சமுத்திரம் என்று முடியும் ஊர்ப் பெயர்கள்.
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
நான்கு முறை மதுரைக்குக் கடல்வெள்ளம் (சுனாமி, ஆழிப்பேரலை) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது[1]. பஃறுளி ஆற்றுப் பன்மலை யடுக்கத்தையும், குமரிக்கோட்டையும், முதற் தமிழ்ச்சங்கம் நடைபெற்ற தென்மதுரையையும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தையும் கடல்கொண்டது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் பல காணப்படுகின்றன.
இந்த இலக்கியக் குறிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் ஏதும்செய்யப்படாமலேயே, இக்கருத்துகள் எல்லாம் பொய்யில் புலவர்களால் புனைந்து உருவாக்கப்பட்ட தொன்மம் என்று கூறிவந்தனர். இந் நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே “செழியன் கொடிநுடங்க மறுகின் கூடல்“[2] என்று அகநானூறும், “மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரை” என்று நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் சிறப்பித்துக் கூறும் கூடல் நகரம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப் பட்டது.
கீழடி போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற ஆய்வுகளில் பூமிக்கு அடியிலே பெருநகரங்கள் புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளால், தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கோள் என்ற செய்தியானது தொன்மக் கதைகள் அல்ல. அவைகள் உண்மை நிகழ்வுகள் என்று உணர்ந்து கொண்டேன்.
இந்நிலையில், இறையருளால்
2014 ஆம் ஆண்டு இராமேச்சுரம்-காசி பாதயாத்திரையும், மீண்டும்
2015 ஆம் ஆண்டு நாக்பூர்-காசி பாதயாத்திரையும்,
2016 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும், மீண்டும்
2017 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும்
செல்லும் செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன்.
பாதயாத்திரைப் பயணத்தில் வழிநெடுகிலும் காணக்கிடைக்கும் கல்லையும் மண்ணையும் சுனாமியின் எச்சங்களாகக் கண்டேன். அவற்றினைச் சேகரித்து முறையான அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளேன். பாதயாத்திரை செல்லும் வழிகளில் “சமுத்திரம்” என்று முடியும் பெயர்களை ஊர்களையும் ஆங்காங்கே கண்டேன்.
இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயரைச் சேர்த்து வைத்தது யார் ?

அல்லது,
இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயர் வைத்த காரணம் என்ன ?
என்ற ஐயங்கள் என்னுள் எழுந்தன.
பண்டைத் தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (சுனாமி) தாக்கி அழிந்துள்ளது என்ற தமிழ் இலக்கியச் செய்திகளை அறிவியில் அடிப்படையில் நிறுவுவதற்கு ஏதுவாகச் சமுத்திரம் என்று முடியும் ஊர்களின் பெயர்களைத் தொகுத்து இணைத்துள்ளேன். எனது தேடலில் 54 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
1) கடலூர்
2) கொண்ட சமுத்திரம், kondasamudram 608701, cuddalore Dist
3) செக சமுத்திரம், Jakka samudram 636805, Dharmapuri
4) வேங்கட சமுத்திரம், Venkata samudram 636905, Dharmapuri
5) பாலசமுத்திரம் Bala samudram 624610, Dindigul Dist
6) சமுத்திரா பட்டி, Samudrapatti 624402, Dindigul Dist
7) கெட்டி சமுத்திரம், Getti samudram 638501 Erode dist
8) ரெங்க சமுத்திரம், Rangasamudram 638402, Erode Dist
9) திம்ம சமுத்திரம், Thimam samudram 631 502 Kanchipuram dist
10) எல்.என்.சமுத்திரம், L.N.Samudram 639002, Karur Dist
11) வேங்கட சமுத்திரம், Venkata samudram 635104, Krishnagiri
12) கோபால சமுத்திரம், Gopala samudram 609108, Nagapattinam Dist
13) வில்லந்திட சமுத்திரம், Vilanthida Samudram 609111, Nagapattinam Dist
14) பூமா சமுத்திரம், Bomma samudram 637001, Namakkal Dist
15) மால சமுத்திரம், Malla samudram 637503, Namakkal Dist
16) நமன சமுத்திரம், Namana samudram 622422, Pudukottai Dist
17) அப்பம்மா சமுத்திரம், Appama samudram 636108, Salem Dist
18) சங்கம்மா சமுத்திரம், Jangamma samudram 636 113, Salem Dist
19) கோண சமுத்திரம், Kona samudram 637102, Salem Dist
20) சமுத்திரம், Samudram 636306, Salem Dist
21) சமுத்திரம், Samudram 630710, Sivaganga Dist
22) திருமலை சமுத்திரம், Thirumalai samudram 613402, Thanjavur Dist
23) தியாக சமுத்திரம், Tyaga samudram 612301, Thanjavur Dist
24) ரெங்க சமுத்திரம், Renga samudram 625562, Teni Dist
25) பாலசமுத்திரம் 625512
26) திம்மராய சமுத்திரம், Thimmaraya Samuthiram, Near New Cauvery Bridge, Tiruchirappalli,
27) திருமலை சமுத்திரம், Thirumalai Samudram village in Thanjavur Tehsil, Thanjavur,
28) சின்னபாபு சமுத்திரம், chinnababu samudram 605102, Villupuram Dist.
29) மூல சமுத்திரம், Moola samudram 606107 , villupuram Dist
30) பெரியபாபு சமுத்திரம், periyababu samudram 605102, villupuram Dist
31) தாண்டவசமுத்திரம் Thandava samudram 604151, Villupuram Dist
32) அப்பம்மாசமுத்திரம் 616108
33) அம்பா சமுத்திரம் Amba samudram 627401, Tirunelveli Dist
34) அம்பா சமுத்திரம் Amba samudram Pudukudi 627435, Tirunelveli Dist
தமிழ்நாட்டு மன்னர்கள், செல்வந்தர்கள் உண்டாக்கிய பெரிய ஏரிகள் கடல் என்றும், சமுத்திரம் என்றும் அழைக்கப்பெற்றன. நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியில் வந்து குடியேறிய படைத்தலைவர்கள் பெயரில் பெருங்குளங்கள் பல ஆங்காங்கே அமைந்தன. அவற்றைச் சார்ந்த ஊர்களை அவரவர் பெயரால் அழைத்தனர். இரவணன், வடமலை, அரங்கன், தளபதி, வாலன், கோபாலன் என்பவர்களுடைய பெயரால் தென்பாண்டி நாட்டில் ஆங்காங்கே ஊர்கள் அமைந்தன. இரவண சமுத்திரம், வடமலை சமுத்திரம், அரங்க சமுத்திரம், தளபதி சமுத்திரம், வாலசமுத்திரம், கோபால சமுத்திரம் என்பவை இவ்வாறு பெயர் பெற்ற ஊர்களாகும். பெருங்கடல் போல மிகுந்த நீருடைய பெருங்குளத்தைக் கொண்ட ஊர்கள் சமுத்திரம் எனும் பெயரால் சேர்த்து அழைக்கப்பெற்றன. இங்கு அம்பா, அம்மா, அம்மை என்ற சொற்கள் தாய், காளி, உமாதேவி என்ற பொருளை உடையன.இந்த ஊரிலுள்ள முதன்மைக் கோயிலான மரகதவல்லி அம்மையின் பெயரால் இது அமைந்து அம்மை சமுத்திரம் என்றாகி இருக்க வேண்டும்.[6]
35) தளபதி சமுத்திரம், Dalapathi samudram 627101, Tirunelveli Dist
36) கோபல சமுத்திரம், Gopala samudram 627451, Tirunelveli Dist
37) இராவண சமுத்திரம், Ravana samudram 627424, Tirunelveli Dist
38) இரெங்க சமுத்திரம், Renga samudram 627413, Tirunelveli Dist
39) கோண சமுத்திரம், Kona samudram 631202,Tiruvallur Dist
40) கிருஷ்ண சமுத்திரம், Krishna samudram 631 206, Tiruvallur Dist
41) இராம சமுத்திரம், Rama samudram 631206, Tiruvallur Dist
42) கோபால சமுத்திரம், Gopala samudram 614001, Tiruvarur Dist
43) வடமலை சமுத்திரம், Vadamalai samudram 628907 Thoothukudi Dist
44) வால சமுத்திரம், தூத்துக்குடி அருகில்
45) சென்ன சமுத்திரம், Chenna samudram 632506, Vellore Dist
46) சின்ன சமுத்திரம், Chinna samudram 635653, Vellore Dist
47) கிரி சமுத்திரம், Giri samudram 635751, Vellore Dist
48) காம சமுத்திரம், Kamma samudram 632319, Vellore Dist
49) சோம சமுத்திரம், Soma samudram 631102, Vellore Dist
50) திப்ப சமுத்திரம், Tippa samudram 635809, Vellore Dist
51) வேங்கிட சமுத்திரம், Venkata samudram 635811, Vellore Dist
52) மூல சமுத்திரம், Moola samudram 606107, Villupuram Dist
53) சங்கம்மாசமுத்திரம் 636113
54) கிருஷ்ண சமுத்திரம் 620013 (திருவெறும்பூர் அருகில்)
55) நாக சமுத்திரம் nagasamthiram karnadaga (away from Bangalore)
கடலூரையும் சேர்த்து மொத்தம் 55 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சமுத்திரம் என்று முடியும் பெயர்களைக் கொண்ட ஊர்கள் இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
கேரளம், கருநாடகம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சமுத்திரம் என்ற பெயரில் உள்ள ஊர்கள் கண்டறியப்பட வேண்டும்.
அன்பன்
கி.காளைராசன்
--
| அம்பா சமுத்திரம் |
| x |
| அம்பா சமுத்திரம் |
| x |
| கோபால சமுத்திரம் |
| x | |
| சமுத்திரம் | x |
| சமுத்திரம் | x |
| செக சமுத்திரம் |
| x |
| திம்ம சமுத்திரம் |
| x |
| திம்மராய சமுத்திரம் |
| x |
| திருமலை சமுத்திரம் |
| x |
| திருமலை சமுத்திரம் |
| x |
| பூமா சமுத்திரம் |
| x |
| ரெங்க சமுத்திரம் |
| x |
| ரெங்க சமுத்திரம் |
| x |
| வேங்கட சமுத்திரம் |
| x |
| வேங்கட சமுத்திரம் |
| x |
| பாலசமுத்திரம் |
| x |
| பாலசமுத்திரம் |
| x |
| அப்பம்மா சமுத்திரம் | |
| அப்பம்மாசமுத்திரம் |
| எல்.என்.சமுத்திரம் |
| கெட்டி சமுத்திரம் |
| கொண்ட சமுத்திரம் |
| கோண சமுத்திரம் |
| சங்கம்மா சமுத்திரம் |
| சமுத்திரா பட்டி |
| சின்னபாபு சமுத்திரம் |
| தாண்டவசமுத்திரம் |
| தியாக சமுத்திரம் |
| நமன சமுத்திரம் |
| பெரியபாபு சமுத்திரம் |
| மால சமுத்திரம் | |
| மூல சமுத்திரம் |
| வில்லந்திட சமுத்திரம் |
சமுத்திரம் என்று முடியும் ஊர்ப் பெயர்கள்.
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
சமுத்திரம் என்று முடியும் ஊர்ப் பெயர்கள்.
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
நான்கு முறை மதுரைக்குக் கடல்வெள்ளம் (சுனாமி, ஆழிப்பேரலை) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது[1]. பஃறுளி ஆற்றுப் பன்மலை யடுக்கத்தையும், குமரிக்கோட்டையும், முதற் தமிழ்ச்சங்கம் நடைபெற்ற தென்மதுரையையும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தையும் கடல்கொண்டது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் பல காணப்படுகின்றன.
இந்த இலக்கியக் குறிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் ஏதும்செய்யப்படாமலேயே, இக்கருத்துகள் எல்லாம் பொய்யில் புலவர்களால் புனைந்து உருவாக்கப்பட்ட தொன்மம் என்று கூறிவந்தனர். இந் நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே “செழியன் கொடிநுடங்க மறுகின் கூடல்“[2] என்று அகநானூறும், “மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரை” என்று நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் சிறப்பித்துக் கூறும் கூடல் நகரம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப் பட்டது.
கீழடி போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற ஆய்வுகளில் பூமிக்கு அடியிலே பெருநகரங்கள் புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளால், தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கோள் என்ற செய்தியானது தொன்மக் கதைகள் அல்ல. அவைகள் உண்மை நிகழ்வுகள் என்று உணர்ந்து கொண்டேன்.
இந்நிலையில், இறையருளால்
2014 ஆம் ஆண்டு இராமேச்சுரம்-காசி பாதயாத்திரையும், மீண்டும்
2015 ஆம் ஆண்டு நாக்பூர்-காசி பாதயாத்திரையும்,
2016 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும், மீண்டும்
2017 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும்
செல்லும் செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன்.
பாதயாத்திரைப் பயணத்தில் வழிநெடுகிலும் காணக்கிடைக்கும் கல்லையும் மண்ணையும் சுனாமியின் எச்சங்களாகக் கண்டேன். அவற்றினைச் சேகரித்து முறையான அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளேன். பாதயாத்திரை செல்லும் வழிகளில் “சமுத்திரம்” என்று முடியும் பெயர்களை ஊர்களையும் ஆங்காங்கே கண்டேன்.
இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயரைச் சேர்த்து வைத்தது யார் ?
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
அல்லது,
35) தளபதி சமுத்திரம், Dalapathi samudram 627101, Tirunelveli Dist
இந்த மூன்று ஊர்களும் எங்கே உள்ளன?இவற்றை இணையத்தில் தேடிப்பார்க்கும் வகையில் இந்த ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் கொடுத்தால் எனக்குப் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி
அன்பன்கி.காளைராசன்
பெருமாள் முருகன்.
21.03.2012 ஆனந்த விகடன்
மன்னாசமுத்திரம்
பெருமழைச் சொட்டுக்கள் முத்தான் நெற்றிப் பொட்டில் வெங்கச்சங்கற்களாய் விழுந்தன. வானத்தை அண்ணாந்து பார்த்தான். கருகும்மென்று இருந்தது. வெகுநேரம் நூல் பிடித்தாற் போல் கொட்டிய மழை இப்போது சொட்டுக்களாய்க் குறைந்திருக்கிறது. இப்படியே படிப்படியாகக் குறைந்தால் நல்லது. மூன்று நாட்களாக இடைவிடாமல் பெய்து சலிக்கிறது. எல்லா இடமும் நசநசத்து ஈரம். ஆடுகள் ஒருநிமிடம்கூடப் படுக்க முடியாமல் நின்றுகொண்டே இருக்கின்றன. ஒருவேலையும் ஓடவில்லை. புற்கள் அழுகத் தொடங்கிவிட்டன. கடலைக்கொடிப் போர் இருப்பதால் ஆடுகள் அரைவயிறாவது நிரம்புகின்றன.
அண்ணாந்த முகத்தில் மழைச்சரம் வந்து தாக்கத் தொடங்கியது. உடனே கொட்டாய்க்குள் போய் கட்டில் மேல் உட்கார்ந்துகொண்டான். மழையின் வேகம் கூடக்கூட உள்ளேயிருந்த வெள்ளாடுகளின் கத்தல் கூடியது. என்னவாகுமோ தெரியவில்லை. ஏரியில் தண்ணீர் நிறைந்து ஐந்தாறு ஆண்டுகள் இருக்கும். அப்போதும் இப்படித்தான். ஒன்றுக்கிருக்கக் கூட வெளியே போக விடவில்லை. ஏரிக்கரை ஓரமாய் இருக்கும் அவன் காட்டில் கடலை போட்டிருந்தான். ஏரி நிறைந்து காடு முழுக்கத் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது. மதகில் வழிந்து வெளியேறிக் கொண்டேயிருந்தாலும் காட்டில் நின்ற தண்ணீர் மட்டம் குறையவே இல்லை. பூத்துச் செழித்திருந்த கடலைக் கொடிகள் அழுகி நீர்ச்சமாதி ஆகிவிட்டன. ஓர் ஏக்கரில் போட்டிருந்த கடலை முழுக்கவும் காலி. ஆடுகளுக்குக் கொடி பிடுங்கக்கூட வழியில்லை. இந்த வருசம் என்னவாகுமோ?
ஆட்டுக்கொட்டாயை விட்டுத் ஓலைக்குடையைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குச் சோறுண்ணப் போனான். இருட்டில் தடுமாற்றம். பழகிய வழிதான் எனினும் தேங்கியும் ஓடியும் வெள்ளம் பாதையைப் புதிதாய் ஆக்கிவிட்டிருந்தது. எடுத்து வைக்கும் அடிதோறும் மழை தாக்கியது. இது இப்போதைக்கு ஓயாத பேய் மழைதான். மழையைப் பற்றிப் புலம்பிக் கொண்டே சோறு போட்டாள் செல்லாயி. அவன் ஒரு வார்த்தையும் பேசாமல் உண்டான். ‘எதுக்கு இப்பிடி உம்முனு இருக்கற? ஒலகத்துல கோடானு கோடி உசுரு வாழுது. ஊடு கட்டி ஒதுங்கிக் கெடக்கற மனசனே இப்பிடிக் கஷ்டப்பட்டா அதுவெல்லாம் என்ன பண்ணும்? ஒரு பத்து நாளைக்கிக் கஷ்டப்பட்டா வருசம் பூரா வளமா இருக்கலாம். தொரசாமி மனசு வெச்சா இந்த வெருசம் ஏரி நெறஞ்சிரும். சனங்க நெல்லஞ்சோறு தின்னும். ஒன்னயும் நெனைக்காத போயிப் போத்திப் படு போ’ என்றாள் அவள். அவனுக்கு அவளைப் பிடித்திழுத்து இரண்டு சாத்தலாமா என்றிருந்தது. ஏரி நீருக்குள் மூழ்கப் போகும் கடலைக்கொடி பற்றி அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.
எதுவும் பேசாமல் சோறுண்டு விட்டுத் திரும்பும்போது லாந்தரைக் கையில் கொடுத்துவிட்டாள். காலடிக்குள் வெளிச்சத்தைத் தந்தது அது. அவன் யோசனை கடலைக்காட்டை எப்படிக் காப்பாற்றுவது என்றேதான் ஓடியது. ஏரிக்குக் காட்டை அரசாங்கம் எடுத்தபோது ஏரி நிரம்பினால் காட்டுக்குள் தண்ணீர் நிற்கும் என்பது தெரிந்தேதான் இருந்தது. என்றாலும் ‘எப்பவோ ஒரு வருசம் தண்ணி வருதுன்னு காட்ட உட்டற முடியுமா? அந்தக் காட்டுல நம்மளாட்டம் எளிய வெள்ளாமை எதுனா வெச்சுக்க வேண்டியதுதான்’ என்று அவன் அப்பன் சொல்லியிருக்கிறார்.
அப்பன் இருந்த வரைக்கும் சோளம்தான் விதைப்பார். சோளப்பயிர் ஆளுயரம் நிற்கும். ஏரி நிறைந்தாலும் கணுக்கால் அளவு தண்ணீருக்குள் போய்ச் சோளத்தட்டைப் பிடுங்கி வந்துவிடலாம். ஆனால் முத்து அந்தக் காட்டில் எப்போதும் கடலைதான் போடுகிறான். செம்மண் காட்டில் கொடிக்கடலை போட்டால் கொத்துக்கொத்தாகக் காய்க்கும். அந்த ஆசைதான். இந்த வருச மழையில் எப்படியும் ஏரி நிறைந்துவிடும். காட்டோடு கடலை போய்விடும். சோளம் விதைத்திருந்தால் பிரச்சினை இல்லையே என்று இந்த மாதிரி சமயத்தில் தோன்றும். என்றாலும் ஆசை விடுவதில்லை. கடலையை எப்படியாவது காப்பாற்ற முடிந்தால் போதும். அடுத்த வருசம் சோளம் விதைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். எப்படிக் காப்பாற்றுவது?
ஆட்டுக் கொட்டாயில் தூக்கமின்றி படுத்துக் கிடந்தான். கொட்டாயின் மேல் மழை கொட்டுவதையும் அது குறைந்து சிணுங்குவதையும் ஓலைச் சத்தத்தை வைத்தே உணர்ந்தான். மழை பெரும்பாலும் ஊற்றிக் கொண்டேதான் இருந்தது. காட்டுக்குள் தண்ணீர் நிற்காமல் செய்ய வேண்டுமானால் ஏரி மதகு இன்னும் கொஞ்சம் உயரம் குறைந்திருக்க வேண்டும். தோளுயர மதகில் ஓரிடத்தில் மார் அளவு உடைப்பை ஏற்படுத்தி விட்டால் போதும். காட்டுக்குள் ஒரு சொட்டுத் தண்ணீர் நிற்காது. உடைத்து விட்டால் யாராவது கண்டுபிடித்து விடுவார்களா? அவன் காடு மட்டுமல்ல, இன்னும் சிலரின் காடுகளுக்கும் இந்தக் கதிதான். ஆக யாரென்று தெரியும்? ஒவ்வொரு முறை ஏரி நிரம்பும்போதும் இந்த யோசனை மனதில் வரும். செயல்படுவதற்குள் காலம் கடந்துவிடும். இந்த முறை அப்படி ஆக விடக்கூடாது.
ஏரியின் வால் பகுதியில் கொஞ்சம் பேர் கொட்டாய் போட்டுக் குடியிருக்கிறார்கள். இந்நேரம் அவர்கள் காலி செய்து கொண்டு மேடேறி இருப்பார்கள். அவர்கள்கூட மதகை உடைத்துவிட வேண்டும் என்று நினைத்திருக்கலாம். யார் யார் மீதோ சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது. மதகை உடைத்துவிட வேண்டியதுதான் என்று நினைப்பு பலமாக ஓடியது. சாக்குப் போர்வைக்குள் நெண்டிக் கொண்டே கிடந்தான். வெகுநேரத்திற்குப் பிறகு ஒரு முடிவோடு எழுந்தான். மழை வலுத்துத்தான் இருந்தது. சாக்கைப் போர்த்திக் கொண்டு ஓலைக்குடையுடன் வெளியே வந்தான். லாந்தர் வேண்டாம். கொட்டாயின் ஓரத்தில் ஓடும் மழை நீரில் நீண்டு கிடந்த கடப்பாரையை எடுத்துக்கொண்டான். ஈரத்தில் விறைத்திருந்த கை கடப்பாரையைப் பிடித்ததும் சூடு கொண்டதாக மாறியது போலிருந்தது. மழைக்குள் நடந்தான்.
இத்தனை அடர்இருளை அவன் வாழ்நாளில் கண்டதில்லை. தடம் அவனுக்குப் பழக்கமானதுதான். கால்களை வேண்டுமென்றே சத்தம் வரும்படி ஓங்கி வைத்து நடந்தான். சேறு தெறித்துக் கால்களில் அப்பியது. எனினும் காலடிச் சத்தம் கேட்டுப் பூச்சி பொட்டுகள் பயந்தோடும் என்று அப்படியே நடந்தான். நேரத்தை அனுமானிக்க முடியவில்லை. பொரியை இறைத்தது போல நிறைந்திருக்கும் வானம் இப்போது இருப்பதே தெரியவில்லை. கடப்பாரையால் மதகை இடிப்பது சுலபமாக இருக்குமா? பலகாலமாகி விட்ட ஏரி. அவனுடைய அப்பன் சின்னப் பையனாக இருக்கும்போது கட்டிய ஏரி. இந்தப் பக்கத்துக் கிணறுகள் எல்லாம் வருசாவருசம் தை தொடங்கியதும் காய்ந்துவிடும். ஐந்தாறு மாதங்களுக்குத் தண்ணீர் பெரும்பாடு. மாடுகன்றுகளை விற்றுவிட்டு மழை வந்தபின் புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். தண்ணீர் இல்லை என்றால் எதுவுமில்லை. வேண்டாத சாமியில்லை. வைக்காத வேண்டுதல் இல்லை.
ஒரு வருசம் இந்தப் பக்கம் குதிரையில் வந்த வெள்ளைக்காரத் துரை ஒருவருக்குத் தாகம். தொண்டை வறண்டு எச்சிலும் வற்றிப் போய்விட்டது. எங்காவது ஒருகை தண்ணீர் கிடைத்தால்தான் உயிர் பிழைத்துக் கிடக்கும் என்னும் நிலை. வழியில் இருந்த கிணறுகள் எல்லாம் வற்றிக் கிடந்தன. தாங்கள் குடித்துக் கொண்டிருந்த சேற்றுத் தண்ணீரைத் துரைக்குக் கொடுக்க எல்லாருக்கும் தயக்கமாக இருந்தது. என்றாலும் உயிர்க் காரியம். எத்தனை வேகமாகக் குடித்தாரோ அதே வேகத்தில் எக்கி வாந்தி எடுத்தார். அந்தத் துரைதான் இந்த ஏரியைக் கட்டுவதற்குக் காரணம். ஏரி என்றால் சாமான்யப்பட்ட ஏரி அல்ல. சமுத்திரம். ஊருக்கே அப்படிப் பேராகிவிட்டது. ‘மன்னாசமுத்திரம்.’ துரையின் பேர் மன்றோ. அவர் பேரை வைத்து ‘மன்றோ சமுத்திரம்’ என்று வைக்கப்பட்ட பெயர் இப்படியாகிவிட்டது.
எங்கெங்கோ இருந்து வேலை செய்ய ஆட்கள் கூட்டம் கூட்டமாய் வந்தார்கள். மண்ணை வெட்டுவதும் கூடையில் அள்ளிக் கொண்டு வந்து கொட்டுவதுமாய் வருசக்கணக்கில் வேலை நடந்தது. ஏரிக்கரையை மலை போல உயர்த்த வேண்டும் என்றால் சும்மாவா? ஊரில் யாரும் அப்போது வெள்ளாமைக் காட்டுப் பக்கம் போகவில்லை. ஏரி வேலைதான். ஏரி வந்துவிட்டால் முப்போகம் நெல் நடலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஒரு வருசம் வீசியடித்த பெருமழையில் ஏரிக்கரை தூர்ந்து பாதி காணாமல் போயிற்று. என்றாலும் துரை அசரவில்லை. ஒரு வருசம் மழை முடிந்ததும் மதகைக் கட்டும் வேலை தொடங்கிற்று. மறுமழை வரும் முன் அதை முடித்தாக வேண்டும். மதகை மட்டும் சுண்ணாம்பும் முட்டையும் கலந்து கட்டுவதற்கு ஆறுமாதமாயிற்று.
ஏரி கட்டி முடித்த வருசம் நல்ல மழை. ஏரி நிரம்பியது. சுற்று வட்டாரக் கிணறுகளில் எல்லாம் கடைபோக நீர் ததும்பிற்று. அந்தப் பக்கத்துத் தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று தெரிந்த துரையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். துரையின் கால்களில் விழுந்தும் கையெடுத்தும் கும்பிட்ட மக்கள் அனேகம். அவரை எல்லாரும் கடவுளாகவே நினைத்தார்கள். இதைச் சொல்லிவிட்டு அவர் அப்பன் சொல்வார், ‘ஏரியில வருசவருசம் தண்ணி வல்லீனாலும் இந்தப் பக்கம் கெணத்துல குருவி குடிக்கற அளவுக்காச்சும் தண்ணி கெடக்கறது அந்த தொரசாமியாலதான்.’ ஏரிக் கரையோரம் காவலுக்கு வைக்கப்பட்ட முனியப்பன் கோயிலில் ஒருபக்கம் முழுக்கால் அங்கராக்கும் சட்டையும் போட்டுக்கொண்டு கையில் துப்பாக்கி பிடித்தபடி துரைசாமி சிலையும் நிற்கிறது. முனியப்பனுக்குப் போலவே துரைசாமிக்கும் பூசை உண்டு. ஏரிப் பாசனத்தைப் பயன்படுத்தும் குடும்பங்களில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு பையனுக்குத் துரைசாமி என்று பெயர் இருக்கும்.
முத்தான் ஏரிக்கரைக்குப் போய்ச் சேர்ந்தபோது எங்கிருந்தோ வந்து ஏரிக்குச் சேரும் நீரின் போரோலம் கேட்டது. இருளில் ஒன்றும் தெரியவில்லை. ஒரு மின்னல் பளீரிட்டு மறையும்போது பார்த்தான். இன்னும் ஏரி நிறையவில்லை. தலைதட்டும் அளவு நீர் தெரிந்தது. ஏரி இரவுக்குள் நிரம்பிவிடும் என்பதை நீரோலம் உணர்த்தியது. ஏரிக்கரையிலும் ஏரிக்குள்ளும் வளர்ந்திருக்கும் முட்களையும் மரங்களையும் ஆள்விட்டு வெட்டி வைத்திருந்ததால் அவனுக்குத் தடுமாற்றம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைத்திருந்தும் பல வருசம் ஏமாற்றிவிடும் மழை. ஏரி காவலுக்கும் ஓர் ஆளைப் போட்டு வைத்திருப்பார்கள். மழைக்காலம் முடியும் மட்டும் காவலிருந்தால் போதும்.
ஏரிக்கரை மீது நின்று பார்த்த போது அவன் காடு முழுக்கவும் இருளாகத் தெரிந்தது. மறுமின்னல் அடிக்கும்வரை காத்திருந்தான். அடுத்த மின்னல் இடியோடு வந்திறங்கியது. அவன் காடு முழுக்கத் தளதளவென்று கடலைக் கொடிகள் அகண்டு படர்ந்திருந்த அழகை ஒருகணம் கண்டான். காட்டுக்குள் நீரேற்றம் தொடங்கியிருந்தது. விடிவதற்குள் எல்லாம் நீருக்குள் மூழ்கிவிடும். இந்த வருச உழைப்பு முழுக்கப் பாழ்தான். எப்படியும் கடலையைக் காப்பாற்றிவிட வேண்டும். ஓலைக்குடையைக் கரைமேல் இருந்த ஊஞ்சக் கொத்தில் மாட்டிவிட்டுக் கடப்பாரையோடு கீழே இறங்கினான். மழை மேலும் வலுத்தது. வெற்றுடம்பில் சாட்டை வீசினாற்போல் துளிகள் விழுந்தன. கடப்பாரையைத் தூக்கியபடி மதகை நெருங்கினான்.
மதகின் முன்னிருந்த பாறைகள் இன்னும் பாசி படிந்திருக்கவில்லை. எனினும் கால்களை அழுந்த வைத்து மதகில் ஏறினான். மேல் பகுதி கூம்பு வடிவில் அமைந்திருந்தது. இருபுறமும் கால்களைப் போட்டு வாகாக உட்கார்ந்தான். நீளச் செல்லும் மதகைத் திரும்பிப் பார்த்தான். நேராய் நிமிர்த்தி வைத்த பாம்பாய் முன்னும் பின்னும் தெரிந்தது. இருபுறமும் சமமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டான். மையத்தில் உடைத்தால்தான் இருபுறத்து நீரும் ஒரே அளவாய்த் திரண்டு வந்து வழியும். முன்புறமாய் நகர்ந்து மீண்டும் சரிபார்த்தான். மதகின் உள்புறம் வைத்திருந்த கணுக்கால் பகுதி நீருக்குள் மூழ்கியது. இன்னும் ஓரடி நீர் உயர்ந்தால் மதகின் கூம்புப் பகுதியை எட்டிவிடும்.
