ஆதிசங்கரர் எழுதிய நூல்களில் ஒன்றான சுப்ரமண்ய புஜங்கம் என்கின்றநூல் யாரிடமாவது இருந்தால் தயவுசெய்து எனக்கு அனுப்பி வையுங்களேன்.
--
நான் ஆசைப்பட்டதெல்லாம் கடவுள் கொடுக்கவில்லை. ஆனால்
எனக்கு எது தேவையோ அதை எல்லாம் நான் கேட்காமலே கொடுத்தார்.
R.C.Raja
*விசாலேஷு கர்ணாந்த தீர்கேஷு அஜஸ்ரம்
தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு*
காதுவரை நீண்ட கருணை நிரம்பிய பன்னிரு நயனங்கள்
*மயி ஈஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதித: சேத்
பவேத் தே தயாசீல கா நாம ஹாநீ*
அக்கருணையைச் சற்று என்மேல் விழச் செய்யலாகாதா ?
தயாசீலனே ! உன் பெயருக்குக் குறை நேர்ந்து விடுமோ ?
புஜங்கத்தில் என்னைக் கவர்ந்த சுலோகம் இது.
கண்ணழகின் சாயலில் தன் அம்மாவையும்,அம்மானையும் கொண்டிருக்கிறான்
அறுமுகன் என்பது உள்ளுறை பொருள்;
தகப்பன் விரூபாக்ஷனாகி விட்டான்; கண் திறந்தால் பொறி
பறந்தாலும் பறக்கும்.
தேவ்
ஆதி சங்கரர் என்ன சொல்றார்?
சத்தியமா, ஒரு வார்த்தை கூட புரியலையே...:-)
விநாயக வணக்கம்
எந்நாளு மிளையோன் வினைக்குன் றழிப்பான்
இபமா முகன்பஞ்ச வதனன் மதிப்பான்
பொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன்
பொன்றாத திருவாள னருள்பேணு வோமே.
நூல் - அவையடக்கம்
சொல்லேது பொருளேது கவியேது வசனந்
துகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்
எல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்
திருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே.
செந்தில் நாயகன் வணக்கம்
மய்லூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன்
மனந்தன் வசங்கோள் மகானுள்ள முறைவோன்
பயிலும் மகாவாக் கிலக்கன் சிவன்சேய்
பனவர்க்கு மெய்த்தேவை நினைவின் கண்
வைத்தேன்.
என் முன்னர் வந்தோர் பிறப்பென்ற வேலை
யினை யேறி னாரென்று நிலமேல் விளக்கி
துன்னுங் கடற்செந்தி லுறைகின்ற தூயோன்
துங்கப் பராசக்தி யருள்சேயை நினைவாம்.
திரை பொன்று மாபோலும் வினைபொன்று மின்றே
திருமுன்பு வம்மின்க ளென நின்ற வன்போல்
திரைபந்தி யாய்வந்த கரைநின்ற செந்திற்
சேயோனை யிதயத்தி லேவைத் துளேனே.
இதிலேறி னோர்கலை யதிலேறி னோரே
என்பா னெனக்கந்த வரை மீது நின்றோன்
மதிபோலு மறுமா முகச்செந்தி னாதன்
மலர்போலு மடிவாழ்க யாம்வாழு மாறே.
பெருவேலை யோரத்தி லேபாவ நீக்கும்
பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில்
ஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்
உயிருக்கொ ருயிர்செம்போ னடிபற்று வோமே
முருகன் திருமேனிச் சிறப்பு
பொற்கோயி லிற்பொன் மணிக்கட்டி லேறிப்
பொலிகின்ற ஒருகோடி ரவிமங்க வீசும்
விற்கோல நற்செந்தி லிற்கார்த்தி கேயன்
விபுதேச னைச்சிந்தை விழைகின்ற தாலோ.
திருவடிச் சிறப்பு
அஞ்சம் பொலிந்தே சிவந்தேர் நிறைந்தே
அமுதம் பொழிந்தே பிறப்ப்பென்ற கோடை
வஞ்சந் தவிர்ந்தே விளங்குன் பதத்தா
மரைமேவு மளிநெஞ்சமலைவாயின் முருகே.
திரு அரைச் சிறப்பு
இலகும்பொன் உடைமீது கணகண்க னென்றே
இசைகிண்கி ணீகச்சை யொடுபட்டை யம்போன்
அலகில்வி லதுவீசு செந்தூரி லம்மான்
அரைநீடு மழகென்றன் அகமேவி யனுமே.
திருமார்பின் சிறப்பு
குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
கொடுசேந்த தோ அன்பர் குலமீது கொண்ட
திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன்
திருக் கைகளின் சிறப்பு
அயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே
ஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே
துயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை
துணை செய்க வுயர் செந்தி லிறைவா எமக்கே.
திருமுகச் சிறப்பு
பனியென்று முளவாயோர் பங்கம் படாமல்
பரிபூர்ண வோளியோடு பலதிக்கு நிலவை
நனிவீசு மதிமூ விரண்டென்று முளவேல்
நளிர் செந்தி லோனாறு முகமோக்கு மாலோ.
சிவன் மைந்த நகையென்ற அனமென்று மேவித்
திகழுங் கடைக்கண்களெனும் வண் டுலாவித்
தவவின்சொ லமுதூறு கொவ்வைச்செ விதழ்சேர்
சலசங்க ளெனுமாறு முகமென்று காண்பேன்.
திருக்கண்களின் சிறப்பு
குறைவென்கொ லேசெந்தி லாய்கா தளாவிக்
குறையாத அருள்வீசு விழிபன் னிரண்டில்
இறையேயொர் விழியின் கடைப்பார்வை தொழுமிவ்
வெளிநாயி னேன் மீதி லொருபோது விழுமேல்
திருமுடிச் சிறப்பு
எனதங்க நீமைந்த வாழ்கென்று மோந்தே
ஈசன் களிக்கின்ற தேசொன்று முடிசேர்
நினதிங்கள் முகமாறு மறவாது பணிவேன்
நிலைநின்ற செந்தூரில் வெளிநின்ற தேவே.
வேண்டுகோள்
வரவேணு மடியேன் முனெ செந்தி னாதன்
மணிமாலை கேயூர மசைகுண்ட லங்கள்
பிரகாச மிகமாடை யுடையோடு கையிற்
பிசகாத வடிவேலின் மிகுசோதி வீச.
தோத்திரங்கள்
குமரா எனச்சங் கரன் கைகள் நீட்டக்
குதித்தம்மை மடிநின்று பரனைத் தழீஇக்கொண்
டமரா மகிழ்ந்தாடு செந்தூரி லெம்மான்
அழகான மழமேனி மறவாது நினைவேன்.
குமரா சிவன்சேய் குறக்கன்னி நாதா
குகாகந்த சேனாப தீசத்தி பாணீ
எமார்வப்ரபோ தார காரீ மயூரா
இனாநீவு வாய் செந்தி லாயஞ்ச லென்னே
ஐயுந்தி மெய்நொந்து பொறியைந்து மோய்ந்தே
அறிவின்றி யுளமஞ்சி யுயிர்மங்குபோதெ
நெய்நின்ற வடிவேல செந்தூர யாரே
நினையன்றி எனையஞ்சல் எனுமாவ லாரே.
யமதூதர் சுடுவெட்டு பிளவென் றதட்டி
எனைவெஞ் சினத்தோ டொறுக்கென்று வந்தால்
நமதன்ப அஞ்சே லெனச்சத்தி யேந்தி
நவிரத்தின் மிசைசெந்தி லாய்வந்து காவே.
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தல்
உயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன்
ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்
அயர்கின்ற அவ்வேளை கைப்விட்டி டேலென்
ஐயா உனக்கேகை யடையாகி னேனே.
மன வேதனை நீக்க வேண்டல்
அண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன்
அவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்
மண்டும் பலஞ்செற்ற வடிவெல் அலைவாய்
மருவும் குகாஎன்றன் மன நோயு மொழியே.
நீயே அடைக்கலம்
அடியேன் சதாதுக்கி நீயேழை பங்கன்
அறியேன் துணைவேறு சிறியேனை நலியும்
மிடியாவு நொடியேநுண் பொடியாக அருள்வாய்
மிளிர்வேல செந்தூரி லமர் தேவ மணியே
இலை விபூதி மகிமை
கண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்
காசங் கயம்குட்ட முதலாய நோயும்
விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே.
பிரார்த்தனை
செந்திற் குமாரன் றனைக்கண்கள் காண்க
செவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட
கந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக
கடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க.
முருகனே ஏழை பங்கன்
பிறதேவர் முனிவர்க்கு மிகுபத்தி யோர்க்கும்
பிரியங்க டருவார்கள் புலையர்க்கு மருள்வார்
பிறர்யாவர் மணிவாரி யலை வீசு செந்திற்
பிரானன்றி யறியேன் சொனேன் நம்பு வீரே.
வழிவழி யடிமையாக வேண்டுதல்
மனைமக்கள் உறவாள ரடியார்கள் தோழர்
மற்றுள்ள பேர் என்றன் மனைவாழும் யாரும்
உனையன்பு கொடுபோசை புரிவோர்கள் தொழுவோர்
உனையோது வோராக அருள்செந்தி லானே.
பகை நீக்கி அருள வேண்டுதல்
கொடிதென்ற மிருகங்கள் பறவைக் குலங்கள்
கொடுநஞ்ச வகையென்னை மெலிவிக்க வந்தால்
வடிவிக்ர மச்சதி யாலே யழித்தே
வாழ்விக்கவே செந்தில் வாழ்கந்த வேளே
பிழை பொறுக்க வேண்டுதல்
மகார் செய்த பிழைபெற்ற பேர் மன்னி யாரோ
மகனல்ல னோயான் விண் மண் பெற்றதந்தாய்
மகாதேவ செந்தூரில் வாழ்கந்த வேளெ
மன்னிக்க யான் செய்த புன்மைக்குழாமே.
போற்றி
மயில் போற்றி வேல் போற்றி மறியாடு போற்றி
வன்காற்படைச்சேவலும் போற்றி நந்தூர்
உயர் வெண்டிரைச் சிந்துவும் போற்றி முருகோன்
உபயப் பதம் போற்றி யுரை செந்தில் போற்றி
வாழ்த்து
ஜயவின்ப வடிவா ஜயச்சோதி ரூபா
ஜயப்பாவு புகழொய் ஜயத்தாவினின்போய்
ஜயவின்ப சிந்துஜயச்சர்வ பந்து
ஜயவின்ப வள்ளால் ஜயச்செந்தில் வாழ்வே
நூற்பயன்
திருச்செந்திநாதன் பதத்தே மணக்கும்
திருப்பாட்டி வைக்கார்வம் வைத்தெ படிப்போர்
திருப்பெண்டு மக்கட் சிறப்பின்ப வாழ்வும்
சிறக்கத் திகழ்ந்தின்ப வீடெய்துவாரே.
தமிழாக்கம் - கோவை.கு.நடேச கவுண்டர்.
http://coimbatoreammini.blogspot.com
தவிர திருமதி ஹா.கி.வாலம் அம்மையாரின் மொழிபெயர்ப்பைக் கல்கியில்
பார்த்த நினைவு
தேவ்
| I am reciting this Tamil bujangam from 1955 without break! I am happy to see this here! In fact our family printed out copies of this ytranslation in memory of our mother Smt Nagammal, and distributed to many families. My mother used to narrate this piece daily! I am thrilled to see this here. |
I am reciting this Tamil bujangam from 1955 without break! I am happy
to see this here! In fact our family printed out copies of this
ytranslation in memory of our mother Smt Nagammal, and distributed to
many families. My mother used to narrate this piece daily!
I am thrilled to see this here.//
மகிழ்ச்சி ஐயா, செய்தி மிகவும் வியப்பளிப்பதாகத்தான்
இருக்கிறது. வாலம் அம்மையாரின் பாக்களைத்தான்
இணையத்தில் தேடினேன்.
கோவை நடேச கவுண்டர் எழுதியிருப்பது தெரியாது.
இதில் ஒரு சில பிழைகள் இருப்பதாக உணர்கிறேன்.
வடமொழிப்பாக்கள் புஜங்க நடையில் சந்தம் மாறாமல்
அமைந்திருக்கும்.வடமொழியைக் கடினமாக உணர்வோரும்
பயன் பெறுமாறு தமிழ் செய்துள்ளனர்.
ராஜா அவர்களுக்கும், கீதா அம்மாவுக்கும் பாராட்டுகள்.
தேவ்
தேவ்
On Jun 29, 12:05 am, **** மனாமீ **** <kmlraj...@gmail.com> wrote:
> ஆதி சங்கரர் என்ன சொல்றார்?
>
> சத்தியமா, ஒரு வார்த்தை கூட புரியலையே...:-)
http://www.kaumaram.com/text_new/bhujangam_e.html
http://www.ambaa.org/pdf/sb_san.pdf
http://www.kamakoti.org/shlokas/kshlok4.htm
Use, for example, Sri. Suresh's Indic2Latin translator:
http://eemaata.com/indic2latin.php
N. Ganesan
apasmAra kushta kshayArsha prameha,
jvaronmAdha gulmAdhi rogA mahAntha
pishAchAshcha sarve bhavatpatra bhoothim,
vilokya kshanAth tArakAre dravanthe
அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச: ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதி ரோகா: மஹாந்த:!
பிசாசாஸ்ச ஸர்வே பவத்பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே !!