மதுரைக்கு வந்த சுனாமிகடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுமத்ரா தீவுகளில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தாய்லாந்து, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. இதனால் மிகப்பெரும் அலைகள் தோன்றித் தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இருந்த மீனவ கிராமங்களை அழிந்தன. கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் வீடு, உடமைகளை இழந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி வந்த 500 பேரைக் காணவில்லை. வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து சுமார் 100-200 மீட்டரிலேயே கடல் இருப்பதால், அலையின் உக்கிரத்தில் அங்கு உயிர் இழப்பு அதிகம். தமிழகத்தில் மட்டுமல்லாது அந்தமான் மற்றும் ஆந்திராவிலும் மற்றும் கடலோர மாநிலங்களிலும் இதேபோன்று பெரும் உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளன. 2004 ஆண்டு சுனாமியினால் 2 இலட்சத்து 28ஆயிரம்பேர் (227,898) இறந்துள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடு ஜப்பான் ஆகும்.சுனாமியினால் உண்டான சோகமான நிகழ்வுகள் மக்கள் நினைவுகளிலிருந்து இன்னும் நீங்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும், சுனாமி தாக்கிய நாளில் கடற்கரை பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் குடம் குடமாக பால் கொட்டியும், பூக்களைத் தூவியும், இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களுக்கு விருப்பமான உணவுப் பண்டங்களைப் படைத்துக் கண்ணீர்விட்டுக் கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 26.12.2013இன்றுடன் சுனாமி தாக்கி 9-ம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் உற்றாருக்கும் சுற்றாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை திஹிந்து நாளிதழ் தெரிவித்துக் கொள்கிறது.இப்படி ஒரு பிரளயம் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் அழிந்து விடுவார்கள் என எந்த ஒரு விஞ்ஞானியோ, ஆராய்ச்சியாளரோ முன்கூட்டியே கணித்துக் கூறவில்லை. தேர்தல் முடிவுகளையும், கிரிக்கெட்போட்டி முடிவுகளையும் முன்பே கணித்துக் கூறும் சோதிடர்கள் கூட இந்தச் சுனாமி பற்றிக் கணித்துக் கூறவில்லை.முதலில் நிலநடுக்கம். அதைத் தொடர்ந்து கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்று தொடர்ச்சியாக நடைபெற்று சுனாமி உருவாகிறது. பூமியின் மேற்பரப்பில் இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகி உள்ளன. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் நாடுகளும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் மோதிக் கொண்டன. இதனால் மிகப் பெரிய பூகம்பம் உண்டானது. மிகப் பெரிய கட்டிடங்கள் எல்லாம் ஆட்டம் கண்டன.அப்போது தோன்றிய கடலலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தின. 26 டிசம்பர் 2004 சுனாமி, இந்தோனேஷியாவிலுள்ள Phuket-ஐ epicentre-ஆகக் கொண்டு தோன்றியது. இந்த இடம் பாண்டிய நாட்டிற்கும் இலங்கைக்கும் நேர் கிழக்கில் (across the Bay of Bengal) அமைந்துள்ளது. இதனால் இந்தச் சுனாமியினால் இலங்கையும் தமிழகமும் அதிகமாகப் பாதிக்கப்பட்டன.சுனாமி என்றால் என்னவென்று அறிந்திராத தமிழக மக்களுக்குச் இந்தச் சுனாமி மிகப் பெரிய கொடூரத்தை ஏற்படுத்தியது.ஆனால் இப்போதுதான் முதன்முறையாகத் தமிழகத்தைச் சுனாமி தாக்கியுள்ளது என்று கூறுவதற்கில்லை. 2004 ஆண்டு சுனாமியைவிட மிகப் பெரிய சுனாமிகள் தோன்றி இலங்கையையும் தமிழகத்தையும் இதற்கு முன்பு பலமுறை அழித்துள்ளன.தமிழகத்தைத் தாக்கிய சுனாமிகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன.“மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வவ்வலின்மெலிவு இன்றி மேல் சென்று மேவார் நாடு இடம்படபுலியோடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டைவலியினான் வணக்கிய வாடாச்சீர் தென்னவன்“- கடல்அலைகள் மலிந்து தோன்றி, ஊர்ந்துவந்து பாண்டியநாட்டையே மூழ்கடித்தபோதிலும், மனம் தளராமல் பாண்டிய மன்னன் வடநாடுகளை எல்லாம் வென்று தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்துள்ளான் என்று இக் கலித்தொகை பாடல் குறிப்பிடுகிறது.ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை சுனாமி தோன்றி மதுரையைத் தாக்கியதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.பிரளய காலத்தில் கடல்அலைகள் பொங்கி வந்து தமிழகத்தைக் கடந்து மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டிச் சென்றுள்ளது.பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது.இதனால் அடுத்தடுத்து எழுகடல்களிலும் சுனாமிகள் தோன்றியுள்ளன.பிரளயம் ஏற்பட்டபோது உண்டான நிலநடுக்கத்தால், மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்றமலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையும் திருப்பரங்குன்ற மலையும் மூழ்கடித்துள்ளன என்கிறது திருவிளையாடற்புராணம்.இவ்வாறு உண்டான சுனாமி அலைகள் சேறும்சகதியுமாக இருந்துள்ளன. இந்த அலைகளினால் பூமியின் மேற்பரப்பில் இருந்த அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், ஒரேயொரு விருட்சம் (மரம்) மட்டும் இவ்வளவு பெரிய பிரளயத்திலும் ஆடாமல் அசையாமல் பூமியின் மேல் ஒரு ஆணியை அடித்து வைத்தது போல், அப்படியே நிலையாக ஆழிப்பேரலையை (சுனாமியை) எதிர்த்து நின்றுள்ளது.தண்ணீர் பாய்ந்து ஓடும் ஒரு மணற்பரப்பின் நடுவில் ஒரு குச்சியை நிலையாக நிறுத்தி வைத்தால், நீரோட்டத்தினால் அடித்துவரப்படும் மணல்கள் அந்தக் குச்சிக்குப் பின்புறம் சென்று நீண்டதொரு மேட்டினை உருவாக்கும். அலைகள் மிகுந்த கடற்கரையில் நாம் நின்றால், அலையானது நமது கால்களைத் தாண்டிச் செல்லும் போது, நமது கால்களுக்குப் பின்புறமாக ஒரு நீண்ட மணல்மேட்டினை உருவாக்குவதைக் காணலாம். இதனைச் செயற்கையாகவும் நாம் சோதனை செய்தும் பார்க்கலாம்.