இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேரநாட்டின் அரசனாக "மாந்தை" என்னும் ஊரைத்
தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவன்.இவனுக்கு இரு மனைவியர் இருந்துள்ளனர்.
பட்டத்து அரசியாக விளங்கியவள் வேளாவிக் கோமான் பதுமன்தேவி.இவர்களுக்குக்
களங்காய் கண்ணி நார்முடிச்சேரல் என்ற மகனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
என்ற மகனும் இருந்தனர்.
பிறிதொரு மனைவியான சோழன் மணக்கிள்ளியின் மகளுக்கும் (பெயர் அறிய
முடியவில்லை) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் மகனாகக் கடல்பிறக்கு
ஓட்டிய வெல்கெழு குட்டுவன் என்னும் மகனும் இருந்தான்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன்மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த
கடல்பிறக்கு ஓட்டிய வெல்கெழுகுட்டுவன் என்பவனைச் செங்குட்டுவனாகச்
(கண்ணகிக்குக் கல் எடுத்தவன்) சிலர் கருதுவர்.ஆனால் சிலப்பதிகாரச்
செங்குட்டுவனின் தந்தை சேரலாதன் ஆவான்.தாய் ஞாயிற்றுச் சோழன் எனப்படும்
சோழன் நல்லுருத்திரனின் மகள் நற்சோணை ஆவாள். செங்குட்டுவனின் தாய்
நற்சோணை பட்டத்தரசியாவாள்.
வெல்கெழு குட்டுவன் சேரநாட்டை ஆளும்பொழுது(கி.மு.250- கி.மு.175) பிற
பகுதிகளைக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் அவன் தம்பி
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆட்சி செய்துள்ளனர்.ஆனால் சேரன்
செங்குட்டுவன் சேரநாட்டை ஆட்சி செய்தபொழுது(கி.பி.50- கி,பி.125) பிறர்
யாரும் சேரநாட்டை ஆண்டதற்கான குறிப்புகள் இல்லை.
எனவே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் மகன் கடல்பிறக்கோட்டிய
வெல்கெழு குட்டுவனுக்கும் காலத்தால் பிந்தியவன் சேரலாதன் மகன்
செங்குட்டுவன்(சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் அரசன்) என்பதை அறிதல்
வேண்டும்.
கடல் பிறக்கோட்டிய வெல்கெழுக்குட்டுவன் காலத்திலும் கடற்கொள்ளையர்கள்
தொல்லை தந்துள்ளனர்.
கடற்கொள்ளைத் தொழில் செய்த கடம்பர்களின் மூலத் தாயகம் கொண்கானக்கரை எனப்
பிற்கால வரலாற்று நூல்கள் சுட்டுகின்றன.ஆனால் கடம்பர்களின் பண்டையத்தளம்
கடற்கரையில் இல்லாது கடலின் உள்ளே தீவில் இருந்திருக்க வேண்டும் என
அறிஞர் கா.அப்பாத்துரையார் கருதுகிறார்(தென்னாட்டுப் போர்க்களங்கள்,ப.
100).இத் தீவைக் கிரேக்கர்கள் "லெயூகே" அதாவது வெள்ளைத்தீவு என
அழைத்தனர்.அது மங்களூரை அடுத்த தூவக்கல் என்ற தீவு என ஆய்வாளர்கள்
கருதுவதையும் கா.அப்பாத்துரையார் தம் நூலில் குறிக்கின்றார்.
"லெயூகே" என்ற கிரேக்கச் சொல்லும் "தூவக்கல்" என்னும் பழந்தமிழ்ச்
சொல்லும் இரண்டும்
வெள்ளைத் தீவைக் குறிப்பதாகும்.வெள்ளைத்தீவு எது?. தேடிப் பார்ப்போம்.
(ஒன்று மட்டும் விளங்குகிறது.தமிழக வரலாற்றுச் சான்றுகள் தமிழகத்தில்
மட்டும் இல்லாமல் கேரள,கருநாடக,ஆந்திரப் பகுதிகளில் மிகுந்து
கிடக்கின்றன.அவை கல்வெட்டுகள் ஊர்ப்பெயர்கள்,நம்பிக்கைகள்,இறைவழிபாடு
எனப் பெருகிக் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களைப் புரிந்துகொள்ள
மலையாள, கன்னட, துளுத்தேசங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும்.)
2. போரும் சோறும்
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
திணை: பாடாண்
துறை: செவியறிவுறூஉ வாழ்த்தியலும் ஆம்
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே
-----------------------------------------------------------------------------
ஐவரோடு - ஈரைம் பதின்மரும் என்பது பாண்டவர்களும் கவுரவர்களும் அல்ல இவர்கள் பாண்டிய குடிகள் என்று படித்ததாக நினைவு...
என்றும் அன்புடன்
இரா. சதீஷ் குமார்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் //
பாரதப்போருக்குச் சேர மன்னன் உணவு தந்து உதவியமை
கூறப்படுகிறது.
தேவ்
ஐவரோடு - ஈரைம் பதின்மரும் என்பது பாண்டவர்களும் கவுரவர்களும் அல்ல இவர்கள் பாண்டிய குடிகள் என்று படித்ததாக நினைவு...
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
எந்த சேரமன்னன் பாரத போர்காலத்தில் இருந்தது? //
பாண்டிய மன்னன் பாண்டவர்களுக்கும்,
சோழன் கௌரவருக்கும் போரில் உதவியதாகவும்,
சேரன் போரில் பங்குகொள்ளாமல் இரு தரப்பினருக்கும்
உணவுப் பண்டங்களை அனுப்பியதாகவும்
படித்த நினைவு. ‘சோ’ அவர்கள் எழுதிய பாரதக்கதையை
ஒருமுறை பார்ப்பது நன்று.
தேவ்
படிக்க படிக்க மிக சுவையாக இருக்கிறது. வரலாறு மூன்று விதமாக மாறும் இயல்பு உள்ளது. 1. புதியன புகுந்து பழையன் மறைவது; 2. எழுத புகுந்தவர்கள், அக்காலத்திலிருந்து மாற்றுவது: 3. புதிய சான்றுகள் வரலாற்றை மாற்றி அமைப்பது.
இன்னம்பூரான்.
நன்றி ஐயா,
பாரதத்தில் வரும் "பாண்டு" என்பதே பாண்டியர்களைக் குறிக்கும் என்று இ.பா
எழுதுகிறார். (பழைய, பண்டு மரபினர் எனும் பொருளில்)
க.>
அரேபியாவிலிருந்து கடல் வழி வாணிபம், குறிப்பாக எகிப்திலிருந்து வரும்
போது சோமாலியைத்தொட்டு நகர்கிறது. மேலும் வரும் வழியில் மாலத்தீவுகள்,
இலட்சத்தீவுகள் இடையில் வரும். இன்றைய சோமாலியக் கடற்கொள்ளை என்பது
காலம், காலமாக நடைபெற்று வந்த ஒன்றாக இருக்க வேண்டும்.
சோமாலிய, எதியோப்பியர்கள் அச்சாக இந்தியர்கள் போலவே இருப்பர். பல
நேரங்களில் வித்தியாசம் காண்பதறிது (வாஜ்பாயி பிரதமராய் இருந்த போது
எதியோப்பிய பெண் ஒருவரிடம் இவர் இந்தியர் என நினைத்தே பல நிமிடங்கள்
உரையாடியதாக ஓர் கதையுண்டு). ஆனால், யவணர் எனப்படுவோர் "வெள்ளையர்" என்று
நினைக்கிறேன்.
எனவே நம் கடம்பர்கள், சேரர்கள், பாண்டியர்கள் தொல் ஆப்பிரிக்கக் குடிகளாக
இருக்க வாய்ப்புண்டு. எகிப்திய சரித்திரம் கிறிஸ்துவிற்கு முன் 4000
ஆண்டுகள் எளிதாகக் கணக்கிடப்படுகிறது. நமது தமிழ் முறைமையும்
(குமரிக்கண்டம்) அக்கால கட்டமாக இருக்க வாய்ப்புண்டு.
இன்று கூட, சோமாலிய நிலப்பரப்பு Geotectanic forces ஆல் பிரிய
வாய்ப்புள்ளது. முன்பு கடல் கொண்ட தென்னாடு அங்கிருந்திருக்கலாம்.
அங்கிருந்து கடல் மார்க்கமாக தென்னிந்தியா வந்து இங்குள்ள பழம் குடிகளை
வென்று புதிய தமிழகத்தை உருவாக்கியிருக்கலாம்.
நாமும் மற்றோர் போல் ஆப்பிரிக்கர்களை மட்டமாகவே பார்த்து வருகிறோம்
(இனவெறி நமக்கில்லை என்று யார் சொல்லமுடியும்?). இந்திய, தமிழக
ஆய்வாளர்கள் வரும் காலங்களில் சோமாலியா, எதியோப்பியக் கலாச்சாரங்களில்
கவனம் கொண்டு, ஆய்வு செய்தால் பல புதிர்கள் விடுபடலாம்!
கண்ணன்
நமது விருமாண்டிக்கு உலகின் ஆதி குடியின் மரபணு இருப்பதை ,
கண்டு பிடித்த பின்பும் , ஆப்ரிக்காவில் பண்டைய தமிழ் தொடர்பு
பற்றி ஆராயாமல் இருப்பது தவறுதான் .
இப்போது கிடைக்கும் செய்தி பரிமாற்ற சுலபமான வழி முறைகளைக் கொண்டு
இது பற்றி தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்து உண்மை அறிவை உலகத்திற்கு
வழங்கலாம் .
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்
.
இந்த இழையைப் பலமுறை படித்தாயிற்று.
ஒரு துப்பறியும் புதினம்போல் உள்ளது.
பெரும் பொருட்செலவில் அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள்.
