லூத்தரன் பாதிரிமார்களின் தமிழ் ஆவணம்,ஓலைகள்- த.ம.அ மின்னாக்கப்பணி

142 views
Skip to first unread message

Suba

unread,
May 26, 2016, 4:43:14 AM5/26/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram

நண்பர்களே,

17ம் நூ தொடங்கி ஜெர்மானிய, பாதிரிமார்கள் தமிழகத்தில் இருந்த காலகட்டத்தில் கைப்பட எழுதிய, சேகரித்த ஓலைகள் டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் ரோயல் லைப்ரரியில் உள்ளன. அவற்றில் சிலவற்றை த.ம.அ மின்னாக்கம் செய்து வர நான் மேற்கொண்ட முயற்சிக்கு நூலகத்தினர் அனுமதி அளித்திருப்பதால் இன்று கோப்பன்ஹாகன் பயணிக்கிறேன். 

இந்த முயற்சியில் அரிய ஆவணங்களை த.ம.அ மின்னாக்கம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

வரும் திங்கள் மாலை வரை மின் தமிழ் மடல்களைப் பார்க்க இயலாது.

அன்புடன்
சுபா

Innamburan S.Soundararajan

unread,
May 26, 2016, 10:06:29 AM5/26/16
to mint...@googlegroups.com, Subashini Tremmel

வாழ்த்துக்கள்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pandiyaraja

unread,
May 26, 2016, 11:46:24 AM5/26/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
மிகுந்த மகிழ்ச்சிதரும் செய்தி. அரிய ஆவணங்கள் இதன்மூலம் வெளிவரும் என்று நம்புகிறேன். முயற்சிக்குப் பாராட்டுகள்.
ப.பாண்டியராஜா

தேமொழி

unread,
May 27, 2016, 1:28:20 AM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

டென்மார்க் கோப்பன்ஹாகன் நகரில்... தரையிறங்கி அரச நூலகத்தை நோக்கி சென்ற வேளையில்..

***

தேமொழி

unread,
May 27, 2016, 1:29:54 AM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில்.. அரிய ஆவணங்கள் பகுதியில்.இங்கு பாதுகாக்கப்படும் தமிழ் மருத்துவ ஓலைச்சுவடியுடன்...

***

தேமொழி

unread,
May 27, 2016, 1:32:13 AM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
டென்மார்க் நகரில் உள்ள கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் உள்ள அரிய ஆவணங்கள் பகுதியில் தமிழ் ஆவணங்கள் மிக நன்கு பாதுகாக்கப்படுகின்றன. நேற்று மின்னாக்கம் செய்யும் பணியை தொடங்கினேன். நேற்று 6 சுவடி நூல்களை முடிக்க முடிந்தது. அனைத்தும் ஓலைச்சுவடிகளே. மொத்தம் இதுவரை ஏறக்குறைய 650 பனை ஓலைகளை நேற்று மதியம் மின்னாக்கம் செய்து முடித்துள்ளேன். அதில் ஒரு செய்யுள் நடை மருத்துவ நூல், மாசி பற்றிய விளக்கம், பவுல் என்னும் ஐரோப்பியர் தமிழில் எழுதிய கடிதம், தமிழில் கிறிஸ்துவ சமய பாடம், விக்கிரமாதித்தன் கதை என சில. மிக சுவாரசியமான தகவல்களை மின்னாக்கம் செய்யும் போது கவனித்தேன். பிறகு விரிவாக..! — in Copenhagen, Denmark.

தேமொழி

unread,
May 27, 2016, 3:07:41 AM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் இருக்கும் தமிழ் ஓலைகள் மிகத் தரமான அளவில் பாதுகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நூலும் தூய்மையான வெள்ளைத்துணியால் சுற்றி வைக்கப்பட்டு காட்டலோக் செய்யப்பட்டு தரமான ஒரு பெட்டிக்குள் ஒவ்வொன்றும் தனித்தனியே வைக்கப்பட்டுள்ளன. இதனைப் பார்த்தபோது மனம் பெருமிததால் மகிழ்ந்தேன். அதே வேளை தமிழகத்தில் ஓலைச்சுவடிகள் இருக்கும் நிலை என் கண் முன்னே காட்சியாக விரிந்தது.

நான் குறை கூறுவதாக நண்பர்கள் நினைக்க வேண்டாம். அரிய ஆவணங்களைப் பாதுகாக்கும் நடைமுறைகளிலும் தொழில்னுட்பங்களிலும் மாற்றம் நிச்சயம் தேவை. அதிக அளவில் தேவை!

Copenhagen, Denmark
CityCopenhagen, Denmark
1,871,197 people checked in here

***

தேமொழி

unread,
May 27, 2016, 3:09:14 AM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

நான் நேற்று மின்னாக்கம் செய்த ஓலைச்சுவடி நூலில் ஒன்று.. லூத்தரன் கிருஸ்துவ சமய பாடம்.. இது உலகில் வேறெங்கும் இல்லாதது. ஒரே ஒரு படிவம் மட்டுமே உள்ளது. அதுவும் இங்கே கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் பாதுகாக்கப்படுவது.

அதன் தனிச்சிறப்பு என்னவென்றால், தமிழைக் கற்றுக் கொண்டு ஜெர்மானிய பாதிரியார் ஒருவர் ஒலைச்சுவடியிலும் எழுதக் கற்றுக் கொண்டு இந்த ஓலைச்சுவடி நூலை உருவாக்கியுள்ளார். ஏறக்குறைய 300 வருடங்களுக்கு முன்.

இதில் சமய விளக்கம் ஒரு பக்கம் தமிழிலும் மறு பக்கம் தெலுங்கிலும் என 2 மொழிகளில் எழுதப்பட்ட ஓலை இது.

வியப்பாக இருக்கின்றது அல்லவா?

***

தேமொழி

unread,
May 27, 2016, 4:10:59 AM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

கோப்பன்ஹாகன் அரச நூலத்தில்..இன்றும் சில அரிய ஆவணங்களை மின்னாக்கம் செய்ய வந்திருக்க்ன்றேன்..

Black pearl...கருப்பு முத்து..இந்த அரச நூலக வளாகத்தின் முன்னும் உள்ளேயும்..

***

Singanenjam Sambandam

unread,
May 27, 2016, 8:29:07 AM5/27/16
to mint...@googlegroups.com
அருமை,,,,,அருமை...

***

--

Pandiyaraja

unread,
May 27, 2016, 8:39:41 AM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
முன்னூறு ஆண்டுகட்கு முன்னர் இருந்த தமிழ் எழுத்துக்களையும், தமிழ் மொழிநடையையும் காண மிக்க ஆவல். அதன் புகைப்படங்கள் கிடைக்குமா?
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
May 27, 2016, 9:00:22 AM5/27/16
to மின்தமிழ், ksuba...@gmail.com

On 26 May 2016 14:13, "Suba" <ksuba...@gmail.com> wrote:

நண்பர்களே,

17ம் நூ தொடங்கி ஜெர்மானிய, பாதிரிமார்கள் தமிழகத்தில் இருந்த காலகட்டத்தில் கைப்பட எழுதிய, சேகரித்த ஓலைகள் டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் ரோயல் லைப்ரரியில் உள்ளன. அவற்றில் சிலவற்றை த.ம.அ மின்னாக்கம் செய்து வர நான் மேற்கொண்ட முயற்சிக்கு நூலகத்தினர் அனுமதி அளித்திருப்பதால் இன்று கோப்பன்ஹாகன் பயணிக்கிறேன். 

