இன்று பிறந்த நாள் காணும் வல்லமை நிர்வாக ஆசிரியர் பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்கள் நீடூழி வாழ்க!

தமிழக அரசின் அம்மா இலக்கிய விருது பெற்றவர், 20க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், கிம் யாங் ஷிக் கவிதைகளைக் கொரிய நாட்டுக் கவிக்குயில் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர், லெஸ்லி டவுனர் எழுதிய கெய்ஷா நூலைத் தமிழில் பெயர்த்தவர், கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம், கொங்கு நாட்டு வரலாறு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தமிழ் கொரியத் தொடர்புகள் குறித்த ஆய்வறிஞர், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளையை நிறுவி நடத்துபவர், வல்லமை மின்னிதழை வழிநடத்தும் ஆதார சக்தி, திறமையாளர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்குவிப்பவர், ஆற்றல் வாய்ந்த பேச்சாளர், ஆளுமை மிகுந்த நிர்வாகி, அயராத உழைப்பாளர் பவளசங்கரி அவர்கள், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க!