சமய குரவர் அரசு ஆதரவோடு சைவத்தைத் திணித்தனரா ?

249 views
Skip to first unread message

Dev Raj

unread,
Jul 3, 2015, 10:30:39 AM7/3/15
to mint...@googlegroups.com

சமய குரவரான அப்பர் - சம்பந்தரின் பணி சமணச் செல்வாக்கால்
புகழ் மங்கி மறைந்து கிடந்த சிவத்தலங்களை மக்கள் பார்வைக்கு 
வெளிக்கொணர்வதாகவே அமைந்தது. 

சைவ வளர்ச்சிக்கு அரச குடும்பத்தினர் செல்வாக்கை அவர்கள் பயன்
கொண்டனர் என்று முடிவுகட்ட இயலாது. சம்பந்தர் பெருமான் தம்மை
வரவேற்று ஆதரவு நல்கிய பாண்டிய நாட்டில் நிலையாகத் தங்கினாரா ?
இல்லை. ஆலவாய் தவிர அவர் பாடிய தலங்கள் திருப்பூவணம்,
திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர்,  திருக்கானப்பேர், 
திருச்சுழியல், திருக்குற்றாலம், இராமேசுவரம், திருக்குறும்பலா, 
திருநெல்வேலி .இவை யாவும் ஏற்கெனவே இருந்த சிவத்தலங்களே.                                                                                                                                                                                                                                                                                                                                
தல யாத்திரை முடிந்ததும் மீண்டு சோழநாடு 
திரும்புகிறார். சைவத்தைப் பரப்பும் பொருட்டு அரச ஆதரவோடு 
பாண்டிய நாட்டில் புதிய சிவாலயங்களை அமைத்தாரா என்றால்
அதற்கும் விடை இல்லை. குரவர் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே
இருந்த ஆலயங்கள், அவ்வூரின் சூழல் இவற்றை விவரிப்பதாகவே
அமைகின்றன.பெரும்பான்மைப் பாடல்கள் சோழர் செல்வாக்கு
இழந்திருந்த சோழ மண்டலப் பகுதியில் உள்ளவை.

பிறர்க்குதவப் பணத்தேவை நேர்ந்த தருணங்களில் 
சமய குரவர்  ஈசனிடம் கோரி அதைப் பெற்றதாகவே 
அகச்சான்று சொல்கிறது.  அரசர்களிடம் யாசித்ததாக
வரலாறு அமையவில்லை. மக்களின் பசிப்பிணி நீக்க 
சம்பந்தர் பெருமான் இறைவனிடம் செல்வம் வேண்டுவது -

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’
என்று சுந்தர மூர்த்தி சுவாமிகளால் போற்றப்பட்ட
காழிப்பிள்ளையாரின் காலம் 6ம் நூற்றாண்டு. 
அப்பரடிகள், சிறுத்தொண்டர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், 
அப்பூதி அடிகளார் போன்றோர் சம்பந்தரின் சமகாலத்தவர். 
இக்காலகட்டத்தில் சோழர் செல்வாக்கிழந்திருந்தனர்.
சம்பந்தரின் வாழ்வு சோழ நாட்டில் தொடங்கி
அங்கேயே முடிவடைகிறது. அப்பரடிகள்
முக்தி பெற்றதும் சோழநாட்டில்தான்.

அப்பரடிகள் தாமே உழவாரப்படையுடன் ஆலயந்தோறும்
சென்று தம்மை வெளிக்காட்டிக்கொள்ளமல் பணி செய்ததாக 
வரலாறு.

காஞ்சியில் பல்லவர் கற்றளிகளை அமைத்தாலும்
தமிழகம் முழுவதும் பரவலாகக் கற்றளிகளை
உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர்
சோழர்களே. பிற்காலச் சோழர் எழுச்சி பெற்றபோது
சமய குரவர் காலம் முடிந்து விட்டிருப்பதையும்
நாம் பார்க்கிறோம்.

3ம் நூற்றாண்டு முதல் சுமார் ஏழு நூற்றாண்டு
காலம் சோணாடு பிறர் ஆட்சியில் இருந்தது.
பிற்காலச் சோழர் எழுச்சி கி பி 9ம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் விஜயாலய சோழரிடமிருந்து தொடங்குகிறது.  

The 9th century marked a fresh movement in the 
South Indian style, as revealed in several small, 
simple but very elegant, temples set up during 
the ascendancy of the Chola and other contemporary 
dynasties. Most important of a large number of 
unpretentious but beautiful shrines that dot 
the Tamilnadu countryside are the Vijayalaya 
Colisvara temple at Narttamalai (mid-9th century) 
with its circular sanctum, spherical cupola, 
and massive, plain walls; the twin shrines called 
Agastyisvara and Colisvara,at Kilaiyur (late 9th century); 
and the splendid group of two temples (originally three) 
known as the Muvarkovil,at Kodumbalur (c. 875).

காஞ்சிப் பெரியவர் காவிரியின் பெருமையைக்
கூறுமிடத்தில் [தெய்வத்தின் குரல், 7ம் பகுதி] -
 
"அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரர், ஆகிய மூவர் தேவாரம் பாடிய 
க்ஷேத்ரங்களைப் 'பாடல் பெற்ற ஸ்தலங்கள்' என்பார்கள். 
அப்படி மொத்தம் 275.  அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி,  
சோழ நாட்டின் காவேரிக்கு வடக்கு - தெற்குக் கரைகளில் 
இருக்கிறவைதான் !"

அப்பர் - சம்பந்தர் காலத்தில் வலிமை பெற்றுக் 
கோலோச்சியவர் பல்லவரும், பாண்டியரும். 
பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்கள்14 மட்டுமே. 
தொண்டை மண்டலத்தில் சற்று அதிகம். 
சோழவள நாட்டில்தான் மிகுதியான பாடல்பெற்ற 
தலங்கள்; ஆனால் அது சோழர் செல்வாக்கிழந்திருந்த காலம்.
சைவ சமயம் சார்ந்த வளவர்கோன் பாவை சமணரான
பாண்டிய மன்னருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்.
சமய குரவர் காலத்துக்குப் பின்னரே பெருவாரியாகக்
கற்றளிகளும், பேராலயங்களும் உருப்பெற்றன.

சோழநாட் டொருநூற்றுத் தொண்ணூற் றொன்று
தொல்லிங்கை இரண்டுதமிழ்ப் பாண்டி நாட்டி
லேழிரண்டு மலைநாட்டி லொன்று கொங்கி
லேழுநடு நாட்டிலிரு பத்தி ரண்டே
ஏழைந்தோ டிருபதாம் தொண்டை நாட்டி
லெணொன்றே துளுவத்தில் வடநாட் டைந்தே
ஏழுபத்தைந் துடனிரண்டு நூறு கொண்ட
தீசனுறை தேவாரத் திருத்த லங்கள்.

தேவ்

Seshadri Sridharan

unread,
Jul 3, 2015, 11:44:11 AM7/3/15
to mintamil
2015-07-03 20:00 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
சமய குரவரான அப்பர் - சம்பந்தரின் பணி சமணச் செல்வாக்கால் புகழ் மங்கி மறைந்து கிடந்த சிவத்தலங்களை மக்கள் பார்வைக்கு வெளிக்கொணர்வதாகவே அமைந்தது. 

நாத மரபு ஓகியர் நிறுத்திய சிவலிங்க தளங்களையே இவர்கள் பாடிப் பரப்பினர் எனத் தெரிகின்றது. இந்நிலையில் இவை  சமண செல்வாக்கால் மங்கின எனக் கொள்ளுதல் தவறு.

Over the course of time, Buddhism and Jainism also began to decline; their philosophical base began to be eroded. During that critical period Buddhism and Jainism were declining and the newly-propounded Puranic religion was emerging. During this transitional stage in Indian history, a new doctrine, a new cult, emerged as a result of the synthesis of the declining Buddhism (which was popularly known as Baoddha Yogácára or Vajrayána at that time) and the rising Puranic religion (which was known as Shaevácára, though it had no relation to Shaeva Dharma). This cult was the Nátha Cult, Nátha Dharma. The word nátha used to be appended to the names of the preceptors of this Nátha Cult, such as Ádinátha, Matsyendranátha (who invented Matsyendrásana [spinal twist]), Miinanátha, Gorakśanátha, Gohininátha, Caoraungiinátha, etc. This Nátha Cult had a large influence in Uttar Pradesh, Bihar and Bengal. Though much of Buddhism was accepted in the Nátha Cult, Shiva was the predominant god of the sect; but it had nothing to do with the actual Shiva or the Dharma He propounded.

Not only Shaevácára but other cults also blended with the declining Buddhism or declining Jainism. The Puranic Cult had five sub-cults in it – Shaevácára, the Shiva Cult; Sháktácára, the Shakti Cult; Vaeśńavácára, the Viśńu Cult; Saorácára, the Súrya Cult; and Gáńapatyácára, the Gańapati Cult.

25 April 1982, Calcutta, Published in:Namah Shiváya Shántáya, chapter  Shiva the Focal Point ofEverything Discourse 3

செல்வன்

unread,
Jul 3, 2015, 6:49:16 PM7/3/15
to mintamil

2015-07-03 9:30 GMT-05:00 Dev Raj <rde...@gmail.com>:
சமய குரவரான அப்பர் - சம்பந்தரின் பணி சமணச் செல்வாக்கால்
புகழ் மங்கி மறைந்து கிடந்த சிவத்தலங்களை மக்கள் பார்வைக்கு 
வெளிக்கொணர்வதாகவே அமைந்தது. 

சைவ வளர்ச்சிக்கு அரச குடும்பத்தினர் செல்வாக்கை அவர்கள் பயன்
கொண்டனர் என்று முடிவுகட்ட இயலாது.

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.

ஒரு நாட்டை மதம் மாற்ற தேவைபடுவது நாட்டு மன்னனின் மதத்தை மாற்றுவதே.

நந்தர்கள் சமணரானபின்னர் தான் மகதத்தில் சமணம் பரவியது. அசோகர் பவுத்தரானபின் தான் இந்தியாவிலும், கிழக்காசியாவிலும் பவுத்தம் பரவியது. சக்ரவர்த்தி கான்ஸ்டான்டைன் மூலமே அன்றைய ரோமில் (இன்றைய ஐரோப்பா, எகிப்து) கிறிஸ்துவம் பரவியது. முதல் நாலு கலிபாக்கள் மூலமே இஸ்லாம் பாரசிகம், அரேபியா, எகிப்து, இஸ்ரேல், ஜோர்டனில் பரவியது

லெனின், ஸ்டாலின், மாவோவால் ரஷ்யா, சீனா, வியட்நாம் எல்லாம் கம்யூனிசமயமாகின. இன்றைய லிபரல் ஆட்சியாளர்களால் ஐரோப்பா லிபரல்மயமாகி வருகிறது. நேரு, இந்திராவால் இன்றும் சோஷலிசம் என்பது இந்தியரின் மனதளவில் ஒரு நல்ல கோட்பாடு என்ற அளவில் பதிந்து போயிருக்கிறது.

ஆக உண்மை இப்படி இருக்க, சைவர்களும், சமணரும் இருவரும் பாண்டியநாட்டில் அன்று மன்னனை மாற்றுவதன் மூலமே வெற்றியும், தோல்வியும் கண்டார்கள் என்பதே உண்மையாக இருந்திருக்க முடியும். பாண்டிமாதேவி, குலச்சிறை நாயனார், சம்பந்தர் மூவரும்  பாண்டியன் நின்றசீர் நெடுமாறனை தமிழால் சைவத்துக்கு திருப்பினார்கள். மனைவி சொல்படி நடப்பதே பெண்ணியம். பாண்டியன் சிறந்த பெண்ணியவாதி போலும் :-). கூட சம்பந்தரின் தமிழும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும்?

சமணரை கழுவில் ஏற்றியதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றன. சமணர் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்கிறார்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்தது, நடக்கவில்லை என வரலாற்றில் நடக்கும் விவாதங்களை படிக்கையில் குழப்பமே மிஞ்சுகிறது.

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே

--

செல்வன்

unread,
Jul 3, 2015, 7:05:09 PM7/3/15
to mintamil
தமிழ்க்குடி போர்க்குடி. வாளேந்தி முந்தோன்றி மூத்த குடி எனக்கூறுவதுண்டு

சங்க இலக்கியங்களை படித்தால் தமிழர் நண்டு, உடும்பு, மான், பன்றி, பசு என ஒரு மிருகத்தையும் விட்டு வைக்காமல் உண்டு களித்தது தெரியவரும். இறைச்சிக்கு அடுத்து தமிழரை பைத்தியமாக அடித்த இன்னொரு பொருள் கள். கள்ளை எத்தனை மொந்தை அடித்தாலும் போதை ஏறாது என்பது கவனிக்கதக்கது. விஸ்கி, ரம் மாதிரி கெடுதலானது அல்ல கள்.

ஆக போர், இறைச்சி, கள், காதல் என உலகபேரின்பம் முழுவதையும் துய்த்து பெருவாழ்வு வாழ்ந்த தமிழ் சமூகம் இதை எல்லாம் துறக்கச்சொல்லும் சமணத்தை முழு மனதுடன் எப்படி ஏற்றிருக்க முடியும்? ஆக தமிழ்சமூகத்தின் பெரும்பான்மை மதமாக சமணம் எப்போதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேல்தட்டு வர்க்கம், படித்தவர்கள், துறவிகள், மன்னர்களில் சிலர் சமணராக இருந்திருக்கலாம்.

Banukumar Rajendran

unread,
Jul 3, 2015, 11:28:16 PM7/3/15
to mint...@googlegroups.com
இப்படி இங்கே எழுதியிருக்கிறீர்கள். இதற்கு சற்று முன்னர் அப்படி எழுதியிருந்தீர்கள்:

/மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.

ஒரு நாட்டை மதம் மாற்ற தேவைபடுவது நாட்டு மன்னனின் மதத்தை மாற்றுவதே./

:-))) குஜராத்தில் சைவம் சாப்பிடுவோர் அதிகமா அல்லது அசைவம் சாப்பிடுவோர் அதிகமா? ;-)

செல்வன் தமிழ் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டியக் காலமிது! கி.பி.9ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்த வரலாறுக் கொண்ட ஒரே சமயம் சமணம் மட்டுமே. அனைத்துத் தரப்பு மக்களும் சமணர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

இரா.பா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Jul 3, 2015, 11:45:29 PM7/3/15
to mintamil

2015-07-03 22:28 GMT-05:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
:-))) குஜராத்தில் சைவம் சாப்பிடுவோர் அதிகமா அல்லது அசைவம் சாப்பிடுவோர் அதிகமா? ;-)

:-)

Gujarat: The non-vegetarian gourmet’s paradise in India

http://www.firstpost.com/india/gujarat-the-non-vegetarian-gourmet%E2%80%99s-paradise-in-india-119878.html

While it seems to be surprising, if one attempted to know more about Gujarat, one would learn that 70 percent of the state’s population is non-vegetarian.

“Senior sociologist professor Ghanshyam Shah believes the myth that Gujarat is a vegetarian state was exploded a decade ago by a survey of Anthropological Survey of India, which said 70 percent of the state was non-vegetarian. "Ten per cent Muslims, seven percent Dalits, 40 percent OBCs and 14 percent Adivasis are all meat eating," he says. "Among the OBCs, only smaller artisan communities like Prajapatis and Suthars, forming seven percent, are traditionally vegetarian. Among upper castes, Rajputs are traditionally meat eaters", repors the Times of India.

--

Banukumar Rajendran

unread,
Jul 3, 2015, 11:51:35 PM7/3/15
to mint...@googlegroups.com
நன்றி செல்வன். குஜராத் பொறுத்தவரை என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்!

சமீபத்தில் என் மகனுக்காக இந்தியாவில் உணவுப் பழக்கம் என்ற கட்டுரைக்கு வலையுலகில் உலாவியபோது, இவ்வாறு கிடைத்தது. அதனால் அப்படி எழுதினேன்.

https://en.wikipedia.org/wiki/Gujarati_cuisine

Gujarati cuisine (Gujarati: ગુજરાતી ભોજન) refers to the cuisine of Gujarat, a state in western India. Despite having an extensive coastline providing wholesome seafood, it is primarily a vegetarian state due to the influence of Jain vegetarianism and traditional Hinduism, however some families may include chicken, lamb, and goat to these dishes.[1][2]

--------------------

நன்றி.

இரா.பா

--

Dev Raj

unread,
Jul 4, 2015, 5:24:40 AM7/4/15
to mint...@googlegroups.com
On Friday, 3 July 2015 15:49:16 UTC-7, செல்வன் wrote:
......... மனைவி சொல்படி நடப்பதே பெண்ணியம். பாண்டியன் சிறந்த பெண்ணியவாதி போலும் :-). கூட சம்பந்தரின் தமிழும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும்? 

வளவர்கோன் பாவை முதலிலிருந்தே சைவ சமயத்தில்தான் இருந்தார்;
கணவனார் சமண நெறியிலிருந்தாலும் அவர் சமண ஒழுக்கங்களைப்
பின்பற்றினாரில்லை. சோழர் கை தாழ்ந்திருந்த நிலையில் அரசியல்
காரணங்களுக்காக சமணரான பாண்டிய மன்னரை அவர் மணந்திருக்கலாம் 
என ஊகிக்க இடமுள்ளது. 

முதலில் பெண்ணிய ஆதரவாளராக இல்லாமலிருந்துவிட்டு
சம்பந்தர் பெருமானின் வருகைக்குப்பின் கூன் பாண்டியர்
பெண்ணிய ஆதரவாளராக மாறியிருக்கலாம் :))

தேவ்

Banukumar Rajendran

unread,
Jul 4, 2015, 6:59:27 AM7/4/15
to mint...@googlegroups.com
2015-07-04 14:54 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Friday, 3 July 2015 15:49:16 UTC-7, செல்வன் wrote:
......... மனைவி சொல்படி நடப்பதே பெண்ணியம். பாண்டியன் சிறந்த பெண்ணியவாதி போலும் :-). கூட சம்பந்தரின் தமிழும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும்? 

வளவர்கோன் பாவை முதலிலிருந்தே சைவ சமயத்தில்தான் இருந்தார்;
கணவனார் சமண நெறியிலிருந்தாலும் அவர் சமண ஒழுக்கங்களைப்
பின்பற்றினாரில்லை.

சார்! நக்கீரன் பத்திரிகை விரும்பிப் படிப்பீரோ? :-)))))

சோழர் கை தாழ்ந்திருந்த நிலையில் அரசியல்
காரணங்களுக்காக சமணரான பாண்டிய மன்னரை அவர் மணந்திருக்கலாம் 
என ஊகிக்க இடமுள்ளது. 