இந்த முயற்சியில் அரிய ஆவணங்களை த.ம.அ மின்னாக்கம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

வரும் திங்கள் மாலை வரை மின் தமிழ் மடல்களைப் பார்க்க இயலாது.

அன்புடன்
சுபா

மிக நல்ல முயற்சி. நல்வாழ்த்துகள்.

மலையாளத்தில் ஐரோப்பிய பாதிரியார்கள் எழுதிய ஆவணங்களும், நூல்களும் இணையத்தில் கிடைக்கின்றன.
ஆனால் தமிழில் அவ்வாறில்லை. ஐரோப்பாவின் பல நூலகங்களில் இருக்கும் தமிழ் ஆவணங்கள் பேச்சுத் தமிழ்,
சமய வளர்ச்சி, ... போன்றவற்றின் ஆதாரங்கள்.

நா. கணேசன்

தேமொழி

unread,
May 27, 2016, 10:39:29 AM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

Subashini Thf updated her cover photo.
1 hr

இன்று காலை டானீஷ் ஆர்க்கைவ் அலுவலகத்தில்.

என் கையில் இருப்பது 17ம் நூ. ஆரம்பத்தில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் கையெழுத்திட்ட ஒரு தங்கத்தினால் ஆன பத்திரம். இந்த பத்திரம் டானீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு தமிழகத்தின் கடற்கரை நகரமான தரங்கம்பாடியை ஆண்டு கட்டணம் ரூ3111 க்கு ரகுனாத நாயக்கர் கொடுத்ததைக் காட்டுகின்றது. இதுவே டானீஷ் அரசு வர்த்தகம் தொடங்கவும் அதன் பின்னர் இங்கிலாந்து இந்தியாவில் தன் ஆளுமை ஆரம்பிக்கவும் வழி வகுத்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணம் முழுவ்தும் தங்கத்தால் ஆனது. எந்த ஏனைய உலோகக் கலப்பும் இல்லாதது. இது தமிழில் எழுதப்பட்டுள்ளது. கையெழுத்து இடும் பகுதியில் சில வாசகங்கள் தெலுங்கில் உள்ளன. மன்னரின் கையெழுத்து தெலுங்கில் உள்ளது. 
என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களில் இது ஒன்று என்பதில் ஐயமில்லை.

*****

தேமொழி

unread,
May 27, 2016, 10:57:36 AM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் எனக்கு நேற்று முதல் சில நூலகர்கள் உதவி வருகின்றனர். அலுப்பு கொள்ளாமல் நான் கேட்கும் சுவடி நூல்களை தேடி எடுத்து எனக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். நேற்று மாலையும் இன்று காலையும் இன்முகத்துடன் எனக்கு உதவிய நூலகர்களில் ஒருவர் மாயா அண்டர்சன்.

*******

தேமொழி

unread,
May 27, 2016, 11:02:07 AM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

கோப்பன்ஹாகன் அரச நூலக வளாகத்தின் வெளிப்பகுதி காட்சிகள்..

******

தேமொழி

unread,
May 27, 2016, 4:50:06 PM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

இன்றும் தொடர்ந்து கோப்பன்ஹாகன் அரச நூலகத்திலேயே மின்னாக்கம் செய்துவருகிறேன். எனக்கு வாழ்த்து கூறி இனிய சொற்களை வழங்கும் அனைவருக்கும் என் நன்றி. உங்கள் இனிய சொற்கள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றந. இது மிகப்பெரிய பணி. கடந்த 2 நாட்கள் நீண்ட நேரம் ஏறக்குறைய 7 மணி நேரம் நின்று கொண்டே மின்னாக்கம் செய்து வருகிறேன். இது எனக்கு உடல் அசதியைத்தரும் பணி என்றாலும் இவை முழுமையாக மின்னாக்கம் செய்து முடிக்கப்படும் போது இன்றைக்கு ஏறக்குறைய 300 வருட காலகட்டத்தில் ஐரோப்பிய லூதரன் பாதிரிமார்களின் தமிழ் மொழி தொடர்பான ஈடுபாடுகளைப் பற்றிய தெளிவு தமிழ் வரலாற்று ஆய்வுலகிற்குக் கிடைக்கும். மேலும் பல தொடர் ஆய்வுகளுக்கும் இது வழி வகுக்கும்.

அரசு செய்ய வேண்டிய பணி. !
ஆனால்.....

காத்திருப்பதில் பலனில்லை. தனி மனிதராக எமது தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் இப்பணியை முன்னெடுத்துள்ளேன். உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு உற்சாகமாளிக்கின்றன. நன்றி.

*****

தேமொழி

unread,
May 27, 2016, 4:51:49 PM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

1742ம் ஆண்டு ஜெர்மானிய லூத்தரன் பாதிரியார் எழுதிய புதிய பிரார்த்தனைகள் என்ற தலைப்பிலான ஓலைச்சுவடி இது. இதில் முதல் பக்கத்தில் டானிஷ் அரச முத்திரை கீறப்பட்டுள்ளதைக் காணலாம்.

******

தேமொழி

unread,
May 27, 2016, 4:53:43 PM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் ....என சுவடியில் எழுதி பயிற்சி செய்திருக்கின்றனர் ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்கள். ..இது 18ம் நூற்றாண்டு ஓலைசுவடிக்கட்டு. இதில் முதல் பக்கம்... வேழமுகத்து வினாயகனை தொழ .... எனத் தொடங்குகின்றது.

எவ்வளவு விடா முயற்சியுடனும் ஆர்வத்துடனும் ஜெர்மானிய பாதிரிமார்கள் தமிழகத்தில் தமிழ் கற்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஆனால், இன்று தமிழர்களில் சிலர் தமிழ் பேச தயங்குவதும், படித்தோர் என்றால், ஆங்கிலத்தில் உரையாடினால்தான் தம்மை கற்றோர் என உலகம் நினைக்கும், என செயல்படுவதும் வருத்தம் தரும் நிகழ்வுகளே!

************

தேமொழி

unread,
May 27, 2016, 5:10:03 PM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

இன்றைய மின்னாக்கப்பணி முடிக்க இரவு 8:30 ஆகி விட்டது. இங்கே குறித்த நேரத்தில் பஸ், ரயில் போன்ற பொது வாகனங்கள் வருவதும் நீண்ட நேரம் பணியாற்ற உதவியாக இருக்கின்றது. இப்போது ரயில் பயணத்தில்.

இன்று கணித நூல்கள், தமிழ் பயிற்சி, புராணக்கதைகள், லூதரன் சமய பாடங்கள், தரங்கம்பாடி மன்னர் அச்சுத ரகுனாத நாயக்கர் செய்த தங்கத்தினாலான பத்திரம், மேலும் இரண்டு தங்கத்தினாலான பத்திரங்கள், சில வர்த்தக ஏடுகள், என வெவ்வேறு வகையான 9 சுவடி நூல்களை, அதாவது ஏறக்குறைய 850 ஓலைகள் மின்னாக்கம் செய்து முடித்தேன்.