தொடர்ந்து ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லையென்றால்
இழை பின்சென்று தலைப்பும் மறந்துவிடும்.
தேவ்
--- On Sat, 11/22/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote: |
From: Narayanan Kannan <nka...@gmail.com> |
<இது சரியல்ல; எகிப்து வ்ணிகர்கள் இந்தியாவில் முதலில் டொட்ட இடம் குஜராத் கடற்கரைதான் |
தென்னாட்டைச் சேர்ந்த *மலயத்வஜ பாண்டியன்*, பாண்டவர்களுடைய
நண்பர்களாகவும் இருந்தான்.
பாரதப் போரில் பங்கேற்றான். பதினேழாவது நாள் போரின்போது அஸ்வத்தாமனால்
கொல்லப்பட்டான்.
பாண்டியர்கள் மட்டுமல்ல; சோழர்களைப் பற்றியும் மஹாபாரதம் பேசுகிறது.
*மலயத்துவச பாண்டியன்
(திரு .ஹரி க்ருஷ்ணன் தமிழ் ஹிந்துவில் கூறி இருப்பது)
தேவ்
படம் பார்க்கவும்: http://www.crystalinks.com/silkroad.jpg
இரண்டும் உண்மைதான். பண்டைய கடல்வழியில் குஜராத் தொடப்படுகிறது. அதே
நேரத்தில் சொமாலிய முனையும் தொடப்படுகிறது. மேலும் சூயஸ் கணவாய் இல்லாத
காலத்தில், எகிப்திய சரக்குகள் எதியோப்பியா, சொமாலியா வழியாகவே கடல்
பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். அலெக்ஸாண்டிரிய நூலகத்தில் தமிழி
எழுத்துரு கொண்ட மட்பாண்டங்கள் இருக்கின்றன. இது கிறிஸ்துவிற்கு பல
நூற்றாண்டுகள் முன் நடந்த பயண எச்சம்!
க.>
Periplus of the Erythraen sea செங்கடல் வழிகாட்டி, முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதில் விவரங்கள் உள்ளன,
நரசய்யா |
From: Narayanan Kannan <nka...@gmail.com> |
படம் பார்க்க: http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9c/PeriplusMap.jpg
முழுக்கட்டுரை: http://en.wikipedia.org/wiki/Periplus_of_the_Erythraean_Sea
என் கோட்பாடு மேலும் வலுப்படுகிறது. நான் நினைத்ததை விட சோமாலியத்
தொடர்பு மிக அதிகமாக உள்ளது. எதியோப்பிய, சோமாலிய கடற்கரைப் பட்டிணங்கள்
இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கின்றன. சோமாலிய அடிமைகள்
இந்தியா வந்து கலப்பதற்கான சாத்தியக்கூறுகளும் தெரிகின்றன. மரபு ஆய்வுகள்
(டி.என்.ஏ) செய்தால் தெள்ளத்தெளிவாகிவிடும்.
கண்ணன்
2008/11/24 kra narasiah <nara...@yahoo.com>:
அன்புள்ள கண்ணன்,
சோமாலியாவின் இரண்டு துறைமுகங்கள் இந்தியாவிலிருந்து செல்லும்/வரும் வழியில் உள்ளன. அங்கிருந்து நேராக கப்பல்கள் குஜராத்தின் பரோச் துறைமுகம் வந்தடையும். அவை மாலத்தீவுகளுக்குச் செல்லவில்லை
சர்தார் பணிக்கர் maritime India என்ற நூல் எழுதிக்கொண்டிருந்த போது கடற்படையின் சிறிய கப்பலான ஐ. என். எஸ். பாம்பேயில் மாலத்தீவுகளுக்குப் பயணித்தார். அக்கப்பலில் நான் பணி புரிந்து கொண்டிருந்தேன். மாலை வேளைகளில் அவருடன் கப்பற்தளத்தில் அமர்ந்து கொண்டு (1955 ஜூன் என நினைக்கிறேன்) அவருடன் சம்பாஷித்தது இன்னும் பசுமையாக நினைவில்
உள்ள்து!
மாலத்தீவுகளைப் பார்க்கும் வாய்ப்பு இரண்டுதடவை எனக்குக் கிட்டியது.அது முதல் தடவை
அப்போதுதான் முதல் முறையாக ஸ்காஃப் ஆங்கில மொழிபெயர்ப்பு குறித்துத்
தெரிந்து கொண்டேன்.
இரண்டாவது முறை சென்றது, 1956 ல் ஒரு உள்நட்டுக் கலகத்தை அடக்கவும் கலகக்காரர்களை கைது செய்து இந்தியா கொண்டுவரவும்! |
From: Narayanan Kannan <nka...@gmail.com> |
கண்ணன்,
http://en.wikipedia.org/wiki/Bushmen
http://en.wikipedia.org/wiki/Image:BushmenSan.jpg
அந்த படத்துல இருக்கற புதர் மனிதர்கள் தீ பற்றவக்கும் முறையை பாத்தா என்ன தோணுது?