இதுபோன்றே, சுனாமி அலையால் அரிந்து வரப்பட்ட பொருட்கள் இந்த விருட்சத்தில் மேல் மோதி நிலைகொண்டு விருட்சத்திற்குப் பின்புறமாகச் சென்று, மணலும் சேறும் சகதியும் நிறைந்த ஒரு நீண்ட நெடிய மேட்டினை உருவாக்கிவிட்டது. இந்த மேட்டில் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட கடல்நீர், மணல், சகதி மற்றும் வரும் வழியில் இருந்த அனைத்து வகையான மரம் செடிகொடுகளும், மற்றும் உயிரினங்களும் படிந்து விட்டன.இவ்வாறு உண்டான களிமண்மேடு படிமமாக 24கி.மீ. தூரத்திற்கு நீண்டு சென்றுள்ளது. இப்போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கழிந்து விட்டன. இத்தனை ஆண்டுகளில், பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட அழுத்தத்தினாலும் மற்றும்பல இயற்கைக் காரணங்களாலும் களிமண் அப்படியே பாறைபோல் மாறிவிட்டது. இப்போது இந்தக் களிமண் மேடானது, “நாகமலை“ என்று அழைக்கப்படுகிறது. யானைமலையும் திருப்பரங்குன்றமலையும் கடும்பாறைகளாக இருக்க, நாகமலை மட்டும் கடும் பாறையாக இல்லாமல், மணற்குன்றாக இருப்பதை இன்றும் காணலாம். இதே போன்று பழமுதிர்சோலைமலையையும் (அழகர்கோயில்மலை) ஆழிப்பேரலையானது தாங்கியுள்ளதால் அங்கேயும் இதுபோன்ற படிமங்களைக் காணலாம்.ஆழிப்பேரலையாலும் அசைக்க முடியாமல் பூமியின் மேல் ஆப்புப் (ஆணி அடித்தது) போன்று அசையாமல் நின்ற அந்த விருட்சமானது, காலப்போக்கில் படிமம் ஆகியுள்ளது. இப்போது “ஆப்புடையார்“ என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ளது பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று.திருஆப்புடையார் போன்று, திருப்பரங்குன்றமலையும் ஆழிப்பேரலையை எதிர்த்து நின்றதால், திருப்பரங்குன்றமலைக்கு மேற்குப் பகுதியிலும் நாகமலைக்கு இணையாக ஒரு சிறிய படிம மலைத் தொடர் இருப்பதைக் காணலாம்.தொன்மையான தமிழர்களும் அவர்களது உடமைகளும் இந்த நாகமலையில் புதையுண்டு கிடக்கின்றன. நாகமலையை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால், தமிழரின் தொன்மையான வரலாறு அறிவியல் அடிப்படையில் நிறுவிடலாம்.பிரளயம் வற்றிய போது தேங்கியிருந்த கடல்நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேடாக உள்ளது. இதனால் இந்த இடம் “முகவை“ என்றும் சேதுக்கரை என்றும் பெயர் பெறலானது. இந்த இடங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழரின் தொன்மைச் சான்றாதாரங்கள் எளிதில் கிடைக்கும்.திருவிளையாடற் புராணத்தின் நான்காவது படலத்தில் மதுரையை ஆண்ட மலையத்துவசனின் மனைவியான காஞ்சனமாலை என்பவள் கடலில் நீராட விரும்பம் கொண்டாள் என்றும், இவளது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிச் சிவபெருமான் அழைத்ததனால் ஏழு கடல்களும் மதுரைக்கு வந்தன என்ற குறிப்பு உள்ளது.
திருவிளையாடற் புராணத்தின் பதினொன்றாவது படலத்தில் சுந்தரபாண்டியனின் மகனான உக்கிர குமாரன் என்ற மன்னனது ஆட்சிக் காலத்தில் ஆழிப்பேரலை(“சுனாமி”) தோன்றி மதுரைவரை வந்ததாகவும், உக்கிரபாண்டியன் வேல் எறிந்து அந்தச் சுனாமி அலைகளைத் தடுத்து நிறுத்தியதாகவும் ஒரு குறிப்பு உள்ளது.திருவிளையாடற்புராணத்தின் 17ஆவது படலத்தில் உக்கிர பாண்டியனின் மகன் அபிடேக பாண்டியன் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி (“சுனாமி”) மதுரையை அழிக்க, அதனை அந்த மன்னன் வற்றச் செய்தான் என்ற குறிப்பும் உள்ளது.திருவிளையாடற்புராணத்தின் 44ஆவது படலத்தில் வரகுணபாண்டியனின் மகனான இராசராச பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் மதுரை யானைமலைக்கு அருகே உள்ள பன்றிமலை தோன்றியது என்ற குறிப்பும் உள்ளது. பன்றிமலையைப் பெருமாள்மலை என்றும் அரிட்டாபட்டிமலை என்றும் இப்போது அழைக்கின்றனர்.
திருவிளையாடற்புராணத்தின் 49ஆவது படலத்தில் அதுல கீர்த்தியின் மகன் கீர்த்திவீடணனின் ஆட்சிக் காலத்தில் பிரளயம் ஏற்பட்டு ஏழுகடல்களும் பொங்கி எழுந்து (ஆழிப்பேரலை, “சுனாமி”) உலகையே அழித்தன என்ற குறிப்பு உள்ளது.தமிழகத்தைச் சுனாமி தாக்கியதற்கு மேலும் ஒரு ஆதாரமாக, குமரிக்(லெமூரியாக்) கண்டத்தையே கடல் அழித்துவிட்டதாகச் சிலப்பதிகாரத்தில் ஒரு குறிப்பு உள்ளது.“வடிவேலெறிந்த வான்பகை பொறாதுபஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ளவடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டுதென்திசை ஆண்ட தென்னவன் வாழி!“- என்கிறது சிலப்பதிகாரம் காடுகாண்காதை 17 -22குமரிக்கண்டம் அழியக் காரணமான பிரளயகாலத்தில் உண்டான காலத்தில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தோன்றிய ஆழிப்பேரலைகள் ( சுனாமி அலைகள் ) இலங்கையையும் தாண்டிவந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலையையும், யானைமலையையும்,
பிரான்மலையையும் மூழ்கடித்துச் சென்றுள்ளன. இவ்வாறு அடித்துச சென்றன எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்த பள்ளத்தாக்குகளில் தங்கிட கடல்அலைகள் அதையும் தாண்டிச் சென்று மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளன.இதனால், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இருந்த பள்ளத்தாக்குகள் நிறைந்து சற்று சிறிய சமவெளிகளாக மாறியுள்ளன. இவ்வாறு பண்டைய தமிழர் புதையுண்ட இடமே ‘பொதிகை‘ என்று அழைக்கப்படுகின்ற இடமாகும். களிமண் கல்லாக மாறிடச் சுமார் 10-17 இலட்சம் ஆண்டுகள் ஆகும். எனவே பொதிகையில் பொதிந்துள்ளனவற்றைப் புதைபொருள் ஆராய்ச்சி செய்தால், சுமார் 10-17 இலட்சம் வருடங்களுக்கு முந்திய நமது பண்டைத் தமிழரின் படிமங்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.தமிழகத்திற்குப் பலமுறை சுனாமி வந்துள்ளது. இவ்வாறு சுனாமி அலைகளால் அடித்துவரப்பெற்ற மண்மேடுகளால் மதுரையில் நாகமலை, பன்றிமலை, பசுமலை என்ற மண்மலைகள் எல்லாம் உருவாகியுள்ளன. நாகமலையில் உள்ள மண்ணில் அதிகமான அளவில் துத்தநாகம் உள்ளது. இதனால் இந்த மலைக்கு நாகமலை என்று பெயர் உண்டாகியுள்ளது.