப்ரமணி  

உலகின் கடல் பாரம்பரியத்தின் மிக முக்கியமான பங்கை நாம் வைத்து இருந்தும் என்பதை 
என் ஆய்வுகள்  

2011/10/26 K R A Narasiah <naras...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Oct 28, 2011, 7:21:59 AM10/28/11
to mint...@googlegroups.com
ஐயா செல்வன் அவர்களுக்கு வணக்கம்.

அருமையான தகவல்
நன்றி 
அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Nov 3, 2011, 5:29:05 AM11/3/11
to mint...@googlegroups.com

 வணக்கம்.

கடந்த 30/10/2011 அன்று காளையார் கோயில் சென்று வழிபாடும் பேறு கிடைக்கப் பெற்றேன்.  அன்று மாமன்னர் மருது சகோதரர்களை வணங்கிய போது ஐயா ‘இ‘னா அவர்களும் ஐயா செல்வன் அவர்களும் எனது நினைவிற்கு வந்தனர்.  அவர்களுக்காகவும் அந்தக் காளீசுவரிடமும் மன்னர்களிடமும் வேண்டிக் கொண்டேன்.  

  clip_image002.gif

கானப்பேர் எயில் என்ற காளையார் கோயில்,  மருது சகோதர்களால் கட்டி முடிக்கப் பெற்ற 9 நிலை பெரிய கோபுரம், மற்றும் வரகுண பாண்டியனால் கட்டப்பெற்ற 5 நிலை கோபுரம்.

Kalai0581.jpg

Kalai0586.jpg

மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர்

(வழிபாட்டிற்கு உரிய மன்னரது சிலையைச் சுற்றிலும் குப்பை போடப்பட்டிருப்பதும், அவரது பெருமைகளை அம் மண்ணின் மைந்தர்கள் அவ்வளவாக உணராமல் இருப்பதும் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது)

மகா சிவபக்தனாகத் திகழ்ந்த சிவகங்கைசீமையின்இரண்டாவது மன்னர் மாவீர முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர்.  இவர் 1750 முதல் 1772 வரை இருபத்திரெண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.  இந்திய மண்ணில் இவரே வெள்ளையர்களை எதிர்த்து முதல் சுதந்திர முழக்கம் செய்தவர். காளையார் கோயில் கடும் போரில் வெள்ளையர்கள் மறைந்து நின்று கை எறி குண்டுகளை வீசியபோது 25/6/1772 இல் வீரமரணம் அடைந்தார்.

இவருடன் போரில் காளையார் கோயிலைச் சேர்ந்த இவரது இரண்டாவது மனைவி கன்னிராணி கௌரி நாச்சியாரும் உயிர் துறந்தார்.   இவரது அமைச்சர் தளவாய் தளவாய்தாண்டவராய பிள்ளை.  தளபதிகள் மாவீரர்களான மருது பாண்டியசகோதரர்கள்.

Kalai0578.jpg 

பெரிய மருது

 Kalai0579.jpg

சின்ன மருது.

-- 

அன்பன்
கி.காளைராசன்
http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,

அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

Kalai0581.jpg
Kalai0579.jpg
Kalai0578.jpg
clip_image002.gif
Kalai0586.jpg

Innamburan Innamburan

unread,
Nov 3, 2011, 7:45:54 AM11/3/11
to mint...@googlegroups.com
நன்றி, முனைவர்.காளைராஜன். 

Geetha Sambasivam

unread,
Nov 3, 2011, 8:21:17 AM11/3/11
to mint...@googlegroups.com
உண்மைதான் ஐயா.  காளையார் கோயில் தரிசனம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும்.

2011/11/3 கி.காளைராசன் <kalair...@gmail.com>

 வணக்கம்.

கி.காளைராசன்

unread,
Nov 4, 2011, 6:21:42 AM11/4/11
to mint...@googlegroups.com
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

2011/11/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>

உண்மைதான் ஐயா.  காளையார் கோயில் தரிசனம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும்.
வாருங்கள் ...

காரைக்குடியிலிருந்து
திருக்கானப்பேர் (காளையார்கோயில்)
திருவாடானை
திருப்பாச்சேத்தி (பாக்கள் சேர்ந்த ஊர்)
திருப்பூவணம்
வழியாக மதுரை சென்று ஊருக்குத் திரும்பலாம்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்த உள்ள பட்டறையை ஒட்டிய நாட்களில் இந்தப் பயணத்திட்டத்தை வைத்துக் கொள்ளலாம்.
வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

அன்பன்

Geetha Sambasivam

unread,
Nov 4, 2011, 7:43:36 AM11/4/11
to mint...@googlegroups.com
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்த உள்ள பட்டறையை ஒட்டிய நாட்களில் இந்தப் பயணத்திட்டத்தை வைத்துக் கொள்ளலாம்//
 
அப்படியா?  இது குறித்து அறிவிப்பு வந்ததா?  எப்போது இந்தப் பட்டறை?  தற்சமயம் எனில் என்னால் கலந்து கொள்ள இயலாது. யு.எஸ்ஸில் இருக்கேன். :(

2011/11/4 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 4, 2011, 7:45:46 AM11/4/11
to mint...@googlegroups.com
குறிப்பு ஒன்ரும் காணக்கிடைக்கவில்லையே, கா.ரா.

2011/11/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Nov 4, 2011, 8:25:57 AM11/4/11
to mint...@googlegroups.com
அம்மையார் கீதா அவர்களுக்கும்
ஐயா ‘இ‘னா அவர்களுக்கும் வணக்கம்.
 
அப்படியா?  இது குறித்து அறிவிப்பு வந்ததா?  எப்போது இந்தப் பட்டறை?
குறிப்பு ஒன்ரும் காணக்கிடைக்கவில்லையே, கா.ரா.
 
உத்தேச வேலைகள் நடைபெற்று வருகின்றன.
நாள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.

N. Kannan

unread,
Nov 4, 2011, 10:01:29 AM11/4/11
to mint...@googlegroups.com
கீதா:

சுபா இந்தியா வரும் வேளையில் நடத்த உத்தேசம். நானும் அச்சமயம்
இந்தியாவில் இருந்தால் அமர்க்களப்படுத்திவிடலாம். எல்லோரும்
சௌந்தர்யநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் அருளும் பெற்று வரலாம்.

நா.கண்ணன்

2011/11/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Geetha Sambasivam

unread,
Nov 4, 2011, 10:06:12 AM11/4/11
to mint...@googlegroups.com
நான் ஏப்ரல் வரை இங்கே இருப்பேன். சுபா அதுக்கு முன்னரே வரப் போவதாய்ச் சொன்னாங்க.  பார்க்கலாம். தகவலுக்கு நன்றி.

2011/11/4 N. Kannan <navan...@gmail.com>

செல்வன்

unread,
Nov 4, 2011, 11:52:42 PM11/4/11
to mint...@googlegroups.com

காளைராசன் ஐயா

மருது மன்னெர் சன்னதியில் எங்களுக்காக வேண்டிகொண்டது மிக்க மனநிறைவை அளிக்கிறது. மாவிர மருதுபாண்டியர் திருவடியை இங்கிருந்தே நமஸ்கரிக்கிறேன்.