இவை அனைத்தும் வாசிக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் செய்யப்படுதல் அவசியம். தமிழக பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பும் கல்லூரி, அல்லது பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இத்தகைய பணிகளை இணைந்து செய்ய பல்கலைக்கழக தமிழ்த்துறைகள் உதவினால் இப்பணியைச் சிறப்பாகச் செய்யலாம்.

********

N. Ganesan

unread,
May 27, 2016, 6:29:56 PM5/27/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
உலகநாதன் செய்த உலகநீதி இது. பாலர்பள்ளிகளில் ஆத்திசூடி கற்றபின் அதற்கடுத்த வகுப்புகளில் பயிற்றப்பெற்ற நூல்.

1.ஓதாம லொருநாளும் இருக்க *வேண்டாம் 
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம் 
    வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் 
போகாத இடந்தனிலே போக வேண்டாம் 
    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் 
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் 
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
 
[...]

பாடல் 13
ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
     அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
     உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
     கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப்
      பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே.

நா. கணேசன்

************

தேமொழி

unread,
May 28, 2016, 1:21:16 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

நான் டென்மார்க் கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் மின்னாக்கம் செய்த ஒலைகளை பார்க்க வாய்ப்பு கிடைக்குமா? பகிர்ந்து கொள்வீர்களா என சிலர் கேட்டுள்ளீர்கள். நான் கடந்த 16 வருடங்களாக தமிழ் மரபு அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டூழிய நிறுவனம் வழி செய்வது இது தானே...

ஆக, பொறுத்திருங்கள். படிப்படியாக இவை ஒவ்வொன்றும் உலக மக்கள் யாவரும் இலவசமாக வாசிக்க நான் பொது வெளியில் பகிர்ந்து கொள்வேன்.

மின்னாக்கம் செய்ய எப்படி என் ஓய்வு நாட்களை பயன்படுத்துகின்றேனோ அதே போலத்தான் இவற்றை ப்ராஸஸ் செய்து வலையேற்றவும் நேரம் தேவை.

எமது த.ம.அ வில் தன்னார்வலர்களாக இணைந்து நீங்களும் இப்பணியில் சிறிது சிறிதாக உதவலாம். " உண்மையாக ஆர்வம் உள்ளவர்களும், தொடங்கினால் பாதியில் விட்டுச் செல்லாதவர்களும் மட்டும்" உங்கள் மின்னஞ்சல் முகவரியை என் மெசேஜ் பெட்டியில் அனுப்புங்கள். இந்த பணி முடிந்து திரும்பியதும் தொடர்பு கொள்கிறேன்

தேமொழி

unread,
May 28, 2016, 1:21:52 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

ஐரோப்பிய நாடுகளில் தமிழ் ஆவணங்களும் அரிய பொருட்களும் பாதுகாக்கப்படும் முறையை நோக்கும் போதும் , நூலக அதிகாரிகள் அவற்றை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதையும் கவனிக்கும் போது இவை இங்கேயே பத்திரமாக இருக்கட்டும் என்று என் மனம் நினைப்பதை தவிர்க்க முடியவில்லை....!

தேமொழி

unread,
May 28, 2016, 1:22:55 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

வியாழனும் வெள்ளியும் கோப்பன்ஹாகன் அரச நூலகத்திலும் ஆர்க்கைவிலும் எனது இந்த மின்னாக்கப் பணிக்காக இதுவரை 7 நூலக ஊழியர்களுடன் இணைந்து அவர்கள் உதவியுடன் இப்பணியை செய்து வருகிறேன். இதுவரை ஒருவர் கூட என் மேல் சலித்துக் கொள்ளவில்லை. மாறாக எனக்கு 4 மேசைகளை ஒதுக்கி கேட்கும் ஒவ்வொரு பொருளையும் இன்முகத்துடனேயே தருகின்றனர். முதல் நாள் என்னை எதிர்கொண்டு வரவேற்ற நூலக உயர் பொறுப்பாளர் முதலில் சற்று கராராக இருந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் மிக அன்பாகப் பழக ஆரம்பித்தார். டாக்டர் ஈவா என்பது அவர் பெயர்.

நேற்று என்னிடம் வந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த போது... நாங்கள் இந்த ஆவணங்களை வைத்திருக்கும் முறை பரவாயில்லையா என தயக்கத்துடன் கேட்ட போது ஆச்சரியப்பட்டேன், அவர் பணிவை நினைத்து. "மிக அருமையாகப் பாதுகாக்கின்றீர்கள். அதற்கு என் தனிப்பட்ட மரியாதையை உங்கள் நூலகத்திற்குச் சமர்ப்பிக்கின்றேன்" என்று கூறிய போது மிக மகிழ்ந்தார்.

இந்த பண்பை பாராட்டாமல் இருக்கலாமா?

தேமொழி

unread,
May 28, 2016, 1:24:15 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

நேற்று கோப்பன்ஹாகன் ஆர்க்கைவில்..
அதிகாரி ஆச்கர், டாக்டர் ராமானுஜன் ஆகியோருடன். டாக்டர்.ராமானுஜன் கோப்பன்ஹாகனில் கடந்த 30 ஆண்டுகளாக வசிப்பவர். இங்குள்ள தொழில்னுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். இவர் தான் நான் நேற்று பகிர்ந்து கொண்ட தங்க ஓலையைப்பற்றி ஆராய்ந்து இணையத்தில் அதில் உள்ள வாசகங்களைப் பதிப்பித்தவர். இவர் அளித்த்க தகவல் தான் எனக்கு இந்த தங்க ஓலையைப் பார்க்க ஆர்வத்தை ஏற்படுத்தியது.

நேற்று இந்த ஒரு தங்க ஓலையோடு மேலும் 2 தங்க ஓலைகளையும் இந்த ஆர்க்கைவின் அதிகாதி திரு ஆச்கர் எங்களுக்குக் காட்டினார். அவற்றை ஆய்வு செய்ய உதவுவதாக டாக்டர்.ராமானுஜன் தெரிவித்திருக்கின்றார்.

இந்த ஆர்க்கைவில் இருக்கும் ஆவணக்கட்டுக்களை புகைப்படத்தில் பார்க்கலாம் . இவை பெரும்பாலும் டானீஷ் மொழியிலானவை. அதில் தரங்கம்பாடி தொடர்பான ஆவணங்கள் ஏறக்குறைய 1000 இருக்கும் என திரு.ஆச்கர் தெரிவித்தார்.

இங்கே முழுமையாக 1 மில்லியனுக்கும் குறையாத டானிஷ் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

************

தேமொழி

unread,
May 28, 2016, 3:04:05 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

டாக்டர் ராமானுஜனும் திரு அச்கரும்..நேற்று ஆர்க்கைவ் அலுவலகத்தில்..

திரு.அச்கர் இதுவரை 1000க்கும் மேற்பட்ட டானீஷ் மொழி ஆவணங்களை அதிலும் குறிப்பாக தரங்கம்பாடி தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தவர். இவர் தரங்கம்பாடிக்கும் வந்தவர். அங்கு தனது அனுபவங்கள் எப்படியிருந்தன என நேற்று தகவல் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவருமே நேற்று என்னை ரயில் நிலயத்தில் சந்தித்து அங்கிருந்து என்னை கோப்பன்ஹாகன் ஆர்க்கை அழைத்துச் சென்றனர்.

**********

dorai sundaram

unread,
May 28, 2016, 3:04:29 AM5/28/16
to mintamil
அரசு செய்யவேண்டிய ஒரு பணி. ஆனால் சுபா அவர்கள் தனியொருவராகச்
செய்கிறார். எத்துணை கடினம் என்பது அவரவர் மெய் வருந்தும்போதுதான்
உணரமுடியும். அரும்பணி; பெரும்பணி. பாராட்டி மகிழ்கிறேன். பல 
வரலாற்றுச் செய்திகள் வெளிப்பட உள்ளன. பணி சிறப்பான முறையில்
நிறைவுபெறத் திருவருள துணை நிற்குமாக.
சுந்தரம்.

--

தேமொழி

unread,
May 28, 2016, 3:05:16 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

நேற்று மதியம் கோப்பன்ஹாகன் ஆர்க்கைவ் சென்று அங்கே வீடியோ பதிவை முடித்து விட்டு நானும் டாக்டர்.ராமானுஜமும் ரயில் நிலையத்தில் இருக்கும் ஒரு பாகிஸ்தானிய துரித உணவகத்தில் மதிய உணவை சாப்பிட்டோம். இங்கே சமோசாவும் நல்ல சுவை.

*******************

தேமொழி

unread,
May 28, 2016, 3:07:35 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

ஓலைச்சுவடி வாசிக்கத் தெரிந்தோர் இது எவ்வகை ஓலை என அடையாளம் காண முடிகின்றதா எனச் சொல்ல முடியுமா? தமிழ்க்கணிதம் , வாய்ப்பாடு, அல்லது வர்த்தக ஆவணமாக இருக்க வாய்ப்புண்டா? முழு கட்டும் 87 ஓலைகள். 
டாக்டர்.பாண்டியராஜா, டாக்டர்.பத்மா, திரு துரை சுந்தரம் போன்றோர் பார்த்து சொல்ல முடியுமா?

**************

தேமொழி

unread,
May 28, 2016, 3:10:00 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

இந்த ஓலைக்கட்டை மின்னாக்கம் செய்ய திறந்த போது வியந்து போனேன். இதனைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் நூல் அதன் நூல் என்ற தன்மையிலிருந்து மாறி ஒரு இரும்பு கம்பி போல மாறி இருந்தது. குறைந்தது கடந்த 50 வருடங்களாவது இந்த ஓலையை யாரும் திறந்திருக்க , வாசித்திருக்க மாட்டார்கள் என்று நினைத்து நூலகர் ஒருவரைக் கேட்ட போது அப்படித்தான் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஆமோதித்தார்.

இவ்வகை அரிய ஆவணங்களைத் தொட்டு திறந்து பார்க்கும் போது மகிழ்வாக இருக்கின்றது.

****************

தேமொழி

unread,
May 28, 2016, 3:11:22 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

மல்லிகை பூ பற்றிய குறிப்புடன் ஒரு ஓலையும், அதன் அடுத்த ஓலையில் மல்லிகைக் கொடியின் படமும்... எளிய முறையில்..

************

தேமொழி

unread,
May 28, 2016, 3:12:51 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

இன்று கோப்பன்ஹாகனில் மூன்றாம் நாள். ரயில் நிலயத்திலிருந்து அரச நூலகம் நோக்கி...

************

dorai sundaram

unread,
May 28, 2016, 3:24:01 AM5/28/16
to mintamil, Dr.Subashini
”மல்லிகை அய்ந்து மலந்த
பூத்தொண்றுறூ கொள்ளு
வார் அய்வர் பறித்து”

என்னும் பாடம் (வாசகம்) தெரிகிறது.  ஐந்து, அய்ந்து எனவும்
ஐவர், அய்வர் எனவும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அல்லது,
“அய்ந்து மலந்த பூ - அன்றே மலந்த பூ?
சுந்தரம்.

தேமொழி

unread,
May 28, 2016, 4:37:25 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
4 mins

கோப்பன்ஹாகன் காட்சிகள் சில..

அரண்மனை
பார்லிமெண்ட்
அருங்காட்சியகம்

*************

தேமொழி

unread,
May 28, 2016, 4:38:30 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

அரச நூலகம் நோக்கி வரும் வழியில், அரண்மனை வளாகத்தில்..

*************

இராமகி

unread,
May 28, 2016, 4:44:46 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
வாய்ப்புண்டு. தமிழ் எண்கள் தெளிவில்லாது தெரிகின்றன. 87 ஓலைகளைத் தெளிவாகப் படமெடுத்து ஏற்றலாம்.

அன்புடன்,
இராம.கி. 

இராமகி

unread,
May 28, 2016, 4:46:11 AM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
இதுவும் கணக்கு போலவே தெரிகிறது. இதையும் ஆவணப்படுத்தலாம்.

அன்புடன்,
இராம.கி.

தேமொழி

unread,
May 28, 2016, 2:01:39 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

மதிய உணவு..இன்று பாஸ்டா கலந்த சாலட், ரொட்டி, க்ரீம், காபி... நூலகத்தின் கீழ்த்தளத்திலேயே நல்ல உணவகம் ஒன்று இருக்கின்றது..

***********

தேமொழி

unread,
May 28, 2016, 2:03:15 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

இன்றைய மின்னாக்கம்... சித்தர் பாடல்கள்.. கையெழுத்து நோட்டு புத்தகம்

***********

தேமொழி

unread,
May 28, 2016, 2:04:47 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

இன்றைய மின்னாக்கம்..

நட்சத்திர சாஸ்திரம்...

**************

தேமொழி

unread,
May 28, 2016, 2:07:05 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

நட்சத்திர சாத்திரம் நூலின் உட்பகுதி..

*********************

தேமொழி

unread,
May 28, 2016, 2:08:42 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

லூத்தரன் பாதிரிமார்கள் முதன் முதலில் தமிழ் என்பதற்கு பதில் தமிழைக் குறிக்க மலபார் என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இதன் விளக்கத்தை German Tamilology என்ற நூலில் காணலாம்.

இங்கே மலபார் தியோலஜி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்க.

*****************

தேமொழி

unread,
May 28, 2016, 2:09:56 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

மின்னாக்கப்பணி முடிந்தது.
நான் எதிர்பார்த்ததற்கும் மேலான சுவடி நூல்களை மின்னாக்கம் செய்து முடித்துள்ளேன்.

உடல் மிக அலுப்பாக இருந்தாலும் மனம் எல்லையில்லா மகிழ்ச்சியில்..!

இதில் சில நூல்கள் முதல் முறையாக தமிழ் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்குக் கிடைக்கப்போகின்றது என்பது மிக மகிழ்ச்சியான விசயமல்லவா? குறிப்பாக சீகன்பால்கின் சில கையெழுத்து பனை ஓலைச் சுவடிகளை மின்னாக்கம் செய்துள்ளேன்.

செய்ய வேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. அதற்கு முன் சிறு ஓய்வு அவசியம் தேவைப்படுகின்றது.

நல்வாழ்த்தும் ஊக்கச் சொற்களும் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

**************

தேமொழி

unread,
May 28, 2016, 7:32:46 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

இன்று டென்மார்க், ஓடன்ஸி தீவு வந்து சேர்ந்தேன். 1 மணி நேர பயணம். நண்பர் Adhavan Cathiresarpillai அவர்கள் வீட்டில் இன்று இரவு உணவு தயார் செய்திருந்தார்கள். குழாய் புட்டு, கத்த்கரிக்காய் குழம்பு, முருங்கைக்காய் குழம்பு என இலங்கைத் தமிழ் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தேன். குழாய் புட்டு செய்யும் பாத்திரமும், குழாய் புட்டும்..புகைப்படத்தில்....

***************

தேமொழி

unread,
May 28, 2016, 7:34:48 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

நேற்று மாலை டென்மார்க்கின் Fyn தீவு வந்து சேர்ந்தேன். டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனிலிருந்து நோய்பெக் ரயில் பயணம் 1 மணி நேரம். கடலைக்கடக்கும் போது முதலில் ஆழ்கடல் குகையில் 10 நிமிடம் ரயிலில் பயணித்து பின்னர் பாலத்தில் ரயில் பயணிக்கின்றது.

***********

தேமொழி

unread,
May 28, 2016, 7:36:11 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

சீகன்பால்க் கையெழுத்துச் சுவடி..என் கையில்..!
ஏறக்குறைய 300 ஆண்டு பழமையானது.

************

தேமொழி

unread,
May 28, 2016, 7:37:41 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

சீகன்பால்க் கையெழுத்து..

************

தேமொழி

unread,
May 28, 2016, 7:42:37 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
58 mins

டென்மார்க் பல சிறிய தீவுகளும் 2 பெரிய தீவுகளும் ஜெர்மனியோடு இணைந்த ஒரு நிலப்பகுதியும் கொண்ட நாடு. இன்று மாலை நடுவில் இருக்கும் பின் தீவு வந்துள்ளேன். பசுமையான எழில் நிறைந்த தீவு. நண்பர் திரு.ஆதவன் கதிரேசன் குடும்பத்தினருடன் இனிமையாக இன்றைய நாள் அமைந்துள்ளது. திரு. ஆதவன் அவர்கள் தத்துவத்துறை ஆசிரியர் என்பதோடு சினிமா துறையிலும் ஈடுபாடு கொண்டவர். அண்மையில் வெளிவந்த ஓர் டென்மார்க் வெளியீடான அகத்தீ என்ற த்கமிழ்த்திரைப்படத்தில் நடித்துள்ளார். அவருடன் சுவேன்போர்க் துறைமுகத்தில்.

****************

தேமொழி

unread,
May 28, 2016, 7:44:08 PM5/28/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
Subashini Thf updated her cover photo.
57 mins

டென்மார்க், பின் தீவு சுவோன்பெர்க் துறைமுகத்தில்...

*********

தேமொழி

unread,
May 29, 2016, 1:16:54 AM5/29/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

டென்மார்க் பின் தீவு சுவோன்பெர்க் துறைமுகத்தில்..

*********

தேமொழி

unread,
May 29, 2016, 1:20:06 AM5/29/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
6 hrs

சுவோன்பெர்க் துறைமுகப் பகுதி காட்சிகள்.

தேமொழி

unread,
May 29, 2016, 1:20:43 AM5/29/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

கடந்த 3 நாட்களின் மின்னாக்கப்பணி மிகுந்த அயற்சியை அளித்துள்ளது.

***********

தேமொழி

unread,
May 29, 2016, 1:21:36 AM5/29/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

டென்மார்க்கில் ஏறக்குறைய 11000 தமிழர்கள் இருப்பதாக நண்பரிடமிருந்து அறிந்து கொண்டேன்.

இங்கே பழமையான கோயில். வினாயகர் கோயில். நாகபூஷணி அம்மன் என்ற ஒரு கோயிலும் வேல் முருகன் கோயிலும் இருக்கின்றன. நாகபூஷணி அம்மன் கோயிலில் ஒரு பெண் சாமியார் இருக்கின்றாராம்.

இங்கே தமிழர் விரும்பும் காய்கறிகள் இலங்கைத்தமிழர் கடைகளில் கிடைக்கின்றன. அதனால் கத்தரிக்காய், புடலங்காய், முருங்கைக்காய், வல்லாரை போன்றவை தடையின்றி கிடைக்கின்றன.

தமிழ்ப்பள்ளிகள் ஞாயிறு தோறும் நடக்கின்றன. நண்பர் ஆதவனின் துணையார் தமிழ் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கும் ஆசிரியர். ஐரோப்பா முழுதும் பயணித்து தமிழ் ஆசிரியர்களைப் பயிற்றுவித்தவர்.

*************

தேமொழி

unread,
May 29, 2016, 1:22:23 AM5/29/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com

கடந்த 3 நாட்கள் நான் மின்னாக்கம் செய்த அனைத்து பனை ஓலைகளும் உயர் தர டிஜிட்டல் காமராவில் பதியப்பட்டது. எழுத்துக்களை சூம் செய்து பார்க்கும் போது பெரிதாக துல்லியமாக , தெளிவாக உள்ளன. 
நான் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டவை என் செல்போனில் துரித பகிர்வுக்காக எடுத்தவை மட்டுமே.

*************

Innamburan S.Soundararajan

unread,
May 29, 2016, 2:39:57 AM5/29/16
to mintamil, Dr.Subashini
சுபாஷிணிக்கு மற்றொரு முனைவர் விருது காத்திருக்கிறது. அவர் சென்னை வரும்போது, விமானதளத்தில், 
மேளதாளத்துடன் தடபுடலாக வரவேற்பதாக உத்தேசம்.
இன்னம்பூரான்

*************

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

dorai sundaram

unread,
May 30, 2016, 3:17:09 AM5/30/16
to mintamil
நட்சத்திர சாஸ்திரத்தின் முகப்புப்பக்கம்:

1  நஷ்சேத்திர சாஸ்திரத்தின் 
2  குறிப்பிடம்
3  இதிலே
4  நஷ்சேத்திரங்களின் பேரிலேயும் சந்திரசூரிய
5  னின் பேரிலேயும் மத்துண்டான கிறெகங்
6  களின் பேரிலேயும் அறியவேண்
7  டின பிறதான நாயங்கள் 
8  தெளிவாகவும் வரிசை
9  யாகவும் விஸ்தரிக்கப்ப
10  ட்டிருக்குது.

குறிப்பு:  மத்துண்டான  - மற்று உண்டான; 
                  விஸ்தரிகாப்பட்டிருக்குது -  விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது .
                  வரி 10-இல், “ட்டி”  என்பது கூட்டெழுத்தாக ஒரே எழுத்து வடிவில் உள்ளது.
                  இது ஓலைச்சுவடிகளில் வழக்கம்.
சுந்தரம்.

Suba

unread,
May 30, 2016, 6:23:34 AM5/30/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram, thf-...@googlegroups.com
​நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த 4 நாட்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றில்  சிறப்பானவை.

டென்மார்க் கோப்பன்ஹாகன் அரச நூலகத்தின் கீழ்க்காணும் ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. 

Collections at the Royal Library, Copenhagen:

Palm Leave Manuscripts, digitized by Dr.K.Subashini (Tamil Heritage Foundation – THF) on the 26 – 28th May 2016

1.      விக்கிரமாதித்தன் கதை 194 leaves

2.      வீரமாரன் கதை, 110 leaves

3.      தேரூர்ந்த சோழன் கதை

4.      Historia regum Soræ, சோழ ராஜியம் 54 leaves

5.      Narrationum collectio, 62 leaves

6.      பரபாசுரன் கதை 10 leaves

7.      கபிலை வாசகம்

8.      நல்வழி, ஆத்திச்சுடி இன்ன பிற 54 leaves

9.      சிவவாக்கியர் பாடின விருத்தம்

10.  Carmina moralia கணேசர் துதி

11.  நிகண்டு

12.  வைத்திய திரட்டு சிந்தாமணி 146 leaves

13.  திருமூலர் எண்ணூறு திரட்டு

14.  பஞ்சாங்கம் 66 leaves

15.  நட்சேத்திர சாஸ்திரம்

16.  Varia, 62 leaves, Christian compositions in Tamil)

17.  Part 1 - First letter of John (16 leaves),

18.  Part 2 - Jnanathin Postaham (10 leaves)

19.  தர்க்க சாஸ்திரம் 26 leaves

20.  Christian doctrines (22 leaves)

21.  Ziegenbalg: Letter from God to the Tamilians (பராபர வஷ்த்துவாகிற சறுவேசுரன் சொழமண்டலத்தில் வசமாயிருக்கிற தமிளரெல்லாருக்கும் எழுதி அனுப்பின நிருபம்) (62 leaves)

22.  Ziegenbalg, Way to Paradise (17 leaves)

23.  ஆணி மாதத்தில் அழகப்பன் (சீகன்பால்க் உதவியாளர்) எழுதிய டைரி, - 1742(56 leaves)

24.  ஆடி மாதத்தில் அழகப்பன் (சீகன்பால்க் உதவியாளர்) எழுதிய டைரி, - 1742(56 leaves)

25.  புரட்டாசி மாதத்தில் அழகப்பன் (சீகன்பால்க் உதவியாளர்) எழுதிய டைரி, - (24 leaves)

26.  மார்கழி மாதத்தில் சின்னப்பன் (உதவியாளர்) எழுதிய டைரி, -1740 (26 leaves)

27.  மாசி மாத டைரி - 1742 (12 leaves)

28.  வைத்தியம் -குறிப்புக்கள் 182 leaves

29.   ”jnAnaththil therinjirukkira periyavargal chonna budhdhiyai kEl” (ஞானத்தில் தெரிஞ்சுருக்கிற பெரியவர்கள் சொன்ன புத்தியை கேள்); (Moral rules for Christians); 172 leaves

30.  “Moothurai” (ஆதினாயனையடி பணிந்தேத்த மூதுரையானது முப்பது வருமே); 10 leaves

31.  Oratio Dominica; Lord’s Prayer in Telugu and Tamil. 12 leaves; Dated 11 August 1742. (Benjamin Schultz?)

32.  புதுப்பிராத்தினை -Hymns based on Paul’s letters to Colossians.16 leaves; Dated 8 December 1748

33.  Cod. Tamul 22 (UB): Epistolam II ad Corinthios (Westergaard). Pauls second letter to the Corinthians. 48 leaves;

34.  சீகன்பால்க் உதவியாளர் எழுதிய  டைரி 14 – 15 December 1742. 64 leaves

35.  சீகன்பால்க் உதவியாளர் எழுதிய  டைரி. 80 leaves

36.  மாசி மாதத்தில் சீகன்பால்க் உதவியாளர் எழுதிய  டைரி.  1758 (Feb.-Mar. 1758); 28 leaves

37.  Cod Tam 24 - சீகன்பால்க் உதவியாளர் எழுதிய  டைரி. 90 leaves;

38.  ஐப்பசி மாதத்தில் சீகன்பால்க் உதவியாளர் சாமிதாசன் எழுதிய  டைரி. October, 1742  22 leaves

இவை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை படிப்படியாக பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்

சுபா

2016-05-26 10:43 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:

நண்பர்களே,

17ம் நூ தொடங்கி ஜெர்மானிய, பாதிரிமார்கள் தமிழகத்தில் இருந்த காலகட்டத்தில் கைப்பட எழுதிய, சேகரித்த ஓலைகள் டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் ரோயல் லைப்ரரியில் உள்ளன. அவற்றில் சிலவற்றை த.ம.அ மின்னாக்கம் செய்து வர நான் மேற்கொண்ட முயற்சிக்கு நூலகத்தினர் அனுமதி அளித்திருப்பதால் இன்று கோப்பன்ஹாகன் பயணிக்கிறேன். 

இந்த முயற்சியில் அரிய ஆவணங்களை த.ம.அ மின்னாக்கம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

வரும் திங்கள் மாலை வரை மின் தமிழ் மடல்களைப் பார்க்க இயலாது.

அன்புடன்
சுபா

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Suba

unread,
May 30, 2016, 6:24:39 AM5/30/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
உடனுக்குடன் என் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து எனது பதிவுகளை மின்தமிழில் பதிந்து உதவிய முனைவர்.தேமொழி அவர்களுக்கு என் நன்றி.

சுபா

Suba

unread,
May 30, 2016, 6:26:01 AM5/30/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-05-30 9:17 GMT+02:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
நட்சத்திர சாஸ்திரத்தின் முகப்புப்பக்கம்:

1  நஷ்சேத்திர சாஸ்திரத்தின் 
2  குறிப்பிடம்
3  இதிலே
4  நஷ்சேத்திரங்களின் பேரிலேயும் சந்திரசூரிய
5  னின் பேரிலேயும் மத்துண்டான கிறெகங்
6  களின் பேரிலேயும் அறியவேண்
7  டின பிறதான நாயங்கள் 
8  தெளிவாகவும் வரிசை
9  யாகவும் விஸ்தரிக்கப்ப
10  ட்டிருக்குது.

குறிப்பு:  மத்துண்டான  - மற்று உண்டான; 
                  விஸ்தரிகாப்பட்டிருக்குது -  விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது .
                  வரி 10-இல், “ட்டி”  என்பது கூட்டெழுத்தாக ஒரே எழுத்து வடிவில் உள்ளது.
                  இது ஓலைச்சுவடிகளில் வழக்கம்.
சுந்தரம்.

​என் நன்றி திரு.துரை சுந்தரம்,

உங்கள் உதவி எமக்கு மேலும் தேவை. ​
 
​அன்புடன்
சுபா​

--

Suba

unread,
May 30, 2016, 6:28:34 AM5/30/16
to இராமகி, மின்தமிழ், Dr.Subashini
2016-05-28 10:44 GMT+02:00 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
வாய்ப்புண்டு. தமிழ் எண்கள் தெளிவில்லாது தெரிகின்றன. 87 ஓலைகளைத் தெளிவாகப் படமெடுத்து ஏற்றலாம்.

அன்புடன்,
இராம.கி. 

​இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்ட படம் என் செல்போனில் ஃபேஸ்புக் பதிவிற்காக எடுக்கப்பட்டது.
உயர் ரெசலூஷனில் டிஜிட்டல் புகப்படம் சுவடி முழுமையையும் எடுத்துள்ளேன். அதனை வாசிக்க அளிக்கிறேன்.
 
​சுபா

On Saturday, May 28, 2016 at 12:37:35 PM UTC+5:30, தேமொழி wrote:

ஓலைச்சுவடி வாசிக்கத் தெரிந்தோர் இது எவ்வகை ஓலை என அடையாளம் காண முடிகின்றதா எனச் சொல்ல முடியுமா? தமிழ்க்கணிதம் , வாய்ப்பாடு, அல்லது வர்த்தக ஆவணமாக இருக்க வாய்ப்புண்டா? முழு கட்டும் 87 ஓலைகள். 
டாக்டர்.பாண்டியராஜா, டாக்டர்.பத்மா, திரு துரை சுந்தரம் போன்றோர் பார்த்து சொல்ல முடியுமா?