மண் எவ்வாறு தோன்றியது? என்று ஆராய்ந்த அறிஞர்கள் கற்கள் தேய்ந்து மண் உருவாகியுள்ளது என்கின்றனர்.ஆனால் தமிழகத்தில் உள்ள பாறைகளையும், குன்றுகளையும், அவற்றின் அருகே உள்ள மண்மேடுகளையும் வேதியல் முறையில் ஆராய்ந்து பார்த்தால், கற்பாறைகளில் உள்ள தனிமங்களின் வேதியல் பண்பிற்கும், அப்பாறைகளின் அருகே உள்ள மண்ணின் வேதியல் பண்பிற்கும் பெருத்தமாறுபாடுகள் உள்ளன. மேலும் தமிழிகத்திலி உள்ள குன்றுகளின் மேல் உள்ள மண்ணில் துத்தநாகம் அதிக அளவில் காணப்படுகிறது. கடல்அலைகைள் இந்த மண்ணை அடித்து வந்து இங்கே சேர்த்ததே இதற்குக் காரணமாகும்.மேலும் தமிழகத்தில் உள்ள மலைகளின் பாறைகளின் இடையே காணப்படும் மணல்கள் எல்லாம் இவ்வாறு கடல்அலைகளால் அடித்துவரப் பெற்றனவே.இந்தோனேசியா, சுமத்திரா தீவுகளில் பூகம்பங்கள் ஏற்படும் காலங்களில் உண்டாகும் சுனாமிகளால் இலங்கையும், தமிழகமும் அதிகம் பாதிப்படைகின்றன.முன்காலத்தில் தமிழகத்தையே அழித்த சுனாமிஅலைகள், இப்போது கடலோரக் கிராமங்களை மட்டுமே பழிவாங்கியுள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் சுனாமியால் தமிழகத்திற்குப் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என நம்புவோம்.பார்வை நூல்கள் - திருவிளையாடற் புராணம் 4,11,17,44 படலங்கள், திருவாப்புடையார் புராணம், கலித்தொகை, சிலப்பதிகாரம்-காடுகாண்காதை 17 -22கட்டுரையாளார் -முனைவர். கி. காளைராசன்,துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 630 003அலைபேசி எண் 94435 01912மின்னஞ்சல் kalair...@gmail.comதிருப்பூவணம் புராணம் முனைவர் பட்ட ஆய்வாளர்,திருவிளையாடற் புராணம் ஆய்வாளர்,திருவாப்புடையார் புராணம் ஆய்வாளர்,திருவிளையாடற் புராணம் ஆய்வாளர்,சூரைமாநகர்ப்புராணம் ஆய்வாளர்.வெளியிட்டுள்ள நூல்கள்1) திருப்பூவணக்காசி2) திருப்பூவணப் புராணம்3) புவனம் போற்றும் பூவணம்கட்டுரை உதவி.ஒரிசா பாலு என்ற திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள், சென்னை.கடல்கோள் ஆய்வாளர்,கடலாமைகள் ஆய்வாளர்.கடல் நீரோட்டம் ஆய்வாளர்,கடல்வழித் தமிழர் பயணம் ஆய்வாளர்.
மதுரைக்கு வந்த சுனாமிகடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுமத்ரா தீவுகளில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தாய்லாந்து, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. இதனால் மிகப்பெரும் அலைகள் தோன்றித் தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இருந்த மீனவ கிராமங்களை அழிந்தன. கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் வீடு, உடமைகளை இழந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி வந்த 500 பேரைக் காணவில்லை. வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து சுமார் 100-200 மீட்டரிலேயே கடல் இருப்பதால், அலையின் உக்கிரத்தில் அங்கு உயிர் இழப்பு அதிகம். தமிழகத்தில் மட்டுமல்லாது அந்தமான் மற்றும் ஆந்திராவிலும் மற்றும் கடலோர மாநிலங்களிலும் இதேபோன்று பெரும் உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளன. 2004 ஆண்டு சுனாமியினால் 2 இலட்சத்து 28ஆயிரம்பேர் (227,898) இறந்துள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடு ஜப்பான் ஆகும்.சுனாமியினால் உண்டான சோகமான நிகழ்வுகள் மக்கள் நினைவுகளிலிருந்து இன்னும் நீங்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும், சுனாமி தாக்கிய நாளில் கடற்கரை பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் குடம் குடமாக பால் கொட்டியும், பூக்களைத் தூவியும், இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களுக்கு விருப்பமான உணவுப் பண்டங்களைப் படைத்துக் கண்ணீர்விட்டுக் கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 26.12.2013
சுனாமி தாக்கி 9-ம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் உற்றாருக்கும் சுற்றாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழின் தொன்மையை கேலி பேசக்கூடாது சார் ....டாக்டர் செம்மல் அவர்களே.....நிச்சயமாக இல்லை ----
"கல்தோன்றி மண் தோன்றா " என கதைப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.அடுத்தவன் நம் மொழியின் தொன்மையை -வளமையை புரிந்துகொண்டு நம் புகழைப் பாட வேண்டாமா....நாமே நம் புகழைப் பாடிக் கொண்டிருப்பதா?தமிழ் நிலம்தான் முதலில் தோன்றியது என்கிறோம்...அதை எப்படி நிறுவப் போகிறோம்...உணர்வுப் பூர்வமாக மட்டும் பேசுவதை தவிர்த்து அறிவுப் பூர்வமாகவும் பேசுவோம்.....அய்யா செம்மல் அவர்கள் சினம் காக்க...பணிவுடன்சிங்கநெஞ்சன்....
வணக்கம் அய்யா , புவிஇயல் பார்வையில் உங்களுக்கு விடை தர முயன்றிருக்கி கிறேன்....புராணங்களோடு முழுமையாக முரண்படுகிறேன்....
நான்குமுறை மதுரையைச் சுனாமி தாக்கியதன் காரணமாகவே, மேற்கண்டன எல்லாம் நடைந்துள்ளன என நான் கருதுகிறேன்.
முழுக்க முழுக்க மாறுபடுகிறேன் அய்யா, தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளை வரலாற்றுக் காலத்திலோ அதற்கு முன்போ சுனாமி தாக்கியிருக்கக் கூடும். இன்றைய மதுரை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 450 அடி உயரத்தில் உள்ளது-கடற்கரையிலிருந்து சுமார் 110 தூரத்தில் உள்ளது. நானூறு அடி உயரத்திற்கு அலை எழும்பி நூறு கி.மீ. வரவேண்டுமெனில் , கற்பனைக்குக்கூட எட்டாத அளவிற்கு கடுமையானா நில அதிர்ச்சியை நாம் கற்பனை செய்ய வேண்டும்; அப்படி ஒரு நிலஅதிர்ச்சி நிகழ்ந்திருக்குமே ஆயின் பூமிப் பந்து பலப்பல துண்டுகளாக -சிதறிப் போயிருக்கும். புராணங்கள் ஓரளவு நடந்த நிகழ்வுகளைக் கொண்டு பின்னப்பட்ட நல்ல கற்பனைக் கதைகள் என்றே தோன்றுகிறது.
