--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உங்களுடைய திருவாசகத்தை கீழ் உள்ள இணைப்புடன் ஒப்பிடும் போது என்னால் கண்டறியப்பட்டவை
http://panippulam.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=143&Itemid=387
பச்சை - இடைவெளி இல்லை / தொடுத்து எழுதப்படுள்ளது
சிவப்பு - எழுத்துப்பிழை
நீலம் - தவறவிடப்பட்ட எழுத்து
மஞ்சள் - அடுத்த வரியில் வரவேண்டும்
தயவுசெய்து இந்த மின்னஞ்ஞசலுடன் இணைக்கப்பட்ட " சிவபுராணம்.docx " பார்க்கவும்.
நன்றி
வினோத்
--
On Jul 7, 4:55 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> நண்பர்களே,
>
> ஒரு உதவி தேவைப்படுகிறது. கீழே வழங்கப்பட்டுள்ள சிவபுராண வரிகளை வாசித்து அதில்
> எங்காவது எழுத்துப் பிழைகள் இருந்தால் அவற்றை திருத்தி முழுதாக அனுப்ப
> முடியுமா?
>
> நன்றி
> சுபா
>
> சிவபுராணம்
>
> தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
> அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
> மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
> திருவாசகம் என்னும் தேன்
தொல்லையிரும் பிறவிச் சூழுந் தளைநீக்கி
அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.
>
> நமச்சிவாய வாழ்க நாதன்தான் வாழ்க
> இமைப்பொழுதும் மென்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
> கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
> ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
> ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க.
நமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுது மென்நெஞ்சி னீங்காதான்றாள் வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் றாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க
ஏக னநேக னிறைவ னடிவாழ்க.
> வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
> பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
> புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
> கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
> சிரங்குவிவா ரோங்குவிக்குச் சீரொன்கழல் வெல்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
>
> ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
> தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
> நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
> மாயப் பிறப்பறுக்கும் மன்னடி போற்றி
> சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி
> ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
>
ஈச னடிபோற்றி யெந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கு மன்ன டிபோற்றி
சீரார் பெருந்துறைநந் தேவன டிபோற்றி
ஆராத வின்ப மருளுமலை போற்றி
> சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
> அவனருளாலே அவன்தான் தாள் வணங்கி
> சிந்தைமகிழச் சிவபுராணம் தன்னை
> முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
>
சிவனவனென் சிந்தையுள் நின்ற வதனால்
அவனரு ளாலே யவன்றாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுது மோய வுரைப்பனியான்
> கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி
> எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
> விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
> எண்ணிறந் தொல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
> பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
> புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
> பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
> கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
> வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
> செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள்
>
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
> எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
> மெய்யே யுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
> உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
> மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
> ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யவெ னுள்ளத்து ளோங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே
> வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
> பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
> மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
> எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் *பெருமாளே*
> அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே
அஞ்ஞானந் தன்னை யகல்விக்கும் நல்லறிவே
> ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
> ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
> போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
> நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
> மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
>
ஆக்க மளவிறுதி யில்லா யனைத்துலகும்
ஆக்குவாய் காப்பா யழிப்பா யருடருவாய்
போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
> கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
> சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த
> பிறப்புறுக்கும் எங்கள் பெருமான்
> நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
> மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும மெங்கள் பெருமான்
நிறங்களொ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் றன்னை
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திருமிகு சுபா அவர்களுக்கு நீங்கள் எப்போதும் திரு வடிவேல் கன்னியப்பன் அவர்களை
“திரு.வடிவேலு கண்ணியப்பனிடமிருந்தும்” என்று மூன்றுசுழி போட்டு எழுதுகிறீர்கள். அவர் “கன்னியப்பன்” இரண்டு சுழி வரவேண்டும்.
அவரே “என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.” என்று போடுகிறார் பாருங்கள். மாற்றிக்கொள்ளலாமே!
அன்புடன்
மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தற்சிறப்புப் பாயிரம் நான்கு உள்ளன. உங்களுடைய பதிவில் ஒன்றை மட்டும்
சேர்த்துள்ளீர்கள். பிற மூன்றும் தேவையெனில் அனுப்புகிறேன்.
சிவபுராணம்
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
--------
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க.
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன்கழல் வெல்க
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தைமகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தொல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே யுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமாளே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி
புறந்தோல் போர்த் தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமாம் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண் ஆர் அமுதே உடையானே
வேற்றுவிகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓ வென்று
சொல்லற்கு அரியானைச் சொல்லி திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்.