**************

Suba

unread,
May 30, 2016, 6:29:43 AM5/30/16
to Innamburan S.Soundararajan, mintamil, Dr.Subashini
2016-05-29 8:39 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
சுபாஷிணிக்கு மற்றொரு முனைவர் விருது காத்திருக்கிறது. அவர் சென்னை வரும்போது, விமானதளத்தில், 
மேளதாளத்துடன் தடபுடலாக வரவேற்பதாக உத்தேசம்.
இன்னம்பூரான்

​ஆகா.. அப்படியா.. மகிழ்ச்சி.. காத்திருக்கிறேன்😁  .. 
சுபா ​
 
2016-05-29 10:52 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

கடந்த 3 நாட்கள் நான் மின்னாக்கம் செய்த அனைத்து பனை ஓலைகளும் உயர் தர டிஜிட்டல் காமராவில் பதியப்பட்டது. எழுத்துக்களை சூம் செய்து பார்க்கும் போது பெரிதாக துல்லியமாக , தெளிவாக உள்ளன. 
நான் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டவை என் செல்போனில் துரித பகிர்வுக்காக எடுத்தவை மட்டுமே.

*************

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
May 30, 2016, 6:31:46 AM5/30/16
to Pandiyaraja, மின்தமிழ், Dr.Subashini

2016-05-26 17:46 GMT+02:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
மிகுந்த மகிழ்ச்சிதரும் செய்தி. அரிய ஆவணங்கள் இதன்மூலம் வெளிவரும் என்று நம்புகிறேன். முயற்சிக்குப் பாராட்டுகள்.
ப.பாண்டியராஜா

நன்றி.​
ஆம். இதுவரை வெளியிடப்படாத ஆவணங்கள் சிலவற்றை நாம் மின்னாக்கம் செய்துள்ளோம். என்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் செய்தி.

சுபா

On Thursday, May 26, 2016 at 2:13:14 PM UTC+5:30, Suba.T. wrote:

நண்பர்களே,

17ம் நூ தொடங்கி ஜெர்மானிய, பாதிரிமார்கள் தமிழகத்தில் இருந்த காலகட்டத்தில் கைப்பட எழுதிய, சேகரித்த ஓலைகள் டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் ரோயல் லைப்ரரியில் உள்ளன. அவற்றில் சிலவற்றை த.ம.அ மின்னாக்கம் செய்து வர நான் மேற்கொண்ட முயற்சிக்கு நூலகத்தினர் அனுமதி அளித்திருப்பதால் இன்று கோப்பன்ஹாகன் பயணிக்கிறேன். 

இந்த முயற்சியில் அரிய ஆவணங்களை த.ம.அ மின்னாக்கம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

வரும் திங்கள் மாலை வரை மின் தமிழ் மடல்களைப் பார்க்க இயலாது.

அன்புடன்
சுபா

Dhivakar

unread,
May 30, 2016, 8:04:37 AM5/30/16
to மின்தமிழ்
அன்புள்ள சுபா,
மிக்க மகிழ்ச்சியான செயல்.

இந்த நூல்களிலெல்லாம் எத்தனைவகையான செல்வங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றனவோ..

உங்கள் தமிழ்ப்பணி வாழ்க!!

அன்புடன்
திவாகர்

யாமார்க்கும் விதியல்லோம்
நமனை அஞ்சோம்

--

Megala Ramamourty

unread,
May 30, 2016, 10:32:29 AM5/30/16
to மின்தமிழ்
மிகவும் அரிய பணியைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடித்திருக்கிறீர்கள் சுபா. தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழன்னையைப் பெருமிதத்தில் ஆழ்த்தும் தங்கள் சீரிய பணிகள் மேலும் சிறக்கட்டும்!

தங்கள் அருந்தமிழ்ப்பணிகளுக்குப் பெருந்துணை புரிந்துவரும் அன்புத் தோழி தேமொழிக்கும் என் பாராட்டும் வாழ்த்தும்!

அன்புடன்,
மேகலா

Suba

unread,
May 30, 2016, 2:18:31 PM5/30/16
to மின்தமிழ், Dr.Subashini
18 mins · 

டென்மார்க் அரச நூலகத்தில் உள்ள தமிழ் சுவடி ஆவணங்களை மின்னாக்கம் செய்ய வேண்டும் என்ற என் முயற்சிக்கு உதவியவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

- டாக்டர் ராமானுஜம் - இவர் வழியாகத்தான் ஆர்க்கைவில் உள்ள தரங்கம்பாடியின் ஒஉர் பகுதி டேனீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு ஆண்டுக்கட்டணத்தில் கொடுக்கப்பட்ட தங்க சுவடி பற்றிய தகவலை பெற்றேன். இவரே முதலில் இந்த தங்க ஆவணத்தை வாசித்து அதன் எழுத்துக்களை பதிப்பித்தவர்.

- திரு. Adhavan Cathiresarpillai. குடும்பத்தினரும், திருமதி. ஞானமலர் ‪#Gnanamalar‬ Sureshkumar குடும்பத்தினரும் என் தங்கும் ஏற்பாடுகளை கவனித்து உதவியவர்கள். அவர்கள் அன்பை மறக்கமுடியாது.

-திரு. அச்கர் தனது பொறுப்பில் உள்ள தரங்கம்பாடி தங்க ஓலையையும் மேலும் 2 இதுவரை வாசிக்கப்படாத தங்க ஓலைகளையும் எனக்கு காட்டியதோடு பல மேலதிகத் தலவல்களையும் தந்தவர்.

- கோப்பன்ஹாகன் அரச நூலக அதிகாரிகள் டாக்டர்.பெண்ட், டாக்டர் ஈவா மற்றும் ஏனைய நூலகர்கள் எனது 3 நாட்கள் மின்னாக்கப்பணியில் மிக உதவினர். இவர்களது ஒத்துழைப்பு இல்லாவிட்டால் என்னால் ஒரு சுவடியையும் பார்த்திருக்கவோ மின்னாக்கம் செய்திருக்கவோ முடியாது.

- அடுத்து என் நன்றிகள் 17ம் நூற்றாண்டு தொடங்கி தமிழகத்தின் தரங்கம்பாடிக்குச் சென்று தமிழ்கற்று, தமிழின் பெருையை ஐரோப்பாவில் பரப்பிய லூத்தரன் பாதிரிமார்களுக்கே. அவர்களது அயரா உழைப்பிற்கும் தமிழ் மொழியின் பால் அவர்கள் கொண்ட அன்பிற்கும் தலை வணங்குகின்றேன்!!!!

Innamburan S.Soundararajan

unread,
May 30, 2016, 9:23:29 PM5/30/16
to mintamil, Dr.Subashini
அவர்கள் யாவருக்கும் எங்கள் என்றும் மறவாத நன்றியை கூறவும்.

Suba

unread,
May 31, 2016, 3:06:39 AM5/31/16
to Innamburan S.Soundararajan, mintamil, Dr.Subashini
2016-05-31 3:23 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
அவர்கள் யாவருக்கும் எங்கள் என்றும் மறவாத நன்றியை கூறவும்.