முதலில் பெண்ணிய ஆதரவாளராக இல்லாமலிருந்துவிட்டு
சம்பந்தர் பெருமானின் வருகைக்குப்பின் கூன் பாண்டியர்
பெண்ணிய ஆதரவாளராக மாறியிருக்கலாம் :))

;-)

இரசித்தேன் தேவ் அவர்களே!

இரா.பா

தேவ்

Dev Raj

unread,
Jul 4, 2015, 7:51:20 AM7/4/15
to mint...@googlegroups.com
On Saturday, 4 July 2015 03:59:27 UTC-7, இரா.பா wrote:

வளவர்கோன் பாவை முதலிலிருந்தே சைவ சமயத்தில்தான் இருந்தார்;
கணவனார் சமண நெறியிலிருந்தாலும் அவர் சமண ஒழுக்கங்களைப்
பின்பற்றினாரில்லை.
 
சார்! நக்கீரன் பத்திரிகை விரும்பிப் படிப்பீரோ? :-)))))
 
இல்லை ஐயா,  பெரிய புராணம் படித்தால் போதும்.
ஞான சம்பந்தர் கூடல் வந்து சேர்ந்தபின், மன்னவனுக்கும், 
மங்கையர்க்கரசியாருக்கும் இடையே நடந்த உரையாடல் :

தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான் 
”காவி நீள் கண்ணினாய் கேள் ! காவிரி நாட்டில் மன்னும் 
தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு 
மேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்றான் .

வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் 
கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டியானும் காதல் 
வண்டுணத் துதைந்த கோதை மானியே ! இங்கு வந்த 
பண்பு மற்று இதுவேயாகும் பரிசு வேறு இல்லை ”என்றான். 

மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கு அரசியார் தாம் 
”நின்னிலை இதுவே யாகில் நீடிய தெய்வத் தன்மை 
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து 
துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன  !” என்றார். 

நீறு பூசிய நபர்களைக் கண்ட சமணர்க்குக் ‘கண்டு முட்டு’ ஆயிற்று;
அதைச் செவியுற்ற எனக்குக் ‘கேட்டு முட்டு’ ஆயிற்று என்றான்
மன்னன்; ’கண்டு முட்டு, கேட்டு முட்டு’ போன்ற மொழிகளை
அரசியார் உரைக்கவில்லை

தேவ்

செல்வன்

unread,
Jul 4, 2015, 10:34:22 AM7/4/15
to mintamil

2015-07-04 4:24 GMT-05:00 Dev Raj <rde...@gmail.com>:
வளவர்கோன் பாவை முதலிலிருந்தே சைவ சமயத்தில்தான் இருந்தார்;
கணவனார் சமண நெறியிலிருந்தாலும் அவர் சமண ஒழுக்கங்களைப்
பின்பற்றினாரில்லை.

சுதந்திரமான மன்பான்மை உள்ள மாதரசி என தெரிகிறது. ஒரு நாட்டை ஆளும் பேரரசிக்கு ஏற்ற குணம் இது

சோழர் கை தாழ்ந்திருந்த நிலையில் அரசியல்
காரணங்களுக்காக சமணரான பாண்டிய மன்னரை அவர் மணந்திருக்கலாம் 
என ஊகிக்க இடமுள்ளது. 

மதம் தாண்டி திருமணம் செய்யும் செக்யூலர் மன்பான்மை கொண்ட பெருந்தன்மையாளர் என்பதே என் கருத்து. 

முதலில் பெண்ணிய ஆதரவாளராக இல்லாமலிருந்துவிட்டு
சம்பந்தர் பெருமானின் வருகைக்குப்பின் கூன் பாண்டியர்
பெண்ணிய ஆதரவாளராக மாறியிருக்கலாம் :))

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிகனியும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்

மனைவியின் வார்த்தையும் அவ்வாறே.

--

Malarvizhi Mangay

unread,
Jul 4, 2015, 11:54:58 AM7/4/15
to mint...@googlegroups.com

ஆஹா.செல்வன்/சொல். வன் ( மை )

--

Dev Raj

unread,
Jul 4, 2015, 1:41:59 PM7/4/15
to mint...@googlegroups.com

யாதும் சுவடு படாமல் ’என் கடன் பணி செய்து கிடப்பதே !’ என்று திருப்பணி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த அப்பரடிகள் மீதும்
அவதூறுகள் வீசப்படுகின்றன. சமணத்தை அழிக்க அப்பரடிகள் காபாலிகத்தைக் கைக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. 
பல்லவ மன்னர் தாம் செய்த மத்தவிலாஸ ப்ரஹஸநத்தில் பவுத்த சமணரோடு காபாலிகரையும் பகடி செய்துள்ளதைக் காண்கிறோம்.
காபாலிகருக்குத் தமிழ் நாட்டைப் பொருத்த மட்டில் அதிக ஆதரவு இருந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மேற்கொண்ட அச்சுறுத்தும்
வழிபாட்டுமுறைகள் இடுகாடு, சுடுகாடு போன்ற இடங்களில் தனித்த வாழ்க்கையையே அவர்களுக்கு அளித்திருந்தது. காஞ்சியின்
மயானேசுவரர் ஆலயம் போன்ற ஒரு சில ஆலயங்கள் அவர்கள்தம் கட்டுப்பாட்டில் இருந்ததையும், சிவபிரானை
வழிபடுவோர் என்பதால் சிவனடியார்கள் அவர்களுக்கு மரியாதை செய்ததையும் மறுக்கவில்லை. 
காபாலிகர் - சமணர் மோதல் சமய குரவர் காலத்தில் நடந்ததாக வரலாறும் கிடையாது.

நாவுக்கரசர் சமணர்களைப் பழித்தார் என்றால் அதற்குக் காரணமிருந்தது; அவர் துன்புறுத்தலுக்குள்ளானார். 
அகச்சான்றுள்ளது -
கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே !

பழையாறையில் வழிபாட்டுக்கு இடையூறாகச் சமணர் 
இறைத்திருமேனியை மறைத்தனர் -
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே !

அப்பரடிகள் எளிய, ஆழமான, அன்பில் பிணைந்த வழிபாடுகளை ஆதரிப்பவர்.
இவர் ஆராதிக்கும் சிவபெருமான் குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில்
குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பால் வெண்ணீறும், இனித்தமுடைய பொற்பாதமும்
கொண்டவன். இவர் எப்படிக் கோர வடிவுகொண்ட மூர்த்தங்களை வழிபாடு செய்யும்
காபாலிகரோடு இணங்கி இருக்க இயலும் ?

அப்பர் அகவழிப்பாட்டை ஆதரிப்பவர் -
காயமே கோயி லாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே துய்மை யாக மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டிப்
பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே ! 

அப்பர் பெருமான அருளியவற்றுள் அகத்துறையில் 
அமைந்த பாடல்களையும் காண்கிறோம் -
முன்ன மவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள் தன்னாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே !

வாகீசர் 96 தத்துவங்களை ஏற்கும் சித்தாந்த சைவ நெறியைச்
சொன்னவர்-
"திருத்தியாங் குரம்பை தன்னில் தொண்ணூற்றங் கறுவர் நின்று...." 
"முப்பதும் முப்பத் தாறும் முப்பதும் இடுகு ரம்பை....."
"எண்பதும் பத்தும் ஆறும் என்னுளே இருந்து மன்னி......."
இவ்வரிகளை நோக்குக; மிகுந்த தத்துவச் செறிவுள்ள பாடல்களையும் 
இவர் அளித்துள்ளார். இவர் காபாலிகத்தைக் கைக்கொண்டார் 
என்பது முற்றிலும் தவறான வாதம்.

கோரமான வழிபாடுகளை மேற்கொள்ளும் காபாலிகரையும்,
 'எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி, 
 மட்டலர் இடுவார் வினை மாயுமால்' என்று மனம் நெகிழும்
வாகீசரையும் இணைத்துப்பார்க்க முடியவில்லை.

தேவ்

Oru Arizonan

unread,
Jul 4, 2015, 11:10:47 PM7/4/15
to mintamil
2015-07-04 2:24 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:
//சோழர் கை தாழ்ந்திருந்த நிலையில் அரசியல்
காரணங்களுக்காக சமணரான பாண்டிய மன்னரை அவர் மணந்திருக்கலாம் 
என ஊகிக்க இடமுள்ளது. //
  1. சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் ஜென்மப்பகை துவங்கியது ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் காலத்தில்தான்.  
  2. அதற்குமுன் இருவரும் மணவினை செய்துகொள்வது வழக்கம்.
  3. கூன்பாண்டியன் திருமணத்திற்குமுன் சமணனாக இருத்திருக்க வாய்ப்பில்லை.  அப்படி இருந்திருந்தால், சைவத்தில் நாட்டம்கொண்ட மங்கயார்கரசியைத் திருமணம் செய்துகொடுத்திருப்பார்கள் என்றுசொல்ல முடியாது.
  4. கூன்பாண்டியன் திருமனத்திற்குப்பின்னரே சமணத்தைத் தழுவியிருக்கக்கூடும் -- அப்பர்பிரான் சைவத்திலிருந்து சமந்த்தத் தழுவிப்பின்னர் சைவம் திரும்பியதுபோல நடந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
  5. மந்திரியாரான குலச்சிறையாரும் சைவர் என்பது, துவக்கத்தில் அனைவரும் சைவராகவே இருந்திருக்கலாம், மன்னர்மட்டுமே சமணத்தைத் தழுவியிருக்கலாம் -- அதனாலேயே, சைவர்களான அரசியும், மந்திரியும் மன்னரை சைவத்திற்கு மீள்திரும்ப விருப்பம் கொண்டிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Jul 4, 2015, 11:16:55 PM7/4/15
to mintamil
2015-07-04 10:41 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:

கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே !

அப்பரே இப்படி ஓதிச் சென்றிருக்கும்போது, யாரோ ஒருவர் எழுதிய கட்டுரையை இரா.பா. அவர்கள் வைத்திருப்பது -- கட்டுரையில் இருப்பவர், தனக்குப் பட்டதை எழுதியிருப்பது -- கட்டுரை எழுதியவர், திருமுறைகளைச் சரிவரக் கற்காமல் கருத்துச் சொல்வது -- தவறான கருத்தைப் பரப்புவதாகவே இருக்கிறது.

ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Jul 5, 2015, 2:08:26 PM7/5/15
to mintamil

2015-07-04 10:54 GMT-05:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:
ஆஹா.செல்வன்/சொல். வன் ( மை )

தேமொழி

unread,
Jul 6, 2015, 5:17:23 AM7/6/15
to mint...@googlegroups.com, rde...@gmail.com

On Saturday, July 4, 2015 at 4:51:20 AM UTC-7, Dev Raj wrote:
பெரிய புராணம் படித்தால் போதும்.
ஞான சம்பந்தர் கூடல் வந்து சேர்ந்தபின், மன்னவனுக்கும், 
மங்கையர்க்கரசியாருக்கும் இடையே நடந்த உரையாடல் :

தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான் 
”காவி நீள் கண்ணினாய் கேள் ! காவிரி நாட்டில் மன்னும் 
தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு 
மேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்றான் .

சம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு....
பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் வாழ்ந்த காலம் பன்னிரண்டாம்  நூற்றாண்டு

பாண்டிய மன்னர் சமணர் என்பதும், 
அவரது மனைவியும் அமைச்சருமே அவர் சைவ மதத்திற்கு மாறக் காரணம், 
அதற்கு சம்பந்தர் உதவி செய்தார்  
மன்னர் மதம்  மாறிய பிறகு சமணருக்கு செல்வாக்கு குறைந்தது 
என்பது மட்டுமே மாறமுடியாத வரலாற்றுத் தகவலாக இருக்க வாய்ப்புள்ளது.  

இக்கதையை  பிற்காலத்தில் எழுதிய சேக்கிழாரின் கற்பனைத்திறம் எவ்வளவு இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டாமா?
அவர் உரையாடலாகக் கூறியவற்றை எல்லாம் அப்படியே எடுத்துக் கொள்ள முடியுமா?

நாளை செல்வன் எழுதிய கதையைப் படித்த ஒருவர் அதை மேற்கோள் கொடுத்தால் நம்பும் நிலையும் வரும் போலிருக்கிறது.

ஒரு இலக்கியத்தில் எது வரை வரலாற்றுத் தகவல் பகுதியாக இருக்கக் கூடும், அதில் எதுவரை கற்பனை  என்பதை பிரித்தறிய முடியாதவர்களா நாம்?

நல்ல வேளை பொன்னியின் செல்வனில் இருந்து மங்கையர்க்கரசியின் கதையை மேற்கோள் கொடுக்காமல் விட்டீர்களே என்று மகிழ்ச்சி அடைகிறேன்.

இக்கதையில்  மன்னருக்கு நோய் தீர்த்தார் அதனால் மதம் மாறினார் என்பது மட்டும் சரியான காரணமாக இருக்கலாம்...பல இலக்கிய ஆசிரியர்கள்..அப்பர்..அருணகிரிநாதர்...இன்று    ஏ ஆர் ரகுமான் குடும்பம் வரை இதுதான் கதை. நோய் தீர்ந்தால் கடவுள் பக்தி .

உயிர் பிழைத்ததால்  மதம் மாறுபவர்கள் ....நன்றி தெரிவிக்கும் நோக்கில் தீவிர மதவாதியாக மதம் பரப்புவதில் இறங்குவதை இன்று கூடப் பார்க்க முடியும்.

முதலில் படிப்பதில் எதுவரை கற்பனை எந்தப் பகுதி உண்மையாக இருக்கும் எனப் பிரித்து அறிவது உதவும்.

இதில் இலக்கியம் எழுதியவர் தீவிர மதவாதியாக இருந்தால் எப்படி எல்லாம் தனது கற்பனையை ஓடவிட்டு தான் சார்ந்த சமயத்தை முன்னிறுத்த விரும்பியிருப்பார் என்பதை எண்ணிப்பார்க்க விரும்பினால், இங்கே மின்தமிழில் மதசார்புடன் எழுதும் மக்களின் மனநிலை உணர்த்தாதா ... 

ஐந்தாறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் verbatim கொடுக்கிறாரா ... நான் நொந்து போய் விட்டேன்.

..... தேமொழி

தேமொழி

unread,
Jul 6, 2015, 5:21:07 AM7/6/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com

On Friday, July 3, 2015 at 4:05:09 PM UTC-7, செல்வன் wrote:
தமிழ்க்குடி போர்க்குடி. வாளேந்தி முந்தோன்றி மூத்த குடி எனக்கூறுவதுண்டு

சங்க இலக்கியங்களை படித்தால் தமிழர் நண்டு, உடும்பு, மான், பன்றி, பசு என ஒரு மிருகத்தையும் விட்டு வைக்காமல் உண்டு களித்தது தெரியவரும். இறைச்சிக்கு அடுத்து தமிழரை பைத்தியமாக அடித்த இன்னொரு பொருள் கள். கள்ளை எத்தனை மொந்தை அடித்தாலும் போதை ஏறாது என்பது கவனிக்கதக்கது. விஸ்கி, ரம் மாதிரி கெடுதலானது அல்ல கள்.

நான் சிறு வயதில் ...

கேள்வி: கள் குடித்தவன் தள்ளாடுவதேன்... 
பதில்:  கல் குடித்தவனின் சிறுமூளை பாதிக்கப்படுவதால் தள்ளாடுகிறான்

என்று படித்துள்ளேனே.

நீங்களோ ... கள்ளை எத்தனை மொந்தை அடித்தாலும் போதை ஏறாது என்று கூறுகிறீர்களே ...எது உண்மை எது உண்மைக்கு மாறானது?

..... தேமொழி 

Dev Raj

unread,
Jul 6, 2015, 5:35:46 AM7/6/15
to mint...@googlegroups.com
On Monday, 6 July 2015 02:17:23 UTC-7, தேமொழி wrote:
இக்கதையில்  மன்னருக்கு நோய் தீர்த்தார் அதனால் மதம் மாறினார் என்பது மட்டும் சரியான காரணமாக இருக்கலாம்...பல இலக்கிய ஆசிரியர்கள்..அப்பர்..அருணகிரிநாதர்...இன்று    ஏ ஆர் ரகுமான் குடும்பம் வரை இதுதான் கதை. நோய் தீர்ந்தால் கடவுள் பக்தி .
உயிர் பிழைத்ததால்  மதம் மாறுபவர்கள் ....நன்றி தெரிவிக்கும் நோக்கில் தீவிர மதவாதியாக மதம் பரப்புவதில் இறங்குவதை இன்று கூடப் பார்க்க முடியும்.
முதலில் படிப்பதில் எதுவரை கற்பனை எந்தப் பகுதி உண்மையாக இருக்கும் எனப் பிரித்து அறிவது உதவும்.

இதில் இலக்கியம் எழுதியவர் தீவிர மதவாதியாக இருந்தால் எப்படி எல்லாம் தனது கற்பனையை ஓடவிட்டு தான் சார்ந்த சமயத்தை முன்னிறுத்த விரும்பியிருப்பார் என்பதை எண்ணிப்பார்க்க விரும்பினால், இங்கே மின்தமிழில் மதசார்புடன் எழுதும் மக்களின் மனநிலை உணர்த்தாதா ... 

ஐந்தாறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் verbatim கொடுக்கிறாரா ... நான் நொந்து போய் விட்டேன்.

நோய் தீர்த்தனர், அற்புதம் நிகழ்த்தினர் , ஆள் சேர்த்தனர் - எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
ஏன் பாண்டி நாட்டிலோ, தொண்டை நாட்டிலோ பாடல்பெற்ற தலங்கள் அதிகம் இல்லை ? 
ஏன் பசிப்பிணி போக்குவதற்கும் மன்னர்பால் செல்லாமல் சமய குரவர் இறைவனிடம் கையேந்தினர் ?
நொந்துகொள்ளாமல் சொல்லுங்கள். இவை பெரிய புராணத்தின் ஆதாரத்தில் அமைந்த கேள்விகள்
இல்லை

தேவ்

தேமொழி

unread,
Jul 6, 2015, 6:00:27 AM7/6/15
to mint...@googlegroups.com, rde...@gmail.com

On Monday, July 6, 2015 at 2:35:46 AM UTC-7, Dev Raj wrote:

திரு. தேவ்!!!
இதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?  நான் குறிப்பிட்டதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

நான் சொன்னது ஒரு  இலக்கியத்தில் கற்பனை எதுவாக இருக்கக்கூடும்,  வரலாறு எதுவாக இருக்கக்கூடும் என்பதில் கவனம் தேவை என்பது மட்டுமே... 
அதை ஒருபுறம் இருக்கட்டும் என்று தள்ளிவிட்டு ...இக்கேள்வி ...இது கொஞ்சமும் தேவையற்றது... 

நான் தலைப்பிற்கு ஆதரவாகவோ ...எதிராகவோ என் பதிலில் ஏதேனும் குறிப்பிட்டுள்ளேனா....
அல்லது ...
கொடுக்கும் சான்றைப் பற்றியக் கேள்வி எழுப்பியுள்ளேனா எனக் கவனிக்கவும்...

தேவ்

Banukumar Rajendran

unread,
Jul 6, 2015, 6:04:24 AM7/6/15
to mint...@googlegroups.com
2015-07-04 17:21 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Saturday, 4 July 2015 03:59:27 UTC-7, இரா.பா wrote:

வளவர்கோன் பாவை முதலிலிருந்தே சைவ சமயத்தில்தான் இருந்தார்;
கணவனார் சமண நெறியிலிருந்தாலும் அவர் சமண ஒழுக்கங்களைப்
பின்பற்றினாரில்லை.
 
சார்! நக்கீரன் பத்திரிகை விரும்பிப் படிப்பீரோ? :-)))))
 
இல்லை ஐயா,  பெரிய புராணம் படித்தால் போதும்.

முதலில் நன்றி ஐயா. கிண்டலாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு!

பெரிய புராணம் படித்தால் போதும் என்கிறீர்கள். சரி. அப்படியே தாங்கள்
எடுத்துக் கொள்ளலாம். யான் எப்படி எடுத்துக் கொள்ளமுடியும்? ;-)

சம்பந்தரரின் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு, சேக்கிழார் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு.
கிட்டதட்ட, 500 ஆண்டுகள், மிக நீண்ட இடைவெளி. எப்படி மூவருக்குள் நடந்ததை,
பெரியப் புராணமாக எழுத முடிந்தது, எந்த வித பிற ஆதாரங்களோ இல்லாமல்??

இரா.பா

ஞான சம்பந்தர் கூடல் வந்து சேர்ந்தபின், மன்னவனுக்கும், 
மங்கையர்க்கரசியாருக்கும் இடையே நடந்த உரையாடல் :

தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான் 
”காவி நீள் கண்ணினாய் கேள் ! காவிரி நாட்டில் மன்னும் 
தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு 
மேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்றான் .

வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் 
கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டியானும் காதல் 
வண்டுணத் துதைந்த கோதை மானியே ! இங்கு வந்த 
பண்பு மற்று இதுவேயாகும் பரிசு வேறு இல்லை ”என்றான். 

மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கு அரசியார் தாம் 
”நின்னிலை இதுவே யாகில் நீடிய தெய்வத் தன்மை 
அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து 
துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன  !” என்றார். 

நீறு பூசிய நபர்களைக் கண்ட சமணர்க்குக் ‘கண்டு முட்டு’ ஆயிற்று;
அதைச் செவியுற்ற எனக்குக் ‘கேட்டு முட்டு’ ஆயிற்று என்றான்
மன்னன்; ’கண்டு முட்டு, கேட்டு முட்டு’ போன்ற மொழிகளை
அரசியார் உரைக்கவில்லை

தேவ்

Dev Raj

unread,
Jul 6, 2015, 6:52:02 AM7/6/15
to mint...@googlegroups.com
On Monday, 6 July 2015 03:04:24 UTC-7, இரா.பா wrote:
முதலில் நன்றி ஐயா. கிண்டலாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு!

புரிதல் மகிழ்ச்சி தருகிறது :))

சம்பந்தரரின் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு, சேக்கிழார் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. 
கிட்டதட்ட, 500 ஆண்டுகள், மிக நீண்ட இடைவெளி. எப்படி மூவருக்குள் நடந்ததை,
பெரியப் புராணமாக எழுத முடிந்தது, எந்த வித பிற ஆதாரங்களோ இல்லாமல்??

என்ன செய்யலாம் ஐயா ?
நாம் புழங்கும் சமயத்துறையே அப்படித்தானே இயங்குகிறது !
தீர்த்தங்கரர்கள் குறித்து அறிவதற்கு அவர்களுக்குப் பல 
நூற்றாண்டுகளுக்குப்பின் எழுந்த நூல்களைத்தானே 
ஆதாரமாகக் கொள்கிறோம் ? 

ஜைநத்தின் சாஸந தேவ / தேவியர் பிற்காலச் சேர்க்கை என எழுதுகிறார்
ஒரு ஜைந நண்பர்.

பார்ச்வநாதருக்கு முன்பிருந்ததாகச் சொல்லப்படும் தீர்த்தங்கரர்களை 
வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனரா ? நேர்மையுடன் விடை 
கூறுங்கள்.அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நீங்களும் 
அவர்களை வழிபடாமல் இருப்பீர்களா ?

தேவ்

Banukumar Rajendran

unread,
Jul 6, 2015, 7:37:49 AM7/6/15
to mint...@googlegroups.com
2015-07-06 16:22 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Monday, 6 July 2015 03:04:24 UTC-7, இரா.பா wrote:
முதலில் நன்றி ஐயா. கிண்டலாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததற்கு!

புரிதல் மகிழ்ச்சி தருகிறது :))

சம்பந்தரரின் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு, சேக்கிழார் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. 
கிட்டதட்ட, 500 ஆண்டுகள், மிக நீண்ட இடைவெளி. எப்படி மூவருக்குள் நடந்ததை,
பெரியப் புராணமாக எழுத முடிந்தது, எந்த வித பிற ஆதாரங்களோ இல்லாமல்??

என்ன செய்யலாம் ஐயா ?
நாம் புழங்கும் சமயத்துறையே அப்படித்தானே இயங்குகிறது !
தீர்த்தங்கரர்கள் குறித்து அறிவதற்கு அவர்களுக்குப் பல 
நூற்றாண்டுகளுக்குப்பின் எழுந்த நூல்களைத்தானே 
ஆதாரமாகக் கொள்கிறோம் ? 

நம்பிக்கை, அறிவியல் முறையான ஆய்வு என்றுமே சேர்ந்தே இருக்கமுடியாது.

ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். நாம்
அதில் தலையிடமுடியாது. ஆயின், அவ்வித நம்பிக்கைகளைக் கொண்டு,
இது இப்படித்தான் இருக்கும் என்று ஆயமுடியாது! என்னை?

காட்டாக, பிள்ளையார் சிலை பால் குடித்தது - இது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை. இதை
யாரும் ஒன்றும் சொல்லமுடியாது! ஆனால், அதே சொந்த நம்பிக்கையின் பேரில்,
அப்படித்தான் நடந்தது என்று பொதுவில் அறுதியிட்டுச் சொல்லும்போது, எதிர்க் கேள்விகள்
எழுவதை மறுக்கமுடியாது.

இதைபோல்தான் எந்த ஒரு நம்பிக்கைச் சார்ந்த ஒன்றையும் யாம் அணுகவேண்டும்!

தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கப்படுவோர், நம்மை போன்று தாய்வயிற்றில் பிறந்த மனிதர்கள்தாம்.
இதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால்.. அதே தீர்த்தங்கரர்கள், ஆயிரம் அடி வளர்ந்திருந்தார்கள், ஆயிரம்
ஆண்டுகளாக வாழ்ந்திருந்தார்கள் என்று சொல்லும்போது, அதுமிகைப்படல்! என்றும் அதுபோன்று
நடவா!! இதையும் யாரும் மறுக்கமுடியாது.

மறுத்து, அதற்கு காரண, காரியங்கள் சொல்ல முற்படும்போது, அங்கு ஆய்வுக்கு இடமில்லாலம் போகிறது!
சப்பைக் கட்டு என்று சொல்லலாம்!

ஜைநத்தின் சாஸந தேவ / தேவியர் பிற்காலச் சேர்க்கை என எழுதுகிறார்
ஒரு ஜைந நண்பர்.

ஆய்வுப்படிப்பார்த்தால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு முதலே கற்சிற்பங்கள் வருகின்றன. நூல்களை
எடுத்துக்கொண்டால் அவை கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. இதுதான் (அக ஆதாரம்) நூற்களுக்கும்,
கற்சிற்பங்களுக்கும் (புற ஆதாரங்கள்) இருக்கும் முரண்பாடுகள். இதைதான் என்றும் நினைவுறுத்தி
வந்திருக்கிறேன்.

என் தனிப்பட்ட கருத்து, கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கொள்கிறேன்.

(ஒரு கொசுறு செய்தி: தென்னகத்தில் கிடைத்த மிக பழைமையான தீர்ந்தங்கரச் சிற்பம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
கர்நாடகாவில் கிடைத்த பார்ஸவநாதர் (ஹம்பி.நாகராஜயா - Parsvanatha in Karnataka) சிற்பம்தான்.  வடநாட்டில் மிக பழைமையான சிற்பத்தின் ஆண்டு கி.மு.மூன்று. (ஆதாரம் - மதுரா அகழ்வாராய்ச்சி)

இதன் அடிப்படையில், சிலப்பதிகாரத்தின் காலத்தை கி.பி. இரண்டிலிருந்து, நான்காம் நூற்றாண்டு என்றுக் கொள்கிறேன். சிலப்பதிகாரத்தில் வரும் அருகர் வர்ணனைகள் கற்சிற்பத்தை அப்படியே பாடுவதுபோல
அமைந்திருக்கிறது. சிற்பங்கள் நடைமுறையில் வந்த காலமது என்பார், டாக்டர். ஏகாம்பரநாதன் (சென்னை பல்கலைக்கழகம்)

அக/புற ஆதாரங்கள் ஒன்றும் சேரும்போதுதான் உண்மையான தரவுகள் கிடைக்கும். அதுவே ஆராய்வதற்குண்டான
சரியான Tool களாகப் பயன்படும்.

பார்ச்வநாதருக்கு முன்பிருந்ததாகச் சொல்லப்படும் தீர்த்தங்கரர்களை 
வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனரா ? நேர்மையுடன் விடை 
கூறுங்கள்.அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நீங்களும் 
அவர்களை வழிபடாமல் இருப்பீர்களா ?

வரலாற்று ரீதியாக பார்த்தால், அவர்கள் சொல்வது சரிதான். ஆதாரங்கள்
கிடைக்கும் வரை!

வழிபடுவதும், அல்லாமல் போவதும் அவரவர் சொந்த விருப்பமில்லையா! :-)

இரா.பா

Dev Raj

unread,
Jul 6, 2015, 7:54:49 AM7/6/15
to mint...@googlegroups.com
On Monday, 6 July 2015 04:37:49 UTC-7, இரா.பா wrote:
ஆய்வுப்படிப்பார்த்தால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு முதலே கற்சிற்பங்கள் வருகின்றன. 

Dev Raj

unread,
Jul 6, 2015, 8:23:42 AM7/6/15
to mint...@googlegroups.com

On Monday, July 6, 2015 at 2:35:46 AM UTC-7, Dev Raj wrote:
ஏன் பாண்டி நாட்டிலோ, தொண்டை நாட்டிலோ பாடல்பெற்ற தலங்கள் அதிகம் இல்லை ? 
ஏன் பசிப்பிணி போக்குவதற்கும் மன்னர்பால் செல்லாமல் சமய குரவர் இறைவனிடம் கையேந்தினர் ?

On Monday, 6 July 2015 03:00:27 UTC-7, தேமொழி wrote:
இதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?  நான் குறிப்பிட்டதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

கட்டாயமில்லை; நான் எடுத்துக்கொண்ட தலைப்புக்கும் அவ்வரிகளுக்கும் நெருங்கிய 
தொடர்புண்டு. அண்மைக்காலமாக சமயகுரவர்மீது பல அவதூறுகள்.
உண்மையில் அவற்றுக்கு முகாந்திரம் கிடையாது.

கோச்செங்கட் சோழர் காலத்தில் காவிரியை ஒட்டியதான பல சிவாலயங்கள்
ஏற்பட்டன. களப்பிரர் காலத்தில் பிற சமயங்களின் பரவலால் அவை 
புறக்கணிப்புக்குள்ளாயின. பின்னால் ஆட்சி மாற்றம். ஆனால் சமணம்
அரசியல் மதமாகத் தொடர்ந்தது. சம்பந்தர் காலத்தில் சிவ ஆலயங்களை
அவர் மீட்டெடுக்க முயற்சி செய்தார். கடல் சார்ந்த தலங்களும் பாடல் பெற்றன.
பழையாற்றில் கோச்செங்கணான் அமைத்த கோயிலை வாகீசர்
வழிபடச் செல்லுங்கால் இறைத்திருமேனியைச் சமணர் ஒளித்தனர்;
சமணர் செய்த இடையூறும் தேவாரத்தில் பதிவாகிறது.

வரலாற்றுப்புகழ் பெற்ற கோச்செங்கணான் செய்த பணியைத்
திருமங்கை ஆழ்வாரும் பாடியுள்ளார்; அச்சோழர் அமைத்த
70 ஆலயங்களில் 23 அழிந்துவிட்டன. கோச்செங்கட் சோழர், 
அவர்தம் புதல்வர் நல்லடிக்கோன் - பெயர்கள் 
அன்பில் செப்பேட்டில் இடம் பெற்றவை

தேவ்

Nagarajan Vadivel

unread,
Jul 6, 2015, 8:23:59 AM7/6/15
to மின்தமிழ்

2015-07-06 14:51 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நீங்களோ ... கள்ளை எத்தனை மொந்தை அடித்தாலும் போதை ஏறாது என்று கூறுகிறீர்களே ...எது உண்மை எது உண்மைக்கு மாறானது?

​கள்ளில் சிறு கள் என்றும் பெருங்கள் என்று இரி பிரிவுகள் இருந்ததாகவும் அவ்வையார் போன்ற பெண்களும் சிறுகள் அருந்தியதாக வரலாறு குறிப்பிடும்.  ஆய்வறிஞர் ராகவையங்கார் ஒரு கட்டுரையே எழுதியுள்ளார்.  பாரதியார் இறுதிக்காலத்தில் அவருடைய மனைவியின் ஊரில் மொந்தைபில் பெருங்கள் அருந்தி போதையுடன் இருந்தார் என்று அவருடைய சமகால மக்கள் குறிப்பிட்டுள்ளனர்
இக்காலத்தில் பதனீர் என்றழைக்கப்படும் பதனீர் சிறுகள் எனவும் புளித்த பதநீர் கள் என்றும் கருதலாம்.​ பின்னதில் போதை கட்டாயம் உண்டு.  
இரண்டையும் அருந்தியவன் என்ற முறையில் இது எனது சொந்தக் கருத்து என்க
​இணையமுனி​

Dev Raj

unread,
Jul 6, 2015, 8:25:05 AM7/6/15
to mint...@googlegroups.com
*பழையாறையில்*

Dev Raj

unread,
Jul 6, 2015, 8:47:12 AM7/6/15
to mint...@googlegroups.com
On Monday, 6 July 2015 04:37:49 UTC-7, இரா.பா wrote:
தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கப்படுவோர், நம்மை போன்று தாய்வயிற்றில் பிறந்த மனிதர்கள்தாம்.
இதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால்.. அதே தீர்த்தங்கரர்கள், ஆயிரம் அடி வளர்ந்திருந்தார்கள், ஆயிரம்
ஆண்டுகளாக வாழ்ந்திருந்தார்கள் என்று சொல்லும்போது, அதுமிகைப்படல்! என்றும் அதுபோன்று
நடவா!! இதையும் யாரும் மறுக்கமுடியாது.

வரலாற்றில் இடம்பெறும் ‘ஏலாசார்யர்’ [குந்தகுந்தர்] ஏலக்காய் அளவு உடலைச்
சுருக்கிக்கொண்டார் என்பது மிகைக்கூற்றா ? வரலாற்று நிகழ்வா ?

தேவ்
 
Geetha Sambasivam

unread,
Jul 6, 2015, 8:51:47 AM7/6/15
to மின்தமிழ்
//நல்ல வேளை பொன்னியின் செல்வனில் இருந்து மங்கையர்க்கரசியின் கதையை மேற்கோள் கொடுக்காமல் விட்டீர்களே என்று மகிழ்ச்சி அடைகிறேன்.//

பொன்னியின் செல்வனில் வராது! அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தது அல்லவோ இந்தக் கதை!!!!!!!!!!!!!! சிவகாமியின் சபதத்தில் வரும். கடைசி பாகத்தில் படிக்கலாம்.

Dev Raj

unread,
Jul 6, 2015, 10:09:16 AM7/6/15
to mint...@googlegroups.com
//நல்ல வேளை பொன்னியின் செல்வனில் இருந்து மங்கையர்க்கரசியின் கதையை மேற்கோள் கொடுக்காமல் விட்டீர்களே என்று மகிழ்ச்சி அடைகிறேன்.//

On Monday, 6 July 2015 05:51:47 UTC-7, myself wrote:
பொன்னியின் செல்வனில் வராது! அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தது அல்லவோ இந்தக் கதை!!!!!!!!!!!!!! சிவகாமியின் சபதத்தில் வரும். கடைசி பாகத்தில் படிக்கலாம்.

சிவனடியார் வரலாற்றுக்குப் புகழ்பெற்ற சைவ நூல் ஒன்றிலிருந்து ஆதாரம் காட்டுவதும்
வேறு நாவல்களைச் சுட்டுவதும் ஒன்றாகுமா ?
கீதா அம்மையாரும் இப்பகடியில் கலந்து கொள்வது வியப்பைத் தருகிறது.
அவர் ஆழ்ந்த சைவ நூற் பயிற்சி உடையவர் என எண்ணியிருந்தேன் :((

சிறுத்தொண்டரும், திருநீலகண்டரும், கண்ணப்ப நாயனாரும் பாடல்கள்
இயற்றவில்லை. ஆனாலும் அவர்கள் பற்றிய குறிப்பைப் பிற்காலத்தில்
தோன்றிய அடியார்கள் தருகின்றனர் -

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை "வா" என்ற வான் கருணை
சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி
                                             - மாணிக்க வாசகர் 

"கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்"
                                   - திருத்தொண்டத் தொகை

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன 
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே !
                                                                 - பட்டினத்தார் 

கால இடைவெளியை அளந்து பார்க்க முடியுமா ?

அடியார்தம் வரலாறு அகச்சான்றுகளை ஒட்டியே பெரும்பாலும்
அமைவன; ஏற்பதோ ஏற்காததோ வேறு விஷயம்.  

தேவ்

தேமொழி

unread,
Jul 6, 2015, 12:07:57 PM7/6/15
to mint...@googlegroups.com, geetha...@gmail.com

On Monday, July 6, 2015 at 5:51:47 AM UTC-7, myself wrote:
//நல்ல வேளை பொன்னியின் செல்வனில் இருந்து மங்கையர்க்கரசியின் கதையை மேற்கோள் கொடுக்காமல் விட்டீர்களே என்று மகிழ்ச்சி அடைகிறேன்.//

பொன்னியின் செல்வனில் வராது! அதற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தது அல்லவோ இந்தக் கதை!!!!!!!!!!!!!! சிவகாமியின் சபதத்தில் வரும். கடைசி பாகத்தில் படிக்கலாம்.

இங்கிருக்கிறது கீதா ...
கொலை வாள் - அத்தியாயம் 17
திருநாரையூர் நம்பி
பார்க்க >>>>   https://ta.wikisource.org/s/wa

நான் பொன்னியின் செல்வனை "கல்கியின்  எழுத்திலேயே" சுருக்கப்பட்டப் பதிப்பாக்கினேன். 
அதற்காக மையக்கதைக்கு தொடர்பிலாதவற்றை நீக்குவதில் முனைந்ததால் வரிவரியாக கதையைப் பலமுறை படித்திருக்கிறேன். 

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி வழங்கிய “பொன்னியின் செல்வன்”(சுருக்கப்பட்ட பதிப்பு)

கதை சுருக்க உதவி: தேமொழி

 http://freetamilebooks.com/ebooks/ponniyin-selvan-abridged-version/ <<< ஸ்ரீனி  freetamilebooks.com வழியாகவும் வெளியிட்டார்.

..... தேமொழி

தேமொழி

unread,
Jul 6, 2015, 12:33:29 PM7/6/15
to mint...@googlegroups.com, rde...@gmail.com

On Monday, July 6, 2015 at 7:09:16 AM UTC-7, Dev Raj wrote:

சிறுத்தொண்டரும், திருநீலகண்டரும், கண்ணப்ப நாயனாரும் பாடல்கள்
இயற்றவில்லை. ஆனாலும் அவர்கள் பற்றிய குறிப்பைப் பிற்காலத்தில்
தோன்றிய அடியார்கள் தருகின்றனர் - மாணிக்க வாசகர் ,  - திருத்தொண்டத் தொகை,   - பட்டினத்தார் 

கால இடைவெளியை அளந்து பார்க்க முடியுமா ?

அடியார்தம் வரலாறு அகச்சான்றுகளை ஒட்டியே பெரும்பாலும்
அமைவன; ஏற்பதோ ஏற்காததோ வேறு விஷயம்.  

திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமானது திருவிளையாடல்களை  பரஞ்சோதி முனிவர் கூறினால் என்ன அல்லது ஏ. பி. நாகராஜன் கூறினால்தான் என்ன?

அதனால் ஏற்றுக் கொள்ளாமலா போய் விடுவோம்.  எல்லோரும் முன்னர் வழங்கி வந்த கதையை அவரவர் பாணியில் கூறிக்கொண்டிருப்பதுதான். 
யார்தான் நேரில் இவற்றையெல்லாம் பார்த்தார்கள்.  மத நம்பிக்கையை உருவாக்க, வளர்க்க  எழுதப்பட்ட கதைகள் இவை என்பதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். 

அக்கதைகள் சிலை, ஓவியம், இலக்கியம் என பலவகையில் விவரிக்கப்பட்டன என்பதை புரிந்து கொண்டால்தான் ஆய்வுகள் இயலும்.  அதைவிட்டு முடிவை முன்னரே முடிவு செய்து கொண்டு, "ஆரியர் இந்தியாவிற்குள் நுழையவில்லை, இந்தியாவிலேயே இருந்தவர்கள் என்பதற்கு சான்றுகள் கொண்டுவர ஆய்வு செய்வோம்" என்று கிளம்பும் ஆராய்சிக் கூட்டத்தைதான்  அப்பாணி ஆய்வு முயற்சி நினைவுறுத்தும். 

அதனால் காலத்தில் முற்பட்டதை  அசல் என்றும் பிற்பட்டதை  நகல் எனவும்  எடுத்துக்கொள்ள முடியாது.  அக்கால இலக்கியம் உருவாக்கியவருக்குதான் மதிப்பு  இக்காலத்தில் உள்ளவர் கூறுவதற்கு மதிப்பில்லை என்றும் கூற வழியில்லை.   

ராஜ ராஜன் கதையை கல்கி சொன்னால் என்ன பாலகுமாரன் சொன்னால் என்ன, அவை வரலாற்றில் கிடைத்த தகவலை முன்னர் கிடைத்த செய்தியை அவர்கள் முறையில் சொல்வது என்று படிப்போமா அதைவிட்டு அவர்களே நேரில் பார்த்ததைக் கூறுகிறார்கள் என எடுத்துக் கொள்வோமா.

கல்வெட்டில் கடல் வற்றிப் போக வேலை வீசினார் என்றால் உடனே கடல் வற்றியது என்றா எடுத்துக் கொள்வோம், அது அக்காலத்திலும் அக்கதை வழக்கத்தில் இருந்தது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். வரலாற்றில் வரும் மனிதர்களும் அவர்கள் மீது ஏற்றப்படும் தகவல்களும் மேலும் ஆய்வுகளுக்கு உட்படுதவேண்டியது அவசியம்.

ஒரு போரைப் பற்றியே, கல்வெட்டுகளிலேயே கர்நாடகா மன்னர் ஒருவாரும், தமிழக மன்னர் ஒருவாரும் போரின் வெற்றி தோல்விகளை தங்களை நல்லவிதத்தில் காட்டும் விதமாக எழுதி வைத்திருப்பதால் போர் பற்றிய தகவல்களும் மாறுபட்டுள்ளது என்றும் படித்திருக்கிறேன்.  

..... தேமொழி

Dev Raj

unread,
Jul 6, 2015, 12:58:25 PM7/6/15
to mint...@googlegroups.com
On Saturday, 4 July 2015 20:10:47 UTC-7, oruarizonan wrote
  1. சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் ஜென்மப்பகை துவங்கியது ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் காலத்தில்தான்.  

இல்லை. 

தலையாலங்கனத்துச் செரு வென்ற பாண்டியனை வேளிர்களுடன் சேர்ந்துகொண்டு  எதிர்த்ததும் ஒரு சோழனே.

910ல் முதலாம் பராந்தக சோழனுக்கும்  ராஜசிம்ம பாண்டியனுக்கும் நிகழ்ந்தபோரில்
சோழர் வென்றனர்; மீண்டும் பாண்டியன் ஈழப்படை துணையுடன் போர் தொடுத்தான்;
தோல்வியே.

அதற்குப்பிறகு ஒரு பாண்டியன் சோழனை வென்று சோழாந்தகன் எனும் பட்டம்
சூட்டிக்கொண்டான்; அச்சோழ மன்னன் உத்தம சீலியாக இருக்கலாம்.

இதற்கெல்லாம் பிற்காலத்தில்தான் ஆதித்த கரிகாலர்

தேவ்

Suba.T.

unread,
Jul 6, 2015, 1:49:52 PM7/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
​ஆம்.  இதற்கு முன்னர் பராந்தக சோழனின் தந்தையாகிய ஆதித்த சோழனின் காலத்திலேயே கூட  சோழருக்கும் பாண்டியருக்கும் பெரும் போர் நடைபெற்றது. கும்பகோணத்திற்கு வடக்கே உள்ள திரும்புறம்பியத்தில் இந்தப் போர் நடைபெற்றதில் இரு சாரார் பக்கத்திலும் ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். இப்பகுதியே பிணங்கள் நிறைந்த ரத்தக்காடாக மாறியிருந்தது. இப்போரில் சோழ மன்னனுக்கு உதவியாக பல்லவன், கங்கன் ஆகியயோர் இணைய மூவேந்தரும் இணைந்து  பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனை தோல்வியுற்று சோழனாட்டை விட்டு ஓடும்படி செய்தனர். பெறும் பலம் பொருந்தியிருந்த பாண்டியரின் பலம் குறைந்தது. சோழனாட்டில் பாண்டியர் ஆட்சி மறைந்ததற்கு இந்த திருப்புறம்பயப் போர் மிக முக்கியப் போராக வரலாற்றில் கருதப்படுவது.

​குறிப்பு - தி.வை.சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு  பக்.16 ​

சுபா

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
N D Logasundaram

unread,
Jul 6, 2015, 3:21:19 PM7/6/15
to mintamil
பானுகுமார் அவர்களுக்கு 

> சம்பந்தரரின் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு, சேக்கிழார் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு.
> கிட்டதட்ட, 500 ஆண்டுகள், மிக நீண்ட இடைவெளி. எப்படி மூவருக்குள் நடந்ததை,
> பெரியப் புராணமாக எழுத முடிந்தது, எந்த வித பிற ஆதாரங்களோ இல்லாமல்??

ஆதாரம் இல்லாமல் இருக்க முடியாது அதாவது முழுதும் கற்பனையாக முடியாது 

கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் முன் இருந்து இக்காலம் என்னைப்போல் 75 வயது முடி ந்த முதியவர்கள் 
அப்போது மிக விரும்பிப் படித்த து கல்கியில் வராலாற்று நாவல்கள் ஆ யிரம் ஆண்டு ளுக்கு முன் 
நடந்ததை எழுதியது யாவும் கற்பனை அல்ல எனவும் ஓரளவிற்காவது சேக்கிழார் நமக்குக் குக் கா ட்டத
காட்டமுடியாத சான்றுகள் கல்கிக்கு நாம் கொ ண்டுள்ளதுபோல் கொள்ள வேண்டும் 

இதுவேதான் இலங்கோவடிகளுக்கும் பொருந்தும் வால்மீகிக்கும் வியாசருக்கும் பொருந்தும் கம்பன் எழுதிய
இராமகதைக்கும் சீவக சிந்தாமணி எழுதிய திருத்தக்க தேவருக்கும் பெருங்கதை எழுதிய கொங்கு வேளி ருக்கோ
(அவர் மூலத்திற்கோ )நளவெண்பாபடிய புகழே எந்திக்கும் பொ ருந்தும் என்பேன் 

பெயரு ம்  ஓரிரு சொல் மட்டும் கா ட்டப்பட்டு அதற்கு மேல் ஆய்வு கொள்ள வேண்டிய நிலையில்தான்
இருந்தார் என்பதில் எவருக்கும் ஐயமில்லை இத்தனை நாயனாருக்கும் ஆன வரலாறு  முழுமையானது
முற்றிலும் ஆதாரத்துடன் வைப்பது இயலாத செய்கை என்பதைத்தான் யாவரும் அறிவர்

சிறுவர்க்கான காக் கா வடை கதையில் காக்கை  நரியுடன் பேசியதா என்பதோ இன்றைய திரைப்பட நாயகன் 
ஓர் குத்து விட வாங்கியவன் சில நூறு அடியும் தென்னமராளவும் உயரப்பறப்பதை அறிந்துதான் பா ர்கின்றோ ம்
அவ்வாறு கற்பனை  மிகுத்தது  ஆ னால் உள்ளுறை கருத் து எது என நாம் அறிகின்றோம் 
எல்லமே கற்பனை என தள்ளி விடவும் முடியாது தள்ளினால் சீ சீ இந்தப்பழம் புளிக்கும் எனு ம் நரியகிவிடுவோம் 

ஒரு புராணத்தில் தேன் கடல் தயிர்க்கடல் இருந்த து என வந்தால் நாம்  எள்ளி நகை யா டிவிடுவது உண்மை 
முல்லைப்போல் பல் உடையவள் என்றால் வெணமை நிறம் தா ன காட்டப்பட்ட பொருள் அதன் கடினத்தன்மை அல்ல 
அதுபோல் தே ன்கடல் என்பதில் இனிப்புச் சுவைஆகாமல் நீரின் நிற ம் மட்டும் ஆகும் செங்கடல் REDSEA எனும்போது 
வாராத ஐயம் தேன்கடல் எனும் போது வருவதுதான் முடுக்கி விடப்பட்ட  நோக்கு நிலை ஆகாய விமானத்தில் se ன்றால்
சிவப்புநிறம் நன்றா கத் தெரியுமாம் சிலபோது அங்கு வளரும் நுண்ணுயிர்த் தாவரம் பெருக்கத்தினாலும் செந்நிறம் வருமாம்
நிற்க  
என் பே ரப்பிள்ளை உடன் உணவருந்தும் போது தயிர் பற்றிப் பேச்சு வந்து எதோ பேசினான்  அப்போது தொலைக்காட்சயில்
அண்டார்ட்டிகா கடலில் உருகி விழுந்து பின் சில  நேரம் ஆனவுடன் மிதந்து மிதந்து சென்ற வெண்மையான பனிப்பாறைகள்
காட்சியும் வந்தது அப்போது பார்த்தால் அங்கு கடலே தயிர போல்  காண்பதைக் கட்டப்பட்டதாளல்  தயிர்க்கடல் பிறந்தது 

நேரம் மிக தாழ்ந்ததால் தொடருவோம் 

நூ த லோ சு 
மயிலை 

Oru Arizonan

unread,
Jul 6, 2015, 5:03:10 PM7/6/15
to mintamil
2015-07-06 5:23 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

// பதனீர் என்றழைக்கப்படும் பதனீர் சிறுகள் எனவும் புளித்த பதநீர் கள் என்றும் கருதலாம்.​ பின்னதில் போதை கட்டாயம் உண்டு.  
இரண்டையும் அருந்தியவன் என்ற முறையில் இது எனது சொந்தக் கருத்து என்க//

சித்தரே,
நானும் பதநீர் அருந்தியிருக்கிறேன்.  பெண்கள் சிறுகள் அருந்தினார்  கூற்று உண்மை என்றால்,ஔவை பதநீரே அருந்தியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.  

அப்படியென்றால், ஔவை கள் அருந்திக் கவிபாடினர் என்பது...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும், சித்தரே!

Oru Arizonan

unread,
Jul 6, 2015, 5:08:55 PM7/6/15
to mintamil
On Monday, 6 July 2015 04:37:49 UTC-7, இரா.பா wrote:
//ஆய்வுப்படிப்பார்த்தால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு முதலே கற்சிற்பங்கள் வருகின்றன. //

ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வுப்படி, பிள்ளையார்பட்டி குடவரைக் கோவில் பொது நூற்றாண்டு இரண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது [பாண்டியர்கள் கட்டியது].  அப்படியென்றால், இரண்டாம் நூற்றாண்டில் ஆனைமுகன் வழிபாடு இருந்தது, அதுவும் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்திலேயே இருந்தது என்றும் சான்று [நீங்கள் கேட்கும் சான்று] கிடைக்கிறது, இரா. பா. அவர்களே!

எனவே, பாண்டிநாட்டில் அப்பொழுதே இந்து சமயம் இருந்தது என்று கொள்ளலாமே!

Suba.T.

unread,
Jul 6, 2015, 5:17:05 PM7/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-07-06 23:08 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
On Monday, 6 July 2015 04:37:49 UTC-7, இரா.பா wrote:
//ஆய்வுப்படிப்பார்த்தால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு முதலே கற்சிற்பங்கள் வருகின்றன. //

ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வுப்படி, பிள்ளையார்பட்டி குடவரைக் கோவில் பொது நூற்றாண்டு இரண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது [பாண்டியர்கள் கட்டியது].  அப்படியென்றால், இரண்டாம் நூற்றாண்டில் ஆனைமுகன் வழிபாடு இருந்தது, அதுவும் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்திலேயே இருந்தது என்றும் சான்று [நீங்கள் கேட்கும் சான்று] கிடைக்கிறது, இரா. பா. அவர்களே!

​விநாயகர் சிலையுடன் கூடிய பிள்ளையார்பட்டி ஆலயம் 2ம் நூற்றாண்டில் கட்டியது என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடும் நூல் விபரமும் பக்கச்சான்றும் கூடுதல் விபரங்களும் இருந்தால் கொடுத்து உதவுங்கள். எனது குறிப்புக்களுக்க் உஅது உதவும்.

சுபா

Oru Arizonan

unread,
Jul 6, 2015, 5:40:11 PM7/6/15
to mintamil
இரா.பா. அவர்களே,

உங்கள் இழையின் தலைப்பு:  சமய குரவர் அரசு ஆதரவோடு சைவத்தைத் திணித்தனரா ?

  1. கடைசி சொல் எனக்கு விஷமத்தனமாக எழுதியிருப்பதுபோலவே படுகிறது.
  2. "சமய குரவர் அரசு ஆதரவோடு சைவத்தைத் பரப்பினாரா?" என்றிருந்தால், ஆமாம் என்று ஒப்புக்கொண்டு இருப்பேன்/போம்/பார்கள்.
  3. வாதமே தேவைப் பட்டிருக்காது.
  4. தங்கள் நோக்கம் அது இல்லை.
  5. விவாதம் செய்து, இந்துசமயத்தை, அதுவும் சைவ சமயத்தை மோசமான வெளிச்சம்போட்டுக் கட்டவேண்டும் என்பதுதானே!
  6. நான் கேட்கிறேன்:  சந்திர குப்த மௌரியரின் அரசு ஆதரவுடன்தானே சமணம் இந்தியா முழுவது வளர்ந்தது/பரவியது? [நான் திணிக்கப்பட்டது என்று எழுதவில்லை, கவனியுங்கள்!].
  7. சந்திரகுப்த மௌரியரின் வழித்தோன்றலான அசோகர் அரசு ஆதரவுடன்தானே பௌத்தம் இந்தியா முழுவது வளர்ந்தது/பரவியது? [நான் திணிக்கப்பட்டது என்று எழுதவில்லை, கவனியுங்கள்!].
  8. உலகில் இருக்கும் அனைத்து சமயங்களும் அவ்வவ் சமய குரவர்களால் அரசு ஆதரவுடன்தான் பரப்பப்பட்டது.  இது உலகறிந்த உண்மை.  சில சமயங்கள் வந்முரையின்றிப் பரவின/பரப்பப்பட்டன.  சில, வன்முறையால் வளர்ந்தன [திணிக்கப்பட்டன].
  9. இப்படி இருக்கையில், இதற்கான வரலாறு இருக்கையில்,  தாங்கள் சைவ சமயத்தைமட்டும் தங்கள் நேர் பார்வைக்கு எடுத்துக் கொண்டதோடு மட்டுமின்றி, சான்றுகளைப் புறம் தள்ளுவதும், ஏதோ பழைய கணக்கைத் தீர்க்கும் வகையில் எழுதுவது எனக்கு வியப்பைத் தருகிறது.
  10. யாரோ ஒருவர் சைவத்திற்கும், வைணவத்திற்கும் சிண்டு முடிந்துவிட்டு, அச் சண்டை ஓயும் தருவாயில் சைவத்திற்கும், சமணத்திற்கும் விவாதம் வந்து நாம் அடித்துக்கொள்ள[ல்ல]வேண்டும், அந்த நெருப்பில் தான் குளிர்காயவேண்டும், அங்கு பெருகும் உதிரத்தைப் பருகவேண்டும் என்ற உட்கருத்துடன் விரித்தவலையில் தாங்களுமா விழவேண்டும்?
  11. ஒன்றை உயர்வாகவும், ஒன்றைத் தாழ்வாகவும் --  ஒன்றை முதலேன்றும், ஒன்றைப் பின் என்றும் காட்ட முற்படும்போதுதான் உராய்வு ஏற்பட்டு, வெப்பம் பெருகுகிறது.
  12. அதை விட்டுத் தள்ளுவோம்.
  13. நாம் நமது சமயத்தைப் பற்றிய நற்செய்திகளையும், கொள்கை விளக்கங்களையும் பகிர்ந்து கொள்வோமே!
  14. உயர்திரு சுபா அவர்கள் சமண ஆலயங்களைப்பற்றியும், இதரபல விஷயங்களையும் வெளியிடுகிறார்.  அனைவரும் படித்துப் பயன்பெருகிறோம்.
  15. நீங்களும் அப்படிச் செய்தால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமே!
இதை நான் வாதிற்காக எழுதவில்லை.  பயனற்ற வாதங்களால் -- வரலாறு என்று எழுதி வம்பில் விழுவானேன்!  இதை ஒரு நண்பனாக எழுதுகிறேன்.  

பற்றி எழுதுங்கள்.  நான் கற்கிறேன். எனது தாரகை இணையத்திலும் வெளியிடுகிறேன்.

அன்புடன்,

Oru Arizonan

unread,
Jul 6, 2015, 5:43:53 PM7/6/15
to mintamil
2015-07-06 14:17 GMT-07:00 Suba.T. <ksuba...@gmail.com>:

//​விநாயகர் சிலையுடன் கூடிய பிள்ளையார்பட்டி ஆலயம் 2ம் நூற்றாண்டில் கட்டியது என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடும் நூல் விபரமும் பக்கச்சான்றும் கூடுதல் விபரங்களும் இருந்தால் கொடுத்து உதவுங்கள். எனது குறிப்புக்களுக்க் உஅது உதவும்.//

தாங்கள் முன்பே ஒருதடவை கேட்டிருக்கிறீர்கள்,  சுபா அவர்களே!  இந்த விவரம் என் கணினுக்குள்  எங்கோ புதைந்து கிடைக்கிறது.  கிடைத்தவுடன் நிச்சயம் பகிர்ந்துகொள்கிறேன்.  தாமதத்திற்கு மன்னிக்கவும்.

செல்வன்

unread,
Jul 6, 2015, 5:45:24 PM7/6/15
to mintamil

2015-07-06 4:17 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
சம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு....
பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் வாழ்ந்த காலம் பன்னிரண்டாம்  நூற்றாண்டு

பாண்டிய மன்னர் சமணர் என்பதும், 
அவரது மனைவியும் அமைச்சருமே அவர் சைவ மதத்திற்கு மாறக் காரணம், 
அதற்கு சம்பந்தர் உதவி செய்தார்  
மன்னர் மதம்  மாறிய பிறகு சமணருக்கு செல்வாக்கு குறைந்தது 
என்பது மட்டுமே மாறமுடியாத வரலாற்றுத் தகவலாக இருக்க வாய்ப்புள்ளது.  

இக்கதையை  பிற்காலத்தில் எழுதிய சேக்கிழாரின் கற்பனைத்திறம் எவ்வளவு இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டாமா?
அவர் உரையாடலாகக் கூறியவற்றை எல்லாம் அப்படியே எடுத்துக் கொள்ள முடியுமா?

நாளை செல்வன் எழுதிய கதையைப் படித்த ஒருவர் அதை மேற்கோள் கொடுத்தால் நம்பும் நிலையும் வரும் போலிருக்கிறது.

ஒரு இலக்கியத்தில் எது வரை வரலாற்றுத் தகவல் பகுதியாக இருக்கக் கூடும், அதில் எதுவரை கற்பனை  என்பதை பிரித்தறிய முடியாதவர்களா நாம்?

நம்மால் பிரித்தறிய முடியாது.

அதுக்கு டெக்ஸுவல் க்ரிடிசிஸம் எனும் துறை தேவைப்படுகிறது.

எனக்கு தெரிந்து தமிழில் அத்துறை வளரவே இல்லை.

டெக்ஸுவல் க்ரிடிசிஸம் பற்றி அறிந்து கொள்ள இரண்டு நூல்களை சிபாரிசு செய்கிறேன்

இரண்டு நூல்களும் என்னிடம் உள்ளன

How Jesus Became God: The Exaltation of a Jewish Preacher from Galilee - Bart D Ehrman

Misquoting Jesus-

Bart D Ehrman

Geetha Sambasivam

unread,
Jul 6, 2015, 8:45:31 PM7/6/15
to மின்தமிழ்
//சிவனடியார் வரலாற்றுக்குப் புகழ்பெற்ற சைவ நூல் ஒன்றிலிருந்து ஆதாரம் காட்டுவதும்
வேறு நாவல்களைச் சுட்டுவதும் ஒன்றாகுமா ?
கீதா அம்மையாரும் இப்பகடியில் கலந்து கொள்வது வியப்பைத் தருகிறது.
அவர் ஆழ்ந்த சைவ நூற் பயிற்சி உடையவர் என எண்ணியிருந்தேன் :((//

தவறாகப் புரிந்து கொண்டீர்கள் போலும்! நான் இந்தப் பகடியில் எல்லாம் கலந்து கொள்ளவில்லை. ஒதுங்கி இருந்து கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். ஆனால் மங்கையர்க்கரசி குறித்த முழுக்கதையும் சிவகாமியின் சபதம் நாவலில் வரும் என்பதையே இங்கே குறிப்பிட்டேன். மற்றபடி எனக்கு இந்த சமய விவாதங்களில் கலந்து கொள்ள விருப்பம் ஏதும் இல்லை. என்னளவில் என் கொள்கைகளில் உறுதியாக இருப்பதோடு பெரியபுராணத்தையும் நாயன்மார்களையும், அவர்கள் காலத்தையும், ஆழ்வார்கள் காலத்தையும் குறித்த உறுதியான நிலைப்பாடு எனக்கு உண்டு.  

உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக என் மன்னிப்பைக் கோருகிறேன்.

Seshadri Sridharan

unread,
Jul 6, 2015, 9:23:05 PM7/6/15
to mintamil
Suba.T. <ksuba...@gmail.com>

ஐராவதம் மகாதேவன் அவர்களின் ஆய்வுப்படி, பிள்ளையார்பட்டி குடவரைக் கோவில் பொது நூற்றாண்டு இரண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது [பாண்டியர்கள் கட்டியது].  அப்படியென்றால், இரண்டாம் நூற்றாண்டில் ஆனைமுகன் வழிபாடு இருந்தது, அதுவும் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்திலேயே இருந்தது என்றும் சான்று [நீங்கள் கேட்கும் சான்று] கிடைக்கிறது, இரா. பா. அவர்களே!

//​விநாயகர் சிலையுடன் கூடிய பிள்ளையார்பட்டி ஆலயம் 2ம் நூற்றாண்டில் கட்டியது என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடும் நூல் விபரமும் பக்கச்சான்றும் கூடுதல் விபரங்களும் இருந்தால் கொடுத்து உதவுங்கள். எனது குறிப்புக்களுக்க் உஅது உதவும்.//

பிள்ளையார் பட்டி கல்வெட்டு காலக்கணக்கை வைத்து அந்த பிள்ளையாயரின் காலத்தை முடிவு கட்டுவது மிகத் தவறு. அக்கல்வெட்டு தமிழியும் வட்டெழுத்தும் கலந்த எழுத்து. பிள்ளையார் சிலை கல்வெட்டிற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் பின்னரே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது என் முடிவு. ஐராவதம் மகாதேவனின் கல்வெட்டு காலக்கணிப்பு தவறானவை. அவை எழுத்தமைப்பை வைத்து காலம் தீர்மானிக்கப்பட்டவை.

நம்பன்  

நம்பன்  

Oru Arizonan

unread,
Jul 6, 2015, 11:38:37 PM7/6/15
to mintamil

2015-07-06 18:23 GMT-07:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:

//அக்கல்வெட்டு தமிழியும் வட்டெழுத்தும் கலந்த எழுத்து. பிள்ளையார் சிலை கல்வெட்டிற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் பின்னரே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது என் முடிவு. ஐராவதம் மகாதேவனின் கல்வெட்டு காலக்கணிப்பு தவறானவை. அவை எழுத்தமைப்பை வைத்து காலம் தீர்மானிக்கப்பட்டவை.//

தங்கள் முடிவுக்குச் சான்றுகள் உளதா, சேசாத்திரி ஸ்ரீதரன்  அவர்களே?

ஒரு  அரிசோனன் 

Banukumar Rajendran

unread,
Jul 7, 2015, 12:22:16 AM7/7/15
to mint...@googlegroups.com
2015-07-07 3:10 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இரா.பா. அவர்களே,

உங்கள் இழையின் தலைப்பு:  சமய குரவர் அரசு ஆதரவோடு சைவத்தைத் திணித்தனரா ?

  1. கடைசி சொல் எனக்கு விஷமத்தனமாக எழுதியிருப்பதுபோலவே படுகிறது.

அன்பின் ஐயா,

இதை போன்று இழைகளின் தலைப்புகளை யான் என்றுமே எழுதியதில்லை! மிந்தமிழில் தேடிப் பார்க்கவும்!

யார் துவக்கிய இழை என்றும் அறியேன். இழை என்னுடையது இல்லை என்பதை மட்டும் உறுதி செய்கிறேன்.

அதனால் தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு யான் பதில் சொல்லவேண்டும் என்று கட்டாயமில்லை!

(ஒரு வேண்டுலகோள் ஐயா, தாங்கள் தொடர்ந்து இதுபோல யாரோ எழுதந்தற்கு, வேறு யாரிடமோ கேள்வி எழுப்புகிறீர்கள். ஒவ்வொரு இழையையும் உணர்ச்சி வசப்பட்டு, அணுகாதீர்கள் என்று கேட்டு கொள்கிறேன். சில முறை நடக்கலாம். பலமுறை நடவாமல், நிதானமாக படித்துவிட்டு பதில் போடுங்கள்)

இரா.பா

--

Dev Raj

unread,
Jul 7, 2015, 1:13:36 AM7/7/15
to mint...@googlegroups.com
2015-07-07 3:10 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இரா.பா. அவர்களே,
உங்கள் இழையின் தலைப்பு:  சமய குரவர் அரசு ஆதரவோடு சைவத்தைத் திணித்தனரா ?
 
ஸூத்ரதாரி அடியேனே. இரா பா இல்லை. 
ஒரு இடத்திலும் நிலைத்துத் தங்காத தேவார முதலிகளுக்கும், 
நில உடைமை கைமாறலுக்கும் முடிச்சுப்போட்டு ஒரு கட்டுரை !
மேலிடத்துச் செல்வாக்கைக் கொண்டு சமய குரவர் சைவத்தைப் பரப்பினர் 
எனும் அவதூறு.  ஆகவே ஒரு தனித்த இழையின் தேவை.

உண்மையில் வழக்கொழிந்து போயிருந்த தமிழிசை மீண்டு, உயிர் பெற்றது
பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்தில்தான். இக்கருத்தை நண்பர்கள்
யாராவது சொல்வார்களா என இதுகாறும் காத்திருந்தேன். 

தமிழ் என்பதே இசையோடு சேர்ந்ததுதான். பத்துப்பாட்டு, முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு எனும் சங்கநூல் தலைப்புகள் காண்க. பாணர், விறலியர் இசையோடு
பொருத்தி இன்தமிழ் பாடினர். பின்னர் களப்பிரர் ஆட்சியில் அது மறைந்தது.

அகத்துறைக்கும், இசைத்தமிழுக்கும் மீண்டும் வடிவம் கொடுத்தது
பக்தி இலக்கியம். இறையனார் களவியலும் மீட்சிக்குத் துணை செய்தது.
......அன்பின் ஐந்திணை எனும் அறுபது சூத்திரம்
கடலமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்
பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி  மற்றவர்க்குத்
தெளிதாக் கொடுத்த   தென்தமிழ்க் கடவுள்....
எனும் கல்லாட வரிகள் சான்றளிக்கின்றன.

காழிப்பிள்ளையாருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும்,
மதங்க சூளாமணியாரும் இசை மீட்சியில் இணைந்து கொண்டனர்.
பெரியபுராண வரிகளை இணைக்க விருப்பம். ஆனால் அது 20ம்
நூற்றாண்டு நாவல்களுக்கு  இணையாகிவிடும். ஆகவே
தவிர்த்து விட்டேன்.

தேவ்

Bala Sundara Vinayagam

unread,
Jul 7, 2015, 3:02:01 AM7/7/15
to mint...@googlegroups.com
//அரசர்களிடம் யாசித்ததாக
வரலாறு அமையவில்லை. மக்களின் பசிப்பிணி நீக்க 
சம்பந்தர் பெருமான் இறைவனிடம் செல்வம் வேண்டுவது -

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.//

வரலாறு என்பது சம்பந்தர் பாடியதே.  இறைவனிடம் கேட்டார்; இறைவன் கொடுத்தார் என்பது சைவவழிபாடுடையோருக்கு ஏற்புடைத்து. 

வரலாறறறிஞர் ஏற்க முடியாது. சைவத்திருமறைகளோ, வைணவத்திருமறைகளோ - அவைகளிலிருந்து ஓரளவுக்கு சமூக வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளலாமே தவிர, நரியைப் பரியாக்கியதை, குழந்தையை வெட்டிக்கறி சமைத்ததை, , பாடல் பாடியதும் தூக்குக்கயிறு பற்றி எரிந்தது; அரசன் பத்திரிகிரி நடுங்கினான் அவர் காலில் வீழ்ந்து சீடனானான் - பாடல்களில் சொல்லி விட்டார்கள்; இவையே நடந்த வரலாறு என்று வாதிட முடியவே முடியாது. பெரியபுராணம், கந்தபுராணம், என்று எல்லாப் புராணங்களிலும் ஏகப்பட்ட கட்டுக்கதைகள். (கந்தபுராணத்தில் இல்லா புரட்டா ? கேட்டவர் பாரதியார்). கிருத்த்வத்தில் உயிருத்தெழுந்தார். புணர்ச்சியில்லாக் கருத்தரித்தல், ஒன்றை பலவாக்குதல்; முஹமதுவுக்கு மட்டும் கேட்கும்படியாக இறைவன் மறைகளை ஒவ்வொன்றாக அருளினார்

அதே சமயம் இப்படிப்பட்ட கற்பனைகள் அவசியாமின்றன மதத்தை பாமர மக்களிடம் கொண்டு போக‌.  அவை வெறும் நம்பிக்கைகள் மட்டுமே.  நமபிக்கைகளின் மேல் கட்டப்பட்டவையே எல்லா மதங்களும்.  Such religion is necessary,

இப்படியிருக்க மீண்டும் மீண்டும் அப்பர் சொன்னார், சம்பந‌தர் சொன்னர், பெரிய புராணம் சொல்லியது - அவையே வரலாற்று உண்மைகளாகும் என்பது இன்றைய நம் கல்விக்கு ஒத்து வாரா. அதே சமயம், நம் கல்வியை கொஞ்ச நேரம் புறந்தள்ளிவிட்டு பக்தி குல்லாவை மாட்டிக்கொண்டால், எதையும் நம்பலாம்.  I said already: Believing where we cannot prove. 

திரு தேவராஜர் எழுதுபவை பக்தர்களால் ஏற்கப்படலாம். மற்றபடி, சமபந்தர் இறைவனிடம் யாசிக்க இறைவன் எப்போதெல்லாம் அவருக்கு வேண்டுமோ அப்போதெல்லாம் அள்ளிக்கொடுத்துக்கொண்டேயிருந்தாராம். இதை நம்பவா?  அப்படியென்றால், சம்பந்தர் தமிழ்நாட்டில் பசி பஞ்சம் பட்டினியில்லாமல் செய்திருப்பாரே? என்று பகுத்தறிவாளர் கேட்டால், ஙே...! என்றுதான் முகத்தை வைக்கவேண்டும் அல்லது அவர்களை அடித்துவிரட்டலாம். அதுதான் தற்போது நடக்கும் சமூக விளையாட்டு.

நம் மனசாட்சியை அமைதியாக இருக்கச் சொல்ல முடியுமா?

தமிழ் சைவ திருமறைகளைக் கற்றோம்; ஆழ்வார்ப்பாசுரங்களைக் கற்றோம். நாம் துதிப்போமென்று மட்டுமே இருக்கவேண்டும். ரொம்ப ஓவராப் போனால், நம் மனசாட்சி இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாள் வருத்தத்தான் செய்யும்.  Above all, to thy own self, be true என்பார் செகப்பிரியர்.

Lets allow some small gap for rational thinking in our mind.  That will indeed strengthen your bakthi. It won't dislodge it. Don't fear. I have already maintained that it is possible to have an open, not blind, belief.  Lets read all that is written by Saints, as Bakthi, not as proof of incontrovertible historical truths, Mr Devaraj.

The question whether Saiva Saints used the influence of their proximity with Kings to propage their religion - should be answered with the evidences from historic sources.  You cannot ask the party to play the role of the Judge.

On Friday, 3 July 2015 20:00:39 UTC+5:30, Dev Raj wrote:

சமய குரவரான அப்பர் - சம்பந்தரின் பணி சமணச் செல்வாக்கால்
புகழ் மங்கி மறைந்து கிடந்த சிவத்தலங்களை மக்கள் பார்வைக்கு 
வெளிக்கொணர்வதாகவே அமைந்தது. 

சைவ வளர்ச்சிக்கு அரச குடும்பத்தினர் செல்வாக்கை அவர்கள் பயன்
கொண்டனர் என்று முடிவுகட்ட இயலாது. சம்பந்தர் பெருமான் தம்மை
வரவேற்று ஆதரவு நல்கிய பாண்டிய நாட்டில் நிலையாகத் தங்கினாரா ?
இல்லை. ஆலவாய் தவிர அவர் பாடிய தலங்கள் திருப்பூவணம்,
திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர்,  திருக்கானப்பேர், 
திருச்சுழியல், திருக்குற்றாலம், இராமேசுவரம், திருக்குறும்பலா, 
திருநெல்வேலி .இவை யாவும் ஏற்கெனவே இருந்த சிவத்தலங்களே.                                                                                                                                                                                                                                                                                                                                
தல யாத்திரை முடிந்ததும் மீண்டு சோழநாடு 
திரும்புகிறார். சைவத்தைப் பரப்பும் பொருட்டு அரச ஆதரவோடு 
பாண்டிய நாட்டில் புதிய சிவாலயங்களை அமைத்தாரா என்றால்
அதற்கும் விடை இல்லை. குரவர் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே
இருந்த ஆலயங்கள், அவ்வூரின் சூழல் இவற்றை விவரிப்பதாகவே
அமைகின்றன.பெரும்பான்மைப் பாடல்கள் சோழர் செல்வாக்கு
இழந்திருந்த சோழ மண்டலப் பகுதியில் உள்ளவை.

பிறர்க்குதவப் பணத்தேவை நேர்ந்த தருணங்களில் 
சமய குரவர்  ஈசனிடம் கோரி அதைப் பெற்றதாகவே 
அகச்சான்று சொல்கிறது.  அரசர்களிடம் யாசித்ததாக
வரலாறு அமையவில்லை. மக்களின் பசிப்பிணி நீக்க 
சம்பந்தர் பெருமான் இறைவனிடம் செல்வம் வேண்டுவது -

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்’
என்று சுந்தர மூர்த்தி சுவாமிகளால் போற்றப்பட்ட
காழிப்பிள்ளையாரின் காலம் 6ம் நூற்றாண்டு. 
அப்பரடிகள், சிறுத்தொண்டர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், 
அப்பூதி அடிகளார் போன்றோர் சம்பந்தரின் சமகாலத்தவர். 
இக்காலகட்டத்தில் சோழர் செல்வாக்கிழந்திருந்தனர்.
சம்பந்தரின் வாழ்வு சோழ நாட்டில் தொடங்கி
அங்கேயே முடிவடைகிறது. அப்பரடிகள்
முக்தி பெற்றதும் சோழநாட்டில்தான்.

அப்பரடிகள் தாமே உழவாரப்படையுடன் ஆலயந்தோறும்
சென்று தம்மை வெளிக்காட்டிக்கொள்ளமல் பணி செய்ததாக 
வரலாறு.

காஞ்சியில் பல்லவர் கற்றளிகளை அமைத்தாலும்
தமிழகம் முழுவதும் பரவலாகக் கற்றளிகளை
உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர்
சோழர்களே. பிற்காலச் சோழர் எழுச்சி பெற்றபோது
சமய குரவர் காலம் முடிந்து விட்டிருப்பதையும்
நாம் பார்க்கிறோம்.

3ம் நூற்றாண்டு முதல் சுமார் ஏழு நூற்றாண்டு
காலம் சோணாடு பிறர் ஆட்சியில் இருந்தது.
பிற்காலச் சோழர் எழுச்சி கி பி 9ம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் விஜயாலய சோழரிடமிருந்து தொடங்குகிறது.  

The 9th century marked a fresh movement in the 
South Indian style, as revealed in several small, 
simple but very elegant, temples set up during 
the ascendancy of the Chola and other contemporary 
dynasties. Most important of a large number of 
unpretentious but beautiful shrines that dot 
the Tamilnadu countryside are the Vijayalaya 
Colisvara temple at Narttamalai (mid-9th century) 
with its circular sanctum, spherical cupola, 
and massive, plain walls; the twin shrines called 
Agastyisvara and Colisvara,at Kilaiyur (late 9th century); 
and the splendid group of two temples (originally three) 
known as the Muvarkovil,at Kodumbalur (c. 875).

காஞ்சிப் பெரியவர் காவிரியின் பெருமையைக்
கூறுமிடத்தில் [தெய்வத்தின் குரல், 7ம் பகுதி] -
 
"அப்பர், ஸம்பந்தர், ஸுந்தரர், ஆகிய மூவர் தேவாரம் பாடிய 
க்ஷேத்ரங்களைப் 'பாடல் பெற்ற ஸ்தலங்கள்' என்பார்கள். 
அப்படி மொத்தம் 275.  அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி,  
சோழ நாட்டின் காவேரிக்கு வடக்கு - தெற்குக் கரைகளில் 
இருக்கிறவைதான் !"

அப்பர் - சம்பந்தர் காலத்தில் வலிமை பெற்றுக் 
கோலோச்சியவர் பல்லவரும், பாண்டியரும். 
பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்கள்14 மட்டுமே. 
தொண்டை மண்டலத்தில் சற்று அதிகம். 
சோழவள நாட்டில்தான் மிகுதியான பாடல்பெற்ற 
தலங்கள்; ஆனால் அது சோழர் செல்வாக்கிழந்திருந்த காலம்.
சைவ சமயம் சார்ந்த வளவர்கோன் பாவை சமணரான
பாண்டிய மன்னருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்.
சமய குரவர் காலத்துக்குப் பின்னரே பெருவாரியாகக்
கற்றளிகளும், பேராலயங்களும் உருப்பெற்றன.

சோழநாட் டொருநூற்றுத் தொண்ணூற் றொன்று
தொல்லிங்கை இரண்டுதமிழ்ப் பாண்டி நாட்டி
லேழிரண்டு மலைநாட்டி லொன்று கொங்கி
லேழுநடு நாட்டிலிரு பத்தி ரண்டே
ஏழைந்தோ டிருபதாம் தொண்டை நாட்டி
லெணொன்றே துளுவத்தில் வடநாட் டைந்தே
ஏழுபத்தைந் துடனிரண்டு நூறு கொண்ட
தீசனுறை தேவாரத் திருத்த லங்கள்.

தேவ்

Banukumar Rajendran

unread,
Jul 7, 2015, 3:34:32 AM7/7/15
to mint...@googlegroups.com
2015-07-07 12:32 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
//அரசர்களிடம் யாசித்ததாக
வரலாறு அமையவில்லை. மக்களின் பசிப்பிணி நீக்க 
சம்பந்தர் பெருமான் இறைவனிடம் செல்வம் வேண்டுவது -

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.//

வரலாறு என்பது சம்பந்தர் பாடியதே.  இறைவனிடம் கேட்டார்; இறைவன் கொடுத்தார் என்பது சைவவழிபாடுடையோருக்கு ஏற்புடைத்து. 

வரலாறறறிஞர் ஏற்க முடியாது. சைவத்திருமறைகளோ, வைணவத்திருமறைகளோ - அவைகளிலிருந்து ஓரளவுக்கு சமூக வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளலாமே தவிர, நரியைப் பரியாக்கியதை, குழந்தையை வெட்டிக்கறி சமைத்ததை, , பாடல் பாடியதும் தூக்குக்கயிறு பற்றி எரிந்தது; அரசன் பத்திரிகிரி நடுங்கினான் அவர் காலில் வீழ்ந்து சீடனானான் - பாடல்களில் சொல்லி விட்டார்கள்; இவையே நடந்த வரலாறு என்று வாதிட முடியவே முடியாது. பெரியபுராணம், கந்தபுராணம், என்று எல்லாப் புராணங்களிலும் ஏகப்பட்ட கட்டுக்கதைகள். (கந்தபுராணத்தில் இல்லா புரட்டா ? கேட்டவர் பாரதியார்). கிருத்த்வத்தில் உயிருத்தெழுந்தார். புணர்ச்சியில்லாக் கருத்தரித்தல், ஒன்றை பலவாக்குதல்; முஹமதுவுக்கு மட்டும் கேட்கும்படியாக இறைவன் மறைகளை ஒவ்வொன்றாக அருளினார்

அதே சமயம் இப்படிப்பட்ட கற்பனைகள் அவசியாமின்றன மதத்தை பாமர மக்களிடம் கொண்டு போக‌.  அவை வெறும் நம்பிக்கைகள் மட்டுமே.  நமபிக்கைகளின் மேல் கட்டப்பட்டவையே எல்லா மதங்களும்.  Such religion is necessary,

இப்படியிருக்க மீண்டும் மீண்டும் அப்பர் சொன்னார், சம்பந‌தர் சொன்னர், பெரிய புராணம் சொல்லியது - அவையே வரலாற்று உண்மைகளாகும் என்பது இன்றைய நம் கல்விக்கு ஒத்து வாரா. அதே சமயம், நம் கல்வியை கொஞ்ச நேரம் புறந்தள்ளிவிட்டு பக்தி குல்லாவை மாட்டிக்கொண்டால், எதையும் நம்பலாம்.  I said already: Believing where we cannot prove. 

திரு தேவராஜர் எழுதுபவை பக்தர்களால் ஏற்கப்படலாம். மற்றபடி, சமபந்தர் இறைவனிடம் யாசிக்க இறைவன் எப்போதெல்லாம் அவருக்கு வேண்டுமோ அப்போதெல்லாம் அள்ளிக்கொடுத்துக்கொண்டேயிருந்தாராம். இதை நம்பவா?  அப்படியென்றால், சம்பந்தர் தமிழ்நாட்டில் பசி பஞ்சம் பட்டினியில்லாமல் செய்திருப்பாரே? என்று பகுத்தறிவாளர் கேட்டால், ஙே...! என்றுதான் முகத்தை வைக்கவேண்டும்

ஐயா, இராஜேந்திர குமாரின் தாக்கமா? ;-)))))))))))

பாலசுந்தர விநாயகம், இதுவரை மடலாடல் குழுக்களில் கேள்விப்படாத பெயர்! :-)))

இரா.பா

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 7, 2015, 3:41:15 AM7/7/15
to mintamil, Dev Raj
வணக்கம்.

2015-07-06 8:33 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Monday, July 6, 2015 at 7:09:16 AM UTC-7, Dev Raj wrote:

சிறுத்தொண்டரும், திருநீலகண்டரும், கண்ணப்ப நாயனாரும் பாடல்கள்
இயற்றவில்லை. ஆனாலும் அவர்கள் பற்றிய குறிப்பைப் பிற்காலத்தில்
தோன்றிய அடியார்கள் தருகின்றனர் - மாணிக்க வாசகர் ,  - திருத்தொண்டத் தொகை,   - பட்டினத்தார் 

கால இடைவெளியை அளந்து பார்க்க முடியுமா ?

அடியார்தம் வரலாறு அகச்சான்றுகளை ஒட்டியே பெரும்பாலும்
அமைவன; ஏற்பதோ ஏற்காததோ வேறு விஷயம்.  

திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமானது திருவிளையாடல்களை  பரஞ்சோதி முனிவர் கூறினால் என்ன அல்லது ஏ. பி. நாகராஜன் கூறினால்தான் என்ன?
முனிவரது அருள் வடிவானது.
பின்னது பொருள் பொருட்டானது.
இரண்டும் வேறுவேறானவை.

அன்பன்
கி.காளைராசன்

Banukumar Rajendran

unread,
Jul 7, 2015, 3:45:37 AM7/7/15
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா,

மன்னிக்கவும். தங்கள் கருத்துட்ன் மாறுபடுகிறேன்.

உவமைக்காக சொல்லப்படுவதற்கும், உயர்வு நவிர்ச்சியாக சொல்லப்படுவதற்கும், இலக்கியக் கற்பனையாகப் புனைவதற்கும் வித்தியாசம் அறியாமல் இல்லை ஐயா!

* கல்லைக் கட்டி கடலில் போட்டாலும், அப்பர் இறையருளால் மீண்டு வந்தார்! -

மேலே சொன்ன வாக்கியம், உண்மையில் நடந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் உண்டா? இல்லையா?

இதை தெளிவுப்படுத்திக்கொள்ளாமல், மேலே விவாதித்துக் கொண்டு போவதில் பயனில்லை.

இரா.பானுகுமார்

Banukumar Rajendran

unread,
Jul 7, 2015, 3:48:26 AM7/7/15
to mint...@googlegroups.com
2015-07-07 10:43 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
2015-07-07 3:10 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இரா.பா. அவர்களே,
உங்கள் இழையின் தலைப்பு:  சமய குரவர் அரசு ஆதரவோடு சைவத்தைத் திணித்தனரா ?
 
ஸூத்ரதாரி அடியேனே. இரா பா இல்லை. 

நன்றி தேவ் சார்!

(அரிசோனா ஐயாவிற்கு ஏன் என்மேல் கோபம் என்றுத் தெரியவில்லை. :-) எங்காவது இதுபோன்ற சொற்றொடர்களைக் கண்டால் நாந்தான் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறார். :-)))

இரா.பா

ஒரு இடத்திலும் நிலைத்துத் தங்காத தேவார முதலிகளுக்கும், 
நில உடைமை கைமாறலுக்கும் முடிச்சுப்போட்டு ஒரு கட்டுரை !
மேலிடத்துச் செல்வாக்கைக் கொண்டு சமய குரவர் சைவத்தைப் பரப்பினர் 
எனும் அவதூறு.  ஆகவே ஒரு தனித்த இழையின் தேவை.

உண்மையில் வழக்கொழிந்து போயிருந்த தமிழிசை மீண்டு, உயிர் பெற்றது
பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்தில்தான். இக்கருத்தை நண்பர்கள்
யாராவது சொல்வார்களா என இதுகாறும் காத்திருந்தேன். 

தமிழ் என்பதே இசையோடு சேர்ந்ததுதான். பத்துப்பாட்டு, முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு எனும் சங்கநூல் தலைப்புகள் காண்க. பாணர், விறலியர் இசையோடு
பொருத்தி இன்தமிழ் பாடினர். பின்னர் களப்பிரர் ஆட்சியில் அது மறைந்தது.

அகத்துறைக்கும், இசைத்தமிழுக்கும் மீண்டும் வடிவம் கொடுத்தது
பக்தி இலக்கியம். இறையனார் களவியலும் மீட்சிக்குத் துணை செய்தது.
......அன்பின் ஐந்திணை எனும் அறுபது சூத்திரம்
கடலமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்
பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி  மற்றவர்க்குத்
தெளிதாக் கொடுத்த   தென்தமிழ்க் கடவுள்....
எனும் கல்லாட வரிகள் சான்றளிக்கின்றன.

காழிப்பிள்ளையாருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும்,
மதங்க சூளாமணியாரும் இசை மீட்சியில் இணைந்து கொண்டனர்.
பெரியபுராண வரிகளை இணைக்க விருப்பம். ஆனால் அது 20ம்
நூற்றாண்டு நாவல்களுக்கு  இணையாகிவிடும். ஆகவே
தவிர்த்து விட்டேன்.

தேவ்

Dev Raj

unread,
Jul 7, 2015, 5:28:52 AM7/7/15
to mint...@googlegroups.com
On Tuesday, 7 July 2015 00:45:37 UTC-7, இரா.பா wrote:
* கல்லைக் கட்டி கடலில் போட்டாலும், அப்பர் இறையருளால் மீண்டு வந்தார்! - 
மேலே சொன்ன வாக்கியம், உண்மையில் நடந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் உண்டா? இல்லையா?
இதை தெளிவுப்படுத்திக்கொள்ளாமல், மேலே விவாதித்துக் கொண்டு போவதில் பயனில்லை.

பாதிக்கப்பட்டவரே பாடியுள்ளார் -
கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே ! 

தேவ்

தேமொழி

unread,
Jul 7, 2015, 5:40:16 AM7/7/15
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com

Banukumar Rajendran

unread,
Jul 7, 2015, 5:41:04 AM7/7/15
to mint...@googlegroups.com
2015-07-07 14:58 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Tuesday, 7 July 2015 00:45:37 UTC-7, இரா.பா wrote:
* கல்லைக் கட்டி கடலில் போட்டாலும், அப்பர் இறையருளால் மீண்டு வந்தார்! - 
மேலே சொன்ன வாக்கியம், உண்மையில் நடந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் உண்டா? இல்லையா?
இதை தெளிவுப்படுத்திக்கொள்ளாமல், மேலே விவாதித்துக் கொண்டு போவதில் பயனில்லை.

பாதிக்கப்பட்டவரே பாடியுள்ளார் -

:-)

"உண்மையும் நம்பிக்கையும்" என்ற இழையைப் படிக்கவும்! ;-)

கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே ! 

சரி. மறுபடியும் செய்துக்காட்ட ரெடியா? :-)))))
-----------------------------

மறுபடியும் சொல்லிக் கொள்கிறேன். இப்படியெல்லாம் எழுதுவது என் மனதிற்கு உடன்பாடில்லை. சமணத்தை வலிந்து இழுத்து எழுதும்போது, இப்படி எழுதுவது தவிர்க்கமுடியாது போகிறது. மன்னிக்கவும்.
----------------------------

N D Logasundaram

unread,
Jul 7, 2015, 6:29:17 AM7/7/15
to mintamil
அரசு அதரவுஉ டன் தான் பௌத்தம் உலகம் முத்தும் பரவியது தன குடும்பமே ஆப்பப்பட்டன 

இன்றும் பௌத்தமும் சைவமும்(இசுலாமும்கூட ) தா னே சனடையிடுகின்றது ஈழத்தில் 

ஒன்று மட்டும் சாக்கிய நாயனார் மறைமுகமாக கல்லெறிந்து வழிபட நேர்ந்த நிலை எதனைக் காட்டும் 

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 

நூ த லோ சு 
மயிலை 

Seshadri Sridharan

unread,
Jul 7, 2015, 9:20:25 AM7/7/15
to mintamil

கீழ்காணும்  தமிழி நடுகல் கல்வெட்டு எழுத்தடிப்படையில் கி.பி  2 ஆம் நூற்றாண்டினது என்கின்றனர். ஆனால் இதில் இடம்பெறும் பொன்கொங்கர் என்பதும் கோவென் கட்டி என்பதும் கங்கரை குறிக்கும் பெயர்கள்.  கி . பி. 5 ஆம் நூற்றாண்டு முன் கங்கர் இருந்ததற்கான வரலாறு அவர் ஆண்ட கருநாடகத்தில் இல்லை.என்கின்றனர். எனவே இக்கல்வெட்டு 5 ஆம் நூற்றடின் இறுதியில் பிராமியில் எழுதப்பட்டுள்ளது எனலாம். ஆனால் மகாதேவன் பிராமி எழுத்து 2 ஆம் நூற்றாண்டோடு பயன் ஒழிந்தது என்கிறார். இக்கல்வெட்டு அது தவறு என்பதற்கு ஒரு சான்று. பிராமி கல்வெட்டுகளின் காலக் கணிப்பும் தவறே.  பிள்ளையார்பட்டி வினாயகர் சிலை மீது எந்த கல்வெட்டு இல்லை அதன் பின்புறம் தாம் கல்வெட்டு உள்ளது. அதை வைத்து அப்பிள்ளையாரின் காலத்தை குறிப்பது தவறு.  

 https://groups.google.com/forum/#!topic/mintamil/wNSJPaLTjE0  புதுக்கோட்டை நடுகல் கல்வெட்டு 

" கோவென் கட்டிற் நெதிர, ணறு பொன்கொங்கர் விண்ணகோன், ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு, அங்கபடைத் தாணையன் கணங், குமரன் கல் " என்பதற்கு 
என்னுடைய விளக்கம். 

கோவன் என்பதே கோவென் என கொச்சை வழக்கில் எழுதப்பட்டுள்ளது. கட்டிற் என்பது கட்டிக்கு என பொருள்படும். எதிரன் என்பதே நெதிரன் என எழுதப்பட்டு உள்ளது. எதிரன் என்பதற்கு அடுத்ததாகப் பதவி ஏற்றவன், எதிர்காலத்தவன் என்று பொருள் கொள்கின்றனர் அறிஞர். இதற்கு திருவண்ணாமலை செங்கம் வட்டம் ஆண்டிப் பட்டியில் கிட்டிய ஈய நாணயத்தில் சேந்தன் அதினன் எதிரான் என்ற சொல்லாட்சியைச் சான்றாகக் காட்டுகின்றனர். அதன் பொருள்அதினனுக்கு அடுத்தாக அரச பதவி ஏற்ற சேந்தன் எனப் பொருள். ணறு என்பது நறு என்பதன் பிழையான குறிப்பு. பொன் என்பது அவன் சிற்றரசன் என்பதைக் குறிக்கும் பட்டம். கொங்கர் என்பது அரச மரபுப் பெயர். இதற்கு கொங்கிளவரைசர் என்ற நடுகல் சொல்லாட்சியை சான்றாகச் சுட்டலாம். விண்ணகோன் (விஷ்ணு) என்பது அவனது இயற்பெயரின் தமிழாக்கம் ஆகலாம்.  ஆ எறித்து - ஆநிரை கவர்ந்து எனப் பொருள். ஏவ - கட்டளையிட எனப் பொருள். இந்த ஏவ என்ற சொல் சகர மெய்யை முன்மிகையாகப் பெற்று சேவ > சேவகன் என்ற பின்னாளைய சொல் தோன்றக் காரணமானதாகக் கொள்ளலாம். இதன்படி ஏவ என்பதை படைத்தலைவன் எனப்பொருள் கொள்ளவும் இடமுண்டு. இந்த சேவகன் எனும் ஏவன் அதவ்வன் + ஆர் [= அத்+அவ்வன்] எனக் கொள்ளலாம். அவனுடைய அங்கப்படை தாணையனான கணன் குமரன் உடைய கல் - நினைவு கல். அங்கப்படை என்பதன் தெளிவான பொருள் விளங்கவில்லை. அதை மெய்க்காவல் படை எனக் கொள்வது தவறு. ஏனெனில் கல்வெட்டு முழுவதும் தமிழ்ச் சொற்களே உள்ள நிலையில் உடலைக்  குறிக்கின்ற அங்கம் என்ற சமற்கிருத சொல் வராது என நம்பலாம்..

இதாவது, கோவன் கட்டிக்கு அடுத்தாக அரசுப் பதவி ஏற்ற நறு பொன்கொங்கர் விண்ணகோன் என்பவன் ஆநிரையைக் கவருதற்கு அவருடைய சேவகனான அதவ்வன் என்பவனுக்கு கட்டளையிட அங்கப்படையின் முன்னணி (தாணையன்)  மறவனான கணன் குமரன் வீரசாவடைந்ததால் அவன் நினைவில் எழுப்பப்பட்ட நினைவுக் கல், நடுகல் எனப் பொருள். அல்லது அதவ்வன் ஆநிரையை மீட்டு வர ஏவியதால் அவனுடைய அங்கப்படையின் முன்னணிப் படையாள் கணன்குமரன் என்பவன் ஆநிரையை மீட்கும் போது வீரசாவடைந்தான் எனப்பொருள். 

இக்கல்வெட்டைப் பொற்பனைக் கோட்டையில் கண்டெடுத்ததாலேயே அக்கோட்டைக்குத் தலைவன் கணன் குமரன் என்றோ அல்லது அங்கு போர் நடந்தது என்றோ கொள்வது தவறு. கொங்கர் என்ற அரச மரபினர் கங்கராகவோ அல்லது அவரது கிளை மரபினராகவோ கொள்ளப்படுகின்றனர். கட்டி என்ற பெயரையும் கங்கரே கொண்டிருந்தனர் என்பது நோக்கத் தக்கது. இக்கல்வெட்டுச் செய்தி சுருக்கமாக இருப்பதால் அதவ்வன் விண்ணகோனின் சேவகனா அல்லது அவனது  படைஎடுப்பை எதிர்த்த பெயர் குறிக்கப்படாத இன்னொரு அரசனின் சேவகனா என்று முடிவு செய்யஇயலவில்லை. கணன்குமரன்  தரும்புரிக்கு சுற்றிடத்தில் நிகழ்ந்த ஆநிரைப் போரில் இறந்து அவன் புதுக்கோட்டை பகுதி வாழ்நன் என்பதால் அவனூரிலேயே அவன் நினைவில் இந்த நடுகல்லை நாட்டி இருக்கலாம். பின்பு சிதிலமடைந்து குப்பை மேடாகிப் போன கோட்டைப் பகுதியில் அக்கல்லை யாரோ துணி துவைக்கத் தூக்கிவந்து போட்டிருக்கலாம்

Dev Raj

unread,
Jul 7, 2015, 9:28:15 AM7/7/15
to mint...@googlegroups.com
On Tuesday, 7 July 2015 02:41:04 UTC-7, இரா.பா wrote:
"உண்மையும் நம்பிக்கையும்" என்ற இழையைப் படிக்கவும்! ;-)

குந்தகுந்தாசாரியருக்கு ஏலாசாரியர் எனும் பெயர் ஏன் ஏற்பட்டது ?
உண்மையா ? நம்பிக்கையா ?
மறுபடியும் செய்துகாட்ட முடியுமா ?

தேவ்  

செல்வன்

unread,
Jul 7, 2015, 9:58:36 AM7/7/15
to mintamil

2015-07-07 2:45 GMT-05:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
உவமைக்காக சொல்லப்படுவதற்கும், உயர்வு நவிர்ச்சியாக சொல்லப்படுவதற்கும், இலக்கியக் கற்பனையாகப் புனைவதற்கும் வித்தியாசம் அறியாமல் இல்லை ஐயா!

* கல்லைக் கட்டி கடலில் போட்டாலும், அப்பர் இறையருளால் மீண்டு வந்தார்! -

மேலே சொன்ன வாக்கியம், உண்மையில் நடந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் உண்டா? இல்லையா?

எல்லாம் வல்ல இறைவனால் இம்மாதிரி அற்புதங்களை நிகழ்த்த முடியாது எனும் தங்கள் நம்பிக்கை தான் எனக்கு வியப்பளிக்கிறது.

கடவுளுக்கு அந்த அளவு சக்தி இல்லையா என்ன? :-)

கடவுள் என ஒருவர் இருந்தால் அவர் கட்டாயம் மனிதர் முன் தோன்றூவார். அற்புதங்களை நிகழ்த்துவார்...அதனால் அற்புதங்கள் நிகழ்ந்ததே கிடையாது என்றால் கடவுளே இல்லை என நாம் கூறுகிறோம் எனப்பொருள்.

"கடவுள் இல்லை" என்றால் 

எதுவுமே இல்லாமல் இருந்தபோது டமால் என ஒரு வெடிவெடித்து பிரபஞ்சம் உருவானது என்ற அற்புதத்தை நம்பியாகவேண்டும்.

அதன்பின் வெறும் கல்லும், மண்ணும் மட்டுமே பூமியில் இருக்கையில் டமால் என உயிர் பூமியில் தோன்றியது என இன்னொரு அற்புதத்தையும் நம்பவேண்டும்

இந்த இரண்டு அற்புதங்களை கல் கடலில் மிதந்தது எனும் அற்புதத்துடன் ஒப்பிடுங்கள்.

இவற்றில் எதை நம்ப அதிக "நம்பிக்கை" அவசியம்?

--

Hari Krishnan

unread,
Jul 7, 2015, 10:01:51 AM7/7/15
to mintamil

2015-07-07 19:28 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
எல்லாம் வல்ல இறைவனால் இம்மாதிரி அற்புதங்களை நிகழ்த்த முடியாது எனும் தங்கள் நம்பிக்கை தான் எனக்கு வியப்பளிக்கிறது.

கடவுளுக்கு அந்த அளவு சக்தி இல்லையா என்ன? :-)

கடவுளே இல்லை.  உலகம் படைக்கப்படவே இல்லை.

ஆதிபகவன் முதற்றே உலகு.  :)

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

செல்வன்

unread,
Jul 7, 2015, 10:03:50 AM7/7/15
to mintamil

2015-07-07 9:01 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:
கடவுளே இல்லை.  உலகம் படைக்கப்படவே இல்லை.

ஆதிபகவன் முதற்றே உலகு.  :)

"பரந்து கெடுக இவ்வுலகியற்றியான் " :-)

--

Dev Raj

unread,
Jul 7, 2015, 10:13:20 AM7/7/15
to mint...@googlegroups.com
உண்மையான ஸித்த புருஷர்கள், இறையருள் பெற்றோர்
அற்புதம் நிகழ்த்த வல்லவர்; நம் பார்வையில் அது அற்புதம்.
அவர்களுக்கு ஒரு விளையாட்டு.

திருவருட் பிரகாச வள்ளலார் நீரூற்றி விளக்கெரியச் செய்தார்;
இதைக் கட்டுக்கதை என ஒதுக்க முடியாது

தேவ்

Banukumar Rajendran

unread,
Jul 7, 2015, 10:26:03 AM7/7/15
to mint...@googlegroups.com
குந்தகுந்தச்சாரியார் எதை செய்தார்?
எதை மறுபடியும் செய்து காட்டவேண்டும்? 

மூல நூல் வரிகளைக் கொடுக்கவும்? மூன்றாம் தர சான்றுகள் வேண்டாம்!

என் பதிலை எழுதுகிறேன் ஐயா!

Banukumar Rajendran

unread,
Jul 7, 2015, 10:35:29 AM7/7/15
to mint...@googlegroups.com
செல்வன் (உங்களை எல்லாம் முன்னமே எதிர்ப்பார்த்தேன்) ரொம்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க!

செல்வன், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதன்று இங்கு சொல்லவருவது.
அன்று ஒர் அற்புத செய்ல நிகழ்ந்திருந்தால், இன்றும் அதுபோல நிகழவேண்டுமே. அதற்குதான் அவ்வாறு செய்துக் காட்ட முடியுமா என்கிறேன்.

முடியும் என்றால் நிகழ்த்திக்காட்டவும். முடியாது என்றால் முடியாது என்று சொல்லவும்!

அல்லது அப்பர் போன்ற நியாயவான்கள் தற்போது யாருமில்லை என்றுச் சொல்லி ஒதுங்கிவிடுங்கள்! ;-)

இரா.பா

2015-07-07 19:28 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

--

செல்வன்

unread,
Jul 7, 2015, 10:45:25 AM7/7/15
to mintamil

2015-07-07 9:35 GMT-05:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
செல்வன், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதன்று இங்கு சொல்லவருவது.
அன்று ஒர் அற்புத செய்ல நிகழ்ந்திருந்தால், இன்றும் அதுபோல நிகழவேண்டுமே. அதற்குதான் அவ்வாறு செய்துக் காட்ட முடியுமா என்கிறேன்.

ஐயா....சைபிரியாவில் விண்கல் விழுந்தது என்றால் நம்பமாட்டேன். என் முன்னால் விண்கல் வந்து விழுந்தால் தான் நம்புவேன் என சொல்லமுடியாதல்லவா? :-)

விண்கல் விழுவதும், அற்புதம் நிகழ்வதும் என் கையில் இல்லை....கடவுள் கையில் இருக்கிறது. அவர் விரும்பினால் அற்புதத்தை நிகழ்த்துவார். அவர் அதை விரும்பவேண்டும் என நான் சொல்லி அவர் கேட்கபோவது இல்லையே? :-)

--

Nagarajan Vadivel

unread,
Jul 7, 2015, 10:53:02 AM7/7/15
to மின்தமிழ்
கடவுளை நம்புபவர்கள் மனப்போக்கில் இறைவன் அற்புதங்கள் நிகழ்த்துவதாகத் தோன்றும் நம்பிக்கைக் காட்சிகள் அவர்களுக்கு ஏற்றதாகத் தெரிகிறது.  நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் இறைவனை அறிந்து கொள்ள அற்புதங்கள் நிகழவேண்டும் என்று மனம் விழைவதும் நிகழ்வுகளை அற்புதங்கள் என்று ஏற்றுக்கொள்வதும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்வது.  அவ்வாறு நடப்பதில்லை என்று அவர்களுக்கு ஒருபோதும் ஒரு மனமாற்றத்தை ஒ்ரு நம்பிக்கையின்மையை மற்றவர்களால் ஏற்படுத்தமுடியாது
இணையமுனி

--

Banukumar Rajendran

unread,
Jul 7, 2015, 11:02:38 AM7/7/15
to mint...@googlegroups.com
2015-07-07 20:23 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
கடவுளை நம்புபவர்கள் மனப்போக்கில் இறைவன் அற்புதங்கள் நிகழ்த்துவதாகத் தோன்றும் நம்பிக்கைக் காட்சிகள் அவர்களுக்கு ஏற்றதாகத் தெரிகிறது.  நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் இறைவனை அறிந்து கொள்ள அற்புதங்கள் நிகழவேண்டும் என்று மனம் விழைவதும் நிகழ்வுகளை அற்புதங்கள் என்று ஏற்றுக்கொள்வதும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்வது.  அவ்வாறு நடப்பதில்லை என்று அவர்களுக்கு ஒருபோதும் ஒரு மனமாற்றத்தை ஒ்ரு நம்பிக்கையின்மையை மற்றவர்களால் ஏற்படுத்தமுடியாது

முழுதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து!

இரா.பா

Dev Raj

unread,
Jul 7, 2015, 11:15:30 AM7/7/15
to mint...@googlegroups.com
On Tuesday, 7 July 2015 02:41:04 UTC-7, இரா.பா wrote:
"உண்மையும் நம்பிக்கையும்" என்ற இழையைப் படிக்கவும்! ;-) மூல நூல் வரிகளைக் கொடுக்கவும்? மூன்றாம் தர சான்றுகள் வேண்டாம்!

குந்தகுந்த ஆசார்யர் விண்வழியே பறந்து சென்று விதேஹம் அடைந்ததாகவும்,
சமவ சரணத்தில் பங்கு கொண்டதாகவும் சொல்கின்றனர் -

Acharya Kundkund was knowing the Avakashgamini vidya (Skill to teleport self through air). He went to videh kshetra where Simandhar swamis samav sharan was going. Height of acharyas there was so huge that Kundkund looked like cardamom size in front of them. Hence those acharyas called him Elacharya (Cardamom sized acharya). Acharya Kundkund gained knowledge directly from Tirthankara Shri Simandhar Swami and created the Samaysaar.

வரலாற்று வல்லுநர்கள் இவரை ஒப்புக்கொள்கின்றனர்; இவர் எழுதிய நூல்களும் உள்ளன.

இவர் செய்த ஆகாசகமநம் உண்மையா ? நம்பிக்கையா ? இவரது உயரம் ஏலக்காய் அளவு
தெரியுமளவு பிறர் மிக உயரமாக இருந்தனர் என்பதும் உண்மையா ?

மூல நூல் எனத் தாங்கள் குறிப்பது எவற்றை ? திகம்பர நூல்களா ?
சுவேதம்பர நூல்களா ?

தேவ்
 
Oru Arizonan

unread,
Jul 7, 2015, 9:48:47 PM7/7/15
to mintamil
2015-07-07 0:48 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

ஸூத்ரதாரி அடியேனே. இரா பா இல்லை. 

நன்றி தேவ் சார்!
(அரிசோனா ஐயாவிற்கு ஏன் என்மேல் கோபம் என்றுத் தெரியவில்லை. :-) எங்காவது இதுபோன்ற சொற்றொடர்களைக் கண்டால் நாந்தான் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறார். :-)))
இரா.பா

இரா. பா.  அவர்களே,

இழையில் முதலில் உங்கள் பெயர் இருந்ததால் நீங்கள் என்று கருதிவிட்டேன்.    தலைப்பைப் பார்த்தால், அதுவும் "திணிக்கப்படு" என்ற சொல்லைப்பார்த்ததும், அது தங்களுடையதாகத்தான் [முன்தரவுகளின் அடிப்படையில்] இருக்கவேண்டும் என்று அவசரப்பட்டு எண்ணியது எனது தவறுதான். 

ஆயினும்,
//பார்ச்வநாதருக்கு முன்பிருந்ததாகச் சொல்லப்படும் தீர்த்தங்கரர்களை 
வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனரா ? நேர்மையுடன் விடை 
கூறுங்கள்.அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நீங்களும் 
அவர்களை வழிபடாமல் இருப்பீர்களா ?//
//வரலாற்று ரீதியாக பார்த்தால், அவர்கள் சொல்வது சரிதான். ஆதாரங்கள்
கிடைக்கும் வரை!
வழிபடுவது
ம், அல்லாமல் போவதும் அவரவர் சொந்த விருப்பமில்லையா! :-)
இரா.பா//

என்று நழுவியிருக்கிரீர்கள்.  வழிபடுவதும்,நம்புவதும் ஒருவரது விருப்பம்.  
நான் முன்னொரு பதீவில் நான் குறிப்பிட்ட விஷயங்கள் இன்னும் நினைவில் கொள்ளத்தக்கதே!

இந்து சமயமும் -- குறிப்பாக சைவமும் தாக்கப்படும் அளவுக்கு இந்த மின்தமிழ் மேடையில் வேறதுவும் தாக்கப்படுவது இல்லை.  இதுவே உண்மை.  அதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல.  அதைத்தான் நிறுத்தச் சொல்கிறேன்.

உங்கள்மேல் எனக்குத தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை.  என் வீட்டுக்கு நீங்கள் வந்தால் உங்களை வரவேற்று, அன்புடன் அமுது படைத்து, இங்கு இருக்கும், சமய நல்லிணக்கச் சின்னமான சமண-இந்து சமய ஆலயத்திற்கு அழைத்துச் சென்று காட்டுவேன்.

இன்னும் ஒன்று...

"கடவுள் இல்லை" என்னும் வாதம், "கடவுள் இருக்கிறது!' என்ற நிலைப்பாட்டுக்குப் பின்னர்தான் வர இயலும்.  எனவே ஆத்திகத்திற்குப் பின்னர்தான் ஆத்திக மறுப்பான நாத்திகம் தோன்ற இயலும்.  இதற்கு வரலாறு தேவை இல்லை -- தர்க்கவாதம் ஒன்றே போதும்.

நீங்களும் நானும் இந்த மின்தமிழ் மேடையில் தர்க்கவாதம் செய்யலாம் -- அது வேறு.  

Banukumar Rajendran

unread,
Jul 8, 2015, 12:09:11 AM7/8/15
to mint...@googlegroups.com
2015-07-07 20:45 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Tuesday, 7 July 2015 02:41:04 UTC-7, இரா.பா wrote:
"உண்மையும் நம்பிக்கையும்" என்ற இழையைப் படிக்கவும்! ;-) மூல நூல் வரிகளைக் கொடுக்கவும்? மூன்றாம் தர சான்றுகள் வேண்டாம்!