On Thursday, November 3, 2011, கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
>  வணக்கம்.
>
> கடந்த 30/10/2011 அன்று காளையார் கோயில் சென்று வழிபாடும் பேறு கிடைக்கப் பெற்றேன்.  அன்று மாமன்னர் மருது சகோதரர்களை வணங்கிய போது ஐயா ‘இ‘னா அவர்களும் ஐயா செல்வன் அவர்களும் எனது நினைவிற்கு வந்தனர்.  அவர்களுக்காகவும் அந்தக் காளீசுவரிடமும் மன்னர்களிடமும் வேண்டிக் கொண்டேன்.  
>
>   </mail/u/0/s/?view=att&th=13368c305d0b502e&attid=0.4&disp=emb&realattid=ii_13368b95dfb9264c&zw>

>
> கானப்பேர் எயில் என்ற காளையார் கோயில்,  மருது சகோதர்களால் கட்டி முடிக்கப் பெற்ற 9 நிலை பெரிய கோபுரம், மற்றும் வரகுண பாண்டியனால் கட்டப்பெற்ற 5 நிலை கோபுரம்.
>
> </mail/u/0/s/?view=att&th=13368c305d0b502e&attid=0.1&disp=emb&realattid=ii_13368bac6bafe3a4&zw>
>
> </mail/u/0/s/?view=att&th=13368c305d0b502e&attid=0.5&disp=emb&realattid=ii_13368bc48479ce7e&zw>

>
> மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர்
>
> (வழிபாட்டிற்கு உரிய மன்னரது சிலையைச் சுற்றிலும் குப்பை போடப்பட்டிருப்பதும், அவரது பெருமைகளை அம் மண்ணின் மைந்தர்கள் அவ்வளவாக உணராமல் இருப்பதும் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது)
>
>  
>
> மகா சிவபக்தனாகத் திகழ்ந்த சிவகங்கைசீமையின்இரண்டாவது மன்னர் மாவீர முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர்.  இவர் 1750 முதல் 1772 வரை இருபத்திரெண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.  இந்திய மண்ணில் இவரே வெள்ளையர்களை எதிர்த்து முதல் சுதந்திர முழக்கம் செய்தவர். காளையார் கோயில் கடும் போரில் வெள்ளையர்கள் மறைந்து நின்று கை எறி குண்டுகளை வீசியபோது 25/6/1772 இல் வீரமரணம் அடைந்தார்.
>
>  
>
> இவருடன் போரில் காளையார் கோயிலைச் சேர்ந்த இவரது இரண்டாவது மனைவி கன்னிராணி கௌரி நாச்சியாரும் உயிர் துறந்தார்.   இவரது அமைச்சர் தளவாய் தளவாய்தாண்டவராய பிள்ளை.  தளபதிகள் மாவீரர்களான மருது பாண்டியசகோதரர்கள்.
>
>  
>
> </mail/u/0/s/?view=att&th=13368c305d0b502e&attid=0.3&disp=emb&realattid=ii_13368bd9b03f1d6d&zw> 

>
> பெரிய மருது
>
>  </mail/u/0/s/?view=att&th=13368c305d0b502e&attid=0.2&disp=emb&realattid=ii_13368bfed65570a6&zw>

>
> சின்ன மருது.
>
> -- 
>
> அன்பன்
> கி.காளைராசன்
> http://www.freewebs.com/thirupoovanam/
> திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
>
> அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
> ஏற்றுக் கொள்கிறார்,
>
>
>
>

Subashini Tremmel

unread,
Nov 5, 2011, 4:25:42 AM11/5/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி செல்வன். 

சுபா

2011/10/24 செல்வன் <hol...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 5, 2011, 4:27:15 AM11/5/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
படங்களுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி முனைவர் காளைராசன். இவற்றை நமது புகைப்படங்கள் வலைப்பூவில் இணைத்து வைக்கிறேன்.

சுபா

2011/11/3 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Kalai0586.jpg
clip_image002.gif
Kalai0579.jpg
Kalai0578.jpg
Kalai0581.jpg

Subashini Tremmel

unread,
Nov 5, 2011, 4:28:41 AM11/5/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/11/4 கி.காளைராசன் <kalair...@gmail.com>
..

உத்தேச வேலைகள் நடைபெற்று வருகின்றன.
நாள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.

விரைவில் உறுதி செய்கிறேன். அலுவலக் வேலை எனது பயணத்திட்டத்தை தொடர விட்டாமல் செய்கின்றது. 

அன்புடன்
சுபா

அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kanniappan

unread,
Nov 5, 2011, 8:08:29 AM11/5/11
to mint...@googlegroups.com
ஐயா! வணக்கம். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்த உள்ள பட்டறையை ஒட்டிய நாட்களில் இந்தப் பயணத்திட்டத்தை  பற்றிய விவரம் அளிக்க வேண்டுகிறேன். நானும் இதில் கலந்து கொள்ளலாமா? தங்களின் மடலை எதிர் நோக்கியுள்ளேன்.

௪ நவம்பர், ௨௦௧௧ ௩:௫௧ பிற்பகல் அன்று, கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!

என்றென்றும் அன்புடன்,
 வடிவேல் கன்னியப்பன்.

Subashini Tremmel

unread,
Nov 6, 2011, 6:24:08 AM11/6/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
முனைவர் காளைராசன்,

இந்தப் பதிவை த.ம.அ மரபுப் படங்கள் வலைப்பூவில் இணைத்திருக்கிறேன். http://image-thf.blogspot.com/

சுபா

2011/11/3 கி.காளைராசன் <kalair...@gmail.com>

 வணக்கம்.

கி.காளைராசன்

unread,
Nov 7, 2011, 2:54:51 AM11/7/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
வணக்கம்.

2011/11/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

விரைவில் உறுதி செய்கிறேன். அலுவலக் வேலை எனது பயணத்திட்டத்தை தொடர விட்டாமல் செய்கின்றது. 

மகிழ்ச்சி.

21 - 31 மார்ச் 2012 உள்மதிப்பீட்டுத் தேர்வுகள்
21 -31 ஏப்ரல் 2012 பல்கலைக்கழகத் தேர்வுகள்
மே -  சூன் விடுமுறை நாட்கள்.
2 - சூலை 2012 பல்கலைக்கழகம் மீண்டும் செயல்படத் துவங்கும்.

மேற்கண்ட நாட்களில் அலுவலகம் செயல்படும்.
ஆனால் மாணவர் தேர்விலும், விடுமுறையிலும் இருப்பர்.
எனவே தங்களது பயணத்திட்டத்தை உறுதி செய்யும் போது இவற்றையும் அன்புடன் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

கி.காளைராசன்

unread,
Nov 7, 2011, 2:55:02 AM11/7/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
வணக்கம்.

2011/11/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

முனைவர் காளைராசன்,

இந்தப் பதிவை த.ம.அ மரபுப் படங்கள் வலைப்பூவில் இணைத்திருக்கிறேன். http://image-thf.blogspot.com/

அம்மையார் சுபா அவர்களுக்கு நன்றி
காளையார்கோயில் தொடர்பாக என்னிடம் உள்ள தகவல்கள் அனைத்தையும் சுருக்கி விரைவில் ஒரு கட்டுரையாக எழுதித் தருகிறேன். 

அன்பன்

Dr M.D.Jayabalan

unread,
Nov 21, 2011, 4:38:16 AM11/21/11
to மின்தமிழ், mdjch...@yahoo.com
Memoirs of James என்பவரின் நூல் கானிமரா நூலகத்தில் ஒரே ஒரு பிரதி
இருந்தது. ஆனால் அந் நூலை அடிப்படையாகக்கொண்டு விரிவான வரலாற்று நூலை
மதுரைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ராஜையன் அவர்கள்
எழுதிய நூல் South Indian Rebellion of 1800-1801. அதில் குறிப்பிடப்பட்ட
மருதுவின் மகன் பெயர், என் நினைவு சரி என்றால் துளசிங்கம். பினாங்கிற்கு
நாடு கடத்தப் பட்ட 32 பேர்களில்(அனைவர் பெயரிலும் தேவர் என்ற சொல்
இணந்துள்ளது) இவனும் ஒருவன். 17 வயதுதான். வாள் சுழற்றுவதில் மிக வல்லவன்
என்கிறார். அக் குடும்பத்தாரின் விருந்தோம்பல் பண்பைப் பற்றி விரிவாக
எழுதுகிறார். ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் இவர் பதவி உயரவு பெற்று அங்கு
சென்றபோது அவரிடம் அவன் வந்து “ஐயா, என்னைத் தெரிகிறதா?” என்று கேட்க,
“தெரியவில்லை” என்று சொல்ல “நான் தான் துளசிங்கம்” என்றதும் கலங்கி
கண்ணீர் வழிவது அவர் கண்ணிலிருந்து மட்டும் அல்ல; நம்
கண்ணிலிருந்தும்தான். இந் நூலை ஒவ்வொருவரும் இளைய தலைமுறையும் படித்து
நம் வரலாற்றை உணர வேண்டும்.
Byron's The curse of Minerva (1806) என்ற கவிதையில் the swarthy race of
Ganges சுதந்திரம் அடைவார்கள் என்று .குறிப்பிட்டது ப்ரிடிஷ்
பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட வேலூர் சிப்பாய் கலகம் பற்றித்தான்.
பைரன் எம்.ப்பி.யாக இருந்தவன்.

On Oct 25, 2:33 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> *மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்
>
> http://kalachuvadu.com/issue-128/page52.asp
>
> *  பி.ஏ. கிருஷ்ணன்

>
>   “நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று
> ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர்
> நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
>
> என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல
> முடியும். என்னால் முடியாது.’ ”
>

> இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப்
> புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத்
> தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது.
> பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே
> பதிப்பிக்கப்பட்டது.
>
>  புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the
> Nineteenth Century – With Some Observations on the Present State of the
> British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப்
> புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.
>
> புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா
> என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு,
> ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப்
> பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி.
>
> உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும்
> ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும்
> உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய
> உண்மை.
>
> 2
>
> பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும்
> மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும்
> குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது
> சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன்
> வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது
> போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லை என்று சொல்லும் அவர், மருதுவின்
> வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.
>
> Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his
> country.
>
> “இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால்,
> அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”
>
> தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு
> கூறுகிறார்.
>
> “(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும்
> தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித்
> திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது
> விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி
> வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன
> மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர்
> அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே
> செல்லலாம், வெளியே வரலாம்.”
>
> தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன
> மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர்
> வேட்டையாடப்பட்டதையும் தொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும்
> சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு
> கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது
> குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன்
> துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.
>
> “தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன்.
> கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும்
> அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின்
> மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை
> உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம்
> கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”
>
> உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து
> அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது
> நினைவுகளில் குறிப்பிடுகிறார்.
>
> மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள்
> தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.
>
> 3
>
> ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக்
> குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;
>
> “இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின்
> எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை -
> வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால்
> நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”
>
> கோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை
> முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக்
> கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின்
> ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும்
> பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ்
> அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக்
> கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி
> நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.
>
> “மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம்
> சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக
> இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின்
> நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும்
> உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும்
> அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”
>
> மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும்
> முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று
> குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான
> பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே
> தருகிறேன்:
>
> Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and
> the willing mandate was speedily prepared, which consigned the unhappy
> Mahradu and every male branch of his family to dishonourable grave.
>
> ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் -
> சிறுவர்களும்கூட.
>
> 4
>
> கோர்லே கூறுகிறார்:
>
> “பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து
> அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த
> ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும்
> ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை
> தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த
> ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”
>
> மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட
> விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.
>
> 1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது
> குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ
> மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை
> நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான்
> செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம்
> அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.
>
> “எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும்
> அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை.
> (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல
> என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின்
> மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் -
> தூக்கிலிடப்பட்டனர்.
>
> மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார்.
> ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன்.
> என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள்
> நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச்
> சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம்
> எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’
>
> மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப்
> போலத்தான்!”
>
> எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள்
> நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து
> காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர்.
> வேட்டதையே செய்தனர்.
>
> கோர்லே கூறுகிறார்:
>
> நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான
> கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94
> ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன்
> கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக
> இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை
> எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”
>
> 5
>
> இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
>
> கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the
> French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும்
> ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது.
> நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த
> போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம்
> ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
> இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி
> நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
>
> ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt)
> என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The
> Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க
> பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம்
> ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய
> கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.
>
> இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த
> நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we
> cannot but doubt until better evidence be adduced -it is one of the most
> disgraceful and diabolical proceedings that have occurred in the present
> age.
>
> இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை
> சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான
> நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
>
> 6
>
> இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த
> அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று
> எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.
>
> இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர்
> அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு
> நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால்
> அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத்
> தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக்
> குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.
>
> கோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும்
> அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே
> புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால்
> ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச்
> செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய்
> சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால்
> எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்
>
> அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று
> இருக்கிறது.
>
> 1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords)
> பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி
> ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டு Southern Court of
> Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக்
> கூறப்பட்டிருக்கிறது
>
> சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை
> விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார்
> உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது
> சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
> ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர்
> சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின்
> கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ்
> குறிப்பிடத் தவறவில்லை.
>
> இந்த விதவைகள் யார்?
>
> முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது
> சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள். மருது
> சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில்
> வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.
>
> 1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம்
> கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார்
> பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த
> நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த
> மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார்
> 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள்
> இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று
> ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி
> செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம்
> இது:
>
> அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும்
> நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து
> கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து
> அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும்
> அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின்
> மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில்
> பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன
> என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும்
> வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகளை
> வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச்
> சொந்தம்.
>
> இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம்
> இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது. இரண்டு
> விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது.
> ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும்.
> மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான
> ஒன்று என நான் எண்ணுகிறேன்.
>
> தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
>
> மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர்
> முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக்
> கடமைப்பட்டிருக்கிறோம்.
>
> பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட்
> பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.
>
> மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த
> பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே
> சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள்
> இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச்
> சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று
> எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
> Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம்
> - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப்
> பற்றிக் குறிப்பிடவில்லை.
>
> * பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,
>
> கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:
>
> 1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century -
> 1813 London
>
> 2. Military Reminiscences - James Welsh 1830 London
>
> 3. The Examiner 1813 Collection – Leigh Hunt
>
> 4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of
> Lords - 1841, London
>
> உ <http://kalachuvadu.com/issue-128/index.asp>

