மகிழ - மஹிஷ

143 views
Skip to first unread message

Dev Raj

unread,
Sep 21, 2014, 2:53:31 AM9/21/14
to mint...@googlegroups.com
மகிழ - மஹிஷ

தமிழில் எருமையைக் குறிக்காது -

கனை எரி நடந்த கல் காய் கானத்து 
வினை வல் அம்பின் விழு தொடை மறவர் 
தேம் பிழி நறு கள் மகிழின் முனை கடந்து...... 

 நடை அரு கானம் விலங்கி நோன் சிலை 
தொடை அமை பகழி துவன்று நிலை வடுகர் 
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்........ 


நாற்றத்தின் போற்றி நகையொடு உம் போத்தந்து 
இரு கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் 
மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி............ 


பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து 
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட 
சிறு மகிழான் உம் பெரு கலம் வீசும் 
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ...... 

அவ்வாறு இலக்கியம் எங்காவது சொல்லியிருந்தால்
அன்பர்கள் தெரிவிக்கலாம்.

சங்கத மஹிஷம் தமிழ்ப் பயன்பாட்டில் இருக்கும்
எந்த ஒரு பொருளையும் குறிப்பதாக இல்லை.

மஹிஷம் , மகிடம் என்றுதான் தற்பவம் பெறும்.

முசலி கண்டகன் முரன் கரன் மூர்க்கன் 
தச முகன் கனலி சண்டன் விசண்டன் 
அச முகன் மகிடன் அக்கிர வாகு
                              - கந்த புராணம்

மகிழ மலர் எனும் நோக்கில் மகிழ் மாலைத் 
தாரணிந்த நம்மாழ்வாரை மகிழன் என்று சொல்லலாம்



தேவ்

Oru Arizonan

unread,
Sep 21, 2014, 2:51:31 PM9/21/14
to mint...@googlegroups.com
நல்ல விளக்கம், உயர்திரு தேவ் அவர்களே!
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N D Logasundaram

unread,
Sep 21, 2014, 5:22:03 PM9/21/14
to mintamil
அன்புள்ள தேவ் அவர்ளுக்கு,

நீங்கள் சொல்வது தனித்த நிலை யில் மகிஷ என்பதற்கு மகிட என் கிரீர்கள் சரியே 

ஆனால்   இங்கு மகிழ என்பதில் மழ்கரம்  தட்டச்சுபிழையாக வந்தது அவ்வளவே 

 மகிழ என்பதைக் அய்யமாகக்  காணும் நிலையில்  
 மகிஷ என வை க்க வேண்டும் எனும்  நிலைதான்
 
இடம் நோக்கித்தான் அவ்வாறு பொருள் கொண்டேன் 

நீங்கள் கட்டியபடி மகிஷ என்பதை மகிட எனலாம் அவ்வளவே 

மகிழ நாடு என்றாலும் தமிழில் பொருள் வரும் ஆனால் மகிஷ என்பதே இங்கு பொரு த்த மாக
அமையும் மகிழ என்பது தப்பி வந்துவிட்ட எழுத்து  அதனால் அது மகிழ அல்ல மகிஷ என்றேன்  

மகிஷ (எருமை)எ  ன்பதற்கு வேறு காரணங்களும் உதவு கின்றன கட்டியுள்ளேனே

 நண்பர்  ????? (சட்டென நினைவுக்கு வரவல்லை) கூட ஒட்டி எழுதினாரே 

கன்னடத்தில் கண்டி என்றால்  எருமை அச்சொல் இ ணைந்துவரும் இடப்பெயர்கள்
 அங்கு  பல வுண்டு என என ஒட்டி எழுதினாரே. 

இப்போது அவர் சொன்ன கன்னடச் சொல்  கண்டி = எருமை என்பது தமிழில் தொல்காப்பிய
மரபியலில் ஆண் எருமைக்கு உரிய சொல் எனவே உள்ளது  காண்க
 
ஏறும்  / ஏற்றையும் / ஒருத்தலும் / களிறும்
சேவும் / சேவலும் / இரலையும் / கலையும்
மோத்தையும் / தகரும் / உதளும் / அப்பரும்
போத்தும் / கண்டியும் / கடுவனும் / பிறவும்
யாத்த ஆண்பால்  பெயர் என மொழிப              2

எருமை கள் (பந்திப்பூர் சரணாலயம் ஊட்டி மைசூர் சாலையில் )இன்றும் காண் பதாலும்
எருமை நாடு  பெயர் என்று கட்டியிருந்தே ன்  

கல்வெட்டுகளிலும்  வந்துள்ளது என் நினைவு இப்போது 
உடன் காட்ட தேடினேன் கிடைக்க வில்லை 

ஆ னால் பத்மாவதி அவர்கள் THF வலை தளத்தில் உள்ள களிமண் ஓடுகலைப்
படி க்கும் போ து எருமி  நாடு என்றுதான் வருவதை க் காட்டி உள்ளார். 

எனினும் எருமை நாடு (குட நாடு )பற்றி கீழே காண்க 

இந்த நாடு சோழர் காலத்தில் காவிரி (கங்கை) ஓடுவதால் கங்கை நாடு >>> கங்க நாடு
என பெயர் பெற்றது மெய்கீர்த்திகளில் நிரம்ப வருகின்ற தே நீராதார்ம் எதுவகிலும்
கங்கை என்பது பண்பு (நான் ஓசூர் TVS கம்பனி ஒன்றில் த லைப்மை பொறி யாளராக
இருந்த போது பெரிய BOREWELL இரண்டு போட்டோம் அவற்றை  பூசையுடந்தா ன்
தொடங்கவேண்டும் என்ற பொது பயன் கொண்ட சொல் கங்கைக்குப் பூசை செய்ய
வேண்டும் பல ஆறு கலை பொதுவாக கங்கை எனும் ஒட்டுச் சொல்லுடன் குறிக்கக்
காணலாம் வைன் கங்கா பென் கங்கா ராம் கங்கா எனப்பல கங்கா குலம் என்றபோது
நீரினை தெய்வமாகக் கொள்வோர் என் பது பொருள் = பயிர்த்தொழில் செய்யும்
வேளாளர்கள் (குலம் = தெய்வம்/கோயில்>>'தேவ குலம்=கோயில்  'இறையனார் அகப்பொருள்'


அகநானுறு   
36
பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
கொடுவாய் இரும்பின் கோள்இரை துற்றி
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்து எழுந்து
அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித் 5
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறுஇடு கதச்சேப் போல மதம்மிக்கு
நாள் கயம் உழக்கும் பூக்கேழ் ஊர
வருபுனல் வையை வார்மணல் அகன்துறைத்
திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில் 10
நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே
கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்
சேரல் செம்பியன் சினம்கெழு திதியன் 15
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி
நார்அரி நறவின் எருமை யூரன்
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன் என்று
எழுவர் நல்வலம் அடங்க ஒருபகல் 20                        அக்காலத்து திகழ்ந்த ஏழு பெரு ரு மன்னர்களில் ஒருவனாகக்  எருமை நாடன் காண்க 
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெலக்
கொன்று களம்வேட்ட ஞான்றை
வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே

அகநானுறு
115
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்
பழிஇலர் ஆயினும் பலர்புறங் கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெஞ்சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக
நுண்பூண் எருமை குடநாட் டன்னஎன் 5               /// எருமை நாடு ஓர் குடக்கமைந்த நாடு 
ஆய்நலம் தொலையினும் தொலைக என்றும்
நோய்இல ராக நம் காதலர்  வாய்வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின்முன் பரித்துஇடூஉப் பழிச்சிய
வள்உயிர் வணர்மருப்பு அன்ன ஒள்இணர்ச் 10
சுடர்ப்பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடைப்
பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை
சினம்மிகு முன்பின் வாமான் அஞ்சி
இனம்கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை 15
நன்னர் ஆய்கவின் தொலையச் சேய்நாட்டு
நம்நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடா மையின் நீடி யோரே

அகநானுறு
253
வைகல் தோறும் பசலை பாய என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென
அன்னையும் அமரா முகத்தினள் அலரே
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி
நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் 5
பொன்மலி நெடுநகர்க் கூடல் ஆடிய
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்குயான்
சிலநாள் உய்யலென் போன்ம் எனப் பலநினைந்து
ஆழல் வாழி தோழி வடாஅது
ஆர்இருள் நடுநாள் ஏர்ஆ ஒய்யப் 10
பகைமுனை அறுத்துப் பல்இனம் சாஅய்
கணம்சால் கோவலர் நெடுவிளிப் பயிர்அறிந்து
இனம்தலைத் தரூஉம் துளங்குஇமில் நல்ஏற்றுத்
தழூஉப்பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
அம்தூம்பு அகல்அமைக் கமஞ்செலப் பெய்த 15
துறுகாழ் வல்சியர் தொழுஅறை வவ்வி
கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம்
நேரா வன்தோள் வடுகர் பெருமகன்
பேர்இசை எருமை நல்நாட்டு உள்ளதை // இங்கு வடுகர் பெருமகன் என்று தனித்துக்காட்டப் பட்டுள்ளதும் காண்க 
அயிரியாறு இறந்தனர் ஆயினும் மயர்இறந்து 5                   நீலகிரியில் உள்ள படுகர் = வடுகர் என்பதே அன் நீங்கள் அறிவீர் 
உள்ளுப தில்ல தாமே பணைத்தோள்
குரும்பை மென்முலை அரும்பிய சுணங்கின்
நுசுப்புஅழித்து ஒலிவரும் தாழ்இருங் கூந்தல்
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்னநின் திருமுகத்து
ஒண்சூட்டு அவிர்குழை மலைந்த நோக்கே

------------------------

தெனாலி ராமன் கதையில் வரும் "திலகாஷ்ட மகிஷ பந்தனம் "
என்பதிலும் எருமை கட்டும் கயிறு எனத்தான் பொருள் காட்டப்படுகின்றது 


--

Dev Raj

unread,
Sep 21, 2014, 7:59:36 PM9/21/14
to mint...@googlegroups.com
On Sunday, 21 September 2014 14:22:03 UTC-7, selvi...@gmail.com wrote:
நீங்கள் சொல்வது தனித்த நிலை யில் மகிஷ என்பதற்கு மகிட என் கிரீர்கள் சரியே 
ஆனால்   இங்கு மகிழ என்பதில் மழ்கரம்  தட்டச்சுபிழையாக வந்தது அவ்வளவே 

உயர்திரு நூ த லோ சு அவர்களுக்கு,

உங்களுடன் கருத்து வேறுபாடு இல்லை.
நீங்கள் விளக்கம் கூறியபின் நடந்த உரையாடகளை
நீங்கள் முழுமையாக வாசிக்கவில்லை என எண்ணுகிறேன்.
நான் எழுதியது அதற்கான தொடர்ச்சி, அதைத்
தனி இழை ஆக்கினேன். ‘மகிழன்’ எனும் மன்னன்
வரலாற்றில் இருந்துள்ளதாக உரையாடல் சென்றது.
அவ்வாறு இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது
கருத்து.

எருமை நாடு இருந்துள்ளது என்பதில் உடன்பாடே;
உங்கள் விளக்கம் மேலும் தெளிவைத் தருகிறது.
நன்றி 


தேவ்

N D Logasundaram

unread,
Sep 22, 2014, 1:26:47 AM9/22/14
to mintamil
நன்றி தேவ் அவர்களுக்கு,

நான் இழையின் ஒரு மடலை பார்த்து எழுதியதால் வந்த கருத்து
நீங்கள் சொல்வது போல்  முன்னதன் மேலும் தொடர்ச்சி பற்றி அறியேன்

அதான்று
மகிழன் எனும் ஒலிக்கு நெருங்கிய ஒலியில் மழவன் எனும் சொல் உள்ளது
இது ஒரு போர் வீர்ர்கள் நிறைந்த இனத்தைக் குறிக்கும் இந்த இனத்தினர்
பெரு மன்னர் களாக அரசாளவில்லை என்றாலும் குறு மன்னர்களாகத்
திகழ்ந்துள்ளனர் அறிவீர்கள் என நினைக்கின்றேன் வாணர் குலமும் இவ்வாறே

நூ த லோ சு
மயிலை

--

Dev Raj

unread,
Sep 22, 2014, 3:51:53 AM9/22/14
to mint...@googlegroups.com
On Sunday, 21 September 2014 22:26:47 UTC-7, selvi...@gmail.com wrote:
மகிழன் எனும் ஒலிக்கு நெருங்கிய ஒலியில் மழவன் எனும் சொல் உள்ளது
இது ஒரு போர் வீர்ர்கள் நிறைந்த இனத்தைக் குறிக்கும் இந்த இனத்தினர்
பெரு மன்னர்களாக அரசாளவில்லை என்றாலும் குறு மன்னர்களாகத்
திகழ்ந்துள்ளனர் 
 

ஆம் ஐயா,

குறு மன்னர் எனும் பொருளில் ‘மழவர்’ எனும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்..
மழவர்களை வரலாறு சொல்கிறது; திருச்செங்கோட்டுச் செப்பேடு
கொல்லி மழவர் பற்றிக் கூறுகிறது

மழவன், s. A young man, கட்டிளமையோன்

மழநாடு -

மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச், 
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற, 
ஈடு பெருக்கிய போர்களின் மேக மிளைத்தேற, 
நீடு வளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு.

மேன்மழநாடு - இது நாட்டின் பெயர். மழநாடு - மழவர் 
என்ற மரபினர் வாழ்வதும், அம்மரபினரால் அரசு செய்யப் 
பெற்றதும் ஆகிய நாடு. இதுமேன் மழநாடு, கீழ் மழநாடு முதலிய 
பல பிரிவுகளையுடையதென் றறியப்படும். திருப்பாச்சிலாச் 
சிராமத்தைத் தலை நகராகக் கொண்டு கொல்லி மழவன் அரசு 
புரிந்த நாடும் மழநாட்டின் ஒரு பிரிவு. (TVU)


மழவும் குழவும் இளமைப் பொருள - தொல்காப்பியம் 2-8-14


மழவு, (p. 851) [ mẕvu, ] s. Youth, juvenility, tenderness, இளமை. 2. An
infant, குழந்தை. (சது.) மழவன், s. A young man, கட்டிளமையோன். (p.)
http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&table=winslow

மழ களிறு (புறநானூறு 35)

நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்
றையன் மகளி ரீரணி புலர்த்தர
வையை நினக்கு மடைவாய்த் தன்று
மையாட லாடன் *மழபுலவர்* மாறெழுந்து....
                                       (பரிபாடல்)
மழபுலவர் - இளைய புலவர்: கல்வி தொடங்கின அளவாதலின் மழபுலவர்
(TVU)

மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்
                     (சிலம்பு - ஆய்ச்சியர் குரவை)

மழபாடி - ஒரு பாடல்பெற்ற தலம்.


தேவ்

 
Reply all
Reply to author
Forward
0 new messages