​உங்கள் ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

​சுபா​

Seshadri Sridharan

unread,
Jun 2, 2016, 9:26:53 AM6/2/16
to mintamil
மிக அரிய நற்செயல் 

தொல்லன் 

N. Kannan

unread,
Jun 5, 2016, 5:12:24 AM6/5/16
to மின்தமிழ்
முதலில் பாராட்டுகள். தனியாக, அதுவும் பெண்ணாக இருந்து கொண்டு யார் துணையுமின்றி இம்மாதிரிச் செயல்களில் இறங்குவதற்கென்று தனித்துணிச்சல் வேண்டும். பாரதி பேசும் புதுத்தமிழ்ப் பெண் நீங்கள்தான். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

என்கிறான் பாரதி. வாழ்த்துகள்.

இதன் தொடக்கம் குறித்த சில நனவிடை தோய்தல்.

90களில் பெர்லின் சென்று அங்குள்ள தேசிய நூலகத்தில் முதன் முதலில் திருக்குறள், திருவாய்மொழி, பரமார்த்த குரு கதை சுவடிகளை ஆழ்கிடங்கில் (பங்கர்) கண்டது. அதுவே நமது எண்ணிம எண்ணத்திற்கு வித்து.

அடுத்து பிரித்தானிய நூலகத்தில் உள்ள பழைய புத்தகங்களை மின்னாக்கம் செய்தது.

பிறகு இத்தாலிய நூலகம் ஒன்றிற்கு உதவியது.

சீகன்பால்டின் பதிப்பு பற்றிய ஆர்வத்தில் நீங்கள் தரங்கம் பாடி போனது, பின் பேரா.இராமானுஜம் அவர்களோடு தொடர்ந்து இயங்கி இன்று மற்றுமொரு கனவை நனவாக்கியது.

உண்மையில், நாம் பாரதிதாசன் பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தோம் ஓர் டிஜிட்டல் ஸ்டூடியோ உருவாக்கி அதில் இந்த ஓலைகளை  அறிஞர் குழாமிற்கு சமர்பித்து உடக்குடன்  எழுதி வாசிப்பது என்று. அது ஓரளவு இந்த இழையில் நிறைவேறியுள்ளது. மிக்க மகிழ்ச்சி. இதே குழுவை வைத்து நாம் ஒரு மெய்நிகர் எண்ணகம் உருவாக்க முயலலாம்.

மலேசியாவிலிருந்து இதற்கு என்ன செய்ய முடியுமென்று நம் காரியதரசி, வழக்குரைஞர் சரஸ்வதியுடன் நாளை பேசுகிறேன்.

இதுவொரு மைல்கல்.

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Innamburan S.Soundararajan

unread,
Jun 5, 2016, 7:08:40 AM6/5/16
to mintamil
நாம் ஒரு மெய்நிகர் எண்ணகம் உருவாக்க முயலலாம்.

~ அவ்வாறே நடக்கட்டும். இ

Suba

unread,
Jun 5, 2016, 5:30:24 PM6/5/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-06-05 11:12 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:
முதலில் பாராட்டுகள். தனியாக, அதுவும் பெண்ணாக இருந்து கொண்டு யார் துணையுமின்றி இம்மாதிரிச் செயல்களில் இறங்குவதற்கென்று தனித்துணிச்சல் வேண்டும். பாரதி பேசும் புதுத்தமிழ்ப் பெண் நீங்கள்தான். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

என்கிறான் பாரதி. வாழ்த்துகள்.

இதன் தொடக்கம் குறித்த சில நனவிடை தோய்தல்.

90களில் பெர்லின் சென்று அங்குள்ள தேசிய நூலகத்தில் முதன் முதலில் திருக்குறள், திருவாய்மொழி, பரமார்த்த குரு கதை சுவடிகளை ஆழ்கிடங்கில் (பங்கர்) கண்டது. அதுவே நமது எண்ணிம எண்ணத்திற்கு வித்து.

அடுத்து பிரித்தானிய நூலகத்தில் உள்ள பழைய புத்தகங்களை மின்னாக்கம் செய்தது.

பிறகு இத்தாலிய நூலகம் ஒன்றிற்கு உதவியது.

சீகன்பால்டின் பதிப்பு பற்றிய ஆர்வத்தில் நீங்கள் தரங்கம் பாடி போனது, பின் பேரா.இராமானுஜம் அவர்களோடு தொடர்ந்து இயங்கி இன்று மற்றுமொரு கனவை நனவாக்கியது.

உண்மையில், நாம் பாரதிதாசன் பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தோம் ஓர் டிஜிட்டல் ஸ்டூடியோ உருவாக்கி அதில் இந்த ஓலைகளை  அறிஞர் குழாமிற்கு சமர்பித்து உடக்குடன்  எழுதி வாசிப்பது என்று. அது ஓரளவு இந்த இழையில் நிறைவேறியுள்ளது. மிக்க மகிழ்ச்சி. இதே குழுவை வைத்து நாம் ஒரு மெய்நிகர் எண்ணகம் உருவாக்க முயலலாம்.
​இனிய சொற்களுக்கு நன்றி கண்ணன்.

என் பயணத்தையும் அதன் முக்கிய நோக்கத்தையும் விளக்கும் ​ஒரு டாக்குமெண்டரி நேற்று தயாரித்து முடித்தேன்.  இடையில் டாக்டர்.டேனியல் ஜெயராஜூடன் பேசியுள்ளேன். அவர் மட்டுமன்றி மேலும் தமிழ்க பல்கலைக்கழக் துறை சார்ந்த ஆய்வறிஞர் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த ஆவணங்களை ஒவ்வொன்றும் வலையேற்றம் செய்யப்பட்டு டிஜிட்டல் ஆர்க்கைவ் தயாரிக்க வேண்டும். இதற்கு உதவ ஒரு குழு அமைத்தல் வேண்டும். நியூ ஜெர்ஸி நண்பர் ஒருவரும் ஆகஸ்ட் தொடங்கி சீரிய முறையில் உதவுவதாகச் சொல்லியிருக்கின்றார். மேலும் சிலரும் முன் வருகின்றார்கள். 

இரண்டு வகை நடவடிக்கைகளுக்கு தன்னார்வலர்கள் தேவை.

1. இருக்கின்ற டிஜிட்டல் புகைப்படங்களை த.ம.அ லேபல் இணைத்து தயாரித்து வலையேற்றம் செய்தல் - இதனை பொது மக்கள் வாசிப்பிற்கு அனுமதிக்கும் வகையில் செய்யலாம்.
2. ஓலை நூல்களை வாசிக்கும் ஒரு துறை சார் ஆர்வலர் குழு.

வாசித்து முடிக்கப்பட்ட ஓலை நூற்களை பதிப்பிக்க முயற்சி எடுக்கலாம். இது முக்கியம் என்று கருதுகிறேன்.

சுபா

--

Innamburan S.Soundararajan

unread,
Jun 5, 2016, 9:29:14 PM6/5/16
to mintamil, Dr.Subashini
How I wish I could rekindle the த.ம. அ. மின்னாக்க பட்டறை & நூலகம் that I maintained in Chennai. Age has caught up with me.
Innamburan
Reply all
Reply to author
Forward
0 new messages