வாகான இடம் பார்த்துக் கடப்பாரையை ஓங்கிப் போட்டான். ணங்கென்ற சத்தத்தோடு கடப்பாரை கைகளிலிருந்து மேலெழும்பியது. மீண்டும் இரண்டு மூன்று முறை போட்டான். கடப்பாரை எதிர்த்து அடித்ததே தவிர மதகில் சிறுகாயமும் பட்ட மாதிரி தெரியவில்லை. மதகின் மீது கோபம் மிகுந்து இரண்டில் ஒன்று பார்த்துவிடும் வேகம் வந்தது. எழுந்து நின்று கடப்பாரையை ஓங்கப் பார்த்தான். கால்கள் வழுக்கின. மீண்டும் உட்கார்ந்து முயன்றான். கால் மேல் நீரேறி உயர்ந்து கொண்டே வந்தது. அவன் எதையும் கவனிக்கவில்லை. மதகைச் சிதைத்து விடும் ஆவேசம். ஓங்கி ஓங்கிக் கடப்பாரையைப் போட்டபடியே இருந்தான். கடப்பாரைச் சத்தம் நீரோசைக்குள் ஒடுங்கியது.
கடப்பாரையை ஓங்கிய தருணம் ஒன்றில் மதகின் வெளிப்புறம் வைத்திருந்த காலை எதுவோ கவ்வுவது போலத் தெரிந்தது. சட்டென இழுத்த போதும் கால் வரவில்லை. ஓங்கிய கையை இறக்காமல் குனிந்து பார்த்தான். முகத்தை நீர்த்தாரை மூடியிருக்க நிற்கும் செல்லாயி மின்னல் வெட்டில் தெரிந்தாள். காலை உதறிவிட்டுக் கடப்பாரையை மதகின் மேல் போட்டான். ஏதேதோ சொல்லிக் கொண்டு தன் கைகள் இரண்டையும் உயர்த்திக் கடப்பாரை விழும் இடத்தில் வைத்தபடி மதகோடு ஒட்டிக்கொண்டாள். இத்தனை முறை கடப்பாரையைப் போட்டதில் லேசான காயம் விழுந்திருந்த இடத்தில் இப்போது செல்லாயி கைகள். கால்களால் அவள் கைகளை விலக்கப் பார்த்தான். அவள் அசையாமல் அப்படியே இருந்தாள். அவன் உதைக்கும் போதெல்லாம் அண்ணாந்து ஏதோ சொன்னாள். அவள் வார்த்தைகள் தெளிவாகக் கேட்கவில்லை.
இந்தச் சமயத்தில் எதற்கு வந்தாள்? பல்லி போல மதகில் ஒட்டிக் கிடக்கும் அவள் கைகளை விலக்க முடியவில்லை. கடப்பாரையை ஊன்றிக் கீழே குதித்தான். அவள் தலைமயிரைக் கொத்தாகப் பற்றித் தூர இழுத்து வந்தான். இப்போது மழை குறைந்திருந்தது. ‘போய்த் தொல சனியனே’ என்று அவளை உந்தித் தள்ளினான். ஊர்ந்தபடி அவன் கால்களைப் பற்றிக் கொண்ட அவள் ‘வேண்டாம். உடமாட்டன்’ என்றாள். அவனை அசையவிடாமல் கால்களைப் பிடித்திருந்தாள். மீண்டும் அவள் மயிரைப் பற்றித் தூக்கி இழுத்து எறிந்தான். அவன் விட்ட வேகத்தில் மழையோடு அப்படியே ஓடினாள். அவள் ஓடும் வேகம் பார்த்துப் பயந்த அவன் பின்னாலேயே ஓடினான். திறந்த வெளியில் நின்றிருந்த முனியப்பன் கோயிலுக்குள் அவள் புகுவது மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது. கோயிலுக்குள் அவனும் நுழைந்தான். கண்ணுக்கு அவள் தென்படவில்லை. மின்னலின் துணையோடு எல்லாப்புறமும் பார்த்தான். வானம் முழுக்கப் பளீரிட்ட மின்னல் தோன்றியபோது விழித்துப் பார்க்கும் துரைசாமி சிலை தெரிந்தது. அதன் கையிலிருந்த துப்பாக்கி அவனையே குறி பார்த்துக் கொண்டிருந்தது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2018-03-20 6:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:புதுக்கோட்டை அருகே உள்ள நமணசமுத்திரம் சமணர்களின் ஊர். தீர்த்தங்கரர்களுகு நமணர் என ஒரு பெயர். சேது குறிப்பிட்ட சமணர் ஊர்வரலாற்றைப் பின்னர் பார்ப்போம். தோரசமுத்திரமும் அறிவோம்.
நம = வணக்கம்நமண(ன்) = வணங்குபவன்நமண (சமுத்திரம்) = வணங்கும் சமுத்திரம் என்றுதானே பொருளாகிறது? ஐயா.
வணக்கம்.
On 19 March 2018 at 22:34, பழமைபேசி <pazam...@gmail.com> wrote:ஆஆ.... எங்க பேட்டையில, குடிமங்கலம் அருகே ‘முத்துசமுத்திரம்’ எனும் ஊர் இருக்கிறது. நான் இளம்வயதில் அடிக்கடி சென்று வருவேன். :-))
நன்றி.அப்படியே முத்துசமுத்திரத்தின் PIN மற்றும், முத்துசமுத்திரத்தில் சமுத்திரத்தை ஒப்பிடும் அளவிற்குப் பெரிய ஏரியேதும் உள்ளதா? என்ற தகவல்களையும் அன்புடன் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்பன்கி.காளைராசன்
--
வணக்கம்.
2018-03-18 23:47 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அம்பாசமுத்திரம்பெயர்க் காரணம்[தொகு]
தமிழ்நாட்டு மன்னர்கள், செல்வந்தர்கள் உண்டாக்கிய பெரிய ஏரிகள் கடல் என்றும், சமுத்திரம் என்றும் அழைக்கப்பெற்றன. நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியில் வந்து குடியேறிய படைத்தலைவர்கள் பெயரில் பெருங்குளங்கள் பல ஆங்காங்கே அமைந்தன. அவற்றைச் சார்ந்த ஊர்களை அவரவர் பெயரால் அழைத்தனர். இரவணன், வடமலை, அரங்கன், தளபதி, வாலன், கோபாலன் என்பவர்களுடைய பெயரால் தென்பாண்டி நாட்டில் ஆங்காங்கே ஊர்கள் அமைந்தன. இரவண சமுத்திரம், வடமலை சமுத்திரம், அரங்க சமுத்திரம், தளபதி சமுத்திரம், வாலசமுத்திரம், கோபால சமுத்திரம் என்பவை இவ்வாறு பெயர் பெற்ற ஊர்களாகும். பெருங்கடல் போல மிகுந்த நீருடைய பெருங்குளத்தைக் கொண்ட ஊர்கள் சமுத்திரம் எனும் பெயரால் சேர்த்து அழைக்கப்பெற்றன. இங்கு அம்பா, அம்மா, அம்மை என்ற சொற்கள் தாய், காளி, உமாதேவி என்ற பொருளை உடையன.இந்த ஊரிலுள்ள முதன்மைக் கோயிலான மரகதவல்லி அம்மையின் பெயரால் இது அமைந்து அம்மை சமுத்திரம் என்றாகி இருக்க வேண்டும்.[6]
நன்றி.“பெருங்கடல் போல மிகுந்த நீருடைய பெருங்குளத்தைக் கொண்ட ஊர்கள் சமுத்திரம் எனும் பெயரால் சேர்த்து அழைக்கப்பெற்றன“ என்று ஒருயூகமாகத்தான் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஆதாரமாக இந்த ஊர்களின் அருகே உள்ள ஏரிகளின் பெயரைக்கூட அவர்கள் ஆதாரமாகக் காட்ட வில்லை. அருகில் உள்ள ஏரிகளின் பெயரை அறிந்து கொள்ளாமல் ஏரியினால்தான் சமுத்திரம் என்ற பெயர் இந்த ஊர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?மேலும், நான் குறிப்பிட்டுள்ள பல ஊர்களில் சமுத்திரம் போன்ற அல்லது சிறியதொரு நீர்நிலைகளே கிடையாது. ஒரு சிறு ஏரி அளவு உள்ளதைக் கடலுடன் ஒப்பிடும் அளவிற்குப் பெயர் வைத்துக் கொள்வதால் தங்களது ஆட்சியின் மாட்சிமை குறைந்துவிடும் எனக் கருதி, அந்தக் காலத்தில் மன்னர்கள் அனுமதித்து இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.நானும், சமுத்திரத்துடன் (கடலுடன்) இந்த ஊர்களின் பெயர்களை ஒரு யூகமாகத்தான் ( hypothesis )பொருத்திப் பார்க்கிறேன். இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.
1) கடலூர்2) கொண்ட சமுத்திரம், kondasamudram 608701, cuddalore Dist
கொண்ட சமுத்திரம் Kondasamudram కొండసముద్రం Andhra Pradesh 523113 (No lake)
3) செக சமுத்திரம், Jakka samudram 636805, Dharmapuri
செக சமுத்திரம், Jakkasamudram జక్కసముద్రం Andhra Pradesh 5152314) வேங்கட சமுத்திரம், Venkata samudram 636905, Dharmapuri (0.75m lake)
5) பாலசமுத்திரம் Bala samudram 624610, Dindigul Dist (0.75m lake )
பாலசமுத்திரம் Balasamudram Tamil Nadu 641664 (No lake)பாலசமுத்திரம் Balasamudram, Hanamkonda, Telangana 506001 (2.0 km lake)பாலசமுத்திரம் Balasamudram బలసముద్రం Andhra Pradesh 515571 (No lake)6) சமுத்திரா பட்டி, Samudrapatti 624402, Dindigul Dist (No lake)
7) கெட்டி சமுத்திரம், Getti samudram 638501 Erode dist (No lake)
8) ரெங்க சமுத்திரம், Rangasamudram 638402, Erode Dist
ரெங்க சமுத்திரம் Rangasamudram Tamil Nadu 641662 (No lake)ரெங்க சமுத்திரம் Rangasamudram రంగసముద్రం Andhra Pradesh 517370 (No lake)ரெங்க சமுத்திரா Rangasamudra ರಂಗಸಮುದ್ರ Karnataka (No lake, forest)9) திம்ம சமுத்திரம், Thimam samudram 631 502 Kanchipuram dist (No lake, near river, near sea)
திம்ம சமுத்திரம் Thimmasamudram తిమ్మసముద్రం Andhra Pradesh 523185 (No lake, near sea)
10) எல்.என்.சமுத்திரம், L.N.Samudram 639002, Karur Dist
சமுத்திரம், Samudram, Tiruvannamalai, Tamil Nadu (No lake, near Tiruvannamalai mountain)சமுத்திரம், Samudram Tamil Nadu 636306, (No lake, )ஜலகண்டபுரம் Jalakandapuram Tamil Nadu 636501 (No lake)ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் ஒரே பெயரில் ஊர்கள் உள்ளதைக் காண முடிகிறது. இன்னும் கூடுதலாகத் தேடிப் பார்க்க வேண்டும்.
On Sunday, March 18, 2018 at 10:54:49 AM UTC-7, கி. காளைராசன் wrote:சமுத்திரம் என்று முடியும் ஊர்ப் பெயர்கள்.
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
சமுத்திரம் என்று பெரிய குளம், ஏரிகளுக்கு உபசார வழக்காய் பெயரிடும் வழக்கம் இருக்கிறது.துவாரசமுத்திரம் - ஹொய்சளர்களின் தலைநகர் அருகே உண்டு. சளுக்க வேளிர் வழிவந்தோர்பெரிய ஏரி அமைத்தலால் இப்பெயர்.ஊரும் பேரும் நூலில் பேரா. ரா. பி. சேதுப்பிள்ளை விளக்கியுள்ளார்கள். சோழ சமுத்திரம்என்றால் சோழர் அமைத்த ஏரி.
நா. கணேசன்

வணக்கம் ஐயா.
2018-03-20 20:39 GMT+05:30 பழமைபேசி <pazam...@gmail.com>:
அன்பு அய்யா,அஞ்சல் எண்: 642201கடல், ஏரி போன்றவற்றோடு தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.
முத்துசமுத்திரம் Muthusamuthiram Tamil Nadu 642201கூகுள் புவிப்படத்தில் பார்த்தேன். அருகில் எங்கும் ஏரியோ குளமோ இல்லை.
இரங்கசமுத்திரம் எனும் ஊரும் எங்கள் பகுதியில் உண்டு.
பல்லடம் அருகில் Rangasamudram Tamil Nadu 641662 என்று ஒரு ஊரும்,சத்தியமங்கலத்தில் ரெங்க சமுத்திரம், Rangasamudram Sathyamangalam, Tamil Nadu 638402, Erode Dist (No lake, Bhavani river bank)ஒரு ஊரும் உள்ளன.
தாங்கள் குறிப்பிட்டுள்ள இரங்கசமுத்திரத்தினை என்னால் கூகுள்புவிப்படத்தில் அடையாளம் காணமுடியவில்லை. அன்புள்ளம் கொண்டு தாங்கள் குறிப்பிடும் இரங்கசமுத்திரத்தின் PIN என்னவென்று கூறி உதவிடுமாறு வேண்டுகிறேன்.
சமுத்தரிஞ்சு, சமுத்தரணை என்பதெல்லாம், வளருருவாக்கம், புனர்வேலை, மீளெழுச்சி போன்றவற்றைக் குறிக்கும். “வாடு சமுத்தரிஞ்சு சாவக் கொட்டேடு”.... அது போல முத்துவும் இரங்கனும் கட்டெழுப்பிய ஊர்களோ என்னவோ?? இஃகிஃகி!!
அருமையானதொரு விளக்கம்.நன்றி ஐயா.
2018-03-21 16:14 GMT+05:30 பழமைபேசி <pazam...@gmail.com>:641662அய்யா,திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு இரங்கசமுத்திரம், சித்தூர் மாவட்டத்தில் ஒரு ரங்கசமுத்திரமும் உண்டு.
இந்த ஊரின் பெயரையும் இணைத்துக் கொள்கிறேன்.நன்றி ஐயா.
முத்து சமுத்திரம் Muthusamuthiram Tamil Nadu 642201 (No lake)
ரெங்க சமுத்திரம், Rangasamudram Sathyamangalam, Tamil Nadu 638402, Erode Dist (No lake, Bhavani river bank)
ரெங்க சமுத்திரம் Rangasamudram Tamil Nadu 641662 (No lake)
ரெங்க சமுத்திரம் Rangasamudram Andhra Pradesh 517370 (No lake)
ரெங்க சமுத்திரா Rangasamudra Karnataka (No lake, forest)
--
சமுத்தரிஞ்சு, சமுத்தரணை என்பதெல்லாம், வளருருவாக்கம், புனர்வேலை, மீளெழுச்சி போன்றவற்றைக் குறிக்கும். “வாடு சமுத்தரிஞ்சு சாவக் கொட்டேடு”.... அது போல முத்துவும் இரங்கனும் கட்டெழுப்பிய ஊர்களாக இருக்கலாம். https://groups.google.com/d/msg/minTamil/FaK5pSOpTiE/en3pO8R0BwAJ

சமுத்தரிஞ்சு, சமுத்தரணை என்றால் கட்டுதல் என்ற பொருளா? எங்கே?நா. கணேசன்
--
2018-03-21 7:10 GMT-07:00 பழமைபேசி <pazam...@gmail.com>:what you quote is a Telugu dictionary entry, I suppose.இந்தத் தெலுங்கு வார்த்தை ஸமுத்ரம் (=கடல்) என்னும் பெயரை குளம், ஏரி இவற்றுக்கு இடுதலினும் வேறானது.The difference can be seen in samudra vs. samuddharincu.மந்நிஞ்சு, க்ஷமிஞ்சு, ... போல தெலுங்கில் ஸமுத்தரிஞ்சு. நீங்கள் சொல்வது போல், சில ஊர்களின் பெயர்களில்இத் தெலுங்குச் சொல் இருக்கலாம்.மன்னிப்பு < மந்நிஞ்சு (தெலுங்கு) < மந்யதே (மர்யாதா, கௌரவம்; Rgveda) போல.-இஞ்சு விகுதி (தெலுங்கில்) : தமிழின் -வி/-பி என்பது போலாகும்.மந்யதே என்னும் ஸம்ஸ்கிருதச் சொல், மந்நிஞ்சு என்று தெலுங்கில்வருதலை சுரேஷ் கொலிசாலம் எனக்கு விளக்கினார்.அவரது கட்டுரை பாலா கொடுத்துள்ள RSOS ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
See:NG
--சமுத்தரிஞ்சு, சமுத்தரணை என்பதெல்லாம், வளருருவாக்கம், புனர்வேலை, மீளெழுச்சி போன்றவற்றைக் குறிக்கும். “வாடு சமுத்தரிஞ்சு சாவக் கொட்டேடு”.... அது போல முத்துவும் இரங்கனும் கட்டெழுப்பிய ஊர்களாக இருக்கலாம். https://groups.google.com/d/msg/minTamil/FaK5pSOpTiE/en3pO8R0BwAJ
சமுத்தரிஞ்சு, சமுத்தரணை என்றால் கட்டுதல் என்ற பொருளா? எங்கே?நா. கணேசன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
15. ஊர் பெயர்
மக்கள் மலை (குறிஞ்சி), காடு (முல்லை), நாடு (மருதம்), பாலை, கடற்கரை (நெய்தல்) என்னும்ஐந்திடங்களில் வேறு வேறு வாழ்ந்து வந்த பண்டைக்காலத்தில், குறிஞ்சிநிலத் தூர்கள்குறிச்சி, சிறுகுடி என்றும், முல்லைநிலத்தூர்கள் பாடி, சேரி என்றும், மருதநிலத்தூர்கள் ஊர் என்றும், பாலை நிலத்தூர்கள் பறந்தலை என்றும், நெய்தல் நிலத்தூர்கள் பாக்கம், பட்டினம் என்றும் ஈறுகொடுத்துக் கூறப்பட்டன. மக்கள் பல்கித் திணைமயக்கம் உண்டானபின், இவ் வழக்கம் பெரும்பாலும் நின்றுவிட்டது.
இடைக்காலத்தில் வழங்கிய சில ஊர்ப்பெயர்களும் ஊர்ப் பெயரீறுகளும் வெவ்வேறு காரணம் பற்றியவை ஆறை என்பது ஆற்றூர்.
புத்தூர் என்பது புதியவூர்; மூதூர் என்பது பழையவூர்; பேரூர் என்பது மாநகர்; பட்டி என்பது கால்நடைத் தொழுவமுள்ள சிற்றூர்; பற்று என்பது தனிப்பட்டவர்க்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; அடங்காப்பற்று என்பது அரசனாணைக் கடங்காதவர் வசிக்கும் ஊர்; பள்ளி என்பது பௌத்த சமண மடமுள்ள ஊர்; பாளையம் என்பது படையிருக்கும் ஊர்; பட்டு என்பது பாளையத் தலைவரான சிற்றரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; மங்கலம் என்பது பார்ப்பனரிருக்கும் ஊர்; வாடை என்பது வேட்டுவர், அல்லது இடையர் இருக்கும் ஊர்;பண்டாரவாடை என்பது குடிகளுக்குரிய ஊர்; நத்தம் என்பது பார்ப்பன ரல்லாதார் வாழும் ஊர்; குடி என்பது ஒரு குடும்பத்தாரே அல்லது குலத்தாரே வசிக்கும் ஊர்; குடிக்காடு என்பது குடிகள் வசிக்கும் காட்டூர்; குடியேற்றம்7 என்பது மக்கள் குடியேறிய ஊர்; கல்லாங்குத்து என்பது கடின நிலத்தூர்; முரம்பு என்பது கற்பாங்கான மேட்டு நிலத்தூர்; பேட்டை என்பது சந்தை கூடும் ஊர்.
எயில் என்பது மதில் சூழ்ந்தவூர்; புரம் புரி என்பன அரசர் தலைநகர். விண்ணகரம்8 என்பது திருமால் கோயில் உள்ள ஊர்.
ஏரி, குளம், கோட்டை, கோயில் முதலிய ஈறுகளில் முடியும் பேர்களைக்கொண்ட ஊர்கள், அவ்வவ்வீறுகளாற் குறிக்கப்படும் இடத்தைக் கொண்டவை என்பதை, எவரும் சொல்லாமலே அறிந்து கொள்ளலாம். ஏரி என்று முடியும் பேரைக்கொண்ட ஓரூரில் ஏரியில்லாவிடின், அது ஒரு காலத்திலிருந்து பின்னர்த் தூர்ந்து போனதென்றறிதல் வேண்டும். இங்ஙனமே பிறவும்.
புறம் பட்டு முதலிய சில பெயர்களும், இக்காலத்தில் சிறப்புப் பொருளிழந்து பொதுப் பெயராகவழங்கிவருகின்றன. ஆதலால், இக்காலப் புத்தூர்ப் பெயர்கள் வரலாற்றுச் செய்தியொன்றும் உணர்த்தா.
---------------------------------
7. 'குடியேற்றம்' என்பது இன்று 'குடியாத்தம்' என மருவி வழங்கும்.
8. விண்டு + நகரம் = விண்ணகரம்; விண்டு - விஷ்ணு நகர், நகரம் - மனை, கோயில.
9. 'கொங்கணவன்' என்பது உலக வழக்கில் 'கொங்கணையன்' என வழங்குகிறது.
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஒன்று (ன்) பல்லின் பின் நாக்கு வருட, ஒன்று (ந்) பல்லின் நுனியில் நாக்கு பட..
சொல்பவர் வித்தியாசம் எண்ணலாம். கேட்பதில் வித்தியாசம் உள்ளதா?
என்னாடு, எந்நாடு..
யாரவது உச்சரித்து ஒலி கோப்பு தந்து வித்தியாசம் விளக்க முன் வாருங்கள்
rnk
rnk
///மந்யதே என்னும் ஸம்ஸ்கிருதச் சொல், மந்நிஞ்சு என்று தெலுங்கில்வருதலை சுரேஷ் கொலிசாலம் எனக்கு விளக்கினார்.///'மந்யதே' என்னும் சமஸ்கிருதச்சொல்லின் வேர் , அடி ,.....என்ன ?அது வடமொழி மூலத்திலிருந்து பிறந்ததா?இந்த ஐயம் ஏன் வருகிறது என்றால் /ன் ,ந் /என்ற இரண்டும் பண்டைத் தமிழிலேயே மாற்றொலிகளாக வழங்கி வந்துள்ளன.சான்று : அகம் +நாடு =அகனாடுஅகம் +நகர் =அகனகர்இரண்டும் இலக்கிய வழக்குகள்
கண்மணி
2018-03-21 20:30 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
From:
http://tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=256&pno=26
http://tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=256&pno=2715. ஊர் பெயர்
மக்கள் மலை (குறிஞ்சி), காடு (முல்லை), நாடு (மருதம்), பாலை, கடற்கரை (நெய்தல்) என்னும்ஐந்திடங்களில் வேறு வேறு வாழ்ந்து வந்த பண்டைக்காலத்தில், குறிஞ்சிநிலத் தூர்கள்குறிச்சி, சிறுகுடி என்றும், முல்லைநிலத்தூர்கள் பாடி, சேரி என்றும், மருதநிலத்தூர்கள் ஊர் என்றும், பாலை நிலத்தூர்கள் பறந்தலை என்றும், நெய்தல் நிலத்தூர்கள் பாக்கம், பட்டினம் என்றும் ஈறுகொடுத்துக் கூறப்பட்டன. மக்கள் பல்கித் திணைமயக்கம் உண்டானபின், இவ் வழக்கம் பெரும்பாலும் நின்றுவிட்டது.
இடைக்காலத்தில் வழங்கிய சில ஊர்ப்பெயர்களும் ஊர்ப் பெயரீறுகளும் வெவ்வேறு காரணம் பற்றியவை ஆறை என்பது ஆற்றூர்.
புத்தூர் என்பது புதியவூர்; மூதூர் என்பது பழையவூர்; பேரூர் என்பது மாநகர்; பட்டி என்பது கால்நடைத் தொழுவமுள்ள சிற்றூர்; பற்று என்பது தனிப்பட்டவர்க்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; அடங்காப்பற்று என்பது அரசனாணைக் கடங்காதவர் வசிக்கும் ஊர்; பள்ளி என்பது பௌத்த சமண மடமுள்ள ஊர்; பாளையம் என்பது படையிருக்கும் ஊர்; பட்டு என்பது பாளையத் தலைவரான சிற்றரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; மங்கலம் என்பது பார்ப்பனரிருக்கும் ஊர்; வாடை என்பது வேட்டுவர், அல்லது இடையர் இருக்கும் ஊர்;பண்டாரவாடை என்பது குடிகளுக்குரிய ஊர்; நத்தம் என்பது பார்ப்பன ரல்லாதார் வாழும் ஊர்; குடி என்பது ஒரு குடும்பத்தாரே அல்லது குலத்தாரே வசிக்கும் ஊர்; குடிக்காடு என்பது குடிகள் வசிக்கும் காட்டூர்; குடியேற்றம்7 என்பது மக்கள் குடியேறிய ஊர்; கல்லாங்குத்து என்பது கடின நிலத்தூர்; முரம்பு என்பது கற்பாங்கான மேட்டு நிலத்தூர்; பேட்டை என்பது சந்தை கூடும் ஊர்.
எயில் என்பது மதில் சூழ்ந்தவூர்; புரம் புரி என்பன அரசர் தலைநகர். விண்ணகரம்8 என்பது திருமால் கோயில் உள்ள ஊர்.
ஏரி, குளம், கோட்டை, கோயில் முதலிய ஈறுகளில் முடியும் பேர்களைக்கொண்ட ஊர்கள், அவ்வவ்வீறுகளாற் குறிக்கப்படும் இடத்தைக் கொண்டவை என்பதை, எவரும் சொல்லாமலே அறிந்து கொள்ளலாம். ஏரி என்று முடியும் பேரைக்கொண்ட ஓரூரில் ஏரியில்லாவிடின், அது ஒரு காலத்திலிருந்து பின்னர்த் தூர்ந்து போனதென்றறிதல் வேண்டும். இங்ஙனமே பிறவும்.
புறம் பட்டு முதலிய சில பெயர்களும், இக்காலத்தில் சிறப்புப் பொருளிழந்து பொதுப் பெயராகவழங்கிவருகின்றன. ஆதலால், இக்காலப் புத்தூர்ப் பெயர்கள் வரலாற்றுச் செய்தியொன்றும் உணர்த்தா.
---------------------------------
7. 'குடியேற்றம்' என்பது இன்று 'குடியாத்தம்' என மருவி வழங்கும்.
8. விண்டு + நகரம் = விண்ணகரம்; விண்டு - விஷ்ணு நகர், நகரம் - மனை, கோயில.
9. 'கொங்கணவன்' என்பது உலக வழக்கில் 'கொங்கணையன்' என வழங்குகிறது.
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ந, ன இரண்டு வரி வடிவங்கள். முன், பின் ஒலிகல்ளுக்கேற்ப வரும்.ஒன்று (ன்) பல்லின் பின் நாக்கு வருட, ஒன்று (ந்) பல்லின் நுனியில் நாக்கு பட..
சொல்பவர் வித்தியாசம் எண்ணலாம். கேட்பதில் வித்தியாசம் உள்ளதா?
என்னாடு, எந்நாடு..
2018-03-21 7:10 GMT-07:00 பழமைபேசி <pazam...@gmail.com>:what you quote is a Telugu dictionary entry, I suppose.இந்தத் தெலுங்கு வார்த்தை ஸமுத்ரம் (=கடல்) என்னும் பெயரை குளம், ஏரி இவற்றுக்கு இடுதலினும் வேறானது.The difference can be seen in samudra vs. samuddharincu.மந்நிஞ்சு, க்ஷமிஞ்சு, ... போல தெலுங்கில் ஸமுத்தரிஞ்சு. நீங்கள் சொல்வது போல், சில ஊர்களின் பெயர்களில்இத் தெலுங்குச் சொல் இருக்கலாம்.மன்னிப்பு < மந்நிஞ்சு (தெலுங்கு) < மந்யதே (மர்யாதா, கௌரவம்; Rgveda) போல.-இஞ்சு விகுதி (தெலுங்கில்) : தமிழின் -வி/-பி என்பது போலாகும்.மந்யதே என்னும் ஸம்ஸ்கிருதச் சொல், மந்நிஞ்சு என்று தெலுங்கில்வருதலை சுரேஷ் கொலிசாலம் எனக்கு விளக்கினார்.அவரது கட்டுரை பாலா கொடுத்துள்ள RSOS ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
See:
///திருக்குற்றாலத்தில் வட அருவி விழுந்து பொங்கி
எழுகின்ற வட்டச்சுனை ‘பொங்குமா கடல்’ என்று அழைக்கப்படுகின்றது.
சோழசமுத்திரம் சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. 105 of 1905. ”///இன்றும் பொதுமக்கள் வாய்மொழியில் அவ்வாறே ' பொங்குமாங்கடல் ' என்று தான் பெயர் பெற்றுள்ளது.கண்மணி
///அகல்+நாடு = அகனாடு. முன்னர் குறிப்பிட்டுள்ளேன்அகல்+நகர் = அகனகர்.அகல் நகர் = அகன்ற மனைஅரு கடி காப்பின் அகல் நகர் - அரிய காவலையுடைய மதில் சூழ்ந்த அகன்ற மனையின்,நா. கணேசன்///முன்னர் அகனாடு என்பதற்கு அகல் விளக்கு போலக் காட்சியளிக்கும் நாடு என்று பொருள் கூறியதால் தான் இந்த விளக்கம் தேவைப்பட்டது.நன்று .நீங்களே ஒத்துக் கொண்டமைக்கு ....அகனகர் என்பது அகன்ற மனையாயின் ; அகனாடு என்பதற்கும் அகன்ற நாடு என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அகல்விளக்கு வராது..