குறிப்பு:
பிழை திருதங்கள் சிவப்பு மையில் சுட்டபப்ட்டிருந்தன. ஆனால் அதைப்
பெயர்த்து இங்குப் பதிவு செய்தபோது அது மறைந்துவிட்டது. இவ்
வலைத்தளத்தில் வண்ணம் சேர்க்கும் வசதி தேவை.
அனபன்
எம்.டி.ஜெயபாலன்
குறிப்பு:
பிழை திருத்தங்களை சிவப்பு மையில் சுட்டியிருந்தேன்.
ஆனால் அதைப் பிரதி எடுத்து இங்கு ஒட்டியபோது வண்ணம் வரவில்லை. அவ் வசதி
இருந்தால் திருத்தங்கள் எளிதாகப் புலப்படும்.
அன்பன்
எம்.டி.ஜெயபாலன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jul 8, 6:57 am, "Dr M.D.Jayabalan" <jayabalanmdjchey...@gmail.com>
wrote:
> நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே ...
>
> read more »
தேவ்
> ராஜராஜேஸ்வரம் திருப்பணி முடிந்த சில ஆண்டுகளில்
> ராஜராஜசோழர் மறைந்தார். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த
> ராஜேந்திர சோழர், கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தார்.
> அங்கு கங்கைகொண்ட சோழேஸ்வரம் என்ற பெயரில் ஒரு
> சிவாலயம் கட்டினார். அந்தக் கோயில் குடமுழக்கின்போது கருவூர்த்தேவர்
> பாடிய *திருமுகப்பாசுரம்தான்* கீழே காணப்படுவது.
> அப்போதும் நம்பியாண்டார் நம்பி இருந்தார். இந்தப்
> பாசுரத்தையும் அவர் திருமுறைகளில் சேர்த்துவிட்டார்.
> அவர் தொகுத்த பதினோரு திருமறைகளில் கடைசியாகச்
> சேர்த்த பாடல் இதுதான்.
http://www.treasurehouseofagathiyar.net/26600/26688.htm
தேவ்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
கீழே இதர மூன்று பாயிரங்களை இணத்துள்ளேன். அவை ‘பாயிரங்கள்’ அன்றி
’தற்சிறப்புப் பாயிரங்கள்’ அல்ல. பிழை என்னுடையது.
1. அருள்வாத வூரர் சொல அம்பலவர் தாமெழுதும்
திருவா சகத்தைத் தெளிந்தால் -- கருவாம்
பவகதியும் நீங்கிப் பரமரரு ளாலே
சிவகதியும் உண்டாம் சிவம்.
2. கற்பாந்த காலங் கடவாக் கடல்கடக்கத்
தெப்பமாய் வந்தெனக்குச் சேர்ந்ததே --- அப்பன்
உருவா சகங்கொண் டுரைத்த தமிழ்மாலைத்
திருவா சகம் என்னும் தேன்.
3. தொல்லை இரும்பிறவிச் . . . . .
[இப்பாடலில் மூன்றாவது வரியில் ”வாதவூர் எங்கோன்” எனும் தொடரில்
”எங்கோமான்” என இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். வேறு பதிப்புகளை ஒப்பு
நோக்கித் தெளிவு பெற வேண்டும்.]
4. போதலர்ந்து தேன்சொரியும் பொன்னம் பலத்திலுறை
வாதவூர் எங்கோமான் வாசகத்தை -- ஓதிப்
பிறவிப் பிணிநீக்கிப் பேரின்ப வெள்ளச்
செறிவுக்குள் செல்வர் சிறந்து.
எம்.டி.ஜெயபாலன்
Thirumugam - indicates kaditham
> பாசுரம் என்பது தமிழ்ச்சொல்லா?
Should be Thamizh. I guess karthukkaL paaykinRa idam
> கருவூர்த் தேவரும் ஒரு திருமுகப்பாசுரம் செய்திருப்பதாகச் சொல்கின்றனரே, அது உண்மையா?
Probable!
Will search.
If others locate, please inform.
இங்கு ஒரு செய்தியைப் பதிவு செய்ய நான் விழைகிறேன். தமிழ் உரைநடையைக் கூட
சுரம் சேர்த்து ராகத்துடன் படிப்பதுதான் தமிழ் மரபு. இன்றளவும் தெலுங்கு
முதியவர்களால் அப்படித்தான் படிக்கப்படுகிறது. தமிழில் இப் பழக்கம்
தாத்தா காலத்தோடு நின்றுவிட்டது.