Innamburan Innamburan

unread,
Nov 21, 2011, 8:26:07 AM11/21/11
to mint...@googlegroups.com
டாக்டர் எம்.டி.ஜெயபாலன் அவர்கள் கவனத்துக்கு, என்னுடைய  அக்டோபர் 24 அன்று மின் தமிழில் யானிட்ட இழையை இணைக்கிறேன்.
இன்னம்பூரான்
21 11 2011

அன்றொரு நாள்: அக்டோபர் 24

மருது பாண்டியர்களுக்கு நினைவாஞ்சலி

அரசியல் பிரகடனங்களில் ‘இழிபிறப்பான பரங்கிகளுக்கு பரம எதிரியான மருது பாண்டியனின்’ ஜூன் 1801 விடுதலை அறிக்கை,’...யார் இந்த அறிவிப்பைப் படித்தாலும், அக்கறையுடன் படியுங்கள்...அனைத்து சமூகத்தினருக்கும் - பிராமணர்களாக இருந்தாலும் சரி - அல்லது செட்டியார், வைசியர், சூத்திரர், முஸ்லீம்களாக இருந்தாலும் சரி...மனிதன் ஆயிரமாண்டுகளுக்கு வாழ்ந்தாலும் அவன் ஒரு நாள் மரணம் அடைவது திண்ணம். அதைப்போன்றே அவனது புகழும், சூரியனும், சந்திரனும் இருக்கும் வரை நிலைத்து நிற்பது நிச்சியம்...’ என்று முழங்கியது. அவரது சொல்லுக்கிணங்க, இந்திய மக்கள் யாவரும் நமது முன்னோர்கள் அருந்தவம் செய்து பெற்ற சுதந்திரத்தை, கண்ணியம் பிறழாமல், இராப்பகல் விழித்திருந்து, (‘Vigilance is the price of Liberty-J.S.Mill) நாணயம் என்ற வேலியமைத்து, போற்றி பாதுகாக்கவேண்டும். இழிபிறப்பான இந்திய அதர்மகர்த்தாக்களுக்கு பரம எதிரியாக இயங்கவேண்டும். இந்த படி ‘முழங்கால் முறிச்சான்’. ஏறினால், தேவதரிசனம். இல்லையெனில், நாம் அடி சறுக்கிய இந்திய யானை.

இந்தியாவை பறித்து ஆண்ட ஆங்கிலேய கலோனிய அரசு, அக்டோபர் 24, 1801 அன்று மருது சகோதரர்களையும், நூற்றுக்கணக்கான உற்றார், உறவினர்களையும் தூக்கிலிட்டது. இது ஒரு கரி நாள். வெள்ளையனை விடுங்கள். ஏகப்பட்ட தமிழர்களின் வஞ்சமும், வஞ்சகமும் ஆடிய கூளியாட்டத்தை சொல்லி மாளாது. மருது பாண்டியர்களில் பெரியவர் அரசியல் சம்பந்தமில்லாத வேட்டைக்காரர். சிறியவர் ஆளுமை செலுத்தியவர். இருவரும் கலோனிய அரசுடன் நட்பு பாராட்டியவர்கள் தான். வீரபாண்டிய கட்டபொம்மன் தான் அவர்களின் அணுகுமுறையை மாற்றியவர் என்று உசாத்துணை நூலில் படித்தேன். ஆனால், அந்த கட்டுரையை பலமுறை படித்தாலும், தொடர்புகளும், தேதிகளும், உசாத்துணைகளும் இல்லாததாலும், விளக்கப்படாமல் விடுபட்ட செய்திகள் புதிராக அமைந்து விட்டதாலும், மேலும் தேடவேண்டி இருந்தது. வழக்கம் போல ‘அரைத்த மாவு’, இணைய தளத்தில். இந்த கட்டுரையில் ஆங்கில தளபதி வெல்ஷுவின் நாட்குறிப்பு கூறப்பட்டதால், வேறு வகையில் தேடி கண்டுபிடித்த கட்டுரையை கீழே, என் சங்கேதங்களுடன் (சிவப்பு மசி) இட்டதின் காரணம், நாம் மறுபக்கத்தையும் சீர்தூக்கி பார்ப்பதை வரவேற்கவேண்டும், என்பதே. எல்லாரையும் அதை படிக்கச்சொல்லி வேண்டுகிறேன். நான் கேட்டுக்கொண்டால், எழுதத்தொடங்கும் நீங்கள் படிக்கமாட்டீர்களா? என்ன?

கட்டுரை நீண்டுவிட்டது, வரலாற்றின் தராதரத்தை நிலை நாட்ட. அது சம்பந்தமான ஆங்கில நூல்களையும் உசாத்துணையில் குறித்திருக்கிறேன். முழு நூல்களையும் படிக்க இயலும், இணைய தளத்தில். இங்கு, ஆங்கிலேய கலோனிய ஆட்சி/ அதன் நிறை குறைகள் பற்றி நிறைய ஆய்வு நூல்கள் கிடைக்கின்றன. பெரும்பாலாக, அவற்றில் இருக்கும் வரலாற்று உண்மை போற்றும் பண்பை, நான் தமிழகத்தில் கண்டது மிகக்குறைவு. அதிகபக்ஷம், உண்மைகளுக்கு நாட்டுப்பாடல்கள் உதவுகின்றன.

என் தரப்பிலிருந்து ஒரு விளக்கம். இந்த தொடருக்கு ஆதரவு இருக்கிறது, தனி மடல்கள் வழியாகவும். எனக்கும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக ஆய்வு வரவுகள், என்னுடைய படிக்கும் ஆர்வத்தை கூட்டியவண்ணம். என் இயலாமையை (முக்யமாக, கை வலி) புரிந்து கொண்டு ஆதரவும் கிட்டியதும் பெரிது. கூடியசீக்கிரம் எழுதுவதற்கு பதிலாக, ஆடியோ/வீடியோ பாதையில் செல்லவேண்டும் போல இருக்கிறது. நான் மக்கிண்டோஷ் ஆசாமி. ஐ-சேட், ஸ்கைப், ஜி டாக், வசதிகள் உள்ளன. எப்படி என்று தான் தெரியவில்லை. சொல்லிக்கொடுங்களேன். 

இன்னம்பூரான்

24 10 2011

உசாத்துணை: 

http://www.kalachuvadu.com/issue-128/page52.asp (காப்புரிமை & நன்றி: காலச்சுவடு)

~ Military reminiscences By James Welsh: Retrieved from http://books.google.co.in/books?id=8UjRAAAAMAAJ&printsec=frontcover&dq=Military+Reminiscences+-+James+Welsh&hl=en&ei=YJgBTugohf69A43AsZAO&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCsQ6AEwAA#v=onepage&q&f=false

Mahradū, an Indian story, with some observations on the present state of the ... By J. Gourla http://books.google.co.in/books?id=8UjRAAAAMAAJ&printsec=frontcover&dq=Military+Reminiscences+-+James+Welsh&hl=en&ei=YJgBTugohf69A43AsZAO&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCsQ6AEwAA#v=onepage&q&f=false

மருது சகோதரர்கள்: இரா,குப்புசாமி: விடுதலை வேள்வியில் தமிழகம்; (2000) தொகுப்பாசிரியர்: த.ஸ்டாலின் குணசேகரன். 