கண்மணி
NG
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
//ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் ஒரு பட்டியலை அனுப்பியிருக்கிறார். தமிழில் கடலுக்கு இருக்கும் 200 பெயர்களைக் கொண்ட பட்டியல் அது. அந்தப் பட்டியல் இங்கே:
அடங்காவாரிதி, அத்தி, அபாம்பதி, அம்பரம், அம்புதி, அம்புநிதி, அம்புராசி, அம்புவி, அம்போதி, அம்போநிதி, அம்போராசி, அரலை, அரி, அரிணம், அருணவம், அலை, அலைநீர், அலைவாய், அவாரபாரம், அழுவம், அளக்கர், அன்னவம், ஆர்கலி, ஆலம், ஆழம், ஆழி, இந்துசனகம், இரத்தினகருப்பம், இரத்தினாகரம், இரைநீர், உததி, உதரதி, உந்தி, உப்பு, உரகடல், உரவுநீர், உலாவுநீர், உவரி, உவர், உவர்நீர், உவா, ஊர்திரை, ஊர்திரைநீர், ஊர்மிமாலி, எற்றுந்திரை, ஓதம், ஓதவனம், ஓலம், கசங்கலம், கடல், கடும்புனல், கயம், கலி, கழி, கார்கோள், கார்மலி, கார்வலயம், கிடக்கை, கிடங்கர், கிருபீடபாலம், கீழ்நீர், குரவை, கூபாரம், கொறுக்கை, சகரநீர், சக்கரம், சசி, சமுத்திரம், சரிதாம்பதி, சரிற்பதி, சலகாங்கம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சலாபாகரம், சாகரம், சிந்து, சிந்துவாரம், சீவனியம், சூழி, தரங்கம், தரணீபூரம், தரங்கர், தரந்தம், தவிசம், தாரதம், தாரீடம், தாவிஷம், திமி, திமிகோடம், திரை, துனிநாதம், தெண்டிரை, தேனம், தொன்னீர், தோயதி, தோயநிதி, தோயம், தோழம், நதனதீபதி, நதாதிபதி, நதிபதி, நதீனம், நரலை, நாரம், நாமநீர், நிதி, நித்தியம், நீத்தம், நீரதி, நீரநிதி, நீரம், நீர், நீர்நீதி, நீராழி, நீருடைவரப்பு, நெடுங்கடல், நெடுநீர், நெடும்புனல், நேமி, பயோதகம், பயோதசம், பயோததி, பயோதி, பயோநிதி, பரவை, பரந்தநீர், பராங்கவம், பரு, பாதோதி, பாதோநிதி, பாராவாரம், பாலை, பாழி, பானல், புணரி, புரணம், புறவிடன், புனல், பூரணம், பெருங்கடல், பெருநீர், பெருவனம், பேராளி, பேரு, பௌவம், மகரசலம், மகரநீர், மகராங்கம், மகரி, மகாகச்சம், மகாசயம், மகான்னவம், மகீப்பிராசீரம், மகோததி, மங்கலமொழி, மஞ்சம், மாதங்கம், மாதோயம், மாறாநீர், மந்திரம், மிதத்துரு, மிருதோற்பவம், மீரம், மீனாலயம், முண்டகம், முதனீர், முதுகயம், முதுநீர், முந்நீர், முன்னீர், யாதபதி, வரி, வருணம், வருணன், வலயம், வாங்கம், வாகினீபதி, வாரகம், வாரகி, வாரணம், வாரம், வாராகரம், வாராநிதி, வாரி, வாரிதி, வாரிநாதம், வாரிநிதி, வாரிராசி, வாரீசம், வாருணம், வாருதி, விரிநீர், வீங்குநீர், வீசிமாலி, வீரை, வெள்ளம், வேலாவலையம், வேலை.//
--
///மந்யதே என்னும் ஸம்ஸ்கிருதச் சொல், மந்நிஞ்சு என்று தெலுங்கில்வருதலை சுரேஷ் கொலிசாலம் எனக்கு விளக்கினார்.///'மந்யதே' என்னும் சமஸ்கிருதச்சொல்லின் வேர் , அடி ,.....என்ன ?அது வடமொழி மூலத்திலிருந்து பிறந்ததா?இந்த ஐயம் ஏன் வருகிறது என்றால் /ன் ,ந் /என்ற இரண்டும் பண்டைத் தமிழிலேயே மாற்றொலிகளாக வழங்கி வந்துள்ளன.சான்று : அகம் +நாடு =அகனாடுஅகம் +நகர் =அகனகர்இரண்டும் இலக்கிய வழக்குகள்
கண்மணி
///இதுபோன்ற சந்தி எந்த நூலிலும் கண்டதில்லை.அகல் + நாடு என்றால் வஞ்சிமூதூர் அரண்மனையில் வாழ்ந்த இளங்கோ அடிகள் நாட்டின் அமைப்பால்பெறும் பெயர்.நா. கணேசன்///சரி தான் .' ன்,ந் ' -இரண்டும் பண்டைத் தமிழிலேயே மாற்றோலிகளாகி விட்டன என்று கூறியிருந்தேனே !அதனால் தான் அப்படி மாற்றி எழுதினேன்.அங்கே பொருள் மாறாது.எ +நாடு =எந்நாடு ----வினாப்பொருள்எம் +நாடு =எந்நாடு ---------எங்கே வழக்கில் உள்ளது ?///அகல் + நாடு என்றால் வஞ்சிமூதூர் அரண்மனையில் வாழ்ந்த இளங்கோ அடிகள் நாட்டின் அமைப்பால்பெறும் பெயர்.///அகல் விளக்கு போன்ற அமைப்பினை உடைய நாடு என்பதற்கு கல்வெட்டுச் சான்று ஏதேனும் இருக்கிறதா ?இல்லையென்றால் எப்படி இதை ஏற்றுக் கொள்ள முடியும் ?அகன்ற நாடு என்பது தான் சரி .அகழ்வாய்வில் அகல் விளக்கு கிடைத்து விட்டதற்காக .......அகல் விளக்கு போன்ற தோற்றத்தை உடையது எனச் சொல்வது பொதுக்கூட்டத்தின் மேடைப்பேச்சிற்கு ஏற்றது........வரலாற்று ஆய்வுக்கு ஏற்றதன்று.
கண்மணி
கண்மணி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இமலாதித்தன், நலமா? வெகுநாள் ஆயிற்று மடல் கண்டு.
பரவை என்பதற்கு பரந்த விளைநிலம், வயல் என்ற பொருளும் உண்டு.மதுரை அருகே பரவை முனியம்மா நல்ல பாடகி. நாட்டார் இசை.நோயுற்றபோது ஜெயலலிதா உதவினார் எனப் படித்தேன்.
சம்பந்தர் சீகாழியைப் பாடும்போது ‘கருநல் பரவை’ என்பார்.இங்கே, கருநல் > கன்னல் (கரும்பு) தோட்டம்/வயல்.கருநல் கன்னலுக்கு என்பது உரை. அதேபோல, பருநல் > பன்னல் (=பருத்தி).
--
--
வணக்கம்.
2018-03-22 23:44 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///எழுகடல் தெருவில் உள்ள குளம், வெட்டப்பட்ட குளம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? இருந்தால் அன்புடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ///குளம் என்றால் அது வெட்டப்பட்டதாகத் தான் இருக்கவேண்டும் என்ற பொதுவான கருத்தைக் கொண்டு கூறினேன்.எனக்கு புராணப் பயிற்சி கிடையாது.தெரியாது.கண்மணி
மதுரையில் பொற்றாமரைக்குளம் உள்ளது போன்று, சுயம்புலிங்கங்கள் உள்ள கோயில்களின் அருகில் எல்லாம் மிகவும் பழைமையான ஆழமான தீர்த்தக் குளம் இருக்கும்.
இந்தக் குளங்கள் எல்லாம் சுனாமியைச் சுயம்புலிங்கங்கள் தடுத்த காரணத்தினால் உண்டான இயற்கையான குளங்களாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
இது தொடர்பான தகவல்களைச் சிறுகச்சிறுகச் சேர்த்து வருகிறேன்.அதனால்தான் கேட்டேன்.அன்பன்கி.காளைராசன்
நா. கணேசன்
On Thursday, March 22, 2018 at 8:34:19 PM UTC-7, THEETHARAPPAN R wrote:கடல் இல்லாமலேயே சமுத்திரத்தை வைத்திருப்பவர்கள் திருநெல்வேலிக்காரர்கள் என்று சொல்லும் வழக்கம் உண்டு. அதன்படி,அம்பாசமுத்திரம், ராவணசமுத்திரம், கோபாலசமுத்திரம், தளபதிசமுத்திரம் என்று பல ஊர்கள் உண்டு. இங்கு கடல், சமுத்திரம் என்றுஆட்களுக்குப் பெயர் உண்டு.பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் என்பவர் கடையத்துக்காரர்.நன்றி.நெல்லை மாவட்டத்தில் நீலகண்ட சமுத்திரம் என்று பாலாமடைக் குளம் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. அதை வெட்டக் காரணமாகஇருந்த நீலகண்ட தீட்சிதர் மதுரை மீனாட்சி கோயிலில் புதுமண்டபம் கட்டினார், அக் கலைக்கூடத்தை கவனம் இல்லாமல்அழித்தது மதுரைக்கு ஓர் இழப்பாகும். இதுபோல், சிலைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாறு கூறும் கட்ட்டங்கள்,புறம்போக்குக் குளங்கள், பூமிகள், பொதுச் சொத்துகள், எனத் தமிழரும், தமிழும் இழப்பவை நாடோறும் கூடிவருகின்றன.ஊழலால் பிளாஸ்டிக் பொருள்கள் விற்கும் கடைகளை பணத்துக்காக விற்று தீவிபத்துக்கு வழிசெய்துவிட்டனர்.கிரானைட் கல்கள் தீ எரியும்போது வெப்பத்தால் வெடிப்புண்டு மண்டபமே அழிந்துவிட்டது எனப் படித்தேன்.ஹெச். ராஜா (மெலட்டூர், தண்செய் மாவட்டம்) இந்த மனிதனால் ஏற்படுத்தப்பட்ட விபத்து பற்றிப் பேசி,சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார்.எதிர்காலத்தில் விசாரணைகள் நடந்து அதன் ரிப்போர்ட்கள் பொதுமக்கள் வாசிக்குமாறு வெளியிட்டால்இவை போன்ற கலாச்சார அழிவுகள் நடக்காது.அபிதான சிந்தாமணியில் சாளுவ நரசராயர் காலத்தில் வெட்டப்பட்ட எழுகடல் என்ற தடாகம்புது மண்டபத்தில் இருந்து போகும் வழியில் இருப்பதைக் குறிக்கிறது. சப்த சாகரம் என்றுகல்வெட்டுகள் இதனைக் குறிப்பிடுகின்றன. இன்று நாயக்கர் கால குளம் இல்லை.எல்லாம் கான்க்ரீட் கட்டிடங்களாக விற்கப்பட்டுவிட்டன. எழுகடல் குளம் பற்றிப்பழைய திருவிளையாடலில் செய்தி இல்லை (13-ஆம் நூற்,) என நினைக்கிறேன். பார்க்கணும்.ஆனால், சப்தசாகரம் என்னும் ஏழுகடல் குளம் வெட்டிய காலத்தில் வாழ்ந்த பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடலில் உள்ள பாடல்களை காளைராசன் ஐயா கொடுத்துள்ளார்.நா. கணேசன்
--நா. கணேசன்You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
மக்கள்தொகை மிகுந்த தற்போதோ....
rnk
ஒன்று புரிந்தது. முற்காலத்திலும் நீர் பற்றாக்குறை இருந்திருக்கிறது.
