நவம்பர் சொல்புதிது கூட்டம்

8 views
Skip to first unread message

Neechal Karan

unread,
Nov 19, 2025, 11:08:03 PM (4 days ago) Nov 19
to tamilvalar...@googlegroups.com
வணக்கம்,
ஒவ்வொரு மாதமும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் நடைபெறும் சொல்புதிது கூட்டத்தில் புதிய கலைச்சொற்களைப் பரிந்துரைத்து வருகிறோம். நேற்று நடைபெற்ற நவம்பர் மாதக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட சொற்கள் கீழே உள்ளன.

Brownfield projectதாளடித் திட்டம்
Greenfield projectமுதலடித் திட்டம்
Aironoxஉடை மிடுக்கி
Aerofootகாற்று நடைக் காலணி
Invisacookமறை அடுகலன்
Water walking shoesநீர்மிசைக் காலணி
Grow bagபயிர் வளர்ப்புப் பை
Air taxi / Flying taxiவாடகை வானுந்து
Air carவானுந்து
Zeptosecondநுண்ணொடி
Wind farm / Wind parkகாற்றாலைப் பண்ணை/ பூங்கா
Cyber fraudsterஇணைய மோசடிக்காரர்
Global governanceபுவி ஆளுகை
Rapid Stroke Response Teamபக்கவாத மருத்துவ விரைவுக் குழு
Fast Breeder Test Reactorஅணுமின் விரைவாக்க உலை
Intraday tradingநாள் பங்கு வணிகம்
Comboசேர்க்கை
OTTஇணையப் படத் தளம் (இபத)
White colar terrorismஅறிவுக் கயவர் பயங்கரவாதம்/வன்முறை
Plastic surgeonமெய்சீர் (அறுவை) மருத்துவர்
Deep-sea miningஆழ்கடல் சுரங்கப்பணி
Digital connectivityஇணையத் தொடர்பு
Digital infrastructureஇணையக் கட்டமைப்பு
Assistive Technologyமாற்றுத் திறன் தொழில்நுட்பம்
Down Jacketஇறகுபொதி மேலுடை
Bomber Jacketகவச மேலுடை
Pufer Jacketபுடைப்பு மேலுடை
Varsity Jacket/Leterman Jacketஅடையாள மேலுடை
Hoodie Jacketதொப்பி மேலுடை
Leggingகாலொட்டு உடை

மேலும் அறிய இங்கே செல்லலாம். புதிய சொல் கேள்விகளயோ பரிந்துரைகளையோ இந்த மடற்குழுவிலோ முகநூல் பக்கத்திலோ கேட்கலாம்.


--
அன்புடன்,
நீச்சல்காரன்

தேமொழி

unread,
Nov 20, 2025, 1:33:52 AM (4 days ago) Nov 20
to மின்தமிழ்
நன்றி, நல்ல தொகுப்பு 
நீர்மிசைக் காலணி - சிறப்பு 

Reply all
Reply to author
Forward
0 new messages