1) நாகமலை, பசுமலை, பெருமாள் மலைகளின் மேல் படிந்துள்ள மண்ணின் வயது என்ன?
மண்ணின் வயதை நாங்கள் கணிப்பதில்லை-யாரேனும் பெடோலோஜிஸ்ட் உங்களுக்கு உதவலாம்.
2) நாகமலை போன்று சுமார் 24 கி.மீ. நீளத்திற்கு நேர்கோடாக உள்ள மலை உலகில் வேறு எங்கும் உள்ளதா?
பல நூறு கி.மீ. நீளமுள்ள மலைகள உள்ளன- மேலும் நாகமலை ஒரு மடிக்கப்பட்ட மடிப்பு மலை- நீங்கள் குறிப்பிடுவது-அந்த மடிப்பின் ஒரு பகுதியே- கூகுல் பதிமத்தில் இது நன்கு தெரியும்.
3) நாகமலை உள்ளே உள்ளது களிமண் படிமம் ஆகி, அதனால் உண்டான பாறையா?
நாகமலை உருமாறிய மணற்பாறைகளால் ஆனது-களிமண் படிமங்களால் அல்ல.
4) நாகமலையின் மூன்றுக்கும் மேற்பட்ட படிவ வகைகளால் ஆனதா?( is it made of Three different rock layers?)
ஆம்- வரை படத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட பாறைகள் காட்டப்பட்டுள்ளன.
5) நாகமலையின் உள்ளே உள்ள பாறையின் வயது என்ன?
நாகமலையில் உள்ள பாறை தொகுப்புகளின் வயது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கும் மேல்.
நாகமலையின் உள்ளே உள்ள பாறைகள் கிடைமட்டமாகச் செதில்செதிலாக உள்ளனவா?
7 ) அவ்வாறு அவை இருப்பதற்கான காரணம் என்ன
நாகமலை வடமேற்கு –தென்கிழக்கு வாகாக அமைந்துள்ளது- இதில் தென்மேற்கு சரிவில் உள்ள பாறைகள் வடகிழக்கு நோக்கியும், வடகிழக்கு சரிவில் உள்ளவை தென்மேற்கு நோக்கியும் , அதாவது ஒன்றை ஒன்று நோக்கி குழிமுக மடிப்பாக மடிந்து அமைந்துள்ளன. பின் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாக செதில் செதிலான அமைப்புகள் உருவாகியிருக்கும்.
8) அழகர்கோயில்மலையின் மேல்பகுதி, கல் சிதைந்து தோன்றி மண்ணால் ஆனது என எடுத்துக்கொண்டால்,
திருப்பரங்குன்றமும் யானைமலையும் அதேகாலகட்டத்தில் ஏன் இவ்வாறு (அழகர்கோயில்மலை போன்று) மாறவில்லை?
ஏனெனில் அவை வெவ்வேறு பாறைகளால் ஆனவை.பாறைகளின் தன்மையைப் பொறுத்து அவை சிதைவுறும் காலமும் அளவும் மாறுபடும். சில இடங்கள் மலைகளாகவும் சில இடங்கள் சமவேளிய்யாக இருக்கவும் இதுவே காரணம். எளிதில் சிதைவுறும் பாறைகள் உள்ள பகுதி சமவெளியாக மாறி விடுகிறது----எளிதில் சிதைவுறா பாறைகள் மலைகளாக நிற்கின்றன. Most of the hills in this part are erosional remnents.
9) அழகர்கோயில்மலையின் மேல் உள்ள பாறைத் திட்டுகள் (rock slates) படுக்கை (horizontal) வடிவத்தில் அமைந்திருக்க,நாகமலையில் உள்ளே உள்ள மண்திட்டுகள் செங்குத்து (vertical) வடிவத்தில் அமைந்திருக்கின்றன?
படிவப் பாறைகள் உருவாகும் போது படுக்கைகளாகவே உருவாகின்றன. பின் அவை அழுத்தங்களால் மடிக்கப்பட்டு மடிப்பு மலைகளாக வடிவ மாற்றம் பெறும்போது பல்வேறு கோணங்களில் ( மடிப்பின் எந்தப் பகுதியை நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து ) காட்சி அளிக்கின்றன. நாகமலையின் தென் கிழக்குக் கோடியில் பாருங்கள்- அங்கே செங்குத்து அமைப்பு இருக்காது....
“ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“
மண் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகின்றன-மண் தோன்றும் மனிதன் தோன்றினான் என்பது மிக மிக மிகை. ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை .
நீங்கள் முயன்றுள்ள விளக்கங்கள் உங்கள் நம்பிக்கையின்பாற்பட்டது. பகுத்தறிவின் அடிப்படையில் ஆனது அல்ல. இறை நம்பிக்கை வேறு விடயம்-மத நூல்களில் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் காட்சிகள் ஏராளம்-( சங்க இலக்கியம் எனக் கூறப்படும் நூல்களில் அதிக மிகை இருப்பதாகத் தெரியவில்லை)
For more options, visit https://groups.google.com/d/optout.--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
| 10:19 (19 hours ago)![]() | ![]() ![]() | ||
| ||||
கல் தோன்றி மண் தோன்றா என்பது மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் ஆதிகுடியாக இருந்த மலைமக்கள் ஒரே குடியாகி ஒரே அரசனின் ஆட்சிக்குட்பட்ட அரசாக மதுரை யை உருவாக்கிக் கோட்டை அமைத்து மதுரைக்கு வெளியே இருந்த வந்த சமணர் தாக்குதலை வாள்கொண்டு அடக்கி என்ற பொருள் சொல்லலாமே

வணக்கம் ஐயா.
புவிஇயல் பார்வையில் உங்களுக்கு விடை தர முயன்றிருக்கி கிறேன்....புராணங்களோடு முழுமையாக முரண்படுகிறேன்....
நான்குமுறை மதுரையைச் சுனாமி தாக்கியதன் காரணமாகவே, மேற்கண்டன எல்லாம் நடைந்துள்ளன என நான் கருதுகிறேன்.
முழுக்க முழுக்க மாறுபடுகிறேன் அய்யா, தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளை வரலாற்றுக் காலத்திலோ அதற்கு முன்போ சுனாமி தாக்கியிருக்கக் கூடும். இன்றைய மதுரை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 450 அடி உயரத்தில் உள்ளது-கடற்கரையிலிருந்து சுமார் 110 தூரத்தில் உள்ளது. நானூறு அடி உயரத்திற்கு அலை எழும்பி நூறு கி.மீ. வரவேண்டுமெனில் , கற்பனைக்குக்கூட எட்டாத அளவிற்கு கடுமையானா நில அதிர்ச்சியை நாம் கற்பனை செய்ய வேண்டும்; அப்படி ஒரு நிலஅதிர்ச்சி நிகழ்ந்திருக்குமே ஆயின் பூமிப் பந்து பலப்பல துண்டுகளாக -சிதறிப் போயிருக்கும். புராணங்கள் ஓரளவு நடந்த நிகழ்வுகளைக் கொண்டு பின்னப்பட்ட நல்ல கற்பனைக் கதைகள் என்றே தோன்றுகிறது.
1) நாகமலை, பசுமலை, பெருமாள் மலைகளின் மேல் படிந்துள்ள மண்ணின் வயது என்ன?
மண்ணின் வயதை நாங்கள் கணிப்பதில்லை-யாரேனும் பெடோலோஜிஸ்ட் உங்களுக்கு உதவலாம்.
2) நாகமலை போன்று சுமார் 24 கி.மீ. நீளத்திற்கு நேர்கோடாக உள்ள மலை உலகில் வேறு எங்கும் உள்ளதா?
பல நூறு கி.மீ. நீளமுள்ள மலைகள உள்ளன- மேலும் நாகமலை ஒரு மடிக்கப்பட்ட மடிப்பு மலை- நீங்கள் குறிப்பிடுவது-அந்த மடிப்பின் ஒரு பகுதியே-கூகுல் பதிமத்தில் இது நன்கு தெரியும்.
3) நாகமலை உள்ளே உள்ளது களிமண் படிமம் ஆகி, அதனால் உண்டான பாறையா?
நாகமலை உருமாறிய மணற்பாறைகளால் ஆனது-களிமண் படிமங்களால் அல்ல.
4) நாகமலையின் மூன்றுக்கும் மேற்பட்ட படிவ வகைகளால் ஆனதா?( is it made of Three different rock layers?)
ஆம்- வரை படத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட பாறைகள் காட்டப்பட்டுள்ளன.
5) நாகமலையின் உள்ளே உள்ள பாறையின் வயது என்ன?
நாகமலையில் உள்ள பாறை தொகுப்புகளின் வயது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கும் மேல்.
நாகமலையின் உள்ளே உள்ள பாறைகள் கிடைமட்டமாகச் செதில்செதிலாக உள்ளனவா?
7 ) அவ்வாறு அவை இருப்பதற்கான காரணம் என்ன
நாகமலை வடமேற்கு –தென்கிழக்கு வாகாக அமைந்துள்ளது- இதில் தென்மேற்கு சரிவில் உள்ள பாறைகள் வடகிழக்கு நோக்கியும், வடகிழக்கு சரிவில் உள்ளவை தென்மேற்கு நோக்கியும் , அதாவது ஒன்றை ஒன்று நோக்கி குழிமுக மடிப்பாக மடிந்து அமைந்துள்ளன. பின் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாக செதில் செதிலான அமைப்புகள் உருவாகியிருக்கும்.
8) அழகர்கோயில்மலையின் மேல்பகுதி, கல் சிதைந்து தோன்றி மண்ணால் ஆனது என எடுத்துக்கொண்டால்,
திருப்பரங்குன்றமும் யானைமலையும் அதேகாலகட்டத்தில் ஏன் இவ்வாறு (அழகர்கோயில்மலை போன்று) மாறவில்லை?
ஏனெனில் அவை வெவ்வேறு பாறைகளால் ஆனவை.பாறைகளின் தன்மையைப் பொறுத்து அவை சிதைவுறும் காலமும் அளவும் மாறுபடும். சில இடங்கள் மலைகளாகவும் சில இடங்கள் சமவேளிய்யாக இருக்கவும் இதுவே காரணம். எளிதில் சிதைவுறும் பாறைகள் உள்ள பகுதி சமவெளியாக மாறி விடுகிறது----எளிதில் சிதைவுறா பாறைகள் மலைகளாக நிற்கின்றன. Most of the hills in this part are erosional remnents.
9) அழகர்கோயில்மலையின் மேல் உள்ள பாறைத் திட்டுகள் (rock slates) படுக்கை (horizontal) வடிவத்தில் அமைந்திருக்க,நாகமலையில் உள்ளே உள்ள மண்திட்டுகள் செங்குத்து (vertical) வடிவத்தில் அமைந்திருக்கின்றன?
படிவப் பாறைகள் உருவாகும் போது படுக்கைகளாகவே உருவாகின்றன. பின் அவை அழுத்தங்களால் மடிக்கப்பட்டு மடிப்பு மலைகளாக வடிவ மாற்றம் பெறும்போது பல்வேறு கோணங்களில் ( மடிப்பின் எந்தப் பகுதியை நாம் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து ) காட்சி அளிக்கின்றன. நாகமலையின் தென் கிழக்குக் கோடியில் பாருங்கள்- அங்கே செங்குத்து அமைப்பு இருக்காது....
“ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“
மண் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகின்றன-மண் தோன்றும் மனிதன் தோன்றினான் என்பது மிக மிக மிகை. ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை .
நீங்கள் முயன்றுள்ள விளக்கங்கள் உங்கள் நம்பிக்கையின்பாற்பட்டது. பகுத்தறிவின் அடிப்படையில் ஆனது அல்ல. இறை நம்பிக்கை வேறு விடயம்-மத நூல்களில் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் காட்சிகள் ஏராளம்-( சங்க இலக்கியம் எனக் கூறப்படும் நூல்களில் அதிக மிகை இருப்பதாகத் தெரியவில்லை)
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி" என்ற இலக்கியத் தமிழ் வரிகளை, அவை மிகைப்படுத்தி எழுதப்பட்டவை அல்ல என்ற கோணத்தை அடிப்படையாகக் கொண்டு geology அடிப்படையில் நீங்கள் ஆராய்கிறீர்கள்.
நான் இந்த ஆராய்சிக்கு மாற்றுக் கோணமும் உள்ளது என்பதைக் காட்டவிரும்புகிறேன்.வாளோடு என்பது எது போன்ற வாள் என்பதை முதலில் நிறுவ வேண்டும்....The Stone Age, The Bronze Age, The Iron Age (http://en.wikipedia.org/wiki/Three-age_system#Three-age_system_resumptive_table) எக்கால வாள்?பிறகு ஆதிகுடி என்று கொண்டால் கற்கால ஆயுதங்கள் தேடிக் கண்டுபிடித்து காலத்தை நிர்ணயித்து அதன் வழி தமிழர் முதன்மையானவர் என்பதையும் நிரூபிக்கலாம்.அல்லது அவர்களது fossil கொண்டும் நிரூபிக்கலாம்.Paleolithic (http://en.wikipedia.org/wiki/Palaeolithic) காலமே (10,000 ஆண்டுகள் முன்னர் உள்ள காலமே) இதுவரை நாமறிந்த ஆதி காலம்அக்காலத்தில் உள்ள fossil கிடைத்திருப்பது

Zoologist என்ற முறையில் (B.Sc, M.SC. M.Phil in Zoology) நான் பார்க்கும் கோணம், Australopithecus fossil க்கும் முன்னர் உள்ளமூத்தகுடி என்பதற்கான தமிழர்களின் human fossil தமிழகத்தில் கிடைக்கிறதா?அது மட்டுமே இதுவரை கிடைத்த ஆதிமனிதர்களின் human fossil களை அவை விட நம் மக்கள் fossil பழமையானது என்ற அறிவியல் அடிப்படையில் மட்டுமே இருக்கும்.ஆனால் இதுவரை அவ்வாறு கிடைத்த தகவல் இல்லை. கிடைத்தவுடன் உங்கள் ஆராய்சிக் கோணத்திற்கு அது வலிமை சேர்க்கக்கூடும்.
இது போல ஒவ்வொரு துறையும் நீங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளவற்றை அறிவியலுடன் ஒப்பிட்டு பார்க்க முனைவது போல பல துறை வல்லுனர்களையும் அவர்களது கோணம் கொண்டு ஆராய வேண்டியது அவசியம்.மரபியல் அடிப்படையிலும் மரபணு கொண்டு சோதனை நிகழ்த்தப்படுகிறது ...Haplogroup (http://en.wikipedia.org/wiki/Haplogroups)இதுவரை இந்த ஆராய்ச்சி ஆப்ரிகாவையே ஆரம்பம் எனக்காட்டி வருகிறது.
சமீபத்தில் வெளிவந்த இந்த நூல் உங்களுக்கு பல்வேறு கோணங்களையும் காட்டும்The Evolution and History of Human Populations in South Asia: Inter-disciplinary Studies in Archaeology, Biological Anthropology, Linguistics and Genetics (Google eBook)Michael D. Petraglia, Bridget AllchinSpringer, May 22, 2007என் கோணத்தில் (விலங்கியல்) தேடிய பொழுது fossil record இல்லை என்பதை படத்தில் உள்ள தகவல் காட்டுகிறது.நான் இன்னமும் நூலை முழுமையாகப் படிக்காததால் நீங்கள் இதைப் பற்றிக் கேட்டால் விளக்கம் சொல்ல இயலாத நிலையில் இருக்கிறேன்.
|
19:19 (9 hours ago) ![]() | ![]() ![]() | ||
| ||||
வணக்கம் காளை அய்யா,
புவி இயல் பற்றி பேசுவதால் மீண்டும் மூக்கை நுழைக்கிறேன்- சும்மா இருக்க முடியவில்லை...
விரைவில் புராணத்தில் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை புவியியல் ஆதாரங்களுடன் பதிவு செய்திட முயற்சிக்கிறேன்.
மிக நல்ல முயற்சி – தங்களின் முடிவுகள் எங்களுக்கும் பலனளிக்கும்.
“மதுரைக்கு வந்த” சுனாமி பற்றிய குறிப்புகள் உள்ள பாடல்களை சொல்லுங்கள்- படிக்க ஆவல்.
கிழக்குக் கடலும் மேற்குக் கடலும் கலந்தன எனில், தமிழகமும் கேரளமும் முழுமையாக கடலில் மூழ்கியிருக்குமே, உயிர்கள் எப்படித் தப்பின- இது எப்போது நடந்ததாக புராணம் கூறுகிறது.
அழகர்மலைப் பகுதியில் Fossils இருக்கும் என நினைக்கும் நீங்கள்-தமிழகம் முழுக்க Fossils இருக்கும் என்று ஏன் எதிர்பார்க்கவில்லை.
ஆப்ரிக்காவில் ஒரு முறைதான் சுனாமி -----
இப்படியெல்லாம் எப்படி உங்களால் ஊகிக்க முடிகிறது....
ஒரு கைப்பிடிஅளவு மண் இல்லாமலும், ஒருகடுகளவு தண்ணீர் இல்லாமலும் உள்ள பாறையில் மிகப்பெரிய மரங்கள் உள்ளதை இன்றும் காணலாம். (திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள மரமே இதற்குச் சிறந்த சான்று)
அய்யா , இப்போது அங்கே மண் இல்லாமல் இருக்கலாம்- அந்த மரம் முளை விட்டபோது அங்கே மண் இருந்திருக்கும்-இப்போதும் அதன் வேர்கள் பாறை இடுக்குகளில் நுழைந்து அங்குள்ள மண் மற்றும் ஈரத்தை பயன் படுத்திக் கொண்டிருக்கும்.
நாகமலையில் உயிர்களின் படிமங்கள் ஏதும் இல்லை என்று அறிவியலார் அறுதியிட்டுக் கூறும்வரை,........
அய்யா, நாகமலையிலுள்ள பாறைகளில் உயிர்களின் படிமங்கள் ஏதும் இல்லை என உறுதியாக அறுதியிட்டுக் கூறுகிறேன். காரணம் அவை படிவப்பாறைகள் அன்று.ஆதலின் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலை உயர்வு நவிற்சியாகக் கொள்வதே சரி.
அன்புள்ளம் கொண்டு, 1) பசுமலையும், 2) திருப்பரங்குன்றம் (தியாகராசர் பொறியியல் கல்லூரி) அருகே உள்ள கூடுதட்டிப்பரம்பு மலை
இவ்விரண்டு மலைகளும் எவ்வாறு தோன்றின? எதனால் ஆனவை? இவைகள் களிமண் பாறைகளா? என்பன போன்ற விளக்கங்கள் ஏதேனும் இருந்தால் அளித்து உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இவைகளை நான் பார்த்ததில்லை , ஆதலின் பதிலிறுக்க இயலவில்லை-அந்தப் பாறைகளின் மாதிரிகளை சென்னை வரும் போது கொண்டுவாருங்கள் –பார்ப்போம் –பேசுவோம்-
மேலும், கடற்கரையை அடுத்துள்ள மகாபலிபுரம், திருப்பரங்குன்றம், குன்றக்குடி, யானைமலை முதலான மலைகள் எல்லாம் மொட்டைப்பாறைகளாக இருக்கவும், இம்மலைகளுக்கு மேற்கே உள்ள மலைகள் எல்லாம் மண்போர்த்தி யிருப்பதும் சுனாமியினால்தான் என்று கருதுகிறேன்.
அன்புள்ளம் கொண்டு மேற்கண்ட எனது ஐயப்பாட்டிற்கும் விளக்கம் அளித்து உதவிடுமாறு வேண்டுகிறேன்.
முன்பே குறிப்பிட்டதைப் போல , பாறைகளின் கனிம அமைப்பு –கட்டமைப்பு –பருவ நிலை வேறுபாடுகள் இவைகளைப் பொறுத்தே மண் உருவாதலும்,உருவான இடத்திலேயே அது நிலை பெற்றிருப்பதும் நிகழ்கின்றன-
வணக்கம் காளை அய்யா,
புவி இயல் பற்றி பேசுவதால் மீண்டும் மூக்கை நுழைக்கிறேன்- சும்மா இருக்க முடியவில்லை...
விரைவில் புராணத்தில் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை புவியியல் ஆதாரங்களுடன் பதிவு செய்திட முயற்சிக்கிறேன்.
மிக நல்ல முயற்சி – தங்களின் முடிவுகள் எங்களுக்கும் பலனளிக்கும்.
“மதுரைக்கு வந்த” சுனாமி பற்றிய குறிப்புகள் உள்ள பாடல்களை சொல்லுங்கள்- படிக்க ஆவல்.
கிழக்குக் கடலும் மேற்குக் கடலும் கலந்தன எனில், தமிழகமும் கேரளமும் முழுமையாக கடலில் மூழ்கியிருக்குமே, உயிர்கள் எப்படித் தப்பின- இது எப்போது நடந்ததாக புராணம் கூறுகிறது.
அழகர்மலைப் பகுதியில் Fossils இருக்கும் என நினைக்கும் நீங்கள்-தமிழகம் முழுக்க Fossils இருக்கும் என்று ஏன் எதிர்பார்க்கவில்லை.
ஆப்ரிக்காவில் ஒரு முறைதான் சுனாமி -----
இப்படியெல்லாம் எப்படி உங்களால் ஊகிக்க முடிகிறது....
ஒரு கைப்பிடிஅளவு மண் இல்லாமலும், ஒருகடுகளவு தண்ணீர் இல்லாமலும் உள்ள பாறையில் மிகப்பெரிய மரங்கள் உள்ளதை இன்றும் காணலாம். (திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள மரமே இதற்குச் சிறந்த சான்று)
அய்யா , இப்போது அங்கே மண் இல்லாமல் இருக்கலாம்- அந்த மரம் முளை விட்டபோது அங்கே மண் இருந்திருக்கும்-இப்போதும் அதன் வேர்கள் பாறை இடுக்குகளில் நுழைந்து அங்குள்ள மண் மற்றும் ஈரத்தை பயன் படுத்திக் கொண்டிருக்கும்.
நாகமலையில் உயிர்களின் படிமங்கள் ஏதும் இல்லை என்று அறிவியலார் அறுதியிட்டுக் கூறும்வரை,........
அய்யா, நாகமலையிலுள்ள பாறைகளில் உயிர்களின் படிமங்கள் ஏதும் இல்லை என உறுதியாக அறுதியிட்டுக் கூறுகிறேன்.
காரணம் அவை படிவப்பாறைகள் அன்று.ஆதலின் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலை உயர்வு நவிற்சியாகக் கொள்வதே சரி.
அன்புள்ளம் கொண்டு, 1) பசுமலையும், 2) திருப்பரங்குன்றம் (தியாகராசர் பொறியியல் கல்லூரி) அருகே உள்ள கூடுதட்டிப்பரம்பு மலை
இவ்விரண்டு மலைகளும் எவ்வாறு தோன்றின? எதனால் ஆனவை? இவைகள் களிமண் பாறைகளா? என்பன போன்ற விளக்கங்கள் ஏதேனும் இருந்தால் அளித்து உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இவைகளை நான் பார்த்ததில்லை , ஆதலின் பதிலிறுக்க இயலவில்லை-அந்தப் பாறைகளின் மாதிரிகளை சென்னை வரும் போது கொண்டுவாருங்கள் –பார்ப்போம் –பேசுவோம்-
மேலும், கடற்கரையை அடுத்துள்ள மகாபலிபுரம், திருப்பரங்குன்றம், குன்றக்குடி, யானைமலை முதலான மலைகள் எல்லாம் மொட்டைப்பாறைகளாக இருக்கவும், இம்மலைகளுக்கு மேற்கே உள்ள மலைகள் எல்லாம் மண்போர்த்தி யிருப்பதும் சுனாமியினால்தான் என்று கருதுகிறேன்.
அன்புள்ளம் கொண்டு மேற்கண்ட எனது ஐயப்பாட்டிற்கும் விளக்கம் அளித்து உதவிடுமாறு வேண்டுகிறேன்.
முன்பே குறிப்பிட்டதைப் போல , பாறைகளின் கனிம அமைப்பு –கட்டமைப்பு –பருவ நிலை வேறுபாடுகள் இவைகளைப் பொறுத்தே மண் உருவாதலும்,உருவான இடத்திலேயே அது நிலை பெற்றிருப்பதும் நிகழ்கின்றன-

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

எங்கே எடுத்தது?
ஆனால் அரிய படங்கள் அல்ல. இது போன்ற காட்சிகளை மழைப் பாதைகளில் பல இடங்களில் காணலாம்.
மரங்களின் வேர்கள் பாறை இடுக்குகளில் நுழைந்து பெருக்கும் போது பாறைகள் பிளவு பட்டு சிதைகின்றன. புவியியலில் இது BIOLOGICAL WEATHERING என்று அழைக்கப் படுகிறது.
விதை முளை விட்டபோது அங்கே மண் இருந்திருக்கும். இப்போதும் பாருங்கள் வேரின் நுனிகள் நீரையும் மண்ணையும் இடுக்குகளில் தேடுவதை. "பாறையில் விழுந்த விதை முளைக்காது" என்று விவிலியத்திலோ எங்கோ படித்த நினைவு.

எங்கே எடுத்தது?
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இந்தப் படம் காளையாருக்குப் பிடிக்கும்.....

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
இந்தப் படம் காளையாருக்குப் பிடிக்கும்.....
மதுரைக்கு வந்த சுனாமி
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுமத்ரா தீவுகளில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தாய்லாந்து, இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. இதனால் மிகப்பெரும் அலைகள் தோன்றித் தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இருந்த மீனவ கிராமங்களை அழிந்தன. கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் வீடு, உடமைகளை இழந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி வந்த 500 பேரைக் காணவில்லை. வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து சுமார் 100-200 மீட்டரிலேயே கடல் இருப்பதால், அலையின் உக்கிரத்தில் அங்கு உயிர் இழப்பு அதிகம். தமிழகத்தில் மட்டுமல்லாது அந்தமான் மற்றும் ஆந்திராவிலும் மற்றும் கடலோர மாநிலங்களிலும் இதேபோன்று பெரும் உயிர்ச்சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளன. 2004 ஆண்டு சுனாமியினால் 2 இலட்சத்து 28ஆயிரம்பேர் (227,898) இறந்துள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடு ஜப்பான் ஆகும்.சுனாமியினால் உண்டான சோகமான நிகழ்வுகள் மக்கள் நினைவுகளிலிருந்து இன்னும் நீங்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும், சுனாமி தாக்கிய நாளில் கடற்கரை பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் குடம் குடமாக பால் கொட்டியும், பூக்களைத் தூவியும், இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களுக்கு விருப்பமான உணவுப் பண்டங்களைப் படைத்துக் கண்ணீர்விட்டுக் கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 26.12.2013
இன்றுடன் சுனாமி தாக்கி 9-ம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் உற்றாருக்கும் சுற்றாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை திஹிந்து நாளிதழ் தெரிவித்துக் கொள்கிறது.
--
ஹ்ம்ம் ...இது போன்ற அறிவியல் கருத்துகளை அத்துறை சார்ந்த ஆய்வாளர் தக்க சான்றுகளுடன் வைப்பதை, அத்துறை சார்ந்த பிற ஆய்வாளர்ளின் பரிசீலனைக்குப் பிறகு ஒப்புக்கொள்ளவே வழியுள்ளது.Let us wait for professional opinions of reputable geologists on this issue..... தேமொழி
முன்பே இது பற்றி விளக்கம் அளித்தேன் ........விரைவில் எழுதுவேன்.....
மதுரைக்குக் கிழக்கே 10 கி.மீ. தூரத்தில் கீழடி பள்ளிச்சந்தையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் 10 அடி ஆழத்தில் பல்வேறு நிறங்களில் மண்படிமங்களைக் காண முடிந்தது. மண்படிமங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக மஞ்சள் நிறத்தில் கோடு போட்டுள்ளேன். இந்த மண்திட்டுகள் சுனாமியால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற எனது கருத்தை அகழ்வாராய்ச்சி இயக்குநர் அவர்களிடம் தெரிவித்தேன். அவர் சுனாமி இங்கே வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. இது வைகை ஆற்றுப் பெருக்கால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
அகழ்வாராய்ச்சி இயக்குநர் பதில் முழுக்க முழுக்க சரி. தற்போதைய மதுரை பகுதியில் சுனாமி வந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் மயிலை மியூசிக் அகாடமி எதிரே உள்ள உயர்ந்த கட்டிடம் கட்டப்பட்டபோது, அடிவாரத்திற்கு தோண்டிய மணலைப் படித்தேன -அந்த மணலில் கலந்திருந்த கடல் சிப்பி துண்டுகள் அந்த மணல் கடல் மணல் என தெளிவாக அடையாளம் காட்டின.-இதன் அடிப்படையில் , அந்தப் பகுதி முற்காலத்தில் கடலின் கீழ் இருந்தது எனக் கருத இடமுண்டு..- திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகமும் இந்த கருத்திற்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது.
பள்ளிச்சந்தையில் அகழப்பட்ட மண்ணை எடுத்து உருப்பெருக்கியின் கீழ் பாருங்கள்—கடல் வாழ் உயிரிங்களின் தடயங்கள் ஏதும் உள்ளனவா என்று. அகழ்வாராய்ச்சி இயக்குநர் சொல்வதுபோல் இது வைகை ஆற்றுப் பெருக்கால் ஏற்பட்டிருக்க வேண்டும்;
பிற, பின்பு......
--
பள்ளிச்சந்தையில் அகழப்பட்ட மண்ணை எடுத்து உருப்பெருக்கியின் கீழ் பாருங்கள்—கடல் வாழ் உயிரிங்களின் தடயங்கள் ஏதும் உள்ளனவா என்று.
திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் (சுனாமி) ஏற்பட்டு மதுரையை அழித்ததாகக் குறிப்புகள் உள்ளன. புராணம் குறிப்பிடும் சுனாமியால்தான் இதுபோன்ற மண்படிமங்கள் கீழடியிலும், அழகர்கோயிலிலும், கொடைக்கானலிலும், சேலம் மலைத்தொடர்களிலும் உள்ளன என்பது எனது கருத்து. இதுபோன்று மண்படிமங்கள் மதுரையில் தோன்றுவதற்கு முன்பே மதுரையில் மக்கள் வாழ்ந்திருந்த காரணத்தினால்தான் “மண்தோன்றாகக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“ என்று தமிழரின் தொன்மை புகழ்ந்து கூறப்படுகிறது.
பாறைகள் சிதைந்தே மண் உருவாகிறது. பாறைகளின் தன்மை ,நில அமைப்பு, தட்ப வெப்ப நிலை இவை பொறுத்தே இது அமைகிறது.மண் தோன்றா காலத்தே மரம் செடி கொடிகளோ,மக்களோ தோன்றியிருக்க வாய்ப்புகள் அறவே இல்லை.
தொந்தரவுகளை, ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்......அவ்வப்போது விரிவாக பேசுவோம்.......
.இது போன்ற மண்படிமங்களை அழகர்கோயில், சேலம் மற்றும் ஆந்திர மலைத் தொடர்களில் கண்டுள்ளேன்.திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் (சுனாமி) ஏற்பட்டு மதுரையை அழித்ததாகக் குறிப்புகள் உள்ளன. புராணம் குறிப்பிடும் சுனாமியால்தான் இதுபோன்ற மண்படிமங்கள் கீழடியிலும், அழகர்கோயிலிலும், கொடைக்கானலிலும், சேலம் மலைத்தொடர்களிலும் உள்ளன என்பது எனது கருத்து. இதுபோன்று மண்படிமங்கள் மதுரையில் தோன்றுவதற்கு முன்பே மதுரையில் மக்கள் வாழ்ந்திருந்த காரணத்தினால்தான் “மண்தோன்றாகக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“ என்று தமிழரின் தொன்மை புகழ்ந்து கூறப்படுகிறது.
பாறைகள் சிதைந்தே மண் உருவாகிறது. பாறைகளின் தன்மை ,நில அமைப்பு, தட்ப வெப்ப நிலை இவை பொறுத்தே இது அமைகிறது.

மண் தோன்றா காலத்தே மரம் செடி கொடிகளோ,மக்களோ தோன்றியிருக்க வாய்ப்புகள் அறவே இல்லை.

வணக்கம்.
2015-07-08 18:52 GMT-08:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:தொந்தரவுகளை, ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்......அவ்வப்போது விரிவாக பேசுவோம்.......தங்களது அன்பிற்கு நன்றி..இது போன்ற மண்படிமங்களை அழகர்கோயில், சேலம் மற்றும் ஆந்திர மலைத் தொடர்களில் கண்டுள்ளேன்.திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் (சுனாமி) ஏற்பட்டு மதுரையை அழித்ததாகக் குறிப்புகள் உள்ளன. புராணம் குறிப்பிடும் சுனாமியால்தான் இதுபோன்ற மண்படிமங்கள் கீழடியிலும், அழகர்கோயிலிலும், கொடைக்கானலிலும், சேலம் மலைத்தொடர்களிலும் உள்ளன என்பது எனது கருத்து. இதுபோன்று மண்படிமங்கள் மதுரையில் தோன்றுவதற்கு முன்பே மதுரையில் மக்கள் வாழ்ந்திருந்த காரணத்தினால்தான் “மண்தோன்றாகக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“ என்று தமிழரின் தொன்மை புகழ்ந்து கூறப்படுகிறது.
பாறைகள் சிதைந்தே மண் உருவாகிறது. பாறைகளின் தன்மை ,நில அமைப்பு, தட்ப வெப்ப நிலை இவை பொறுத்தே இது அமைகிறது.
ஆனால் வேறுவேறு நிறங்களில் மண்படிமங்கள் பாறைகளின் மேல் அமைந்துள்ளன.கீழே உள்ள படம் சேலம் அருகே உள்ள மலைக்குன்று.சில இடங்களில் கடுமையான பாறைக்குக் கீழே மண்படிமங்கள் அமைந்துள்ளன.இவ்வாறான இடங்களில் பாறைகளின் நிறங்களும், பாறைகளுக்குக் கீழே அமைந்துள்ள மண்படிமங்களின் நிறங்களும் வேறுவேறாக உள்ளன.மேலே உள்ள படத்தில் உள்ள மலையின் மேல்பகுதி மிகவும் கடினமான கிரானைட் பாறைகளால் ஆனாது.நடுவில் மண்படிமங்கள் உள்ளன. இந்த மண் படிமங்களுக்குக் கீழே மிகவும் கடினமாக கிரானைட் பாறைகள் உள்ளன.கீழே உள்ள படம் கிரானைட் பாறைகளுக்கு நடுவில் உள்ள மண்படிமத்தைக் கையில் எடுத்துப் பார்க்கிறோம்.