*

http://www.kalachuvadu.com/issue-128/page52.asp

மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்

பி.ஏ. கிருஷ்ணன்

“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.

என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ”

இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது.

pastedGraphic.pdf

புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the Nineteenth Century – With Some Observations on the Present State of the British Empire and Chiefly of its Finance.. லண்டனில் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் விலை நான்கு ஷில்லிங்குகள்.

புத்தகம் எழுதப்பட்டிருக்கும் விதம் படிப்பவர்களையும் படிக்கத் தான் வேண்டுமா என்று யோசிக்கவைக்கும். நமது கழக எழுத்தாளர்களையே வியக்கவைக்கும் அளவிற்கு, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பக்கத்திற்கு மேல். முதற்பகுதி மருது பாண்டியரைப் பற்றி. பின்பகுதி பிரித்தானியப் பேரரசின் வரவு செலவு விவகாரங்களைப் பற்றி. உண்மையைச் சொல்ல வேண்டும், இதுவரை சொல்லாததைச் சொல்ல வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வம் புத்தகத்தின் முதற்பகுதியில் வெளிப்படுகிறது. அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கும் உண்மை. இதுவரை வெளிவராத உண்மை. ஒரு அழித்தொழிப்பைப் பற்றிய உண்மை.

2

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைப் பற்றிப் பேசும் அனைவரும் மருது சகோதரர்களை வென்றது பற்றியும் அவர்கள் தூக்கிலிடப்பட்டது பற்றியும் குறிப்பிடத் தவறுவதில்லை. கர்னல் வெல்ஷ் தனது “இராணுவ நினைவுகள்” நூலில் மருது சகோதரர்களுடன் நடந்த போரைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்ததற்குக் காரணம் இருந்தது. ஆனால் மருது போர் புரிந்ததற்குக் காரணம் ஏதும் இல்லைஎன்று சொல்லும் அவர், மருதுவின் வீரர்கள் பாஞ்சாலங்குறிச்சி வீரர்களைப் போலப் போர் புரியவில்லை என்கிறார்.

Indeed twenty thousand Panjalumcoorcheers would have been invincible in his country.

“இருபதாயிரம் பாஞ்சாலங் குறிச்சிக்காரர்கள் இவரது நாட்டில் இருந்திருந்தால், அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருந்திருப்பார்கள்.”

தனக்கும் மருது சகோதரர்களுக்கும் உள்ள தோழமையைப் பற்றி வெல்ஷ் இவ்வாறு கூறுகிறார்.

“(இருவரில்) மூத்தவரின் பெயர் வெள்ளை மருது. இவருக்கும் அரசாளுவதற்கும் தொடர்பே கிடையாது. இவர் பெரிய வேட்டைக்காரர். வாழ்வு முழுவதையும் சுற்றித் திரிந்தே கழித்தவர். ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட இவர் ஆர்க்காட்டு ரூபாயைத் தனது விரல்களால் வளைக்கக்கூடியவர். ஐரோப்பியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். புலி வேட்டையில் முதலில் நின்று புலியைக் கொல்வது இவர்தான். இவரது தம்பி சின்ன மருது சிறுவயதிலிருந்து அரசாண்டவர். அவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் அவரது மக்கள். அவரது அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யாரும் உள்ளே செல்லலாம், வெளியே வரலாம்.”

தனக்கு வேல் பிடிக்கவும் களரிக் கம்பு வீசவும் கற்றுக்கொடுத்தது சின்ன மருதுதான் என்று கூறும் வெல்ஷ், ஒரு மிருகத்தைப் போல அவர் வேட்டையாடப்பட்டதையும்ொடையில் காயப்பட்டு, காலொடிந்து சிறைப்பட்டதையும் சாதாரணக் குற்றவாளியைப் போலத் தூக்கிலிடப்பட்டதையும் மனவருத்தத்தோடு கூறுகிறார். வெல்ஷின் கூற்றுப்படி, சின்ன மருதுவின் கடைசி மகனைத் தவிர அவரது குடும்பத்தவர் அனைவரும் வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டனர். கடைசி மகன் துரைசாமிக்கு அப்போது வயது பதினைந்து. பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்.

“தூத்துக்குடியில் இருந்த இராணுவ அணிக்கு நான் தலைமை தாங்க அனுப்பப்பட்டேன். கலகத்தில் ஈடுபட்டதால் நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள். அங்குதான் எனக்கு என் பழைய நண்பர் சின்ன மருதுவின் மகன் துரைசாமியின் விலங்குகளைத் தளர்த்தும் வாய்ப்பு - எனது நெஞ்சை உருகவைக்கும் வாய்ப்பு - கிடைத்தது. அவரது காவல் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், என்னால் அவரைத் தப்பவைக்க முடியவில்லை.”

உரிய மரியாதையுடன் அவரை நடத்த ஆணையிட்ட வெல்ஷ், பதினேழு வருடங்கள் கழித்து அவரைத் திரும்பப் பினாங்கில் மிகவும் தாழ்ந்த நிலையில் சந்தித்ததையும் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்.

மருதுவின் குடும்பத்தினர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறும் வெல்ஷ் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிடவில்லை.

3

ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசைக் குற்றஞ்சாட்டும் கோர்லே இவ்வாறு கூறுகிறார்;

“இது (இந்த அரசு) திறமையின் சாயலைக்கூட வெறுப்பது; ஏனென்றால் திறமை ஊழலின் எதிரி என்று அதற்குத் தெரியும். இந்த அரசு தாங்கிப் பிடிப்பது அதிகாரத்தை - வரைமுறையற்ற, கீழ்த்தரமான அதிகாரத்தை -ஏனென்றால் அதிகாரத்தால் மட்டுமே தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்று அதற்குத் தெரியும்.”

ோர்லே தனது புத்தகத்தில் மருதுவின் புகழ்பெற்ற திருவரங்கம் அறிக்கையை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார். இந்த அறிக்கையைப் பற்றி நான் எனது ‘புலிநகக் கொன்றை’யில் குறிப்பிட்டிருக்கிறேன். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக்கிறது. இந்த அறிக்கையைக் கி பி முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலாவின் தலைமையில் நிகழ்ந்த ரோமதானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்ககஸ் (Calgacus/Galgacus) என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் கோர்லே ஒப்பிடுகிறார்.

pastedGraphic_1.pdf

“மனித இயல்பு எங்கேயும் ஒன்றுதான். எங்கெங்கெல்லாம் இறைவனால் தன்மானம் சிறிதளவாவது அளிக்கப்பட்டிருக்கிறதோ அங்குள்ளவர்களின் உணர்வுகள் ஒன்றாக இருக்கும் - அவை காலங்களையும் எல்லைகளையும் கடந்தவை. மருதுவின் அறிக்கையின் நோக்கம் அவரை நசுக்குபவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கூலிப்படைகளாகவும் உண்மையான வீரர்களின் அடிப்படைத் தன்மைகளான பரந்த மனமும் உயர்ந்த உள்ளமும் அற்றவர்களாகவும் சித்தரிப்பதுதான். கால்ககஸின் நோக்கமும் அதுவே.”

மருதுவின் அறிக்கை ஆங்கிலேயர்மீது அவர்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் முறைமீது மக்களின் ஆழ்மனங்களில் இருப்பதை வெளிப்படையாகக் கூறுகிறது என்று குறிப்பிடும் ஆசிரியர், இந்த அறிக்கை ஆங்கிலேயரின் மிகக் கீழ்த்தரமான பழிவாங்கும் எண்ணத்தை உசுப்பிவிட்டது என்கிறார். அவர் எழுதியதை ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

Instantly, on receipt of this paper, sedition! Rebellion! was the cry; and the willing mandate was speedily prepared, which consigned the unhappy Mahradu and every male branch of his family to dishonourable grave.

ஆசிரியரின் கூற்றுப்படி எல்லா ஆண்களும் கல்லறைக்குச் சென்றனர் - சிறுவர்களும்கூட.

4

கோர்லே கூறுகிறார்:

“பாளையக்காரர்மீது போர் அறிவிக்கப்பட்டது. அவரது பாளையத்திற்குத் தீவைத்து அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவரையும் அவரது குடும்பத்தில் இருந்த ஆண் மக்கள் அனைவரையும் கைதுசெய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. பிடிபட்ட அனைவரையும் ராணுவக் குழு ஒன்றின் மேற் பார்வையில் விசாரணை ஏதும் இன்றித் தூக்கிலிட ஆணை தரப்பட்டது, நான் கூறுவது வாசகர்களுக்குச் சந்தேகத்தைத் தரலாம். ஆனால் இந்த ஆணைகள் சிறிதுகூட மாற்றமின்றி, காலதாமதமின்றி நிறைவேற்றப்பட்டன.”

மருதுவும் அவரைச் சார்ந்தவர்களும் ஓர் அங்குலம் பரப்பளவைக்கூட விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டனர்.

1801ஆம் ஆண்டு மத்தியில் விதியால் வெல்லப்பட்ட மருதுவும் அவரது குடும்பத்தினரும் சிறைபிடிக்கப்பட்டனர். இரண்டு அல்லது மூன்று பேர்களாக இராணுவ மன்றத்தின்முன் கொணரப்பட்டு உடனே தூக்கிலிடப்பட்டனர். இந்தத் தண்டனையை நிறைவேற்றிய இராணுவக் கேப்டன் தனது நிலைமையை நன்றாக உணர்ந்திருந்தார். தான் செய்வது இதுதான் என்று எழுத்து மூலம் மேலிடத்திற்குத் தெரிவித்து எழுத்து மூலம் அனுமதி பெற்ற பிறகே அவர் தனது கடமையைச் செய்தார் என்று கோர்லே சொல்கிறார்.

“எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவனுடன், அவனுடைய வயதான அண்ணனும் அழைத்துவரப்பட்டார். “Dummy” என்று அழைக்கப்பட்ட அவர் பிறவியிலேயே ஊமை. (ஆசிரியர் ஊமைத்துரையைக் குறிப்பிடுகிறார். ஊமைத்துரை மருதுவின் உறவினர் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை).* இவர்களுடன் மருதுவின் மகன்களும் பேரன்களும் - பத்துப் பன்னிரெண்டு வயதுச் சிறுவர்கள் - தூக்கிலிடப்பட்டனர்.

மருது ராணுவ மன்றத்திடம் தனக்குத் தயை ஏதும் காட்ட வேண்டாம் என்று சொன்னார். ‘நான் என் நாட்டைக் காப்பதற்காகச் சண்டையிட்டுத் தோற்கடிக்கப்பட்டேன். என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். நான் அது பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தச் சிறுவர்கள்? இவர்கள் என்ன தவறுசெய்தனர்? இவர்கள் உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்களா? இவர்களைப் பாருங்கள், இவர்களால் ஆயுதம் எடுக்க முடியுமா?’

மருதுவின் இந்தக் கோரிக்கை, மூழ்கும் மாலுமி கடலிடம் முறையிட்டதைப் போலத்தான்!”

எனக்கு “கேட்டனையாயின் வேட்டது செய்ம்மே” என்று முடியும் புறநானூற்று வரிகள் நினைவிற்குவருகின்றன. கோவூர்க்கிழார் மலையமான் மக்களை யானை இடறுவதிலிருந்து காப்பதற்காகப் பாடிய பாடலின் வரிகள். ஆங்கிலேயர்கள் கிள்ளிவளவன் அல்லர். வேட்டதையே செய்தனர்.

கோர்லே கூறுகிறார்:

நான் இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இவை ஆயிரக்கணக்கான கம்பெனி துருப்புகளின் முன்னிலையில் நிகழ்ந்தவை. அரசரின் 74, 77, 94 ரெஜிமெண்டுகளின் முன்னால் நிகழ்ந்தவை. நான் இந்த நிகழ்வுகளை உங்கள் முன் கொண்டுவந்ததற்காக எந்தப் பாராட்டையும் கேட்கவில்லை. நீதியின் துணைவராக இருக்கும் - இருந்த - இந்த நாட்டின் கைகளில் இவற்றை ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை நான் நிறைவேற்றிவிட்டேன்.”

5

இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

இந்த அழித்தொழிப்பு நிகழ்ந்ததற்கு வேறு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அறிந்த அளவில் இதைப் பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டதில்லை என்று எண்ணுகிறேன். நான் அறிந்தது அதிகம் இல்லை. நான் வரலாற்று வல்லுநன் அல்ல.

இவரது கூற்று வெல்ஷ் எழுதியதற்கு மாறாக இருக்கிறது. மருது குடும்பத்தினர் அனைவரையும் அழித்தொழிக்க முடிவு எடுத்திருந்தால், துரைசாமி மட்டும் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? ஒருவேளை அவர் யார் என்பது அடையாளம் கண்டுகொள்ளப்படாததால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். வெல்ஷ்கூட மேற்கூறியபடி துரைசாமியைத் தூத்துக்குடியில் மற்ற கைதிகளுக்கு மத்தியில் தான் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார். அவர் இளவரசர் என்பதே மற்றவர்களுக்குத் தெரியவில்லை.

கோர்லேயின் புத்தகத்திலேயே ஒரு வரி இருக்கிறது. “Everything again favours the French Emperor”. 1813ஆம் ஆண்டில் நெப்போலியன் ஐரோப்பா முழுவதையும் ஆண்டுகொண்டிருந்தார். ஆங்கில மக்களின் பார்வை முழுவதும் ஐரோப்பா மீதிருந்தது. நெப்போலியனுக்கு எதிராக அமைத்த கூட்டணி 1813ஆம் ஆண்டு ட்ரெஸ்டனில் நடந்த போரில் படுதோல்வி அடைந்தது. கூட்டணி 40,000 பேரை இழந்தது. 1805ஆம் ஆண்டிலிருந்து 1815 வரை நடந்த போர்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலைமையில் பத்து, பதினைந்து சிவகங்கைச் சீமைச் சிறுவர்களைப் பற்றி நினைக்க ஆங்கில அரசிற்கோ வாசகர்களுக்கோ நேரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனாலும் இந்தப் புத்தகத்திற்கு ஒரு மதிப்புரை வந்தது. லே ஹண்ட் (Leigh Hunt) என்னும் மிகப் புகழ் பெற்ற கட்டுரையாளர் இந்தப் புத்தகத்திற்குத் தன்னுடைய The Examiner என்னும் பத்திரிகையில் மதிப்புரை எழுதினார். ஹண்ட் தன்மானம் மிக்க பத்திரிகையாளர். கீட்ஸ், ஷெல்லி போன்ற கவிஞர்களின் நண்பர். மன்னர் மூன்றாம் ஜார்ஜின் மகன் (பின்னால் நான்காம் ஜார்ஜாகப் பதவி ஏற்றவர்) பற்றி எழுதிய கட்டுரை ஒன்றிற்காக (1813இல் எழுதிய கட்டுரை!) இரண்டு வருடம் சிறை சென்றவர்.

இந்த மதிப்புரையில் (மதிப்புரையின் சில முக்கியமான வரிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன) அவர் கூறுவது இது: For if the story is true -which we cannot but doubt until better evidence be adduced -it is one of the most disgraceful and diabolical proceedings that have occurred in the present age.

இது உண்மைக் கதையாக இருந்தால் - உண்மையா என்பது தக்க சான்றுகள் வரும்வரை சந்தேகத்திற்கு உரியது - இது இக்காலத்தின் நடந்த மிக அவமானகரமான, பயங்கரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

6

pastedGraphic_2.pdf

ோர்லேயின் புத்தகத்தில் தகவற் பிழைகள் பல இருக்கின்றன. ஆனால் அதனால் மட்டும் அவர் கூறுவதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. மேலும் கேட்டதையே புத்தகமாக எழுதுவதாக அவரே குறிப்பிடுகிறார். அவருக்கு இந்தப் புத்தகத்தால் ஆதாயம் ஏதும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாகத் தன்னுடைய பணத்தைச் செலவழித்துப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார். எனவே அவருக்குப் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நீதி கிடைக்க வேண்டும் என்ற உந்துதலால் எழுதப்பட்ட புத்தகம் அது என்பது அதைப் படித்தாலே தெரியும்

அழித்தொழிப்பு நடந்திருக்கக்கூடும் என்பதற்கு மறைமுகச் சான்று ஒன்று இருக்கிறது.

1841ஆம் ஆண்டு பிரித்தானிய பார்லிமெண்டின் மேலவை (The House of Lords) பிரிட்டிஷ் காலனிகளில் நடைமுறையில் இருக்கும் (இருந்த) அடிமை முறையைப் பற்றி ஓர் அறிக்கை கொண்டுவந்தது. அந்த அறிக்கையில் 1806ஆம் ஆண்டுSouthern Court of Appeal திருச்சிராப் பள்ளி கொடுத்த இரண்டு தீர்ப்புகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது

சிவகங்கை ஜமீன்தார் இரண்டு விதவைகளுக்கு எதிராகத் தொடுத்த வழக்குகளை விசாரித்து முறையீட்டு மன்றம் வழங்கிய தீர்ப்புகள் அவை. சிவகங்கை ஜமீன்தார் உடையத் தேவர் என்று எண்ணுகிறேன். இவர் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு மருது சகோதரர்களுக்கு எதிராக இயங்கியதைப் பற்றி வெல்ஷ் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஜமீன்தார் பட்டம் விசுவாசத்திற்கு அளிக்கப்பட்ட பரிசு என்பதையும் அவர் சொல்கிறார். அவரது பட்ட மளிப்பு விழாவில், படைத் தளபதி கர்னல் அக்னியூவின் கால்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்ததையும் வெல்ஷ் குறிப்பிடத் தவறவில்லை.

இந்த விதவைகள் யார்?

முதல் விதவையின் பெயர் மீனம்மாள், சிவஞானம் என்பவரின் மனைவி; மருது சேர்வைக்காரரின் மருமகள். இரண்டாம் விதவையின் பெயர் வீராயி ஆத்தாள்.மருது சேர்வைக்காரரின் மனைவி. இவர்கள் இருவருக்கும் சாதகமாக ஜில்லா கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தொடங்கப்பட்ட வழக்குகள் இவை.

1801இல் மீனம்மாள் தன்னுடைய நகைகளைத் தன் வேலைக்காரர் அழகு என்பவரிடம் கொடுத்துவைத்திருந்தார். அவரிடமிருந்து நகைகளைச் சிவகங்கை ஜமீன்தார் பறித்துக்கொண்டார். வீராயி ஆத்தாளின் கதை வேறு. அவர் ஒளித்துவைத்திருந்த நகைகளை ஜமீன்தார் கண்டுபிடித்துத் தனதாக்கிக்கொண்டார். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,600 நட்சத்திரப் பகோடாக்கள் (1 நட்சத்திரப் பகோடா = சுமார் 4 கம்பெனி ரூபாய்கள் - இன்றைய விலையில் நகைகளின் பெருமானம் பல கோடி ரூபாய்கள் இருக்கும்). ஜமீன்தார் இந்த நகைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஜில்லா நீதிமன்றத்தில் தீர்ப்பாகியிருந்தது. இந்தத் தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்து, முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்புகளின் சுருக்கம் இது:

அரசு அறிக்கை 6 ஜூன் 1801இன்படி மருது சேர்வைக்காரரும் அவரது குடும்பமும் நெல்குடி (சிவகங்கை ஜமீன்தார்) வம்சத்திற்கு அடிமைகள். அடிமைக்குச் சொத்து கிடையாது. அப்படி அடிமை ஏதாவது சொத்துச் சேர்க்க நேர்ந்தால் அந்தச் சொத்து அடிமையின் சொந்தக்காரரைச் சென்றடையும். மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகளாகப் பிறக்கவில்லை. இருப்பினும் “ஸ்மிருதி சந்திரிகை”யின்படி அடிமைகளின் மனைவிகளும் அடிமைகளாகக் கருதப்படுவர். (1864க்கு முன்னால் நீதிமன்றங்களில் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்து தர்ம சாத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பதை நீதிபதிகளுக்கு அவர்கள் தான் அறிவுறுத்தினர்.) அதனால் மீனம்மாளும் வீராயி ஆத்தாளும் அடிமைகள். அவர்களுக்கு நகைகள் போன்ற சொத்துகை வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. அவர்களது நகைகள் சிவகங்கை ஜமீன்தாருக்குச் சொந்தம்.

இந்தத் தீர்ப்புகள் பல கோணங்களிலிருந்து ஆராயப்பட வேண்டியவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஒரு சான்று கிடைக்கிறது.இரண்டு விதவைகளுக்கும் ஆண் வாரிசுகள் ஏதும் இல்லை என்பது தீர்ப்பிலிருந்து தெரிகிறது. ஆண் வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களைப் பற்றிப் பேசப்பட்டிருக்கும். மருதுவின் குலம் அழித்தொழிக்கப்பட்டது என்பதற்கு இந்தச் சான்று முக்கியமான ஒன்று என நான் எண்ணுகிறேன்.

தேடினால் பல சான்றுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மருதுவிற்கு நீதி கேட்க இருநூறு வருடங்களுக்கு முன்னால் ஓர் ஆங்கிலேயர் முன்வந்திருக்கிறார். தமிழர்கள் அனைவரும் அவருக்கு நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிற்குறிப்பு: இந்தப் புத்தகங்களை எனக்குத் தேடித் தந்தது கூகிள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகமே நமது ஒரு சொடுக்கிற்குக் காத்திருக்கிறது.