On Sunday, March 18, 2018 at 10:54:49 AM UTC-7, கி. காளைராசன் wrote:சமுத்திரம் என்று முடியும் ஊர்ப் பெயர்கள்.
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
நான்கு முறை மதுரைக்குக் கடல்வெள்ளம் (சுனாமி, ஆழிப்பேரலை) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது[1]. பஃறுளி ஆற்றுப் பன்மலை யடுக்கத்தையும், குமரிக்கோட்டையும், முதற் தமிழ்ச்சங்கம் நடைபெற்ற தென்மதுரையையும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தையும் கடல்கொண்டது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் பல காணப்படுகின்றன.
இந்த இலக்கியக் குறிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் ஏதும்செய்யப்படாமலேயே, இக்கருத்துகள் எல்லாம் பொய்யில் புலவர்களால் புனைந்து உருவாக்கப்பட்ட தொன்மம் என்று கூறிவந்தனர். இந் நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே “செழியன் கொடிநுடங்க மறுகின் கூடல்“[2] என்று அகநானூறும், “மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரை” என்று நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் சிறப்பித்துக் கூறும் கூடல் நகரம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப் பட்டது.
கீழடி போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற ஆய்வுகளில் பூமிக்கு அடியிலே பெருநகரங்கள் புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளால், தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கோள் என்ற செய்தியானது தொன்மக் கதைகள் அல்ல. அவைகள் உண்மை நிகழ்வுகள் என்று உணர்ந்து கொண்டேன்.
இந்நிலையில், இறையருளால்
2014 ஆம் ஆண்டு இராமேச்சுரம்-காசி பாதயாத்திரையும், மீண்டும்
2015 ஆம் ஆண்டு நாக்பூர்-காசி பாதயாத்திரையும்,
2016 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும், மீண்டும்
2017 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும்
செல்லும் செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன்.
பாதயாத்திரைப் பயணத்தில் வழிநெடுகிலும் காணக்கிடைக்கும் கல்லையும் மண்ணையும் சுனாமியின் எச்சங்களாகக் கண்டேன். அவற்றினைச் சேகரித்து முறையான அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளேன். பாதயாத்திரை செல்லும் வழிகளில் “சமுத்திரம்” என்று முடியும் பெயர்களை ஊர்களையும் ஆங்காங்கே கண்டேன்.
இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயரைச் சேர்த்து வைத்தது யார் ?
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
அல்லது,
இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயர் வைத்த காரணம் என்ன ?
என்ற ஐயங்கள் என்னுள் எழுந்தன.
பண்டைத் தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (சுனாமி) தாக்கி அழிந்துள்ளது என்ற தமிழ் இலக்கியச் செய்திகளை அறிவியில் அடிப்படையில் நிறுவுவதற்கு ஏதுவாகச் சமுத்திரம் என்று முடியும் ஊர்களின் பெயர்களைத் தொகுத்து இணைத்துள்ளேன். எனது தேடலில் 54 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
1) கடலூர்
2) கொண்ட சமுத்திரம், kondasamudram 608701, cuddalore Dist
3) செக சமுத்திரம், Jakka samudram 636805, Dharmapuri
4) வேங்கட சமுத்திரம், Venkata samudram 636905, Dharmapuri
5) பாலசமுத்திரம் Bala samudram 624610, Dindigul Dist
6) சமுத்திரா பட்டி, Samudrapatti 624402, Dindigul Dist
7) கெட்டி சமுத்திரம், Getti samudram 638501 Erode dist
8) ரெங்க சமுத்திரம், Rangasamudram 638402, Erode Dist
9) திம்ம சமுத்திரம், Thimam samudram 631 502 Kanchipuram dist
10) எல்.என்.சமுத்திரம், L.N.Samudram 639002, Karur Dist
11) வேங்கட சமுத்திரம், Venkata samudram 635104, Krishnagiri
12) கோபால சமுத்திரம், Gopala samudram 609108, Nagapattinam Dist
13) வில்லந்திட சமுத்திரம், Vilanthida Samudram 609111, Nagapattinam Dist
14) பூமா சமுத்திரம், Bomma samudram 637001, Namakkal Dist
15) மால சமுத்திரம், Malla samudram 637503, Namakkal Dist
16) நமன சமுத்திரம், Namana samudram 622422, Pudukottai Dist
17) அப்பம்மா சமுத்திரம், Appama samudram 636108, Salem Dist
18) சங்கம்மா சமுத்திரம், Jangamma samudram 636 113, Salem Dist
19) கோண சமுத்திரம், Kona samudram 637102, Salem Dist
20) சமுத்திரம், Samudram 636306, Salem Dist
21) சமுத்திரம், Samudram 630710, Sivaganga Dist
22) திருமலை சமுத்திரம், Thirumalai samudram 613402, Thanjavur Dist
23) தியாக சமுத்திரம், Tyaga samudram 612301, Thanjavur Dist
24) ரெங்க சமுத்திரம், Renga samudram 625562, Teni Dist
25) பாலசமுத்திரம் 625512
26) திம்மராய சமுத்திரம், Thimmaraya Samuthiram, Near New Cauvery Bridge, Tiruchirappalli,
27) திருமலை சமுத்திரம், Thirumalai Samudram village in Thanjavur Tehsil, Thanjavur,
28) சின்னபாபு சமுத்திரம், chinnababu samudram 605102, Villupuram Dist.
29) மூல சமுத்திரம், Moola samudram 606107 , villupuram Dist
30) பெரியபாபு சமுத்திரம், periyababu samudram 605102, villupuram Dist
31) தாண்டவசமுத்திரம் Thandava samudram 604151, Villupuram Dist
32) அப்பம்மாசமுத்திரம் 616108
33) அம்பா சமுத்திரம் Amba samudram 627401, Tirunelveli Dist
34) அம்பா சமுத்திரம் Amba samudram Pudukudi 627435, Tirunelveli Dist
அம்பாசமுத்திரம்
பெயர்க் காரணம்[தொகு]
தமிழ்நாட்டு மன்னர்கள், செல்வந்தர்கள் உண்டாக்கிய பெரிய ஏரிகள் கடல் என்றும், சமுத்திரம் என்றும் அழைக்கப்பெற்றன. நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியில் வந்து குடியேறிய படைத்தலைவர்கள் பெயரில் பெருங்குளங்கள் பல ஆங்காங்கே அமைந்தன. அவற்றைச் சார்ந்த ஊர்களை அவரவர் பெயரால் அழைத்தனர். இரவணன், வடமலை, அரங்கன், தளபதி, வாலன், கோபாலன் என்பவர்களுடைய பெயரால் தென்பாண்டி நாட்டில் ஆங்காங்கே ஊர்கள் அமைந்தன. இரவண சமுத்திரம், வடமலை சமுத்திரம், அரங்க சமுத்திரம், தளபதி சமுத்திரம், வாலசமுத்திரம், கோபால சமுத்திரம் என்பவை இவ்வாறு பெயர் பெற்ற ஊர்களாகும். பெருங்கடல் போல மிகுந்த நீருடைய பெருங்குளத்தைக் கொண்ட ஊர்கள் சமுத்திரம் எனும் பெயரால் சேர்த்து அழைக்கப்பெற்றன. இங்கு அம்பா, அம்மா, அம்மை என்ற சொற்கள் தாய், காளி, உமாதேவி என்ற பொருளை உடையன.இந்த ஊரிலுள்ள முதன்மைக் கோயிலான மரகதவல்லி அம்மையின் பெயரால் இது அமைந்து அம்மை சமுத்திரம் என்றாகி இருக்க வேண்டும்.[6]
35) தளபதி சமுத்திரம், Dalapathi samudram 627101, Tirunelveli Dist
36) கோபல சமுத்திரம், Gopala samudram 627451, Tirunelveli Dist
37) இராவண சமுத்திரம், Ravana samudram 627424, Tirunelveli Dist
38) இரெங்க சமுத்திரம், Renga samudram 627413, Tirunelveli Dist
39) கோண சமுத்திரம், Kona samudram 631202,Tiruvallur Dist
40) கிருஷ்ண சமுத்திரம், Krishna samudram 631 206, Tiruvallur Dist
41) இராம சமுத்திரம், Rama samudram 631206, Tiruvallur Dist
42) கோபால சமுத்திரம், Gopala samudram 614001, Tiruvarur Dist
43) வடமலை சமுத்திரம், Vadamalai samudram 628907 Thoothukudi Dist
44) வால சமுத்திரம், தூத்துக்குடி அருகில்
45) சென்ன சமுத்திரம், Chenna samudram 632506, Vellore Dist
46) சின்ன சமுத்திரம், Chinna samudram 635653, Vellore Dist
47) கிரி சமுத்திரம், Giri samudram 635751, Vellore Dist
48) காம சமுத்திரம், Kamma samudram 632319, Vellore Dist
49) சோம சமுத்திரம், Soma samudram 631102, Vellore Dist
50) திப்ப சமுத்திரம், Tippa samudram 635809, Vellore Dist
51) வேங்கிட சமுத்திரம், Venkata samudram 635811, Vellore Dist
52) மூல சமுத்திரம், Moola samudram 606107, Villupuram Dist
53) சங்கம்மாசமுத்திரம் 636113
54) கிருஷ்ண சமுத்திரம் 620013 (திருவெறும்பூர் அருகில்)
55) நாக சமுத்திரம் nagasamthiram karnadaga (away from Bangalore)
கடலூரையும் சேர்த்து மொத்தம் 55 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சமுத்திரம் என்று முடியும் பெயர்களைக் கொண்ட ஊர்கள் இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
கேரளம், கருநாடகம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சமுத்திரம் என்ற பெயரில் உள்ள ஊர்கள் கண்டறியப்பட வேண்டும்.
அன்பன்
கி.காளைராசன்
--
சுவை பட எழுதியுள்ளீர். வாழ்த்துக்கள்.இ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சுவை பட எழுதியுள்ளீர். வாழ்த்துக்கள்.இ
ஆய்வு மணவர்க்கு அனுப்பியுள்ளேன் அண்ணா.

சங்கச் செவ்வியல் இலக்கியங்க எல்லை _கடல்சார் பதிவுகள் எனும் தலைப்பில் ஆய்வசெய்து வருகிற மாணவன் .