குந்தகுந்த ஆசார்யர் விண்வழியே பறந்து சென்று விதேஹம் அடைந்ததாகவும்,
சமவ சரணத்தில் பங்கு கொண்டதாகவும் சொல்கின்றனர் -

Acharya Kundkund was knowing the Avakashgamini vidya (Skill to teleport self through air). He went to videh kshetra where Simandhar swamis samav sharan was going. Height of acharyas there was so huge that Kundkund looked like cardamom size in front of them. Hence those acharyas called him Elacharya (Cardamom sized acharya). Acharya Kundkund gained knowledge directly from Tirthankara Shri Simandhar Swami and created the Samaysaar.

ஐயா, முன்னமே என் பதிலை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டேன்.

தாங்கள் எழுப்பிய கேள்விக்கு வருகிறேன்.

குந்தகுந்த ஆச்சாரியார் இதுபோல செய்திருக்க வாய்பில்லை. நடந்திருக்கவும் முடியாது. பின்னாளில் வந்தவர்கள்
அவரின் புகழ்ப்பாட இவ்வாறெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். அவர் காலத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை. (சொல்லப்பட்டிருந்தாலும், அதுவாறு நடக்க முடியாது)

இதற்குதான் மூல பாடத்தையோ, ஆச்சாரியார்கள் எழுதிய நூல்களையோ சான்றாக காட்டுங்கள் என்று சொன்னேன்!

:-)

வரலாற்று வல்லுநர்கள் இவரை ஒப்புக்கொள்கின்றனர்; இவர் எழுதிய நூல்களும் உள்ளன.

இவர் செய்த ஆகாசகமநம் உண்மையா ? நம்பிக்கையா ? இவரது உயரம் ஏலக்காய் அளவு
தெரியுமளவு பிறர் மிக உயரமாக இருந்தனர் என்பதும் உண்மையா ?

நல்ல கற்பனைகள் என்று சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். வளர்ந்தப்பின் நம்புவதென்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்றாலும், நிஜத்தில் அவ்வாறேல்லாம் நடந்திருக்க வாய்பில்லை.

மூல நூல் எனத் தாங்கள் குறிப்பது எவற்றை ? திகம்பர நூல்களா ?
சுவேதம்பர நூல்களா ?

திகம்பர நூலிலிருந்துச் சான்று காட்டுங்கள் ஐயா! (இதை மறந்து விடாதீர்கள்)

:-)

Dev Raj

unread,
Jul 8, 2015, 9:13:12 AM7/8/15
to mint...@googlegroups.com
On Tuesday, 7 July 2015 21:09:11 UTC-7, இரா.பா wrote:

ஐயா, முன்னமே என் பதிலை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டேன்.
தாங்கள் எழுப்பிய கேள்விக்கு வருகிறேன்.
குந்தகுந்த ஆச்சாரியார் இதுபோல செய்திருக்க வாய்பில்லை. நடந்திருக்கவும் முடியாது. பின்னாளில் வந்தவர்கள்
அவரின் புகழ்ப்பாட இவ்வாறெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். அவர் காலத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை. (சொல்லப்பட்டிருந்தாலும், அதுவாறு நடக்க முடியாது)
இதற்குதான் மூல பாடத்தையோ, ஆச்சாரியார்கள் எழுதிய நூல்களையோ சான்றாக காட்டுங்கள் என்று சொன்னேன்!

திகம்பர நூலிலிருந்துச் சான்று காட்டுங்கள் ஐயா! (இதை மறந்து விடாதீர்கள்)
 
நூல் சான்றுள்ளது ; சமணக் கல்வெட்டுத் தொகுப்பிலிருந்தும் சான்று 
காட்டலாம், தூய சங்கதக் கல்வெட்டு. மூலநந்தி சங்கத்தின் பட்டாவளி
குந்தகுந்தருக்குச் சூட்டிய பட்டப்பெயர்களையும் எடுத்துக் காட்டலாம்.
இது திகம்பர சங்கம் என்றுதான் நினைக்கிறேன். குந்தகுந்தர் எழுதிய
மோக்ஷ பாஹுட நூலுக்கான உரையிலும் உள்ளது.
உரை எழுதியோரும் திகம்பரச் சமணராகவே இருக்க வேண்டும்.
சிரமப்பட்டுத் தொகுத்து எழுதியபின் கால இடைவெளியைக் காரணம் காட்டி 
நாட்டாமைத் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் :))

தேவ்

Banukumar Rajendran

unread,
Jul 10, 2015, 3:16:40 AM7/10/15
to mint...@googlegroups.com
ஐயா, குறிப்புகள் என்னிடம் நிறைய இருக்கின்றன. ஆயின் யான் எதிர்ப்பார்பது, அவர் எழுந்த/வாழ்ந்த காலங்களை ஒட்டி சான்றுகள் தாருங்கள் என்றுதான். பின்னாள் வந்தவர்கள், அவரைப்பற்றி எதுவேண்டுமென்றாலும் எழுதுவார்கள். அத்ற்கு ஆதாரம் வேண்டாவா? அதனால், அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் இதற்கு நூற்சான்றுகள் இல்லை!

இது ஒருபுறம் நிற்க! இவ்வாறு எக்காலத்திலும் நடவாது என்று என் கருத்தாக, கூறியப்பின்னரும் ஏற்றுக்கொள்ள மறுத்து, மீண்டும், மீண்டும் அதே கேள்வியை கேட்பதில் என்ன நியாயம்? :-)

செல்வன்

unread,
Jul 10, 2015, 12:12:04 PM7/10/15
to mintamil
ஐயா

அற்புதங்களை செய்யும் சக்தி இல்லாதவர் சாதாரண மனிதரே. அவர்கள் கூறும் "மறுபிறவி, கர்மவினை, நரகம், சுவர்க்கம்" மாதிரி விஷயங்களை எப்படி நம்புகிறீர்கள்? "உலகம் படைக்கபடவே இல்லை, எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது, ஏழு வகை உலகங்கள் உள்ளன" ...இதை நம்புகிறீர்களா?

அல்லது அதையும் நம்பவில்லை என்றால் மகாவீரரும், பிற தீர்த்தங்கரரும் இறப்புக்கு பின் என்ன ஆனார்கள் என நம்புகிறீர்கள்?

Bala Sundara Vinayagam

unread,
Jul 10, 2015, 1:36:00 PM7/10/15
to mint...@googlegroups.com
இந்து சமயமும் -- குறிப்பாக சைவமும் தாக்கப்படும் அளவுக்கு இந்த மின்தமிழ் மேடையில் வேறதுவும் தாக்கப்படுவது இல்லை.  இதுவே உண்மை.  அதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல.  அதைத்தான் நிறுத்தச் சொல்கிறேன்.

ஒரு அரிசோனன் 

//இந்து சமயமும் -- குறிப்பாக சைவமும் தாக்கப்படும் அளவுக்கு இந்த மின்தமிழ் மேடையில் வேறதுவும் தாக்கப்படுவது இல்லை.  இதுவே உண்மை.  அதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல.  அதைத்தான் நிறுத்தச் சொல்கிறேன்.//

நீங்கள் எழுதும் முறை தவறு. இஃதொரு பொது  விவாத மேடை.  ஒரு மதத்தைப்பற்றி வைக்கப்படும் கருத்துக்கள் தாக்குதலாகத் தெரிந்து அதை நிறுத்த்ச்சொல்வதென்பது இசுலாமியத்தீவிரவாதிகளின் போக்கையே நினைவுபடுத்துகிறது.

சைவம் தமிழ்நாடு வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கிறது. அது மதத்தோடு மட்டுமே நின்றிருந்தால், அதைப்பற்றிய விமர்சனங்களை மதவாதிகள் மட்டுமே செய்யலாம். விவாதிக்கலாம். இங்கு எவருமே ஞான சம்பந்தரோ, மங்கையர்க்கரசியாரோ, கூன்பாண்டியனோ, சிவனை வழிபட்டது தவறென்றோ, சைவமதத்தில் சொல்லப்பட்ட கடவுட்கொள்கைகளை பொய்யென்று சொல்லவில்லை. அவரவருக்கு அவரவர் கடவுள் உண்மையே என்பது நம்மாழ்வாரின் அருளிச்செயல்.  

வரலாற்றில் நடந்ததாகச் சொல்லப்பட்டவை (நாம் நேரில் பார்க்கவில்லையாதலால சொல்லப்பட்டவை, கருதப்பட்டவை)  இங்கு பேசப்படுகின்றன. அதை ஒட்டியும் வெட்டியும் பேச முழு சுதந்திரம் இத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்போதுன் வெட்டிப்பேசுபவரை நிறுத்தச்சொல்லுங்கள்; ஒட்டிப்பேசுபவரை மட்டும் அனுமதியுங்கள் என்பதன் பெயர்தான் தாலிபானித்தனம்.  

வரலாற்று ஆராய்ச்சி முடிவற்றது என்றார் தெ பொ மீ. திரு தேவராஜ் முதலில் சம்பந்தரிடமிருந்து நிறைய பாடலகளை எடுத்துப்போட பின்னர், கட்சிக்காரரே எப்படி நீதிபதியாக முடியுமென்றவுடன், சமணர்களும் சொன்னார்கள் என்று சொல்கிறார். இப்படி நீங்களும் சொல்லலாம். உங்கள் எதிர்வாதத்தை வைக்கலாம். அதைச்செய்யாமல்,  நிறுத்தச்சொல்லுங்கள் என்பது மாற்றுக்கருத்துக்களை உள்ளுழைய விடாமல் நீங்களே இராஜ்ஜியம் பண்ண ஆசைப்படுகிறீர்கள். 

அப்படி இராஜ்ஜியம் பண்ண வேண்டுமானால், இத்தளத்தில் நிர்வாகிகளுள் ஒருவராகி உங்களுக்குப் பிடித்த கருத்துக்கள் எவர் வைக்கிறார்களோ அவரை மட்டும் அனுமதித்து மற்றவர்களை நிறுத்திவிடலாம் என் முடிவெடுத்துச் செயல்படுத்திவிடலாம்.  ஏன் செய்யக்கூடாது? மாறாக எழுதுப்வரை நிறுத்து என்று சொல்ல உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?

அப்படியே நீங்கள் விரும்பினால், இங்கு தளத்தை நடத்துவோரிடம் அக்கோரிக்கையை வையுங்கள். அவர்கள் எவருமே சம்பந்தர் அரசு ஆதரவோடு சைவ மதத்தைத் திணித்தாரா எனற் கேல்விக்கு இல்லையென்றுதான் பதில் சொல்லவேண்டும்; ஆமென்றால், அது சைவ மதத்தைத் தாக்குதல் செயவதாகும் அனுமதிக்கப்படமாட்டாது என்று சொல்லட்டும். உங்கள் ஆசை நிறைவேறும்.

சைவமதம் மட்டுமே தாக்கப்படுகிறது என்பது உங்கள் சொற்றொடர். தாக்கப்படுதல் என்பதை உங்களுக்கு வசதியாக திருத்திப்பொருளெடுத்துக்கொள்கிறீர்கள்.

சம்பந்தர்+மங்கையர்க்கரசியார்+குலச்சிறையார் கூட்டணியே மன்னனை மீண்டும் சைவனாக்கி, சமணர்களைப் பாண்டிய நாட்டில் இல்லாமல் செய்துவிட்டது என்பது தாக்குதலன்று. ஒரு வரலாற்றுப்பிரச்சினைக்குள்ளாக்கப்படும் விவாதத்தில் வைக்கப்படும் ஒரு கருத்தே.. இதை எப்படி தாக்குதல் என்று உங்களால் சொல்ல முடிகிறது?

இம்மதம் மட்டும் என்பது உங்கள் இன்னொரு வருத்தம்.  நீங்களே கிருத்துவத்தையோ, இசுலாமைப்பற்றியோ கடும் விமர்சனங்களை வைத்து விடலாமே? அவையும் மனிதர்கள் பலரால் மாசுபடுத்தப்பட்டு வருகின்றனவே? வைணவத்தைப்பற்றி ஒன்றுமில்லையென்ற போது தொண்டரடிப்பொடியாழ்வாரின், சமணர்கள. பவுத்தர்க்ள் தலைகளைக் கொய்ய அரங்கா எனக்கு வல்லமை கொடு என்றெழுதியதை நான் போட்டபோது ஏன் வைணவர்கள் நான் தாக்குதல் செய்தேன் என்றெழுதவில்லை.

உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், இப்படிப்பட்ட தலைப்புக்களை எட்டிப்பார்க்காதீர்கள். உன் அஜன்டா என்ன? உன் உள்ளோக்கமென்ன? நிறுத்து என்று பிறரை அவதூறு செய்ய‌ உங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.  

Bala Sundara Vinayagam

unread,
Jul 10, 2015, 1:55:14 PM7/10/15
to mint...@googlegroups.com
"கடவுள் இல்லை" என்னும் வாதம், "கடவுள் இருக்கிறது!' என்ற நிலைப்பாட்டுக்குப் பின்னர்தான் வர இயலும்.  எனவே ஆத்திகத்திற்குப் பின்னர்தான் ஆத்திக மறுப்பான நாத்திகம் தோன்ற இயலும்.  இதற்கு வரலாறு தேவை இல்லை -- தர்க்கவாதம் ஒன்றே போதும்.

ஒரு அரிசோனன் 

//கடவுள் இல்லை" என்னும் வாதம், "கடவுள் இருக்கிறது!' என்ற நிலைப்பாட்டுக்குப் பின்னர்தான் வர இயலும்.  எனவே ஆத்திகத்திற்குப் பின்னர்தான் ஆத்திக மறுப்பான நாத்திகம் தோன்ற இயலும்.  இதற்கு வரலாறு தேவை இல்லை -- தர்க்கவாதம் ஒன்றே போதும்.
//

நாத்திகம் என்பது இருவகைப்படும். ஒன்று வெறும் கருத்தாக; மற்றொன்று சமூக சேவையாக.

வெறும் கருத்தாக வைப்போர் இத்தர்க்கத்தைப்பற்றி கவலைப்படுவதில்லை. ]

நீங்கள் உண்டென்கிறீர்கள்; நான் இல்லையென்கிறேன் அவ்வளவுதான்.  நீங்கள் உண்டென்று சாதிக்காவிட்டாலும், எழுதாவிட்டாலும் கோயில் மசூதிகள் தேவாலயங்கள் கட்டாவிட்டலும் கூட ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டிப்படைக்கிறது; அதைத் திருப்தி படுத்தினால் நாம் பிழைப்போம் என்ற பயம் உங்களை ஆட்டும். அதை சில செய்கைகளில் மூலம் காட்டுவீர்கள். நாத்திகன் அதைக்கண்டு நகைத்து இஃதென்ன வேடிக்கை? இயற்கை இடியையும் மழையையும் செய்ய அதைக்கண்டு எங்கோ ஒன்று இருந்து நம்மை வதைக்கிறதென்றும் அதற்கு சக்தியென்றும் பெயர்சூட்டி குட்டிக்கரணம் போடுகிறார்களே என்று நகைப்பான். அதை நீங்கள் நாத்திகம் என்பீர்கள். 

நீங்கள் அப்படிச்செய்யவே இல்லை. மாறாக, கடலும் மழையும் இடியும் பூகம்பங்களும் ஒரு மாபெரும் அந்நிய சக்தியால் உருவாக்கப்படவில்லை. இயற்கையே. என்று நீங்கள் போயிருந்தால், நீங்களும் நாத்திகரே.

ஆக, நாத்திகம் வருவதற்கு முன் ஆத்திகம் வரவில்லை. ஆத்திகம் வருவதற்கு முன் இயற்கையாக இருக்கவேண்டிய 
நாத்திகத்தை செயற்கை உணர்வுகளை இட்டுக்கட்டி கடவுள் என்ற கற்ப்னையை உருவாக்கியதால் ஆத்திகம் என்பதாயிற்று.  ஆத்திகம் செயற்கை. நாத்திகம் இயற்கை.  இல்லையா?எங்கே போயிற்று உங்கள் தர்க்கம்? பயமுணர்வு கடவுளை உருவாக்கியது. அப்பயம் இயற்கையிலேயே மனிதனுக்கு உண்டென்றாலும், அப்பயமும் காரணங்கள் இருந்தால்தான் வரும். எல்லாம் சரியாக இருக்கும்போது எவனுமே கோயில் பக்கம் போவதில்லை தெரியுமோ?

Beliief in God is created.  When it is not created, all of us are non-believers.  Take a baby. It doesn't know fear. But we start telling it about ghosts and devils.  It begins to believe them. If we hadn't done so, the baby would grow into a non-believer in ghosts and devils. Will you then argue that the fearless state came only from the fearful state? Try.

சமூக சேவை வகைபற்றி; இது பெரியார் வகை. கடவுள என்ற கான்செப்டைக்காட்டி மக்களைச்சுரண்டி தாங்கள் நன்றாக வாழும் கூட்டத்தை வெளிக்காட்ட, நாத்திகம் அவசியமாகிறது இங்கே. இது தர்க்கத்தில் வராது.

Bala Sundara Vinayagam

unread,
Jul 10, 2015, 2:15:37 PM7/10/15
to mint...@googlegroups.com
அப்பருக்கும் பல்லவனுக்கும் மதவழி வந்த பிணக்குகள் இருந்தன என்பதை அப்பரின் பாட்ல்கள் மூலமாகவே அறிகிறோம். சைவருக்கும் சமணருக்கும் என்று பிணக்கு இவ்வாறு இருக்க எப்படி அப்பரின் பாடலகளை வைத்து அவுக மோசம்; நாங்க நல்லவங்க என்று எப்படி வாதிட முடியும்?   சமணர்களுக்கெதிரான இங்கிடப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வாதங்களும் ஒருதலைப்பட்சமானதே. 

திருமறைகள் சைவருக்கு. அவர்கள் பக்கம்தான் அவை பேசும் என்பதைப் புரிய ராக்கெட் சயன்ஸா தெரிய வேண்டும்?

On Sunday, 5 July 2015 08:46:55 UTC+5:30, oruarizonan wrote:
2015-07-04 10:41 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:

கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே !

அப்பரே இப்படி ஓதிச் சென்றிருக்கும்போது, யாரோ ஒருவர் எழுதிய கட்டுரையை இரா.பா. அவர்கள் வைத்திருப்பது -- கட்டுரையில் இருப்பவர், தனக்குப் பட்டதை எழுதியிருப்பது -- கட்டுரை எழுதியவர், திருமுறைகளைச் சரிவரக் கற்காமல் கருத்துச் சொல்வது -- தவறான கருத்தைப் பரப்புவதாகவே இருக்கிறது.

ஒரு அரிசோனன் 
Reply all
Reply to author
Forward
0 new messages