மற்றொரு குறிப்பு: Gourlay என்னும் பெயர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பெயர். எனவே அவரை ஆங்கிலேயர் எனச் சொல்வதைவிட ஸ்காட்லாந்தியர் எனச் சொல்வதே சரியாக இருக்கும். இவர்களுக்கும் இங்கிலாந்தியருக்கும் எப்போதுமே உரசல்கள் இருந்திருக்கின்றன. Gourlay என்னும் பெயரை காவ்ர்லே என உச்சரிக்க வேண்டும் எனச் சிலர் சொல்கிறார்கள். நமக்கு கோர்லே என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆசிரியர் கோர்லே பற்றி விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. Biographical Dictionary of Living Authors of Great Britain என்னும் புத்தகம் - 1816இல் வந்தது - இவரது பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

* பெரிய மருதுவைப் பற்றியும் கோர்லே குறிப்பிடவில்லை,

கட்டுரையை எழுத உதவிய நூற்கள்:

1. Mahradu – An Indian Story of the Beginning of the Nineteenth Century - 1813 London

  1. Military Reminiscences - James Welsh 1830 London

3. The Examiner 1813 Collection – Leigh Hunt

4. The Sessional Papers on Slavery Printed by the Order of the House of Lords - 1841, London

2011/11/21 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 21, 2011, 3:18:14 PM11/21/11
to mint...@googlegroups.com, mdjch...@yahoo.com

2011/11/21 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>

Memoirs of James என்பவரின் நூல் கானிமரா நூலகத்தில் ஒரே ஒரு பிரதி
இருந்தது. ஆனால் அந் நூலை அடிப்படையாகக்கொண்டு விரிவான வரலாற்று நூலை
மதுரைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் ராஜையன் அவர்கள்
எழுதிய நூல் South Indian Rebellion of 1800-1801. அதில் குறிப்பிடப்பட்ட
மருதுவின் மகன் பெயர், என் நினைவு சரி என்றால் துளசிங்கம். பினாங்கிற்கு

சிறு குறிப்பு: திரு.இன்னம்புரானின் பதிவில் பினாங்குக்கு நாடுகடத்தப்பட்ட மகனின் பெயர் துரைசிங்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து சிலரை பினாங்கு தீவிற்கு நாடு கடத்தியுள்ளனர் என்ற செய்தியை இவ்வகை வரலாற்றுச் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. பினாங்கில் வெறும் சிறைச்சாலைகளில் அடைத்து வைப்பது மட்டுமல்லாமல் அங்கு சாலைகள் அமைக்கவும் வேறு பல வேலைகளிலும் இக்கைதிகளை ஆங்கிலேயர்கள் ஈடுபடுத்தியுள்ளனர்.

...
After 1789, the government of India began sending convicts sentenced to more than seven years imprisonment to Penang. The first government convicts arrived in 1790, and proved to be a source of cheap labour (Sandhu, 1968; Turnbull, 1972). Convicts were trained in useful trades in order to make them more productive and to give them a means of earning a living after they were released (Turnbull, 1972: 49,). Unlike Chinese convicts transported from Hong Kong, who caused trouble and it was feared would disappear into the general community with the help of secret societies, Indian convicts were allowed a great degree of freedom. They worked on roads and buildings often without guards, and as domestic servants or in government departments (Turnbull, 1972: 48).

இவர்களில் சிலர் திருமணமாகி அங்கேயே வாழ்க்கையைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் அவர்கள் சந்ததியினர் இன்னமும் பினாங்கிலோ மலேசியாவின் வேறு இடங்களிலோ இருக்கலாம் என நினைக்கிறேன்.

சுபா

Innamburan Innamburan

unread,
Nov 21, 2011, 4:14:41 PM11/21/11
to mint...@googlegroups.com
நன்றி, ஸுபாஷிணி,
துரைசிங்கம் தான் சரியான பெயர். நீங்கள் கொடுத்த செய்திகள் முக்கியமானவை. தேடினால் சில முக்கிய தகவல்கள் கிடைக்கலாம். ஒரு முக்கியமான சமாச்சாரம். மருது சகோதரகள் என்று அவர்கள் இருவரையும் ஒரே தராசில் வைத்துப் பேசுவது வரலாற்றுக்கு முரண். பெரியவர் அரசியலில் நாட்டம் கொள்ளவில்லை. அவர் ஒரு வேட்டை மன்னர். நிகரற்ற பலசாலி. இளகிய மனது. தம்பி, மக்கள், ஆங்கிலேயர் எல்லாரும் அவருக்கு மிக்க மரியாதை காட்டினார்கள். அவரை தூக்கிலிட்டது அட்டூழியம். முழு பின்னணி வெளி வரவில்லை. சின்னவர் தான் பிரகடனம் செய்தவர். அரசியல் ஞானி. அவருக்கு பிறகு மக்களுக்காக வாழ்ந்த ராஜரிஷி இந்தியாவில் ஜனிக்கவில்ல்லை.
இன்னம்பூரான்
21 11 2011

2011/11/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Dr M.D.Jayabalan

unread,
Nov 22, 2011, 12:32:06 AM11/22/11
to மின்தமிழ்
திருத்தங்களுக்குத் திருத்தங்கள் தந்தமைக்கு நன்றி. இணைப்பினைப்
படித்தேன். நன்றி.

On Nov 21, 6:26 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

> ~http://www.kalachuvadu.com/issue-128/page52.asp(காப்புரிமை & நன்றி:

> காலச்சுவடு)
>

> ~ Military reminiscences By James Welsh: Retrieved fromhttp://books.google.co.in/books?id=8UjRAAAAMAAJ&printsec=frontcover&d...

>
> ~ Mahradū, an Indian story, with some observations on the present state of

> the ... By J. Gourlahttp://books.google.co.in/books?id=8UjRAAAAMAAJ&printsec=frontcover&d...

>
> ~ மருது சகோதரர்கள்: இரா,குப்புசாமி: விடுதலை வேள்வியில் தமிழகம்; (2000)
> தொகுப்பாசிரியர்: த.ஸ்டாலின் குணசேகரன்.
>
> *
>
> http://www.kalachuvadu.com/issue-128/page52.asp
>
> மருது பாண்டியர் மறைக்கப்பட்ட உண்மைகள்
>

> *பி.ஏ. கிருஷ்ணன்*

>
> “நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று
> ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர்
> நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்.
>

> என்னிடம் அவர் ...
>
> read more »

கி.காளைராசன்

unread,
Dec 25, 2011, 7:06:38 AM12/25/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
வணக்கம்.

அம்மையார் சுபா அவர்களுக்கு நன்றி
காளையார்கோயில் தொடர்பாக என்னிடம் உள்ள தகவல்கள் அனைத்தையும் சுருக்கி விரைவில் ஒரு கட்டுரையாக எழுதித் தருகிறேன். 

இன்று தனியிழையில் காளையார் கோயில் பற்றி நான் அறிந்த தகவல்களைத் தொகுத்து “கானப்பேர் எயில்“ என்ற தலைப்பில் எழுதத் துவங்கியுள்ளேன்.  
Reply all
Reply to author
Forward
0 new messages