சுரம் கூட்டிப் படிப்பதால் ஏற்பட்ட சில பலன்கள்:
1. சிலருக்கு மட்டுமே படிப்பறிவு இருந்த காலத்தில் ஒருவர் உரத்த குரலில்
படித்தாரென்றால் அருகிலுள்ள பலரும் அதைக் கேட்டு ரசிக்க முடிந்தது.
2. உரக்கப் படிப்பது படிப்பவரின் காதுகளுக்கே சென்று மனதில் மறு பதிவு
ஆகி நினைவில் நிற்க உதவிற்று,
3. ஓலைகளில் உள்ளவற்றைப் படிக்கச் சற்றுக் கூடுதல் அவகாசம் தேவைப்பட்ட
காலங்களில் ராகத்துடன் படிக்கும் போது போதுமான கால இடைவெளி கிடைத்தது.
4. தமிழ் உரைநடை, செய்யுள் அனைத்திலும் இசை கூட்டியே படித்துவந்தனர்.
முத்தமிழ் என்று நாம் வகைப்படுத்தினாலும் தமிழ் இசையுடன்தான்
ஒலிக்கப்பட்டது.
5. சுரம் சேர்த்து பாடப்பட்டதாலேயே தொழுகைப் பாடல்கள் ‘பாசுரம்’ என்று
ஆயிற்று எனக்கொள்ளலாம்.
6. புதுமை அல்லது நவீனம் என்ற பெயரால் அக்கலை அழிக்கப்பட்டு விட்டது.
இக்காலக் குழந்தைகளுக்கு அப்பயிற்சி கொடுக்கப் படலாம்.
7. பாசுரம் என்பதைத் திருமுகப் பா என் அழைக்கலாம்.
‘திருமுகம்’ என்றால் ‘கடிதம்’ என்று பொருள் கொள்கிறோம். அது குறிப்பாக
உயர்நிலையில் உள்ள ஒருவர் தன்னைவிடக் கீழ் நிலையில் உள்ளவர்க்கு எழுதும்
கடிதமாகும்.
மேற்கொண்டு அந்நூல் பற்றி வேறு செய்திகள் என்னிடம் இல்லை.
எம்.டி. ஜெயபாலன்
இம்முறையை நான் பார்த்துள்ளேன்; எம் பள்ளியில் குமாரசுவாமி முதலியார்
என்ற பெரிய தமிழாசிரியர் இருந்தார். அவர் இம்முறையில்தான் வகுப்பு
நடத்துவார்.
மாலையில் இவர் ஆலய வழிபாடு செய்ய வரும்போது அன்பர்கள் இவருக்காகக்
காத்திருப்பர். இவருடன் சேர்ந்து தொழுவதில் இன்பம் கண்டனர். இவர்
உருக்கத்துடன் பதிகம் ஓதி வழிபடுவார். சிறார்கள் அருகில் செல்ல மாட்டோம்,
எட்ட நின்று பார்ப்போம். பணி ஓய்வு பெற்ற பின்னர் கல்லூரிப்
பேராசிரியர்கள் சிலர் இவரிடம் பாடம் கேட்டனர்
தேவ்
On Jul 10, 12:09 am, "Dr M.D.Jayabalan"
ஓலையைத் `திருமுகம்` என்பது அதனை விடுத்தோரது உயர்வு பற்றி.
பாசுரம் - மிகுத்துரை பாட்டு
பாண பத்திரர் என்ற அடியாரின் வறுமை நீங்குமாறு சேரமான் பெருமாள்
நாயனாருக்குத் திரு ஆலவாய் உடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரம் -
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே
பதினோறாந் திருமுறையில் தொகுக்கப்பட்டது இறைவன் செய்த இந்த ஒரே
ஒருதிருமுகப் பாசுரம் மட்டுமே; வேறு யார் எழுதினாலும் அது திருமுகப்
பாசுரம் ஆகாது
**************************************************
இவ்வாறே பிற்காலத்தில் தில்லைப்பெருமானும் உமாபதி சிவாசாரியார் திரு
மடத்துக்கு விறகு அளித்துப் பணி செய்த பெத்தான் சாம்பானுக்கு முத்தி
அளிக்குமாறு
அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றங்
குடியார்க் கெழுதிய கைச்சீட்டு - படியின்மிசைப்
பெத்தான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து
முத்தி அளிக்க முறை
என்னும் சீட்டுக்கவி அளித்தருளிய வரலாறு சந்தானாசாரியர் புராணத்துள்
கூறப்பட்டுள்ளது
தேவ்
On Jul 8, 11:34 pm, aruran visu <visuaru...@gmail.com> wrote:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil